-
ஜுலை 15 கர்ம வீரர் காமராஜர் பிறந்த நாள்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேசத் தலைவர்கள், நாட்டுக்கு உழைத்தவர்கள், தியாகிகள் பெயர்களை மாவட்டங்களுக்கு சூட்டினார். 1984-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்த நாளன்று அவர் பிறந்த விருது நகரை தலைமையிடமாகக் கொண்டு காமராஜர் மாவட்டத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினார்.
தலைமை செயலகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்ள காரணமான இரு தனிப் பெருந்தலைவர்கள்...... Thanks...
-
July 15, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா.கல்விக் கண் திறந்த காமராஜர் புகழ் வாழ்க வளர்க.
இந்தி சீனி பாய் - பாய்’ என்று உறவு கொண்டாடிய சீனா 1962-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திடீரென இந்தியா மீது தாக்குதலை தொடங்கியது. நண்பரைப் போல நடித்து நயவஞ்சமாக தாக்குதலில் ஈடுபட்ட சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாரானது. ஆசிய ஜோதி பண்டித நேரு அறைகூவல் விடுத்தார்.
‘‘ராணுவத்துக்கு உதவுவதற்காக பொது மக்கள் தாரளமாக யுத்த நிதி வழங்க வேண்டும்’’ என்று வானொலி மூலம் நாட்டு மக்களை பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார். அவரது உரையைக் கேட்டவுடன் 75 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்குவதாக அறிவித்த முதல் நடிகர் மட்டுமல்ல; நாட்டிலேயே முதல் குடிமகன் எம்.ஜி.ஆர்.தான். அது மட்டுமல்ல; அனைத்து இந்தியாவிலும் அவ்வளவு பெரிய தொகையை எந்த தனிநபரும் கொடுக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் 75,000 ரூபாய் இன்று பல கோடிகளுக்கு சமம்!
அறிவித்ததோடு நிற்காமல் உடனடியாக அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் முதல் தவணையாக ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கொடுப்பதற்காக காமராஜர் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார். காமராஜர் வீட்டில் இல்லை. ரயில் மூலம் வெளியூர் பயணம் செல்வதற்காக அவர் எழும்பூர் ரயில் நிலையம் சென்றுவிட்டது தெரியவந்தது. காமராஜர் திரும்பி வரட்டும், கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர். காத்திருக்கவில்லை. எழும்பூர் ரயில் நிலையம் விரைந்து காமராஜர் பயணம் செய்த பெட்டிக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.
ரயில் நிலையத்தில் ஒரே பரபரப்பு. திடீரென அங்கு எம்.ஜி.ஆரைக் கண்டதும் காமராஜருக்கே வியப்பு. நேருவின் உரையை வானொலியில் கேட்டதாகவும் யுத்த நிதிக்கு ரூ.75,000 நன்கொடை அளிக்க இருப்பதை தெரிவித்து, முதல் தவணையாக ரூ.25,000க்கான காசோலையை காமராஜரிடம் வழங்கினார் எம்.ஜி.ஆர். ‘ரொம்ப சந்தோஷம்’ என்று மகிழ்ச்சி தெரிவித்த காமராஜர் இதுபற்றிய செய்தி பத்திரிகைகளில் வெளிவர ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆர். நிதி அளித்த விஷயம் மக்களுக்குத் தெரிய வந்தால், மக்கள் மேலும் ஆர்வமுடன் நிதி அளிக்க முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்.
வெளியூர் பயணம் முடிந்து சென்னை திரும்பிய காமராஜர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். எம்.ஜி.ஆர். யுத்த நிதி வழங்கியது பற்றியும் பேச்சு வந்தது. அப்போது ஒருவர், ‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். நிதி வழங்கியிருக்கிறாரா?’ என்று கேட்டதும் வந்ததே கோபம் காமராஜருக்கு.
‘‘சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே? எப்ப கொடுத்தே? கொடுப்பியோ, மாட்டியோ? கொடுக்கிறவங்களையும் சும்மா ஏன் கிண்டல் செய்யணும்? நேரு ரேடியோவிலே பேசப் போறாரு. காமராஜரு ரெயில்லே போவாரு. முதல்லே கொடுக்கணும்னு பிளான் போட்டாரா? எப்படி முடியும்கிறேன்? ரயில்வே ஸ்டேஷன்லே எம்.ஜி.ஆர். கொடுத்த செக்கை வாங்கி யதும் நானே பிரமிச்சு போயிட்டேன். உடனே பேப்பருக்கும் செய்தி கொடுக்கச் சொன்னேன்’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார் உண்மையான நாட்டுப் பற்றைப் போற்றும் பெருந்தலைவர் காமராஜர்.
