http://i58.tinypic.com/avg2fa.jpg
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i58.tinypic.com/avg2fa.jpg
Courtesy: Mayil Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
மக்கள் திலகம் MGR மறைந்தபோது
..."வார்த்தை சித்தர்" வலம்புரி ஜான் அவர்கள் எழுதிய வரிகள்
பொன்மனச் செம்மலே - உனக்கு உப்பு வியாதியாமே - உன் உப்பை தின்றுதானே நாங்கள் வளர்ந்தோம்
அதையும் தாண்டி - உன் உடம்பில் உப்பா ?
மண்ணைத் தோண்டி தங்கம் எடுப்பது வழக்கம் - ஆனால்
இன்றுதான் மண்ணைத்தோண்டி எங்கள் தங்கத்தைப் புதைத்தோம்
கடற்கரையில் சூரியன்தான் அஸ்தமனமாகும் ஆனால்
இன்றுதான் "சந்திரன்" அஸ்தமனமானது
Thanks to Shri. Nallathambi Nsk, FB.
PADAKOTTI
http://i62.tinypic.com/2liiscp.jpg
IDHAYA VEENAI
http://i61.tinypic.com/2znontc.jpg
AYIRATHIL ORUVAN
http://i59.tinypic.com/xms903.jpg
ARASILANKUMARI
http://i58.tinypic.com/213q1b8.jpg
ADIMAIPEN
http://i61.tinypic.com/316w01j.jpg
PARAKKUM PAVAI
http://i58.tinypic.com/210gfwh.jpg
The natural performer
By: S.R. Vasu Rao
I still remember that night (in 1976) when U. Shrinivas, along with his father, arrived from his village in West Godavari district in Andhra Pradesh seeking to become a disciple of my father, S. Rajeswara Rao, who was a musician and composer. Observing the talent of his young son, Sathyanarayana had brought him to a maestro.
My father saw the talent in Shrinivas and told me about this seven-year-old child prodigy. My task was to introduce him to musicians in the cinema industry. I met Shrinivas the next morning at my studio in Chennai. He was hardly seven or eight years old, but very talented. His father was a clarinet artist.
My father saw himself in the talented young boy and believed Shrinivas would be a true disciple. He reminisced about how he was taken to K.L. Saigal in his childhood because he was talented and how Shrinivas had been similarly brought to him. Shrinivas and his family had come all the way from a small Andhra village solely for his music career, and they set themselves up in a small house in Kodambakkam.
At our first meeting, I asked him to play the Shankarabharanam raga. I remember being bemused at his performance, as this child knew all the kritis in Shankarabharanam. In the initial days, I recall being overwhelmed by his performance at my studio and I was hard pressed to figure out my role in moulding him. The moment I played a line, this eight-year-old boy would have begun the next on his mandolin.
One day, I took him to meet music director Ilayaraja. The maestro was reluctant to meet him as he was tied up with recordings. I requested Ilayaraja to spare two minutes and made Shrinivas play before him. The great musician was stunned and invited him home that evening to perform at a Ganapati puja.
In another instance, Shrinivas was taken to M.S. Viswanathan, the most popular music composer at the time. Delighted and surprised, Viswanathan took Shrinivas to actor Sivaji Ganesan’s house to perform at a function there. Performing came naturally to the child prodigy, as he was popular with music bands in Andhra and a preferred artist at weddings and functions.
He was also an all-time favourite of the late M.G. Ramachandran, former chief minister of Tamil Nadu. Their first meeting was at the wedding of my wife’s sister, where MGR was the chief guest. The moment MGR entered the auditorium, somebody asked Shrinivas to stop playing the mandolin so they could play songs about MGR. But MGR came on stage and asked him to continue. He sat next to Shrinivas and made him sing at least three songs. Before he left, he ensured that Shrinivas would be playing at all his public functions.
