Loganathan Sir,
It is not that he is a person who likes Vegetarian Food, but he is a Brahmin [GENERALLY eat Vegetarian food only], correct sir? I am also 100% vegetarian.
Thanks
Printable View
திரை உலகில் எல்லா தரப்பினராலும் ரசிக்கப்பட்ட நாயகன் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
எம்ஜிஆர் படங்கள் என்றாலே முதலில் அவருடைய பாடல்கள் .
எம்ஜிஆரின் புதுமையான சண்டை காட்சிகள் .
எம்ஜிஆரின் இனிமையான காதல் காட்சிகள் .
எம்ஜிஆரின் மாறு பட்ட நடிப்பு.
எம்ஜிஆரின் அறிவுரை காட்சிகள்.
எம்ஜிஆர் படம் என்றால் பொழுது போக்கு படமாகவும் , மக்களின் மன மகிழ் படமாகவும் சமுதாய சீர்திருத்த படமாகவும் இருந்தது .
எம்ஜிஆரின் கொள்கை - பிரகடனங்கள் .
1947 முதல் 1978 வரை வெளிவந்த மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களை எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமன்றி எல்லா கட்சியினரும் , பெண்களும் பார்த்து மகிழ்ந்தனர் .
எம்ஜிஆர் படங்களுக்கு repeated audience ஏராளம் . எனவேதான் அவருடைய பல படங்கள் மறு வெளியீட்டில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியது .
எம்ஜிஆரின் சினிமா - அரசியல் வெற்றிகளை ஏற்று கொள்ள முடியாதவர்களின் வாதங்கள் எம்ஜிஆர் என்ற பிம்பத்தின் முன் மங்கி விட்டது .
எம்ஜிஆரின் செல்வாக்கு - புகழ் இரண்டையும் சரியாக பயன் படுத்தி கொண்டு வெற்றி பெற்றவர்கள்காங்கிரஸ் முதலாளிகள் .அவரை வைத்து படம் எடுத்து வெற்றி பெற்றர்கள்.கட்சியில் கூட்டு வைத்தும் வெற்றி பெற்றார்கள் .
தோல்விகளுக்கு ஆயிரம் கரணங்கள் கூறலாம் . வெற்றிக்கு ஒரே காரணம் எம்ஜிஆர் எம்ஜிஆர் எம்ஜிஆர் .
மக்கள திலகம் எம்ஜிஆர் ஒரு trend setter என்பதை திரை உலகிலும் அரசியல் உலகிலும் நிருபித்து காட்டியவர் .
மலைக்கள்ளன் - நாடோடி மன்னன் - திருடாதே - எங்கவீட்டு பிள்ளை - அன்பே வா - அடிமைப்பெண் ரிக்ஷாக்காரன் - உலகம் சுற்றும் வாலிபன் - இதயக்கனி போன்ற படங்களின் தாக்கம் எம்ஜிஆர் ஒரு trend setterஎன்பதை நிருபித்து .
1957 / 1962/1967 /1971 தேர்தல்களில் எம்ஜிஆரின் பிரச்சாரம் பல அரசியல் மாற்றங்களை உருவாக்கியது . 1977/1980/1984 தேர்தல்கள் எம்ஜிஆர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது.1991/2001/2011
தேர்தல்களில் எம்ஜிஆர் அரசாங்கம் உருவானது . உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காதபெருமையாகும் .
முதலில் தேசியத்தில் இருந்தார் ...
பின்னர் திராவிடத்தில் இணைந்தார் ...
தமிழ் நாட்டில் திராவிட ஆட்சி அமர்ந்திட உழைத்து வெற்றியும் கண்டார் .
தேசிய விருதுகளை திராவிடத்தில் இருந்தே பெற்றார் .
பாரத் எம்ஜிஆர்
பாரத ரத்னா எம்ஜிஆர்
மறைந்த போது தேசமே கண்ணீர் விட்டது .
அவர்தான் மக்கள் முதல்வர் எம்ஜிஆர் .
சைலேஷ் சார்,
chennai- pallavaram - janatha - theatere
am i correct
by KalaivendhanQuote:
இங்குள்ள எல்லாருமே ஒவ்வொரு வகையில் தனித்திறமையுடன் இருப்பது எனக்குத் தெரியும். திரு.சிவாஜி செந்தில் அவர்களின் வித்தியாசமான கான்செப்ட்களை ரசிக்கிறேன்.
உங்களைப் போலவே நானும் நட்புறவை தொடர விரும்புகிறேன். எனவே, வளர்க்க விரும்பவில்லை. திராவிட இயக்கங்கள் தீமையே செய்தன என்று நாங்கள் நினைக்கக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது அல்லவா? என்று கூறியிருக்கிறீர்கள். நிச்சயமாக உங்கள் நம்பிக்கையையும் உணர்வுகளையும் மதிக்கிறோம்.
மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாய் நடிகர்திலகம் திரியிலும் நாகரிகம் பிறழாது உயரிய நட்புணர்வுடன் பதிவிடும் தங்களுக்கும் திரு செல்வகுமார்மற்றும் எஸ்வீ யுகேஷ்....அனைத்து நண்பர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்.
சிலசமயம் கசப்புணர்வுகளுக்கு நாமும் பலியாகி விடுகிறோம். இம்மையமும் சார்ந்த திரிகளும் நமக்கு கிடைத்த மாபெரும் கருத்துப் பரிமாற்ற சாதனங்கள். நம்மை
வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து அமரத்துவம் அடைந்தும் அழியாத கல்வெட்டு நினைவுகளை நமது நெஞ்சங்களில் செதுக்கி விட்டு சென்றிருக்கும் ஒப்பற்ற
கலை மேதைகள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னர் என்ற மூவேந்தர்களின் பாதிப்பிலேயே பின்னாளில் தோன்றிய கலைஞர்களும் பங்களிக்க
இயன்றது உள்ளங்கை நெல்லிக்கனி, நன்றியுனர்வுடன் அவர்களை நினைவு கூறும் நாம் அவர்களிடையே இருந்த புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் பின்பற்றி நாகரிக மேம்பாடு மிக்க திரி நண்பர்களாகவே தொடர்ந்திட வேண்டுகிறேன். காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவோம். நன்றிகள்