-
http://i65.tinypic.com/2eqev75.jpg
மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட புரட்சித்தலைவர் பக்தர்கள் எல்லாருக்கும் நன்றி. என்னால் முடிந்ததை செய்ய இணைந்து பணியாற்றிய ரத்தத்தின் ரத்தங்களுக்கு நன்றி. எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆர்வத்துடன் செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு உள்ளத்தோடு உதவிய அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றி.
காஞ்சிபுரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக வேலூரில் இருந்து வந்து உதவிய சகோதரர் ராமமூர்த்தி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. நிவாரணப் பொருட்களை அனுப்பி உதவிய பெங்களூர் எம்ஜிஆர் பக்தர்களுக்கும் நன்றிகள். தனிப்பட்ட முறையில் உதவிய தலைவரின் பக்தர் நடிகர் மயில்சாமி அவர்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதில் வள்ளலின் வாரிசுகள் என்பதை நிரூபித்த மக்கள் திலகத்தின் பக்தர்கள், நண்பர்கள் அனைவருக்கும் பணிவுடன் நன்றியை தெரிவிக்கிறேன்.
பல தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், ரசிகர் மன்றங்கள், நண்பர்கள் குழுக்கள் தவிர, பல தனிப்பட்ட நபர்களும் தங்களால் முடிந்த அளவு மக்களின் துயர் துடைக்க உதவி செய்துள்ளனர். ஜாதி, மதம், இனம், மொழி, கட்சி தாண்டி உதவிகள் செய்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் புரட்சித் தலவர் பக்தர்கள் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஆபத்து காலத்தில் மட்டுமே இல்லாமல் இந்த சகோதரத்துவம் எப்போதும் தொடர்ந்து எல்லாரும் ரத்தத்தின் ரத்தங்களாய் வாழ பொன்மனச்செம்மலின் ஆசி கிடைக்க வேண்டும்.
-
Quote:
Originally Posted by
puratchi nadigar mgr
ஒளிவிளக்கு மதுரை சென்ட்ரலில் 1 லட்சத்து ஆயிரம் வசூல் அதுவும் 10, 15 வருட இடைவெளி இல்லாமல் வெறும் 9 மாத இடைவெளியில் இந்த வசூல் பெரும் சாதனை. தமிழகத்தின் ஒளிவிளக்கின் புகழ் என்றும் மங்காது.
எஸ் குமார் சொல்லும் வசூல் விவரம் உண்மையானவை என்று மற்ற ரசிகர்களும் திரியில் பாராட்டி உள்ளனர். எஸ் குமாருக்கும் பதிவிட்ட நண்பர் லோகநாதனுக்கும் நன்றி. .
எஸ் குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
http://i57.tinypic.com/2vaxlrd.jpg
இன்று மணிவிழா காணும் ஓய்வறியா உழைப்பாளி, புரட்சித்தலைவரின் முரட்டு பக்தர், மனித நேயர், அன்பு சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவர் எல்லா வளமும் நலமும் பெற்று பொன்மனச்செம்மல் புகழ்பாடி தொண்டாற்ற எல்லாம்வல்ல நம் புரட்சித்தலைவரை வேண்டுகிறேன்.
-
சகோதரர் செல்வகுமார் அவர்களது பிறந்தநாளுக்காக இந்த பாடலை அர்பணிக்கிறேன்.
https://youtu.be/Fi_I4UgfOAA
-
-
இனிய நண்பர் மதுரை திரு குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
http://i1273.photobucket.com/albums/...psf1065c0d.jpg
-
கடந்த வாரம் மக்கள் திலகத்தின் ஒளிவிளக்கு மதுரை நகரில் சாதனை படைத்துள்ளது. என்றென்றும் திரை உலகின் வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்ஜிஆர் என்பதை 2015லும் தொடர்ந்து நிருபித்து காட்டியுள்ளார் .
-
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் செல்வகுமார் அவர்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
-
இன்று மகா கவி பாரதியார் பிறந்த நாள் .
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தன்னுடைய பொற்கால ஆட்சியில் மகா கவி பாரதியார் நூற்றாண்டு விழா எடுத்தார். அன்றைய செய்திதாளில் வெளிவந்த நூற்றாண்டு விழா தொகுப்பு .
http://i67.tinypic.com/2qd4qc0.jpg
-