..
Quote:
Originally Posted by bis_mala
Please note my SUBSEQUENT ADDITIONS, now made...
... Supplimentaries at the TAIL-END..
Sudhaama
.SHIFTED.
.
Printable View
..
Quote:
Originally Posted by bis_mala
Please note my SUBSEQUENT ADDITIONS, now made...
... Supplimentaries at the TAIL-END..
Sudhaama
.SHIFTED.
.
Quote:
Originally Posted by Sudhaama
பறையர்க்குக் காவியம் பாடிய கவிராயர்
இறைவர்க்குத் தம்வாழ்வு சூடிய புவிவாணர்
நிறைவரோ நானிலம் வாடிடும் நிலைகண்டே
உறைவரே நெஞ்சமே உழைப்போர் துயர்விண்டு!
Thanks.
.
பறையர்க்கு காவியம் பாடிய கவி-ராயர் யார்.? நந்தனாரா.?Quote:
Originally Posted by bis_mala
நந்தனாரின் சுய-வாக்காய் சைவத்-திருமுறைப் பாக்கள் உள்ளனவா.? அவற்றை இங்கு எடுத்துக்காட்ட வேண்டுகிறேன்.அன்பரே.!
.திருப்பாணாழ்வார் தனது ஞான-வாக்காய் பாடியருளிய பாசுரங்களே "அமலனாதிப்பிரான்"எனப்படும்... தமிழ்-மறை பிரிவு 10 பாசுரங்கள் இதோ.
திருப்பாணாழ்வார் பாடிய "அமலன் ஆதிப்பிரான்" பதிகம் .
927
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த-
விமலன், *விண்ணவர் கோன் *விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன், *நீள்மதிள் அரங்கத்து அம்மான், திருக்
கமல பாதம் வந்து* என்கண்ணினுள்ளன ஒக்கின்றதே. (1)
928
உவந்த உள்ளத்தனாய்* உலகம் அளந்து அண்டமுற,*
நிவந்த நீள்முடியன்* அன்று நேர்ந்த நிசாசரரை,*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் *கடியார்பொழில் அரங்கத் தம்மான்,*
அரைச்சிவந்த ஆடையின் மேல் *சென்றதாம் என் சிந்தனையே. (2)
929.
மந்தி பாய்* வட வேங்கட மாமலை,* வானவர்கள்,-
சந்தி செய்ய நின்றான்* அரங்கத்து அரவின் அணையான்,*
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ* அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (3)
930
சதுரமா மதிள்சூழ்* இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
உதிர வோட்டி,* ஓர் வெங்கணை* உய்த்தவன் ஓத வண்ணன்*
மதுரமா வண்டு பாட* மாமயில் ஆடரங்கத்து அம்மான்,திருவயிற்று-
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)
931
பாரமாய பழவினை பற்றறுத்து,* என்னைத்தன்-
வாரமாக்கி வைத்தான்* வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்* அரங்கத்து அம்மான்,*திரு-
வார மார்பதன்றோ* அடியேனை ஆட்கொண்டதே. (5)
932
துண்ட வெண்பிறையான்* துயர் தீர்த்தவன்* அஞ்சிறைய-
வண்டுவாழ் பொழில்சூழ்* அரங்கநகர் மேய அப்பன்*
அண்டர் அண்ட பகிரண்டத்து* ஒரு மாநிலம் எழுமால்வரை, *முற்றும்-
உண்ட கண்டம் கண்டீர் *அடியேனை உய்யக்கொண்டதே. (6)
933
கையினார் *சுரி சங்கனல் ஆழியர்,* நீள்வரை போல்-
மெய்யனார் *துளப விரையார் கமழ் நீள் முடியெம்
ஐயனார், அணியரங்கனார் *அரவின் அணைமிசை மேய மாயனார்,*
செய்ய வாய் ஐயோ.* என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)
934
பரியனாகி வந்த* அவுணன் உடல்கீண்ட,* அமரர்க்கு-
அரிய ஆதிபிரான்* அரங்கத்து அமலன் முகத்து,*
கரியவாகிப் புடைபரந்து* மிளிர்ந்து செவ்வரியோடி,* நீண்டவப்-
பெரிய வாய கண்கள்* என்னைப் பேதைமை செய்தனவே. (8)
935.
ஆலமா மரத்தின் இலைமேல்* ஒரு பாலகனாய்,*
ஞாலம் ஏழும் உண்டான்* அரங்கத்து அரவின் அணையான்,*
கோல மாமணி ஆரமும்* முத்துத் தாமமும் முடிவில்ல தோரெழில்*
நீல மேனி ஐயோ. * நிறை கொண்டது என் நெஞ்சினையே. (9)
936
கொண்டல் வண்ணனைக்* கோவலனாய் வெண்ணெய்-
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை,*
அண்டர் கோன் அணி அரங்கன்* என் அமுதினைக்-
கண்ட கண்கள்,* மற்றொன்றினைக்* காணாவே. (10)
இதே போல நந்தனாரின் பாடல்கள் யாவை எனத் தெரிவிப்பீரா அன்பரே. நன்றி.
.அன்புடன் ... சுதாமா
.
நேக்கு நீங்களே எல்லாம் சொல்லிமுடிங்கோ.
Happy Deepavali to you and all at home.
Shifted.
இவ்வரிய நல்வழியைக் காட்டிய பெருந்தகையான ஐயர் யார்? அவர்பற்றிச் சில வரிகள்......Quote:
Originally Posted by Sudhama
யாரோ ஒருவர் தெரியாது.Quote:
Originally Posted by bis_mala
மந்தித் தாய்-நெறியே ...
