It is news to me Sir. Thanks for the information.
Printable View
சதிலீலாவதி படம் பற்றி எம்.ஜி.ஆர் அவர்களது கருத்து
நான் நடித்த, எனது முதல் படமான சதிலீலாவதியில் எனக்களிக்கப்பட்டது இன்ஸ்பெக்டர் வேடம். முதலில் துப்பறிபவன் என்று சொன்னார்கள். அதன் பிறகு கதாநாயகனின் நண்பன் பரசுராமனாக குறிப்பிட்டு வேறு வழியின்றி என் மீது பச்சாதாபப்பட்டு கொடுத்த வேடம் தான் இன்ஸ்பெக்டர் பாத்திரம்.
அதிலும் சைக்கிள் ஓட்டத் தெரிந்த இன்ஸ்பெக்டராகப் பதிவே ஏற்றுக் கொண்ட நான் அப்பதிவியின் தகுதியைக் காப்பாற்றிக் கொள்ள கலைவாணரின் உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன்.
சிலர் பதவியை உயர்த்துகிறார்கள். சிலரைப் பதவி உயர்த்துகிறது. ஆனால் நானோ அந்த அப்பாவி இன்ஸ்பெக்டரையும் உயர்த்தவில்லை. அந்த இன்ஸ்பெக்டர் பதவி(வேடமும்) என்னை உயர்த்தவில்லை.
தட்சயக்ஞம் படத்தைப் பற்றி மக்கள் திலகத்தின் பேட்டி
நல்ல உள்ள படைத்த எந்த எம்.கே.ராதா அண்ணன் அவர்கள் சிபாரிசு செய்தும் சமூகத் தொண்டு என்ற படத்தில் நடிக்க மறுத்தேனோ அதே அண்ணன் எம்.கே.ஆர் அவர்களிடம் நானே வலியச் சென்று வேலை கேட்டு நடிப்பதற்கும் சிறந்த ஆசான் இராசா சந்திரசேகர் அவர்களை மூத்த அண்ணனாகவும் அன்பு ஆசானாகவும் அடையவும் காரணமாகயிருந்த படம் தான் தட்சயக்ஞம்.
தட்சயக்ஞத்தில் எனக்கு வேலை வாங்கித் தந்த எம்.கே.ஆர் அண்ணன் அவர்கள் தான் முதலில் தட்சனாக நடிக்க ஒப்பந்தம் பேசி, முடிவில் சம்பளத் தொகை வேறுபாட்டினால் நடிக்காமல் போய்விட்ட படம் தான் இது.
எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு தனக்கு வேலையில்லாமல் போயும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையைக் கழித்த எம்.கே.ஆர். அவர்களின் பண்பை நடைமுறையில் வெளிக்காட்டிய படம் இதுவே.
சீதா ஜனனம் படத்தில் மக்கள் திலகம்
http://i45.tinypic.com/2iu6aoo.jpg
Dear jai sir /roop sir
very nice postings about pirahalatha and makkal thilagam comments about his first two flims .
திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும்
பாராட்டுகள்
தங்கள் இதுவரை பதிவிட்டு வரும் தலைவரின் முதல்கட்ட
படங்களின் கதை சுருக்கும் அனைத்தும் மிகவும் அருமை
தங்கள் உழைப்பிற்கு நான் தலை வணங்குகிறேன்
தொடருங்கள் வெற்றியை நோக்கி மட்டுமே நம் பயணம்
தலைவனின் ஆசி நமக்கு எப்பொழுதும் உண்டு
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்,
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்,
நீதிக்கு இது ஒரு போராட்டம்,
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்.
பாடல் தலைப்பு நாரணன் மாய லீலை திரைப்படம் வேதவதி அல்லது சீதா ஜனனம்
கதாநாயகன் எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி/எம்.ஜி.ஆர் கதாநாயகி கே.தவமணிதேவி
பாடகர்கள் பாடகிகள்
இசையமைப்பாளர் பாடலாசிரியர்கள்
இயக்குநர் டி.ஆர்.ரகுநாத் ராகம் பைரவி
வெளியானஆண்டு 22-02-1941 தயாரிப்பு ஷியாமளா பிக்சர்ஸ்
நாரணன் மாய லீலை
விருத்தம்
நாரணன் மாய லீலை
நாரி நீ யறியமாட்டாய்
ஆரணங்குன் மேலிந்த
ராவணன் வைத்த ஆசை
காரணம் உயிரை நீப்பான்
கவலையற்றுலகம் வாழும்
பூரணப் புகழும் யாரும்
பூசிக்கும் தெய்வம் போல்வாய்
Thank you Mr. Roop. Let all credit go to our beloved M.G.R. I respect your feelings. But I consider that I am honoured by the people like you who encourage me well. I have lot more information relating to Technicians involved in each and every film of our beloved God MGR (as per Original Theatre Song Book) and certain rare Stills. Hence, those information cannot be derived by those whom you refer, until I reveal it.
