Yes, I agree with you on this. Will follow it henceforth :)Quote:
Originally Posted by baroque
Printable View
Yes, I agree with you on this. Will follow it henceforth :)Quote:
Originally Posted by baroque
And I would like to re-produce my post (posted almost 6 years ago) on Kavinjar's kaLLikaattu ithigaasam;
ரொம்ப நாட்களாகத் தேடிய பிறகு அண்மையில்தான் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி - 2003ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' கைய்யில் கிடைத்தது.
அதை படித்துமுடித்துவிட்டு இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மீளவில்லை நான். ஓர் ஏழை விவசாயின் வாழ்க்கையை இவ்வளவு யதார்தத்துடன் யாராவது வடித்திருப்பார்களா என்பது சந்தேகமே!
'பேயத்தேவர்' எனும் அந்த ஏழை விவசாயின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை பக்கத்திலிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வு ஏற்பட்டது படிக்கும்போது. ஒவ்வொரு கதாபாத்திரத்தத்தையும் அதன் உணர்வுகளையும் மிக யதார்த்தமாக வடித்திருக்கிறார்.
இந்த அற்புதமான படைப்பில் ஒவ்வொரு வரியையும் அருமையாக, கவி ரசனையுடன் எழுதி இருக்கிறார். இந்த -இந்த வரிகள்தான் சிறந்தவை என்று வித்தியாசப்படுத்த முடியாத இந்தப் படைப்பில் - இடையிடையே அவர் குறிப்பிடும் வாழ்வியல் தத்துவங்களை இங்கே நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்போல் இருக்கிறது எனக்கு.
* இயற்கைதான் மனிதனின் ஆசான். தன் இருப்பு அசைவு இரண்டிலும் அறிவு போதிக்கிறது அது. வானமும் பூமியும் வகுப்பறைகளாய் யுகந்தோறும் யுகந்தோறும் அது பாடம் நடத்திக்கொண்டேயிருக்கிறது. புத்தியுள்ளவன் புரிந்து கொள்கிறான்; வலியுள்ளவன் அறிந்து கொள்கிறான். மனிதனின் படைப்பென்று பூமியில் எதுவும் இலலை; மனிதன் வெறும் கண்டுபிடிப்பாளனே தவிரப் படைப்பாளன் அல்லன். அப்படிப் பார்த்தால் மொழி ஒன்றுதான் மனிதனின் படைப்பு. மொழிகூட ஒலியின் வடிவம்தான். ஒலி மனிதனின் படைப்பல்ல; கண்டுபிடிப்புதான். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால் ஏதோ ஒரு வலி இருந்தே தீரும். வலி சொல்லிக் கொடுக்கும்; வலி கண்டவன் அறியக்கடவன்.
* மனிதனுக்கு மனிதர்கள் மட்டுமே தேவை என்பது இரண்டு பருவத்தில்: ஒன்று வாழத்தெரியாத இளம்பருவம்; இன்னொன்று வாழ்ந்து முடிந்த முதுபருவம். இரண்டிலும் தனிமைப்படுத்தப்படுவதுதான் வாழ்வின் சாபம்.
* சிலபேர்தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; பலபேர் பத்துமாதம் சுமந்து பிரச்சினைகளைப் பெறுகிறார்கள்.
* வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம் உதிர்ந்தாலும், மரத்திலிருந்து ஒரு பூ உதிர்ந்தாலும் இழப்பு இழப்புதான். மழைத்துளியில் எறும்பு மூழ்கினாலும், கடலுக்குள் கப்பல் மூழ்கினாலும் வலி வலிதான். அதனதன் நிலையில் அவரவர் துயரம் பெரியதுதான். துன்பத்தில் 'சிறுசு-பெருசு' என்பதெல்லாம் இடம் பொருள் ஏவல் குறித்த ஒப்பீடுகளல்லாமல் வேறென்ன?
* மாறிவரும் சமூகத்தில் மணவாழ்க்கை என்பது, ஆணால் கிட்டும் சௌகரியங்களைப் பெண்ணும், பெண்ணால் கிட்டும் சௌகரியங்களை ஆணும் சட்டப்படி திருடிக்கொள்ளும் சம்பிரதாயமாக இருக்கிறது.