...நந்தன் கண்ட சிறந்த வாழ்-நெறி.?
[html:8fe965cff0]
http://i129.photobucket.com/albums/p...ma/Nandan1.jpg</a>
http://i129.photobucket.com/albums/p...07/Monkey3.jpg
[/html:8fe965cff0]
[முன் குறிப்பு : அரும்-பத சொற்பொருள்… அடிக்கீழே காண்க]
திருவருள் என்றால் என்ன என்றோ, நமக்கு மேம்பட்ட-வல்ல கடவுள்
ஒருவன் மறைந்து-இருந்தே நம்மை ஆண்டு-காக்கிறான் திட்டம் இட்டே
கருத்தே வாழ்க்கை என்றே அறியாத பாமரராய் வாழ்ந்து வளர்ந்தோமே
பொருள் ஆயன் கைத்-தாம்பு எல்லை-வரம்பே வாழ்வு மாட்டு விலங்கே.!
விலங்கு மிருகமாய் இடி, மின்னல் பயந்து ஒளிந்து, கட்டுப்பட்ட சங்கிலி
விலங்கு வழுவா தற்குறைவு இழிவு-மனப்பான்மையரே தான் சிந்தியாது
கலங்கு மனக்கவலை மீளாது நித்தம் கணமும் காலம் கடத்திய பறையர்
துலங்கு கண் முன்னே சுடுகாடு வருவோர் பிறர் கண்டே உலகு புரிந்தேன்
புரிந்தேன் என்னோடு சுடுகாடு-வாழ் மறையவன் யாவர்க்கும் பொதுவே
சரித்திரம் நெற்றிக்-கண்ணன் தெரிந்து, புத்துணர்ச்சி பெற்றேன் நம்பிக்கை
உரிதே அறிந்தோரைக் கேட்டுக்-கேட்டு எமக்கும் உண்டு நற்காலம் எனவே
தரிசிக்க சிவனை ஐயர் ஒருவர் அறிவூட்ட கோயில் நாடினோம் பறையரே
பறையனே சிறியேன் நந்தன் கோவில்-சாமி காணவொட்டா குறுக்கே மாடு
மறைத்துக் கிடந்ததையே விலக்கி எமக்கு காட்சி தந்தான் ஆகா சிவ சிவா
சிறை வாழ்க்கை விட்டே சிவலோகம் விடுதலை வேண்டி அழுது-புலம்ப
இறைவன் தன் உயர்-சீலம் உலகோர்க்கு துலங்கச்செய்தான் நானே கருவி
.
கருவி நம்மைக் கடவுள் தன்னையும் தரணி வாழ்-நிலை அறியச்-செய்யும்
கருத்தே புரிந்தேன் சிவ-பெருமான் கோயில் தரிசனத்தால் ஞானம் பெற்றே
பொறுக்கவோ புவி-நரகு, முன்-பிறவி பாவ-புண்ணிய வினைக்-கடன் நீங்க
திருத்தி நம்மை இறைவனின் மந்திக்-குட்டியாய் வாழ சுவர்க்கம் புவியே
.
புவிப்- பிறவி மாந்தராய் ஏன் பிறந்தோம்.? உத்தம-பிறவி எனத்-தக்கோமா.?
தவிப்பதற்கோ தரணி வாழ்க்கை, மிருகம் போல் கிட்டியதே ஏற்றுக் கிடக்க
தெவிட்டாத் தாழ்வோ.? என்னவர்-போல இதுவே பறையர்-கதி என மாய்ந்தே
ரவி ஒளி போல தாயாய் கடவுள் துணை பயன்-கொண்டால் பயம் ஏனோ.?
.
பயம்-ஒன்றே மாபெரு பலவீனமே பலம்-மிக்க யானை சிங்கமும் அடிமை
செயல் யாவும் பரமனால்-என அறிந்தே அவன் துணையை பயன் கொண்டே
புயலையும் வென்று ஆளலாம், பயம் நீக்கி இறைவனையே முற்றும் நம்பி
ஜயம் வெற்றி திண்ணம் மேலோங்க முயல், கிடவாதே புவி-இயல்பு என்றே
இயல்பு சிவன் நந்தி வழி-மறித்து மறைத்து காத்துக்-கிடக்கும் வாகனன்
செயல் கடமை, தலையிடாதே என்றார் ஊரார். என்-துதி புலம்பல் கேட்டு
முயலாது ஐயன் தரிசனம் காணாது திரும்பிச் சென்றேனா சிறியனேனே
இயற்கை அழிவு, கேடு-வாழ்க்கை ஒடிந்து வாளா-கிடக்க சிறை மிருகமோ.?
.
