http://i68.tinypic.com/2ytxwt3.jpg
Printable View
http://i67.tinypic.com/2qntezk.jpg
சத்திய சோதனை எத்தனை நேரிலும் தாங்கிடும் இதயமிது .
http://i67.tinypic.com/10y42oo.jpg
பொய்மை எப்போதும் ஓங்குவதுமில்லை .
மக்கள் திலகம் பெருமை மிகு 23 ம் திரி துவக்கத்திலேயே திரு லோகநாதன் அவர்கள் சாதனைகளின் புதிய அத்தியாயம் 20001 அட்டகாசமான பதிவுகள் கடந்து வெற்றி பெரு நடைக்கு நம் உறுப்பினர்கள் அனைவரின் சார்பில் நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்...
புரட்சி தலைவர் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன், திருப்பூர் அவர்களின் பிறந்த நாள் (22-03-2018), நல் வாழ்த்துக்களை நமது திரி அங்கத்தினர்கள் எல்லோருடைய சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி...
புரட்சி தலைவர் திரியின் நெறியாளர் திரு ரவிச்சந்திரன், திருப்பூர் அவர்களின் பிறந்த நாள் (22-03-2018), நல் வாழ்த்துக்களை நமது திரி அங்கத்தினர்கள் எல்லோருடைய சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி...
"நாடோடி மன்னன்" டிஜிட்டல் நாளை முதல் பழைய பட வரலாற்றில் முதன் முறையாக கோவை- சென்ட்ரல் 70mm a/c dts யில் மக்கள் திலகம் வெற்றி விஜயம்...
மக்கள் திலகத்தின் தீவிர அபிமானியும் , பெங்களூர் - காந்தி நகர் தொகுதியின் முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினருமான திரு முனியப்பா (70) அவர்கள் இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்பதை துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன் .
கோவை சென்ட்ரல்
திரையரங்கில்
24.3.2018 முதல்
நாடோடி மன்னன்
கலையுலக சக்ரவர்த்தி மக்கள் திலகம் சகல கலா வித்தகராக நிரூபித்த "நாடோடி மன்னன்" திருநெல்வேலி பகுதிகளில் நெல்லை, தூத்துக்குடி, நாகர் கோயில், அம்பாசமுத்திரம், கடையநல்லூர், கோவில்பட்டி, தென்காசி உட்பட 7 செண்டர்களில் திரையிட பட்டுள்ளது...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி - சாந்தி dts தினசரி 4 காட்சிகள் மக்கள் திலகம் "அடிமைப்பெண்" மகத்தான ஆரம்பம்...
http://i65.tinypic.com/a0kmxf.jpg
http://i66.tinypic.com/mlh9hx.jpg
இரங்கல் செய்தி
---------------------------
பெங்களூரு காந்தி நகர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் , மரியாதைக்குரிய அன்பு அண்ணன் திரு.பி.முனியப்பா ,70 வயது , அவர்கள்
உடல் நல குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் (23/3/2018) 2.30 மணியளவில் உயிர் நீத்தார்
என்கிற செய்தி அறிந்து மிக்க துயருற்றேன் .
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் தீவிர ரசிகரும், பக்தருமான திரு.முனியப்பா அவர்கள் புரட்சி தலைவரது புனித வழியில் உண்மையாக உழைத்தவர் .நேர்மையாக வாழ்ந்தவர் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர் .தலைவரின் புகழ் காக்கும் , பரப்பும் மேடைகளில் தனக்கே உரித்தான அழகு தமிழில் , கன்னடம் கலந்து பேசி எம்.ஜி.ஆர். ரசிகர்கள் /தொண்டர்களின் இதயங்களை தன் பக்கம் ஈர்த்தவர் . பணத்துக்காகவும் ,பதவிக்காகவும் ,சுய மரியாதையை இழக்காமல் , தேடிவந்த பதவிகளையும் துறந்தவர் .எளிமையான வாழ்வை மிக கம்பீரமாக வாழ்ந்தவர் .பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கும் ,பக்தர்களுக்கும், தொண்டர்களுக்கும், பக்க பலமாகவும், அரணாகவும் இருந்து வந்தவர் .அ. தி.மு.க.வின் தலைமை செயல்பாடுகள் பிடிக்காததால் ,கட்சியை விட்டு விலகி பா.ஜ க. கட்சியில் இணைந்திருந்தாலும் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய நிகழ்ச்சிகள் ,சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு போன்ற நகரங்களில் எங்கு நடந்தாலும் தனது உடல்நிலையை கூட பொருட்படுத்தாது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலந்து கொண்டு சிறப்பித்தவர் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுடன் அவரது தொடர்பு, உறவு, நிகழ்வுகள் ஆகியவற்றினை ரசிகர்களுடன் /பக்தர்களுடன் மணிக்கணக்கில் பேசி மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துவதில் வல்லவர் . குறிப்பாக பெங்களூரு மாநகர எம்.ஜி.ஆர். பக்தர்களுக்கு அவரது மறைவு பேரிழப்பு . அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று (24/3/18) பிற்பகல் 1 மணியளவில் புறப்பட்டு, மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக பெங்களூரு மாநகர் எம்.ஜி.ஆர். பக்தர்கள் தகவல் அளித்தனர் .
