நன்றி ராஜ்ராஜ் சார்
உண்மையில் திகம்பர சாமியார் திரைபடத்தில் நம்பியார் எத்தனை வேடங்களில் வருவார் . சிலர் 11 என்றும் 12 என்றும் நடிகை மனோரமா 15 என்றும் சொல்லி இருக்கிறார். உங்களால் நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா ?
Printable View
நன்றி ராஜ்ராஜ் சார்
உண்மையில் திகம்பர சாமியார் திரைபடத்தில் நம்பியார் எத்தனை வேடங்களில் வருவார் . சிலர் 11 என்றும் 12 என்றும் நடிகை மனோரமா 15 என்றும் சொல்லி இருக்கிறார். உங்களால் நினைவு கூர்ந்து சொல்ல முடியுமா ?
I think it was 11. Not sure ! I remember the songs more than the story ! :) I posted ' Naadhar mudi melirukkum' in another thread. Of course 'oosi pattaase' was fun song for kids, especially the line ' adadaa yanai vedi idhu paaru adhanaalee unai suduvene thaaththaa' ! :lol:
இன்றைய ஸ்பெஷல் (88)
இன்றைய ஸ்பெஷலில் அன்றைய 'அபூர்வ சகோதர்கள்' (1949). பின்னாளைய 'நீரும் நெருப்பும்' படத்தின் மூலம். ஆச்சார்யா இயக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசனின் பிரம்மாண்ட தயாரிப்பு. எஸ்.ராஜேஸ்வரராவ் இசை. கதைக்களமும், வாள் வீச்சுகளும் அப்போதைக்கு ரொம்பப் புதுசு. நாகேந்திரராவின் வில்லத்தனம் அட்டகாசம்.
http://upload.wikimedia.org/wikipedi...49_film%29.jpg
மிக மிக அருமையான பாடல். பானுமதியும், எம்.கே ராதாவும் இணை. ராதா பியானோ இசைக்க அவருடன் 'அஷ்டாவதானி'யும் சேர்ந்து கொள்ள பானுமதியின் மயக்கும் குரல் வளத்தில் இந்த தேவாமிர்தப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கும். என்ன ஒரு அழகான ஆரம்பம்! வெறும் பியானோ இசை மட்டும். ராதா வாசித்தவுடன் பானுமதி தொடர்வார் தன் அழகிய கண்களால் ராதாவை வெட்டியபடியே. பானுமதி செம ஸ்மார்ட்டாக இருப்பார்.
இனி பாடலின் வரிகள்.
http://i.ytimg.com/vi/2FG5rrmrdoo/hqdefault.jpghttp://i.ytimg.com/vi/ew4yuZR67wA/hqdefault.jpg
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
(மதுஜி! இந்த வார்த்தை சரியா? மாலிள நேரம் அதாவது மாலை இள நேரம் என்பதன் சுருக்கமா! ப்ளீஸ்.விளக்கவும் அல்லது சரி செய்யவும் .)
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
நினைவும் கனவும் நீ என்றானே
நினைவும் கனவும் நீ என்றானே
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
ஆ ஆ ஆ ....
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
பூரண சந்த்ரன் போல் அவன் முகமே
புதுமலர் விழியே மதுநிற மொழியே
நினைவும் கனவும் நீ என்றானே
நினைவும் கனவும் நீ என்றானே
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
நேரினில் வந்தான் நெஞ்சில் நுழைந்தான்
மானும் மயிலும் ஆடும் சோலை
மாலிள நேரம் மாநதியோரம்
கனவே கண்டேனே
என் ஆசை கனவே கண்டேனே
http://www.youtube.com/watch?v=ew4yu...yer_detailpage
dear vaasu sir
அபூர்வ சகோதரர்கள் 1949
இந்தப் படத்துக்கு மூன்று இசையமைப்பாளர்கள். எஸ்.ராஜேஸ்வரராவ், எம்.டி.பார்த்தசாரதி, ஆர்.வைத்தியநாதன் ஆகிய மூவரும் இசைப் பொறுப்பைப் பார்த்துக்கொண்டார்கள். இவர்களுக்குள் இருந்த வேலைப்பங்கீடு எப்படிப்பட்டதென்று தெரியவில்லை.
இந்தப் படத்தை ஜெமினி ஸ்டுடியோஸ் இந்திக்கும் கொண்டு போனது. இந்தியிலும் இவர்கள் மூவருமே இசையமைத்தார்கள். பானுமதியே நடித்தார்
இப்படி ஒரு தகவல் படித்த நினைவு உண்டு .சற்று உறுதி செய்யவும்
வணக்கம் கிருஷ்ணாஜி.
வெரி குட் மார்னிங் வாசு சார்
இயக்குனர் ஆச்சார்யா பற்றி இணையத்தில் கிடைத்த தகவல்கள்
டாக்டர் சாவித்திரி என்ற திரைப்படம் கதை , திரைக்கதை எழுதியதுடன் வேலன் மற்றும் இளங்கோவனுடன் இணைந்து வசனமும் எழுதி இருப்பவர் ஆச்சார்யா. இந்த ஆச்சார்யா யார் என்பது கண்டிப்பாக ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் தெரிந்து இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சந்திரலேகா படம் இவரது கதையில் இருந்து உருவானதுதான், படத்தை இவர்தான் இயக்குவதாக இருந்தது. பெரும்பாலான காட்சிகளை இவர்தான் இயக்கினார், வாசனுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அவர் விலக நேரிட்டது. அந்த படத்தில் வரும் புகழ் பெற்ற டிரம் டான்ஸ் காட்சிகளை இவர்தான் எடுத்தார்.
மங்கம்மா சபதம் , அபூர்வ சகோதரர்கள் போன்ற சூப்பர் ஹிட் படங்கள் எடுத்தார்.
பின்னாட்களில் நடிகர் கமல்ஹாசன் நடித்து இதே படங்களின் தலைப்பை (மங்கம்மா சபதம்,அபூர்வ சகோதரர்கள்) கொண்டு படங்கள் வெளியாகின.
krishna: Apoorva SagodharargaL was made in Hindi as Nishaan. There is a song in the same tune as 'maanum mayilum aadum solai maalai nanneram maanadhi oram'. I think I posted the Hindi version in Hindi songs thread long time back. I have to check. :)
மிக்க நன்றி ராஜ்ராஜ் சார்
1940,1950 பற்றிய தகவல்களுக்கு உறுதி செய்ய நீங்கள் இந்த திரிக்கு கிடைத்தது மிக பெரிய பலம்
Here is the song from Nishan ( Hindi version of Apoorva SagodharargaL)
Teri Meri Yeh Kahani....
http://www.youtube.com/watch?v=XwvLc2d1rYY
இரட்டை சகோதரர்கள் முதலில் பிரிந்து பின்னர் இணையும் கதைக்கு ஆரம்ப புள்ளி இந்த அபூர்வ சகோதரர்கள் தானே வாசு சார் .உத்தமபுதிரனையும் சேர்த்துக்கலாம் (சின்னப்பா நடித்த)
அந்நாட்களில் மாடர்ன் திடேர்ஸ்,ஜெமினியின்,ஏவிஎம் இன்,பீம்சிங்,பாலச்சந்தர்,ஸ்ரீதர் என்று டைட்டில் கார்டு போடும் போது இதுக்கு எல்லாம் கூட கைத்தட்டு கேட்ட நினைவு உண்டு .