சிறையிலும் சீர்-மிகு சிம்மாசன மன்னனாய் ஆளலாம் பரமன் துணையால்
இறை துணை-இன்றி ஆவது ஏது எவரும் எது சிறிது மா-பெரிது எனினும்
மறையவன் துணையோடு ஆகாதது ஏதும்-இல்லை சிறியோமே ஆயினும்
நிறை-வாழ்வு சுவர்க்கம் மோட்சம் கொள்ளலாம் இறை தாயைக் கட்டியே
கட்டியே தன்னைச்-சற்றும் இடை-விடா இறுக்கம் நழுவா அகலாது-ஒட்டி
குட்டி வாழ்-நெறி கடைப்பிடி நோக்கம் தாயைப்-புரிந்து சிசு பங்கே அதிகம்
சுட்டே தீ, ஊசி-குத்தி, கத்தி அறுக்கினும் மருத்துவனை முற்றும் நம்பியே
விட்டே அகலாது, வைத்தியம் சொல் பின்பற்றும் நோயாளி மாந்தர் நாமே
மாந்தர் நாம் இறைவனின் துணை-பெற இயலும் ஒரே அரி பிறவி புவி
வேந்தராய் வாழப்-பிறந்தோம் நம் நல்வாழ்வு உயர்வு நம் கையிலே என
கோந்தாய் இறைவனை ஒட்டி அகலா கைப்பிடி-நழுவா மந்தித் தாய்-நெறி
ஏந்து-தாய் ஒத்துழைத்து அதிக சிசு-பொறுப்பே நந்த-மாந்தன் வாழ்-சிறப்பே
சிறந்தே வாழ்ந்து-ஓங்கவே படைத்தான் பார் பரமன் நம்மை உன்னத தலை
சிறந்த முழுமை ஆறறிவு மனிதனாய், பூவுலகில் கீழ்ப்பிறவி மூட மிருகம்
மறந்தவை தன்னைத்-தானே தனது வலிமையையே தானே அறியா பேதை
இறந்து-திரி நடை-பிணத்திற்கும் ஈசனுக்கும் இடைப்பிறவி புவி-இறைவராய்
புவி-இறைவராய் நாமே புவி ஆண்டு இங்கேயே சுவர்க்கம் கண்டு ஓங்கி வாழ
தெவிட்டா இருவகை இன்பமும் பேரின்பமும் கொள்ள-வல்ல ஒரே மா-பிறவி
கவி-பாடினோம் கனிவுறு சொற்களால் நாம் இருவகை அடியராய் முன்னோடி
தவியா அலகிலா விளையாட்டு நெறி குழம்பாதே சைவ-வைணவ கண்களே
கண்களே உமக்கு இருவகை அறுபத்து-மூவர் நாயன்மார், பன்னிரு ஆழ்வார்
விண்-உலகு சிவலோகம் வாழ் சிவனடியான் சிறியேன் பேரின்பன் நந்தனும்
மண்வாழ் பாணர் மறை-இறையாய் திருமாலடியர் ஆழ்வாரும் பறை கேளீர்
புண் தற்கொலை மன-நோயரே புரிவீர் சிவன் திருமாலை முப்பார்வையால்
.
.... தொடரும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> >>>>>>>>>>>>>>>>>>>>>
[அரும்-பதச் சொற்பொருள் :---
கைத்-தாம்பு = கை-வசப்பட்ட கயிறு --- ஆயன் = மாடு மேய்க்கும் இடையர்]
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< <<<<<<<<<<<<<<<<<<<<
================================================== ====================
.
Quote:
Originally Posted by Sudhama
நன்று!
.
Quote:
Originally Posted by bis_mala
நன்றி
பூனைத் தாய்-நெறியே ...
...பாணன் கண்ட சிறந்த வாழ்-நெறி.?
[html:7f9a577fe3]
http://i129.photobucket.com/albums/p...May07/Cat1.jpg
http://i129.photobucket.com/albums/p...2009/Siva4.jpg
[/html:7f9a577fe3]
1. - நந்தனார்
பார்வையால் காண-இயலா வான்-இறைவனை புவிக்-கோயிலில் பார்-நலமே
நேர்-வழி காட்டினார் நல்லார் ஒரு வேதியர் ஸ்மார்த்தர் ஐயர் சைவர்-அல்லர்
ஊர் கூடி வாழ்-துணை சமுதாயத்தில் ஒருவன் இறைவனே நம்-செயல் சாட்சி
பார் கோவில்-இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் ஏன் அறிந்தேன் நந்தனே
2.
நந்தன் நான் பெற்ற உபதேசத்து அளவு மட்டுமே கற்றேன் கேட்டுக் கேட்டு
சொந்தம் உன்னது என்று உலகில் ஏதும் இல்லை நீயே இறைவன் உடைமை
பந்தம் உறவு பெற்றார் உற்றார் கூடி ஓங்கி வாழவே நோக்கம் கொண்டு கூடி
சிந்தனை இறைவன் மந்தித்- தாயை வலிந்து ஒட்டு நலம் ஆனந்தம் ஒன்றே
3.
ஒன்றே அறிவேன் பறையனேன் நந்தனின் குரு ஐயர் காட்டிய வாழ்-நெறி
நன்றே நல்வழி இங்கும் அங்கும் எங்கும் ஓங்கி வாழ் திருவருள் வழி எது
வென்றேன் என் விருப்பம் போல் முன்-விதியே மாற்றி தந்தையே தாய் கட்டி
கொன்றே தீவினை நற்கதி பெற்றேன் சிவ-லோகம் பாணரே ஏன் அழைத்தீர்
4. - திருப்பாணாழ்வார்
அழைத்தேன் நந்தரே உம்மை புவி-அடியார்க்கு அடியேன் பறையன் பாணன்
இழைக்க நம் இருவர் கடமை நாம் பெற்ற நற்பயன் வையம் பிறரும் பெற
பிழைக்க ஏதோ செய்து முன்னேறாத பேதையும் நன்னோக்கரும் ஏமாறாது
தழைத்தே ஓங்க உலகோர்க்கு இரு வழி அனுபவக்கல்வி ஊட்டவே நாம்
5.
