இன்று (08/06/17)
சன் லைப் -- 7 pm-- "கீழ் வானம் சிவக்கும் "
http://i1065.photobucket.com/albums/...pswnyhdxcf.jpg
Printable View
இன்று (08/06/17)
சன் லைப் -- 7 pm-- "கீழ் வானம் சிவக்கும் "
http://i1065.photobucket.com/albums/...pswnyhdxcf.jpg
இன்று (08/06/17)
தொலைக்காட்சி சேனல்கள் தரும் நடிகர் திலகம் வெற்றித் திரைப்படங்கள்,
புதுயுகம் டிவி-- 1:30 pm " விடுதலை "
பாலிமர் டிவி --2 pm-- "ஆனந்தக் கண்ணீர்"
பொதிகை -- 8:30-- " பழனி"
தமிழகமெங்கும் வெற்றி நடை போடும் ராஜபார்ட் ரங்கதுரை 25 வது நாள் சென்னை மகாலெட்சுமியில், மதுரை மீனாட்சி பாரடைஸ், தூத்துக்குடி KPS கலையரங்கம், பழனி சாமியில் A/C 4K,. திருவண்ணாமலை VNC , திருவொற்றியூர் ODN மணி A/c, ஆரணி வெற்றி, காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியத்தில் வெற்றி நடை போடுகிறது. நாகர்கோவில் வசந்தம் பேலஸில் 50 வது நாளை நோக்கி. மற்றும் அனைத்து திரையரங்குகளிலும் தினசரி 4 காட்சிகளாக மாபெரும்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...33&oe=59D9017F
Trichy Srinivasan
· 5 hrs ·
13. கள்வனின் காதலி : (உலக மகா நாயகனின் 25வது படம், வெற்றிப்படம்)
உலக மகா நாயகன் சிவாஜியின் 25 வது வெற்றிப்படமாக இது 1955ல் வெளிவந்தது. படத்தை இயக்கியவர் நமது வி.எஸ்.ராகவன்.
பி. பானுமதி அவர்கள் கதாநாயகி, பானுமதி வயதில் சிவாஜியை விட மூத்தவர். ஆனால் சிவாஜியின் நல்ல ரசிகர். சிவாஜியுடன் இணைந்து நடிப்பதில் இவருக்கு கொல்லை பிரியம். பானுமதி. சிவாஜி மறைந்த அன்று அன்னை இல்லத்திற்கு வந்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பானுமதி ஒரு மிக சிறந்த நடிகை, சொந்தக் குரலில் நன்றாக பாடுவா...ர்.
கள்வனின் காதலியில் சிவாஜி மிக, மிக அழகாக இருப்பார். இடை, இடையே சிறிது காலங்களில் சிவாஜி சற்று சதை போட்டு இருந்தாரே தவிற மற்ற நாட்களில் அதாவது பராசக்தி முதல் கல்யாணியின் கணவன் படத்திற்கு முன்பாக வரை உடல் நார்மலாகத்தான் இருந்தார். அதன் பிறகு சில படங்கள் உடல் சற்று பருமானாக வந்தார். மீண்டும் கலாட்டா கல்யாணத்திலிருந்து மெலிந்து கிட்டத்தட்ட கீழ்வானம் சிவக்கும் படத்திற்கு முன்பு வரை உடலை சீராக வைத்திருந்தார். பிறகு சற்று சதை போட்டு மீண்டும் ஜல்லிக்கட்டு படத்திற்கு முன்பு வரை பருமனாக இருந்து மீண்டும் இளைத்தார். இதன்பிறகு அவர் இம் மண்ணை விட்டு மறையும் வரை அப்படியே சீராகவே இருந்தார்.
இந்த கள்வனின் காதலி படத்தில் கண்டசாலா பாடலுக்கு சிவாஜி வாய் அசைப்பதை பாருங்கள். சிவாஜி ஒரு மாபெறும் நடிகனாக ஜொலித்ததற்கு இதுவும் ஒரு காரணம், கண்டசாலா பாடுவதற்கு தக்க தனது முக பாவங்கள் , வாய் அசைப்பைக் கூட மாற்றுகிறார், இந்த உலக மகா நாயகன். ஆக, சிவாஜி ஏற்கனவே மாருதி ராவ் (கேமரா மென்) சொன்னதற்கு தக்க க்ளோசப் என்ற காட்சிகள் தமிழ் சினிமாவில் சிவாஜி வந்த பின் தான் வந்தன. காரணம் அவரது முகம் அப்படி நடிக்கும், கேமராவை அவர் முன் வைத்துவிட்டு அவர் நடிக்க ஆரம்பித்தவுடன் , அவர் நடிப்பில் மூழ்கி பலமுறை இயக்குனர் கட் சொல்லியும், நான் கவனிக்காமல் கேமராவை எடுக்காமல் சிவாஜியின் நடிப்பில் முழுகி போயிருக்கிறேன் என்று மெய்சிலிர்த்து கூறியிருக்கிறார் மாருதிராவ் . சூரக்கோட்டைக்கு சென்று நமது சிவாஜியுடன் நமது ரசிகர்கள் போட்டே◌ா எடுக்கும் போதும் பலமுறை நமது சிவாஜி போட்டோ கிராபரை அங்கே இருந்து எடுங்கள், இங்கே இருந்து எடுங்கள், சற்று தள்ளி நின்று எடுங்கள், இப்படி எடுங்கள்,அப்படி எடுங்கள் அப்போதான் போட்டோ நன்றாக வரும் என்பார் என்று என் நண்பர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். அப்படிப் பட்ட மாமேதை நடிப்புச் செல்வம் சிவாஜி அனைத்து விதங்களிலும் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னை மிஞ்ச ஆள் இல்லை என இன்றுவரை நிரூபித்துவிட்டு சென்றிருக்கிறார். அந்தா மகானுக்கு இவ் உலகம் உள்ள வரை மரணம் என்பது இல்லலே இல்லை. நன்றி
நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.
S V Ramani
· 6 June at 09:31 ·
அவர் ஒரு சரித்திரம் - 002
வீரபாண்டிய கட்டபொம்மன். ஆங்கிலேயரை எதிர்த்து போர்புரிந்து வீரமரணத்தைப் புன்னகையுடன் தழுவிக் கொண்டவர். இறுதி வரை உறுதி குறையாமல் போரிட்டவர், நண்பர்கள் என்னும் நயவஞ்சகர்ளால் காட்டிக்கொடுக்கப்பட்டு மரணத்தை தழுவிய வீரர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் கண்ணால் கண்டதில்லை. அவரை நம் கண்முன்னே நிறுத்தி அவரது வீரத்தை நமக்கு எடுத்துரைத்தவர் நமது நடிகர் திலகம். இந்தப் படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல். முதல் முதலில் உலக அளவில் பரிசு பெற்ற இந்தியப் படம்.
... முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரையுடன் நடந்த போரில் வெற்றி வாகை சூடினார். அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார். இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.
அப்போது இருவரிடையே நடக்கும் காரசாரமான உரையாடல் மிகவும் சுவையாக இருக்கும். நடிகர் திலகம் வீரம் கொப்பளிக்க ஜாக்சன் துரையை கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்கும் காட்சி மிகவும் அருமை. அதில் சிறிது எள்ளலும் இருக்கும்.
ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்படுமுன் அவர் பேசும் வீர வசனங்கள், தூக்குக் கயிற்றை சிறிதும் மனம் கலங்காமல் ஏற்றுக் கொள்ளும் வீரம், இறப்பதற்குமுன் கடைசியாக அளிக்கப் பட்ட வாய்ப்பை துச்சமாக உதறித் தள்ளும் வீரம், இவை அனைத்தையும் மிகவும் அனாயாசமாக வெளிப்படுத்தியிருப்பார். இவரது அந்த வசனங்களைக் கேட்கும் ஒவ்வொருக்கும் கண்டிப்பாக நாட்டுப் பற்று அதிகரிக்கும்.
இது போன்று ஒன்றல்ல, பல படங்களில் நாட்டுப் பற்றை வலியிறுத்தி, பல தேசியத் தலைவர்களை நமக்கு காட்டியவர். தேசபக்திக்கு இவரது நடிப்பு ஒரு பாட நூல் என்றால் அது மிகையாகாது.
என்றென்றும் நன்றியுடன் உங்கள் நண்பன், நடிகர் திலகத்தின் தீவிர பக்தன். ஜெய்ஹிந்த்!