திரு..முனியப்பா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவன் எம்.ஜி.ஆர். அருள் புரிவாராக .
திரு.பி.முனியப்பா அவர்களின் மறைவால் , அவரை இழந்து தவிக்கும் அவரது மனைவி, மற்றும் குடும்பத்தினருக்கு என் சார்பிலும், நான் சார்ந்த ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு மற்றும் அனைத்து சென்னைவாழ்
எம்.ஜி.ஆர். பக்தர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை /அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
ஆர். லோகநாதன் .
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு
சமீபத்தில் திரு.பி.முனியப்பா அவர்களின் 70 வது பிறந்த நாள் பெங்களுருவில் (30/1/2018)கொண்டாடப்பட்டது .-மலரும் நினைவுகள்
புகைப்படத்தில் அவரை வாழ்த்திய ரசிகர்கள் : திரு.மோகன்குமார் , திரு.சி.எஸ். குமார் , திரு.ரவி ஆகியோர் .
http://i63.tinypic.com/29vf0a1.jpg
https://s9.postimg.org/vcfir3iin/IMG_8307.jpg
திருப்பூர்
வாரணாசி
மற்றும்
ஜோதி
திரையரங்குகளில்
நாடோடி மன்னன்
தினத்தந்தி -22/3/18
http://i63.tinypic.com/2lcwsag.jpg
சென்னை ஆல்பட், பாரத் (தினசரி 2 காட்சிகள் ) வில்லிவாக்கம் ஏ.ஜி.எஸ்.(தினசரி 6.30 மணி ) மற்றும் சித்தூர் ஆனந்தா ஆகிய திரை அரங்குகளில் 23/3/18 வெள்ளி முதல்
மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து 1958 ல் மாபெரும் வசூல் புரட்சியை /சாதனையை உருவாக்கிய "நாடோடி மன்னன் " முற்றிலும் புதிய
தொழில்நுட்பம் , மற்றும் பரிமாணத்தில் கோலாகல ஆரம்பம்
http://i65.tinypic.com/qo98au.jpg
தினத்தந்தி - 23/3/18
மதுரை வெற்றி, கோவை சென்ட்ரல் , நெல்லை ரத்னா , நாகர்கோயில் கார்த்திகை ,
அம்பை பாலாஜி ,கோவில்பட்டி சத்யபாமா, ஆலங்குளம் பி.எஸ்.எஸ்., கடையம் நியூ பாம்பே , தென்காசி பி.எஸ்.எஸ். ஆகிய திரை அரங்குகளிலும் நாடோடி மன்னன் வெற்றி விஜயம் .
எனது பிறந்த நாளில்
வாழ்த்துக்கள் வழங்கிய
அன்புள்ளங்கள்
நடிகை கலையரசி லதா
நடிகர் சத்யராஜ்
இதயக்கனி விஜயன்
பேராசிரியர் செல்வகுமார்
திரு வினோத்
திரு கலீல் பாட்சா - திருவண்ணாமலை
திரு கலியபெருமாள் - புதுச்சேரி
நமது திரியில் மற்றும்
முகநூலில்
WhatsApp-ல்
நேரில்
வாழ்த்து தெரிவித்த
அனைத்து நல்லுள்ளங்களுக்கும்
நன்றி
இப்படிக்கு
- எஸ் ரவிச்சந்திரன்
சென்னை ஆல்பட் அரங்கில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள்
http://i66.tinypic.com/dnm6jb.jpg
https://s9.postimg.org/v3hy0wxxr/253...fe1fc8e55e.jpg
இன்று
ஏழிசைவேந்தர் டி எம் எஸ் அய்யா
பிறந்த தினம்
நமது தலைவருக்காக
இவர்
பாடிய பாடல்கள்
அனைத்தும்
மிக அருமை.
தினத்தந்தி - 24/3/18
http://i66.tinypic.com/wqxchy.jpg
மதுரை வெற்றி - புகைப்படங்கள் உதவி : நண்பர் திரு.எஸ். குமார்.
http://i68.tinypic.com/vfxc37.jpg