வாசு ஜி
திகம்பர சாமியார். நம்பியார் பல வேடங்களில் நடித்த படம். சமீபத்தில் பார்த்து ரசித்தேன் .. அருமையான படம்
பாடலுக்கு நன்றி.
Printable View
வாசு ஜி
திகம்பர சாமியார். நம்பியார் பல வேடங்களில் நடித்த படம். சமீபத்தில் பார்த்து ரசித்தேன் .. அருமையான படம்
பாடலுக்கு நன்றி.
அப்படி பார்க்க போனால் என்னுடைய சக கால பயணிகளான இளைய ராஜா,கமலா ஹாசன் இவர்களை விமர்சிக்கும் உரிமை எனக்கு வழங்கப் பட்டுள்ளதா? உங்கள் திரிகளின் திறந்த மனது காரர்களை, வெளிநாட்டு கிணற்று தவளை தீவிர வாதிகளை எங்கு அடைப்பீர்கள்?
நான் சிவாஜியின் அத்தனை படங்கள்,கமல் அத்தனை படங்கள்,எல்லா இசையமைப்பாளர்களின் எல்லா பாடல்களோடும் பரிச்சயமானவன் என்ற வகையில் உங்கள் குழுவில் என்ன மதிப்பு இருந்தது மாற்று கருத்துகளுக்கு?
எங்கள் திரியில் நானே சிவாஜியை விமரிசனம் பண்ணி உள்ளேனே?அந்த உரிமை எனக்கு வழங்க பட்டுத்தானே இருந்தது? வீண் குற்ற சாட்டுகளை சுமத்த வேண்டாம்.(சந்தேகமிருந்தால் பதிவு எண்களை வழங்குவேன்)
கமலிடமே நேரில் தெரிவித்து ,அவர் ஒப்பு கொண்ட விமர்சனங்களை கூட நான் பதிக்க முடியாது .
கோ,
'மஞ்சள் குங்குமம்' படத்தில் ரவி பாடகர் திலகம் குரலில் பாடும் பாடல்.
'கோமாளி கட்டி வச்ச கோட்டை இது தெரிஞ்சுக்கோ
ஏமாளி எழுதிய கதை இதுவே புரிஞ்சுக்கோ'
ரவி செம கலக்கல் அவர் ஸ்டைலில். இந்த மாதிரிப் பாடல்கள் அவருக்கு ஹல்வா சாப்பிடுவது மாதிரி. மனுஷன் பின்னுகிறார்.
உங்களுக்காகவே இந்தப் பாடல். பாடலும் கேட்க செம தூள்.
http://www.dailymotion.com/video/x15...973_shortfilms
காலை வணக்கம் ராஜேஷ்ஜி.
வாலியின் பாடல்களில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் . பாடல் வரிகள் மற்றும் படமாக்கப்பட்ட விதம் , மக்கள் திலகத்தின் இரு வித தோற்றம் & நடிப்பு மனதை நெருடும் பாடல் .
http://youtu.be/tR6TgUTWI84
உண்மை ராஜேஷ்ஜி.
பாருங்கள். நமது நம்பியார் 'திகம்பர சாமியார்' படத்தில் விதவிதமான கெட் -அப்களில் வருவதை.
http://i.ytimg.com/vi/vnRvQKcnCME/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/6nPvOqoRXTk/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/hteSXSQdeOc/hqdefault.jpg
http://i.ytimg.com/vi/WbZ0o4_dmCY/hqdefault.jpg
http://antrukandamugam.files.wordpre...iyar.jpg?w=487
http://antrukandamugam.files.wordpre...1jpg.jpg?w=593
http://antrukandamugam.files.wordpre...-man.jpg?w=593
http://antrukandamugam.files.wordpre...thar.jpg?w=593
அனைவருக்கும் காலை வணக்கம்
திகம்பர சாமியார் 1950
இயக்குனர் டி. ஆர். சுந்தரம்
தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதை வடுவூர் துரைசாமி ஜயங்கார்
நடிப்பு
எம். என். நம்பியார்
டி. பாலசுப்பிரமணியம்
நரசிம்ம பாரதி
எம். ஜி. சக்கரபாணி
வி. கே. ராமசாமி
திரௌபதி
லக்ஸ்மிப்பிரபா
சி. கே. சரஸ்வதி
இசையமைப்பு ஜி. ராமனாதன்
எஸ். எம். சுப்பைய்யா நாயுடு
வெளியீடு நாட்கள் செப்டம்பர் 29, 1950
1950ல் வெளிவந்த திகம்பர சாமியார் என்னும் இப்படத்தில் எம்.என்.நம்பியார் ஒன்பது தோற்றங்களில் வந்திருக்கிறார். இது வி.சி.கணேசன் ஒன்பது தோற்றங்களில் நடித்து வெளிவந்த நவராத்திரி திரைப்படத்திற்கு முன்பே வந்தபடம்.
அரிதான இப்படம் இப்பொழுது எங்கும் காணக்கிடைக்காதது பெருவியப்பே. இப்படம் அந்நாட்களில் பெரும் பெயர் பெற்றிருக்கிறது.