(எனது கைவண்ணத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனாக நமது நடிகர்திலகம்)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...b8&oe=59A2A7EB
S V Ramani
· Yesterday at 08:54 ·
அவர் ஒரு சரித்திரம் 003
கெளரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த். தனது வாதத் திறமையால் தான் எடுத்துக் கொண்ட வழக்குகளில் எல்லாம் வெற்றி. வெற்றி பெறுவது ஒன்றே அவரது லட்சியம். அதனால் சற்று இறுமாப்பு. ஒரு கொலை வழக்கில் குற்றவாளியின் சார்பில் வாதாடி அவனுக்கு விடுதலை வாங்கித் தருகிறார். இதனால் அவருக்கும், தன மகன் போல வளர்த்து வந்த அவரது தம்பி மகனுக்கும் கருத்து வேறுபாடு. மறுபடியும் அதே குற்றவாளி இன்னொரு வழக்கில் தனக்கு விடுதலை பெற்றுத் தர இவரை நாடுகிறான். இம்முறை அவன் நிரபராதி. ஆனாலும் அவன்... செய்த பழைய குற்றத்துக்கு தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்பது அவரது வளர்ப்பு மகனின் வாதம். வாதம் முற்றி அவன் வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. இம்முறை தனது பெரியப்பாவையே எதிர்த்து வாதிடுகிறான் வளர்ப்பு மகன். தீர்ப்பு கூறுவதற்கு முதல் நாள் இரவு. பலவித உணர்ச்சிக் கலவைகளுடன், மனக்குழப்பத்துடன் தீர்ப்பு யாருக்கு சாதகமாக வருமோ என்று இருந்தபோதும் தனது வாதத்தின் மீது தீராத நம்பிக்கை. இந்த இடத்தில்
"கண்ணா நீயும் நானுமா, நீயும் நானுமா" என்று உணர்ச்சி ததும்ப பாடுகிறார். "ஆகட்டும் பார்க்கலாம், ஆட்டத்தின் முடிவிலே, அறுபதை இருபது வெல்லுமா உலகிலே" என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருக்கிறார். படம் பூராவுமே சிவாஜியின் பல்வேறு உணர்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகள். வியட்நாம் வீடு சுந்தரத்தின் கூரான வசனங்கள். "நெருப்பு எனக்கா, பைப்புக்கா" என்று பெரிய சிவாஜி கேட்கும்போது, "இரண்டுக்கும் நான்தானே பெரியப்பா" என்று சொல்லுமிடம், கண்ணன் வீட்டை விட்டு வெளியேறியவுடன், "கிளிக்கு றெக்கை முளைச்சுடுத்து, அது பறந்து போயிடுத்து" என்று மனைவியிடம் தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் இடம் என்று காட்சிக்கு காட்சி சிவாஜியே வியாபித்திருக்கிறார். இறுதிக் கட்ட காட்சியில் வரும் பாடலான "கண்ணா நீயும் நானுமா" என்ற பாடல் உங்களுக்காக.
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...85&oe=59E1C423
S V Ramani
· 3 hrs ·
அவர் ஒரு சரித்திரம் - 004
இன்றைய தொடரில் கௌரவத்தின் தொடர்ச்சி. எழுதுபவர் உங்களுக்காக நமது நடிகர்திலகமே! வேறென்ன வேண்டும் ரசிகர்களுக்கு!. ஆம் கௌரவம் படத்தைப் பற்றி நமது நடிகர் திலகம் பத்திரிகைக்கு அளித்த பேட்டி உங்களுக்காக இதோ.
"I AM BARRISTER RAJINIKANTH!...
... எடுத்த வழக்குகள் அத்தைனையுமே வெற்றி!. இறுமாந்தேன. நீதிதான் எனது உயிர். இப்படித்தான் கடமையாற்றினேன்.
விளைவு? ஏமாற்றம். எனக்கு கிடைக்க வேண்டியகௌரவமிக்க நீதிபதி பதவியை கிடைக்கவிடாமல் செய்கிறார்கள் சக வக்கீல் சகோதரர்கள்.!
என்னுடைய வாதத் திறமையில் இருந்த நம்பிக்கையை வைத்து சதுரங்கமாடினேன். பல வழக்குகளில் நீதியை தூக்கி எறிந்து விட்டு வெற்றி ஒன்றியே லட்சியமாக கொண்டேன்.
என்னுடைய வாத திறமையினால் சட்டமே கதவுகளை திறந்து விட்டது.
வாத திறமையின் ஜ்வாலையை தாங்கிக் கொள்ள முடியாமல் வெளியே போன நீதி தேவதையை அழைத்து வந்தான் எனது அண்ணன் மகனான நான் வளர்த்த கண்ணன்.
"நீதிக்கே துணிந்து நின்றேன்
நினைத்த்தெல்லாம் ஜெயித்து வந்தேன் .
வேதனைக்கு ஒரு மகனை
வீட்டினிலே வளர்த்து வந்தேன் "
சமூகம் அதைத் தெரிந்து கொண்டபோது ரஜினிகாந்த் உயிரோடு இல்லை. இதுதான் கெளரவம். இதில் நான் தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்.
இதன் ஆசிரியரான வியட்நாம் வீடு சுந்தரம் ஆர்வத்தோடு பணியாற்றும் இளைஞர். அவரது வெற்றியை நான் பூரிப்போடு வரவேற்கிறேன். கெளரவம் படத்தில் என் உழைப்பை நல்ல முறையில் பயன்படுத்தி இருக்கிறேன். அதன் வெற்றியை காண ஆவலோடு காத்திருக்கிறேன்."
திரைவானம் : நவம்பர் 1973 இதழில் கெளரவம் படத்தின் வெளியீட்டைப் பற்றி சிவாஜி கணேசனின் பேட்டி. (EDITED)
ஜெய் ஹிந்த்!
நமது நடிகர் திலகம் பிரிட்டிஷ் அரசராகவும் இளவரசராகவும் தோன்றும் காட்சி.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...dc&oe=59E5476B
richy Srinivasan · 6 June at 11:15 ·
11. எதிர்பாராதது :
இப்படம் பெயரும் எதிர்பாராதது. இது வெற்றி பெற்றதும் எதிர்பாராதது.
என்னமோ கே.பாலசந்தர் மூன்று முடிச்சு படத்தில் புதிதாக படத்தை செய்தது போல..., அதாவது ரஜினி ஶ்ரீதேவியை விரும்பி, அவள் காதலித்த கமலை , ரஜினி தண்ணீரில் இருந்து காப்பாற்றாமல் இறக்க வைத்து, ஶ்ரீதேவியை மணமுடிக்க நினைத்து. கடைசியில் அவள் ரஜினியின் தந்தையை திருமணம் முடித்து , ரஜினிக்கு தாயாக வருவதாக கதை...இதை அன்றே 1954 லில் வெற்றிகரமாக கதை செய்து சிவாஜி பத்மினியைக் காதலித்து, சூழ்நிலை காரணமாக பத்மினி சிவாஜியின் தந்தையை மணம் முடித்து, சிவாஜிக்கே தாயாகும் கதை. மிகவும் புரட்சிகரமான கதை, இப்படி படம் தமிழகத்தில் கலாச்சாரத்திற்கு ஓடுமா , ஓடாதா...என்ற பயம் கூட சற்றும் இல்லாமல் படம் செய்தனர். இதில் நமது உலக மகா நாயகனும் நடித்து, படம் வெற்றிப்படமாக அமைந்தது ஒரு சாதனையே.
சிவாஜி 1952 லிருந்து 1954 க்குள் 2 வருடங்களிலேயே எப்படி எப்படியோ நெகடிவ்வான கேரக்டர்களை அதிகமாக நடித்தது, சிவாஜியின் துணிச்சல், அதை நினைத்தாலே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. சிவாஜி அவரது இமேஜை பற்றிக் கூட கவலைக்கொள்ளாமல், நடிப்பு என்று வந்துவிட்டால் எப்படிப் பட்ட கதாபாத்திரங்களையும், சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஏற்றுக்கொண்டு அவைகளில் வெற்றிக் கொடியையும் நாட்டினார் என்றால்..இதுவே ஒரு உலக அதிசயம் தான். 1954லில் மொத்தம் 8 படங்கள் வந்ததில் இதுவே கடைசிபடம், 7 படங்கள் வெற்றி பெற்றன. சிவாஜிக்கு இந்த ஆண்டு ஒரு இன்ப ஆண்டு, வெற்றி ஆண்டு. இதேபோல் ஆரம்ப காலங்களில் அதிக படங்களில் கதாநாயகி நமது பத்மினி. சரி, நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...2f&oe=59D7E92E
Trichy Srinivasan · 5 June at 14:59 ·
10. தூக்குத் தூக்கி :
1954ல் வெளிவந்தது, அந்த வருடம் மட்டும் சிவாஜியின் 8 படங்கள் வெளிவந்தன, அதில் துளிவிஷம் படம் தவிற அனைத்தும் வெற்றிப்படங்கள்.
இது கொண்டுவந்...தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டுவந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் என்ற ஒரு கருவை மையமாக வைத்து செய்யப்பட்ட படம். இதில் உலக மகா நாயகனின் நடிப்பு மட்டுமல்ல, பரத நாட்டியமும் தியேட்டரில் கை தட்டலின் ஆரவாரத்தைப் பெற்றிருக்கும். சிவாஜி சிறு வயதில் நாடக கம்பெணியில் இருந்தபோதே தினசரி வழக்கமாக அனைத்து நாடகங்களையும் முறையாக கற்றவர். அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக ஆடுவார். அவரது ஆட்டங்களின் தொகுப்பை எனது 8 வது உலக அதிசயம் சிவாஜி என்ற டிவிடியில் காட்டியிருக்கிறேன். இப்படத்தில் சிவாஜிக்கு கோனாரை தாக்கும் ஒரு பாடல் வரும். திருச்சியில் எடத் தெரு (கோனார்கள் நிறைந்த பகுதி) , திருச்சி பிரபாத் தியேட்டரை நடத்தியவரும், தெய்வமகன் படத் தாயாரிப்பாளருமான மறைந்த பெரியண்ணக் கோனாரும் அந்த பகுதியில் வசித்தவர் தான். சிவாஜி சிறு வயதில் சங்கிலியாண்டபுரத்தில் இருந்தபோது அந்த எடத்தெரு ஏரியாவில்தான் அதிக பொழக்கம். ஆகவே, அங்கே இருக்கும் கோனார்கள் அனைவரும் இப்பாடலால் நமது சிவாஜி மீது மிகவும் கோபம் கொண்டனர். பிறகு, படத்தில் காட்சிக்கேற்ப அப்படி நடிக்க வேண்டியிருந்ததை விளக்கி அவர்களிடையே சமாதானம் செய்து, பிறகு அவர் அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி வரப் போக இருந்தார்.
இப்படத்தில் சுந்தரி , சௌந்தரி பாடலில் சிவாஜியின் அருமையான நாட்டியத்தைப் பார்த்து கை தட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அற்புதமான படம் இந்த தூக்குத் தூக்கி. நன்றி
நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்.
