விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு..திரு. ரவி..திரு. குமார்..தேனீ தாசன்..விழாவுக்கு திருவண்ணமலையில் இருந்து வந்திருந்த எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா அவர்கள் இவர்களுடன் திரு பம்மல் சாமிநாதன்
http://i45.tinypic.com/17s5lh.jpg
Printable View
விழா தொடங்குவதற்கு சில மணித்துளிகளுக்கு முன்பு..திரு. ரவி..திரு. குமார்..தேனீ தாசன்..விழாவுக்கு திருவண்ணமலையில் இருந்து வந்திருந்த எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா அவர்கள் இவர்களுடன் திரு பம்மல் சாமிநாதன்
http://i45.tinypic.com/17s5lh.jpg
திரு. ஜெய்ஷங்கர் அவர் மகன் வள்ளிநாயகம்.இந்த தலைமுறையில் நம் தலைவருக்கு ரசிகர் இருப்பது பெருமைதானே.இதுவும் சாதனையே..மற்றும் திரு.ஸ்டில்ஸ் ஞானம்
http://i50.tinypic.com/246uwk6.jpg
இன்றைய மாலை மலர் செய்தி
தமிழக சட்ட சபையில் தீர்மானம் - சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எம்ஜியார் பெயர்.
"சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டியது போல்; உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்டியது போல், மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்னும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இந்தத் தீர்மானத்தை இந்த மாமன்றம் ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொண்டு அமைகிறேன்.
மக்கள் திலகத்தின் பெயரையும் - புகழையும் தொடர்ந்து காப்பாற்றிட தமிழக முதல்வருக்கு
மக்கள் திலகத்தின் ரசிகர்களின் தீர்மானம் ;
மக்கள் திலகம் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தை முதலில் செம்மை படுத்தி , பசுமையான தோட்டமாக மாற்றி, மைய மண்டபம் அமைத்து மக்கள் திலகத்தின் படங்கள் - பாடல்கள் ஒளி பரப்பி கொண்டு தினமும் நல்ல முறையில் பராமரித்து கொண்டு வரவேண்டும் .
மக்கள் திலகத்தின் படங்களின் நெகடிவ் - சரிவர பராமரிக்க பட வில்லை - பல படங்களின் நெகடிவ் நிலை என்ன என்பதும் தெரியவில்லை . முழு மனதுடன் சம்பந்தப்பட்டவர்கள் நெகடிவ் - ஆவணங்களை தேடி கண்டு பிடித்து பாதுகாக்க வேண்டும் .
அண்ணா திமுக நிறுவனர் -
மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் மக்களின் மனங்களிலும், இல்லங்களிலும் தெய்வமாக வாழ்பவரும், மக்களின் மகத்தான சக்தி பெற்றவரும்; வள்ளல் என அனைவராலும் போற்றப்பட்டவரும்; தனக்கென வாழாமல் தமிழக மக்களுக்காக வாழ்ந்தவரும்; அன்புக்கு அடிமையாய்; ஆணவத்திற்கு அடிபணியாதவராய் விளங்கியவருமான மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பாரத் ரத்னா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படத்தையும் - பெயரையும் எல்லா அரசாங்க விழாக்களிலும் - கட்சி விளம்பரத்திலும் கண்டிப்பாக இடம பெற உத்தரவிடவேண்டும் .
எந்த காரணத்தை முன்னிட்டும் இனி ஸ்டாம்ப் அளவில் மக்கள் திலகம் படம் வரக்கூடாது .
மக்கள் திலகத்தின் படங்களில் இடம் பெற்ற பல வசனங்கள் - காட்சிகள் அடிக்கடி ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற வேண்டும் .
மக்கள் திலகம் எம்ஜியார் பெயரில் தினசரி காலை இதழ் துவங்க வேண்டும் .
''பொன்மனச்செம்மல் mgr '' - என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி நிறுவப்படவேண்டும் .
சமூகசேவைக்கும் - ஏழைகளுக்கு உதவும் கரங்களாகவும் - இலவச மருத்துவ சிகிச்சைக்கும் , ஏழைகளின் கல்வி உதவிகளுக்கும் ஈடுபடும் மக்கள் திலகம் எம்ஜியார் மன்றங்களை அரவணைத்து ஆதரவு தரவேண்டும்
மேற்கண்ட தீர்மானங்களை உடனடியாக செயல் படுத்தி மக்கள் திலகம் அவர்களின் ரசிகர்களின்
எண்ணங்களுக்கு உயிர் கொடுப்போம் என்று தீர்மானம் அங்கிருந்து வந்தால் .........
