http://i62.tinypic.com/ztxjdu.jpg
Printable View
http://i57.tinypic.com/iqm26q.jpg
MSG FROM PROF. SELVAKUMAR SIR
http://i59.tinypic.com/jza543.jpg
THANK U MR.VINOD SIR
ONE OF MY FAVOURITE SCENE IN NALLA NERAM AND SONG http://youtu.be/55SMap8Mtmghttp://youtu.be/hwkEVNZZ934
http://youtu.be/hwkEVNZZ934
Aayirathil oruvan - release date information, advertisement - so sweet news for all makkalthilagam fans, devotees, followers... ALWAYS SUCCESS...
மறக்க முடியாத மார்ச் -1977
5.3.1977 அன்று மக்கள் திலகத்தின் நவரத்தினம் படம் வெளியானது .
மக்கள் திலகத்தின் அரசியல் தொடர் வெற்றிகளை கண்டு அன்றைய காங்கிரஸ் கட்சி -பிரதமர் இந்திரா காந்தி
அவர்கள் தமிழ் நாட்டில் அதிமுக கட்சியுடன் கூட்டணி அமைத்து தீவிர தேர்தல் பிரச்சாரம் நடந்த நேரம் .
நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் திலகமும் நடிகர் திலகமும் கூட்டணி பிரசாரத்திற்காக ஒரே மேடையில்
சென்னையில் கலந்து கொண்டார்கள் .
கூட்டணி வெற்றிக்காக மக்கள் திலகமும் அதிமுக தொண்டர்களும் , ரசிகர்களும் கடுமையாக உழைத்து
மாபெரும் வெற்றி வெற்றிக்கனியை பறித்தார்கள் .
அ.தி.மு.க, இ.காங்கிரஸ், வ.கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக் ஆகியவை ஒரு அணியாகவும், தி.மு.க, ஸ்தாபன காங்கிரஸ், இ.கம்யூனிஸ்டு ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இதில் அ.தி.மு.க - இ.காங்கிரஸ் அணி அமோக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த இடங்கள் வருமாறு:-
மொத்தம் - 40 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட)
அ.தி.மு.க. 19
இ.காங்கிரஸ் 14
வ.கம்யூனிஸ்டு 3
தி.மு.க - ஸ்தாபன காங்கிரஸ் அணி ஸ்தாபன காங்கிரஸ் 3
தி.மு.க. 1.
மக்கள் திலகம் அவர்கள் இரவு பகல் என்று பாராமல் தேர்தல் பிரச்சாரம் செய்தார் .
1977ல் துவங்கிய அரசியல் வெற்றிகள்....... இன்னும் தொடர்ந்து தொடர்வது மக்கள் திலகத்தின் புகழ்
செல்வாக்கு - ஓட்டு வங்கி நிலைத்திருப்பது உண்மையிலே உலகில் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்
புரட்சித்தலைவர் ஒருவருக்கு மட்டுமே .
1977 நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை அன்று ........ பெங்களுர் நகரில் .....
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் பலரும் அதிமுக - திமுக - நடிகர் திலகம் ரசிகர்கள் என்று பெரும் கூட்டம் அன்று மதியம் 2 மணியளவில் தினசுடர் மாலை பத்திரிகை அலுவலகம் முன் கூடி விட்டார்கள் . அருகாமையில் இருந்த ஸ்ரீ அரங்கில் நாடோடி மன்னனும் , சங்கீத் அரங்கில் நவரத்தினம் படமும் ஓடிகொண்டிருந்தது .
வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் 3 மணியளவில் ஆரம்ப கட்ட முன்னனி செய்திகள் வர துவங்கியது . வட மாநிலங்களில் இ .காங்கிரஸ் பல மாநிலங்களில் தோல்வி முகம் என்றும்
தமிழ் நாட்டில் எல்லா தொகுதிகளிலும் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை
என்று அறிவித்தவுடன் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் - நடிகர் திலகத்தின் ரசிகர்கள் ஒரே மகிழ்ச்சி ஆராவாரத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள் . அநேகமாக இரண்டு திலகங்களின் ரசிகர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய ஒரே நாள் - இந்த வெற்றி திரு நாள் என்பது குறிப்பிட தக்கது .
