Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு ரூப் குமார் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 8
27.2.2014 அன்று துவங்கப்பட்டு இன்று 26.4.2014 இனிதே நிறைவு பெறுகிறது .
58 நாட்களில் மக்கள் திலகம் திரி 400 பக்கங்கள் [ 4000 பதிவுகள் ] 80,000 பார்வையாளர்களுடன் கடந்துள்ளது .இந்த
சாதனைக்கு வாய்ப்பு தந்த மையம் நிறுவனர்களுக்கும் , பதிவிட்ட எல்லா இனிய நண்பர்களுக்கும் ,
பார்வையாளர்கள் அனைவருக்கும் அன்பு நன்றி .
2012 அக்டோபரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரி பாகம் -3 ஆரம்பித்து 19 மாதங்களில் 6 பாகங்கள் நிறைவு பெற்று
[24,000 பதிவுகள் ] இருப்பது குறுகிய கால சாதனையாகும் ..
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் - 9 நமது இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களால் துவங்க
உள்ளது மிக்க மகிழ்ச்சி . மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் நாம் எல்லோரும் தொடர்ந்து மக்கள் திலகத்தின் திரை
உலக சாதனைகள் - அரசியல் வெற்றிகள் - இதுவரை வெளிவராத அரிய செய்திகள் - நிழற் படங்கள் - ஆவணங்கள்
இங்கு பதிவிடலாம் . எல்லா நண்பர்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை இனி வரும் காலத்தில் தொடர்ந்து
பதிவிட்டு மக்கள் திலகத்தின் பெருமைக்கு பெருமை சேர்க்கும்படி கேட்டு கொள்கிறேன் .
4.7.1977
உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்த நம் இதய தெய்வம் மக்கள் திலகம் எம்ஜிஆர்
ஆட்சி பொறுப்பை ஏற்ற இனிய நாள் . நாளை நமதே என்ற நம்பிக்கை வார்த்தையை நமக்கு தந்து வெற்றி மேல்
தந்து கொண்டிருக்கும் மக்கள் திலகத்தின் அந்த இனிய நாளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -9 நிறைவு
பெற்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -10 துவங்கிட நாம் எல்லோரும் தினமும் திரிக்கு வந்து அவருடைய புகழ்
பரப்பிட வேண்டுகிறேன் .