அந்த இனிய திரு நாள் - மக்கள் திலகம் அவர்களுக்கு நீங்கள் செய்யும் நூற்றாண்டு விழா சமர்ப்பணம் .
நம்புவோமாக .......
விழாவிற்கு கர்நாடக மாநிலம் ஷிமொகாவில் இருந்து வந்திருந்த திரு. சம்பத் அவர்களின் புதல்வரும், தீவிர எம்ஜிஆர் ரசிகருமான திரு. சிவக்குமார், பெங்களூர் திரு ரவி சென்னை திரு. லோகநாதன் மற்றும் திரு. நாகராஜ்
http://i47.tinypic.com/20958ba.jpg
இந்த படத்தை எனக்கு காட்டியவர்...ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெங்களூரில் வசிக்கும் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான திரு வில்சன் டான்..திரு. டான் அவர்கள் தலைவரின் புகழை உலகமெங்கும் பரப்ப வேண்டும் என்று முனைப்புடன் பேசுகிறார்.1960ம் ஆண்டிலிருந்தே தலைவரின் படங்களை பார்த்தும்..ஒரு தீவிர ரசிகராக ரசித்தும் இருக்கிறார். இந்த படம் எங்க வீட்டு பிள்ளையின் போது எடுக்கப்பட்ட படம். இன்னும் .நிறைய புகைப்படங்களையும், நெகடிவ்களையும் தன்னுடன் வைத்துள்ளார் ..தலைவரை பல முறை பார்த்து புகைப்படமும் எடுத்திருக்கிறார்..இவர் கிடைத்தது நமக்கு பெரிய சொத்து...தலைவர் புகழை உலகம் முழுவதும் இன்னும் பரப்ப இவர் ஊக்கம் நமக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன்..இதிலிருந்து, நம் தலைவர், மாநிலம் மட்டுமல்ல கடல் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து வாழும் இறைவன் என்பது புலனாகிறது.
http://i46.tinypic.com/2f06dtg.jpg
மதுரை நகர தகவல்கள் .
தற்போது திருப்பரங்குன்றம் - லக்ஷ்மி அரங்கில் மக்கள் திலகத்தின் குலேபகாவலி படம் நடைபெற்று வருகிறது .
ரிக்ஷாக்காரன் படம் விரைவில் மதுரை - சென்ட்ரல் அரங்கில் வரவுள்ளதாக தகவல் .
மதுரை - மீனாக்ஷி அரங்கம் புது பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு அடுத்த மாதம் உலகம் சுற்றும் வாலிபன் வருவதாக தகவல்
இனிய நண்பர் திரு கலியபெருமாள் சார்
பெங்களூரில் நடைப் பெற்ற மக்கள் திலகம் மலர் மாலை -1 வெளியீட்டு விழா படங்கள் பதிவிட்டமைக்கு நன்றி .நீங்கள் குறிப்பிடட்ட திரு டான் அவர்கள் மக்கள் திலகத்தின் தீவிர அபிமானி . அவரிடம் பல மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் மற்றும் நெகடிவ் உள்ளது என்று தெரிவித்தார் .
உலகளவில் மக்கள் திலகத்தின் புகழையும் அவரது நடிப்பின் ஆற்றல் - சமுதாய சீர் திருத்த பணிகள் - புதுமையான சண்டை காட்சிகள் - தனி மனித காந்த சக்தி -ஹாலிவுட் மற்றும் பல நாடுகளில் உள்ள நடிகர்களின் நடிப்பை விட மேலான இயல்பான நடிப்பின் வேந்தரான மக்கள் திலகம் ''style-soft-image-short and sweet acting'' என்ற concept மூலம் விரைவில் பல்வேறு நாடுகளில் உள்ள திரைப்பட அமைப்புகளுடன் நேரில் சந்தித்து புதிய முயற்சியாக
உலகளவில் மக்கள் திலகத்தின் புகழை எடுத்து செல்லுவதற்கு பாடு படும் திரு டான் அவர்களுக்கு நன்றியும் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக அவருக்கு எல்லா உதவிகளும் தந்து அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம் .
விழாவில் திருப்பூர் ரவி அவர்கள், தலைவரின் பெருமைகள் மற்றும் சாதனைகளை பற்றி உரையாற்றினார்..விழா மேடையில் திரு. கலீல் பாஷா, சிமோகா திரு. சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ, திரு. முனியப்பா, திரு. எம்ஜிஆர் மணி, திரு. பம்மல் சாமிநாதன், திரு. குமார்.
http://i50.tinypic.com/117xxyg.jpg
மக்கள் திலகம் திரியின் சார்பாகவும் , மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாகவும் ஆவணத்திலகம் திரு பம்மலார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம் .