Please note that it is also one of the reasons - My taking hard efforts to type and exhibit, instead of scanning the song book. Moreover, the song books pertaining to the films in which our Makkal Thilagam had acted in small roles, do not cover his image.
Hope you are clarified.
My special thanks to Mr. Velur Ramamoorthy, Bangalore Vinodh, Tiruppur Ravichandran, Salem Jai Shanker and others who motivate me and also show their enthusiasm in bringing this Thread to be a Dictionary to refer.
Thanking you once again to all.
Ever Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
"ஹரிச்சந்திரா" திரைப்படத்தில் மக்கள் திலகத்தின் மற்றொமொரு அபூர்வ காட்சி
http://i50.tinypic.com/jqna1g.jpg
அன்புடன்
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனசெம்மலின் 8வது திரைப்படமாகிய "அசோக் குமார்" படத்தினைபாற்றிய ஒரு தொகுப்பு :
1. படம் வெளியான தேதி : 10-07-1941
2. படத்தை தயாரித்த நிறுவனம் : முருகன் டாக்கி பிலிம்ஸ் கம்பெனி
3. கதாநாயகன் - கதாநாயகி : எம். கே. தியாகராஜ பாகவதர் - டி.வி. குமுதினி
4. மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : தளபதி மகேந்திரன்
5. நகைச்சுவை ஜோடி : கலைவாணர் என். எஸ் கே - டி.ஏ. மதுரம்
6. பாடல்கள் : பாபநாசம் சிவன்
7. இசை அமைப்பு : ஆலந்தூர் சிவசுப்பிரமணியன்
8. வசனம் : இளங்கோவன்
9. இயக்குனர் : ராஜா சந்திரசேகர்
படத்தில் பங்கு பெற்ற இதர கலைஞர்கள் : பி. கண்ணாம்பா, வி. நாகையா
எம். கே. தியாகராஜ பாகவதருடன் மக்கள் திலகம் இணைந்து நடித்த படம்.
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட படம்.
வெள்ளி விழா கண்ட படம்.
இப்படத்தின் கதைச் சுருக்கம் மற்றும் பாடல்கள் அடுத்து தொடர்கிறது.
அன்புடன்
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
"அசோக் குமார்" படத்தில் நமது பொன்மனச்செம்மல் அவர்களின் அனாவசியமான தோற்றம் :
http://i47.tinypic.com/2n8sm07.jpg
அன்புடன்
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
"அசோக் குமார்" படத்தின் கதைச் சுருக்கம் :
-----------------------------------------------------------------------
யுத்த களம் சென்று வெற்றி வீரனாக வந்த தன் மகன் குணாளனை தன் இளையாளான திஷ்யரிஷைகைக்கு
அறிமுகப்படுத்தினார் அசோகர். விரைவில் யுவராஜா பட்டாபிஷேகம் செய்யவும் நினைத்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார் அரசர் அசோகர்.
பட்டாபிஷேகம் நடந்து கொண்டு இருக்கும் போது குணாளன் நெற்றியில் திலகமிட்டாள். அப்போது அவள் தன்னையும் அறியாமல் குணாளன் மீது காதல் கொண்டாள். இருந்தாலும் குணாளன் காஞ்சனா என்பவளை காதலித்தான். இருவரும் காதல் வயப்பட்டு இருப்பதைப் பார்த்த திஷ்யரிஷைகைக்கு காமத்தீ நன்றாக பற்றிக் கொண்டது.