திருச்சி எம்.சீனிவாசன்.
http://i1094.photobucket.com/albums/...EDC4418a-1.jpg
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
மதுரையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் மக்கள்தலைவரின் ராஜபார்ட் ரங்கதுரை சரித்திரம் காணாத வகையில் நான்காவது வாரத்தை தொடர்கிறது.
பழைய படங்கள் 3 நாட்களை தாண்ட முடியாத நிலையில் நமது நடிகர்திலகத்தின் இமாலய சாதனையாக ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாளைக் கொண்டாட இருக்கிறது.
... அன்பு இதயங்களே, மதுரையே வியக்கும் வண்ணம் ராஜபார்ட் ரங்கதுரையின் 25வது நாளைக் கொண்டாட அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து, மாபெரும் வெற்றிவிழா ஆக்கிடுவோம்.
25வது நாள் விழா கொண்டாட.....மன்றத்து மறவர்களே, அணிதிரண்டு வாரீர் மதுரையை நோக்கி.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...90&oe=59E4DA55
நவராத்திரி- 03/11/1964.
அதிசயம், ஆனாலும் உண்மை. ஒரு நடிகர் ஒரே படத்தில் ஒன்பது ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் என்ற செய்தி எனக்கு ஆறு வயதாய் இருக்கும் போது பெரியவர்கள் உரையாடலில், சீனா போரை விட மிகவும் சிலாகிக்க பட்டது.
எல்லோரும் மாய்ந்து மாய்ந்து அவர் அற்புதம்,பயம்,கருணை ,கோபம்,சாந்தம்,அருவருப்பு,,சிங்காரம்,வீரம்,ஆனந ்தம் ஆகிய குணங்களையே பாத்திரங்களாக்கி உள்ளார் என்று எழுதினர்.சில பாத்திரங்கள் தாங்கள் அந்த குணங்களை பிரதிபலிப்பதை விட மற்றோர்க்கு அந்த உணர்வை (குடிகாரன்,தொழுநோயாளி)தருவதாக விமர்சித்தனர். ஆனால் அந்த குடிகாரனின் ,கடைசி நேர பய உணர்வை,மனசாட்சி உந்துதலை ,தொழுநோயாளியின் தன் வெறுப்பை ,சுய அருவருப்பை கணக்கில் கொள்ள தவறினர்.
ஆனால் நான் பார்ப்பது என்னவென்றால், சிவாஜியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மட்டும் தெரிந்து உணர்ந்த ,sampling முறையில் அளக்க இயலா நடிப்பின் வேறுபாடுகளை,ஒரே படத்தில் showcasing the talent என்ற முறையில் நவராத்திரியின் வீச்சை மதிப்பிடுகிறேன். அவர் அற்புத ராஜாக பாசமலரில் துவங்கி பார் மகளே பார் வரை அற்புதம் நிகழ்த்தினார்.குடிமகனாக புனர் ஜென்மம்,கருணை நிறைந்த majesty என்று பாலும் பழமும்,கோபம் நிறைந்த வன்மத்துடன் வாழ்விலே ஒருநாள் முதல் ஆலய மணி வரை,சாந்தம் நிறை வெகுளி மனிதராக மக்களை பெற்ற மகராசி ,படிக்காத மேதை என்று ,அருவருப்பான தோற்றத்தில் குழந்தைகள் கண்ட குடியரசு,பாவ மன்னிப்பு,நான் வணங்கும் தெய்வம் படங்களிலும் ,சிங்காரமாக பல கூத்து கலை படங்களிலும்(தூக்கு தூக்கி) ,வீரமாக கணக்கற்ற படங்களில் (உத்தம புத்திரன் விக்ரம்),ஆனந்தனாக ராஜாராணி ,இருவர் உள்ளம்,குலமகள் ராதை ,கல்யாணியின் கணவன் என்று பல படங்களிலும் நடித்த அனைத்து பாத்திரங்களையும் ஒன்றாக தொகுத்து, ஒரே படமானதால் வித்தியாசம் தெளிவாக, சில நடை உடை ஒப்பனை மாற்றங்கள்,mannerism என்று மெருகேற்றி ஒளி ஊற்றிய படமே நவராத்ரி.இதே போல அவர் நடிகராக பாத்திரமேற்ற ராமன் எத்தனை ராமனடியில் ,ஒரே காட்சியில் அவர் ஏற்ற பல வேறு பட்ட பாத்திரங்களை காட்டி அவரின் பல்முனை நடிப்பு அழகாக ஒரே படத்தில் காட்ட படும்.
என்னிடம் ஒரு நண்பர் ,தசாவதாரம் என்னை கவரவில்லை ,என்று சொன்ன போது நவராத்திரியை நாடகம் என்றும் தசாவதாரம் சினிமா என்றும் சொன்னதும் நான் சிரித்தேன். சினிமாவின் இலக்கணம் தெரியுமா என்று கேட்டேன். பிறகு , அவரிடம் என்ன genre என்ற தெளிவு ,சீரான திரைக்கதை,படத்துடன் இணையும் பாத்திரங்கள்,தெளிவான முகபாவங்கள் கொண்ட close up காட்சிகள், இவை எந்த படத்தில் உள்ளதோ அதுவே திரை படம் என்று சொன்னேன். நண்பர் முகம் போன போக்கு. ஓட்ட வைத்த குடுகுடுப்பாண்டி சட்டை போல மோசமான திரைக்கதை, பத்து வர வேண்டும் என்று அனாவசிய திணிப்பில் கதாபாத்திரங்கள், பெயிண்ட் பூசி ,முகமூடி அணிந்து(அந்த கால கூத்து நாடகங்கள் போல) வரும் கேவலமான தோற்றம் கொண்ட மாறுவேடம் இவை கொண்ட தசாவதாரம் நாடகம் என்றாலும் கூட நாடக கலைக்கே கேவலம். அற்புதமான ஒரு வரி knot ,அதனுடன் பயணிக்கும் திரைக்கதை, அதனூடாக பயணிக்கும் நகைச்சுவை, பாத்திரங்களின் நடை உடை பாவனை தெளிவாக காட்டும் படமாக்கும் இவற்றில் நவராத்திரியை உயரிய திரைப்பட உத்தியின் உச்சமாகவே கருத வேண்டும்.
ஏதோ திணித்தது போல இல்லாமல் அழகான திரைக்கதை. அப்பா பார்த்த மாப்பிள்ளை தான் காதலித்த ஆனந்தன் என்று உணராத
நளினா , வீட்டை விட்டு விரக்தியுடன் வெளியேறி தற்கொலைக்கு முயல ,அற்புதராஜ் என்ற பணக்கார ,மனைவியை இழந்து,ஒரே பெண்குழந்தையுடன் வசிக்கும் கனவானால் காப்பாற்ற பட்டு,அங்கிருந்து வெளியேறி ஒரு விபசார விடுதியில் சிக்கி ஒரு குடிகார காமுகனால் (மனைவியின் நோயால் உறவு வேட்கையில் வாடும் ஒரு பூஞ்சை மனம் கொண்டவன்)வல்லுறவிற்கு உந்த பட்டு, அங்கிருந்தும் தப்பியோடி ,பைத்தியமாய் நடித்து, பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் அடைக்க பட்டு, Dr .கருணாகரன் என்பவரால் புரிந்து கொள்ள பட்டு, அங்கிருந்தும் தப்பி, சந்தர்ப்பவசத்தால் கொலை செய்ய நேரும் ஒரு ஏழை மனிதனின் உணர்ச்சிகளை உணர்ந்து அவன் கொலை செய்ய படுவதை பார்த்து அங்கிருந்தும் ஓடி , விரக்தியில் ஓடும் ரயில் முன் உயிரை மாய்க்க முடிவெடுக்கிறாள். ஆனால் ஒரு நல்ல அப்பாவி விவசாயி சாந்தப்பனால் காப்பாற்றப்பட்டு ,அங்கிருந்து ஓடி , ஒரு நல்லிதயம் கொண்ட செல்வராஜ் என்ற தொழுநோயாளிக்கு உதவி, அங்கிருந்து வெளியேறி , ஒரு கூத்து நாடக குழுவிடம் அவர்களுக்கு ஒரு கூத்தில் நடித்து உதவ கோரப்பட்டு உதவ, கடைசியில் மாறுவேடம் போட்டு ,வீரப்பன் என்ற உயர் காவல் அதிகாரியிடம் அழைத்து வர பட, வீரப்பன்,ஆனந்தனின் சித்தப்பா என்ற உண்மை வெளியாகி ஆனந்தனிடன் சென்று சேர்ந்து கல்யாணம் நிறைவேறுகிறது. நவராத்திரி நாட்களில் நளினா கடந்து வந்த ,மனிதர்கள் கல்யாண விருந்தினர்களாக ஒரு சேர வந்து வாழ்த்த , சுபம். இயல்பான நகைசுவை பைத்தியக்கார விடுதியில், சாந்தப்பனின் வீட்டில், கூத்து நாடகத்தில்,உச்ச காட்சியில் என்று ஜனரஞ்சகமாக போவதே தெரியாமல் பொழுது போகும். சிந்தியுங்கள் ,கேவலமான தசாவதார அலுப்பூட்டும் திரைக்கதை,வலுவில் திணிக்க பட்ட ஒட்டாத பாத்திரங்கள் ,கொடூரமான ஒப்பனை ,உலகநாயகன் என்ற கேவலமான சுய தம்பட்டம் என்ற கொடூர சித்திரவதை நாடகமா? சினிமாவா?சிஷ்யன் என்று சொல்லி கமல் அடித்த கூத்து சகிக்க இயலாத சித்திரவதை.நவராத்திரிதான் உண்மை சினிமா.உண்மை திறமை காட்டும் நடிப்பு.
இதில் ஒரு விஷயம்.
