-
NT's Vasantha Maligai is an admixture of all love, pathos, comedy and sentiments. It is regarded as one of the blockbuster and milestone movies in the acting career of our alter ego NT. It is one of the top ten rerun value movies of NT. wherever released and whenever released it has created box office records. To my remembrance, long back I saw this movie in Raagam Theatre of Coimbatore as 4th or 5th rerelease alongwith new movies but regular 4 shows. It ran for a record rerun of more than 5 weeks pulling crowds with cheers scene by scene enjoying the multi dimensions of his acting calibre and the longlasting style. the movie remains rich feast for eyes and ears with honey filled songs. Vasantha Maaligai should have been released in succession to Karnan for a drastic view change from mythology to a richly produced social movie. What we experienced in Karnan it is totally different in Vasantha Maaligai.The life given to this character by NT is an amazing deviation from Karnan. Barring the unenjoyable and silly comedy sequence with Nagesh VKR Ramaprabha combo, the movie is an evergreen entertainer. If properly planned for more number of screens than Karnan and advertised with the state of the art media usage, no doubt, Vasantha Maligai will overtake its pioneer Karnan! For the audience too, it will be a totally new experience from Karnan, as this movie presents NT very energetic (he throws off a lady during a dance with ease!) slim handsome and stylish upper class person with his own ways of expressing love and longing for it with pains. Vasantha Maaligai doesnot have the generation bar as it suits all times!
-
-
இன்று city nsc area sai ganesh films திரு. முரளி அவர்களுடன் கை பேசியில் உரையாடிய போது 'கும்கி' படம் வெளியாவதைப் பொறுத்து 'வசந்தமாளிகை' வெளியீட்டுநாள் இருக்கும் என தெரிவித்தார். நாளை அல்லது நாளை மறுநாள் posters designs தயாராகிவிடும் என்றும் கூறினார். நவம்பர் 30 வெளியீடு இருக்கலாம் என்றும் கூறினார். பார்க்கலாம்.
-
வாசுதேவன் கட்டிய வசந்த மாளிகை ஜொலிக்கிறது. பாராட்டுக்கள். ஹமீத், செந்தில் என அனைவரையும் வரவழைத்த பெருமை இத்திரிக்கும் இதனைக் கண்ட வாசுவுக்கும்...
வசந்த மாளிகை படத்தைப் பற்றி அதிகம் தெரியாத தகவல்களுக்கு ஒரு கோடிட்டுக் காட்டி விட்ட ராமஜெயம் சாருக்கு ஏராளமாய்ப் பாராட்டுக்கள்.
காரணம் உண்டு ...
படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏராளமாய் அம்பிகாபதி-அமராவதி, ரோமியோ-ஜூலியட், ஆனந்த்-லதா என காவிய காதலர்கள் உருவாகக் காரணமாயிருந்த படம். ஆம், சாந்தியில் இப்படம் ஓடிய கால கட்டத்தில் புதியதாய் காதலர்கள் எக்கச் சக்கமாய் உருவானது மறக்க முடியாத விஷயம். அதுவும் இந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு ஒரு காரணம். இன்றும் கூட இப்படத்தினால் காதலர்கள் உருவானால் வியப்பில்லை.
இன்னும் சொல்லப் போனால் மதுரை நியூசினிமாவில் இப்படத்தின் மூலம் சந்தித்து காதல் வயப்பட்ட ஒரு ஜோடி அப்படம் ஓடிக் கொண்டிருக்கும் போதே காதலில் தீவிர மடைந்து சென்னைக்கு வந்து பதிவுத் திருமணம் செய்து கொண்டு தம்பதியாய் சாந்தியில் படத்தைப் பார்க்க வந்ததை நாங்கள் அறிவோம். பலத்த எதிர்ப்பையும் மீறி அவர்கள் வந்ததன் காரணமாக படம் ஆரம்பித்த பின் வந்து படம் முடியும் முன்னே எழுந்து போய் விட்டார்கள். அப்போது எதேச்சையாக நம் நண்பர் ஒருவர் அவர்களைத் தெரிந்தவர். அவரிடம் அவர்கள் முழு விவரத்தையும் சொன்ன பின் நண்பர் அவர்களுக்கு ஆதரவளித்து ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இதைப் போன்ற சுவையான சம்பவங்கள் பல ஊர்களில் நடைபெற காரணமாயிருந்தது வசந்த மாளிகை.