தன் தந்தை இல்லாத போது இளைய ராணி அதாவது சின்னம்மா குணாளனை கட்டிப் பிடித்தாள். தனது ஆசைக்கு இணங்கும்படி கூறினாள். இந்த வேளையில் அரசன் அசோகர் வந்து விட்டார். பழியை குணாளன் மீது போட்ட தால் குணாளன் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டான் தன்னால் கர்ப்பவதியான காஞ்சனாவை அழைத்து கொண்டு குணாளன் சென்றான். அப்போது அரசர் அசோகர் அங்கிருந்த தளபதி மகேந்திரனை அழைத்து குணாளனின் இரு கண்களையும் தோண்டுமாறு ஆணையிடுகிறார். மகேந்திரனோ தன்னால் குணாளனின் கண்களை தோண்ட முடியாது என்று மறுத்து விடுகிறார். உடனே குணாளன் தானே தன் கண்களை பிடுங்கிப் போட்டு விட்டு காஞ்சனாவுடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான்
இதனிடையில் அரசருக்கு உண்மை தெரிய வருகிறது. திஷ்யரிஷைகை விஷம் குடித்து உயிரை மாய்த்து கொள்கிறாள்
அரசர் அசோகர் தன் குமாரன் குணாளனை கண்டு பிடித்து மன்னிப்பு கேட்கிறார். புத்தர் கோயிலில் பாட்டு பாடும் போது கண் பார்வை பெறுகிறான் குணாளன்.
அனைவரும் ஆனந்தம் அடைகின்றனர்.
சுபம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்புடன்
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
"அசோக் குமார்" படத்தில் இடம் பெற்ற மொத்த 17 பாடல்கள் விவரம் : ஆரம்ப ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)
1. ஜோடிப்பாடல் : ஸுகம் தருதே - சோலை வாஸந்தானே - ஏக அமோஹம்
2. தனித்த ஆண் பாடல் : மாநில வாழ்வு பெரும் ஆனந்தம் (பல்லவி)
கானமுடன் எழில் மான்விழி மாதே (அனு பல்லவி)
என் மன உண்மைநிலை நீ அறிய (சரணம்)
3. ஜோடிப்பாடல் : உள்ளங் கவருமென் பாவாய் - நான்
4. தனித்த ஆண் பாடல் : த்யானமே எனது மனது நிறைந்தது (பல்லவி)
காந்த சக்தியை இந்நாள் (அனு பல்லவி)
லோகமு மதிலே தொன்றுமிந்த்ரிய நீ அறிய (சரணம்)
5. தனித்த ஆண் பாடல் : உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ (பல்லவி)
அண்டரிலே நிலா மண்டலமேல் (அனு பல்லவி)
6. தனித்த பெண் பாடல் : மதனனே வா ஸ்ருங்காரா மனங் கவர் நேசா உல்லாசா
7. ஜோடிப்பாடல் : விட்டிட மாட்டேன் - தொட்டெனை கட்டியனைத்திடுவாய்
8. தனித்த பெண் பாடல் : தப யோகம் பலிக்கும் நாளே - (பல்லவி)
மான சீகமாய் மன்னன் சேரவே (அனு பல்லவி)
ப்ராண காந்தனும் வருவார் வருவார் (சரணம்)
9. ஜோடிப்பாடல் : ஸத்வ குண போதன் - சரணமிருக்க (பல்லவி)
கல்லினுள் தேரைக்கும் கருப்பையுயிர்க்கும்
கண்ணிழந்தாலேன்ன - கடவுட்கும் என்ன கண்ணில்லையோ
10. தனித்த ஆண் பாடல் : வன்பசிப் பிணிக்குணவு - நம் கையில் கிட்டினும்
11. தனித்த ஆண் பாடல் : மனமேநீ ஈசன் நாமத்தை வாழ்த்துவாய் (பல்லவி)
கனவென்னும் வாழ்வில் கலங்கி வாடாதே (அனு பல்லவி)
விளங்கும் தூய சர்ஜன ஸங்கம்
12. தனித்த ஆண் பாடல் : பூமியில் மானிட ஜென்ம மடைந்துமோர்
13. தனித்த ஆண் பாடல் : உன்னையே அன்புடன் வாரியணைக்கும்
14. தனித்த ஆண் பாடல் : தெரிஞ்சுகிட்டேன் விஷயம் புரிஞ்சிகிட்டேன்
15. ஜோடிப்பாடல் : கிடையாது வாழ்விதிலே - ஸுகமே - கொடும் கானலில் நீர்தனில்
16. தனித்த பெண் பாடல் : தஞ்சம் நீ கதியே - அஞ்சேல் என அபயம் அருள்நிதியே
17. தனித்த ஆண் பாடல் : சினம் காமம் பொய்களவு (விருத்தம்)
பாலருகிலு ழன்று நொந்தேன் நொந்தேன் (பாட்டு)
================================================== ================================================== =========
அன்புடன்
சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
Ashok Kumar story is based on a Buddisht folk tale. Kunal is Emperor Ashoka's son were he was liked by Ashoka's younger wife acted by Kannamba. MGR acted in this movie in the role of M.K.Thiyagaraja Baghavathar's friend.