Traditional sabhas and Carnatic music itself have always been a limited world for instrument artists. I remember that several sabhas
in Chennai had denied Shrinivas an opportunity to perform and many ridiculed his instrument, the mandolin, which was also known as the mini-guitar. He continued…
http://indianexpress.com/article/opi...ral-performer/
http://i58.tinypic.com/r715qx.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/206ixk1.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
எஸ்வி சார்
தென்னகத்தின் பிற மொழிகளில் டப் செய்து வெளியடப்படும் விளம்பரங்கள் டாப் . பிற மொழிகளில் டப் செய்து வெளியடப்படும் மக்கள் திலகத்தின் திரைப்படங்களுக்கு மக்கள் திலகத்திற்கு குரல் கொடுப்பது மக்கள் திலகமேவா அல்லது வேறு யாரவது. மேல் தகவல் இருந்தால் தெரிவிக்கவும் .மேலும் உங்களுக்கு ஒரு பிரைவேட் மெசேஜ் அனுப்பி உள்ளேன்
என்றும் அன்புடன்
கிருஷ்ணா
http://i1170.photobucket.com/albums/...pse4e42e90.jpg
ஒரே நேரத்தில் – அவர்
ஒருவர்தான் –
நட்சத்திரமாகவும், நிலவாகவும் இருந்தவர்; ஏழை எளியவர் விழிகளுக்கு விருந்தவர்! ‘அவர் வாக்கு, வாக்கு வாங்கும் வாக்கு’ எனும்படி – ஆரம்ப நாள்களிலேயே – அதாவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு, இரண்டறக் கலந்திருந்த நாள்களிலேயே – எம்.ஜி.ஆருக்கு இருந்தது, எவராலும் எஞ்ஞான்றும் அசைக்க முடியாதபடி – அப்படியோர் Image; அப்படியொரு Charisma அது –
கதர்ச் சட்டைகளின் கண்களில் கரித்தது!
‘எம்.ஜி.ஆர். கேட்டாலும், கேட்கா விட்டாலும் – படத்துக்குப் படம், பாட்டுக்குப் பாட்டு – அவரைத் தூக்கு தூக்குன்னு தூக்கறவன் நீதான்யா! ஏன்யா உனக்கிந்த வேலெ?’ – என்று என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டார், எங்க ஊர்ப்பக்கத்துக் காங்கிரஸ்காரர் ஒருவர்.இந்த இடத்தில் –
ஒரு தன்னிலை விளக்கம் தர வேண்டியவனாக இருக்கிறேன் நான்!
கண்ணதாசனுக்கு நேரே – நான் காலம் தள்ள வேண்டிய கட்டாயம்.கண்ணதாசனோ – சங்ககால இலக்கியத்திலிருந்து சமீபகால இலக்கியம் வரை – தனது பாடல்களில் எதையும் விட்டு வைக்கவில்லை.பத்ரகிரியாரும்; பட்டினத்தாரும்; குணங்குடி மஸ்தானும்; குதம்பைச் சித்தரும் – கண்ணதாசன் பாட்டில் கால் பரப்பி நின்றார்கள். கண்ணதாசன் ஓர் Voracious Reader!
அவ்வை; ஆண்டாள்; வெள்ளி வீதியார்; காக்கைபாடினியார் – என்று பெண்பாற் புலவர்களின் பாடல்களெல்லாம், அவர்தன் நாக்கு அலமாரியில் அடுக்கி வைத்திருந்தார்.அவற்றை எளிமைப்படுத்தி, எல்லா மக்களிடமும் கொண்டு சேர்த்தார்!
ஒரு முத்தொள்ளாயிரப் பாடல். அரண்மனை முற்றத்தில் – நிலா வெளிச்சத்தில் மன்னன் மதுவோடும் மாதரோடும் மகிழ்ந்து கிடக்கிறான்.மது மயக்கத்தில், தம் ஆடை அவிழ்ந்ததைக் கூட அறியாத பெண்டிர் – அதை அறியுங்கால், நிலத்தில் விழுந்து கிடந்த நிலா வெளிச்சத்தை ஆடையென எடுத்து அணிய முயல்கின்றனர்.இந்தக் கருத்தை –
சிவாஜி நடித்த ஒரு படத்தில், கே.வி.மகாதேவன் இசையில் – ‘இரவுக்கும் பகலுக்கும்
இனியென்ன வேலை?’ – எனத் தொடங்கும் பாடலின் சரணத்தில் – ‘ஆடை இதுவென நிலவினை எடுக்கும்
ஆனந்த மயக்கம்’ – என்று கண்ணதாசன் எளிமைப்படுத்தி எழுதியிருப்பார்!
