Originally Posted by
sivajisenthil
by Kalaivendhan
மாற்றான் தோட்டத்து மல்லிகைகளாய் நடிகர்திலகம் திரியிலும் நாகரிகம் பிறழாது உயரிய நட்புணர்வுடன் பதிவிடும் தங்களுக்கும் திரு செல்வகுமார்மற்றும் எஸ்வீ யுகேஷ்....அனைத்து நண்பர்களுக்கும் புரிதலுடன் கூடிய நன்றிகள்.
சிலசமயம் கசப்புணர்வுகளுக்கு நாமும் பலியாகி விடுகிறோம். இம்மையமும் சார்ந்த திரிகளும் நமக்கு கிடைத்த மாபெரும் கருத்துப் பரிமாற்ற சாதனங்கள். நம்மை
வாழ்நாள் முழுவதும் மகிழ்வித்து அமரத்துவம் அடைந்தும் அழியாத கல்வெட்டு நினைவுகளை நமது நெஞ்சங்களில் செதுக்கி விட்டு சென்றிருக்கும் ஒப்பற்ற
கலை மேதைகள் மக்கள் திலகம் நடிகர்திலகம் மற்றும் காதல் மன்னர் என்ற மூவேந்தர்களின் பாதிப்பிலேயே பின்னாளில் தோன்றிய கலைஞர்களும் பங்களிக்க
இயன்றது உள்ளங்கை நெல்லிக்கனி, நன்றியுனர்வுடன் அவர்களை நினைவு கூறும் நாம் அவர்களிடையே இருந்த புரிதலையும் விட்டுக்கொடுத்தலையும் பின்பற்றி நாகரிக மேம்பாடு மிக்க திரி நண்பர்களாகவே தொடர்ந்திட வேண்டுகிறேன். காழ்ப்பும் கசப்பும் தவிர்த்து இனிமை பரப்பி நமது நாயகர்களுக்கு உண்மையான அஞ்சலியை செலுத்துவோம். நன்றிகள்