15-02-2009 தினமணி 3
""நான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலைவாணரைப்
பற்றி பி.எச்டி ஆய்வுக்காகப் பதிவு செய்திருந்தேன். பல்
வேறு காரணங்களால் எனது ஆய்வுப் படிப்பைத் தொடர
முடியாமற் போய்விட்டது.
ஆனால் அந்த ஆய்வுக்காக 1984 முதல் ஆறு வருடங்
கள் நான் திரட்டிய தகவல்கள் அப்படியே இருந்தன.
தமிழ்நாடு ஆவணக் காப்பகம், கன்னிமாரா நூலகம்,
மறைமலையடிகள் நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவ
னம், அண்ணா அறிவாலய நூலகம் எனப் பல்வேறு நூல
கங்களில் தகவல்களைத் தேடியலைந்தேன்.
கலைவாணரைப் பற்றிய செய்திகளை வெளியிட்ட
திரைப்பட இதழ்களான பேசும்படம், குண்டூசி போன்ற
வையும், சீர்திருத்த ஏடுகளான விடுதலை, குடியரசு
போன்றவையும் எனக்கு உதவின.
எல்லாவற்றுக்கும் மேலாக கலைவாணரின் உறவினர்களி
டம் நான் கேட்டுத் தெரிந்து கொண்ட தகவல்கள் ஏராளம்.
குறிப்பாக கலைவாணரின் தம்பி என்.எஸ்.திரவியம் கலைவா
ணரைப் பற்றி நிறையச் சொன்னார். அதுபோல எங்கள் வீட்
டுக்கு வரும் உறவினர்கள் கூறுகிற எல்லாத் தகவல்களையும்
குறித்து வைத்துக் கொள்வேன். இப்படி நான் 1990 வரை திரட்
டிய தகவல்களை வைத்து எழுதிய புத்தகம்தான் சமீபத்தில்
வெளியிடப்பட்டிருக்கும் "சமூக விஞ்ஞானி கலைவாணர்'
என்கிற புத்தகம். "கலைவாணரின் சிந்தனைத் துளி
கள்' என்ற கலைவாணரின் கட்டுரைத் தொகுப்பை
யும் வெளியிட்டிருக்கிறேன்.
கலைவாணர் என்னுடைய மாமனார் என்பதற்கும்
வெளியே அவரைப் பற்றிய நூலை எழுதிய ஆய்வாளர்
என்கிற முறையில் அவரின் சிறந்த பண்புகளைப் பற்றி
நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது.
கலைவாணர் தனது 17 வயதிலிருந்து அவர் வாழ்ந்த
49 வயதுக்குள் ஒரு வித்தியாசமான சிந்தனையாளரா
கவே இருந்திருக்கிறார். சமுதாயத்திற்குத் தேவையான
கருத்துகளை மிக எளிமையான முறையில் சின்னச் சின்ன
உரையாடல்கள் மூலம், பாடல்கள் மூலம் அவர் மக்க
ளுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 1937 இல் அவர்
நடத்திய "தேசப் பக்தி' நாடகத்தில் குடிக்கிறவர்களை எல்
லாரையும் தாழ்த்தப்பட்ட சாதிக்கு அனுப்பிவிடுவதாகக்
காட்சி இருக்கும். ஆனால் அந்த நாடகத்தில் குடிக்கிறவர்
கள்தாம் மிகத் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருப்பார்கள்.
அப்போது இவர்களை எங்கே அனுப்புவது? என்ற
கேள்வி வரும். உடனே கலைவாணர், ""இதுக்கும் கீழே
தாழ்த்தப்பட்ட சாதியில்லைன்னா மேல் சாதிக்கு அனுப்பு
அவங்களை'' என்பார். இப்படி சிரிப்போடு சிந்தனை
களை விதைத்தவர் கலைவாணர்.
ஆனால் தான் என்ன சாதி என்பதை ஒருநாளும் அவர்
வெளியே சொன்னதில்லை. அந்த அளவுக்கு அவர் சாதி
மறுப்பில் உறுதியாக இருந்தார்.
காந்திமகான் சரித்திரத்தில் அவர் பாடிய வில்லுப்
பாட்டு, மக்கள் படித்து, உழைத்து முன்னேற வேண்டும்
என்று வலியுறுத்திய "கிந்தனார் காலட்சேபம்' எல்லாம்
அவர் ஒரு வித்தியாசமான சிந்தனைவாதி
என்பதை நமக்குக் காட்டும். கலைவாணரின்
சீர்திருத்தக் கருத்துகளுக்காக அவரைப்
பொதுவாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்
என்று நினைத்துக் கொள்கிறார்கள். உண்மை
யில் அவர் சிறந்த தேசபக்தர். காந்தியவாதி. எந்
தக் கட்சியையும் சாராதவர். அவர்
தி.மு.க.மாநாட்டிலும் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கி
றார். காங்கிரஸ் கூட்டங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தி
யிருக்கிறார். தான் எந்த ஒரு கட்சியிலும் சேர்ந்திருந்
தால் தனது கருத்துகள் எல்லா மக்களுக்கும் போய்ச்
சேராது என்று அவர் உறுதியாக நம்பியதால் அவர் எந்
தக் கட்சியிலும் சேராமல் இருந்தார். அவர் போல நகைச்
சுவையையும் நல்ல சிந்தனைகளையும் கலந்து சொல்லும்
கலைஞர்கள் இன்னும் பிறக்கவில்லை என்றே சொல்ல
வேண்டும்.