நாம் இருவரும் நந்தன் பாணன் அடியேனும் தாழ்-பிறவி ஒரே குலத்தோர்
தாம் பேரறிஞர் எனக்காட்ட சிலர் குறு நோக்கிலே பரமன் அரியா அரனா
ஓம் துதிப் பொருள் திருமாலா, வைணவம் சைவம் என்று ஏதேதோ பேதம்
போம் நற்கதி புவி-இன்ப நல்வழி மந்தி பூனைத் தாயா விடை முப்பார்வை
6.
முப்பார்வையால் இறைவன் சிந்தனை நோக்கினால் மாந்தர்காள் நம்மை
முப்பார்வையால் ஆண்டு காக்கும் ஒரே பரமனின் இறை-நெறி துலங்கும்
முப்பார்வையே மூன்றாம் பரிமாணம் காட்டுவது, ஒரே பொருளின் ஆழம்
முப்பார்வையர் முக்கண்ணனை கமலக்-கண்ணனையும் புரிவீர் திரு-நீறே
7.
நீறு இரு பொருள்-தரு மூல வித்துச்-சொல் புவி-காண் சாம்பல் மண் எனவும்
நீறு உறு அணியில்லா நெற்றி பாழ் என்றாளே ஔவை அதன் உட்-பொருள்
ஆறு வழியே பரமன் ஒருவனே நாம் அறிந்த எவனோ அறியா யாவனோ
ஓரும் ஆதி அந்தம் அவனே மண் நீர் தோற்றம், சாம்பல் புகை இறுதி நெறி
8.
நெறியே வையத்து உயிரினம் ஜடம் எதுவும் தோற்றம் மண் அல்லது நீரிலே
அறிவீர் மனிதன், தங்கம் தாவரம், பயிர் எதுவாயினும் விதிவிலக்கு உளதோ.?
தெரிந்தோம் யாவும் அடையும் இறுதி வடிவம் சாம்பல் அல்லது புகையே
புரி ஒருவனே பரமன் அந்தம் சின்னம் சாம்பல்-புகை ஆதி நினை திருமண்-நீர்
9.
மண்-நீர் குழைத்த திருமண்ணே பரமனின் முதன்மை சின்னமாய் வைணவர்
விண் விரைய சாம்பல்-புகை முதன்மை சுய-உணர்வூட்டவே சின்னம் சைவர்
எண்ணம் கணமும் பரமன் நினைவு மறவா சுய உறுதி கொள் மனப்பக்குவமே
வண்ணமே உடல்-அழகு இரு-வேறு அணி-அலங்கார விபூதி திருமண் காப்பே.
10.
காக்கும் இறைவா ஆதி-அந்தம் ஆன பரமனே உன் அடியனேன் உன் சின்னம்
போக்கும் என் முன்வினை யாவும் தூய்மை புனிதம் உடல், மனம் ஆத்மா
ஆக்கும் அடியார் நற்கதியே இருவகை பக்திச்சின்னம் பரமன் அடி-பணிந்தால்
வாக்கு வேதப்-பொருள் அறிவீரே திருமால் ஒருவனே பரமன் பல்-உருவன்
11.
பல்லுருவன் ஒருவன் பாரோர் பல்வகை அவரவர் மனப்போக்குக்கு ஏற்பவே
தொல்லுருவாய் கோயில் கொண்டான் ஆழ்வார்க்கு காட்சி தந்து உறைந்தான்
பல்லுருவாய் பரமன் ஒருவனே அல்லா பரமபிதா சிவன், காளி, அனைய
நல்லதே அவரவர் விதி வழி விழை இறைவர் பக்தி ஏற்றத்தாழ்வு இல்லை
12.
இல்லை எனக்குக் கவலை ஏதும் என் தந்தையே தாயாய் காக்கும் நெறியன்
சொல்லை பெரியோர் கேட்டுக்கேட்டே அறிந்தேன் கற்றேன் வாழ்-கலையே
நல்லான் பூனைத்தாய் நெறியாய் பல்வகையோர் அடியார் எம்மை அவரவர்
தொல்லை போக்கிக் காப்பான் அவனே நாடி வந்து தாயின் பங்கே அதிகம்
.
.
Quote:
Originally Posted by Sudhaama
கவலைஒன் றில்லை நெஞ்சில்
கடவுளைக் கடைந்து கண்டால்,
தவலையுள்* தயிரை மத்தால்
தவறாமல் ஆய்ச்சி போலே;
துவளுறும் துன்ப வாழ்வில்
துறக்கமே காணும் பாதை
சவளறத் தந்த ஐயர்
சாந்துணை ஏத்தத் தக்கார்.
அன்றுள நந்தன் பாணன்
ஆயவர் பேசிக் கொண்டார்
நன்றிவை சொன்ன பாங்கு
நான்மிகப் புகழ்ந்து சொல்வேன்;
ஒன்றது தெய்வம்; மாலும்
உயர்சிவ னாரும் என்ற
தென்றிசை மேலோர் வாய்மை
தெளிவுற நீவிர் சொன்னீர்.
*or in a mudpot?
நன்று.! நன்றி.!!Quote:
Originally Posted by bis_mala
.
கடவுளா.? எதற்கு.?
...வணங்கத்- தகுதி யாருக்கு.? ஏன்.?
நாயன்மார் நந்தனார் - திருப்பாணாழ்வார் இடையே…..