இப்படி - எந்தப் பாடலிலும் கண்ணதாசனின் இலக்கிய ஆளுமை மேலோங்கியிருந்ததால் – நானென்ன புதிதாக எழுதிக் கிழித்திட முடியுமென்று – எம்.ஜி.ஆரின் சமூக, அரசியல் செல்வாக்கையும் – அவரது வண்மைக் குணத்தையும் மனதில் வைத்து – படப் பாடல்களை எழுதப் புகுந்தேன். அவை, எம்.ஜி.ஆரைத் தவிர, எவர்க்கும் பொருந்தாதபடியிருந்தன!
எம்.ஜி.ஆருக்காகக் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பார்ப்போம்.‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே;
இருட்டினில் நீதி மறையட்டுமே’ ‘உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!’ ‘உன்னையறிந்தால் – நீ
உன்னையறிந்தால் – இந்த உலகத்தில் போராடலாம்’
– இப்படி எத்துணையோ பாடல்கள்; இவற்றை சிவாஜியும் பாடலாம்!
ஆனால் –
அடியேன் எழுதிய – ‘மூன்றெழுத்தில் – என்
மூச்சிருக்கும்!’ ‘நான் –
ஆணையிட்டால்!’ ‘கொடுத்ததெல்லாம்
கொடுத்தான்!’ ‘உதயசூரியன் பார்வையிலே –
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே’ ‘நான்
செத்துப் பிழைச்சவண்டா!’ ‘ஏன் என்ற கேள்வி –
இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை’
– இந்தப் பாடல்களெல்லாம், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருந்தும்! இவையெல்லாம் –
கதாநாயகனுக்கான பாட்டாகக் கருதப்படாமல், எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடலாகவே கருதப்பட்டது.இந்தப் பாடல்களால் –
எம்.ஜி.ஆர். ஏழை எளிய உள்ளங்களில் போய் உட்கார்ந்து கொண்டார்.குப்பத்துக் குடிசைகள் – ‘வாத்யார்’ என அவரை வாஞ்சையுடன் கூப்பிட்டுக் குல தெய்வமாய்க்
குலவையெழுப்பின! ‘
--- கவிஞர் வாலியின் ' எனக்குள் எம்.ஜி.ஆர் தொடரிலிருந்து
வசீகரத்தின் மறுபெயர் எங்கள் மக்கள்திலகம் ஒருவர் தான்
http://i1170.photobucket.com/albums/...ps29c50acb.jpg
வினோத் சார் தங்களின் தலைவரின் மாற்று மொழி திரைப்பட விளம்பரங்கள் சூப்பர்
வட இந்திய சுற்றுலா சென்றிருந்த காரணத்தால் திரியினில் பதிவுகளை தொடர முடிய வில்லை.
10,000 பதிவுகள் கடந்த திரு. வினோத் அவர்களுக்கும்,
3,000 பதிவுகள் கடந்த திரு. லோகநாதன் அவர்களுக்கும்,
மக்கள் திரி பாகம் 11ஐ துவக்கிய திரு. யூகேஷ் பாபு அவர்களுக்கும்,
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ஜெய் சங்கர் அவர்களும், திரு. சுஹாராம் அவர்களும் திரியினில், நம் பொன்மனச்செம்மல் பற்றிய செய்திகளை அதிகம் பதிவிட வேண்டும்.