http://i125.photobucket.com/albums/p...psb83868f4.jpg
Blast from the past review of Ashok Kumar written by Randor Guy in The Hindu.
A popular folk myth drawn from Buddhist tales built around Asoka the Great, his son Veer Kunal and young amorous wife was filmed more than once as a silent film in Hindi as Veer Kunal, and in Tamil as Ashok Kumar. (Kunal became Gunaalan in Tamil.) However, there is no historic proof of the story which has many parallels with another oft-filmed folk myth Sarangadhara.
Bhagavathar’s career was now on an upswing and the South Indian movie-goers eagerly awaited his next film. He was in such a position that he could afford to take life easy which he did. He gave himself to many exciting things in life such as bathing in Ghazipur rose water. Besides, he was in great demand for his Carnatic music concerts. So his films took longer to make, a year and more. Anyway he pleased the public with Ashok Kumar, directed by Raja Chandrasekhar, another noted South Indian filmmaker of those days.
Ashok Kumar is about Asoka’s son Gunaalan, whom Tishyarakshita, the Emperor’s young wife, lusts after. Shocked, he rejects her amorous advances, and like the proverbial woman scorned, she tells her husband that his son tried to seduce her! Enraged, the ageing emperor orders his son to be blinded and banished. The condemned, but innocent, prince suffers, loses his child and is reduced to beggary. Ultimately, the Buddha restores his sight, rights all wrongs and all, except the Queen, live happily thereafter! Bhagavathar played the role of the prince, while Kumudhini was his devoted spouse. Nagaiah and Kannamba played Ashoka and the queen. The duo with a wide range of talent came to be deservedly regarded as two of the greatest artistes in Indian cinema.
Pasupuleti Kannamba who hailed from Andhra Pradesh made her debut in Tamil with Krishnan Thoodhu (1940) and Ashok Kumar was her second film. She did not know Tamil then and had her lines written in Telugu phonetically, and spoke with ease, which was indeed remarkable.
One of the highlights of the film was a song and dance sequence, ‘Unnai kandu mayangaatha…’ sung by Bhagavathar to which Kannamba danced. No dancer, she worked hard for the sequence which was shot brilliantly during a single night at Newtone Studio by the sadly neglected Indian movie maestro, K. Ramnoth, without credit.
MGR played a minor supporting role and was credited as ‘M .G. Ramachandar’!
A newcomer playing a bit role as the Buddha was Ranjan, his first film, who in a few years’ time was to take the sub-continent by storm with his stunning performance in S. S. Vasan’s Chandralekha (1948).
Like any Bhagavathar film, music was the dominating factor in Ashok Kumar too. Songs such as ‘Satvaguna bhodhan…’, ‘Bhoomiyil maanida janmam…’, and ‘Unnai kandu…’ became instant hits and the credit should go to Papanasam Sivan. Indeed, during his heyday, Bhagavathar insisted that his producers hire Sivan and Elangovan to handle the music and script respectively.
NSK and Mathuram provided the comedy as usual.
Remembered for Bhagavathar’s melodious songs.
RANDOR GUY
Another picture from Ashok Kumar movie.
http://i125.photobucket.com/albums/p...psd5eea1e9.jpg
A scene from Ashok Kumar, MGR and MKT.
http://www.youtube.com/watch?v=uZashMF9Q9g
Uploaded by MGCB Pradeep.
மக்கள் திலகத்தின் அசோக்குமார் படத்தின் ஸ்டில் - அருமை .
நன்றி ரவி sir
அசோக் குமார் - வீடியோ காட்சிகள் பிரமாதம்
நன்றி ரூப் சார்
"வீர ஜெகதீஷ்", "மாயா மச்சீந்திரா", "பிரகலாதா", "சீதா ஜனனம்" ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். 1941_ல் "ஏழிசை மன்னர்" எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, "அசோக்குமார்" படத்தின் மூலம் கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் "அசோக்குமார்.