இதனிடையே, தான் யுத்த நிதி அளிக்கும் செய்தியை பிரதமர் நேருவுக்கும் கடிதம் மூலம் எம்.ஜி.ஆர். தெரிவித்தார். யுத்த வேளையில், நெருக்கடியான நேரத்தில் பிரதமர் நேரு நினைத்திருந்தால் தனது உதவி யாளரையோ, பிரதமர் அலுவலக ஊழியர் களையோ எம்.ஜி.ஆருக்கு பதில் கடிதம் எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால், யுத்த நிதிக்கு பெரும் தொகையை அள்ளி வழங்கிய நாட்டின் முதல் குடிமகன் எம்.ஜி.ஆருக்கு நேருவே கடிதம் எழுதினார். ‘‘ராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு தாராளமாக நிதி வழங்கியமைக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று கடிதத்தில் நேரு குறிப்பிட்டார்.
எம்.ஜி.ஆருக்கு பிரதமர் நேரு எழுதிய கடிதம்
எம்.ஜி.ஆரின் நாட்டுப் பற்றையும் நேரு பாராட்டிய பெருந்தன்மையான அவரது மனதையும் பறைசாற்றும் வகையில், சென்னை யில் எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சாட்சியாக உள்ளது நேருஜியின் அந்தக் கடிதம்....... Thanks...
-
தமிழகத்தில் புரட்சித் ததலைவா் எம்.ஜி.ஆா். சத்துணவுத் திட்டம் மாண்புமிகு முன்னாள் முதலமைச்சா் புரட்சித் தலைவா் அவா்களால் ஊரக பகுதிகளில் 01.07.1982 அன்றும் நகா்புறங்களில் 15.09.1982 அன்று உருவாக்கப்பட்டது.
சத்துணவுத் திட்டத்தின் நோக்கம்
பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வகைசெய்தல்
ஊட்டசத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ மாணவியா்களுக்கு ஊட்டசத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்துதல்
பள்ளி பயிலும் மாணவ, மாணவியா் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுத்திடுதல்.
சத்துணவுத்திட்டத்தை இன்று சிலாகித்துப் பேசினாலும் எம்.ஜி.ஆர் அதை அமல்படுத்தியசமயம் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானார். அன்றைய எதிர்கட்சியான திமுக அந்தத் திட்டத்தை பிச்சைக்கார திட்டம் என வர்ணித்தது. எம்.ஜி.ஆர் குழந்தைகளைப் பிச்சைக்காரர்களாக்குகிறார். பெற்ற பிள்ளைக்குச் சோறு போட பெற்றவர்களால் முடியாதா...” என விமர்சித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அத்தனை விமர்சனங்களுக்கு மத்தியிலும் சத்துணவுத்திட்டத்தை அவர் கைவிட விரும்பவில்லை. சத்துணவுத்திட்டத்துக்கு ஆகிற செலவு வருமானமில்லாத அதிகப்படியான செலவு என ஓர் ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைக் கூட்டம் முடிந்தபின் வறுத்தெடுத்தார் எம்.ஜி.ஆர். என்ன செலவானாலும் சத்துணவுத்திட்டத்தைக் கைவிடுவதில்லை என்பதில் உறுதியாக நின்றார் அவர். அடுத்த சில வருடங்களில் அதன் அருமையை உணர்ந்தனர் தமிழக மக்கள். பள்ளிகளில் சேர்க்கை விகிதம் உயர்ந்தது. எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுகள் குவிந்தன.
ஐ.நா நிறுவனம், சத்துணவுத்திட்டத்தின் செயல்பாட்டை அறிந்து அதுபற்றிய விரிவான அறிக்கையை தமிழக அரசிடமிருந்து கேட்டுப்பெற்றதோடு தனிப்பட்ட முறையில் எம்.ஜி.ஆருக்குப் பாராட்டுத் தெரிவித்தது. அந்த வருடத்தில் நடந்த ஐ.நா சபையின் ஒரு கூட்டத்தில் தமிழகம் சார்பாக சமர்ப்பிக்கப்பட்ட வரைவு, சத்துணவுத்திட்டம் பற்றியது. அதில் கலந்துகொள்ள தனது அமைச்சரவையிலிருந்து பண்ருட்டி ராமச்சந்திரனை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர்.
