http://i68.tinypic.com/e0r14n.jpg
Printable View
நடிகர் திலகத்துடன் கவுண்டமணி...
http://i66.tinypic.com/1zbh2yv.jpg
சவாலே சமாளி தொடர்ச்சி...
தந்தைக்கும் மகனுக்கும்
அபிப்பிராய பேதம் ஏற்பட்டு இருவரும் நான் சாப்பிடமாட்டேன் என்று வீட்டின் வெளி யில் திண்ணையில் வந்து எதிரும் புதிருமாக அமர்ந்து கொள்கின்றனர்.காந்திமதியும் ,விஜயகுமாரியும் சமாதானப்படுத்த அவர்களுக்காக இருவரும்
"சரி வந்து தொலைக்கிறேன் "
என்று இருவரும் வீட்டிற்குள் நுழைகின்றனர்.
இந்தக்காட்சியை பார்த்தோமானால்
நடிகர்திலகத்திடம் இருந்து எந்தவித கதாநாயகத்தன்மை(ஹீரோயிசம்)
வெளிப்படாமல் ஒரு கிராமத்து இளைஞனின் தன்மானத்தையும்
குடும்பபாசமும் ,தந்தையின் அறியாமையை எதிர்த்தாலும் அதே சமயம் அவருடைய ஸ்தானத்திற்கு மதிப்பு அளிக்கும் கண்ணியம் கொண்டவராகவும்சின்ன சின்ன ஊசிமுனை உணர்ச்சிகளைக்கூட படு இயல்பாக வெளிப்படுத்தியிருப்பார்.
சரி வந்து தொலைக்கிறேன் என்று இருவரும் வீராப்பாக குடிசைக்குள் நுழையும் சமயம்
வேகமாக வேட்டியைத் தூக்கிக்கொண்டு செல்லப்போகும்
நடிகர்திலகம் ராகவனும் அதே போல் வர,அவர் முன்னே செல்லட்டும் என்பதற்காக தந்தைக்கு தரும் மரியாதையாக சற்று பின்வாங்கி உடலை சாய்த்து ஒரு வித உடல் பம்மலில் தன் நடிப்பை இயல்பாக எப்படி அழகாக வெளிப்படுத்துகிறார்.
ராகவன்:துரை கொஞ்சம் எந்திரிங்க
நடிகர்திலகம்:ஏண்டா எந்த அளவுக்கு குடிச்சிருக்கேன்னு பார்க்கிறதுக்கா?
(ராகவன் மாலையை எடுத்து சிவாஜியின் கழுத்தில் போட்டுவிட்டு)
ராகவன்:இன்னைக்கு உங்களுக்கு பொறந்தநாள்.
நடிகர்திலகம்:ராமையா நான் பொறந்திருக்கிறது ஏன்னு யாருக்கும் தெரியாது?.ஏன் எனக்கே தெரியாது?ஆனா நீ பொறந்திருக்கிறது மட்டும் எனக்காகத்தான்.
சவாலே சமாளியைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் மனத்திரையில் இந்தக்காட்சி வந்து இடிக்கிறது.என்ன செய்ய?
பூவோடு சேர்ந்து நாறும் மணம் பெறும் என்பது போல் திறமைமிக்க கலைஞர்களாக இருந்தாலும் சிறந்த கலைஞனோடு
சேரும்போதுதானே அவர்களின்
பங்களிப்பு பளீரிடுகிறது.இங்கேதான் நிற்கிறார் வி.எஸ். ராகவன்.பூவோடு சேர்ந்த நார்.
இரண்டு படத்திலுமே அதே வேலைக்கார வேடம்.காஸ்டியூம்ஸ் கூட
அதே போலத்தான்.ஆனால் இரண்டிலும் என்ன ஒரு மாறுபாடான நடிப்பு.ஒன்றில் நடிகர்திலகம் எது செய்தாலும் விட்டுக்கொடுக்கும் கேரக்டர்.ஒன்றில் எது சொன்னாலும் எதிர்ப்பை காட்டும் கேரக்டர்.
உணர்ச்சி மிக்க காட்சிகள்.
ரசனையை உயர்த்தும் நடிப்புகள்.
எல்லாம் நடிகர்திலகத்தால் கிடைத்த அவர்களுக்கு கிடைத்த நற்பலன்கள்.புகழ்.சிறப்பு.
இந்த வரிகள் ராகவனை மட்டும் வைத்தல்ல., பெரும்பான்மையான கலைஞர்களின் அனுபவங்களையும் வைத்துதான்.
ஒன்று
தங்களுடைய பெரிய வீட்டின் அருகிலேயே இருக்கும் மாணிக்கத்தின் குடிசை தங்களுக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதுவது.
இரண்டு
மாணிக்கத்தின் பேச்சு செயல்
இரண்டும் தங்களை அவமதிப்பதாக கருதுவது.
இந்த இரண்டுக்கும் தீர்வு காண சின்னப்பண்ணை சிங்காரத்திடம் யோசனை கேட்க,அய்யாக்கண்ணு பட்ட கடனுக்காக மாணிக்கத்தை பண்ணையில் வேலை செய்ய வைத்து
முரட்டுக்காளைக்கு மூக்கணாங்கயிறு
கட்டலாம் என்று சின்னப்பண்ணை யோசனை கூற அதன்படியே அய்யாக்கண்ணுவை வலியுறுத்த.,அய்யாக்கண்ணுவும் வேறு வழி தெரியாமல் மாணிக்கத்தை பண்ணைவேலைக்கு வருமாறு கூறுகிறார்.