பிற்பகலில் முதல் நள்ளிரவு வரை ஒட்டு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர்கள் நாஞ்சில் மனோகரனை தவிர மற்ற வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றார்கள் .அன்று நள்ளிரவு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் ஊர்வலமாக வந்து நாடோடிமன்னன் ஓடிகொண்டிருந்த ஸ்ரீ அரங்கில் வந்து பட்டாசுகள் வெடித்து ஆரவாரத்துடன் கொண்டாடினார்கள் .
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் செய்தி மலரில் புரட்சி தலைவர்
97வது பிறந்த நாள் மலர் , திரு.கே. வி.குணசேகரன் அவர்களால்
வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பிரதியை அனைத்துலக பொதுநல
சங்கத்திற்கு நமது திரியில் பதிவிட இசைந்து அருளினார். அதன் செய்தி/
புகைபடங்கள் நமது நண்பர்களின் பார்வைக்காக
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/2ujlbeq.jpg
http://i62.tinypic.com/i60bkp.jpghttp://i62.tinypic.com/1dyt5d.jpg
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் செய்தி மலர் -பதிப்பாசிரியர்
கவனத்திற்கு
மக்கள் திலகம்/புரட்சி நடிகர் நடித்த "நீரும் நெருப்பும் " வெளியான நாள்.
14/10/1970 அல்ல. சரியான தேதி. 14/10/1971 -அச்சு பிழை தவறு என
நினைக்கிறேன்.
http://i62.tinypic.com/qxt0s0.jpg
நன்றி.:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் செய்தி மலர்
ஆர். லோகநாதன்.
NEVER BEFORE - NEVER AGAIN
http://youtu.be/BfJlIXfZIU0
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் செய்தி மலர் - பிப்ரவரி மாத இதழில்
வெளிவந்த புகைப்படங்கள் - நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/m76icm.jpg
.இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு வழங்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் 97 வது பிறந்த நாள் விழாவிற்கான
நுழைவு டிக்கட் , திரு.எஸ். ராஜ்குமார் அவர்கள் , நமது திரி நண்பர்களின்
பார்வைக்காக பதிவிட அளித்துள்ளார்.
ஆர். லோகநாதன்.
http://i58.tinypic.com/2h2dxr9.jpg
சினிமா பத்திரிகையாளர் சங்க தலைவர் திரு. மேஜர் தாசன் அவர்கள்
அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கத்திற்கு அளித்த மேஜை காலண்டர் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
http://i59.tinypic.com/2q0ly61.jpg
aayirathil Oruvan teaser crosses 10000 visitors
http://www.youtube.com/watch?v=87k12cq5Pv8
கண்ணன் என் காதலன் - இனிய பாடல்கள் கொண்ட இன்னிசை சித்திரம் .
http://www.youtube.com/watch?v=2Tap59Hh56A
ஒளிவிளக்கு - 100வது படம் - 100க்கு இன்றும் பெருமை சேர்க்கும் படம் .
http://www.youtube.com/watch?v=zwOSls9qlqY
காதல் வாகனம் - புதிய முயற்சியில் ரசிகர்களை கொண்டு சென்ற புதுமை படம் .
http://www.youtube.com/watch?v=kCnUdhSMaAM
அடிமைப்பெண் -ஹாலிவுட் அளவிற்கு தயாரிக்கப்பட்ட வெள்ளிவிழா காவியம் .
http://www.youtube.com/watch?v=PCHkT2qzgu4
நம்நாடு - முக்காலத்திற்கும் ஏற்ற சமூக காவியம்
http://www.youtube.com/watch?v=y8HRpeWXFqA
எம்.ஜி.ஆர். நடித்த கடைசிப்படம் கதை-அகிலன்: டைரக்ஷன்-எம்.ஜி.ஆர்
தமிழக முதல்-அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன், எம்.ஜி.ஆர். நடித்து முடித்து கடைசியாக வந்த படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.'' இது, அகிலன் எழுதிய கதை.
"பாவை விளக்கு'' படம் தயாராகி வந்தபோதே, அகிலனின் மற்றொரு கதையும் சினிமாவுக்காக தேர்வு செய்யப்பட்டது. "கலைமகள்'' இதழில் அகிலன் எழுதிய "வாழ்வு எங்கே?'' என்ற கதைதான் அது.