மக்கள் திலகம் மலர் மாலை -1 என்ற அருமையான ,உயர்தரமான மக்கள் திலகத்தின் 134 ஆல்பங்கள் கொண்ட ஒரு விலைமதிப்பில்லாத பொக்கிஷத்தை நமக்கு இரவு பகல் பாராது உழைத்து கடின உழைப்பில் உருவான இந்த பணிக்கு நமது நன்றி .
புத்தகம் வாங்கிய நண்பர்கள் அனைவரும் நேரிலும் , அலைபேசியிலும் தங்களுடைய மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர் .
மக்கள் திலகம் மலர் மாலை - மதிப்புரை
திரு பம்மலார் சுவாமிநாதன் அவர்கள் முதல் முறையாக மக்கள் திலகத்துக்கு வெளியிட்ட பிரமாண்டமான நூல் .
இதுவரை மக்கள் திலகத்துக்கு பலர் புத்தகங்கள் வெளியிட்டு உள்ளனர் .
திரு பம்மலாரின் அயராத உழைப்பில் இந்த புத்தகம் சிறப்பாக வந்துள்ளது .
சிறப்பு அம்சங்கள்
a 4 அளவில் வந்த முதல் டிஜிட்டல் மலர் .
மக்கள் திலகம் நடித்த 134 படங்களின் சோலோ ஸ்டில்ஸ் மட்டும் இடம் பெற்றுள்ளது .
விளம்பரங்கள் இன்றி எல்லா பக்கமும் படங்களுடன் வந்த முதல் மலர் .[ உலகளவில் சினிமா வரலாற்றில் ஒரு நடிகரின் முழு பட ஆல்பம் ]
காவிய நாயகனுக்கு பம்மலார் சூட்டிய தலையங்கம் - வைர வரிகள் .
மக்கள் திலகம் நடித்த 134 படங்கள் - பட்டியல் அருமை .
இதுவரை காணாத மக்கள் திலகத்தின் அரிய் நிழற் படங்கள்
மக்கள் திலகம் அவர்கள் உலக பட வரலாற்றில் சாதனை
வீரம்
விவேகம்
ஆவேசம்
ஆனந்தம்
சாந்தம்
புன்னகை
வியப்பு
என்ற பலதரப்பட்ட நடிப்பாற்றல் கொண்ட நடிகப்பேரசரின்
விதவிதமான தோற்றங்கள் காண்போரின் நெஞ்சை அள்ளுகிறது .
என்ன ஒரு மயக்கும் வசீகரமான மக்கள் திலகத்தின்
அட்டகாசமான படங்கள் ..
மொத்தத்தில் இந்த புத்தகம் காண்போரின் உள்ளங்களில் மக்கள் திலகம் நேரிலேயே தோன்றி அவர்களுடன் பேசுவது போல் உள்ளது .
எல்லா துறைகளிலும் முதன்மை இடத்தை பிடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் நம் மக்கள் திலகம் .
திரைப்படத்துறை விட்டு 36 ஆண்டுகள் மற்றும் விண்ணுலகம் சென்று 25 ஆண்டுகள் ஆனபின்னும்
அவரது புகழுக்கு புகழ் மாலை அணிவித்து அழகு பார்த்த
திரு பம்மலாரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்ட வார்த்தையில்லை .
அவரது அடுத்த படைப்பான மக்கள் திலகத்தின் பிரமாண்டமான மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் என்ற புத்தகம் விரைவில் வந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் .
தனது இனிமையான குரல் வளத்தால் தலைவரின் பாடலைப்பாடி அனைவரையும் ஈர்த்த அருமை நண்பர் ரோகினி குமார்
http://i48.tinypic.com/2up3iu1.jpg
தனது துடிப்பான பேச்சால் தலைவரின் புகழை உச்சத்து கொண்டு சென்று அவையினரின் பாராட்டுதலை பெற்ற பேராசிரியர் திரு. செல்வகுமார்..இவரது பேச்சில் பொறி பறந்தது..எம்ஜிஆருக்கு புகழ் சேர்த்து எதிரிகளின் கணைகளை தவிடு பொடியாக்கிய இவரது பேச்சுக்கு கிடைத்த கைதட்டல் அடங்க வெகு நேரமானது..இவரது பேச்சைக்கேட்டவர்கள் ராமனுக்கு கிடைத்த அனுமன் போல ராமச்சந்திரனுக்கு கிடைத்த செல்வகுமார் என்று பாராட்டினார்கள். குறுகிய நேரத்தில் விரைவாகவும், வீரமாகவும், துடிப்பாகவும் பேச முடியும் என்று நிரூபித்தவர்.
