http://i61.tinypic.com/fuq888.jpg
Printable View
மலேசியாவில் நடைபெற்ற தலைவர் நினைவு நாள்
http://i61.tinypic.com/n3ovf6.jpg
திரு கமல்ராஜ் மலேசியா
மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 13 வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு சிவாஜி செந்தில் , திரு கிருஷ்ணா இருவருக்கும் இதயங்கனிந்த நன்றி .
இனிய நண்பர் திரு ராமமூர்த்தியின் மின்னல் வேக பதிவுகள் அனைத்தும் அருமை . நன்றி
அலிபாபாவும் 40 திருடர்களும் - pass word - புதிய சிந்தனை - இனிய தகவல் .
1.கோவை
2.சென்னை
3.மதுரை
இந்த ஆண்டும் மக்கள் திலகத்தின் படங்கள் மறு வெளியீட்டில் கோவை நகரம் முதலிடமும் சென்னை இரண்டாவது இடமும் மதுரை மூன்றாவது இடமும் பெற்று உள்ளது .
நண்பர்கள் முத்தய்யன் அம்மு/ராமமூர்த்தி அவர்களின் மின்னல் வேக பதிவுகள் திரியை ஜெட் வேகத்தில் கொண்டு செல்கின்றன. ஒரு சிறு வேண்டுகோள் திரு முத்தய்யன் அவர்களுக்கு . நீங்கள் வெளியிடும் ஸ்டில்ஸ்கள் அனைத்தும் அருமை. அதன் உடன் அந்த திரைபடத்தின் சக கலைஞர்கள் ,தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் அடங்கிய டைட்டில் ஸ்டில்ஸ்கள் சேர்த்து வெளியிட்டால் இன்னும் சுவை கூடும். உங்களுக்கு சற்று கூடுதல் வேலை பளு ஆக இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட்டால் புரட்சி தலைவர் படத்தில் இடம் பெற்ற சக கலைஞர்கள் பற்றி தகவல் அறிந்து கொள்ள உதவும்
மக்கள்திலகம் திரியில் பயணிக்கும் நண்பர்கள்
திரு வினோத்
திரு செல்வகுமார்
திரு இரவிச்சந்திரன்
திரு சைலேஷ் பாசு
திரு கலியபெருமாள்
திரு லோகநாதன்
திரு கலைவேந்தன்
திரு யுகேஷ் பாபு
திரு ரூப் குமார்
திரு ஜெய்ஷங்கர்
திரு முத்தையன்
திரு பிரதீப் பாலு
திரு தெனாலி ராஜன்
திரு சத்யா
திரு ராஜ்குமார்
திரு மாசானம்
திரு பாஸ்கர்
திரு சந்திரசேகர்
திரு வெங்கடரமணி
திரு C,S.குமார்
திரு சுஹாரம்
திரு கமல் ராஜ்
திரு முருகவேல்
மற்றும் பெயர் விடுபட்ட நண்பர்கள், நடிகர்திலகம் திரியின் நண்பர்கள்,பார்வையாளர்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
http://i61.tinypic.com/2pq136d.jpg
வெகு விரைவில் வேலூர் records உங்கள் பார்வைக்கு வரும் என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்
பல அடைமொழி என்று பட்டங்களுடன் இன்றைய நடிகர்கள் வலம் வந்த இந்த ஆண்டில் என்றென்றும் எவர் கிரீன் ஹீரோ எம்ஜிஆர் என்பதை நிருபித்த ஆயிரத்தில் ஒருவன் - 2014ல் சாதனை படம் .
2014 ல் ஆயிரத்தில் ஒருவன் - டிஜிடல் வெளியீடு சில சாதனை துளிகள் .
பழைய தமிழ் படம் புது பொலிவுடன் முதல் முறையாக 120 அரங்கில் வெளியான சாதனை .சென்னை மற்றும் பல நகரங்களில் மிகபெரிய திரை அரங்கில் வெளியானது .
சென்னை தேவி பாரடைஸ் ,சத்யம் ,ஆல்பட் அரங்கில் வெளியாகி சத்யம் - ஆல்பட் இரண்டுஅரங்கில் வெள்ளிவிழா ஓடியது .
http://i59.tinypic.com/nh1iq0.jpg
1961இல் வந்த படம். எம்ஜிஆர், பத்மினி, ராஜசுலோசனா, நம்பியார், தங்கவேலு, டி.ஏ. மதுரம், அசோகன், முத்துராமன். ஜி. ராமநாதன் இசை. கலைஞர் கதை வசனம். பழம் பெரும் இயக்குனர் ஏ.எஸ்.ஏ. சாமி இயக்கம். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு. வெற்றிப் படம்.
படம் வெளி வர தாமதம் ஆயிற்று என்று கேள்வி – நாடோடி மன்னனால் தாமதம் என்று சொல்வார்கள்.