* தாமத்தியத்தின் தேவை தீர்ந்த பிறகுதான் ஒரு குடும்பத்தில் உண்மையான கணவனும் உண்மையான மனைவியும் பிறக்கிறார்கள். உடல் தேவை என்னும் சாம்பல் உதிர்ந்த பிறகுதான் உள்ளிருக்கும் அன்பின் கங்கு துலக்கமாகிறது.
பெற்றவர்கள் மறைந்துபோக - உடன் பிறந்தவர்கள் அவரவர் பிழைப்புத்தேடி ஒதுங்கிபோக - நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே சுற்றங்கள் வந்து சூழ்ந்து விலகிபோக - பெற்று வளர்த்த பிள்ளைகள் 'கெழவன் கெழவி செத்தாச் சொல்லிவிடுங்க' என்று கண்ணுக்குத் தெரியாத தங்களின் இன்னொரு தொப்பூழ்க் கொடியையும் அறுத்து கொண்டோட, உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒவ்வொன்றாய் 'ஆளவிடு சாமி' என்று அதனதன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும்போது மனைவியின் மடிசாய்கிறான் கணவன்; கணவனின் மடிசாய்கிறாள் மனைவி.
* பால் திரியுத் தொடங்கும் நேரம் பாத்திரத்துக்குத் தெரியாது என்பதுபோல், பிள்ளைகள் கெடத் தொடங்கும் நேரமும் பெற்றவர்களுக்குத் தெரிவதில்லை.
* மனித வாழ்க்கையில் நல்ல இடம் சுடுகாடுதான். மனசு மட்டுப்படுவது அங்கேதான். செத்துப்போனவனுக்கு நிரந்தரமான நிம்மதியும் வீடு திரும்புகிறவனுக்கு 'இத்துனூண்டு' ஞானமும் தருகிற பழைய்...ய பள்ளிக்கூடம் அதுதான்.
* பொதுவாகவே மனிதர்களுக்கு ஒரு குணமிருக்கு. அவனவன் குற்றம்குறை பூசணிக்காய் அளவு இருந்தாலும் அதைச் சுண்டக்காய் என்று சொல்லித் திரிவது. அடுத்தவர்களின் குறை சுண்டைக்காய் அளவு இருந்தாலும் அதைப் பூச்ணிக்காய் என்று புலம்பித் திரிவது. அதில் ஒரு சுகமும் பாதுகாப்பும் இருப்பதாக நாலுகால் மனசு நம்புகிறது.
சுடுகாட்டைக் கடந்து போகிறவன் தன் பயத்தை மறைக்கச் சத்தம் போட்டுக் கோண்டேபோவது மாதிரி தன் குறையை மறைக்க அடுத்தவர்களின் குறைகளையே அசைபோடுகிறது மனுசக் கூட்டம்.
இது ஊர் ஊருக்கு - ஆள் ஆளுக்கு - தேசத்துக்கு தேசம் முன்னபின்ன இருக்குமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாத குரங்குக் குணம்.
* சனநாயகம் மாதிரி தெரிகிற சர்வாதிகாரம்தான் அரசாங்கம் !
* மனுச வாழ்க்கையை ருசியா வச்சிருக்கிறதே ரெண்டே ரெண்டு விசயந்தான்; ஒண்ணு இன்பம்; இன்னொண்ணு துன்பம். துன்பம் இல்லேன்னு வச்சுகுஙக... இன்பத்துக்கு என்னா மதிப்புன்னே தெரியாது மனுசப் பயலுக்கு. இருட்டுன்னு ஒண்ணு இல்லேன்னா வெளிச்சம் வெள்ளையா கருப்பான்னு யசனையே பெறந்திருக்காது.
வேணும்; மனுசனுக்கு துன்பம் வேணும். பிரச்சினையும் அப்பப்ப வந்து பிடறியைப் பிடிச்சு ஒரு உலுக்கு உலுக்கணும். பிரச்சினை இல்லாத ஆளு உலகத்துல யார்ரான்னு கேட்டா பூமிக்குக் கீழ பொணமாப் போனவன் மட்டுந்தான்.
ஒரு மனுசன் உசுரோட இருக்கான்னா பிரச்சினைன்னு ஒண்ணு இருக்கும். வேறமாதிரியும் சொல்லலாம்; பிரச்சினைன்னு ஒண்ணு இருந்தாத்தான் மனுசன் உசுரோடயே இருப்பான்.