எல்லோருமே ஏதோ ஒரு ரசத்தைத்தான் ஒவ்வொரு பாத்திரங்களும் பிரதிபலிப்பதாக ஏ.பீ.என் அவர்களில் டைட்டில் பேச்சு கேட்டு உளறி கொண்டிருந்தனர்.
அற்புதராஜ் ஒரு அற்புத கனவான் மட்டுமல்ல, பாசம்,கண்ணியம், உள்ளோடிய சோகம் கொண்டவன்.
குடிகாரன் பயந்தவன் மட்டுமல்ல. காம தீயின் தகிக்கும் தாபம் சுமந்தவன்,மனசாட்சியின் நச்சரிப்பு தாங்கியவன்.
டாக்டர் கருணாகரன் கருணை மட்டுமல்ல, கடமை,புத்தி கூர்மை ,எடை போடும் திறமை கொண்ட முதியவர்.
கொலைகாரன் ஆத்திரம் மட்டும் கொண்டவனல்ல, தம்பியை இழந்த உள்ளாடிய சோகம்,துயர், கொண்ட பழி வாங்கும் வெறியுணர்வு, ஒரு அடிப்படை மனிதனுக்குள்ள செயலுக்கு நியாயம் தேடும் விழைவு,சவால் விட்டு எதிரிகளை சாய்க்கும் ஒரு குழந்தைமை ,போனால் போகட்டும் என்ற விரக்தி அத்தனையும் பிரதிபலிப்பான்.
சாத்தப்பன், அப்பாவி நம்பிக்கைவாதி,நல்லவன் தாண்டி, குறும்பும் பிரதி பலிக்கும்.ஆற்றாமை கொண்ட நல்லமனம்.
செல்வராஜ், சுயவெறுப்பு,விரக்தி,நம்பிக்கையின்மை , குதற பட்ட வலி ,நன்றியின் அணைப்பில் ஆசுவாசம் என்று அனைத்தும்.
வீரப்பன் ஆண்மை நிறை கம்பீரம்,வீரம், குறும்பான அட்டகாசம் என்ற குணங்களின் கலவையாய்
ஆனந்தன் காதலி சார்ந்த விரக்தி, தோல்வி மனம்,காதல்,ஆனந்தம்,அவசரம் அனைத்தின் கலவை.
உணருங்கள் ,ஒரு பாத்திரத்துக்கு கிட்டத்தட்ட 13 நிமிடங்கள் மட்டுமே நேரம்.பாடல்களை கழித்தால் 11 நிமிடங்கள் மட்டுமே.
இந்த மேதை பாத்திர வார்ப்புகளுக்கு எந்த நடிப்பு முறைமையும் சாராத ,தன்வயப்பட்ட கற்பனை ஒன்றை மட்டுமே சார்ந்து இதனை சாதித்துள்ளார்.
பாமர மக்களுக்கு மனதில் பதியன் போட mannerism என்ற ஆயுதம்.
அற்புத ராஜுக்கு தோள் குலுக்கல் , குடிகாரனுக்கு பார்வை ,கருணாகரனுக்கு நடை -இள முறுவல்,கொலைகாரனுக்கு குரலின் தன்மை, சாந்தப்பனுக்கு வலிய கைகால் உடல் மொழி, தொழுநோயாளிக்கு உடல் குறுக்கல் -இறைஞ்சும் குரல்-பார்வை குறைவுக்கு கையின் உபயோகம் ,வீரப்பனுக்கு நடை-சிரிப்பு, ஆனந்தனுக்கு விழிகளின் கூர்மை என்று பாத்திரங்களின் வசியத்தை ,வீச்சை நெஞ்சுக்குள் ஆழமாய் குறுகிய நேரத்தில் ஆழமாய் ஊன்றுவார்.
இந்த படம் ரியலிசம் என்ற பெயரில் ,சலிப்பான ஒரே வித நடிப்பை தருவதற்கு வந்த வழக்கமான ஜல்லியடிக்கும் சராசரி படமல்ல.ஆஸ்கார் வைல்ட் சொன்னது போல கலையின் தரத்தை,படிமத்தை உயர்த்தி ரசனையை மேலெழுப்பும் ஒன்று. ஒரு உலகத்தின் உயர்ந்த கலைஞனின் திறமைகளின் அணிவகுப்பை தரும் ஒன்று. இந்த நடிகன் நடிக்க வாகாக , திறமைக்கு தீனி போடும் ஒன்று.
உதாரணமாக ,ஒவ்வொரு மனிதர்களின் பழக்க வழக்கம் ஒவ்வொரு விதம். ரஜினிகாந்த் என்ற மனிதர்(பின்னால் வந்த நடிகர்) பழக்க வழக்கம் காணும் வாய்ப்பின்றியே, அவரின் பாணியில் எங்கள் தங்க ராஜாவில் நடிகர்திலகம் நடித்து காட்டவில்லையா? அதை அப்போது ஓவர் என்றவர்கள் ,அவர் நடித்து காட்டிய பாத்திரம் போலவே ஒரு நடிகர் வந்ததில் அதிசயித்து நின்றோமே? நடிகர்திலகம் நரம்பும் சதையுமாக ,ஆத்மாவில் புகுத்தி பண்ணிய ஒவ்வொரு பாத்திரமும் சத்திய நிதர்சம். அதனால்தான் sampling முறையில் அளந்து விட முடியாத இமயம் அவர் என்று திருப்பி திருப்பி சொல்கிறேன்.
மற்ற படங்களில் ஒவ்வொரு பாத்திரத்துக்கு கிடைக்கும் அவகாசம் இந்த படத்தில் கிடையாது. ஆனாலும் ஒவ்வொரு பாத்திரமும் இன்று கண்டது போல மனத்தில் நிலைக்க அந்த மேதை பண்ணிய மாயம் என்ன சொல்ல?பாருங்கள் ,பாத்திரத்துடன் அவர் நடிப்பில் காட்டிய விந்தையை விவரிக்கிறேன்.
1)அற்புதராஜ்- கண்ணிய கனவான். ஆனால் அந்த பார்வையை கவனியுங்கள். கண்டிப்பு,கலக்கம், கடமை,குழப்பம் என்று பல கலவைகள் நிறைந்த eccentricity தன்மை இருக்கும். தோள் குலுக்கும் mannerism ,ஸ்டைல் உடன் பாத்திரத்தையும் பதியன் போட்டு விடுமே?(நலீனா என்றழைக்கும் நயம்)
2)குடிகாரன்- காம விழைவு நிறைந்த கலக்க பார்வை. சிறிதே முரண்டு காட்டியதும் வன்விழைவு பின் பயம் கலந்த குழப்பத்துடன் சரண் என்று தன கதை விவரிக்கும் பாணி வசன முறையிலே ஒரு முத்திரை. தன்னிரக்கம், தடுமாற்றம், தன்னுடைய முடிவு சரிதான் என்று சொல்ல விழையும் வாலிபனை தடுமாற்றத்துடன் கூடிய அழுத்தம்.
3)கருணாகரன்- நடையில்,பார்வையில், எனக்கு தெரியும்,புரியும் ,உனக்கு அனுசரணையாக இப்போது உன்னை இங்கு அனுமதிக்கிறேன் என்று பேச்சு எந்த திசையில் திரும்பினாலும்,வேடிக்கையுடன் கூடிய மனோதத்துவ அழுத்தம்.
4)கொலையாளி- போலீஸ் தன்னை கண்டு வந்ததாக நம்பும்
நளினாவை அந்த சந்தர்ப்பத்திலும் நக்கலாக தன்னை கண்டே வந்ததாக நெஞ்சு நிமிர்த்தி கடமையை நிறைவேற்றிய திருப்தியுடன், ஒரு அப்பாவி தனம் கலந்த நகைசுவை தெறிக்கும் பயப்படாதே,நான் ஒரு கொலை பண்ணினேன் என்று தம்பியின் பரிதாப கதை சொல்லும் ஒரு அடிப்படை மனித தனம், அதில் தன் செயலை நியாய படுத்தும் தோணி,எதிராளியை கொக்கி போட்டு அதற்கு அனுசரணையான பதிலை விழையும் தோணி(சொல்லும்மா யார்தான் என்ன பண்ண முடியும், ) சுட்டேன் சும்மா சுட்டேன் என்று சொல்லும் பழி வாங்கிய திருப்தி வெறி, மோதும் கட்டத்தில் காட்டும் எச்சரிக்கையாக மூர்க்கம், கத்தி குத்தில் துடிக்கும் கவன ஈர்ப்பு என்று ஒரு நொடி கண்ணிமைக்க விடாமல் செய்யும் உன்னதம்.
5)சாந்தப்பன்- சாந்தமான விவசாயி. அப்பாவி என்பதை விட கிராமம் மட்டும் அறிந்த பாமரன். தன்னுடைய தங்கையின் கதையை சொல்லி நளினாவின் தற்கொலையை உரிமையுடன் இடிப்பது, பூசாரியுடன் விவாதிப்பது, பூசாரி ஆத்தா அவ்வப்போது அஞ்சு பத்து கொடுப்பதாக சொல்லியதை சொல்லி காட்ட ,அவ்வப்போதுதானே என்று சொல்லும் நகைசுவை, உன்மேலே ஆத்தா வந்துச்சுய்யா என்று சொல்லும் அப்பாவி பரவசம்,பூசாரி சொன்ன படி விபூதியடித்து மந்திரம் சொல்லி பயம் காட்டும் பாவம், கடைசியில் கட்டுப்படுத்த முடியாமல் போவது என்று அதகள இயல்பு காட்சி நகைசுவை.(situational Comedy )
6)செல்வராஜ்- சுயவெறுப்புடன் கூடிய அவநம்பிக்கை, நளினா உதவியால் சரியான இடத்திற்கு வந்த ஆசுவாசம் தரும் அடைக்கல நம்பிக்கை, அந்த ஆசுவாசத்தில் தன்னுடைய பழைய உருவ படத்தை காய் குவித்து அரைகுறை பார்வையில் காண விரும்பும் விழைவு,அந்த தொழுநோயாளியின் நரம்பு பாதிப்பில் உணர்வற்ற காலை தூக்கி வைக்கும் நடை என்று எம்.ஆர்.ராதாவின் அரைகுறை நடிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்குவார்.
