http://s9.postimg.org/t87bm3jin/vddd.jpg
Printable View
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "-சிறப்பு .பார்வை.
-----------------------------------------------------------------------------------------------------------------------
வெளியான தேதி.09/07/1965.
50 வது ஆண்டு துவக்க தினம் இன்று.
புரட்சி தலைவர் வண்ணத்தில் மிக அழகாக தோன்றிய காவியம்.
இன்றைய முதல்வர். ஜெ. ஜெயலலிதா புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு இணையாக , அழகாக தோன்றி, சிறப்பாக நடித்து முதல்படம்
என்று சொல்லாத அளவிற்கு வெகு திறமையாக தன நடிப்பாற்றலை
வெளிபடுத்தினார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வாள் வீச்சு , கப்பல், கடல், மலை,
பகுதியில் இளமை துள்ளலுடன், படு சுறுசுறுப்பாக , கம்பீரமாக அனைவரும் வியக்கும் வண்ணம் இருந்தது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் கூறும் "தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான் ."
வாள் சண்டையிடும்போது , "இரு பூங்கொடி சற்று விளையாடிவிட்டு வருகிறேன் " என்று புன்னகையுடன் கூறும்போது அரங்கமே அதிருவது
வாடிக்கை.
வசனகர்த்தா திரு. ஆர். கே. சண்முகம் அவர்களின் கைவண்ணம்
பஞ்ச் வசனங்களுடன் திரைப்படம் முழுதும் ஆட்கொண்டது .
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி இறுதியாக இணைந்து இசை அமைத்த படம். டைட்டில் இசை மிக பிரமாதம்.
இறுதி வரை ஆங்காங்கே பின்னணி இசையில் அதை சேர்த்திருப்பார்கள்.
பல இடங்களில் பின்னணி இசை வெகு ஜோர்.
பாடல்களுக்காகவே விரும்பி பார்க்க வேண்டிய காவியம்.
பாடல்களில் கவிஞர்களின் வரிகள், இசை அமைப்பு , டி.எம்.எஸ். மற்றும் சுசீலா அவர்களின் இனிய குரல்கள், அதனை மெருகேற்றி நடித்து
பாடல்களில் ஒன்றி போன புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., செல்வி.ஜெ.ஜெயலலிதா அனைவருமே பாராட்ட படவேண்டியவர்கள்.
நகைச்சுவை மன்னன் நாகேஷ், ராமராவ், மாதவி, சாதனா ஆகியோரின்
நகைச்சுவை படத்திற்கு சுவை கூட்டியது.
எம்.என்.நம்பியார், மனோகர் ஆகியோரின் வில்லத்தனமான நடிப்பு
படத்திற்கு நல்ல விறுவிறுப்பு.
1965-ல் வெளியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் "
சென்னையில் மிட்லண்ட் ஸ்ரீ கிருஷ்ணா , மேகலா திரை அரங்குகளில்
அன்று 100 நாட்கள் மேல் ஓடியது.
அதன் பின்னர் இடைவிடாது வெள்ளித்திரைகளில் ,குறைந்த இடைவெளிகளில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் பல நாட்கள் ஓடி
எதிர் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், விநியோகஸ்தர்களின்
அமுத சுரபியாகவும் திகழ்ந்தது வரலாறு.
1970 முதல் 1990 வரையில் சென்னையில் பிரபாத், சரஸ்வதி அரங்குகளில் அவ்வப்போது வெளியிடப்பட்டு வெற்றி வாகை சூடியது.
அதை கணக்கிட்டாலே 25 வாரங்கள் மேல் இருக்கும்.
தற்போது திவ்யா பிலிம்ஸ் திரு. சொக்கலிங்கம் அவர்களின் சீரிய
முயற்சியால் , புதுப்பிக்கப்பட்டு , டிஜிடல் வடிவில் உருவாகி, கடந்த
மார்ச் மாதம் 130 திரை அரங்குகள் மேல் வெளியாகி வெற்றி நடை போட்டு , சென்னையில் சத்யம் சினிமாஸ், பேபி ஆல்பட் அரங்குகளில்
125 வது நாளை நோக்கி சாதனை காவியமாக திகழ்கிறது.
1965-ல் ஸ்ரீ கிருஷ்ணாவில் ஆயிரத்தில் ஒருவன் 25 நாட்களுக்கு பிறகு
பார்த்ததாக ஞாபகம். வெளியூரில் ,மதுரையில் ஒரு முறை மீனாட்சியில் , நெல்லையில் பாப்புலரில் பார்த்தது மறக்க முடியாத அனுபவம்.
தற்போது டிஜிடலில் எண்ணற்ற தடவை பார்த்து மகிழ்ந்தேன்.
இந்த திரைபடத்தை டிஜிடல் வடிவில் உருவாக்கி வெளியிட்டு அனைவரும் கண்டு களிப்புற ஏற்பாடு செய்த திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஓர் ஆயிரம் நன்றிகள்.
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/ocvuf.jpg
அமர்ந்து இருப்பவர்கள்:திருவாளர்கள்:ரமேஷ், பி.எஸ். ராஜு,சொக்கலிங்கம் ,லோகநாதன், எஸ். ராஜ்குமார்,பெருமாள்
நிற்பவர்கள் :நந்தா ,பி.ஜி.சேகர் , ஹயாத்,சுப்பிரமணி,சங்கர், மகாதேவன் , ஆனந்த் மற்றும் பலர்.
http://i61.tinypic.com/eah200.jpg
திருவாளர்கள்: ஆனந்த், பாண்டியன், பாண்டியராஜ், எஸ். ராஜ்குமார் , பி.எஸ். ராஜு, சுப்ரமணி , பி.ஜி.சேகர் , சொக்கலிங்கம், ஹயாத் , சங்கர் , செல்வகுமார் , வேலூர் ராமமூர்த்தி, சிவராம்,லோகநாதன், இளங்கோ
ஆகியோர்.
திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு திரு. பி.எஸ். ராஜு, திரு.எஸ். ராஜ்குமார் ஆகியோர் , ஆயிரத்தில் ஒருவன் 100 வது நாள் நினைவு பரிசு வழங்கிய
காட்சி.
இன்று பிறந்த நாள் கொண்டாடிய பேராசிரியர் திரு. செல்வகுமார் அவர்கள்
இன்று போல் எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க என
என் சார்பாகவும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
வாழ்த்துக்கள்.
ஆர். லோகநாதன்.
http://i60.tinypic.com/2uo45dx.jpg
சென்னை ஆல்பட் திரை அரங்கம் உள்ளே -101 வது நாள் மாலை காட்சி.