" அசோக்குமாரைத் தொடர்ந்து "தமிழறியும் பெருமாள்", "தாசிப்பெண்", "ஹரிச்சந்திரா" (ஜெமினி), "சாலிவாகனன்", "மீரா", "ஸ்ரீமுருகன்" முதலிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டம் அது. சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள்தான் கதாநாயகனாக நடிக்க முடியும்.
அழகும், திறமையும் உள்ள எம்.ஜி.ஆர், கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். 1946_ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.
from net
I provide an example in which MGR had described an incident to his co-worker about his poverty-tinged pre-hero days. Mayavaram Krishnamoorthy Thyagaraja Bagavathar (M.K.T. Bagavathar, 1910-1959) was the singing star hero of Tamil cinema from mid 1930s to late 1940s. His seventh movie Ashok Kumar was released in 1941. In it, MGR appeared in a small role. In a short biography of Bagavathar first published in 1983, authored by Vindhan (a pen name), the following description appears.
“Famous director Mr. Raja Chandrasekhar directed this move in which Mr. MGR appears in a small role as Mahendran. Having this as an excuse, whenever this movie is released in re-runs now, those who advertise boldly announce, ‘Ashok Kumar, starring MGR”. This sort of announcement hurts the sentiments of Bagavathar’s siblings and the fans. I do know about this. Mr. Shanmugam, a sibling of Bagavathar did tell me, ‘I’m at a loss how MGR permits this sort of twisted advertisement, when he is such a great person.’ I responded: ‘He may not be aware of this. If he knows, he would definitely not allow it to happen. Others may opt to share the glory from someone else’s achievement. But, how could MGR have such meanness?’
For this Bagavathar biography, famous Tamil comedian in stage and movies, K.A.Thangavelu had contributed a foreword. Thangavelu himself had appeared in numerous MGR movies. What he had cryptically noted reveals that M.K.T. Bagavathar was not a saint himself. I reproduce Thangavelu’s cryptic remarks in translation.
“The author of this book, while writing about the ‘King of Seven Notes’ (a title carried by Bagavathar) had omitted specifically the names of artistes so as not to offend them, but at the same time had mentioned small errors in their behaviors so that such little offenses could be corrected by others who follow the same path. Like this, it is my wish that there should be a history book for other well-known artistes who created history in the film world.”
This was vintage Thangavelu, who gained recognition for his subtle nuance and twang in dialogue delivery. It appears to me that Thangavelu did know that Bagavathar might have hurt the chances of other minor contemporary actors (among which MGR was one) by his high handedness. Proof for this did appear in one of MGR’s co-worker’s reminiscences about MGR. Kaja Muhaideen (having a pen name K.Ravindar) was that co-worker who worked in MGR Pictures as a script writer. Between 1992 and 1995, in the Tamil movie magazine Bhommai he wrote a 30-part series on MGR. He was introduced to MGR by none other than comedian Thangavelu. In the 20th part of this series, Ravindar provides the following episode, under caption ‘Thank You’. The word, hero refers to MGR.
Dear Roop Sir & Jai Shanker Sir,
The still is from the movie "Kumari" and not from "Ashok Kumar" . This was checked. Due to oversight it was uploaded erroneously.
Regret for the error.
Thanks & Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
சிறிய திருத்தம். அது அனாவசியமான தோற்றமல்ல. (அனாவசியம் என்றால் 'தேவையில்லாத' என்று பொருள் அல்லவா?). அது அலாதியான அல்லது அபாரமான அல்லது அழகான அல்லது அலட்சியமான அல்லது அற்புதமான என்று இருக்கலாம். நீங்கள் போட வேண்டியது 'அனாசியமான' என்று இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன்.
