https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...09&oe=5E3777C3
நன்றி V C G Thiruppathy H O S
Printable View
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...09&oe=5E3777C3
நன்றி V C G Thiruppathy H O S
ஆவணப் பொக்கிஷங்கள்.
தலைவர் 'டாக்டர்' சிவாஜி கணேசன் அவர்களுடன் முதல் குடியரசுத் தலைவர் 'டாக்டர்' ராஜேந்திர பிரசாத் அவர்கள்.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...8b&oe=5E28FF2B
நன்றி Vasu Devan
சிவாஜிகணேசன், என்றாலே, ஏன். நிறைய பேர் மிளகாய் தின்றதை போல் எரிக்கிறார்கள், அவர் ஒரு தமிழன் என்பதாலா, இல்லை ஒரு நல்ல மனிதர் என்பதாலா, இல்லை என்றால் ஒரு நல்ல நடி...கர் என்பதாலா, கிள்ளி கொடுத்தவரெல்லாம் வள்ளல் ஆகிவிட்டார்கள் யாருக்கும் தெரியாமல் அள்ளிக் கொடுத்து வாழ்ந்ததற்காகவா, இல்லை, காமராஜர் பக்தனாக கடைசி வரை இருந்ததற்காகவா, பெரியார் சிவாஜி என்ற பட்டம் தந்ததற்காகவா, இல்லை, யாருக்காவது துரோகம் செய்தரா, யார் குடியாவது கெடுத்தாரா, தனக்கு துரோகம் செய்தவர்களை மன்னித்து தட்டி கொடுத்தாரே அதற்காகவே, இன்று தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்க பாடுபட்டரே, அதற்காகவா, திமுகவில் இருந்தபோதுஅதிக நிதி திரட்டி தந்தரே அதற்காகவா, அதைகண்டுஇவர்இங்குஇருந்தால்சரிப்பட்டுவராதுஎன்றுசதிச ்செய்து்திமுகவிலிருந்து நீக்கப்பட்டார், அதற்காகவா, இவ்வளவு ஆண்டுகள் கழித்து இவரின் படம் ரிலீஸ் ஆனாலும் வெற்றி நடைப்போடுகிறதே, அதற்காகவா, எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் எங்கள் மனதில் தெய்வமாய் வாழ்கிறாரே அதற்காகவா.
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...79&oe=5E34ED31
நன்றி Ramesh Prabhu ( முகநூல்)
இது ஓர் பின்னூட்ட பதிவு:
நடிகர்திலகத்திற்கு நமது இந்தியாவில் பெரிதான விருதுகள் கொடுக்கப்படாததற்கு, எந்தளவு வருத்தப்பட்டிருகிறார். தன்னாலும் ஏதும் செய்ய முடியாத ...நிலையை என்.டி.ஆர் நெகிழ்ச்சியுடன் கூறியதை இன்று ஓர் நண்பர் பதிவு செய்திருந்தார்.
அவரின் பதிவை மீண்டும் முகநூலில் தேடி கண்டுபிடிக்க நேரமும், பொறுமையும் சாத்தியப்பவில்லை. என்றாலும் அந்த பதிவு என் நெஞ்சத்தை தொட்டது. அவருக்கு நன்றிகள்.
மெய் சிலிர்க்கிறது,மேனியெல்லாம் நடுங்குகிறது? கடவுளாக வாழ்ந்த கண்ணன் உரைத்திட்ட உண்மை இது, ராமனாக வாழ்ந்திட்ட தெய்வம் உரைத்திட்ட போதிலும்,
உறைக்காமலிருக்கும் கேடுகெட்ட அரசுகளுக்கு கேட்கத்தான் யாரால் முடியும்?
சுயநிலை சந்தையிலே சகட்டிற்கு விலைபேசும் அரசியலில் லாபம் பார்க்கும் புண்ணிய பாராத பாரத பூமி.
சாமியே வந்து கேட்டாலும், கேட்காத செவியுணர்வுகள் இல்லாது போலிருக்கும் நடைமுறை நடிகர்கள் அரசியல்வியாதிகள் அமர்ந்திருக்கும் பாராளுமன்றம்!