பல லட்சம் குழந்தைகளைப் பள்ளிக்கூட வாசலைத் தொட வைத்த இந்த மகத்தான திட்டம் 35 ஆண்டுகளாகத் தொய்வின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொலை நோக்கு திட்டத்தைக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரின் புகழும் அவர் மறைந்து 32 ஆண்டுகளுக்குப் பின்னும் மங்காது உள்ளது.
சத்துணவுத்திட்டத்திற்கு தமிழக அரசியலில் இன்னொரு பெருமையும் உண்டு. ஒரு கட்சி தன் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரும் திட்டத்தை, அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சி மூடுவிழா நடத்துவது என்பது தமிழக அரசியலில் இன்றுவரை தொடர்ந்துவரும் சாபக்கேடான ஒரு விஷயம். இதில் கடந்த 35 ஆண்டுகளாக மூடுவிழா நடத்தப்படாமல் அடுத்துவரும் ஆட்சியாளர்களாலும் நிதி ஒதுக்கப்பட்டு மேம்படுத்துப்பட்ட ஒரே திட்டம் என்ற பெருமை சத்துணவுத்திட்டத்துக்கு மட்டுமே உண்டு. இந்த வெற்றி சத்துணவு திட்டம் தந்த சத்தியத்தாய் பெற்றேடுத்த தவப்புதல்வனின் வெற்றி....... Thanks
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார். தெற்குமாசி வீதி மேலமாசி வீதி சந்திப்பில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உட்பட சிலர், மேடையில் இருந்த எம்.ஜி.ஆரை பார்ப்பதற்காக கையில் மனுக்களு டன் ஓரமாக நின்றனர். காவல்துறையினர் அவர் களை போகச் சொல்லியும் மறுத்தனர். ‘‘மனுக் களை எங்களிடம் கொடுங்கள். முதல்வரிடம் நாங்கள் கொடுத்துவிடுகிறோம்’’ என்று போலீஸாரும் அதிகாரிகளும் சொன்னாலும் அவர்கள் கேட்பதாக இல்லை. ‘‘எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்’’ என்று உறுதியாகக் கூறினர்.
மேடைக்கு கீழே ஓரமாக நடந்த இந்த சலசலப்பை எம்.ஜி.ஆர். கவனித்துவிட்டார். அதிகாரிகளிடம் விவரம் கேட்டார். ‘‘உங்களிடம் தான் மனு கொடுப்போம் என்று கூறுகின்றனர்’’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த கனமே சற்றும் தயங்காமல், ‘‘அதனால் என்ன? அவர்கள் விருப்பப்படி நானே வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொன்ன எம்.ஜி.ஆர்., யாரும் எதிர்பாராத வகையில், ஐந்து அடிக்கு மேல் உயரமாக இருந்த மேடையில் அமைக் கப்பட்டிருந்த தடுப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் தாண்டினார். தடுப்புக் கம்பியை ஒரு கையால் பிடித்தபடி, குறுகலான மேடையின் நுனியில் குத்திட்டு அமர்ந்தபடி மக்களிடம் இருந்து மனுக்களை குனிந்து பெற்றுக் கொண்டார்.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதற்காக மேடையில் தடுப்புக் கம்பியை தாண்டி வந்து மனுக்களை எம்.ஜி.ஆர். பெற்றுக் கொண் டதைப் பார்த்த பொதுமக்கள் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று உற்சாகமாக கோஷம் எழுப்பினர்;
இத்தகைய மனித நேயமுள்ள இதயதெய்வம் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழக முதல்வர் ஆன தினம் மகத்தானது, மகோதன்னமானது... Thanks.........
-
சென்னை கடற்கரையில் இரவு நடந்த. பொது கூட்டத்தில் தலைவர்கலந்து கொண்டார். கண்கொள்ளா காட்சி நானும் சென்னையில் தான் இருந்தேன் . அந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து வியந்து போனேன் . இனி அப்படியான சேர்ந்த கூட்டத்தை என் வாழ்நாளில் பார்பேனா?! என்று தெரியாது ... வாழ்க நம் இதயதெய்வத்தின் புகழ்... Thanks...
-
எம்ஜிஆர் முதலமைச்சராக வர வேண்டுமென வெளிப்படையாகவே விருப்பம் தெரிவிக்கும் பாடல் ஒன்றுக்கு உற்சாகத்துடன் வாயசைத்தார் படத்தின் கதாநாயகன் மக்கள் கலைஞர் ஜெய் சங்கர்...
" ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா..
நீ நாடாள வரவேண்டும் ராமச்சந்திரா
தருமம் ஜெயிக்குமென சொன்னவனே ராமச்சந்திரா.
ஒரு தவறும் புரியாமல்
பதவி விட்டு சென்றாய் - பொருந்தாத
பரதர்களிடம் கொடுத்துச் சென்றாய்.
சூரிய வம்சத்தில் வந்தவன் நீயே
வாரி வாரி தந்தவனும் நீயே.
சத்தியத் தாய் பெற்றெடுத்த பிள்ளையல்லவா - நீ
சத்தியத்தின் வழி நிற்பவன் அல்லவா.
மாதம் மும்மாரி பொழிய வேண்டும் ராமச்சந்திரா - அதற்கு
நீ வரவேண்டும்- வழி செய்ய வேண்டும் ராமச்சந்திரா "
- தேர்தலில் ஜெயித்து எம்ஜிஆர் முதன்முறையாக ஆட்சியை பிடிப்பதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1976ல் வெளியான ' பணக்காரப் பெண்' என்ற படத்தில் இடம் பெற்றது தான் மேற்படி பாடல். 1977 சட்டசபைத் தேர்தல் சமயத்தில் அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் ஒலிபரப்புமளவுக்கு 'அரசியல் பிராண்டு' பெற்றிருந்தது இப்பாடல்.
தங்கத்தலைவன் தனக்காக வாதிட்டு பாடலை எழுதவைத்த அந்த சம்பவம் கவிஞரின் நெஞ்சில் படிய, அந்த நன்றியை அவர் எழுதிய பாடலில் வரிகளாக்கிக் காட்டுகிறார். அதுதான் ஒரு படைப்பாளியின் ஆளுமை என்பது. ’மீனவ நண்பன்’ படத்தில் இடம் பெற்ற ‘தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து” பாடல்தான் முத்துலிங்கம் எழுதியது. இது ஒரு காதல் பாடல். இதில் இரண்டாவது சரணத்தில் புரட்சித்தலைவருக்காக இப்படி எழுதுகிறார்.
“எந்தன் மனக்கோவிலில் – தெய்வம்
உனைக்காண்கின்றேன்
உந்தன் நிழல் போலவே – வரும்
வரம் கேட்கிறேன்”
என்று கதாநாயகி பாடுவதாக வரும் வார்த்தைகளில் தலைவனுக்கு நன்றி தெரிவிக்கிரார்....... Thanks.........
-
இனிய மாலை வணக்கம்
."எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது"
-ஆசை ஆசையாய் கேட்ட அன்புத்தலைவர் எம்ஜியார்..
பழனி ஜி.பெரியசாமி பெரிய தொழிலதிபர், சென்னை கிண்டியிலுள்ள லீ மெரிடியன் ஹோட்டல் அதிபர்,
அவர்தான் நம் தலைவர் எம்.ஜி.ஆர். நியூயார்க் ப்ரூக்ளின் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தலைவருக்கு பல வகையிலும் உதவிகரமாக இருந்து எம்.ஜி.ஆரின்இதயத்தில் இடம் பெற்றவர்.
1984 நவம்பர் -1985 பிப்ரவரி காலகட்டம்.எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலுள்ள ப்ரூக்ளின் மருத்துவ மனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு உடல் நலம் தேறிவரும் சமயம். அவருடன் பழனி ஜி.பெரியசாமி, அவருடைய தனி மற்றும் அரசு செயலர்கள், அவருயை மனைவி ஜானகி மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் அனைவரும் ஒரு நாள் மாலை பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தலைவருக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அவர் பழனி பெரியசாமியை பார்த்து,
"இப்போது எனக்கு ஜாங்கிரி சாப்பிட வேண்டும்போல இருக்கிறது" என யாரும் எதிர்பார்க்காத ஆசையை வெளியிட்டார் தலைவர்.
அனைவரும் சிறிது நேரம் அதிர்ச்சியாய் நின்றனர். காரணம் தலைவருக்கு நீரழிவு நோய் இருந்து சிகிச்சையில் இருக்கிறார். 'இப்போது போய் இப்படி கேட்கிறாரே!!' என ஆச்சரியம்.
