டியர் முரளி சார்
தங்களுடைய ஞான ஒளி பற்றிய அலசல் கட்டுரை அருமை.
Printable View
டியர் முரளி சார்
தங்களுடைய ஞான ஒளி பற்றிய அலசல் கட்டுரை அருமை.
Thank u chandrasekaran sir.
டியர் முரளி சார்!
https://www.ptsdforum.org/c/attachme...one-gif.22947/
முதலில் உங்களுக்கு என் முதல் நன்றி! எதற்கு என்றால் நடிகர் திலகம் திரி பாகம் 11-ல் முதல் ஆய்வாக, அதுவும் தங்கள் முத்திரை பதித்த ஆய்வாக என்னுயிர் 'ஞானஒளி' யை பதிவிட்டமைக்கு. இது முதல் தனிச் சிறப்பு.
இப்போது இரண்டாவது நன்றி! தங்களின் கைவண்ணத்தில் 'ஞானஒளி' ஒளி வீசிப் பார்க்க வேண்டும் என்ற எனது ஆசையை தாங்கள் நிறைவேற்றித் தந்ததற்கு.
இப்போது மூன்றாவது நன்றி! இப்படி ஒரு அருமையான முழுமையான ஆய்வைத் தந்ததற்கு. இந்தப் பதிவுக்கு என்னைவிட அதிக சந்தோஷப்பட்டவர்கள் இருக்கவே முடியாது. ஏனென்றால் என் உயிரில் உடலில் ஒவ்வொரு ரத்த அணுக்களில், நாளங்களில் கலந்து என்னை ஆட்டுவித்துக் கொண்டே இருக்கும் ஒரு காவியம். இந்தப் படத்தின் வைபரேஷன் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.
நாங்கள் எழுதினால் படத்தின் சிறப்பம்சங்களை எழுதுவோம். பிரதானமாக நம் இதய தெய்வத்தின் நடிப்பை அலசுவோம். ஆனால் தங்களிடமுள்ள ஒரு சிறப்பம்சம் முழுமை! முழுமை! முழுமை! ஒரு படத்தின் துவக்கம், அதற்கான காரணம், அப்படத்தின் மூலாதார வித்தகர்கள், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள சிறு குறிப்புகள், அதோடு தொடர்புடைய பிற வரலாற்று விவரங்கள், படத்தின் கதை, நடிப்பு, இசை, வசனம், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் என்று முற்றிலும் முழுமையான ஒரு ஆய்வை ஆணித்தரமாக அளிக்கிறீர்கள். அது எங்களுக்கு வராது. அதே போல அந்த எளிய நடையும். பாலகரும் புரிந்து கொள்வது போன்ற தெளிந்த ஆற்றோடை போன்ற நடை. (ஆங்கிலத்தில் இருந்தாலும் கூட)
'ஞானஒளி' யின் ரிஷிமூலம், நதிமூலத்தைப் பிட்டு பிட்டு வைத்து விட்டீர்கள். நாடகமாக குடத்தினுள் ஒளி வீசிக்கொண்டிருந்த பின் படமாக வெளிவந்து திரை உலகையே பிரகாசிக்க வைத்த கதை, நாடகத் துறையில் சகாப்தம் படைத்த ஜாம்பவான்களின் விவரங்கள், நடிகர் திலகம் கதைக்கருவுடன் ஒன்றிய விதம், சரியான சமயத்தில் சுந்தரத்தின் என்ட்ரி, (சுந்தரத்தின் பிளாஷ் பேக்கையும் விட்டுவைக்கவில்லை) அதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் திலகத்தின் சாமர்த்தியம், அதைப் படமாக்க ஜேயார் மூவிஸ் சங்கரன், ஆறுமுகத்திற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு, படத்தின் கதைப்போக்கு, நடிகர் திலகத்தின் நடிப்புக்கு சில அருமையான சாம்பிள்கள், பாடல்கள் உருவான விதம், பாடகர்களின் பங்கு, இதர நடிகர்களின் பங்கு என்று ஒன்று கூட விடாமல் ஸ்டெப் பை ஸ்டெப்பாக இந்த ஆய்வை முன்னமேயே வடித்திருக்கிறீர்கள்.
அதிகமாக வெளிச்சத்துக்கு வராத மரகத மாணிக்கம் மீண்டும் என்னால் இன்று வெளிவந்து விட்டது என்று எனக்குள்ளேயே ஒரு பெருமை. சந்தோஷம்.
