ஆந்திர மாநில சத்தியவாடா( நகரி)
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...22&oe=5F3F1A97
Thanks....
Printable View
ஆந்திர மாநில சத்தியவாடா( நகரி)
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...22&oe=5F3F1A97
Thanks....
கள்ளக்குறிச்சியில்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ec&oe=5F3CD0B4
Thanks....
திருப்பூர் மாவட்டம்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...30&oe=5F3F854F
Thanks....
குமரி மாவட்டத்தில்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...cb&oe=5F3CB884
Thanks...
இங்கு உள்ள மீடியாக்கள் நடிகர் திலகத்தின் நினைவு நாளை சொல்ல தகுதி அற்றவர்கள்
தெழுங்கில் கூட நினைவு கூறும் அளவிற்க்க்கு பெருமை உடையவர்.யாருக்கு கிடைக்கும்.அரசியல் என்ற சாக்கடையில் ஜெயித்தவர்க்களுக்கா
Tamil Film Industry Pays Tribute To Legendary Actor Sivaji Ganesan On His 19th Death Anniversary
https://youtu.be/Fb_rD54EHJg
Thanks Vijaya Raj Kumar
எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய சிவாஜி
–சித்ரா லட்சுமணன்
ஜூலை 21ஆம் தேதி நடிகர் திலகத்தின் நினைவு நாள்! அவரோடுதான் எனக்கு எத்தனையெத்தனை
அனுபவங்கள் ”நடிகர் திலகம் சிவாஜி என்ற மகா கலைஞனோடு ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கையாளன், பத்திரிகைத் தொடர்பாளன்,உதவி இயக்குநர், தயாரிப்பாளர் என்று பல தகுதிகளில் இணைந்து பணியாற்றக்கூடிய அரிய வாய்ப்பு பெற்றவன் நான். 1970 தொடங்கி 15 ஆண்டுகள் நான் நடத்திய “திரைக்கதிர்” பத்திரிகை அதன் ஆரம்பக்கட்டங்களில் சிவாஜி ரசிகர்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பத்திரிக்கையாக வெளிவந்தது. இதழ்கள் தோறும் ரசிகர்களின் கேள்விகளுக்கான சிவாஜியின் பதில்கள், சிவாஜியின் டைரி என்ற பெயரில் மாதம் முழுவதும் சிவாஜி கலந்து கொள்ளும் படப்பிடிப்புகள் மற்றும் நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், சிவாஜி படச் செய்திகள் என்று முழுக்க முழுக்க சிவாஜி பற்றிய செய்திகளே அந்த இதழில் நிறைந்திருக்கும். இப்படிப் பத்திரிகையாளனாக அவரோடு தொடங்கிய நட்பு அவரைக் கதாநாயகனாக வைத்து படம் எடுக்கின்ற அளவிற்கு வளரும் என்று நான் கனவில் கூட எண்ணியதில்லை. அதை இறைவன் எனக்களித்த வரம் என்றுதான் கூறுவேன்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “மண் வாசனை”தான் தயாரிப்பாளராக எனது முதல் படம். அப்படத்தின் நூறாவது நாள் விழாவிற்குத் தலைமை தாங்கிய நடிகர்திலகம்தான் என் இரண்டாவது தயாரிப்பான ”வாழ்க்கை ” திரைப்படத்தின் நாயகன். ”வாழ்க்கை” படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு சம்பவம் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய வேண்டிய ஒரு அரிய சம்பவம். எனக்குத் தெரிந்து சிவாஜி அவர்களின் திரைப்பட வாழ்க்கையில் அது வரை நடந்திராத ஒரு நிகழ்ச்சியாக அது இருக்கும் என்று நினைக்கிறேன்.
”வாழ்க்கை படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் சிவாஜி அவர்களின் மற்றொரு படத் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக நான் ஏவி.எம். ஸ்டூடியோ சென்றிருந்தேன். ஒப்பனை அறையில் படப்பிடிப்பிற்கு தயாராகிக்கொண்டிருந்த சிவாஜி அவர்களைச் சந்தித்தபோது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு,” படம் முழுவதும் பார்த்துவிட்டாயா? எப்படி வந்து இருக்கிறது” என்று கேட்டார் சிவாஜி. “மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. படம் பார்க்கும் போது பல காட்சிகளில் நான், டைரக்டர் சி.வி.ராஜேந்திரன் என்று பலரும் கண்கலங்கி விட்டோம்” என்றேன் நான்.