http://i49.tinypic.com/2s0eogk.jpg
விழாவிற்கு தலைமையேற்க வந்திருந்த முன்னாள் எம்.எல்.ஏ. திரு. முனியப்பா அவர்களுக்கு சிறப்பு செய்யும் திரு. வினோத் அவர்கள்.
http://i45.tinypic.com/w7h3it.jpg
சிமோகா திரு. சம்பத் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது
http://i49.tinypic.com/2yxn88g.jpg
நமது தெய்வத்தின் தீவிர பக்தரான எம்.ஜி.ஆர் மணி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படுகிறது
http://i49.tinypic.com/2dbmr08.jpg
திரு. பம்மல் சாமிநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது
http://i46.tinypic.com/v8ei4z.jpg
திரு. ஸ்டில் ஞானம் அவர்களுக்கு மரியாதை செய்யும் திரு எம்ஜிஆர் ரவி
http://i45.tinypic.com/28hh7hg.jpg
திரு. பம்மல் அவர்களுக்கு சிறப்பு செய்கிறார் எம்ஜிஆர் பித்தன் திரு. கலீல் பாஷா
http://i49.tinypic.com/s2sk06.jpg
நமது தெய்வத்தின் புத்தகத்தை வெளியிடும் தீவிர பக்தரான முன்னாள் எம்.எல்.ஏ. திரு. முனியப்பா அவர்கள்.
http://i48.tinypic.com/30hov2t.jpg
அனைவரின் கைகளிலும் அலங்காரமாகியா ஆண்டவன்
http://i50.tinypic.com/t5g1dw.jpg
Thank you Kaliyaperumal sir for uploading the function images.
DAILY 2 SHOWS AT KOVAI DELITE FOR LAST 10 DAYS MAKKAL THILAGATHIN PUTHUMAIPITHAN
http://i48.tinypic.com/2qlaiaq.jpg
thank u mr.kaliaperumal for uploading the images taken during makkal thilagam book release function held at bangalore on sunday.
regards,
S RAVICHANDRAN
இனிய நண்பர் கலியபெருமாள் சார்
பெங்களூரில் நடைப்பெற்ற மக்கள் திலகம் மலர் மாலை - வெளியீட்டு விழா படங்கள் - பதிவுக்கு நன்றி .
புதுமைப்பித்தன் கோவை நகரில் 10வது நாளாக நடைபெறுகிறது - தகவலுக்கு நன்றி ரவி சார் .
சென்னை நகரில் பல்லாண்டு வாழ்க - நேற்று இன்று நாளை
மதுரை மாவட்டத்தில் - குலேபகாவலி
கோவை மாவட்டத்தில் - புதுமைப்பித்தன்
திருச்சி மாவட்டத்தில் - நல்ல நேரம்
நெல்லை மாவட்டத்தில் - ஒரு தாய் மக்கள்
சேலம் மாவட்டத்தில் - குமரிக்கோட்டம்
என்று மக்கள் திலகத்தின் படங்கள் தமிழகமெங்கும் இந்த வாரம் திரை அரங்குகளில் ஓடிக்கொண்டுவருவது ஒரு சாதனை .
Udhayam productions Pallandu Vazhga re-released in Mahalakshmi theater this week, and Sathya a MGR devotee has given me the images and videos. And I have uploaded in our MGR blog. Below is the link.
http://www.mgrroop.blogspot.in/2013/...du-vazhga.html
மெல்லிசை மன்னரில் ஒருவரான திரு ராமமூர்த்தி அவர்கள் இன்று காலமான செய்தி அறிந்து வருந்துகிறோம்
இவரது இசையில் பல அருமையான பாடல்கள் மறக்க முடியுமா .இசைத்துறைக்கு மிகப்பெரிய பேரிழப்பு .
http://youtu.be/rrxpK-yWhk8மெல்லிசை மன்னர்களின் இசையில் பல புகழ் பெற்ற பாடல்கள் இருந்தாலும் நம் எல்லோர் மனதையும் இந்த பாடல் நெருடும் என்பதில் சந்தேகமில்லை .
Its a timely honouring of both the legends MSV-TKR by the CM ! MGR's best ones from MSV-TKR in my opinion, Padagotti, 1000il 1ruvan . There are many more. For Sivaji Sir, Karnan .