ராகவேந்திரன் சாரின் பிறந்த நாளும் அவருடைய 4000-ஆவது பதிவும் ஒரே நாளில் வந்தது. அது வைப்ரேஷன். அந்த யுகக் கலைஞன் மேல் ரசிக வேந்தர் வைத்துள்ள அளவற்ற பற்றுதலுக்கு நடிகர் திலகம் தந்த ஆசி அது.
அதே போலத்தான் இதுவும். எனக்குப் பிடித்த 'ஞானஒளி'யை திடீரென தங்களைக் கேட்க வைத்து, தாங்கள் முன்னம் பதிவிட்டிருந்தும் அது அழிக்கப்பட்ட(!) நிலையில் இந்த அருமையான ஆய்வை பாதுகாப்பாக வைத்து, தங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வைத்து, மீண்டும் அதை சமயம் பார்த்து பாகம் 11-ல் முதல் ஆய்வுக்கட்டுரையாக பதியவைத்து, 'ஞான ஒளி' மேல் எனக்குள்ள பற்றுதலை அறிந்து என் ஆசையை தங்கள் மூலம் நிறைவேற்றி, தங்கள் ஆய்வை மீண்டும் உலகறியச் செய்து......
அவர் புரியும் திருவிளையாடல்கள்தான் என்ன!
அதனால்தான் சார் அவரை ஆண்டவர் என்கிறோம்
ஆண்டவரே! ஆண்டவரே!
யார் யாரை எப்படி வழி நடத்த வேண்டும்... யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று என் கடவுளுக்குத் தெரியும்.
அது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.
இது தங்களுக்குப் புரியும். நம் அன்பு ரசிக வேந்தருக்கும் புரியும்.
மனம் நிறைந்த பதிவை அளித்ததற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் முரளி சார்.
Tamil Murasu - Tirunelveli
http://i1234.photobucket.com/albums/...pse58b05fd.jpg
முரளி சார் தன் அற்புத 'ஞானஒளி' பதிவில் சினிமா நடிகர்கள் பலரின் நாடக வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அதை ஞாபகப்படுத்தும் விதமாக.
நடிகர் திலகம் கொடி நாட்டிய 'வியட்நாம் வீடு' நாடகத்திலிருந்து ஒரு காட்சி.
http://www.thehindu.com/multimedia/d...pg_285287g.jpg
'அட்வகேட் அமரன்' நாடகத்தில் எம்ஜியார் அவர்கள்.
http://www.thehindu.com/multimedia/d...nd_771048g.jpg
டி.கே.சண்முகம் நாடகக் காட்சி ஒன்றில்.
http://www.thehindu.com/multimedia/d...a_1180387g.jpg
அவ்வையாக டி.கே.சண்முகம்
http://www.thehindu.com/multimedia/d...N_1068132g.jpg
மேஜர் சுந்தரராஜன் தன நாடகக் குழுவினருடன். (அநேகமாக 'டைகர் தாத்தாச்சாரி' டிராமா என்று நினைக்கிறேன்)
http://www.thehindu.com/multimedia/d...j_1439126g.jpg
A.R.ஸ்ரீனிவாசனை பாராட்டி மகிழும் நடிகர் திலகம்.
http://kumarsrinivas004.files.wordpr...-s-sivaji1.jpg
'அச்சாணி' நாடகத்தில் சிவக்குமார், எம்.பானுமதி.
http://www.thehindu.com/multimedia/d...j_1439127g.jpg
'சாணக்கிய சபதம்' நாடகத்தில் ஆர்.எஸ் மனோகர்.
http://www.thehindu.com/multimedia/d...YA_776285g.jpg
'முகம்மது பின் துக்ளக்' நாடகத்தில் சோ அவர்கள்
http://i.imgur.com/XpHwF.png
காத்தாடி ராமமூர்த்தி நாடகம் ஒன்றில்.
http://kvivekshankar.files.wordpress...p_1119318g.jpg
எஸ்.வி.சேகர் நாடகம் ஒன்றில்.
http://www.thehindu.com/multimedia/d...A_1439804g.jpg
ஒய்.ஜி.மகேந்திரன் நாடகக் காட்சி.
http://kvivekshankar.files.wordpress...-venkata-3.jpg
'ஞானஒளி' யின் மூலமான 'ஏழை படும் பாடு' படத்தில் நாகையா அவர்கள்.
http://padamhosting.com/out.php/i982...snap599062.pnghttp://padamhosting.com/out.php/i982...snap604003.png
இன்ஸ்பெக்டர் ரோலில் 'ஜாவர் சீத்தாராமன்'
http://padamhosting.com/out.php/i982...snap598994.png