சிறிது நேரம் படத்தைப் பற்றியும் அதற்குப் பிறகு என் திருமணம் பற்றியும் பேசிவிட்டு (நான் ஒரு நடிகையைத் திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கைகளில் எல்லாம் கிசு கிசுக்கள் பலமாக எழுதப்பட்ட நேரம் அது) நான் கிளம்புகின்ற நேரத்தில் “படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் என் நடிப்பு கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னா கூட தயங்காம சொல்லுப்பா. நான் திரும்பவும் நடிச்சித் தரத் தயாரா இருக்கேன்” என்றார் சிவாஜி.
அப்போது எனக்கு பெரிய அனுபவம் இல்லை என்பது தவிர அவ்வளவாக விவரம் இல்லாத வயசு என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் “சார் நானே உங்ககிட்ட சொல்லணும் என்று இருந்தேன். நல்ல காலம் நீங்களே கேட்டு விட்டீர்கள். எல்லா காட்சிகளும் ரொம்பப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. ஆனால் ஒரே ஒரு காட்சியை மட்டும் திரும்பவும் படமாக்கினால் நன்றாக இருக்கும் என்று எனக்குள் ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. டைரக்டர் சி.வி.ராஜேந்திரனிடம் கூட சொல்லிப்பார்த்தேன். இல்லையில்லை இதுவே நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்லிவிட்டார். அந்த காட்சியை மட்டும் நீங்கள் மீண்டும் நடித்துத் தந்தால் நன்றாக இருக்கும்” என்று சொல்வேனா?
”வாழ்க்கை” சிவாஜிக்கு 242வது படம். எனக்கு இரண்டாவது படம்.
242 திரைப்படங்களில்இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குணச்சித்திரங்களைப் பிரதிபலித்து, நடிப்பிற்கு இலக்கணமாகவும்,பல்கலைக்கழகமாகவும் விளங்கிய கலைச்சக்க்ரவர்த்தியான அவரிடம் படத்தின் படப்பிடிப்பு
முழுவதும் முடிந்த நிலையில் ஏற்கனவே அவர் நடித்த காட்சியை மீண்டும் நடித்துத் தரச் சொல்கிறேன்.
எப்படிப்பட்ட அறியாமை பாருங்கள்!
“எந்தக் காட்சி உனக்குத் திருப்தியாக இல்லை?” என்று கேட்டு விட்டு “ஓ அந்தக் காட்சியா? அந்தக் காட்சியில் அதற்கு மேல் நடித்தாலோ, அல்லது வேறு மாதிரி நடித்தாலோ சரியாக வராது நன்றாகவும் அமையாது.” என்றெல்லாம் சொல்லி சிவாஜி என்னை சமாதானப்படுத்தவில்லை.
இயக்குநர் சி.வி.ராஜேந்திரனுக்கு போன் செய்து “ சித்ரா விவரமில்லாம ஏதோ ஒரு சீன்ல நான் திரும்பவும் நடிச்சி தரணும்னு கேட்கிறான். அதெல்லாம் சரியா வருமாப்பா? நீ கொஞ்சம் சித்ரா கிட்ட போன் பண்ணி அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிடு” என்று சொல்லவில்லை.
நான் சொல்லி முடித்தவுடன் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் “ சரிப்பா நீ படப் பிடிப்பிற்கு ஏற்பாடு செய். நான் வந்து மீண்டும் நடித்துத் தருகிறேன் என்றார்..
அடுத்த வாரமே பிரசாத் ஸ்டுடியோவில் செட் போடப்பட்டு அந்தக்காட்சி மீண்டும் படமாக்கப் பட்டது.
இந்த சம்பவம் நடந்தபோது சிவாஜி அவர்கள் திரையுலகில் இருந்த உயரத்தையும், அவரது திரையுலக அனுபவத்தையும் மனதில் இருத்திக் கொண்டு இன்றைய சினிமாவின் நிலையோடு இந்த சம்பவத்தை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் இந்த சம்பவத்தின் அருமை புரியும்.
சிவாஜி என்ற அந்த மாமேதையோடு நானும் என் சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு” திரைப்படத் தயாரிப்பின் போது நடந்த இன்னொரு நிகழ்ச்சியும் என் வாழ் நாளில் நான் மறக்க முடியாத ஒரு இனிய நிகழ்ச்சி.
ஒரு நாள் காலையில் சிவாஜி சார் அவர்களின் வீட்டிற்குச் சென்ற நான் அவரிடம் “ சார். நாளை காலையில் ‘டப்பிங்’ கிற்கு ஸ்டுடியோ புக் பண்ணியிருக்கிறேன். நீங்கள் எத்தனை மணிக்கு வருகிறீர்கள்” என்று கேட்டேன்.