... கற்பனை-உரையாடல் --- தொடர்ச்சி
[html:21e87f9a7a]
http://i129.photobucket.com/albums/p...09/Monkey3.jpg
http://i129.photobucket.com/albums/p...kurungudi1.jpg
[/html:21e87f9a7a]
1. - நந்தனார்
அதிக-மிகு பூவுலகப் பொறுப்பு பணி பெரு-கவலை நமக்கு இருக்க நந்தா
புதிரான யாரோ ஒருவன் கடவுளாம் அவன் உள்ளானா என்றே தெரியாது
விதியாம் அவரவர் தலை-எழுத்துப்படி நடக்கும் பாவி நாம்-என எம்மவர்
நிதி-பேறு கீழ்-சாதி நமக்குத் தகுதி-இல்லை ஈசன்-பணி உயர்-குலத்ததே.!
2.
குலப்-பிறவி சாதி-அடிப்படை மக்கள் தேவைக்கு ஏற்ப மன்னர்கள் சட்டம்
நிலவு நியதி ஏனைய குலத்தோர் சமுதாயத்தோர் அனைவர்க்கும் பொது-
நலம்-காக்க இறைவன் திருவருள்-வேண்டி ஈட்டல் வேதியர் பணியே; மேல்-
உலகோ, கோயில் துதி நம்பி வேண்டலோ நமக்கு தகுதி இல்லை என்றார்
3.
என்றும் கோயில்-அணுகார் காக்கும் கடவுள் நினையார் முனையா எம்மவர்
தின்று-திரி மனித-உரு மிருகமே வாழ்-நோக்கம் பொருள்-அறியாப் பேதையர்
அன்று-அன்றைய பாடு-மட்டும் சிந்தித்த அறியாமை-சூழ வளர்ந்தேன் நந்தன்
நன்றே வாழ்-நெறி எனது ஐயங்களுக்கு விடை விளக்கினார் ஐயர் குருசாமி
4.
குருசாமி உபதேசம் கற்றேன் வேதியர் தொழில்-கடமை சமுதாய பொது-நலத்
திருவருள், இயற்கைச் சீற்றமிலா-வளம், மறை-ஓதல், யாகம், கோயில் பணி
வறுமையற நாடு-நலம் அன்றி அவரவர் தனித்-தேவை, பயம்-அற வாழ்க்கை
உறு-விருப்பம், பாரிப்பு கனவு நனவாக இறை-துதி அனைவர்-தம் கடமையே
5.
கடமை எவரும் அவரவர் நன்னலம் கருதி, தாமே இறைவனை வழிபடு நன்றி
கடவுளே தத்தம் தந்தை-தாயாய் இறையருள் நலம் பொலிகவே சுய-முயற்சி
உடன்-வாழ் துணைவனைத் துதி, பிறர் சார்போ.? சீந்தா மா-மன்னனோ ஈசன்.?
கடன்-பட்டோம் மாந்தர் ஒவ்வொருவருமே கடவுள்-துதியால் முன்னேற்றமே.!
6,
ஏற்றம்-பெற வாழ்- வழிகாட்டினார் எனது குரு எனக்கும் தகுதி உண்டு-என;
போற்றி ஆசானைப்-பற்றி வழிபட்டேன் ஊர் எல்லைக்கோயில் திருப்பங்கூர்
தோற்றினன் ஐயன் நான்-விழைந்தவாறே அருள் பெற்றேன் புவி-சுவர்க்கமே
வேற்றுமை தாழ்-குலம் கருதாக் கடவுள் சிவன் அருள்வன் முயல்பவர்க்கே
7.
முயன்று மென்மேல் முன்னேற்றம் வாழ்-இலக்கண புவி-சுவர்க்க இடைப்-படி
சுய-முயற்சியால் மட்டுமே இறை-அருள் மாந்தர்க்கு ஓங்கு நலம் விளையும்
தயக்கம்–இன்றி மேல்படி முக்தி தில்லையம்பலம் தரிசிக்க எசமான் உத்தரவு
உயர்வுற நாடினன், நம்பவில்லை அவர் பறையனுக்கும் பக்தியா தேவையா.?
8.
தேவை எசமான் நிபந்தனைப்படி என் கடமை-ஆற்றியதன் நற்பயன் கண்கூடு
சாவை நாடிப் பெற்றேன் மறுபிறவியிலா விடுதலை பேரானந்த சிவ-லோகம்
சேவை திருமால்-நெறி வேறோ.? மந்தித்தாய்-நெறி உமக்கு ஏற்பு அல்லதோ.?
கோவை நாடாது முக்தி நீர் இன்னும் புவி-உழல் தாழ் ஏன் பாணரே புகல்வீர்
9. - திருப்பாணாழ்வார்
புகல்-இறுதி திருமால்-நெறியிலும் மந்தித்தாய்-நெறி உண்டு நமக்கு முன்பே
புகழ் பழம் திருமால்-அடியர் பறையர் நம்பாடுவான் வரலாறு கைசிக-ஏகாதசி
இக-சுகம் வெறுத்து புவி-வேண்டா நந்தரே உம்மைப்-போல் மேல்-உலகு, திரு-
முக-தரிசனம் வேண்டினர் கோயில் வெளி-நின்று திருக்குறுங்குடி நம்பியை
10.
நம்பி-நாரணன் கோயில்-தரிசனம் மறைத்தது கொடி-மரம் வெளி-நின்று காண
நம்பியே நாடி-வந்த தூ-அடியனைக் கை-விடுவனோ பெருமாள்.?, அக்கணமே
தம்பம் துவஜ கொடி-மரம் விலக்கி நேர்-தரிசனம் சமுதாயத்தால் தாழ்வுற்ற
நம்பாடுவான் பறையருக்கும் வைகுந்தம் அருளினன் தொழுகுலம் சேர்த்தே
--- தொடரும்
.
