Quote:
சங்கீத மகாயுத்தம்!
முன்னணி பாடகர்கள் போட்டியிடும் "சங்கீத மகாயுத்தம்' என்ற இசை நிகழ்ச்சி சன் டி.வி.யில் கடந்த ஜூன் 26-ம் தேதி முதல் ஞாயிறு தோறும் இரவு ஒளிபரப்பாகி வருகிறது. சன் தொலைக்காட்சியும், சாய்பாபா நிறுவனமும் இணைந்து இந்நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு சிறப்பு அம்சமாக பார்வையாளர்களுக்கு வித்தியாசமான ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும் கேப்டன்களான விஜய் ஜேசுதாஸ், மாதங்கி, ஸ்ரீலேகா, அனுபமா, தேவன் ஆகியோரை உங்கள் இல்லத்திற்கே அழைக்கலாம் என்பதுதான் அது. அதற்காக "வீட்டிற்கு கேப்டனை அழையுங்கள்' என்கிற ஒரு வித்தியாசமான பிரச்சார வாகனம் கடந்த வாரம் முதல், சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் முக்கிய ஷாப்பிங் மால்கள், கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் வீடுகளில் அதிர்ஷ்டசாலிகளைத் தேடி வருகிறது.
அந்தப் பிரச்சார வாகனம் வரும்போது பார்வையாளர்கள் அவர்களுக்குப் பிடித்தமான ஒரு பாடலை அந்த இடத்திலேயே பாடிப் பதிவு செய்து கொள்ளவேண்டும். அதில் வெற்றி பெறுபவர்களின் வீடுகளுக்கு மேலே சொன்ன பிரபலங்கள் வருகை புரிவார்கள். அவர்கள் வரும்போது அதையும் படம் பிடித்து ஒளிபரப்ப உள்ளனர்.