-
-
நன்றி ராகவேந்திரன் சார்.
http://padamhosting.com/out.php/i119...h31m36s233.png
பல காதலர்களை சேர்த்து வைத்த மாளிகை
காதலர்களை தம்பதியர்களாக மாற்றிய மாளிகை
நிறைய காதலர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் மாளிகை
இன்னும் பல காதலர்களை உருவாக்கப் போகும் மாளிகை.
நிறைவேறிய காதல்...நிறைவேறாத காதல்.. நெஞ்சுக்குள் புதைந்து கிடக்கும் காதல்... நினைவுகளைக் கிளறிவிடும் காதல்... இப்படி காதல் சங்கமத்தில் நம்மை மூழ்கடிக்க வைத்த பெருமை இந்த மாளிகைக்கு மட்டுமே உண்டு. வசந்த மாளிகையை பார்க்கும் போது விஸ்வரூபமெடுத்து வெளிவருவாள் பழைய காதலி. விளைவு... கண்களில் நீர்த்துளி. இனம் புரியா பாரமும் சோகமும் அழுத்தினாலும் மனம் முழு நிறைவு பெற்றிருக்கும். தூக்கமும் இரண்டு நாட்களுக்கு கெட்டிருக்கும். எங்கே இருக்கிறாளோ...எப்படி இருக்கிறாளோ என்று மனம் கனக்கும். பெரும்பாலும் எல்லோருக்கும் அந்த அனுபவங்கள் இருக்கும். எனக்குத் தெரிந்து பல பேர் இருக்கிறார்கள்.
-
Mr Vasu Sir,
VM Stills are Attagasam Sir.
-
http://i1087.photobucket.com/albums/...g?t=1352268224
நீச்சல் குளத்தில் அழகிகளுடன் கும்மாளக் குளியல்... தண்ணீரிலேயே தண்ணி அடிக்கும் புதுமை... கையகல கூலிங் க்ளாஸ்....இப்போது இளைஞர்கள் மத்தியில் பாப்புலராக இருக்கும் பெர்முடாஸ் அணிந்து அப்போதே அதகளம் புரிவார். அம்சமான நீல நிற பெர்முடாஸ். அதே நிறத்தில் சிக்கென்று ஒரு ஷர்ட். இதயத்துக்கருகில் ஷர்ட்டில் மன்மதன் அம்பு விட்டு துளைத்திருப்பான். மதுவோடு சேர்ந்த கண்ணாடி கிளாசை ஏந்தியிருக்கும் வலது கை மோதிர விரலில் தகதகக்கும் பெரிய சைஸ் மோதிரம் ஜொலிஜொலிக்கும். வயதை ஒரு இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் அடக்கி விடலாம். பணக்காரத் தொனி பட்டவர்த்தனமாகத் தெரியும். இளமை இன்ச் பை இன்ச்சாகத் தெரியும். ஆண்மைக் கவர்ச்சி ஆளுமை புரியும். கன்னியர் காதலாகிக் கசிந்துருகுவர்.
-
-
திரு வாசு சார்,
என்றென்றும் ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வம் எங்கள் ஆனந்திற்கு தனி திரி கண்ட உங்களை மனமார வாழ்த்துகிறேன் .கர்ணனில் நடிகர்திலகத்தை பார்த்ததிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தில் வசந்தமாளிகையில் அவரை பார்க்கும் இளையதலைமுறை நிச்சயம் அவரை கொண்டாடும் என்பது நிச்சயம் .
இந்த இனிய வேளையிலே பம்மலாரின் பதிவுகள் இல்லையே என்று நினைக்கும்போது மனது வலிக்கிறது .பம்மல் சார்,சீக்கிரம் வந்து கலக்குங்கள்