Late'a vanthalum latest a varuvar'nu sonnathu poii... lata vanthakooda ok parava illai'ngra nilamaiku vanthutom!
Printable View
Late'a vanthalum latest a varuvar'nu sonnathu poii... lata vanthakooda ok parava illai'ngra nilamaiku vanthutom!
http://tamil.thehindu.com/cinema/tam...cle5637963.ece
பெங்களூருக்கு ரஜினி ரகசிய பயணம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூர் வந்த ரஜினிகாந்த் தனது அண்ணன், நெருங்கிய நண்பர்களை சந்தித்தார். தான் படித்த பள்ளிக்கூடம் உள்பட பிடித்த இடங்களுக்கு ரகசியமாக சென்று வந்தார்.
நேற்று காலை அவர் தனது வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார். இந்த* தகவலறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திடீரென வீட்டின் முன்பு குவிந்து, ஆரவாரம் செய்தனர். ரஜினி வீட்டின் பால்கனியில் நின்று, ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார்.
பிறந்து வளர்ந்த பெங்களூருக்கு ரஜினி காந்த் அடிக்கடி ரகசியமாக வந்துபோவது வழக்கம். கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பெங்களூர் வருவதை குறைத்துக்கொண்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவர*து அண்ணன் சத்தியநாராயணா பெங்களூரில் கட்டிய புதிய வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்தார். அப்போது நெருங்கிய நண்பர்களை கூட சந்திக்காமல், உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டார்.
இந்நிலையில் கடந்த 27-தேதி ரஜினி தனது நண்பர்கள் 3 பேருடன் ரகசியமாக பெங்களூர் வந்தார். வழக்கமாக அனுமந்த் நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை பெங்களூர் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தன*து இல்லத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இருப்பினும் முதல் வேலையாக, 28-ம் தேதி காலை சத்திய நாராயணா வீட்டிற்கு சென்றார்.
ரஜினியின் வருகையொட்டி அவரின் உறவினர்கள் அனைவரும் சத்திய நாராயணா வீட்டில் கூடினர். அனைவரோடு பேசி மகிழ்ந்த அவர், தனது அண்ணனுடன் நீண்ட நேரம் தனியே பேசி கொண்டிருந்தார்.
படித்த பள்ளியை வலம் வந்தார்
ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் கவிப்புரம் குட்டஹள்ளி மண்ணை மிதிக்காமல், திரும்ப மாட்டார். ஏனென்றால் அவர் படித்த மாதிரி கன்னட தொடக்கப்பள்ளி, அவரின் இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோயில், உயிர் நண்பன் ராஜ் பகதூர் வீடு என அனைத்தும் அங்குதான் உள்ளது. மாறுவேடத்தில் வலம்வந்ததால் நெருக்கமானவர்களால்கூட ரஜினியை அங்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
நண்பர்களை பார்த்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் போது, கவிப்புரம் மாதிரி கன்னட தொடக்கப்பள்ளியை ரஜினி பார்த்தார். இந்த* பள்ளிக்கூடத்தை கர்நாடக அரசு ரூ.1.53 கோடி செலவில் நவீன வசதிகளோடு புதுப்பித்து வருகிறது.
வறுமையில் வாடிய தனது ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிற்கு சமீபத்தில் பெரிய தொகையை வங்கி கணக்கில் செலுத்தி, அவரது கண்ணீரை ரஜினி காந்தி துடைத்தார். அப்போது ஆசிரியையிடம் தொலைப்பேசியில் பேசிய ரஜினி,' பெங்களூர் வரும்போது நிச்சயம் வீட்டிற்கு வருகிறேன்'என உறுதியளித்தார்.
இப்போது பெங்களூர் வந்த ரஜினி உங்களை சந்தித்தாரா என்று ஆசிரியை பி.என்.சாந்தம்மாவிடம் கேட்டோம். 'இல்லை. சிவாஜிக்கு(ரஜினியின் இயற்பெயர்) நிறைய வேலைகள் இருக்கும். அதனால்தான் வரவில்லை.அடுத்தமுறை நிச்சயம் வருவார். இல்லாவிட்டால் பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு வருவார்''என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் அவருடைய நிழலாக இருப்பவர், உயிர் நண்பர் ராஜ் பகதூர் தான். ரஜினியோடு பள்ளியில் ஒன்றாக படித்தது, பேருந்தில் அவர் நடத்துநராக இருந்த போது ஓட்டுநராக இருந்தது ராஜ் பகதூர் தான்.