Good.
Great man has put his children through college, he may need money to buy pattam, panju mittai Ruskin bond's The room on the roof - book to WII SPORTS video games for his grandsons & jewels to his
great grandaughters... or may be second/ third honeymoon trip around the world with his loving wife. :D :bluejump: :redjump:
vinatha.
Geno, wonderful job!
thanks Roshan.
vinatha.
kallikattu idhikasam....is a great novel by kavingar.
all about village life.
very emotional novel.
moving feelings about love, sufferings etc..
rich in intricate varnanaigal & very elaborate.
thanks ..... I pull my copy from my bookshelf and drench myself in the impact of emotional pathos.
vinatha.
Absolutely ! Again from my post;Quote:
Originally Posted by baroque
கிராமிய வாழ்க்கையை ஓரளவேனும் அனுபவித்தவர்களுக்கு இந்தக் கதையின் யதார்த்தம் நன்றாகவே புரியும். பாராட்டப்பட வேண்டிய மற்றோரு அம்சம் கதைக்கு உயிர் கொடுப்பதற்காக அவர் செய்திருக்கும் ஆய்வுகள்.
கஞ்சிக்கு துவையல் அரைப்பது, கோழியை அடித்து குழம்பு வைப்பது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, முடி வெட்டுவது, சுடுகாட்டில் பிணம் எரிப்பது, கிணறு தோண்டுவது , சாராயம் காய்ச்சுவது, அணைக்கட்டு கட்டுவது என்று ஒவ்வொன்றுக்கும் மிகத்தெளிவான செய்முறை விளக்கம் கூறியிருப்பதை படித்தபோது தெரிந்தது இந்தக் கதைக்கான கவிஞரின் உழைப்பு.
oh.... his style of poetic touches, vivarangal with stunning visual imagery of the land- rural area.
He totally earned the award. Justice done.
எப்பவுமே வார்த்தைகளால் ஓவியம் வரைந்து கண் முன்னால் நிறுத்துவார் , கவிஞர். :thumbsup:
கீழ்வானம் எங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதைக்கொள்ளும் காலை காவியம் :musicsmile: in shri.Ilayaraja's sangeetham.
cinema paadalukkey ippadi ezhudhiyavar.
vinatha.
இன்னொரு முறை மீள்வாசிப்பு தண்ணீர் தேசத்தை. ஹமித்திற்கு நன்றி. நல்லதொரு வாசிப்பு அனுபவம். பல இடங்களில் நாம் பார்த்திருந்த காட்சிகளை இவர் எழுத்து வடிவில் பார்க்கும் போது பரவசம். உதாரணமாக கடல் பயணத்தின் ஆரம்ப இடங்களில் இப்படி..
ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவது பார்.
இந்த வரிகளை கடக்கும் போது, அந்தக் காட்சி அப்படியே மனதில் ஓடுகிறது. நாமும் ஒரு பார்வையாளனாக விசைப்படகில் அவர்களோடு பயணிக்கத் தொடங்குகிறோம்.
தமிழ்(கதையில் வரும் பெண்ணின் பெயர்) கடல் ஒவ்வாமையால் மயக்கம்,வாந்தி வரும் நிலை..
எனக்கிது தேவைதானா?
அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.
ஒரு இடத்தில் கடல் அலை விசைப்படகில் புகுந்து தமிழை நனைத்துவிடுகிறது.
தண்ணீர் சொட்டச் சொட்ட தானே
தலைதாங்கித் தமிழ்ரோஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.
இன்னொரு இடத்தில் தமிழ் வாடியிருக்கும் முகத்திற்கு இப்படி ஒரு உவமை.
வாடிய கீரையைத்
தண்ணீர் தெளித்து வைப்பது
மாதிரி
வாடிய அவள் முகத்தில்
வேர்வை தெளித்தது வெயில்.
தண்ணீர் தேசம் நாவல் முழுவதும் ஏதோ ஒரு முக்கியமான க்ரிக்கட் இறுதிபோட்டியின் Highlights-ஐ தொலைக்காட்சியில் பார்த்து ரசிப்பது போல இருக்கிறது. வரிக்கு வரி கவிஞர் நான்கு, ஆறு என ரன்கள் அடித்துக்கொண்டே இருக்கிறார்.