7)சிங்காரம்- சிவாஜி-ஏ.பீ.என் -கே.வீ.எம் இணையில் கூத்து காட்சிகள் என்றால் மீன்குஞ்சுகளுக்கு நீச்சலாயிற்றே? இந்த படத்தில் சோபித்த அளவு கூத்து காட்சிகள் எந்தவொரு தமிழ் படத்திலும் இது நாள் வரை சோபித்ததில்லை.சிங்காரமாக ஒரு சற்றே பெண்மை மிளிரும் மைய நடை (கூத்து கலைஞர்களுக்கே உரித்தான),செயற்கையான ஒரு ஓங்கு தாங்கான பாவனைகள்-உடல்மொழி , இயல்பான பணிவு(மக்களிடம்,புரவலர்களிடம் அண்டி பிழைப்பு நடத்துவதால்),தன்னுடைய சகாக்களிடம் கிண்டல் கேலி உரிமை, தொழில் நேர்மை,வாக்கு சுத்தம், இயல்பான நகைச்சுவை உணர்வு என்று இந்த பாத்திரம் நான் விளக்கியா புரிய வேண்டும்?
8)வீரப்பன்- கம்பீரமான,அடாவடியாக,கண்டிப்பான, ஆர்ப்பாட்டமான வீரம் நிறைந்த இந்த பாத்திரம் எங்கள் தங்க ராஜா பைரவனுக்கு, தங்கப்பதக்கம் சௌத்திரிக்கு என்று பல நடிகர்திலக வெற்றி பாத்திரங்களுக்கு முன்னோடி. சரளமான கடகடவென உருளும் சிம்ம சிரிப்புக்கு ,அந்த சாப்பாட்டு மேஜை அகலத்துக்கு, நளினாவை ஆன் வேடத்திலும் அடையாளம் புரிந்து கலாய்க்கும் அட்டகாச கேலி என்று நம் மனதிலும் ஆண்மை கலந்த அடாவடி உணர்வை மிக செய்யும். ஆனந்தன்-நளினா ஜோடி பொருத்தத்தை கூட போலீஸ் சித்தப்பாவாகவே ரசித்து சிரிக்கும் அடாவடி பாணி.
9)ஆனந்தன்- சோகனாக தலைகாட்டும் விரக்தியாளன், எதிர்பாரா தருணத்தில் காதலி வந்ததும், வெறுமையான புரிதலில்லா
வெற்றுணர்வு,நிதர்சம் உணரும் சுதாரித்து, சிறிதே தெறிக்கும் கோபம்,படிப்படியாக உணரும் காதல் பரவசம், என்ன வா இப்படி, அட சும்மா வாங்கிறேன் என்ற கண்ணின் ஜாடை, கூந்தலை இழுத்து கட்டிலில் சரியும் உன்மத்தம் என்று அய்யோடா, அவரின் சிறந்த காதல் காட்சிகளில் தலையாயதாயிற்றே? கடைசியில் மணமேடையில் சத்தமாக அமங்கல சொல்லை உதிர்க்கும் ஆனதனை கண்டிக்கும் நளினாவும் , செல்ல கோபத்ததுடன் பம்மும் ஆனந்தனும், என்ன சொல்ல?
இத்தனையும் ஒரே படத்தில் . சவால் விட்டு வெல்ல கடவுளே போட்டி போட்டாலும் சத்தியமாக முடியாது.
பொதிகை தொலைக்காட்சி வாரம் முழுவதுமே நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத காவியங்களை கொண்டாடி வருகிறது,
பாகப்பிரிவினை, பாலும் பழமும், ஆலயமணி, பார்த்தால் பசி தீரும், பழனி என நம்மையெல்லாம் மகிழ்ச்சி கடலில் மூழ்கடித்தது,
இன்று முத்துச் சிப்பியை எடுப்பது போன்ற ஒளிபரப்பு,
* பாவ மன்னிப்பு*
இரவு 8:30 க்கு ...
பாவ மன்னிப்பு பல சாதனைகளை படைத்த ஒரு காவியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று,
வெள்ளி விழா காவியம், இசைத் தட்டில் தகர்க்க முடியாத சாதனை,
நடிப்பில் நடிகர் திலகத்தை குறை கண்டவர்கள் பாவ மன்னிப்புக்குப் பிறகு சுவடு தெரியாமல் போனார்கள், டூரிங் கொட்டகையில் 150 நாட்கள் ஓடிய உலகின் ஒரே காவியத் திரைப்படம்,
இத்தனை சாதனைகள் கொண்ட பாவமன்னிப்பு ஒரு சொல்ல முடியாத சோகத்தையும் வரலாற்றில் சேர்த்துக் கொண்டது, அந்த நிகழ்வு பற்றி பதிவு செய்ய மனம் இல்லை,
ஆனால் ஆனந்த விகடன் நிகழ்வைப் பற்றி எழுதும் போது கூட அதில் ஒரு பிரமாண்டம் மறைந்து போனது என மேற்கோள் காட்டியது..
பாவ மன்னிப்பை கொண்டாடிவோம்!!!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...94&oe=59D6E949
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d0&oe=59E8FDFF
http://i1146.photobucket.com/albums/...psde8be7f1.jpg
Jahir Hussain to Nadigarthilagam Fans · 3 hrs ·
Nadigarthilagam Fans க்ளப் இல்,,, உறுப்பினர்கள் எண்ணிக்கை 6400 கடந்தது,,, சேகர் சார் உட்பட பல நண்பர்கள் சென்னையிலும் முரளி சார் உட்பட பல நண்பர்கள் மதுரையிலும் கொடிக்குறிச்சி முததையா அண்ணன் போன்றோர் நெல்லையிலும் நமது தம்பியண்ணன் ரஸாக் அவர்கள் புதுக்கோட்டையில்,,, நாகராஜன் சார் & பிரதர்ஸ் & ஃபேமிலி & ஃப்ரண்ட்ஸ் பொள்ளாச்சியில் உள்ளார்கள்
தமிழ்நாடு தாண்டி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரந்து விரிந்து இருக்கிறார்கள்,,, பணி நிமித்தமாய் வெளிநாடுவாழ் நண்பர்களும் அதிக அளவில் உள்ள...
னர்,,, இதில் பெயர் குறிப்பிடாத நண்பர்கள் நிறைய பேர் உள்ளனர் அவர்களை குறிப்பிட்டு சொல்லாததனால் வருத்தம் வேண்டாம்,,,
இவர்கள் அனைவரும் சிவாஜி என்ற ஒற்றை இழையில் பின்னப்பட்டவர்கள்,, அன்பாலும் பண்பாலும் உயர்ந்தவர்கள்,,, ஆழ்ந்து பார்த்தோமே ஆனால் சிவாஜி ஐயா அவர்கள் போதித்த நன்னெறிகள் குடும்பப் பற்றுதல் பாசம் இங்கிதம் என்று பற்பல உணர்வுகளை பிரதிபலிப்பவர்கள்,, அவரது பொது வாழ்விலும் சரி இல்வாழ்விலும் சரி அவர் கடைபிடத்த நெறிகளை கண்டு வியந்து தொடர்பவர்கள்,,, இந்த "மனித சங்கிலி" வளையம் பிற நடிகர்களுக்கு வாய்க்கப் பெறாத ஒன்று,,, சம்பாத்தியம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு வாழ்ந்து மறைந்த திரையுலக கலைஞர்களை அவர்கள் காலத்திற்கு பிறகு மறந்துபோவது தான் மனித இயல்பு,,, இறைவன் படைப்பில் முழு வடிவம் பெற்ற உன்னதமான கலைஞன்,, மனிதனாக இருப்பதால் நாவாற மட்டுமின்றி மனதார போற்றுகிறோம்,,, அவர் வழிபேண விரும்புகிறோம்,,,
நமது நண்பர்கள் சொந்தபந்தங்கள் போல ஆகிப்போனோம்,,, பெரும்பாலான நண்பர்கள் 40 வயது கடந்தவர்கள் ஆனாலும் துடிப்பான இளைஞர் பட்டாளமும் இந்த தளத்தில் காணப் படுகிறார்கள்,,, சிவாஜி என்ற மஹா சமுத்திரத்தை அறிந்தவர்கள் ஆதலால் அவர்களும் நல் ஒழுக்கங்களை கடைபிடிப்பார்கள் என்பது திண்ணம்,,, ஏதோ ஒரு சந்தர்பத்தில் ஏதோ ஒரு விஷேக வைபவங்களில் நாம் சந்தித்து அளாவளாவி மகிழ்வது அல்லது துக்க சம்பவங்கள் நடந்துவிடும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் நிற்பது போன்ற சந்தர்பங்கள் உன்னதமானவை,,, நேற்று ஒரு சுபகாரியத்தில் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன்,,, இவ்வளவு எழுதுவதுமே ஒரு காரணத்திற்காக! நாம் ஒருவரை ஒருவர் நேரில் ஒரு முறையேனும் பார்க்கும் வாய்ப்பு உருவாக வேண்டும்,,, நாம் அனைவரும் வயது பேதமின்றி அந்த நாள் முழுக்க சிவாஜி சிவாஜி என்று அந்த மனிதனைப் பற்றியே அர்ச்சிக்க வேண்டும்,,, இந்த எளியோனின் விருப்பம் நிறைவேறுமா? காலம் பதில் சொல்ல வேண்டும்,,, நண்பர்களுக்கு நன்றி,,, (படம் அண்ணன் கௌசிங்கன் ராமையா அவர்களுடையது)
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...ee&oe=59AB6A0B
S V Ramani
· 7 hrs
அவர் ஒரு சரித்திரம் - 005.