இந்த முறை கன்னட படமான 'ஒன்வே' வெளியூர் படப்பிடிப்பில் ராஜ்பகதூர் மிகவும் பிஸியாக இருந்தார். அதனால் அவரால் ரஜினியோடு நேரத்தை செலவிட முடிய*வில்லை.
அதிகாலையிலேயே ரசிகர்கள்!
வழக்கமாக ரஜினி பெங்களூர் வரும்போதெல்லாம் வீட்டில் தங்காமல், வெளியே சுற்றுவார்.ஆனால் இந்த முறை அதிகமாக வீட்டிலே இருந்தார். நேற்று அதிகாலை 6 மணிக்கே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீட்டு முன்பு கூடி 'தலைவா..தலைவா..'' என உற்சாகமாக ஆரவாரமிட்டனர். மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பல ரசிகர்கள் ரஜினி வீட்டின் மதில் சுவருக்குள் ஏறிக் குதித்தனர்.
மந்த்ராலயத்திற்கு கிளம்பிய ரஜினி
ஒரு கட்டத்தில் ரசிகர்க*ளின் குரல் அக்கம் பக்கத்து வீட்டாரையும் விழித்தெழ செய்தது. இதனால் ரஜினி தனது வீட்டின் பால்கனிக்கு வந்தார். குவிந்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து வணங்கினார். அனைவரையும் பத்திரமாக வீட்டுக்கு போகுமாறு சொல்லி விட்டு உள்ளே சென்றுவிட்டார். ரசிகர்கள் கூட்டத்தை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியாததால் ரஜினி வீட்டை விட்டு காரில் புறப்பட்டார். அப்போது கன்னட தொலைக்காட்சி செய்தியாளர் அவரை மறித்து பேட்டி கேட்டார். 'பேட்டியெல்லாம் வேண்டாம்.வழக்கம்போல சும்மாதான் பெங்களூர் வந்தேன்'' என கூறிவிட்டு தனது நண்பர்களுடன் கிளம்பி சென்றார்.
ரஜினி மந்த்ராலயத்திற்கு சென்று இருப்ப*தாக அவருடைய வீட்டில் இருந்தவர்கள் கூறினர்.
http://www.dinamalar.com/news_detail.asp?id=907414
பா.ஜ.,வுக்காக 'வாய்ஸ்' கொடுப்பாரா ரஜினிகாந்த்? மோடியை சந்திக்க வைக்க ஏற்பாடு
'லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்காக, நடிகர் ரஜினிகாந்த், 'வாய்ஸ்' கொடுக்க வேண்டும்' என, அவரிடம் வேண்டுகோள் விடுக்கவும், இதுதொடர்பாக, அவரைச் சந்தித்துப் பேசவும், பா.ஜ., மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.வரும், 10ம் தேதி, ரஜினிகாந்த், சீனா செல்ல இருப்பதால், 8ம் தேதி சென்னை வரும் மோடியும், அவரும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளில், பா.ஜ., தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஏழாம் பொருத்தம்:
நடிகர் ரஜினிக்கும், அரசியலுக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும், தன் லட்சக்கணக்கான ரசிகர்கள், யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என, தன் பாணியில், 'வாய்ஸ்' கொடுப்பது அவரது வழக்கம். 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - மூப்பனாரின் தமிழ் மாநில காங்., கூட்டணிக்கு ஆதரவாக, 'வாய்ஸ்' கொடுத்தார்.கடந்த, 1998ல் நடந்த லோக்சபா தேர்தலின் போதும், அதே கூட்டணிக்கு, 'வாய்ஸ்' அளித்தார். 2004 சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வுக்கு எதிராகவும், அ.தி.மு.க, - பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டார். 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஓட்டுச்சாவடியில் ஓட்டு அளித்து விட்டு, வெளியே வந்த ரஜினி, அ.திமு.க., வுக்கு ஆதரவாக பேசினார். அவரது பேச்சு மூலம், அவரது ரசிகர்கள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக ஓட்டு அளித்தனர். வரும் லோக்சபா தேர்தலில், ரஜினியின் ஆதரவை கேட்க, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. 'ரஜினியிடம் ஆதரவு கேட்போம்' என, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர், ஏற்கனவே நிருபர்களிடம் தெரிவித்து உள்ளனர்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், ரஜினிக்கும் நல்ல நட்புறவு உள்ளது. ரஜினி உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது, அவரி டம் மோடி உடல் நலம் விசாரித்தார். வறட்சி மாநிலமாக இருந்த குஜராத்தை, நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்தும், 60,000 தடுப்பணைகள் கட்டியும், பசுமை புரட்சியை மோடி ஏற்படுத்தியது, ரஜினியை மிகவும் கவர்ந்த விஷயம்.