கலைவாணர் காலத்தில் அவர் படத்தில் வந்த காமெடி
ட்ராக் எல்லாம் கலைவாணரே சொந்தமாகத் தயாரித்
தவை. அப்போதுள்ள படமுதலாளிகளிடம் காமெடி
ட்ராக் முழுமைக்குமான ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்
கொண்டு காமெடி ட்ராக்கிற்கான கதை, பாட்டு எல்லாவற்
றையும் முடித்துக் கொடுப்பது அவருடைய வழக்கம்.
சில படங்கள் நன்றாக ஓடவில்லை என்றால் அவர்
அதற்காகவே காமெடிக் காட்சிகளை அமைத்துக்
கொடுத்து உதவியிருக்கிறார். "நவீன விசுவாமித்திரர்',
"தேவதாசி' ஆகிய படங்களை இதற்கு உதாரணமாகச்
சொல்லலாம். அப்படி அவர் அமைத்துக் கொடுத்த
காமெடி காட்சிகள் நிறைந்த ஒரு படத்தை சென்னை பார
கன் தியேட்டரில் கலைவாணர் ஒருமுறை பார்த்தார். அப்
போது படத்திற்குக் கூட்டமே வரவில்லை. உடனே அந்
தப் படத்திற்காகத் தான் வாங்கிய பணத்தைத் தயாரிப்பா
ளருக்குத் திருப்பிக் கொடுத்தார். "நஷ்டத்தைப் பங்கு
போட்டுக் கொள்கிறேன்' என்று சொன்ன மிகப் பெரிய
மனிதாபிமானி அவர்.
படிப்பும், உழைப்பும்தான் ஒரு மனிதனை முன்னேற்
றும் என்பதில் அசையாத நம்பிக்கை அவருக்கு. அவர்
சிறுவயதில் வெறும் 3 ரூபாய் மாதச் சம்பளத்திற்
காக நாகர்கோவில் டென்னிஸ் கிளப்பில் பந்
தைப் பொறுக்கிப் போடும் வேலை செய்தார்.
பின்னர் மிகப் பெரிய நடிகரான போது அதே
டென்னிஸ் கிளப்பிற்கு நிரந்தரத் தலைவராக
நியமிக்கப்பட்டார். இதைக் கலைவாணர்
அடிக்கடி குறிப்பிடுவார். தன்னுடைய
கடும் உழைப்பால்தான் இந்த நிலைக்குத்
தான் முன்னேறியதாகக் கூறுவார்.
கலைவாணர் எதையும் முன்கூட்
டியே சொல்லிவிடும் திறன் படைத்தி
ருந்தார். உதாரணமாக "விஞ்ஞானத்தை
வளர்க்கப் போறேன்டி' என்ற பாட்
டைச் சொல்லலாம். அதில் பள்ளிக்கூடம் போகாமலேயே
பிள்ளைகள் படிக்கும் கருவியைப் பற்றிச் சொல்லியிருப்
பார். பட்டனைத் தட்டினால் வரும் இட்லியைப் பற்றிச்
சொல்லியிருப்பார். இப்போது பள்ளிக்கூடம் போகாம
லேயே கம்ப்யூட்டர் மூலமாகவே பிள்ளைகள் படிக்க முடி
யும். பட்டனைத் தட்டினால் இன்று காபி, டீ எல்லாம் வரு
கிறது. கலைவாணர் தான் சம்பாதித்த பணத்தை மட்டுமல்
லாமல், அவரது துணைவியார் மதுரம் சம்பாதித்த பணத்
தையும் பிறருக்கு உதவி செய்யச் செலவிட்டுவிடுவார்.
இருந்தும் இதற்காக மதுரம் ஒருநாளும் அவரைக்
கோபித்துக் கொண்டது கிடையாது. கலைவாணர் மறை
யும் போது அவர் சேமித்து வைத்தது என்று எதுவுமில்
லாமல்தான் இருந்தது. என்றாலும், அவர் பிள்ளைகள்
மட்டுமல்ல, பேரப் பிள்ளைகளும் உயர்ந்த கல்வி கற்று
இன்று நல்லநிலையில் உள்ளார்கள். பிறருக்குக்
கொடுத்து உதவிய அவரின் சந்ததியினருக்கு எந்தக்
கஷ்டமும் வரவில்லை.'' என்றார்.