சிவாஜி பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.இன்று நம் மனங்களையெல்லாம் உருக வைக்கும் இரு காட்சிகள் . வியட்நாம் வீடு படத்திலிருந்து.
காட்சி 1.
"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ "
மகாகவியின் இந்த இரண்டு வரிகளை எடுத்துக் கொண்டு கண்ணதாசன் வியட்நாம் வீடு படத்திற்காக எழுதிய பாடல். வேலையிலிருந்து ஒய்வு பெற்ற கணவன் தனக்கும் தனது மனைவிக்கும் அந்த வீட்டில் மதிப்பில்லை என்பதைஉணர்ந்து, தன் மனைவி தனக்கு எவ்வாறெல்லாம் பணிவிடை செய்து வந்தாள் என்பதை எண்ணி மனமுருகிப் பாடும் பாடல். படம் - வியட்நாம் வீடு; பாடியவர் - திரு டி எம் சௌந்தரராஜன். பாடலுக்கு இசை - கே வி மகாதேவன். பாடலை இயற்றியவர் - கவியரசர்
காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப்பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார்.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
(பலர் நின்னதன்றோ என்று உயிர் நின்றது போல் பாடுகின்றனர். என்கண்ணின் பாவை போன்றவளே,எனதுயிர் உனதன்றோ (நினதன்றோ) என்றே மகாகவி எழுதியுள்ளார். பாடலின் மாத்திரைக்கேற்ப (METER) அந்த எழுத்து சற்று அழுத்தி உச்சரிக்கப்படுகிறது)
உன்னைக் கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளி மயமானதடி
பொன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
பொன்னான அவளது கரம் பற்றியதால் தனது வாழ்வு ஒளிமயமானதி மட்டுமன்றி, சமூகத்தில் தனது பெயரும் பகழும் பெரிதும் வளர்ந்தது என்று அவளை மனதார பாராட்டுகிறார்.
காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத் தாங்கி
வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்துமென்ன
வேரென நீயிருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
காலச் சுமைதாங்கியாக தன்னை மார்பில் தாங்கி, தான் வேதனையில் இருக்கும் நேரம் சிந்துகின்ற கண்ணீர் தரையில் விழுவதற்குள் துடைத்து தனது இன்னலை தணிக்கும் மனைவியின் கண்ணில் கண்ணீர் வடிந்தால் தனது நெஞ்சில் அந்தக்காட்சியை காண முடியாது, குருதி வடியும் என்கிறார் கவிஞர். ஆலம் விழுதுகள் போன்று உறவினர் ஆயிரம் பேர் இருந்தாலும், வேரென தன்னை அவள் தாங்கிப்பிடித்ததால்தான் தான் சாய்ந்து விடாது தலை நிமிர்ந்து வாழ்ந்திருந்தேன் என்கிறார்.
முள்ளில் படுக்கையிட்டு இமையை மூட விடாதிருக்கும்
பிள்ளைக் குலமடியோ என்னைப் பேதமை செய்ததடி
பேருக்குப் பிள்ளையுண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு
என் தேவையை யாரறிவார், என்.... தேவையை யாரறிவார்
உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்
தன் பிள்ளைகளின் செயல் படுக்கையில் முள் வைத்தது போல் இமையை மூடவிடாமல் தன்னை வேதனை செய்கிறது என்று வருந்துகிறார். மேலும் பிள்ளைகள் என்று பெயருக்கு இருந்தாலும், பேசுவதற்கு உறவினர்கள் இருந்தாலும், தனது தேவையை தெய்வம் போன்ற அவள் மட்டும்தான் அறிவாள் என்கிறார். (இங்கு என் தேவையை யாரறிவார் என்று இரண்டாம் முறை கேள்வி கேட்பது போன்று பாடும்போது, தானும் அவரது தேவைகளை சரிவர அறிந்திருக்கவில்லையோ என்று பத்மினியின் முகத்தில் ஒரு கணம் தோன்றும் திகைப்பும், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும் என்று அவர் பாடி முடிக்கும்போது, அவர் சிந்தும் நிம்மதி கலந்த கண்ணீரும் நமது உள்ளத்தில் இவர்கள் அல்லவோ ஆதர்சத் தம்பதிகள் என்ற மகிழ்வையும் (சிறிது பொறாமையையும்) உண்டாக்குகின்றன.
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என்கண்ணின் பாவையன்றோ கண்ணம்மா என்னுயிர் நினதன்றோ
உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
சிவாஜி, பத்மினி இருவரும் இப்பாடலில் நடிக்கவில்லை, வாழ்ந்தே காட்டியிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் காட்டும் வாத்சல்யம், அதிலும் சிவாஜி பத்மினி மீது கொண்டிருக்கும் அதீத நம்பிக்கையும் அன்பும், நமது உள்ளங்களை கலங்க வைக்கின்றன. வயதான காலத்தில் தமக்குத் தாமே துணை என்பது சிறிது வேதனை தரும் விஷயம்தான். இவர்கள் இருவரது நடிப்பைப் பற்றிக் கூற எத்தனை காண்டங்கள் எழுதினாலும் போதாது.
இவர்கள் இருவரைத் தவிர இன்னும் இருவரைப் பற்றி கூறியே தீர வேண்டும். முதலில் திரை இசைத் திலகம் திரு கே வி மகாதேவன். காட்சியின் அழுத்தத்தை நன்கு உணர்ந்து, இசை ஒரு துளியும் பாடல் வரிகளை மீறி ஒலித்து விடாமல் மனதை இளகச் செய்யும் ஒரு அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார். கவியரசரோ, மகாகவியின் பாடலிலிருந்து இரண்டு வரிகள் மட்டும் எடுத்துக் கொண்டு, அவரே "பலே பாண்டியா" என்று பாராட்டும் வண்ணம் மனதை நெகிழச் செய்யும் பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார். இப்படிப் பட்ட ஒரு பாடலை நாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்!
காட்சி - 2 இறுதிக் காட்சி
"நீ முந்தின்டா நோக்கு, நான் முந்தின்டா நேக்கு"
ஒரு நிறுவனத்தில் மாதச்சம்பளத்தில் பணிபுரியும் மூத்தபிள்ளை ஸ்ரீதர் (ஸ்ரீகாந்த்). மனைவி சொல்வதற்கெல்லாம் 'பூம் பூம் மாடாக' தலையாட்டும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை. அவன் அடிமைத்தனத்தை பயன்படுத்திக்கொண்டு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் மாமனார், மாமியார் பற்றி வத்தி வைப்பதையே வேலையாக அலையும் அவன் மனைவி மாலா (ரமாப்ரபா).
வேலைமுடிந்து வீட்டுக்குள் நுழையும் மூத்த மகனிடம், பத்மினி மெதுவான குரலில் "டேய் ஸ்ரீதர், உங்க அப்பா ரிட்டயர்ட் ஆயிட்டாருடா. நீ உங்க அப்பா கிட்டே போயி 'அப்பா கவலைப்படாதீங்க, இனிமே குடுமபத்தை நான் பாத்துக்கறேன்'ன்னு ஆறுதலா ரெண்டு வார்த்தை சொல்லுடா" என்ற் கெஞ்சுவதுபோல கேட்கும் தாயின் குரலுக்கு செவி மடுத்து அப்பாவின் அறைக்குப் போகப்போகும் கணவனை மனைவி மாலா வழி மறித்து, தன் அறைக்கு அழைத்துச்சென்று அவனுக்கு தூபம் போடுவது டிப்பிக்கல் நடுத்தர வர்க்க குடும்பத்தின் அச்சடித்த பிரதிபலிப்பு என்றால்....
அப்பா ரிட்டையர்ட் ஆன முதல்மாதம் மகன் சம்பளத்தை வாங்கி வந்து தங்களிடம் தருவான் என்று எதிர்பார்த்திருக்கும்போது, அவன் வந்து "அம்மா, இந்த மாதத்துக்கு எனக்கும் மாலாவுக்கும் சாப்பாட்டுப்பணம்" என்று நீட்டுவது பெரும் அதிர்ச்சி .வேலைக்கார முருகன் கூட அவரை அவமதிப்பது பெரும் கொடுமை.
சிவாஜிக்கு இதய நோய் வந்து ஆஸ்பத்திரிக்கு செல்லுமுன் தனது குடும்பத்துக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து விட்டு ஒவ்வொருவரிடமும் பேசும் வசனங்கள் மிகவும் உணர்ச்சிபூர்மனவை. அனைவரும் மனம் திருந்தி மனம் வருந்தி தந்தையிடம் மன்னிப்பு கேட்கின்றனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பும் சிவாஜியை அனைவரும் ,மகிழ்ச்சியுடன் வணங்கி வரவேற்கின்றனர். குடும்பம் ஒன்றானதை கண்டு சிவாஜி மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறார். மருத்துவர் பத்மினியிடம் அவருடைய இதயம் பலவீனமாய் இருப்பதால் அவருக்கு அதிர்ச்சி தரும் விஷயம் எதுவும், ஆனந்தமானதாய இருந்தாலும் அதிர்சியானதாய் இருந்தாலும் கூறக் கூடாது என்று சொல்கிறார். அப்போது அவர் வேலை செய்த நிறுவனத்தின் முதலாளி அங்கு வந்து அவரது வேலை நீட்டிப்புக்கான உத்தரவு கடிதத்தை தருகிறார். மகிழ்ச்சி, கர்வம், பெருமிதம் ஆகிய உணர்ச்சிகள் ஒன்று சேர அவர் தன தாயின் படத்தின் முன் நின்று"அம்மா, எனக்கு வேலை கிடைத்து விட்டது. எனது சேவையை மதித்து எனக்கு மேனேஜர் பதவி தந்திருக்காங்கம்மா, மாசம் 10000 சம்பளம், மாசம் 10000 என்று கூறிக்கொண்டே இதய துடிப்பு நின்று போய் உயிரை விடுகிறார். அந்தக் காட்சியை freeze செய்வதுடன் படம் முடிவடைகிறது இறுதிக் காட்சியின் போது கண் கலங்காதவர்களே இருக்க முடியாது. என்னால் அவர் கூறும் வசனங்களை அப்படியே எழுத முடியவில்லை. அதனால் பொதுவாக எழுதியுள்ளேன். எழுதுவதற்கே முடியவில்லை என்றால், பார்பபது எவ்வளவு நெஞ்சை உருக்கும்.. இருப்பினும் அந்த இறுதிக் காட்சியை இத்துடன் இணைத்துள்ளேன்.