.
Quote:
-
வாழப்-பிறந்தோமே அன்றி...
...பிறரால் தாழத்-துறந்தோமா.?
நாயன்மார் நந்தனார் – திருப்பாணாழ்வார் இடையே..
... கற்பனை-உரையாடல் --- தொடர்ச்சி
[html:d380bc2ed4]
http://i129.photobucket.com/albums/p...May07/Cat1.jpg
http://i129.photobucket.com/albums/p...rirangam12.jpg
[/html:d380bc2ed4]
1. திருப்-பாணர்
சேர்த்தே படைத்தான் உயிரினம் ஓர்-அறிவர் புழு முதல் ஆறரிவர் மாந்தர் வரை
ஒர் புவி ஒரே இடத்தே இசைபட இயலா கூடகில்லாப் பிறவியர் கூடி-வாழவோ
பார் புவியில் பிறவியிலேயே உயர்வு-தாழ்வு சதியோ விளையாட்டோ விதியோ.?
யார் கடவுளோ.? காணான் அனைவர் நலம் காக்கும் தாய்-தந்தையோ ஏன்.? ஏன்.?
2.
ஏன் தலைமா-படைப்பு மாந்தரிடையும் ஏற்றத்-தாழ்வு பிறவியிலேயே இழி-பட்டம்.?
வான்-பிறவியரோ நாட்டு வாழ உயர்-குலத்தோர் கல்வி, செல்வம் வசதி; புவி-ஆள
கோன்-தகையோ அவர்க்குப் பிறவி-அடிமை பறையரோ சுடுகாடு வாழ் தலை-விதி.?
ஈன்ற தாய் பிழையோ தாழ்-குல அவமானச்-சுமை ஏன் படைத்தாய் படைப்பாளி.?
3.
படைப்பாளி இறைவன் பான்மை நோக்கம் அறிய அலைந்தேன் பறையன்-பாணன்
விடை தேடித்தேடி மா-மன்னர், அடிமை, செல்வந்தர், ஏழை, வீரர் மனிதர் எவரும்
மடையர் அறிஞர் உயர் தாழ்-குலத்தோர் பாலர்-முதியர் பல்வகையோர் அனைவர்
கடைசி சேர்விடம் ஒரே நிலம் ஆறடி இடுகாடு சுடுகாடே, கொள்-வடிவம் பிணமே
4.
பிணமே கடமையாய் உடன்-கூடி வாழும் பறை அடியேன் பாணன் மானிடப் பண்பு
குணம் ஆர்வமுற நல்லார் அன்பார் வேதியர் அறிஞர் பண்டிதர் பல்வேறோர் நாடிய
கணமே அடுத்தடுத்தே என்-மனக் குறை கவலை போக்கினர் வாழ்க்கை-நெறி பற்றி
மணம்-உயர் மாந்தர் ஓரே இனம், யாவரும் சமமே இறைவன் நோக்கம் ஐயம்-அற
5.
ஐயம் வேண்டாம் பாணரே பிறவிக்-குலம் பல்வகை இறைவன் படைப்பு விதி-அன்று
வியந்தனன் குலப்-பிரிவு மன்னர்கள் விதித்த மனித-சாத்திரம் தொழில் அடிப்படையே
உயர்வு தாழ்வு தொழில் எதிலும் கிடையாது-எனினும் மூட-வெறியால் ஆளும் அரசர்
பெயர்-புகழ் தகு நாட்டு-சேவை பறையர்க்கு-இழை மானிடம்-அற்ற மா-பாவம் என்று
6.
என்றும் தம்-நாடு ராஜ-விசுவாசி, தியாகி, ஒற்றர், தற்கொலைப்-படையர் அனையர்
ஒன்றே-இலக்கு நாடு-நலம் தன்னலம்-மறந்து ஆபத்து-எதிர்த்து அரசன் நேர்-ஆணை
நன்றே செயல்படுத்து அரி-திறம் வீர-விவேகி முழு நம்பத்-தக்கோர் பணியே பறை
வென்றான் ராமனை உயர்-பண்பு ஆணைத்-தொண்டு பறை-நெறியால் புகழ் பரதன்.
7.
பரதன் தன்-மன்னன் அண்ணனின் நேரடி-ஆணைச் செயல்-புரிந்த தியாகி பறையன்
விரதன் இலட்சுமணன் மன்னனுக்கே தொண்டு சேவகம், சேவகன் இணை-பிரியான்
சிரமேல் தொண்டு இருவகை சேவகம் பறை மன்னனுக்கோ, இறைவனுக்கோ பணி
அறம்-ஓங்கு தொழில் புரிந்த போற்றத்தகு பறையர்க்கே இழிவு செய்தனர் மன்னரே
8.
மன்னன் முந்தையவனின் பறைத்தொழில் தொண்டர்க்கே பழி-அவமானம், வென்ற
பின்னவர் அரியணை ஏறியவுடன் அடிமையாக்கி நாடு-கடத்தி சுடுகாடே கதியாக்கி
தன்னலம் துறந்த தியாகி வீர-மறவரை போற்றிப் புகழத்-தக்கோரை ஆணவ-வெறி
மன்னரே வம்ச-பரம்பரை துரோகி என அநியாயத் தாழ்வு-பட்டம் சூடு குறையரோ.?
