The greatness of Chennai.
Quote:
Originally Posted by bis_mala
பாலாறு .................. விளக்கமுண்டா?
Quote:
Originally Posted by kirukkan
அடையாறை அழுக்காறு(கூவம்) ஆக்கியது நாம்தானெ....உயிர் தரும் நதிகளுக்கெ விஷம் (ரசாயன கலப்பின் மூலம்)வைப்பவர்கள் தானே நாம்...
எது எப்படிப் போனாலும் சென்னை பெருமைக்குரிய நகரம்தான்,
அதில் வாழ்வோரும் பெருமைபெற்றவர்களே.
எனவே:
கூவத்துக் குப்பையைக் கூட்டி அள்ளி
குற்றால அருவியாய் மாற்றிக் கொள்ள
ஆபத்தைக் காத்திடும் தொடர்வண்டிகள்
அதன்மேலே விட்டவர் சென்னைவாசி.
என்று சென்னைவாசியின் பெருமையைப் பாடினால்
அது பொருத்தமாக இருக்கக்கூடும், அல்லவா?
A prologue to children's poem
சிறுவருக்குப் பாடலொன்று
புனைவதென்றால் எளிதென்று
சொல்லற் கில்லை;
சிறுவருக்கென் றெழுதியபின்
ஒருவருக்கும் வேண்டாவேல்
என்ன செய்வோம்?
முறுவலிக்கும் தோழியரே
வாய்திறக்க வேளையன்றே
என்று சொன்னால்
பெறலரிய நும்கருத்தைப்
பின்நாளில் சொன்னாலும்
தக்க தொன்றே.
take care not to be verbose! we must..
நல்ல கவிதை எழுதிடுவோம் -- நம்
நற்றமிழ் ஓங்க உதவிடுவோம்,
சொல்லில் சிக்கனம் தேடிடுவோம் -- வேண்டாச்
சொற்களை நீக்குதல் நாடிடுவோம்.
வேண்டாப் பலசொல் விதைப்பீரேல் -- அதை
வேண்டிப் படிப்போர்க் கிடர்ப்பாடே,
யாண்டும் நதியின் ஒழுக்கினைப்போல் -- மதி
தூண்டும் அழகில் இழுக்குளதோ?
எழுதுவதைத் துணிவோடும் எழுத வேண்டும்
"எனதுகவி யாப்பியலைத் தொழுத தன்றே!
பழுதுதனைப் பார்க்காதீர்!"எனவோர் பாணி
பாவலரும் அல்லவரும் பதியத் தக்க,
வழுதுணையே அன்றெனவே சொலவே வேண்டும்,
"வனிதை இவள் மனையறத்தின் வரம்பில் இல்லை!
பொழுதுகழி வுறும்பொருளே " எனும்படிக் கின்று
புகன்றுவிட்டுத் தொட்டணைத்த கதையாம் என்பேன்!
குறிப்பு:
இஃது இங்குள்ள யாரையும் குறித்து எழுதப்பட்டதன்று.