சினிமாவுக்காக படத்தின் பெயர் "குலமகள் ராதை'' என்று மாற்றப்பட்டது. திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றின் அதிபர், "ஸ்பைடர் பிலிம்ஸ்'' என்ற கம்பெனியைத் தொடங்கி இப்படத்தைத் தயாரித்தார்.
படத்தின் கதாநாயகன் சிவாஜிகணேசன். மற்றும் சரோஜாதேவியும், தேவிகாவும் நடித்தனர்.
திரைக்கதை - வசனத்தை ஏ.பி.நாகராஜன் எழுத, கே.சோமு டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.
காதல், கலப்பு திருமணத்தை வலியுறுத்தும் விதத்தில் கதையை அகிலன் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் கண்ணதாசன் எழுதியிருந்த "இரவுக்கு ஆயிரம் கண்கள்'', "உன்னைச்சொல்லி குற்றம் இல்லை'' போன்ற பாடல்கள் `ஹிட்' ஆயின. படம், வெற்றிகரமாக ஓடியது.
அகிலன் எழுதிய "வேங்கையின் மைந்தன்'' சரித்திர நாவல் "சாகித்ய அகாடமி'' விருது பெற்றதாகும். அதை சிவாஜிகணேசன் நாடகமாக நடத்தி வந்தார். போர்க் காட்சிக்காக, குதிரைகளை மேடையில் ஏற்றி பரபரப்பை உண்டாக்கினார்.
இந்த நாடகத்தை, சினிமாவாக தயாரிக்க எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆனால் சிவாஜிகணேசன், "இதை நானே படமாக எடுக்கிறேன்'' என்று கூறிவிட்டார்.
இதை அறிந்த எம்.ஜி.ஆர், அகிலனின் மற்றொரு சரித்திரக் கதையான "கயல்விழி''யை படமாகத் தயாரிக்க எண்ணினார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் எம்.ஜி.ஆரும், அகிலனும் அருகருகே வசித்தனர். திடீரென்று ஒருநாள், அகிலன் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். சென்றார்.
"கயல்விழி கதையை படமாக்க விரும்புகிறேன். நீங்களே வசனத்தையும் எழுதவேண்டும்'' என்று அகிலனிடம் கூறினார்.
எம்.ஜி.ஆரின் அன்பில் நெகிழ்ந்து போன அகிலன், கயல்விழியை படமாகத் தயாரிக்கும் உரிமையை எம்.ஜி.ஆருக்குத் தர சம்மதித்தார். ஆனால், "வசனத்தை நான் எழுதவில்லை. நீங்கள் விரும்பும் ஒருவரை வசனம் எழுத ஏற்பாடு செய்யலாம்'' என்று தெரிவித்தார்.
"கயல்விழி'' என்ற பெயர், சினிமாவுக்காக "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' என்று மாற்றப்பட்டது.
படத்தை, பி.ஆர்.பந்துலு டைரக்ஷனில் பிரமாண்டமாகத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய, பி.ஆர்.பந்துலு கர்நாடக மாநிலத்திற்கு சென்றார். எதிர்பாராத வகையில், அங்கு திடீரென்று காலமானார்.
பி.ஆர்.பந்துலுவின் மரணத்தால் பெரிதும் துயரம் அடைந்த எம்.ஜி.ஆர், எப்படியும் படத்தை எடுத்து முடிக்க தீர்மானித்தார். "சோளீஸ்வரா கம்பைன்ஸ்'' என்ற பேனரில் படம் தயாராகியது. திரைக்கதை - வசனத்தை ப.நீலகண்டன் எழுத, எம்.ஜி.ஆரே டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார்.
எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். மற்றும் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, எஸ்.வி.சகஸ்ரநாமம் ஆகியோரும் நடித்தனர்.
தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய காலகட்டம் அது. அரசியல் பணிகளுக்கு இடையே, படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்தினார், எம்.ஜி.ஆர். ஜெய்ப்பூர், டெல்லி, மைசூர் என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
படம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், 1977 தேர்தல் வந்தது. ஆட்சியை அ.தி.மு.க. பிடித்தது. எமë.ஜி.ஆர். முதல்-அமைச்சராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' பூர்த்தியாக, ஒரு சில காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை இரவு - பகலாக எடுத்து முடித்து விட்டு, முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.
அவர் பதவி ஏற்ற பிறகு, "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'' வெளிவந்தது.