சிவாஜியின் கூரிய கண்கள் என்னை ஒரு முறை ஊடுருவிப் பார்த்தன. “அண்ணனைப் பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே? உன்னை என் தம்பி மாதிரி நினைச்சி பழகறதினாலே எப்படி வேணும்னாலும் என்னோட ‘டீல்’ பண்ணலாம்னு நினைச்சிட்டியா? உன் இஷ்டத்துக்கு டப்பிங்
தியேட்டரை புக் பண்ணிட்டு என்னை டப்பிங்கிற்கு வரச் சொல்லி கூப்பிடறே? என்றார்.
சிவாஜி அவர்கள் அப்படி என்னிடம் கடுமையாக என்றும் பேசியதேயில்லை. ஒரு நிமிடம் என்ன பதில் பேசுவது என்றே எனக்குப் புரியவில்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று யோசித்துப் பார்த்தேன். அப்போதுதான் எனக்கு நான் செய்த தவறு புரிந்தது. அவ்வளவு பெரிய கலைஞனிடம் முறையாக தேதி வாங்கிவிட்டு அதற்குப் பிறகு ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்யாமல் நானாக ‘டப்பிங்’கிற்கு ஏற்பாடு செய்துவிட்டு அவரை அழைப்பது எந்த வகையில் நியாயம்?
என் தவறை உணர்ந்த அடுத்த நிமிடம் அவரிடம்,” SORRY SIR ஏதோ அவசரத்தில் தவறு செய்து விட்டேன். நாளைக்கு தியேட்டரை கேன்சல் செய்து விடுகிறேன். உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது சொல்லுங்கள் தியேட்டரை புக் செய்கிறேன்” என்றபடி சோபாவை விட்டு நான் எழுந்தேன்.
தன் கைகளால் என் தோளைத்தொட்டு என்னை அமர்த்தினார் சிவாஜி. “எனக்காக தியேட்டரை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டாம்.நான் நாளைக்கு காலையில் டப்பிங் பேச வர்றேன். ஆனால் ஒரு கண்டிஷன்” என்றார்.
“எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் சார் செய்யறேன்” என்றேன்.
“நாளை முதல் டப்பிங் முடியறவரைக்கும் நீ என் கூடத்தான் காலையில டிபன் சாப்பிடணும். சம்மதம்னா சொல்லு டப்பிங் பேச வர்றேன்” என்றார்.
கரும்பு தின்னக் கூலியா? உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன். இரண்டே நாட்களில் முழு படத்திற்கான டப்பிங்கையும் பேசி முடித்து விட்டார். அவர் கொண்டு வந்த டிபனில் நான் மட்டுமல்ல அந்த தியேட்டர் ஒலிப்பதிவாளர், டைரக்டர், உதவி டைரக்டர்கள் என்று பத்து பேருக்கு மேல் இரண்டு நாளும் சாப்பிட்டோம்.
”வாழ்க்கை” திரைப்படத் தயாரிப்பின் போது இன்னொரு சம்பவம்.
படம் முடிந்து வெளியீட்டிற்கு தயாரானபோது படத்தில் நடித்ததற்காக 50 சதவிகித சம்பளத்தைத்தான் பெற்றிருந்தார் சிவாஜி. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியன்று படத்தை வெளியிடுவது என்று முடிவெடுத்திருந்த நிலையில் மீதி சம்பளப் பணத்தைக் கொடுப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதியன்று சிவாஜி அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
“பணம் எல்லாம் நான் அப்புறம் வாங்கிக்கறேன். நீ நாளைக்கு காலையில புறப்பட்டு முதல்ல தஞ்சாவூர்ல நாங்க கட்டியிருக்கிற சாந்தி-கமலா தியேட்டர் திறப்பு விழாவிற்கு வர்ற வேலையைப் பாரு. உனக்கு ஃபிளைட்ல டிக்கட் எல்லாம் கூட போட்டாச்சி” என்றார் சிவாஜி.
தியேட்டர் திறப்பு விழா முடிந்ததும் சூரக்கோட்டையில் நண்பகல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரக்கோட்டைக்கு வந்த எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து கே.பாக்கியராஜ் செல்ல அவருக்கு பின்னால் நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு உயர் காவல்துறை அதிகாரி பாக்கியராஜைக் காட்டி “ நல்லா பார்த்துக்கய்யா அடுத்த சி.எம். இவர்தான்” என்று ஒரு இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். (இது ஒரு கூடுதல் தகவல்)
தியேட்டரைத் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜி அவர்களோடு உரையாடிவிட்டு பிறகு சென்னை திரும்பினார். அவ்விழா நடந்த பிறகு ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நான் வீர்பாண்டி கோவிலுக்குச் சென்றுவிட்டு
ஒருவாரம் சென்ற பிறகுதான் சென்னை திரும்பினேன். அதற்குப்பிறகே மீதி சம்பளத்துக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்சிவாஜி.