அந்த மாபெரும் நடிகனுக்கு நமது கண்ணீர் அஞ்சலி. ஜெய்ஹிந்த்!.
https://www.youtube.com/watch?v=mBl6Cw5i1oc
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f1&oe=59AA509B
Nagarajan Velliangiri
· 2 hrs
( நண்பர் திரு.Sekar Parasuram அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கி, பாவமன்னிப்பு படத்தின் ஒரு சிறு பார்வையை மீள்பதிவு செய்கிறேன். திரும்பத் திரும்ப திலகத்தின் படங்களைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோசம் அவரைப்பற்றிய பதிவுகளை மீள்பதிவு செய்வதிலும் கிடைக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய நண்பருக்கு நன்றி.) (புனித ரமலான் மாதத்தில் , வரும் பொருத்தமான பதிவு என நினைக்கிறேன்). 'இவரைப் போன்ற ஒரு நண்பரை நான் பெற்றால் எவ்வளவு நன்றாக இருக்கும், இவரைப் போன்ற மனிதர்களே உலகில் அனைவரும் இருந்து விட்டால் உலகம் எவ்வளவு அமைதியாக இருக்கும், இவரைப் போன்ற மகனைப் பெற எவ்வளவு தவம் செய்திருக்க வேண்டும்' ....என்றெல்லாம் எண்ண வைக்கும் இளைஞன். அமைதியும் சாந்தமும் திகழும் முகம். அதிர்ந்து பேசாத அமைதியான சுபாவம்..பகைவனுக்கும் அருளும் பண்பு......அதுதான் ரஹிம். A.பீம்சிங் இயக்கத்தில், ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து, 1961 இல் வெளிவந்த 3.15 மணி நேரம் ஓடக்கூடிய நீளமான படம் 'பாவமன்னிப்பு'. படம் தொடங்கிக் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்துத்தான் திலகம் அறிமுகமே ஆவார்.'எல்லோரும் கொண்டாடுவோம்..அல்லாவின் பெயரைச் சொல்லி..நல்லோர்கள் வாழ்வை எண்ணி...' என்ற அருமையான , கருத்தாளம் மிக்க பாடலுடன் அவர் என்ட்ரி ஆரம்பிக்கும். படம் முழுமையும் அதே சாந்தமான முகம், Subtle acting தான். கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லோருமே சாந்த சொரூபிகள்தான், ஒரே ஒருவரைத் தவிர. அவரைப்பற்றி நிறையச் சொல்ல வேண்டும். அதைத்தனியே அப்புறம் எடுத்துக் கொள்ளலாம். நிறையப் படங்களில், திடுக்கிடும் ரகசியங்கள், திருப்பங்கள், நாயகன், நாயகி பற்றிய ஏதேனும் செய்திகள் போன்றவை படம் முடியப் போகும் கிளைமாக்ஸில் சொல்லுவார்கள்.ஆனால், இப்படத்தில் எல்லா விசயத்தையுமே ஆரம்பத்திலேயே சொல்லி விடுவதால், பார்வையாளர்களுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் என்று எதுவும் இல்லை. ஆனால் படத்தின் வெற்றியே, கதையை ஆரம்பத்திலேயே சொல்லி விட்டும் 3.15 மணி நேரம் அனைவரையும் கட்டிப் போடும் திரைக்கதைதான். ரகசியங்கள் எல்லாம் பார்ப்பவர்களுக்குத் தெரியும், ஆனால் படத்தில் வரும் பாத்திரங்களுக்குத் தெரியாது.ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ந்து , இறுதியில் அனைத்தும் தெளிவாக முடியும். ஆளவந்தார் என்கின்ற பணக்கார வைர வியாபாரிக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அவரின் ஒரு குழந்தை சிறு வயதிலேயே காணாமல் போகிறது. அவரால் ஏமாற்றப்பட்ட விசுவாச வேலைக்கார TS பாலையாவால் , பழி தீர்க்க கடத்திச் செல்லப்பட்ட குழந்தை. அதுதான் சிவாஜி. மற்றவர் ஜெமினி. சிவாஜி குப்பத்திலும், ஜெமினி பணக்காரப் பிள்ளையாகவும் பின்னர் போலிஸ் அதிகாரியாகவும். பொன்னகரம் என்ற குப்பத்தின் ஏழை ஜனங்களுக்குப் போக்கிடமே பாரதி வைத்தியசாலை என்ற பெயரில் வைத்தியம் பார்க்கும் இஸ்மாயில் பாயாக வரும் நாகையாவும் , சுப்பு சாஸ்திரியாக வரும் கொத்தமங்கலம் சுப்புவும்தான் ( தில்லானா மோகனாம்பாள் காவியத்தைத்தந்தவர்). அந்தக்குப்பம் இருக்கும் இடம் தனக்குச் சொந்தமானது என்று சொல்லி, அதைச் சர்க்கரை ஆலை கட்ட விற்க முயலும் ஆளவந்தாரின் முயற்சிக்குத் தடையாக இருக்கும் ரஹிமின் மேல் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு வெறுப்பு. ஆளவந்தாரால் ,நயவஞ்சமாகப் போலிஸில் மாட்டப்பட்டுச் சிறை செல்லும் TS பாலையாவின் ஒரு பெண் ,சாவித்திரி, தங்கமாக, வேலைக்கார ஆயாவின் பெண்ணாக குப்பத்திலும், இன்னொரு பெண், தேவிகா, சமூக சேவகர் ஜேம்ஸ் என்னும் கிருத்துவராக வரும் SV சுப்பையா வீட்டில் மேரியாகவும் வளர்கிறார்கள். பணக்கார ஜெமினி, ஏழைத் தங்கத்தைக் காதலிக்கிறார், அப்புறம் பிரிந்து போலிஸ் டிரெய்னிங் போய்விடுகிறார். தேவிகா ரஹிமைக் காதலிப்பார். ஆளவந்தாரின் மனைவி M.V.ராஜம்மாவுக்கு, தேவிகாவைத் தன் மகன் ஜெமினிக்குத் திருமணம் செய்து வைக்க ஆசை. அது நிறைவேறியதா, ஆளவந்தாரின் பணத்தாசைக்கு எப்படியெல்லாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே மீதிக்கதை. இப்படம் மத நல்லினக்கத்துக்கு அருமையான ஒரு உதாரணம்.படத்தில் நான்கு மதங்கள் சம்மந்தப்பட்டுள்ளன. கிருத்தவம், இஸ்லாம், இந்து மற்றும் புத்தமதங்கள்.( படத்தயாரிப்பு பேனரே புத்தா பிலிம்ஸ்தான்). ஜெமினி சாவித்திரிக்குக் காதல் பரிசாக புத்தர் சிலை ஒன்றைக் கொடுத்து புத்தரின் அன்பைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்லுவார், அதைத்தவிர புத்தமதம் பற்றி இதில் வேறெதுவும் இல்லை. ஆரம்பத்தில் இஸ்மாயில் பாய் ( நாகையா) புனிதக் குர்ரான் பற்றிச் சொல்லும் கருத்துக்கள் உயர்வானவை. படம் முழுவதும் எம்.வி.ராஜம்மா பூஜைத்தட்டோடு கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருப்பார். அவ்வப்போது ஜேம்ஸ் கிருத்துவத்தின் கருணையைச் சொல்லுவார்.போப்பாண்டவரைச் சந்தித்து விட்டு வந்து அவரைப்பற்றிச் சொல்லும் கருத்துக்கள் அருமை. இவ்வளவு கதை மாந்தர் இருந்தும் மூன்று மதங்கள் படம் முழுக்க விரவி இருந்தும் , ஒரு இடத்தில் கூட , எந்த ஒரு மதம் பற்றிய சம்பிரதாயங்களையும் , வழிபாடுகள் பற்றியும் சொல்லாது இயல்பாக கதை நகர்த்தி இருப்பது தனிச்சிறப்பு. மேலும் எந்த விதமான மத மாச்சரியக் கருத்துக்களும் இல்லாதது அருமை. பணத்தாசை கொண்ட ஆளவந்தாருக்குக் கூட மதம் ஒரு பிரச்சினை இல்லை, பணம் மட்டுமே பிரதானம். இப்போது ஆரம்பத்தில் சொன்ன அவரைப்பற்றி ஒரு சிறப்புப் பார்வை. ஆளவந்தாராக வரும் M.R. ராதா. அப்பப்பா, என்ன ஒரு performance? உடல் முழுக்க சந்தனம், வாய் திறந்தால் என் அப்பன் ஞானபண்டிதன் என்ற பேச்சு , தெய்வத்துக்குப் பயந்ததாகத் தோற்றம்...ஆனால் அவ்வளவும் வெளிவேசம்... மனசு முழுக்க விசம். பணம் பணம் பணம் இது மட்டுமே அவர நோக்கம். படம் முழவதும் பிரேம் பை பிரேம் அவர்தான் ஆக்கிரமித்திருப்பார். படத்தின் முதுகெலும்பே அவர்தான். ரத்தக்கண்ணீர் போல ராதாவின் திரைவாழ்வில் இது மிகவும் குறிப்பிடும்படியான படம். என்ன டயலாக் டெலிவரி, டைமிங், மாடுலேசன்.... உதாரணத்துக்கு ஒன்று "ஜேம்ஸூ,ஞானபண்டிதன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை ஆனா நான் போறேன், ஞாயித்துக்கிழமை ஆனா மாதா கோயிலுக்கு நீ போற. வாரம் பூரா செஞ்ச பாவத்தை ஒரு நாளாவது சாமிகிட்டப் போயி சரிப்படுத்தனும் இல்ல......". சிவாஜியின் முகத்தில் ஆசிட் ஊற்றிச் சிதைக்கும் அளவுக்குக் கொடூர சிந்தனை..... அருமையான பாத்திரம் அவருக்கு...