வேலைக்கு செல்லும் காட்சி:
முதலாளி என்ற திமிரில் நம்பியார்
'என்னடா மாணிக்கம்'
என்று ஒருமையில் கேட்பார்.பதிலுக்கு நடிகர்திலகம் 'என்னடா ராஜவேலு' என கேட்க,
பதிலடியால் திகைக்கும் நம்பியார்
கிண்டலும் மரியாதையும் கலந்து
"மகாராஜ ராஜ ராஜ ஸ்ரீமாணிக்காம் அவர்கள் தங்களுடைய வேலையை கவனிக்க செல்லுங்கள்"
என்று கூற
"ஆகட்டுங்க"
என்று உடனே அதே சுதியில் பதில்சொல்வது செம ரகளை.
பண்ணையில் மரத்தை வெட்டி சாய்ப்பார் .நம்பியார் வந்து 'ஒரு மரம் வெட்ட இவ்வளவு நேரமா?'என்று கேட்க அதற்கு நடிகர்திலகம் கொடுக்கும் ரீயாக்ஷன் அபாரம்.ஒன்றும் பேச மாட்டார்.அப்படியே நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்து பார்வையால் ஒரு வீசு வீசுவார்.என்ன ஒரு ஸ்டைலப்பா !
மரம் வெட்டும்போது
நடிகர்திலகமும் ராகவனும் தேக்கி வைத்த அன்பை மாறி மாறி பாசமழையாய் பொழிவது நல்ல நெகிழ்ச்சியான காட்சி.
சீன் பை சீன் உயிரோட்டமாய் செல்லும்.
ஊரிலிருந்து வரும் ஜெயலலிதாவை வண்டியில் கூட்டி வரும் காட்சி.
ஜெயலலிதா வண்டியில் முன்பக்கம் தள்ளி உட்காரச்சொல்லிவிட்டு
வண்டி முன்பாரம் ஜாஸ்தி என்றும்
பின்பக்கம் தள்ளி உட்காரச் சொல்லிவிட்டு பின்பாரம் ஜாஸ்தி என கூறுவதும் வேடிக்கையான சீன்.
பெட்டி சேற்றில் விழ அதற்காக நடிகர்திலகத்தை கேவலப்படுத்தும் சொற்களலால் வசைபாட பெண்னென்பதால் ஒன்றும் செய்யமுடியாமல் கோபம் தலைதூக்க கோபத்தை அந்த சாட்டைவாரை ஒடித்து வீசுவதிலே காட்டுவார்.தன்மானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்த நடிப்பு.
அடுத்த காட்சியில்...
தந்தை ராகவனுடன் கிணற்றருகில் நின்று பேசிக்கொண்டிருக்கும் சமயத்தில் தன்னுடைய துணிகளை துவைத்து போடுமாறு ஜெயா துணிகளை நடிகர்திலத்தின் முகத்தில் விட்டெறிய...
தொடரும்.
http://i1028.photobucket.com/albums/...ps2ntcdtcs.jpg
கலைத் தாயே...!
கைகூப்பிச் சொல்வோம்..
நன்றிகளுனக்குக் கோடி.
நீ அருள் தந்தாய்.. உன்னதக்
கலைஞனே மகனாய் உனக்கு
வாய்த்தானடி.
அற்புத நடிப்பைக் கொடுத்துக்
கொடுத்து, அனைவரையும்
தன் பக்கம் சாய்த்தானடி.
சத்தியக் கலைஞனுக்குச்
சாவில்லையென்றிருந்தோம்.
ஒரு ஜூலை-21 ல் ,அதில்
மட்டும் ஏய்த்தானடி.
-----------
இதோ...
உன் தெய்வ மகன் வந்தாடும்
ஓர் திரைப்பாடல் கண்டோமடி.
திரைப்பிம்பம்தானே என
எண்ணாமல், தொட்டுக்
கண்ணிலொற்றிக்
கொண்டோமடி.
ஆயிற்று.. ஒரு நூறு முறை..
இந்தப் பாடலைப் பாடிப்
பாடி.
எம் செவிகள் அலைகின்றன..
இப்பாடலையே தேடித் தேடி.
செந்நிற ஆடையில் சிரித்த
முகம் காட்டி,
வெண்ணிற ஆடையில் வந்து
எமது வேதனைகளை தூரம்
ஓட்டி,
கருப்புஞ் சிவப்புமாய் அணிந்த
உடையில் கண் நிறைந்த
எழில் காட்டி..
உன் மைந்தன் வந்தானடி.
இந்தப் பாட்டு போல்
இன்னும் பல பாடல்களில் மஞ்சுளா ஜோடி.
மன்னவன் அவனுக்கு மயக்கும் அவன் அழகுதானே
எப்போதும் ஜோடி?
காமமற்ற காதல் காட்டி,
கண் சுருக்கியும், விரித்தும்
கலைகள் காட்டி,
உதடு சுழித்து, உடலை நிமிர்த்தி,
கைகள் முன்னே நீட்டி,
பூமுகத்துப் புன்னகையால்
நம் துயர்கள் விரட்டி,
புதிது புதிதாய் கலை செய்து
எங்கள் அன்பைத் திரட்டி...
கலைத் தாயே..!
கைகூப்பிச் சொல்வோம்...
நன்றிகளுனக்குக் கோடி.
உன்னருளால் எங்கள்
சந்தோஷ பூமிக்கு...
தேவன் வந்தான்டி.
https://youtu.be/DngO2_1GL6M
Muthaiyan,
Superb Stills with Novel approach on Sivaji-Sivaji. Epitome of Handsomeness. Thanks.
ஆதவன்
கவிதை மழையாய்
பொழிந்து
ஆனந்தப்படுத்துகிறீர்கள்.
தொடருங்கள்
சிவாஜி ரசிகன் முதல் இதழ் தொடர்ச்சி
http://i1065.photobucket.com/albums/...psj1wols9s.jpg