நண்பர்களே இன்று குடியாத்தம் சென்றேன் நகரமே விழா
கோலம் பூண்டுள்ளது இதோ குடியாத்தம் நகரின் பேனர்கள்
http://i46.tinypic.com/2yywci8.jpg
Printable View
நண்பர்களே இன்று குடியாத்தம் சென்றேன் நகரமே விழா
கோலம் பூண்டுள்ளது இதோ குடியாத்தம் நகரின் பேனர்கள்
http://i46.tinypic.com/2yywci8.jpg
GUDIYATTAM
http://i50.tinypic.com/mou95.jpg
தொட்டது துலங்கும் ! நின்கை
தொடுத்தது விளங்கும்! நின்கண்
பட்டது தழைக்கும் நின்கால்
படிந்தது செழிக்கும்! நின்வாய்
இட்டது சட்டம் என்று
இளையவர் வணங்க வாழும்
கட்டவிழ் நகையோய்! நின்னை
கனிவுடன் வரவேற் கின்றோம்
கொடுத்தகை சிவக்கு மட்டும்
கொடுப்பதே குணமாய்க் கொண்டு
படித்தவர் எளியோர் யாரும்
பாரியின் பின்னேன் என்று
வடித்தநல் மொழியைக் கேட்டு
வாழ்த்திடை வாழும் மேலோய்
தொடுத்தபோர் வெல்லும் வீரத்
தோற்றமே வருக! வாழ்க!
அன்பிலும் குறை விலாது
அறத்திலும் முடி விலாது
பண்பிலும் இழை விடாது
பழகிடும் புரட்சிச் செல்வ!
தண்பொழில் தமிழர் நாட்டில்
தனிஅரங் கேறி நிற்கும்
நண்பர்க்கு நண்ப ரான
நல்லவ! வருக! வாழ்க!
ஒருவனே தேவன் என்று
ஒப்பிய நெஞ்சே! அந்த
ஒருவனே முருகன் நாட்டின்
உத்தமத்தலைவன்! பேரில்
முருகனே அழகன்! இது
முற்றுமே தமிழ்ச்சொல் என்று
திருவிளக் கேற்ற வந்த
செல்வமே! வருக !வாழ்க!
நாமெலாம் ஒருதாய் மக்கள்
நாமெலாம் இறைவன் பூக்கள்
தூமணி மலை மாடத்தில்
துலங்கிடும் முருகன் வீட்டில்
மாமணி விளக்கை யேற்றி
வைத்தநின் கரங்கள் வாழ்க!
தாமரைத் திருவே வெற்றி
சங்கமே வருக! வாழ்க.!
மருதமலை முருகன் கோவிலில் 07-12-1962 அன்று சுவாமி சன்னிதானத்தில் மின்விளக்கேற்றி வைக்க வருகை தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாதேவர் அவர்களால் வாசித்தளிக்கப்பட்ட வரவேற்புப் பாடல். கவிதை கவிஞர் கண்ணதாசன்.
GUDIYATTAM
http://i48.tinypic.com/5zhd1e.jpg
http://i46.tinypic.com/1e535e.jpg
பாலு பிரதர்ஸ் வெளியிட்ட கலை மாதஇதழில் இருந்து உங்கள் பார்வைக்கு
GUDIYATTAM BUS STAND
http://i50.tinypic.com/b6ymo6.jpg