ஒரு கோடி நன்கொடை:
வாஜ்பாய் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியில் இருந்த போது, கங்கை - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, ஒரு கோடி ரூபாய் நன்கொடை தருவதாக, ரஜினி உறுதி அளித்தார்.நதிநீர் இணைப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சி மீது அக்கறையுள்ள, பா.ஜ., கொள்கைகளும், ரஜினியின் எண்ண ஓட்டமும் ஒன்றாக இருப்பதால், மோடிக்கு ஆதரவாக, அவர், கண்டிப்பாக 'வாய்ஸ்' அளிப்பார் என, பா.ஜ., தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும், ரஜினியிடம், அவரது நண்பரும், பத்திரிகையாளருமான சோவும் ஆதரவு கேட்க திட்டமிட்டு உள்ளார். விரைவில், அவர் ரஜினியை சந்தித்து பேசுவார் என, தெரிகிறது. மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை அமையும் போது, ரஜினியை கவுரவப்படுத்தும் வகையில், அவருக்கு ராஜ்யசபா எம்பி., பதவி வழங்கவும் வாய்ப்பு உள்ளது.
நட்சத்திர தம்பதியரும்...:
ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர்., காங்., கட்சியில் இருந்த, 'இதுதாண்டா போலீஸ்' புகழ் நடிகர், டாக்டர் ராஜசேகரும், நடிகை ஜீவிதாவும், பா.ஜ.,வில் இணைந்து உள்ளனர். இந்த நட்சத்திர தம்பதியர், விரைவில் ரஜினியை சந்தித்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு கேட்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், 'கோச்சடையான்' பட விவகாரம் தொடர்பாக, வரும், 10ம் தேதி, சீனா செல்ல ரஜினி திட்டமிட்டு உள்ளார். அதற்கு முன், 8ம் தேதி, சென்னை வண்டலூரில் நடைபெறவுள்ள பா.ஜ., பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று, கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் ஒரே மேடையில் கைகோர்க்கிறர்.அதனால், சென்னையில் மோடியும், ரஜினியும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் ஈடுபட்டு உள்ளார் என, அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
I js lik to share which movies I watched in which theaters for Thalaivar movies..
My first movie in theater s Mannan.. I started to watch all Thalaivar movies in theaters late 2000's..
1. Mannan - Cinepriya complex, Madurai (@ 6 yrs )
2. Yejaman - Ganesh theater (BIG Cinemas nw), Madurai
3. Uzhaippali - Alankar theater, Madurai
4. Veera - Ambiga theater, Madurai
5. Baasha - Ambiga theater, Madurai
6. Muthu - Minipriya (Cinepriya complex, Madurai)
7. Arunachalam - Amirtham theater, Madurai
8. Padayappa - Hajira theater, Madurai
9. Baba - Cinepriya complex, Madurai
10. Chandramukhi - Nadanaa theater, Madurai
11. Sivaji - Nadanaa theater, Madurai
12. Enthiran - Fame cinemas, Surat
Rare photo : Here is a pic of #Superstar and #UlagaNayagan from #Muthu's launch.. #KSR
https://pbs.twimg.com/media/Bf9LHtACEAIGjLE.jpg:large
SS fresh @ STR sister wedding Attachment 3110
10 days back, we had reported about Superstar Rajini joining hands with his favorite director K.S.Ravikumar again, for a commercial entertainer to be produced by Rockline Productions. This film will start rolling in a couple of months' time.
KSR and Rajini have associated on mega blockbusters like Muthu and Padayappa and from what we hear, their new film might be a sequel to Padayappa. So Padayappa Part 2 is what we might see, when Rajini and KSR join hands again this year.
The second half of Padayappa showcased Rajini as a middle-aged man with two grown-up daughters and he sported gray hair and beard. A sequel to the movie will be very apt as Rajini would get to play his age. This is just an exciting information that we have obtained from our sources and there is nothing official about it yet.
Like all Superstar projects, there is a high amount of secrecy about this one too. And, the excitement levels are also as high as they have ever been.
We will keep you posted on more.
http://behindwoods.com/tamil-movies-...padayappa.html