திரு. இராமமூர்த்தி அவர்களின் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு மாவட்ட எம். ஜி. ஆர். மன்றங்களின் சார்பில் பிரசுரிக்கப்பட்ட செய்திப் பதிவுகள் மிக அருமை.
http://i58.tinypic.com/14y4wlt.png
ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண். அங்கே பிரபலமாக இருந்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.
அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பதுதான் பாலையா திரை வாழ்க்கையில் ஆச்சரியமான தொடக்கம்.
எம்.ஜி.ஆர். சுயசரிதையில் பாலையா சதி லீலாவதி எம்.ஜி.ஆருக்கு மட்டும் முதல் படம் என்று நினைத்துவிடாதீர்கள்.
அந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே.ராதா,என்.எஸ்.கிருஷ்ணன்,டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு ஆகியோருக்கும் கூட முதல் படம் ‘சதி லீலாவதி’ தான். அந்தப் படத்தில் ஒல்லியான வில்லனாக டி.எஸ்.பாலையா வருவார்.
. ஒரு படத்தில், எம்.ஜி.ஆருக்கு ஒரு நல்ல பாத்திரம் கிடைத்து கல்கத்தாவுக்குப் படப்பிடிப்புக்காகப் போன போது, பாலையா அங்கு வந்தாராம். எம்.ஜி.ஆருக்கு ஒதுக்கப்பட்ட அந்தப் பாத்திரம் பாலையாவுக்குப் போய்விட்டது. எம்.ஜி.ஆருக்குச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தது. “அந்த ரோலை அன்று பாலையா செய்த மாதிரி என்னால் நிச்சயமாகச் செய்திருக்க முடியாது” என்று ‘நான் ஏன் பிறந்தேன்?’ சுயசரிதையில் எழுதினார் எம்.ஜி.ஆர்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகி ஆக்ரோஷமாகக் கத்தியை உருவி “இன்று என்ன கிழமை?” என்பார். வெள்ளிக்கிழமை என்று அல்லக்கை சொல்லவும் “அடடா! இன்று விரதம்” என்று மீண்டும் உறையில் போட்டு விடுவார்.
“அரசே! நாங்கள் ‘பின் தொடர்ந்து’ போனோம்.ஆனால் அவர்கள் ‘முன் தொடர்ந்து’ போய்விட்டார்கள்!” என்பார்.
‘புதுமைப்பித்தன்’ (1957 ) படத்தில் எம்.ஜி.ஆர் “அதோ வருகிறது வஞ்சகத்தின் மொத்த உருவம்” என்பார். அப்போது, பாலையா குண்டாகக் கொழுகொழுவென்று நடந்து வருவார்.
வில்லனாக நடித்ததில் அவர் கலந்து செய்த நகைச்சுவை எம்.ஆர்.ராதாவின் பாணிக்கு முற்றிலும் மாறானது. நகைச்சுவை வில்லனாக அவர் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை சீக்கிரம் மறையக் கூடியது அல்ல.
புதையல் படத்தில் அவர் “ இங்கு சகலவிதமான சாமான்களும் விற்கப்படும்” என்ற வரிகளை “ இங்கு சகலவித 'மான' சாமான்களும் விற்கப்படும்” என்று பிரித்து வாசிப்பார். வசன உச்சரிப்பில் அவரது வித்தகத் தன்மை ஒவ்வொரு படத்திலும் பளிச்சிட்டது.
பாகப் பிரிவினை(1959) படத்தில் பாகப் பிரிவினை செய்யும் காட்சியில் பாலையா, வாயில் துண்டை வைத்துக்கொண்டிருக்கும் தன் தம்பி எஸ்.வி. சுப்பையாவிடம் தாய், தந்தையர் போட்டோவைக் காட்டிப் பேசும் நடிப்பில் தியேட்டரில் அழாதவர்கள் இருக்க முடியாது.