ஜி. ராமநாதன் ஆச்சரியப்படுத்திவிட்டார். அவரது எல்லா படங்களிலும் கர்நாடக சங்கீதம் ஒரு அடி நாதமாக இருந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் முக்கால்வாசி குத்து, கிராமப்புற மெட்டுக்கள்.
முதலில் நான் இதற்கு முன் கேட்டிராத, என்னை கவர்ந்த பாடல்கள்.
“ஊர்வலமாக மாப்பிள்ளை பொண்ணு சேர்ந்து வருகிறார் வழியிலே” – வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. துரதிருஷ்டவசமாக பாட்டு நெட்டில் எங்கும் கிடைக்கவில்லை. வரிகளை வைத்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். பாடிய குரல்களில் டிஎம்எஸ் தவிர மற்ற குரல்கள் தெரியவில்லை. எம்ஜிஆரும் ராஜசுலோசனாவும் பார்க்க அழகாக இருந்தார்கள்.
“தூண்டிலிலே மாட்டிக்கிச்சு” – துடிப்பு நிறைந்த பாட்டு. இதுவும் நெட்டில் கிடைக்கவில்லை. ஒரு நாடகம் மாதிரி காட்சி அமைக்கப்பட்டிருந்தது – பார்க்க சுவாரசியமாக இருந்தது.
அடுத்த இரண்டும் நான் முன்னால் கேட்டு, எனக்கு பிடித்த பாட்டுக்கள்
“சின்னப் பயலே சின்னப் பயலே” மாஸ்டர்பீஸ். பட்டுக்கோட்டையின் ஸ்பெஷாலிடியே எளிமையான வார்த்தைகளில் அருமையான கருத்துகளை எழுதுவதுதான். டிஎம்எஸ் பிய்த்து உதறிவிட்டார்.
“தாரா அவர் வருவாரா” கு.மா. பாலசுப்ரமணியம் எழுதி எஸ். ஜானகி பாடியது. நல்ல பாட்டு. இதுதான் ராமநாதனின் முத்திரை உள்ள ஒரே பாடல். க்ளாசிக்கல் சங்கீதத்தின் தாக்கம் தெரிகிறது.
மிச்ச பாட்டுக்களை நான் கேட்டதில்லை.
“ஏற்றமுன்னா ஏற்றம்” பட்டுக்கோட்டை எழுதி சீர்காழியும் டிஎம்எஸ்ஸும் பாடியது. இரண்டு முறை கேட்டால் பிடித்துவிடும் என்று நினைக்கிறேன்.
இதை தவிர “தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும்” கண்ணதாசன் எழுதி சுசீலா பாடியது. “அத்தானே ஆசை அத்தானே”
இந்த படத்தின் பாட்டு கிடைக்காது அதிசயம்தான்.
சின்னப் பயலே பாட்டு சமீபத்தில் திருட்டுப் பயலே படத்தில் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
கதை எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. தளபதி நம்பியார் தான் ஒரு சாதாரண வீரன் என்று பொய் சொல்லி எம்ஜிஆரின் தங்கை பத்மினியை மணந்துகொள்கிறார். உழவர் மகனான எம்ஜிஆர் தன் பரம்பரை வாளை கொண்டுபோய்விட்ட நம்பியாரின் அப்பாவிடம் இருந்து அந்த வாளை மீட்டு வர செல்கிறார்.வழியில் ஆபத்தில் இருக்கும் இளவரசி ராஜசுலோசனாவையும் பிரமுகர் அசோகனையும் காப்பாற்றுகிறார். ராஜ சுலோ.வும் எம்ஜிஆரும் ஒருவரை ஒருவர் சைட் அடிக்க வசதியாக அசோகன் எம்ஜிஆரின் காவலில் சுலோவை விட்டுவிட்டு போகிறார். அவர்களும் பாட்டு எல்லாம் பாடிக்கொள்கிறார்கள்.
நம்பியார் ராஜாவாக ஆசைப்பட்டு பத்மினியை கழற்றிவிட்டுவிட்டு சுலோ பின்னால் ஸ்லோவாக போக ஆரம்பிக்கிறார். எம்ஜிஆர் ஒரு மல்லனை தோற்கடித்து தன் வீரத்தை நிரூபித்து நம்பியாரின் அப்பாவிடம் இருந்து தன் பரம்பரை வாளை மீட்கிறார். ஆனால் கிராமத்துக்கு போனால் பத்மினியும் நம்பியாரும் இல்லை. அவர்களை தேடிக்கொண்டு அரண்மனைக்கு வந்து நம்பியாரை கண்டு அதிர்ச்சி அடைகிறார். வீரம் இருந்தும் வாள் பயிற்சி இல்லாத எம்ஜிஆரை சுலோ முன்னால் சுலபமாக தோற்கடிக்கிறார். நடுவில் தன் தங்கை மகனை தூக்கிக்கொண்டு “சின்னப் பயலே சின்னப் பயலே” என்று புத்தி எல்லாம் சொல்கிறார். கணவன் சொல்லை தட்டாத பத்மினி நம்பியாரின் அப்பாவிடமே சேர்கிறார். எம்ஜிஆரும் நம்பியாரின் அப்பாவிடமே வாட்பயிற்சி பெறுகிறார். கடைசியில் நம்பியாரிடம் பெரிய சண்டை போட்டு, நம்பியார் திருந்தி, சுபம்!