எம்.ஜி.ஆர். அவர்களும் சிவாஜி அவர்களும் எதிரும் புதிருமானவர்கள் என்ற எண்ணம் இன்றுவரை தமிழக மக்கள் மனதில் நிலவி வருகின்றது. ஆனால் அதை பலமாக பல தடவை மறுத்திருக்கிறார் சிவாஜி.
“தனிப்பட்ட முறையில் எங்களுக்கிடையே நல்லுறவு இல்லையென்றால் எதற்காக கடிதம் எழுதி என்னை அமெரிக்கா வரச் சொல்லுகிறார் எம்.ஜி.ஆர்? எதற்காக நான் ‘சார்ட்டர்ட் ஃப்ளைட்’ வைத்துக் கொண்டு பால்டிமோர் சென்று அவரைப் பார்க்கிறேன்? எதற்காக அவர் காலமாவதற்கு நான்கு நாட்கள் முன்பு “வீட்டிற்கு வா முக்கியமான பொறுப்பை உன்னிடம் கொடுக்கணும்” என்று சொல்லப்போகிறார்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தனிப்பட்ட முறையில் நாங்கள் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தோம்” என்று தன் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சிவாஜி. அவர்கள் இருவரது நெருக்கத்தை உணர்கின்ற வாய்ப்பு சிவாஜி அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதையொட்டி அவருக்கு திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தியபோது எனக்குக் கிடைத்தது. அந்த பாராட்டு விழாக் குழுவில் பாரதிராஜா, ஏவி.எம்.சரவணன், ரஜினிகாந்த்,கமல்ஹாசன் ஆகியோரோடு நானும் இடம் பெற்றிருந்தேன்.
அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். விழாவிற்கு தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என்று விழாக் குழுவினர் அனைவரும் முடிவெடுத்தோம். அதில் சிக்கல் என்னவென்றால் விழா நடைபெற இருந்ததற்கு முதல் நாள்தான் எம்.ஜி.ஆர். அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புவதாக இருந்தார். ஆகவே தனது பாராட்டு விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்க வேண்டும் என்று கேட்டு எம்.ஜி.ஆருக்கு சிவாஜியே தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி அவரை அழைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த கடிதத்தை இயக்குநர் பாரதிராஜா எடுத்துச் சென்று தில்லியில் வந்து இறங்கப் போகும் எம்.ஜி.ஆர்.அவர்களிடம் தந்து விழாவிற்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கக் கேட்டுக் கொள்வது என்றும் திட்டமிடப்பட்டது.
கடிதத்தில் கையெழுத்திட வேண்டிய சிவாஜி அவர்கள் கோபிசெட்டிப்பாளையத்தில் “மண்ணுக்குள் வைரம்” படப்பிடிப்பில் இருந்தார். கோபிச்செட்டி பாளையம் சென்று எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதும் கடிதத்தில் கையெழுத்து வாங்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி நான் கொபிசெட்டிபாளையம் சென்று சிவாஜி அவர்களிடம் கையெழுத்தை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பினேன். எனக்குத் தெரிந்து எம்.ஜி.ஆருக்கு சிவாஜி எழுதிய ஒரே கடிதம் அதுவாகத்தான் இருக்கும் என்பதால் புகழ் பெற்ற அக்கடிதத்திற்கு ஒரு பிரதி எடுத்து பத்திரப் படுத்துக் கொண்டேன். இத்தனை தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் அந்த விழாவில் எம்.ஜி.ஆர். அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் குறையை நானும் எனது சகோதரர் சித்ரா ராமுவும் இணைந்து தயாரித்த “ஜல்லிக்கட்டு”நூறாவது நாள் விழாவில் தீர்த்துக் கொண்டேன்.