இணையத்திலும் கூட காணக்கிடைக்காத இதைப்பற்றி அண்மையில் நடிகை மனோரமா கூறுகையில்தான் சில செய்திகள் தெரியவந்தன.
எழுத்தாளர் இராண்டார் கை இந்து நாளிதழில் இதைப்பற்றி எழுதியிருந்த கட்டுரை தேடுபொறி உதவியுடன் சிக்கியது. அதைத்தழுவி எழுதப்பட்டதே இக்கட்டுரை. அதைத்தவிர பிற செய்திகளையும் எடுத்தாண்டிருக்கிறேன்.
இந்தப்படம் வெளிவந்த ஆண்டில் (1950) 13 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய புதினம் இது அக்காலத்தில் மிகவும் புகழ்பெற்ற துப்பறியும் கதையாகும்.
இப்பொழுது பலராலும் பார்க்க விரும்பும் ஒருபடமாக இது விளங்கினாலும், அரிதான இப்படம் இப்பொழுது எங்குமே கிடைக்கவில்லை. யாரிடமாவது இருப்பின் மின்மடலனுப்பவும்.
தமிழில் வெளிவந்த இப்படத்தினைப் பற்றி செய்திகள் அனைத்து இணையத்தில் ஆங்கிலத்தில் கிடைப்பது அடுத்து எழும் விந்தை.
இதில் ஒரு நம்பியார் மட்டுமே வந்தாலும் அவர் வெவ்வேறு தோற்றங்களில் வந்து கடத்தப்பட்ட கதையுடைத்தலைவியினை தேடுவார். அண்மையில் இதைப்பற்றிப் பேசிய மனோரமா இதில் நம்பியார் 15 தோற்றங்களில் வந்திருக்கிறார் என்ற செய்தினைச் சொல்லியிருக்கிறார்.
மார்டன் தியேட்டர்சில் எடுக்கப்பட்ட இப்படம் கும்பகோணம், தஞ்சாவூர்,மன்னார்குடி ஆகிய இடங்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் நம்பியார் காவல்துறை மறைவு உளவாளியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பொதிகைத் தொலைக்காட்சியில் மட்டுமே உள்ள இத்திரைப்படம் எப்பொழுதாவது ஒளிபரப்புச் செய்யப்படும். பழங்காலத்தில் வந்த படமாதலால் சிலர் இதில் நம்பியார் பதினொரு தோற்றங்களில் வந்திருக்கிறார் என்றும் புதுச்செய்தி சொல்லிவருகின்றனர் இக்காலத் தலைமுறையினருக்கு.
மனோரமா அக்கால நடிகை என்பதால் அவர் சொல்வதை மட்டும் வைத்துப்பார்த்தால் எம்.என்.நம்பியார் 15 தோற்றங்களில் வந்தார் என்பதை நம்பலாம்.
பல தோற்றங்களில் வந்தாலும், இத்தோற்றங்கள் பெரிதும் பெயர் பெற்றவையாம்.
காதுகேளாத சித்துவேலை செய்பவன், அரபுநாட்டு வணிகன், தொழிலதிபன், நாதசுர கலைஞன், நிலமுள்ள பெருஞ்செல்வந்தன், அஞ்சல்காரன்.
குமாரி கமலா நடமாடும் புகழ்பெற்ற "நாதர்முடி மேலிருக்கும் நல்ல பாம்பே..." பாடல் இப்படத்தில் இடம்பெற்றதே. அந்நாளைய வடமொழிப்பாடல்களிலிருந்து மூன்று பாடல்கள் சுடப்பட்டு இதில் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பது துணைச்செய்தி.
இராமநாதன், சுப்பையா நாயுடு இசையமைத்துள்ள இப்படத்தில் நடித்த இன்னபிற கலைஞர்கள்:
எம்.சி.சக்கரபாணி, ஏ.கருணாநிதி, சி.கே.சரசுவதி,லட்சுமி பிரபா, டி.பாலசுப்ரமண்யம், தனலட்சுமி, டி.கே.இராமசந்திரன், ஏழுமலை.
இப்படத்தை இக்காலத்தலைமுறையினர் வெகுசிலரே பார்த்திருக்கின்றனர். பார்த்தவர்களும் எத்தனை தோற்றம் என்று சரிவர கூறவில்லை. T.R.சுந்தரம் இயக்கிய இப்படத்தினை, நான் நம்பியாரின் தோற்றங்களை எண்ணும் வண்ணம் பார்க்க விரும்புகிறேன். 15 தோற்றங்கள் எனில் அதுதான் உலக சாதனை. உலகநாயகன் செய்தது அல்ல.
http://3.bp.blogspot.com/_iJ0ouXPWdX...a+Samiyaar.jpg
(நண்பர் ஒருவர் அனுப்பிய மின் அஞ்சலில் கிடைத்த தகவல்கள் )
krishna: search youtube with this Thigambara Samiyar 1950 You will get the full movie ! :)
Krishna: Here is the link to the full movie "Thigambara samiyar". Looks like you have trouble searching ! :)
http://youtu.be/NUDIPqIFfss
thigambara samiyar.. really a nice movie ( nice thought for those days )