My earliest memory of his poems should be this one.
கருகிய ரோஜாவும் கடைசிக் கேள்விகளும்
அரபியில் சொன்னாள் அம்மா
எங்கள் டைகிரிஸ் யூப்ரடீஸ்
நதிகளிரண்டும்
வீசியடித்த அலைகளிலேதான்
முதல் நாகரிகம்
முளை கட்டிற்றாம்
உங்கள் நாட்டில்
நதிகளே இல்லையா புஷ் அங்கிள்?
உங்கள் ஆயுதம்
கூர் சோதிக்க
என் பிஞ்சு மண்டை ஓடுதான்
கிடைத்ததா?
ரொட்டி சலித்த உங்கள்
குட்டி நாய்க்கு எங்கள்
குருத்தெலும்பென்றால்
கொள்ளை ஆசையா?
கனவுகள் நனைந்து
பூமிக்கு வந்தேன்
ரோஜாக்கள் வெடிக்கும்
நுண்ணொலி கேட்கவே
இராக்கில் பிறந்தேன்
பகலில் சூரியன்
இரவில் நிலவு
இரண்டையும் வெடித்தால்
எங்ஙனம் தாங்குவேன்?
மு... மு... முட்டுதே மூச்சு
சுவாசப் பையில் என்ன நெரிசல்!
காற்றில் கலந்த சதைத்தூள்
நிறைந்து
நெரிபடுதோ என் நுரையீரல்?
அலெக்சாண்டர் வாளில்
மங்கோலிய வில்லில்
பிரிட்டிஷ் பீரங்கியில்
கருகாத எங்கள் பேரீச்சங் காடுகள்
தீத்தாரைகளில் சிவ்வென்றெரியுதே!
இன்னோரு பருவம்
பேரீச்சை பழுக்குமோ?
பேரீச்சை தின்ன
நாங்கள் இருப்பமோ?
நெருப்பு மழை
அக்கினி அலை
சூரியன் உடைந்து
பூமியில் ஒழுகினால்
எப்படித் தாங்கும்
என் மெல்லிய செந்தோல்?
மொத்தப் பிணக்குழியில்
என்னையும் இழுத்து
எறியும்பொழுது
என் பிரிய பொம்மையைப்
பிரிக்க மாட்டீரே?
எங்கு நோக்கினும்
ரத்தப் படுகை
பாலைவனத்தை
நாளை தோண்டினால்
தண்ணீரின்
நிறம் சிவப்பாயிருக்குமோ?
ஏனிந்த விஷவெறி?
ஏசுவா? அல்லாவா?
அதுவல்ல கேள்வி
டாலரா? தினார?
அதுதானே கேள்வி!
இந்தியப் புறாக்கள் வாங்கி வளர்க்க
ஏழு தினார்கள் சேர்த்திருந்தேன்
அனுப்பட்டுமா புஷ் அங்கிள்
உங்கள் வேட்டு விலாசமிட்டு?
ஒரே ஒரு பிஞ்சு நிபந்தனை :
எண்ணெய்க்காடு எரியும் நெருப்பில்
நீங்கள் மூட்டிய பூதப் புகையில்
வாழ்வு தேசம் சுவாசம் எல்லாம்
கறுத்துக் கறுத்துக் கறுத்தழிந்தது
உங்கள் வீட்டுப் பெயரில் மட்டும்
இன்னும் என்ன
'வெள்ளை மாளிகை?'
வீடோ பெயரோ
மாற்றுவீர்களா?
நான் இறந்துபோயினும்
வந்து சேரும்
ஏழு தினார்!
வலைப்பதிவில் உலாவியபோது கவிஞரின் உழைப்பைக் குறித்த ஒருவரது பின்னூட்டம்..Quote:
Originally Posted by Roshan
Quote:
வைரமுத்து எனும் கவிஞனின் பேய் உழைப்பை நண்பர்கள் பலரது வாயிலாக கேட்டிருக்கிறேன். மிகச் சமீபத்தில் நாஞ்சில் நாடனுடான சந்திப்பொன்றில் 'வைரமுத்துவைக் காட்டிலும் கடுமையா உழைக்கிறேன்பா' என்று ஓப்புமைக்கு வைரமுத்துவை எடுத்துக்கொண்டார்.