ஆனால் கேட்பது எம்.ஜி.ஆர் ஆயிற்றே!! வேறுஎன்ன செய்வது? உடனே பழனி பெரியசாமி தன்னுடன் எம்.ஜி.ஆரின் தனி செயலர் பிச்சாண்டியை அழைத்துக்கொண்டு ஒரு டாக்ஸியில் ஜாங்கிரி வேட்டைக்கு புறப்பட்டனர்.
ஆனால் அந்த சமயம் பார்த்து ஜாங்கிரி எங்குமே கிடைக்கவில்லை. விட முடியுமா? நியூயார்க் கடை த்தெரு இந்தியன் ரெஸ்டாரண்டுகளில் எல்லாம் தேடுகின்றனர். ஜாங்கிரி லேசில் கிடைக்கவில்லை.
கடைசியில் ஒரு வழியாக ஒரு இந்தியன் ரெஸ்டாரண்டில் கண்டு பிடித்தனர். ஆனால் பரிதாபம். நான்கே நான்குதான் இருந்தன. கிடைத்ததை வாங்கிக் கொண்டு வெற்றி வீரர்களாய் மருத்துவ மனைக்கு திரும்பினர்.
ஆனால் என்ன பத்து டாலர் ஜாங்கிரி வாங்கி வர அறுபது டாலர் செலவு!
எம்.ஜி.ஆர் அவர்களைப் பார்த்து "என்ன? ஜாங்கிரி கிடைத்ததா?"
"ம்ம்.. கிடைத்தது.ஆனால் நான்குதான் கிடைத்தது." இவர்கள் பதில். இதன் பிறகுதான் ஒரு ஆச்சரியம்.
எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா??? மருத்துவமனையின் அந்த அறையில் இருந்தவர்களை எண்ணத் தொடங்கினார். செவிலியர்களையும் சேர்த்து பதினொன்று வந்தது.
அதன் பிறகு தலைவர் அந்த நான்கு ஜாங்கிரிகளையம் பிட்டு பதினொரு துண்டுகளாக்கினார். ஒவ்வொருவரையும் கூப்பிட்டு ஒவ்வொரு சிறு ஜாங்கிரித் துண்டையும் வழங்கினார்.
தானும் ஒரு துண்டை வாயில் போட்டுக் கொண்டு குழந்தை போல் சிரித்தார். அங்கிருப்பவர்களின் கண்களில் ஈரம் கசிந்தது.
அவர் நினைத்திருந்தால், ஜாங்கிரிகளை வைத்திருந்து பின்னர் சாப்பிட்டிருக்கலாம். அவர்தான் அன்னதான பிரபுவாயிற்றே! முடியுமா?
அவர் அன்னை ஊட்டி வளர்த்த அந்த பண்பு அவர் ரத்தத்தில் ஊறியதாயிற்றே!! எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரைப் போன்ற கொடைத்தன்மை, மனிதாபிமானம் கொண்ட மனிதர் இவ்வுலகில் உள்ளனரா?
தேடிக்கொண்டேயிருப்போம்!!!! அவர் இன்னொறு முறை பிறக்கும் வரை........... Thanks...
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம்.
எம்.ஜி.ஆரின் ‘நாடோடி மன்னன்’ படத்தில், ‘தூங்காதே தம்பி தூங்காதே....’, ‘ அரசிளங் குமரி' படத்தில் ‘சின்னப் பயலே... சின்னப் பயலே சேதி கேளடா...’ போன்ற கருத்தாழம் மிக்க பாடல்களை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 1959-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி இளம் வயதிலேயே அவர் மறைந்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கு பண உதவி செய்து ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., ‘நாடோடி மன்னன்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் அந்தப் படத்தின் பாடல்கள் ரெக்கார்டு உரிமையை அவர்களுக்கே கொடுத்துவிட்டார்!
கொடுத்து கொடுத்து நம்மை சிறையிலிட்டார்.......... Thanks...
-
முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
கக்கனை போல் ஒரு அமைச்சரை இனி என்றுமே பார்க்க முடியாது என்று சொல்லலாம். இன்றைய தலைமுறைக்கு அவரது பொதுவாழ்க்கை தெரியப்போவதில்லை.
1980லேயே மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்தவர்களுக்கே அந்த மாமனிதரை தெரிய வில்லையே.
சாதாரண மக்களுடன் மக்களாக மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார் கக்கன். மதுரை முத்துவை நலம் விசாரிக்க சென்ற அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். இதை கேள்விப்பட்டு அவர் தங்கி இருந்த வார்டுக்கு ஓடோடி சென்றார்.