பாலைய்யாவும் நாகேஷும் காதலிக்க நேரமில்லை (1964) படத்தில் அடிக்கும் லூட்டி மறக்கவே முடியாதது. நகைச்சுவையின் அதிகபட்ச சாதனை அது. ‘திருவிளையாடலில்’ (1965) வித்துவச் செருக்கை அழகாகக் காட்டி நடித்த ‘ஒரு நாள் போதுமா?’ பாடல் காட்சியும், ‘என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?’ என்று பேசிய வசனமும் இன்றும் பிரபலம். ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ பாடலைக் கேட்டபின் அவர் வெளிப்படுத்தும் மிரட்சியும்தான். கர்வம், எகத்தாளம், மிரட்சி என்ற உணர்வுகள் பாலையாவின் நடிப்பில் விசேஷ பரிமாணங்கள்.
தில்லானா மோகனாம்பாள் (1968) அவரது நகைச்சுவை நடிப்பின் மற்றொரு சிகரம். ‘தம்பி,வயிறு சரியில்ல சோடாக்கடைக்குப் போனேன். அவன் என்னத்தையோ ஊத்திக்கொடுத்துட்டான். பித்த உடம்பா… தூக்கிடுச்சி!’
- நன்றி : தி இந்து , டி.எஸ்.பாலையாவின்
நூற்றாண்டு நினைவுப் பதிவு .
வியரசரின் வைரவரிகள்............
அக்காலத்தில் 1982ல் “இதயம் பேசுகிறது” இதழ் “கவியரசு கண்ணதாசனின் பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான இரண்டு வரிகளை எழுதி அனுப்புங்கள்” என்று வாசகர்களைக் கேட்டுக் கொண்டது. உடனே எண்ணற்ற வாசகர்கள் இந்தப் பகுதிக்கு எழுதி அனுப்பி விட்டாரகள்.
அதில் எனக்குப் பிடித்த வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!!
1. அன்னையின் கையில் ஆடுவதின்பம்
கன்னியின் கையில் சாய்வதுமின்பம்
தன்னையறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்........கவலை இல்லாத மனிதன்.
2.உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்---தலை
வணங்காமல் நீ வாழலாம் ....வேட்டைக்காரன்.
3.உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும்
உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும். ....சூரியகாந்தி.
4.ஊரெல்லாம் தூங்கையிலே
விழித்திருக்கும் என் இரவு
உலகமெல்லாம் சிரிக்கையிலே
அழுதிருக்கும் அந்த நிலவு. ....ஆயிரத்தில் ஒருவன்.
5.ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விழைவது மழலையடா......வாழ்க்கைப்படகு
6.காலம் ஒருநாள் மாறும்--நம்
கவலைகள் யாவும் தீரும். ...பாவமன்னிப்பு.
7.சந்திரனைத் தேடிச்சென்று குடியிருப்போமா
தமிழுக்குச் சேதி சொல்லி அழைத்துக் கொள்வோமா..பறக்கும்பாவை.
8. சிரித்துச் சிரித்து என்னை சிறையிலிட்டாய்--கன்னம்
சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய். ..தாய்சொல்லைத்தட்டாதே.
9. சொல்லென்றும் மொழியென்றும் பொருள்
..ஒன்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை..பாலும்பழமும்.