9.
குறையிலா தியாக-சீலரை காக்க-வேண்டிய மன்னனே காக்கத்-தவறியது அநீதியே
முறை-தவறி, ஆளும்-நெறி மீறி அரசர் விதித்த தண்டனை பழி இழி மிருகத்-தனம்
வரையிலா மேலவன் மன்னர்-மாமன்னனும் வாளா-இருப்பனோ தன் கடன்-பணியர்
சிறை தீராது பொறுப்பனோ இறைவன் எனவே பாணா கலங்காதே இதோ வழி இரு
10.
இரு-வகை அணுகுமுறை மந்தி பூனை தாய்-சேய் மாந்தர் இறைவனைத் தாயாக
திருவருள் பெற கடைப்பிடி சேய்-பங்கு அதிகம் குரங்குத்-தாயை குட்டி கட்டிப்-பிடி
பொறுப்பு பூனைத்தாய் பங்கு அதிகம், தாயே குட்டி கவ்விச் செல்லும், சேய்-கொள்
விருப்பம் தாயே முற்றும் கதி அறியேன் எங்கு-இருப்பினும் வேண்டும் இன்பமே
11.
இன்பமே குறையிலா இம்மை மறுமையும் வேண்டும் அடியேன் உகந்த சீர்-நெறி
தன்னலமே குறியன்று, நம் நல-விரும்பி இறை-அடி அன்பர் பொது-நலம் துறந்து
என்ன பயன்.? தனி-இன்பத்தைக் காட்டிலும் அடியரொடு-கூடி இன்பமே பேரின்பம்
பொன்னரும் பூனைத் தாய்-நெறி தூர-நின்றே துதி திருவரங்க-கோபுரம் திருவடியே
12.
திருவடியே மறுவடிவு திருமாலே உலகாளும் காப்பு-உரு கோபுர அம்மா தெய்வம்
சிறு அடி பாவி பாணன் உடல்-தூசி படலாமோ நெருங்கேன் திருக்-கோயில் அருகே
திருமாலா புனித-மிகு தலத்-தூய்மை சிறியேனால் பழுதாமே ஐயோ மாட்டேனே
திருவரங்கா காவிரிக்-கரை நின்றே தரிசனம் போதும் அமலன் ஆதி-பிரானே வாழி!
.
.
-- தொடரும்
.[/tscii]
Quote:
Originally Posted by Sudhama
தனித்தலையாய் இறையின்பம் தினைத்துணையே நன்மை!
பனித்தூய்மை அடியரொடும் இனித்திடுமா றாழ்ந்து
நினைத்தமர்ந்து நிலைப்படுத்தி நிறைவினையே காணல்
அனைத்துலக அடியவரும் பனைத்துணையென் றேற்பர்.
Quote:
-
புவி-வாழ்க்கை நரகமா, சுவர்க்கமா.? ஏன்.?
1. நந்தனார்
வாழி அன்பார் அடியார்கள் வாழி வண் திருப்பாணரே வாழி பரமேசுவரன் வாழி
ஊழி முதல்வன் துவங்கி உலகு படைப்புச் சிந்தனை யாவும் சுற்றிச்-சுற்றி ஞானம்
ஏழியல் உயிரினப்-பிறவிகள் குறித்து இழி-பறையன் பேதையேனுக்குமோ தேவை.?
ஆழி-சூழ் அவனி விந்தை இயற்கை ஆர்வம் தூண்டி-விட்டீர் அன்பரே கூறும்-ஐயா
2.
ஐயர் எந்தன் குருசாமியிடம் சிறியேன் ஆர்வத்து-அளவு மட்டுமே கேட்டுக்-கேட்டு
ஐயங்கள் வாழ்க்கை வாழ்வு-நெறிகளின் யாவும் தீர்ந்து தெளிவுறு சிந்தையனாய்
வைய வாழ்க்கை ஓர் நரகம் சிறை, சிறியேன் முன்-வினை விளைவு இழி பிறவி
நையவே நோகும் பறை நந்தா விரைந்து விடுபட விடுதலை முக்தி நாடு என்றார்.
3.
என்றுமே எந்தப்-பிறவியும் முன் வினையால் தான் புவி-பிறந்து கடன் தீர்க்க
நன்றது ஞாலத்து-மிக்கார் மாந்தர் நானிலம் விடுத்து சிவ-லோகம் ஏகவே விதி
ஒன்றதே இலக்காய் புவி ஆசை வாழ்க்கைச் சிறை வெறுத்து சிவ-பெருமான்
கொன்றை-வேந்தனை வேண்டு மந்தித்-தாய்-நெறியே பற்றி தாய் இறுகக்-கட்டி.
4.
கட்டியே என்-ஐயன் தாயுமானவனை நினைவு சொல் செயலால் குட்டியேன்
மட்டிலா மாண்-பயன் பெற்றேன் பாணரே இன்றும் சிவ-லோகம் பேரின்பமே
விட்டில்-பூச்சி போல் புவி-வாழ்க்கை மாய-ஒளியில் மதி-மயங்கியே வீழ்வது
விட்டு புவிப்பிறவி விடுதலை நாடீரோ மோட்சம் வேண்டீரோ வான்-உலகு.?
….தொடரும்
.
நன்கு சொன்னீர்
உலகு படைத்தவன் ஊழி முதல்வனாம்
நிலவு வேணியன் நிறுவிய அமைப்பினில்
அலவு இலாதவை அழகு மிகநலம்்
குலவு தமிழினில் கூறி விளக்கினீர்.