Attachment 2227
A still from the movie "Ashok Kumar"
http://www.hindu.com/cp/2008/01/25/stories/2008012550401600.htm
http://en.wikipedia.org/wiki/Ashok_Kumar_(film)
http://www.indian-heritage.org/flmmu...angal_mkt.html
http://www.songswale.com/14-bhoomiyi...-1941-mp3.html
http://www.saigan.com/heritage/flmmu...umar_1941.html
அசோக் குமார் படத்தின் பாடல்கள் மற்றும் பதிவுகள் வழங்கிய திரு பிரதீப் அவர்களுக்கு நன்றி
http://i45.tinypic.com/eq13bk.jpg
அற்புதமான பதிவு பிரதீப் சார்
பொன்மனச்செம்மல் நடித்த 9வது திரைப்படமாகிய "தமிழ் அறியும் பெருமாள்" பற்றிய ஒரு தொகுப்பு :
படம் வெளியான தேதி : 30-04-1942
தயாரிப்பு : உமா பிக்சர்ஸ்
மக்கள் திலகத்தின் கதா பாத்திரம் : ராஜா குமாரன்
நாயக - நாயகியர் : வி. ஏ. செல்லப்பா - எம். ஆர் சந்தனலக்ஷ்மி
இதர நடிக நடிகையர் : டி.எஸ். துரைராஜ் - சி. டி ராஜகாந்தம்
கதை வசனம் : இளங்கோவன்
இயக்குனர் : டி. ஆர். ரகுநாத்
படத்தில் இடம் பெற்ற மொத்த பாடல்கள் : 22
இப்படத்தின் பாடல்கள் தொடர்கிறது.
:
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் நடித்த 9வது திரைப்படமாகிய "தமிழ் அறியும் பெருமாள்" படத்தின் கதைச்சுருக்கம்
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடலிபுத்திரத்திற்கு அரசனான பத்ரகிரியின் குமாரன் சந்தனன் கல்வியறிவில்லாதவனாக இருக்கவே, தந்தையால் அவன் நாட்டை விட்டு துரத்தப்படுகிறான். துரத்தப்பட்ட ராஜகுமாரனோ பல கஷ்டங்களை அனுபவித்து முடிவில் அழகாபுரியை அடைந்து அவ்வூர் வீதிகளை சுற்றி வருகையில், உப்பரிகையில் தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த ராஜ குமாரி ஏலங்குழலியை அவன் கண்டு தயங்க, அவளும் அவனைகண்டு மயங்குகிறாள் ராஜகுமாரி உடனே தன்னை அன்றிரவு அவ்வூர் சாவடியில் வந்திருந்து சந்திக்குமாறு ஓலை ஒன்றை எழுதி அவனிடம் வீச, ராஜகுமாரன் அதை எடுத்துக்கொண்டு நகர்கிறான். பின்னர் ராஜகுமாரன் ஒரு குஷ்டரோகியிடம் அந்த ஓலையை காட்டி அதில் எழுதியிருப்பதை படித்துக் காட்டுமாறு
கேட்க, அவனோ வஞ்சகத்துடன் "ராஜன் மகள் அவனைக் கொன்று போட கருதியிருப்பதாக" எழுதி உள்ளாள் என்று கூறவே ராஜகுமாரனாகிய சந்தன குமாரன் பயந்து ஓடி விடுகிறான். பிறகு ராஜகுமாரி குறித்த நேரத்தில், அந்த குஷ்ட ரோகி ராஜகுமாரனைப் போல் நடிக்க, அவனைச் சந்திக்க வந்த ஏலங்குழலி உண்மை தெரிந்து உயிரை விடுகிறாள். இந்த விபரத்தை எப்படியோ யூகித்துணர்ந்த ராஜகுமாரன் அதே சாவடிக்கு வந்து தானும் ஜீவனை விடுகிறான். அகாலம்ருத்யுவின் காரணமான இருவரும் ஆவேசமாகின்றனர்.
சில தினங்களுக்கு பிறகு ஔவையார் அந்த சாவடியில் தங்க அந்த இரு ஆவேசங்களும் அவரை மிரட்ட, ஔவையார் அவற்றிற்கு உண்மையைக் கூறி, மறு பிறவியில் தம்பதிகள் ஆகும் பாக்கியம் கிட்டும் என்று கூறி செல்கிறார்.
ஆக, ஏலங்குழலி சோழநாட்டரசன் கரிகாலனின் அபிமான தாசியாகிய மரகத வடிவின் மகளாக பிறக்கிறாள். செண்பக வடிவு என்ற பெயரும் அவளுக்கு இடப்படுகிறது. சந்தன குமாரனோ மரகத வடிவின் தோட்டக்காரன் முருகன் தம்பி மகனாகப் பிறக்கிறான். இவனுக்கு முனியன் என்ற பெயரிடப்படுகிறது.
