http://i58.tinypic.com/122l1ds.jpg
நண்பர்களுக்கு,
சிவந்தமண் - நம்நாடு பிரச்சனையை நாம் ஆரம்பிக்கவில்லை. அவர்கள்தான் ஆரம்பித்தனர். சிவந்த மண் திரைப்படம் நஷ்டம் என்று நாம் சொல்லவில்லை. தோல்வி என்றும் சொல்லவில்லை. நன்கு வசூல் ஆகியிருக்கிறது. ஆனாலும், எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. நம்நாடு படத்தை விட குறைவாகத்தான் ஆகியிருக்கிறது என்றுதான் சொல்லி வந்தோம்.
அதுவும் கூட, நண்பர்கள் திரு.ஆதிராமும் திருச்சி பாஸ்கர் அவர்களும் ஒப்பீடு செய்ததால்தான் இதை நாம் சொல்ல வேண்டி வந்தது. நமது ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும், சிவாஜி ரசிகர்களால் ஆவணத் திலகம் என்று போற்றப்படும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களே திரு.எஸ்.வி.யிடம் இதை (சிவந்த மண்ணை விட நம்நாடு வசூல் அதிகம் என்பதை) ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்துதான் இதை நாம் சொன்னோம்.
ஆனால், நாம் பொய் சொல்வதாக தவறான பிரசாரம். எப்போதுமே நாம் பொய் சொல்கிறோம் என்று திட்டமிட்ட பிரசாரம் நடக்கிறது. ஆனால், திரு.டிஏ சினிமா என்பவர் நமது திரிக்கு வந்து கூறிய பொய்யான தகவலை நிரூபிக்குமாறு திரு.சைலேஷ் அவர்கள் 12 முறை நினைவூட்டியும் அவரிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், அவர் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார். கொடுமை.
இதேபோல ,நேற்று இன்று நாளை படம் எந்த விதத்திலும் நஷ்டம் இல்லை என்று திருச்சி பாஸ்கர் அவர்களுக்கு திரு.சைலேஷ் ஆதாரத்தோடு பதில் கூறியிருந்தார். இதற்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை. ஆனால், நாம் பொய் சொல்கிறோம் என்று தவறான பிரசாரம். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
எனவேதான், இன்று நான் சவால் விடுத்திருக்கிறேன். நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உண்மையை விளக்க வேண்டும் என்று கோரியிருப்பதுடன் 22-ம் தேதி வரை அவகாசமும் அளித்திருக்கிறேன். நான் பொய் சொல்வது நிரூபணமானால் மன்னிப்பு கோருவதுடன் திரியில் இருந்தும் விலகுகிறேன் என்றும் கூறியிருக்கிறேன். அதுவரை, 22ம் தேதி வரை பதிவிட மாட்டேன்.
நிச்சயம் நான் பொய் சொல்லவில்லை, என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கு அவகாசம் அளிக்கும் வகையில், 22ம் தேதி வரை நான் பதிவுகள் இடமாட்டேன்.
இன்னும் ஓரிரு நாளில் மக்கள் திலகம் திரி பாகம் 17-ஐ தொடங்க இருக்கும் நண்பர் சுஹராம் அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாகம் 16ஐ வெற்றிகரமாக நிறைவு செய்யப்போகும் திரு.சத்யா அவர்களுக்கும் நன்றிகள்.
23-ம் தேதியன்று மீண்டும் திரியில் தலைவரின்
‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே...’
என்ற பாடல் வரிகளுடன் மீண்டும் எனது பதிவுகள் தொடங்கும் என்பதை என் மீதும் உண்மையின் மீதும் உள்ள நம்பிக்கையால் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்