எது எதற்கு அரசியல்? நியாயத்தை கொன்று நீதியை நிலைநாட்டும் வர்த்தகம் நடத்திடும் விந்தைமிகு மனிதர்களின் சந்தையான கட்டிடத்தின், சிந்தையில் உதிக்குமோ சிவாஜியை பற்றிய கவனம்?
லாபம் உம்மால் கிடைத்தால்தானே 'பாரத்ரத்னா?'
'பாரத்ரத்னா'வின் மதிப்பு இவ்வளவுதானா?
உண்மையான திறமைக்கு இந்தியாவில் மதிப்பை எதிர்பார்த்தால், நம்மைவிட அப்பாவிகள் உலகில் வேறு யாரும் இருக்கமுடியாது.
அகில உலகத்தின் சிவாஜி என்ற நடிகரை அறிந்த
நடிகரெல்லாம். இவர்போல் எந்த நடிகரும் இல்லை, இனிமேல் இருக்க, பிறக்க வாய்ப்பில்லையென உணர்ந்தபோதும், இந்தியாவின் தலைசிறந்த நடிகரெல்லாம்
ஒத்துக்கொண்ட போதிலும், உலகத்தின் சிறந்த ஆசிய-ஆப்ரிக்காவின் சிறந்த விருதை பெற்ற நடிகராகவும் மற்றும் அமெரிக்காவின் மிகப்பெரிய மரியாதைகள், ஃபிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் விருதான 'செவாலியர்' கிடைத்திட்ட போதிலும், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, மொரீசஸ் போன்றைய நாடுகள் பெருமை படுத்திய போதிலும், 'தமிழ்நாடு எனச்சொல்லி இந்திய நாட்டுடன் இணைந்திருந்தும் இந்த உலக மாகலைஞன் தமிழரென ஒரே காரணத்திற்காக அங்கிகரிக்க மறுத்துவிட்டால், இந்த பாழாய்போன 'பாரத்ரத்னா விருது' வந்தும் சிவாஜியின் பெருமையை உயர்த்த போவதில்லை.
இந்தியா ஒரே தேசம், ஒருமைபாடு பேசி என்ன புரியோஜனம். இந்திய இறையான்மையை காத்து என்ன பயனடைந்தோம்?
அய்யன் சிவாஜி இதற்காகவா இந்திய விடுதலை யுத்தத்தில் கந்துக்கொண்ட தியாகிகளை கண்முன்னே நிறுத்தினார்?
பாரதவிலாஸ் போன்ற படங்கள் இந்திய ஒருமைபாட்டை வலியுறுத்திய படங்களை மறக்கமுடியுமா? இதற்காக இந்தியா அய்யன் சிவாஜிக்கு என்ன மரியாதை செய்தது?
தான் கலந்தக்கொண்ட எந்த நிகழ்ச்சியானாலும் தன் பேச்சை முடிக்கும் பொது 'ஜெய்ஹிந்த்' எனமுடிக்கும் அய்யன் சிவாஜியைப்போல் இன்னொரு நடிகரை காட்டமுடியுமா?
தன் ஆதங்க கருத்தை திறந்த மனதுடன் வெளியிட்ட மரியாதைக்குரிய மறைந்த என்.டி.ராமாராவ் அய்யா அவர்களுக்கு நன்றியுடன் போற்றுகின்றோம். ஆம் போற்றித்தான் ஆகவேண்டும்.
ஆந்திர மாநிலத்தின் ஆண்டவனாக போற்றப்பட்டு, அந்த மாநிலத்தின் பெருமகனார். அவர் கட்சி ஆரம்பித்ததுகூட அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதையை தராத மத்திய அரசுக்கு தான் யாரென காட்டத்தான்? அவர் ஆரம்பித்த இயக்கம் தெலுங்கு தேசம். இணக்கமாக போகும் எம்.ஜி.ஆர் போன்றவரல்ல என்.டி.ஆர். தென்மாநிலங்களை கண்டுகொள்ளாத காரணத்திற்கு, ஆறுமாதத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து, ஆந்திரா முழுதும் சுற்றுப்பயணம் செய்து ஆந்திராவின் முதல்வராய் ஆனவர்.
அவர் அதற்காக உழைத்த உழைப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஆந்திரத்தில் அவருக்கு இருந்த மரியாதை போல் யாருமே உலகத்தில் பெற்றதில்லை.
