-
1959ல் நாடகத்தில் நடிக்கும் போது எம்ஜிஆருக்கு ஏற்பட்ட கால் முறிவு காரணமாக பல படங்களின் படபிடிப்புகள் நின்று போனது .எம்ஜிஆர் முழு ஓய்வில் இருந்தார் . திரை உலகில் எல்லோரும் எம்ஜிஆர் அத்தியாயம் முடிந்து விட்டது . இனி எதிர்காலம் அவருக்கு இல்லை என்று கணித்தார்கள்
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த ''தாய் மகளுக்கு கட்டிய தாலி '' படம் 31-12-1959 அன்று வெளியானது .
1960ல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
1960-1977 வரையில் 18 ஆண்டுகளில் மன்னாதி மன்னனாக , வசூல் சக்ரவர்த்தியாக இந்திய திரைஉலகில் பல அரிய சாதனைகள் படைத்தார் நம் மக்கள் திலகம் எம்ஜிஆர் .
-
ரசனையும், ரசிகனும், காலமும், காதலும், கருத்தும், கருவும் நேர வெள்ளத்தில் சில மாற்றங்கள் பெறுகின்றன. வெள்ளத்தில் நீர் பெருகி ஓடினாலும், அதில் நிற்கும் திட மரங்கள் பல உண்டு. அப்படி பட்ட தமிழ் இசை வெள்ளத்தில், அஸ்திவார தூண்களின் பாடல்களில் ஒன்று இன்றைக்கு.
இசை மும்மூர்த்திகள் என்றே இவர்களை சொல்லலாம்: வாலி + டீ. எம். எஸ். + விஸ்வநாதன் ராமமூர்த்தி. இவர்கள் காலத்தில் காலன் வசம் சென்றனர். என்று சொல்வதை விட கற்பக காலத்துள் கலந்தனர் என்றே கூறலாம்.
என்ன தான் மூன்று தெய்வங்கள் இருந்தாலும், தமிழின் தனிக்கடவுள் முருகன். தமிழகத்தின் தனிப் பெரும் அபிமான தலைவர் எம். ஜி. ஆர். இந்த நால்வர் கூட்டணி, நாலா திசையும் பரவி (தமிழ்) நாட்டில் வெற்றி வாகை சூடியது. ஒவ்வொருவராலும் மற்றவர் அடைந்த பயன், நாம் அடையும் மகிழ்ச்சியைப் போன்றது.
படகோட்டி (1964) திரைப்படம். மாணிக்கம் (எம். ஜி. ஆர்.) மற்றும் முத்தழகி (சரோஜா தேவி) வெற்றி ஜோடி நம்பியார் தான் ஜமீன் வில்லன். நாகேஷ், மனோரம்மா சிரிப்பு வெடிகள் என பட்டையை கிளப்பிய வசூல், பட்டி தொட்டி எங்கும் சென்று அடைந்த பாடல்கள் படப்பிடிப்புகள் மிகவும் அழகான கடற்கரைகளில் எடுக்கப்பட்டது.
இசை நால்வர்
எட்டு பாடல்களையும் வாலி வடித்தார். குறிப்பாக இந்த பாடல் ‘தொட்டால் பூ மலரும்’, ஏதோ ஒரு சந்த கவி வடிவத்தின் சாயலில் உள்ளது என்பது என் சந்தேகம். பாமரனுக்கும் புரியும் எளிய தமிழ் வார்த்தைகள். சொல்லாட்சி தான் சிறப்பாக அமைந்துள்ளது. எதுகை மோனை எல்லாம் நச்சென்று உள்ளன. அதுவும் நான்கு நான்கு வரிகளில் வாலியின் ‘சொல் விளையாடல்கள்’ மிளிரும் பாடல் இது. அவர் பேச்சிலும் இது வெளிப்படும்.
இசைக் கோர்வையை மெல்லிசை மன்னர்கள் சேர்த்தனர். பாடல் வரிகளை நம் மனதில் பதிக்கும் வண்ணம் அமைந்த இசை முழு பாடலின் தாளமும், ஒரு கைத்தட்டலில் செல்லும். இப்படி எல்லாம் மெல்ல மெல்ல இசையை அனுபவிக்க தந்ததால் தானோ: மெல்லிசை மன்னர்கள் இந்த படத்தில் வாலி போல, எம். ஜி. ஆர். போல, டி. எம். எஸ்.- சும் ஒரு கதாநாயகன் தான்.
