Quote:
இமயம் டி.வி.யில் புதிய பொலிவுடன் டக்கர் சீன்மா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் மனதை கவர்ந்த பழைய படங்களின் காமெடி,
சென்டிமென்ட், காதல் காட்சிகள் ஒளிபரப்பப்படும். சுகன்யா தொகுத்து வழங்குகிறார். மூன்றில் தான் போட்டா போட்டி தமிழ்ச்சேனல்களில் இப்போது மூன்று நிகழ்ச்சிகளில் தான் போட்டா போட்டி நடந்து வருகிறது. இதனால், விறுவிறுப்பு குறையாமல் நிகழ்ச்சியை தருகின்றன. ஒன்று, செய்திகள்; முன் இருந்ததுபோல இல்லாமல், இப்போது பல சேனல்களும் செய்திகளை தருகின்றன. அதனால், தமிழக செய்திகள் அதிகமாக தரப்படுகின்றன. சில சமயம் ஒரே மாதிரியாக இருந்தாலும், செய்தியை வழங்கும் விதத்தில் மாற்றம் சில சேனல்களில் தான் காண முடிகிறது. அடுத்தது; ஆன்மிக நிகழ்ச்சிகள்.