சிவாஜி அவர்கள் நடித்த ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் 100வது நாள் விழாவிற்கு எம்.ஜி.ஆர்.தான் தலைமை. ”பல்லாண்டு காலம் திரையுலகை ஆண்ட ஈடு இணையற்ற கலைச் சக்ரவர்த்திகளாக எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இருந்த போதிலும் சிவாஜி நடித்த திரைப்படத்தின் 100வது நாள் விழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொள்வது இதுவே முதல் முறை” என்று விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பாராட்டிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவின் போது நடந்த இன்னொரு ரசமான நிகழ்ச்சி என்னால் எப்போதும் மறக்க முடியாத ஒன்று.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா அழைப்பிதழின்.முகப்பில் எம்.ஜி.ஆர். படத்தையும்,நடுப்பக்கத்தில் சத்தியராஜ் அவர்கள் படத்தையும்.கடைசி பக்கத்தில் சிவாஜி அவர்கள் படத்தையும் அச்சிட்டிருந்தோம். அந்த அழைப்பிதழை எப்படி வேண்டுமானாலும் மடிக்கலாம் என்பதால் சிவாஜி அவர்களிடம் அழைப்பிதழைக் கொடுக்கும்போது சிவாஜி அவர்கள் படம் முதலில் வரும்படி மடித்து அவரிடம் கொடுத்தேன். அழைப்பிதழைப் படித்துப் பார்த்துவிட்டு அழைப்பிதழை என்னிடம் திரும்பக் கொடுத்தார் சிவாஜி. அதில் முதல் பக்கத்தில் எம்.ஜி.ஆர். என் மனதைக் காயப் படுத்தாமல் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று அவர் சொல்லாமல் சொன்ன விதம் இருக்கிறதே அது இன்றளவும் என் மனதில் ஆழப் பதிந்துள்ள ஒன்று.
சிவாஜி போன்ற இமாலயத் திறமை கொண்ட நடிகரை இனி எக்காலத்திலும் இந்தத் திரையுலகம் சந்திக்கப் போவதில்லை என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போல நூறு மடங்கு உண்மை சிவாஜி போன்று பழகுவதற்கு எளிமையான, இனியவரான மனிதனை இந்தத் திரையுலகம் இனி எந்தக்காலத்திலும் சந்திக்கப் போவதில்லை!
Thanks .. Venkat Vpt
ஒன்ஸ் மோர் பார்த்தப்போ சிவாஜி தான் தெரிஞ்சார்...’ - உருகும் 90’ஸ் கிட் #MyVikatan
விகடன் வாசகர் மனோ வின் அருமையான கட்டுரை.
கருப்பு வெள்ளை காலக்கட்டம் முதல் கலர் சினிமா வரை நடித்த அனைத்து படங்களிலும், காட்சிகளிலும், ப்ரேம்களிலும் தன்னை, தனது தனித்துவமான உடல்மொழிகளால், வசன உச்சரிப்புகளால் நிலைநிறுத்திக்கொண்ட ஒரு மாபெரும் கலைஞனை பற்றி இங்கு பகிர விரும்புகிறேன். சாதாரணமாக திரையில் பார்த்த ஒரு கலைஞரை, அவரின் ரசிகனான என் தமையனின் நேத்திரங்களின் வழியாக கண்ட தரிசனம் இது. அவரின் நடிப்பு நிச்சயம் ஒரு சரித்திரம் தான்.
90’s கிட்ஸ் தலைமுறையில் பிறந்த என்னை முதலில் கவர்ந்தது விஜயும் அஜித்தும் தான். ரஹ்மான் தன் இசையால் நம் உணர்வுதாளங்களை தட்டி எழுப்பிய காலமது. திடீரென்று வெளிச்சம் வீசிச் செல்லும் மின்னலைப்போல்தான் எனக்கு சிவாஜி என்னும் உன்னதக்கலைஞனின் நடிப்பு அறிமுகமாகியது. முதன்முதலாக 'ஒன்ஸ் மோர்' படம் பார்த்தப் பொழுது, தனது 'சாந்தா'வுக்காக ஏங்கும் அந்தக் காட்சிதான் என்னை அவரை நோக்கி ஈர்த்த முதல் நிகழ்வு. படம் முடிந்த பின்பு 'இருவர் உள்ளம்' படம் போட மாட்டார்களா என்று காவிய புதன் விளம்பரங்களை விடாமல் பார்த்திருக்கிறேன். ஏனோ அந்த ‘சாந்தாவும்’, ‘நினைவெங்கே போகிறது? ' பாடலும் நினைவில் ஆழமாக பதிந்துவிட்டது.
அதன்பின், ஒரு சில ஆண்டு இடைவெளியில் மறுபடியும் சிவாஜி என்றொரு கலைஞனின் மற்றொரு பரிணாமத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. கோடை விடுமுறையென அனைவரும் தாத்தா பாட்டி வீட்டில் முகாமிட்டிருந்தோம். என்ன முரண்டு செய்தாலும், மதியம் கண்டிப்பாக வீட்டினுள் அடைத்துவிடுவர் தாத்தா . அப்படிப்பட்ட வேளையில் மறுபடியும் ஒரு படம், 'பாரத விலாஸ்'. கடைசி வரை மனசாட்சியுடன் பேசிப் பேசியே மனிதர் நம்மையும் அப்படி புலம்பவைத்து விடுவார். அதுவென்னவோ, இன்று வரை புதியபறவை 'கோபாலை' விட, பாரத விலாஸ் 'கோபால்' தான் என்னுடைய பேவரைட்.