10.நீலவானம் போபங் கொண்டா நிலவு தேய்ந்தது..கண்ணா
நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது.....அவர்கள்
.................நிறைய வரிகள் உள்ளன. மீதி இன்னொரு நாளில்,,,,,
FEW DAYS BACK KALAIVENTHAN ANALYSIS THIS SONG
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
வாடாத மலர் போலும் விழி பார்வையில்
கை வளையோசை தருகின்ற இசை ?சாரலில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உனைக்கண்டும் இப்பூமியில்
ஈடேதும் இல்லாத கலை சேவையில்
தனி இடம் கொண்ட உனைக்கண்டும் இப்பூமியில்
ஆடாத மனமும் உண்டோ
இதழ் கொஞ்சும் கனியமுது சிந்தும் குரலில் குயில் அஞ்சும்
உனைக் காணவே
பசுந் தங்கம் உமது எழில் அங்கம்
அதனசைவில் பொங்கும் லயம் காணவே
முல்லை பூவில் ஆடும் கருவண்டாகவே
முகில் முன்னே ஆடும் வண்ண மயில் போலவே
அன்பை நாடி உந்தன் அருகில் வந்து நின்றேன்
இன்பம் என்னும் பொருளை இங்கே தந்தேன்
தன்னை மறந்து
உள்ளம் கனிந்து
இன்னாள் ஒரு பொன்னாள் எனும் மொழியுடன்
மேலாறு பாய்ந்தோடும் கலை செல்வமே
தன் திகட்டாத ஆனந்த நிலை தன்னிலே
ஆடாத மனமும் உண்டோ
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு
ஆடாத மனமும் உண்டோ
http://www.youtube.com/watch?v=ogtom7PGgoI
பி பி ஸ்ரீனிவாஸ் பிறந்த தினம் : ( செப்டம்பர் 22 )
மெல்லிசை என்றாலே , பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் எனப்படும் பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் தான் என்று கூறுமளவிற்கு தனது கானக்குரலால் காற்றில் தேனை நிரப்பியவர் !
ஜெமினி அதிபர் வாசன் அவர்களால், மிஸ்டர் சம்பத் படத்தில் பின்னணி பாடகராக அறிமுகமானவர் !
http://www.youtube.com/watch?v=cy58kizXUSY
எத்தனை செல்வங்கள் வந்தாலும்
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா அம்மா அம்மா
எனக்கது நீயாகுமா
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை துயரம் தெரிவதில்லை
தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால்
வேறொரு தெய்வமில்லை வேறொரு தெய்வமில்லை
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
பத்துமாதம் பொறுமை வளர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
வெள்ளை மனதை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்...ஆ...ஆ...
பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் மடியில் தலை வைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை
அன்பில் மலரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு அலையும்
மனதை அமைதியில் வைப்பது
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த அன்னை முகத்தை
ஏழை பார்த்ததில்லை
கண்ணே கண்ணே கண்ணே
என்று கொஞ்சிய வார்த்தை
காதில் கேட்டதில்லை காதில் கேட்டதில்லை
காதில் கேட்டதில்லை
திரைப்படம் தாயின் மடியில்
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு பாடலாசிரியர்கள் வாலி
http://www.youtube.com/watch?v=4xhZ94jOBhQ
இயக்குனர் ராமண்ணா அவர்களின் திரைப் படங்களில் , ரசிக்கத் தக்க பாடல் காட்சிகள் சிலவற்றில் உள்ள ஒற்றுமை ...1.மழை இரவு .மாட்டு வண்டியின் அடியில்...எம்.ஜி.ஆர்.-சரோஜா தேவி -- இதுவரை நீங்கள் பார்த்த பார்வை....2.மழை இரவு..காரில்..போதுமோ இந்த இடம்...ரவிச்சந்திரன்-ஜெயலலிதா -நான்--3. ரயில் பெட்டியில் -- வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு- ரவி-ஜெயலலிதா- 4. மரப் பெட்டிக்குள்- ரவி-ஜெயலலிதா-பெட்டியிலே போட்டு வைத்த பேட்டை கோழி---மூன்றெழுத்து --5.கிணற்றில் - சிவாஜி-பாரதி- சந்தனக் குடத்துக்குள்ளே பந்துகள் -தங்க சுரங்கம்...6.சர்க்கஸ் மரணக் கூண்டில் -எம்.ஜி.ஆர்-சரோஜாதேவி- கல்யாண நாள் பார்க்க -பறக்கும் பாவை..7. சிமெண்ட் குழாய்க்குள் -- வீட்டுக்கு ஒரு பிள்ளை- ஜெய்சங்கர் -உஷா நந்தினி- இன்று முதல் செல்வமிது.
http://i61.tinypic.com/2dc8gp0.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/whz5ms.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i1276.photobucket.com/albums/...ps780c883e.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i1276.photobucket.com/albums/...ps2b97772a.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i1276.photobucket.com/albums/...ps6f771e7b.png
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்