அவர் தன் மீது வைத்த நம்பிக்கை சாதாரணமானதல்ல, தேவுடு... தேவுடு என்றே அழைத்தார்கள். அவரைபோல் மத்திய அரசுக்கு பதிலடி கொடுத்தவர் யாருமில்லை என்றே கூறலாம்.
தேசிய அரசியலிலும் புகுந்து ஓர் கலக்கு கலக்கினார். அவரின் முடிவு காலந்தான் ஒரு மாதிரியாய் போனதே தவிர, நாட்டு மக்கள் அவர்மீது கொண்ட நம்பிக்கை இன்னும் ஆந்திரத்தை ஆண்டுகொண்டிருப்பது பெரும் சரித்திரம்தான்.
அத்தகைய வித்தகர்தான் தானே இயக்கி, தானே தயாரித்திட்ட "சாணுக்கிய சந்திரகுப்தா" படத்தில் தனக்கு இணையான நடிகராக இருந்த 'அக்கினேனி நாகேஸ்வர ராவ்'
அவர்களை சாணுக்கியராகவும், தானே சந்திரகுப்தராகவும் நடித்திட்டார்கள்.
எல்லாம் சரிதான். அப்படியென்றால்... அலேக்ஸாண்டராக யார் நடிப்பது? ஆந்திராவில் அதற்கான நடிகர் இல்லையா? என்ற நிலை வந்தபோது சிவாஜிதான் என். டி.ஆரின் மனதிற்கு தென்பட்டார்.
ஆம், ஆந்திரா திறமைக்கு மரியாதையளிக்கும் பூமி. அதேபோன்ற ஓர் நிலைமை 'கர்ணன்' திரைப்பத்திற்கும் வந்தது. கண்ணனாக யாரை போடுவது? என்ற நிலை வந்தபோது திரு ஜெமினிகணேசனை போடுவதாக இருந்தார்கள்.
ஆனால் அதற்கு பொறுத்தமானவர் என்.டி.ஆர் மட்டுந்தான் என ஆணிதரமாக சிவாஜி கூறினார். என்.டி.ஆர் அவர்கள் நடிக்க சம்மதிப்பாரா? என்ற நிலை வந்தபோது, நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார் அய்யன்.
கர்ணனில் என்.டி.ஆரைவிட வேறு யாராவது பொருந்திருக்க முடியுமா? அப்பப்பா... கண்ணனாகவே பிறந்தவர். அவர் புன்சிரிப்புடன் கூடிய நடிப்பை வர்ணிக்க வேண்டுமென்றால் அதற்கான தனி கட்டுரையே தேவைபடும்.
அதே என்.டி.ஆர்தான் 'சாணுக்கிய சந்திரகுப்தா'வில் நடிப்பதற்கு சிவாஜி மட்டுமே பொருந்துவாரென சிவாஜியின் சிறப்பான நடிப்பை பயன்படுத்திக்கொண்டார்.
இது சிவாஜி அய்யனை மட்டும் என்.டி.ஆர் பெருமை படுத்தவில்லை நம்மையும்தான். அதற்காக அய்யா என்.டி. ராமாராவ் அவர்களை போற்றி வணங்குவோம்.
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
நன்றி சிவாஜியின் பக்தன் ப.நடராசன் ( முகநூல்)
#வளர்பிறை(1962) #எவ்வளவு "கல்நெஞ்சக்கார மனிதராக இருந்தாலும் இந்த படத்தை பார்த்தால் கலங்கி விடுவார்".... சாதாரண மனிதர் என்றால் சொல்லத்தேவையில்லை தேம்பித் தேம்பி அழுது விடுவர்"... ஏனென்றால் இந்த படத்தில் #நடிகர்திலகத்தின் நடிப்பு அப்படி..... அமைதியான கிராமத்தில் வாய் பேச முடியாத #கனகு என்ற கதாபாத்திரம் #நடிகர்திலகத்திற்கென்றே
செதுக்கி இருந்தார், படத்தின் இயக்குனர் #யோகானந்த்..... #நடிகர்திலகத்தின் மனைவியாக #சிவகாமி என்ற பாத்திரத்தில், #சரோஜதேவியும் குறையில்லாமல் நடித்திர...