மற்றோர் நாள் , ஏதோ ஒரு லோக்கல் சேனலில் ஒளிபரப்பப்பட்டு, நம்மை அப்படியே கட்டிப்போட்ட படம், "திருவிளையாடல்". அதிலும் கலர் கலர் லைட் செட்டிங்ஸ் வைத்து, "சங்கதனை கீறு கீறு எனக்கீறும் நக்கீரனோ எம் கவியை ஆராய்ந்து சொல்ல தக்கவன்?" டயலாக் கேட்டப்போது ,"எப்படி இத மனப்பாடம் பண்ணிருப்பார்?" என்று மட்டுமே சிந்தனை ஓடியது. நக்கீரர் விடவில்லையே, " சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனார்க்கு ஏது குலம், சங்கை அறிந்துந்து வாழ்வோம், அரனே உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை." வசனமும், அதற்கு சிவாஜி மேல் பரவுகின்ற வெளிச்சமும், அவர் புருவத்தூக்கலும் அல்ட்ராலெஜெண்ட் லெவல்.
அது நடுத்தரக்குடும்பங்களில் CD பிளேயர் வந்த காலம். எதாவது ஒரு படத்துக்கு CD கிடைச்சா, அது தேயும் மட்டும் அந்த படத்தை பார்க்கவேண்டும் என்பது எழுதப்படாத விதி. அப்படிதான் அறிமுகம் ஆனார்கள் ராஜராஜசோழனும், வீரபாண்டிய கட்டபொம்மனும்.
தேவாரத்தை மீட்டெடுத்த பெருமானேன்னு எல்லாரும் ராஜராஜனை சொல்வதே எனக்கு அப்போதுதான் தெரியும். கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவுல தஞ்சை பெரிய கோவிலை வச்சிக்கிட்டு, ராஜராஜன் அரசாண்ட பூமியிலேயே வாழ்ந்துட்டு ராஜராஜன் பத்தி தெரியாத எங்கள் தலைமுறைக்கு அவர்தான் ராஜராஜச்சோழன். `தஞ்சை பெரியக்கோவில் வாழ்க வாழ்கவே` பாட்டுக்கேட்டாலே மனசில் வரும் ராஜராஜன் சிவாஜி தான்.
எத்தனை பேருக்கு அந்த அரச கம்பீரம் வரும்? அக்கன் குந்தவையிடம் பணிவு, மனைவியிடம் காதல், பெருந்தச்சனிடம் சீடன், மகளுக்கு தகப்பன், ராஜதந்திரங்கள் நிறைந்த மாமன்னன் என எல்லா உடல்மொழியிலும் அவர் காட்டிய அபாரத்திறமை இருக்கிறதே! சொல்லில் மாளாது.
திருவருட்செல்வரில் "மன்னவன் வந்தானடி" பாடல். நளினம், கம்பீரம், ஆசை அனைத்தையும் நடையிலே காட்ட முடியுமா என்ன? ஆனால் இன்றும் அவை காண்போரின் மனதில் நீங்காது. கந்தன் கருணையில் சிறு பாத்திரம் தான்.
வீரபாகுத்தேவர். ஆனால் வசனமும் காட்சி நிகழ்வுகளும் படம் முடிந்த பின்னர் கூட நம்மை தொடரும்.
" நீ சூரன், நான் வீரன்" என சூரனிடம் கொக்கரிப்பதாகட்டும், வெற்றிவேல் வீரவேல் என்று படை நடத்துவதாகட்டும், இறுதியில் வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில், " தாயே இப்பொழுது நீங்கள்" என்று இயல்பாக சிக்கி திண்டாடுவதாகத்தும், அவரை தவிர்க்கவே முடியாத இடத்தில் நிலைநிறுத்திக் கொண்டுவிடுவார்.
சிவாஜி ஒரு வசந்தகாலக் கலைஞன். அதனால் தான் அவரின் வசந்த மாளிகை எப்பொழுது பார்த்தாலும் நம்மை கனக்க வைக்கின்றது. ஒரு அதீத சுயமரியாதை உள்ள பெண்ணிற்கும், அன்பினை தேடித்தேடி அலையும் பணக்கார ஆணிற்குமான காதல் எல்லா வரையறைகளையும் தாண்டிய நெகிழ்வல்லவா? சிறுப்பிராயம் முதல், அன்பிற்காக ஏங்கி, தன்னை ஒரு easy go மனிதனாக காட்டிக்கொண்ட மனிதனை எப்போது கற்பனை செய்தாலும், வசந்த மளிகை 'ஆனந்த்'தான் நம் நினைவிற்கு வருவார்.