முதல்-அமைச்சர் ஆன பிறகு எம்.ஜி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனவே, அவர் நடித்த கடைசி படம் என்ற சிறப்புக்குரியது "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்.''
http://www.youtube.com/watch?v=bMKijer7fZg
Now Nadodi Mannan running in madurai alankar theater.
http://entertainment.oneindia.in/mov...+Mannan+8.html
மக்கள் திலகத்தின் புதிய படங்கள் முதல் வெளியீட்டில் அதிக பட்சமாக 40 அரங்குகளில் தென்னகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது . மறு வெளியீடு படங்களில் மக்கள் திலகத்தின் நாடோடி மன்னன் - அடிமைப்பெண் - ஆயிரத்தில் ஒருவன் - உலகம் சுற்றும் வாலிபன்
தமிழகமெங்கும் ஒரே நேரத்தில் 20 முதல் 30 அரங்குகள் வரை திரையிடப்பட்டுள்ளது .
புதுப்பிக்கப்பட்ட ''ஆயிரத்தில் ஒருவன்'' தமிழகமெங்கும் மிகவும் அதிகமான அரங்கில் வருவதாக
தகவல்கள் கிடைத்துள்ளது .அநேகமாக தென்னகமெங்கும் 100 அரங்குகளில் வரலாம் என்று
தெரிகிறது .
சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் - அபிராமி - மகாராணி - ராஜேஸ்வரி - சங்கம் அரங்கில் வரலாம்
என்று தெரிகிறது .
விரைவில் மேலும் சில தகவல்கள் ..............
நமக்கு ஏற்படும் அவமானங்களை , மன்னித்து விடலாம்...
ஆனால் ...எளிதில் மறக்க முடியுமா..?
ஆனானப்பட்ட எம்.ஜி.ஆருக்கே ,எவ்வளவு அவமானங்கள்..துன்பங்கள்...!
இதோ..எம்.ஜி.ஆரின் அவமான அனுபவங்கள்....
"நான் ஹீரோவாகவும், டி.வி.குமுதினி ஹீரோயினாகவும் நடிச்சித் தொடங்க இருந்த ‘சாயா’ங்குற படம் விளம்பரத்தோட நின்னு போயிடுச்சி. வேற ஏதேதோ காரணத்தினால அந்தப்படத்தைத் தயாரிப்பாளருங்க கைவிட்டுட்டாங்க.
எனக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்? கடைசில பழியை எம்மேல சுமத்துனாங்க. ‘ராமச்சந்திரன்’ ராசி இல்லாதவன். அதனாலதான் படம் நின்னு போயிடுச்சின்னு சொல்லி எம்மேலேயே எனக்கே ஒரு அவநம்பிக்கை உண்டாகும்படி பண்ணி என்னைக் கோழையாக்கிட்டாங்க.
அப்போ அவுங்களால எனக்கு ஏற்பட்ட அவச்சொல், அவமானம், துன்பம் எதையுமே நான் மறக்கலே. இன்னிக்கும் அதெல்லாம் என் ஞாபகத்துல இருக்கு.
இப்போ எங்கே போச்சு அந்த ராசி? எத்தனையோ நடிகருங்க வாழ்க்கையில் எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, அவங்கள்ள யாருமே என்னைப்போல அவமானமும், துன்பமும் பட்டிருக்க மாட்டாங்க...."
ஆம்..அவமானங்களை மன்னித்து விடலாம்...
மறப்பது ...... கொஞ்சம் கஷ்டம்தான்...!!- courtesy net
One of My Favourite Song From Madurai Veeran
Yes Madurai Veeran Engal Kula Sami
http://www.youtube.com/watch?v=VdDyCcros6g
jeya tv coverage for aayirarathil oruvan special
http://www.youtube.com/watch?v=HtugQIwQJG4
My favourite Sword fight In Aayirathil Oruvan
http://www.youtube.com/watch?v=4Dy-uOdy_a0
My Favourite Scene in Aayirathil Oruvan
What a Dialogue It's suite for All Time Of Thalaivar Politics
http://www.youtube.com/watch?v=jV04hYFjQ80
Aayirathil Oruvan Re-Released in Aug' 2008 in Pandiyan theatre
http://bp0.blogger.com/_NSxK-BA3kHo/...r_devotees.jpg