இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயனுக்கு, நடிகர் சிவகுமார் பொன்னாடை போர்த்துகிறார்
http://i57.tinypic.com/1pvtk9.jpg
Printable View
இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயனுக்கு, நடிகர் சிவகுமார் பொன்னாடை போர்த்துகிறார்
http://i57.tinypic.com/1pvtk9.jpg
படங்களில் இசையமைக்க ரூ.3,000, ரூ.4,000 என்று வாங்கிக் கொண்டிருந்த சங்கர்-கணேஷ் அவர்களுக்கு இதயவீணை படத்தில் ரூ.40,000 சம்பளம் வாங்கித் தந்தார் தலைவர். இதை விஜய் டி.வி.யின் மன்னாதி மன்னன் சிறப்பு நிகழ்ச்சியில் திரு.கணேஷ் அவர்களே தெரிவித்தார். தன்னை வைத்து படம் எடுப்பவர்கள், கிடைக்கும் லாபத்தை அவர்களே அடையக்கூடாது எல்லாருக்கும் அதில் பங்கு கிடைக்க வேண்டும். உழைப்புக்கேற்ற ஊதியம் எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று நினைத்தவர் தலைவர்.
நன்றி திரு.யுகேஷ் பாபு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்களின் புதல்வர் திரு.எஸ்.வி.ரமணன் அவர்கள், தலைவரிடம் இருந்து விருது பெறும் அரிய புகைப்படத்தை பதிவிட்டதற்கு நன்றி திரு.குமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அற்புதமான ஆவணத்தை பதிவிட்டதற்கு பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கு நன்றி. அந்நிய செலாவணி மோசடி காரணமாக மத்திய அரசின் கெடுபிடிக்கு பயந்துதான் தலைவர் திமுகவை விட்டு வெளியேறினார் என்றால், அவர்களுக்கு பயந்து இ.காங்கிரசிலேயே அவர் சேர்ந்திருக்கலாமே? ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? திண்டுக்கல் இடைத்தேர்தலில் தலைவரின் ஆதரவை பெற இ. காங்கிரஸ் எவ்வளவோ முயற்சித்தும் கூட, இ.காங்கிரசையும் எதிர்த்து நின்று தலைவரின் அதிமுக அமோக வெற்றி பெற்றது வரலாறு.
தலைவரின் புகழை பொறுக்க முடியாமல் கிளப்பிவிடப்பட்ட எத்தனையோ வதந்திகளில் இதுவும் ஒன்று. நன்றி திரு.செல்வகுமார் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நன்றி திரு.வினோத் சார். இலங்கையில் நாளை நமதே திரைப்படம் 100 நாட்கள் ஓடியுள்ளது. தமிழகத்தில் வசூலை அள்ளிக் குவித்தாலும் 100 நாட்கள் எட்டவில்லை என்பதால் இந்தப் படத்தை 100 நாள் கணக்கில் நாம் சேர்ப்பதில்லை. உழைக்கும் கரங்கள் திரைப்படம் சேலம் அலங்கார் திரையரங்கில் அதிகபட்சமாக 98 நாட்கள் ஓடினாலும் கூட இரண்டு நாள் தானே குறைவு என்று 100 நாள் கணக்கில் நாம் சேர்ப்பதில்லை.
பெங்களூரில் நாளை நமதே திரைப்படம் 2 வாரங்களில் 3 லட்சம் ரூபாய் வசூல் சாதனை செய்துள்ள ஆவணத்தையும் பதிவிட்டதற்கு நன்றி வினோத் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பண்ருட்டியாரின் பதில் அற்புதம். இவரும் கூட திமுகவில் இருந்தபோது அதிமுகவை விமர்சித்தவர்தான் என்றாலும் கூட, திரு.மதுரை முத்து பற்றி தலைவர் கூறியதை மறக்க முடியாது. திரு. மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்த பிறகு, திமுக பத்திரிகையான முரசொலியில் தினமும் அவர் திமுகவில் இருந்தபோது தலைவரைப் பற்றி அவதூறாக பேசியதை வெளியிட்டு வந்தனர்.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், ‘‘அண்ணன் மதுரை முத்து கலைஞர் கருணாநிதியோடு இருக்கும்போது என்னைப் பற்றி புகழ்ந்து பேசுவார்’ என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நான் அரசியல் தெரியாதவன் அல்ல’’ என்று தலைவர் ஒரே போடாக போட்டார். மறுநாள் முதல் மதுரை முத்துவின் பழைய பேச்சுகள் முரசொலியில் நிறுத்தப்பட்டன.
பதிவுக்கு நன்றி திரு.லோகநாதன் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்