அன்பிற்கும், அதிகாரத்திற்குமான இடைவெளியை இட்டு நிரப்பமுடியாமல் தவிக்கும் அத்துணை நேரங்களிலும், `எங்க சின்னவர் கெட்டுபோய்ட்டாரே தவிர கெட்டவர் இல்லைம்மா` என்ற குரல் நம்மை அறியாமல் மனதிற்குள் ஒலிக்கும். `மயக்கமென்ன` பாடலில் காதலின் ஆழத்தை அந்த கண்ணாடி அறையின் சுவர் வழியே கடத்தும் அழகிற்கு கொஞ்சமும் குறையாமல், `யாருக்காக` பாடலில் கசிந்துருகும் வலியினை விரவ யாரால் இயலும்? தனக்கு தானே சரிநிகர் சமானமான வெகுஜனக்கலைஞர் அவர்.
திரிசூலத்தில் `சுமதி` என்ற விளிப்போடு பாடும் `மலர் கொடுத்தேன்` கண்டு கண்ணீர்விடாத கண்களே இருந்திருக்க முடியாது.
`படிக்காத மேதை` ரங்கனாக நம்மை உருக வைக்கும் அதே வேளையில் `பார் மகளே பார்` சிவலிங்கமாக கௌரவம் காட்டி தள்ளி நிற்கவும் வைப்பார்.
தந்தைக்கு பயந்துச்சாகும் ` உயர்ந்த மனிதன்` ராஜுவும் அவர்தான். தந்தையையே அரட்டி வைக்கும் `ஊட்டி வரை உறவு` ரவியும் அவரேதான்.
அவரே `வீரபாண்டிய கட்டபொம்மனாய்` சிம்மகர்ஜனையும் செய்வார், `புதிய பறவை` கோபாலாய் கொலையும் செய்வார்.
`அன்புள்ள அப்பாவின்` ராஜசேகரன் மகளின் திருமணத்தில் பாடிய `மரகதவல்லிக்கு மணக்கோலம்` ஒலிக்காத திருமண வீடுகளே கிடையாது. காலங்கள் மாறினாலும் `எந்தன் வீடு கன்று இன்று எட்டி எட்டி போகிறது` வரியில் கண்ணீர் விடாத தகப்பன்களே கிடையாது. இன்றும் தேவர் மகனின் `இதெல்லாம் என்ன பெருமையா? கடமை` template Meme creator -களின் நிலைவாசல். அதிலும் அந்த படத்தின் அப்பா-பையன் உரையாடலும், அதன் கனமும், அந்த நிமிடம் நம் கண்ணில் நிறையும் நீரும், மனவோட்டத்தில் உறைந்துப்போன நொடிகள்தான்.
எல்லா வார்த்தைகளுக்கும் அகராதியில் பொருள் இருப்பதைப்போலவே , எல்லா கதாபாத்திரங்களும், அதன் மேதமைகளோடு சரிவர அளக்கப்பட்டு, சிவாஜியினால் நிறுவப்பட்டிருக்கும். எந்த கதாபாத்திரம் எடுத்தாலும், அதனில் தன்னை தொலைத்து, கதாபாத்திரத்தை மிளிரச்செய்யும் தன்மை அவரையே சேரும். அவர் ஒரு சரித்திரம், அவரின் நடிப்பு பெரும் பாடம்.