செண்பகவடிவும், முனியனும் இணைபிரியா நண்பர்களாயிருப்பதைக் கண்ட மரகதவடிவு, கோபங்கொண்டு தோட்டக்கார முருகனை குடும்பத்துடன் துரத்தி விடுகிறான். ஆகவே, முனியன் செண்பகவடிவு தொடர்பு இத்துடன் முற்றுப்புள்ளியடைகிறது.
செண்பகவடிவோ கல்வியில் மகாபாண்டித்திய முடையவளாகிறாள். ஒரு தினம் சோழ சமஸ்தானத்தில்
செண்பகவடிவின் வித்வத்திறமை சோதிக்கப்பட்டு அந்த சோதனையில் வெற்றி பெருவதுடனன்றி, அரசனால் தமிழறியும் பெருமாள் என்ற பட்டத்தை பெறுகிறாள். மேலும், தன்னை வாதத்தில் ஜெயிக்கிறவன் எவனோ அவனே தனக்கு கணவனாவான்
எனவும், வாதத்தில் தோற்பவர்களை தன் இஷ்டப்படி தண்டிக்க தனக்கு உரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசனிடம் கோருகிறாள். அரசனும் இதற்கு சம்மதித்து செண்பகவடிவுக்கு இதற்கென பிரத்தியோக அரண்மனை ஒன்றை கட்டித்தருகிறான்.
பல வித்வான்களும், ராஜகுமாரர்களும், செண்பகவடிவிடம் வாதத்தில் தோற்று அவமானம் அடைகிறார்கள்
வாலிப வயதை அடைந்த முனியனோ விறகு வெட்டி ஜீவனம் செய்கிறான்
ஒரு தினம் வித்வச்செருக்கு கொண்ட தமிழறியும் பெருமாள் (செண்பகவடிவு) தன் தோழியர்களுடன் கோயிலுக்கு போக, வழியில் விறகு வெட்ட வந்த முனியனை கண்டு வெறுத்து, அவனைக் காரி உமிழ்கிறாள். முனியனோ ஆத்திரங்கொண்டு அவளை எப்படியாவது கல்யாணம் செய்வதாக சபதம் செய்கிறான். அவளால் அவமானப் பட்டவர்களும், அவளைக்கண்டு பொறாமை பட்டவர்களும் ஒன்று சேர்ந்து ஆயிரம் பொன்னை முனியனுக்கு கொடுத்து, அவனை தமிழறிவாளிடம் அனுப்புகின்றனர். கல்வியறிவு இல்லாத முனியனும் அவளால் அவமானப் படுத்தப்பட்டு துரத்தப் படுகிறான். அது முதல் முனியன் கல்வி கற்க முயற்சிக்கிறான் ஆனால், பூர்வ ஜென்ம வினையால் அந்த முயற்சியில் தோல்வி அடைகிறான். அதன் மீது ஒரு புலவரின் ஆலோசனைப்படி தன் காரியத்தை சாதிக்க வேண்டி, சங்கப் புலவர்களின் தலைவரான நக்கீர தேவரை சந்தித்து தனது ஆவலைப் பூர்த்தி செய்யுமாறு அவரிடம் கெஞ்ச, அவரும் முனியனுடன் புறப்பட்டு உறையூரில் உள்ள தமிழறிவாள் அரண்மனையை அடைகின்றனர். முனியனை வாயிலில் நிற்க வைத்து விட்டு நக்கீரர் விறகு தலையன் வேடத்தில் உள்ளே சென்று தமிழறியும் பெருமாளை வாதத்தில் வெல்கிறார் இவ்விதம் தோல்வியுற்ற தமிழறிவாள் மானம் தாங்காது கண்ணாடியால் தன்னைக் குத்திக் கொண்டு பிராணனை மாய்த்துக் கொள்கிறாள்.
விசித்திரமான முடிவினை வெள்ளித்திரையில் காணலாம்.