அவரது நிலைமையை பார்த்து தவித்த எம்.ஜி.ஆர். இவர் யார் என்று தெரியுமா? சுதந்திரத்துக்கு போராடிய வரும் தமிழகத்தில் அமைச்சராகவும் இருந்த கக்கன் என்றதும் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.
உடனே மருத்துவர்களிடம் அவருக்கு தனி அறை ஏற்பாடு செய்து உயர் சிகிச்சை வழங்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். ஆனால் கக்கன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டார். பின்னர் அவரை எம்.ஜி.ஆர். வலுக் கட்டாயமாக சென்னைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் சில நாட்களில் அவர் இறந்து போனார்.
அரசியலில் அவர் எப்படி வாழ்ந்து இருக்கிறார் என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும்.
நேரம் வரும்போது இப்படிப்பட்டவர்கள் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்து பெருமை பட்டுக் கொள்ளலாம்.
கக்கன் மாசற்ற மனிதனாக வாழ்ந்திருக்கிறார்.புரட்சித்தலைவரோ மனித நேயமுள்ள மாமனிதராய் திகழ்ந்துள்ளார்....... Thanks...
-
முக நூல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்....
அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
ஒரு நாள் அதிகாலை ஒலி பெருக்கியில் உலகம் பிறந்தது எனக்காக-- மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் --புத்தன் ஏசு காந்தி பிறந்தது --தாய் மேல் ஆனை -- என்னதான் நடக்கும் நடக்கட்டுமே தொடர்ந்து தலைவர் பாடல்களாய் ஒலிக்கிறது என் மனதில் ஒரு சந்தேகம்... இன்று என்ன விஷேசம்... சந்தேகத்திற்கு இடையே நினைவு வருகிறது ...ஆகா ...இன்று ஜெ.பிறந்த நாள் என.அடுத்த நிமிடம் என் நினைவில் ஜெ.பிறந்த நாளுக்கு தலைவர் பாடல்கள் தான் ஒலிபரப்ப வேண்டிய கட்டாயம்.
தலைவரை மறக்க நினைப்பவர்களே சற்று யோசித்து பாருங்கள்.ஜெ பிறந்த நாள் என்பதற்காக ஆடை முழுதும் நனைய நனைய மழை அடிக்குதடி --பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா-- கட்டழகு தங்க மகள் திருநாளாம்-- கூட்டத்திலே யார் தான் கொடுத்து வைத்தவரோ -- என் தோட்டத்திலே ஆட துணிச்சல் உள்ளவரோ போன்ற பாடல்களை ஒலி பரப்ப முடியுமா?அப்போது மட்டும் தலைவர் தேவைப்படுகிறார் அல்லவா? தற்போது தலைவரை புறம் தள்ளி ஜெ.வை முன்னிலை படுத்தும் நபர்களே சற்று மனசாட்சிக்கும் இடம் கொடுங்கள்.
தலைவர் அண்ணாவின் அரசு என்றார். ஜெ வோ எம்.ஜி.ஆரின் அரசு என்று கூறவில்லை மாறாக என்னோட அரசு என்றார். அவர் வழி வந்தவர்களோ அம்மாவின் அரசு என்கிறீர்கள். அப்ப எது தலைவரின் அரசு இது ஒன்று போதாதா தலைவரின் புகழை மறைக்கிறீர்கள் என்பதற்கு உதாரணம்.
எந்த பண சுகமும் பதவி சுகமும் அனுபவிக்காத கடைக்கோடி தொண்டன் தூக்கத்தில் கூட சொல்லிக்கொண்டிருக்கிறான் இது புரட்சி த்தலைவர் அரசு என்று அந்த பலவீனம் தான் பதவியில் இருப்பவர்களுக்கு பலம்.
தலைவர் ஆசியால் மக்களின் தீர்ப்பில் நல்லதொரு வாய்ப்பு கிடைக்கும் என்று நிச்சயம் நம்புவோம். அப்படி வாய்ப்பு கிடைத்தது என்றால் இனிமேலாவது தலைவர் புகழ் பாடுங்கள். தடுமாற்றம் வராது.இனிமேலும் மாறவில்லை என்றால் மாற்றம் ஒன்றே உங்களை மாற்றும்.
மாறாத நன்றி மறவாத நல்ல மனம் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் மனதில் தலைவர் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்...... Thanks...