-மனோ
Thanks.. Vasu Devan
மீள் பதிவு ( எனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது)
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று பேரறிஞர் அண்ணா கூறியது நடிகர் திலகத்தை உதாரணமாக கொண்டுதான்,
ஆனால் அது அப்படியே மறைக்கப்பட்டு விட்டது
நடிகர் திலகம் 1950 களின் துவக்கத்தில் திமுகவின் வளர்ச்சிக்காக பல ஊர்களில் மேடைகளில் பராசக்தி, மனோகரா போன்ற நாடகங்களில் நடித்தும் அதன் வசனங்களை பேசியும் நிதி வசூலித்து கொடுத்து வந்தார்,
இந்த நிலையில் அண்ணா அவர்களின் மேலும் ஒரு அறிவிப்பு தஞ்சாவூர் மாகானம் அப்போது பெரும் புயலில் சிக்கியதால் அந்த மக்களின் துயர் நீக்கிடும் விதமாக அதிக நிதி வசூலித்து கொடுப்பவருக்கு மாநாட்டுப் பந்தலில் நான் மோதிரம் அணிவிக்குப் போகிறேன் என்பது,
உண்மையான அன்புத் தம்பியாய் இருந்து வந்த நடிகர் திலகத்திற்கு அந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது, ஏனெனில் எப்படி கணக்குப் போட்டாலும் மற்றவர்கள் நடிகர் திலகம் வசூலித்து கொடுத்த தொகையில் நான்கில் ஒரு பங்கு கூட வராது என்பதனால்
ஆனால் அந்த நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை, மாநாட்டு அழைப்பு வந்தால் தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டார், ஓரிரு நாட்கள் ஆகியும் அழைப்பு இல்லை, விசாரித்ததில் அவரது பெயர் மறைக்கப்பட்டு அதே கால கட்டத்தில் மற்றுமொரு முன்னணி நடிகராக இருந்த. எம்ஜிஆர் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு திமுக மாநாட்டுப் பந்தலில் மோதிரமும் பரிசளித்து விட்டார் அண்ணா அவர்கள், அண்ணா அவர்களிடம் உண்மையான விவரங்களை அளிக்கப் படவில்லை "எங்கே தம்பி கணேசன் " என்று கேட்ட அண்ணாவிடம் அவர் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அதனால் வரவில்லை என்று பொய்யான தகவல் சொல்லப்பட்டது,
இந்த தகவல்களை தெரிந்து கொண்ட நடிகர் திலகம் ரொம்பவே சோர்ந்து போனார் என்றே சொல்ல வேண்டும், பதிபக்தி படத் தொடர்பான விவாதத்தில் இருந்த இயக்குநர் பீம்சிங் அவர்கள் இந்த சூழலில் இருந்து நடிகர் திலகத்தை வெளிக் கொண்டு வர திருப்பதி சென்று வந்தால் மன நிம்மதி கிடைக்கும் என யோசனையைக் கூறி திருப்பதிக்கு அழைத்துச் சென்றார்,
நடிகர் திலகம் திருப்பதி சென்று இருக்கிறார் என்ற செய்திக் கிடைத்த நடிகர் திலகத்தின் எதிர்ப்பாளர்கள் இது தான் தருணம் என கண்டனச் செயலில் இறங்கினர், நடிகர் திலகத்தின் போஸ்டர்கள் மீது சானம் அடிக்கப்பட்டது, " திருப்பதி கணேசா திரும்பிப் போ" என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் சென்னை மற்றும் புறநகர் முழுவதும் ஒட்டப்பட்டன,
சென்னை திரும்பிய நடிகர் திலகம் இந்தச் செயல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சவில்லை, முன்னர் இருந்த மனநிலையைக் காட்டிலும் உற்சாகம் மிகுந்து காணப்பட்டார், ஏராளமான புதிய திரைப் படங்களை ஏற்றுக் கொண்டார், அண்ணா அவர்கள் நடிகர் திலகம் தன்னை சந்தித்து வருத்தம் தெரிவிப்பார் என எதிர்ப் பார்த்திருந்தார், ஆனால்
நடிகர் திலகம் அண்ணா அவர்களை சென்று சந்திக்கவில்லை, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு துவண்டு விடாமல் எதையும் தாங்கும் இதயம் தனக்கு உண்டு என்பதை உலகிற்கு தெரிவிக்கும் விதத்தில் ஸிப்டு முறையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்,
நடிகர் திலகத்தின் இந்த மன உறுதியையும் கடுமையான உழைப்பையும் கண்ட பேரறிஞர் அண்ணா அப்போது பேசிய பேச்சுத்தான்
தம்பி கணேசனைப் போல "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்று பேசியது,
வழக்கமாக பத்திரிக்கையாளர்கள் செய்து வந்த உண்மைகளை மறைத்து எழுதும் போக்கு கடைப்பிடிக்கப்பட்டது,
இந்த "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்ற வாக்கியம் நடிகர் திலகத்திற்காக அன்று பொருந்தியது போலவே பிற்காலத்தில் நடிகர் திலகத்தின் ரசிகர்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் இன்று வரை பொருந்தி வருகிறது என்பது தான் உண்மையிலும் உண்மை,
Thanks Sekar
எம்ஜிஆர் தனது சொத்துக்களை அவரது குடும்பத்திற்கு தான் எழுதி வைத்தார்,
எனவே ஜெயலலிதா அவர்களின் சொத்து அவரது குடும்ப உறுப்பினர்களான எங்களுக்குத்தான் சேர வேண்டும்,
.
:- ஜெ.தீபா இன்று செய்தியாளர்கள் சந்திப்பில்,
ஏழைகளின் காப்பாளர்களுக்கு வந்த சோதனை,
விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது,
Thanks Sekar