சுபம்.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
"தமிழ் அறியும் பெருமாள்" படத்தில் இடம் பெற்ற மொத்த 22 பாடல்கள் விவரம் : ஆரம்ப ஒன்றிரண்டு வரிகள் மட்டும்)
1. இறை வணக்கம் பாடல் : ஆண்டவன் திருவருளாலே - யல்லோ ஆவதெல்லாம் பூமி மேலே
2. தாலாட்டு பாடல் : ஆராரோ - ஆரிராரோ - சீராரும் மாதவ ச்ருங்கார மேனி
3. ஜோடிப்பாடல் : கண்ணே அழகாக நீ ஊஞ்சல் ஆடு மிகும் அன்பு கொண்டென்னோடு
4. தனித்த ஆண் பாடல் : வேதனை ஏன் விடுவாய் மனமே (பல்லவி)
ஒதுபல்கோடு உயிர் வாழ் உலகில் (அனு பல்லவி)
படர்ந்த வாசியும் அடர்ந்த கான் மரம் (சரணம்)
5. தனித்த பெண் பாடல் : கமலாதனி - கலாதருணி (பல்லவி)
அமுதேகனி - அருள் வாகினி (அனு பல்லவி)
ஆகம புராணி - ஆதாரமே நீ (சரணம்)
6. தனித்த பெண் பாடல் : தாசி மகள் தாசியல்லவோ (பல்லவி)
காசினி மீதினில் மீன் குஞ்சுக்கு நீச்சு (அனு பல்லவி)
ததந்தவர்கெல்லாம் நாம் தாரம் (சரணம்)
7. தனித்த ஆண் பாடல் : இந்திரன் கெட்டதும் பெண்ணாலே - வாலி
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
8. தனித்த பெண் பாடல் : பூமியில் புகழோ புண்ணியமோ
புருஷனைக் கொண்டுழல் பூவையர்க்கே
9. தனித்த ஆண் பாடல் : சிங்காரி ஒய்யாரி - தலை சீவி சினுக்கெடுத்து
10. ஜோடிப்பாடல் : கிழவியான பிறகு உனக்கும் பழைய நினைப்பு மாறலே
11. தனித்த ஆண் பாடல் : எங்கே மனம் வீசுது - வேறெங்கே (பல்லவி)
அங்கே இங்கே என்றலைந்தோடி (அனு பல்லவி)
12. இரு ஆண் பாடல் : அட முனியா அல்லாரே - நீ கும்பிட்டுக்கடா
போய்வரே எண்ணுமுஞ் சொல்லிக்கடா
13. பெண்கள் கூட்டம் பால் குடம் பாடல் : பாலாழி ஏலேலோ ஆலமரம் - ஐலசா - பாம்பு மேலே ஐலசா
14. தனித்த ஆண் பாடல் : கல்வியைப் போலொரு செல்வம் உளதோ (பல்லவி)
வெள்ளத்தாலும் கனல் விழினும் குலையா (அனு பல்லவி)
கலைஞனமே இல்லார் கானில் வாழ் மரம்
15. தனித்த ஆண் பாடல் : சடாதாரா ஜீவா தார - தமியேன் யெனையாளாய் சிவா குருபரா
16. தனித்த ஆண் பாடல் : சேதி கேளுமையா - சாமியே சேதி கேளுமையா
காதைக்கொடுத்து நாஞ் சொல்றதை யோகி
17. கார்த்திகை தீப பாடல் : எங்கும் நிறைந்த ஜோதிதன் - இயல்பெரு உலகம்
18. தனித்த ஆண் பாடல் : ஈச்சுத்தேரேரி நடுக்காட்டில் வேடுவச்சி - பச்சைக் கொடியாட
19. தனித்த பெண் பாடல் : தனையறிந்ததின் தன்மையறியாமல் (பல்லவி)
பொன்னை நிகர்த்தவள் பூங்குயில்போலே (அனு பல்லவி)
முத்தணி யும்மலர் கொத்தும் களபமும் (சரணம்)
20. தனித்த ஆண் பாடல் : இன்பம் தருவது - நீ உணர்வாய் (பல்லவி)
கந்தம் சுவையிசை காட்சி உற்றறிவும்
காதல் இருவரின் கருத்தொன்றாகும் (சரணம்)
21. ஜோடிப்பாடல் : அவ பொஞ்சாதி நாம் புருசெ ஆவோம்
ஆயி புள்ளேளகுட்டி பெத்துக்கிட்டு வாழ்வோம்
22 . தனித்த ஆண் பாடல் : (விருத்தம்) பொன்மகளைப் பொருது நின்றால்
(பாடல்) - அருளே புரி கலைவாணி - அந்த ரக்ஷ்சகி வீனகானி
================================================== ================================================== =========
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ. ஆர்.
எங்கள் இறைவன்
http://www.thehindu.com/arts/cinema/article1998955.ece
Thamizh Ariyum Perumal 1942