ுந்தார்... ♣ "டாய் கனகு உள்ள என்ன பண்ணிக்கிட்டுருக்கே செத்த வெளிய வாடா முதுகு சொறிஞ்சு விடேண்டா" என அலட்டலும் பாசமும் நிறைந்த #கனகுவின் அப்பாவாக #தர்மலிங்கம் என்றகதாபாத்திரத்தில்வாழ்ந்துகாட்டியிருந்தார் #டி_எஸ்_பாலையா.....✳தனது துக்கங்களையும், இன்பங்களையும், மகிழ்ச்சிகளையும் யாரிடமும் சொல்ல முடியாத ஊமை கேரக்டரில் நடிகர் திலகம் வெறும் கண்களாலேயே நடித்து விட்டுப் போவார்... ♣அமைதியான குடும்பத்தில் குந்தகம் விளைவிக்கும் பண்ணையார் கேரக்டரில் #MRராதா வெளுத்து வாங்கி இருப்பார்....#படம் வெளியான அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடம் M.R.ராதா சிக்கியிருந்தால் அவர் கதி அதோ கதிதான்.... ✳#மருமகன் ஊமை என்றாலும் அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கண்ணியமான மாமனாராக #சித்தூர்நாகையா நடிப்பில் பிரமாத படுத்தி இருப்பார், அதிலும் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் தனது மகள் சிவகாமிக்கு புத்திமதி சொல்லி அனுப்பும் அந்த ஒரு காட்சி போதும்.... ♣#நடிகர்திலகத்தின் அம்மாவாக #நல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் தன் மகனின் குறையை நினைத்து நினைத்து உருகும் #நல்ல_அம்மாவாக நடித்திருப்பார் MVராஜம்மா..... ☸#இவ்வளவு அழகான படத்திற்கு "நகைச்சுவை இல்லாமலா" பிக்பாக்கெட் மணியாக #நடிகர்தங்கவேலு தனி ஆவர்த்தனம் செய்திருப்பார்.... ♣தனது அண்ணன் கனகுவை கேலியும் கிண்டலும் செய்யும் #M_சரோஜா,,கிளைமாக்ஸில் தனது அண்ணனுக்கு பேச்சு வந்ததும் கதறி அழுவாரே அந்த ஒரு காட்சி போதும் இவருக்கு கூட நடிப்பு வருமா என்று நம்மை யோசிக்க வைப்பார் #Mசரோஜா.... ✳#கேவி_மகாதேவன் இசையில் #கண்ணதாசன் எழுதிய ஆறு பாடல்களும் இந்த படத்திற்கு பெரும் பலம் அதிலும் "பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை" பாடல் #தத்துவத்தின் உச்சம்....♣ #1962 ம் ஆண்டு வெளிவந்த இந்த படம் #நடிகர்திலகத்திற்கு பெண் ரசிகைகள் அதிகமான தற்கு பெரும் காரணமாக அமைந்தது......☸#உங்களிடம் யாராவது இவருக்கு ஏன் #நடிகர்திலகம் என்று பெயர் வைத்தார்கள்" என்று கேட்டால் இந்த ஒரு படத்தை மட்டும் பார்க்க சொல்லுங்கள் அது போதும்...... அன்புடன் ✳SRK
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...c0&oe=5E32C8BC
நன்றி SRI SRK (முகநூல்)
#நடிகர்திலகத்தின்_பிறந்தநாள்_பரிசாக 28:09:2019 முதல்
#திருச்சி_கெயிட்டி யில்
தினசரி 4 காட்சிகளாக
ஒரு வெற்றி வெளியீடு!
#அந்தமான்காதலி
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b5&oe=5DFBBB68
நன்றி Vaannila Vijayakumaran
கோவை நாஸ்..
இன்றுமுதல்...
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...90&oe=5DF6004A
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...bb&oe=5DF3C85A
நன்றி Senthilvel sivaraj (முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f8&oe=5DF71BBF
நன்றி Gururo VMurugesan (முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...1d&oe=5DFDE973
நன்றி Gururo VMurugesan (முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...43&oe=5E3C8C4B
நன்றி Kannappan.V