அப்படி வீடு கட்டி விளையாடி இருப்பார்.. இப்படியும் ஒரு மனம் முதிர்ந்த, நிலை பிரளாத ஒரு இளைஞன் இருக்க முடியும் என்று நிரூபித்தவன் ரஹிம். வயதுக்கு மீறிய முதிர்ச்சியான சொல்லும் செயலும் நடத்தையும். ஊர் ஊராகச் சென்று ஏழை எளிய மக்களுக்குச் சேவை...சேவை ஒன்றைத்தவிர வேறு எதுவுமே அறியாத உத்தமன். " எதுவும் யாருக்கும் சொந்தமில்லை...இந்த மண்ணை எல்லாம் வளைத்துக் கொள்ளும் மன்னாதி மன்னனாக இருந்தாலும், முடிவில் இம்மண்ணில்தான் போய்ப்புதைய வேண்டும்" என்பது போன்று வயதுக்கு மீறிய பக்குவ ம்..... தேவிகா காதலியாக இருந்தாலும் அவரிடம் இவர் காட்டும் கண்ணியம்... அமைதியாகச் செல்லும் ஆற்றோட்டமான நடிப்பு. முகத்தில் ஆசிட் வீசப்பட்டதும் வலியும் எரிச்சலும் தாங்க முடியாமல் தரையில் விழுந்து புரண்டு கதறும் போது, கல்லான மனங்கள் கூடக் கரைந்து போகும். இப்படிப் பட்ட உத்தமனுக்கா இப்படி ஒரு நிலை வர வேண்டும் என்று நம் மனம் பதறித் துடிக்கும் ராதாவின் ஆர்ப்பாட்டமான நடிப்பும் திலகத்தின் அமைதியான நடிப்பும் நேர் எதிர் துருவங்கள்.. இங்க ஒருவரைப்பற்றி மிக முக்கியமாகச் சொல்லியே ஆக வேண்டும். கண்ணதாசன். எவ்வளவு அற்புதமான பாடல்களைத்தந்திருக்கிறார்? வந்த நாள் முதல்........ காலங்களில் அவள் வசந்தம்.....சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்...... எல்லோரும் கொண்டாடுவோம்........அத்தான் என்னத்தான்......காலங்கள அழிந்தாலும் நிலைத்திருக்கும் காவியப்பாடல்கள். தேன் சொட்டும் இசை அமைத்த மெல்லிசை மன்னர்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ரஹிம் என் மனங்கவர்ந்த ஆதர்ச புருசன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...c5&oe=599D2D0A
Jahir Hussain
நண்பர்கள் மன்னிக்க,,, இந்த தளத்தில் ஒரு அரசியல் பதிவு) அரசியலில் தூய்மை.... பொது வாழ்வில் நேர்மை,,, மேடைப் பேச்சில் கண்ணியம்,,,, கொள்கைக்காக செய்யும் தியாகம்,,, ஏற்றுக் கொண்ட தலைவரை என்றும் போற்றி மகிழ்ந்த தன்மை,,, தெய்வபக்தி,,, அதற்கு மேல் தேசபக்தி,,, தமிழுணர்வு, சமய நல்லிணக்கம்,,, கொள்கை சமரசமற்ற மனது,,, தொண்டர்கள் நண்பர்கள் இவர்களுடனான இணக்கம்,,, வெளுத்த சலவைச் சட்டைபோன்ற வெள்ளந்தி குணம்,, இரக்கம், பாசம், மனித நேயம்,,,, இன்னும் எத்தனை எத...்தனை நற்குணங்கள் அடங்கிய முத்துப் பேழை நீ,,, இதனால்தான் ஐயா அரசியலில் நீ தோற்கடிக்கப் பட்டாய்! அது வெட்கங் கெட்ட ஓட்டரசியல்,,, நீ வென்று இருக்கிறாய் பசும்பொன்னைப் போன்ற தூய அரசியலை,,, அதுதான் ஸ்வாமி நிஜம்,,, ஓட்டரசியலில் வென்றோர் பதவி சொறிப் பிடித்து அலைந்தனர்,,, சொறிய சொறிய சுகமான பதவி இன்று சிரங்கு சீழ் பிடித்து இருக்கிறது,,, மன்னா நீ எங்களை வென்றாய்,, உன் அடிதொழும் உண்மை நேசர்களை மழைநீரைப் போல் விட்டுச் சென்றாய்,,, வாழ்க எம்மான்,,, வாழ்க அண்ணல் சிவாஜி,,,, படம் உதவி,, அண்ணன் கௌசிங்கன் ராமையா,,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...9d&oe=599D7C30
Trichy Srinivasan · 3 hrs ·
14. நான் பெற்ற செல்வம் :
உலக மகா நாயகனின் நடிப்பில் இத் திரை காவியத்தில் நடிகர் திலகம் திருவிளையாடல் படத்தில் சிவனாக காட்சியருளி நக்கீரனுடன் உரையாடலில் ஏ.பி.நா...கராஜன் அவர்கள் நக்கீரனாக வருவார். சிவனாக சிவாஜி வருவார். ஆனால் இதில் சிவாஜி அவர்கள் சிவனாகவும், நக்கீரனாகவும் ஜொலிப்பார். உண்மையில் சிவாஜியின் வாழ்க்கை பொறாமை படக் கூடிய வாழ்க்கை. அழகில் சிறந்தவர் சிவாஜி, குரல் வளம் சிம்மக் குரல், எந்த வேடம் போட்டாலும் பொருந்தக்கூடிய ஒரு முகவெட்டு, மேலும் அருமையான குடும்ப வாழ்க்கை, பெரிய குடும்பம், நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற சொல்லுக்கேற்ப வாழ்ந்தவர். இப்படிப்பட்ட இந்த மனிதர் எடுத்து நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. அதுவும் இந்த படத்தில் சிவனாகவும், நக்கீரனாகவும் வெலுத்து வாங்கும் காட்சி, கண்டிப்பாக அனைவரது கண் திருஷ்டி படும் அந்த அளவிற்கு விலாசி தள்ளுவார். ஆரம்ப காலங்களிலேயே புகழ் ஏனியின் உச்சிக்கு சென்றவர் இந்த உலக மகா நாயகன். பாருங்கள் ....மகிழ்ச்சி அடையுங்கள்....நாளை அடுத்த படத்தில் பார்ப்போம்...நன்றி
திருச்சி எம்.சீனிவாசன்.
https://www.facebook.com/trichy.srin...3776920064933/
Sundar Rajan
· 6 June at 07:11 ·
எதிரிகள் ஓநாய் போல் ஓலமிட்டாலும்,
ஊடகங்கள் எப்படி ஊளையிட்டாலும்
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின்
சாதனையை ஒரு போதும்
மறைக்க முடியாது..... ...
மறைக்கவே முடியாது....
ஆம், அன்பு இதயங்களே, சமீபத்தில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வுக்கு தினத்தந்தி நாளிதழில் வாரம் தோறும் பொதுஅறிவு வினா விடையை வெளியிட்டு வந்தனர்.
அதில் நமது நடிகர்திலகத்தைப் பற்றி கேள்வியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கலையுலகில் அன்றும் இன்றும் என்றும் அசைக்க முடியா சக்தி சிவாஜி என்பது நிரூபமாகிறத
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...60&oe=59E5918D
Gopal sir, wow what a writing, please keep make us happy like this.
Common audience will be bored of watching same toys kind of movies and will reject and forget soon.
Nadigar thilagam each and every movie is different and we can take depends upon any audience situation.
ஒவ்வொரு நடிகர் திலகம் படம் அமுதா சுரபி
Sundar Rajan அன்பு இதயங்களே,
நமக்கு மாபெரும் வெற்றி செய்தி ஆம், இதயங்களே, மதுரையில் நடிகர்திலகத்தின் சாதனை வரலாற்றில் மேலும் ஒரு நிகழ்ச்சி இணைந்து விட்டது.
கலை உலகமே கலங்கி... நிற்கிறது,.
எதிரிகளோ வாயை பிளக்கின்றனர்,
விநியோகஸ்தர்களோ வியக்கின்றனர்,
சிவாஜி இந்த வார்த்தையால் இன்றும் கலையுலகம் கட்டுண்டு கிடக்கிறது.
ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாள் வெற்றிவிழாவைக் கொண்டாடுகிறார் மதுரையில்....
வரும் ஞாயிறன்று (11.06.2017) மீனாட்சி பாரடைஸ் திரையரங்கில் மாலை 5.30 மணிக்கு 25வது நாள் வெற்றிவிழா சிறப்பாக நடைபெற இருக்கிறது.
மக்கள்தலைவரின் மாசற்ற மாணிக்கங்களே,
உங்களின் வருகை நிச்சயிக்கப்பட்ட ஒன்றாகட்டும்.
விழா கூட்டம் கண்டு அரளட்டும் அனைவரும்.
ஞாயிறு மாலை இன்றே தயாராகுங்கள் குடும்பம் குடும்பமாக....
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0e&oe=59DFA454