எம்ஜிஆரும் நம்பியாரும் போடும் க்ளைமாக்ஸ் சண்டை பிரமாதம். எம்ஜிஆர் இரும்பு கையுறைகளோடு போடும் மல்யுத்தமும் அபாரம்.
கவுண்டருக்கு இந்த படம் என்ன இன்ஸ்பிரேஷனா? எம்ஜிஆரும் தங்கவேலுவும் ஒருவரை ஒருவர் “தேங்காய்ப்பூ தலையா” என்று கூப்பிட்டுக்கொல்கிறார்கள்.
எம்ஜிஆரும் சுலோவும் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்கிறார்கள். ஆனால் திரும்பி முட்டிக்கொள்ளவில்லை.
டென்ட் கோட்டையில் பார்த்த அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது –
அபூர்வமாக எனக்கு நம்பியாரின் நடிப்பு பிடித்திருந்தது. அவருடைய பாத்திரமும் one-dimensionalதான், ஆனால் நம்ப முடியாமல் இல்லை.
அசோகனை பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இதில் அவருக்கு பெரிய ஸ்கோப் இல்லை.
பாட்டுக்களுக்காகவும், சண்டைகளுக்காகவும் பார்க்கலாம்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் இளைய திலகம் பிரபு அவர்களுக்கு மக்கள் திலகம் திரியின் சார்பாக நல் வாழ்த்துக்களையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றோம் .
http://i62.tinypic.com/6f34w7.jpg
ALL CREDITS GOES TO MAKKAL THILAGAM MGR
http://i58.tinypic.com/307ng5d.jpg
GREAT ACHIVEMENTS FRIENDS
1000 VIEWERS IN JUST ONE DAY.
THANKS TO ALL
http://i60.tinypic.com/2l887s6.png
நண்பர்களுக்கு வணக்கம்,
மக்கள் திலகம் திரி பாகம் 12ஐ விரைவில் முடித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ள,
திரு.எஸ்.வி.அவர்கள்
திரு.சி.எஸ்.குமார் அவர்கள்
திரு.வி.பி.சத்யா அவர்கள்
திரு.ஜி.கிருஷ்ணா அவர்கள்
திரு.லோகநாதன் அவர்கள்
திரு.ஜெய்சங்கர் அவர்கள்
திரு.திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்கள்
திரு.ஐதராபாத் ரவி அவர்கள்
மற்றும் அனைவருக்கும் நன்றிகள். இந்த வாழ்த்து உங்களது பெருந்தன்மையைக் காட்டினாலும் உண்மையில் திரியை இவ்வளவு விரைவாக நிறைவு செய்தது நானல்ல. நம் சகோதரர்கள் எல்லாரும்தான். அனைவருக்கும் நன்றி. திரு.லோகநாதன் சார். 12ம் பாகம் விரைவில் நிறைவு பெற்றதற்கு எனது கைராசி காரணம் அல்ல. தலைவரின் ராசிதான் காரணம்.
திரியின் புதிய பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திரு.கிருஷ்ணா சார், திரு. ரவிசார் , திரு.சிவாஜி செந்தில் ஆகியோருக்கும் நன்றி.
திரு.ஜெய்சங்கர் சாரின் பதிவுகள் சுவாரஸ்யம்.
திரு.முத்தையன் அம்மு, ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ ஸ்டில்ஸ் அருமை. எனக்கு பிடித்த ஸ்டில் மேலே.
வேலூர் ரெகார்ட்ஸ் பதிவுகள் விரைவில் ஆரம்பம் என்ற திரு. ராமமூர்த்தி அவர்கள் அறிவித்திருப்பது இனிக்கும் செய்தி.
திரு.ராமமூர்த்தி அவர்கள் கூறியபடி, எங்கு சென்றாலும் தலைவர் பற்றிய செய்திகளை படமெடுத்து தரவேற்றும் திரு.ரவிச்சந்திரனுக்கு வாழ்த்துக்கள்.
திரு.செல்வகுமார் சார். உங்கள் அபூர்வ ஸ்டில்ஸ் வரிசையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
திரு.சைலேஷ் சார், ‘அப்புறம் தலைவரே’ காட்சிகள் சூப்பர்.
திரு.யுகேஷ் பாபு அவர்களின் புகைப்படங்கள் கண்களுக்கு விருந்து.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தில், ‘ராபின்சன் வீடு’ காட்சியை எழுதலாம் என்றிருக்கிறேன். அடுத்த ரவுண்டுக்கு எல்லாரும் ரெடி..... ஜூட்....
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்