படத்தில் உள்ள ஆறு (ஆண் குரல்) பாடல்களும் அவர் வசம் புரட்சி தலைவருக்கு கச்சிதமாக பொருந்தும் குரல் இரண்டு (பெண் குரல்) பாடல்களையும் பாடியவர் பி. சுசீலா. இரண்டே பாடகர்கள் முழு ஆல்பம் அத்தனையும் முத்துக்கள் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் நாம் வியக்க வேண்டிய விடயம் தான்.
பாடலின் சிறப் இன்னும் உண்டு. காட்சியமைப்பு நீண்ட நெடும் கடற்கரை தென்னைத் தோப்பு. எதிர் எதிர் திசைகளில் மூச்சிரைக்க ஓடி வரும் காதலர்கள், சந்தித்து பாடும் பாடல் முக உணர்ச்சிகள் காட்டுவதில் கண் அசைவுகளில் சரோஜா தேவி ஆஹா தான்! கை தட்டு வரும் பொழுது எல்லாம், கன்னத்தில் தட்டுவது, என் கண் கவரும் வகையிலான பாடல் இந்தியில் வரும் கோரஸ் மற்றும் நடனம் சபாஷ்.
- courtesy -Cinimini
-
-
-
புதுவையில் புரட்சித்தலைவரின் நினைவு நாள் காட்சிகள்
http://i62.tinypic.com/2h657ux.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i58.tinypic.com/ziwso8.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
http://i57.tinypic.com/t0kzk5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
முக நூல் நண்பர்களுக்கு.....வணக்கம்.
இன்று எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினம்.
---------------------------------------------------------------------
இன்றைய தினமலர் நாளிதழ் அனைத்து பதிப்புகளிலும், எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி ,நான் எழுதிய சிறப்புக்கட்டுரை வெளிவந்துள்ளது.. கட்டுரை முடிவில் என் போன நம்பர் வெளியிட்டிருந்தார்கள்.
இன்று அதிகாலை நான் விழிப்பதற்குள்,போன கால் வந்தது..ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஒரு எம்.ஜி.ஆர். பக்தர் என்று கூறி பேசினார்...கட்டுரை படித்து மனம் நெகிழ்ந்து போனதாகவும் ,, எம்.ஜி.ஆர். குழந்தையுடன் இருக்கும் படம்,, வேன் பிரசார படம் ஆகியவை, இன்று எடுத்தது போல் அருமையாக உள்ளது என்று பாராட்டி பேசிக்கொண்டே போனார்.
நானே, பேப்பர் பார்க்காத நிலையில்,..நன்றி கூறி முடித்தேன்.இவ்வளவு அதிகாலையிலும், பேப்பர் பார்த்தவுடன், போன செய்து பாராட்டிய, அந்த எம்.ஜி.ஆர். பக்தருக்கு.நன்றிகூறுகிறேன்.... வாசலில் இருந்த பேப்பரை பார்பதற்குள்,, மீண்டும் போன, . இது சென்னையிலிருந்து,..இதே போன்று எம்.ஜி.ஆர். அபிமானிகள், தொடர்ந்து, கோவை,,பாண்டிச்சேரி, பெங்களூர், அருப்புக்கோட்டை,,திருப்பூர்,, மற்றும் தமிழக மெங்கிலுமிருந்து, போன கால்கள் இடைவிடாமல் வந்து திணறடித்துவிட்டன.இவ்வளவு எம்.ஜி.ஆர். அபிமானிகளா...என்று ஆச்சரியமடைந்தேன்.
சரியான நேரத்தில் குளிக்கவும் முடியவில்லை, அந்த ளவுக்கு, போனில் பேசியவர்கள்,, எம்.ஜி.ஆருடன், தங்கள் ஈடுபாடு, அவரிடம் உள்ள சிறப்புகள், இப்படி,ஒவ்வொருவரும், பேசிக்கொண்டே, இருந்தது,, நான் கட்டுரையில் குறிப்பிட்டது போல்,மறைந்து, 27 ஆண்டுகள் ஆகியும் , இன்றும் அவரைப்பற்றி, பெருமை பேசுவது, யாருக்கும் கிடைக்காத, வரம்...அந்த மாமனிதர், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே, அந்த புகழ் சேரும்...போன் அனைத்து விட்டு,இப்போது முக நூலில் நுழைந்துள்ளேன்....நன்றி.
மதுரை எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், ...பத்திரிகையாளர்....
-
http://i60.tinypic.com/2hwcqar.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-