அலவு இலாதவை - குழப்பமிலாதவை.
முற்றிற்று போலும்
முனைப்போ டவர்வரைந்தார்
உற்றிற்றை நாளில்
ஒருமுழுமை மற்றிங்கு
யாதும் எழுமோ
இனியும் பிறவுண்டோ
ஏதும் அறிகிலேன் யான்.
.
My Dear Sivamala & Other Friends,Quote:
Originally Posted by bis_mala
Sorry. I am unable to continue now, due tro my serious EYE-PROBLEM.
Yes. Now I have come to India (Chennai) for my Retina-treatment in both of my Eyes.
Even this typing I am doing with much difficulty and strain..
So my dear Friends, kindly bear with me for a SHORT BREAK.
By God's grace, I hope ro resume soon.
Thanking you all , With Best Wishes,
Sudhaama
.
.
விண்தனில் மின்னுக மீனாய்,
கவிதைக் கனிதர:
கண்களில் புத்தொளி கண்டே
கழனி திரும்புக!
Wishing you speedy recovery.
anbudan
Dear sudhaama sir,
Its been a year since u posted anything in hub. I hope ur eye treatment went on well and u are back to normal health. Do keep in touch and keep posting. Your mails are bouncing, hence a message here....
regards,
shakthiprabha
(anyone else knows how he is doing and any updates about him? )
கண்களைக் குணப்ப டுத்தச்
சென்றவர் பரத தேசம்!
கண்குணம் அடைந்த பின்னர்
கனிவுடன் வருவார் என்றே
என்மனம் எதிர்பார்த் திங்கே
இருந்ததே!எதனால் வந்து
பொன்புனை கவிகள் செய்யப்
புகவில்லை புரியா துள்ளேன்.
எழுத்தவாம் கவிகட் கெல்லாம்
இருக்குமோ புவியில் ஓய்வும்?
பழுத்தவோர் அறிவில் ஓங்கும்
பைந்தமிழ்ச் சுதாமர் தம்மை
வழுத்துவோம் வாழ்கவென்று[
வருதலைக் கருதார் ஆயின்
விழுத்துணைக் குடும்பத் தோடு
விளைந்திடும் இன்பம் காண்க!!
Sudhama sir, maybe someone very close to you can help post your message on your behalf as to how things are at the moment. Have a nice rest. Wish you all the best.
இறைக்குருவனார் மறைவு 25.11.12
தமிழாய்ந்த இறைக்குருவனார் மறைவு
தமிழுலகம் தனக்கொன்று துன்பச் செய்தி!
அமிழ்தெடுத்தே அளிக்கின்ற அரிய பேச்சு,
அரியபல தொகுத்தளிக்கும் ஆற்றல்பெற்றார்.
அமிழ்ந்துள்ள தமிழார்வம் எழுச்சி கொள்ள
அவர்தொண்டும் அளப்பரிதே ஐய மில்லை!
கமழ்கின்ற மலர்களிலே உறங்கும் நல்லார்
அவரான்மா அமைதிபெற வணங்கி நிற்போம்.
அன்பின் சிவமாலா இறைக்குருவனார் யார்.. நான் அறிந்தவரா தெரியவில்லையே
Dear Chinnakannan avl. You may get some infor on him from the above websitesQuote:
இறைக்குருவனார் மறைவு: வைகோ ...
http://dinamani.com/latest_news/article1353185.ece
1 நாளுக்கு முன்னர் ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, தமிழ்கூறும் நல் உலகின் தலைசிறந்த தமிழ் ...
புலவர் இறைக்குருவனார் மறைவு ...
http://www.newsalai.com/2012/11/blog-post_5107.html
1 நாளுக்கு முன்னர் ... பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்களின் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் அவர்கள் வாழ்நாள் ...
தமிழறிஞர் இறைக்குருவனார் - நக்கீரன்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=86841
1 நாளுக்கு முன்னர் ... தமிழறிஞர் இறைக்குருவனார் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல் || திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் காலமானார் || பெண் ...
தமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் ...
http://www.seithy.com/breifNews.php?...language=tamil
21 மணிநேரங்களுக்கு முன்பு ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ இரங்கல் செய்தி, வெளியிட்டுள்ளார். தமிழ்கூறும் நல் ...
முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan ...
http://muelangovan.blogspot.com/2012...post_3587.html
1 நாளுக்கு முன்னர் ... //திருக்குறள் மணி புலவர் இறைக்குருவனார் மறைவு//தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி, 2012, திசம்பர் 14,15. இடம்: ஃபிந்தாசு அரங்கம் ...
கவலைக்கிடமான நிலையில் ... - www.seithy.com
http://www.seithy.com/breifNews.php?...language=tamil
9 மணிநேரங்களுக்கு முன்பு ... தமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் மறைவு - வைகோ இரங்கல்! ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் ...
புலவர் இறைக்குருவனார் - தேன்கூடு ...
http://thenkoodu.in/search_result.ph...AE%B5%E0%AE%B0...
பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் ... Posted by திருக்குறள் ... 8. திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் மறைவு - தேன்கூடு | தமிழ் பதிவுகள் திரட்டி ...
கேஜ்ரிவாலின் கட்சிக்குப் ... - www.seithy.com
http://www.seithy.com/breifNews.php?...language=tamil
20 மணிநேரங்களுக்கு முன்பு ... தமிழறிஞர் புலவர் இறைக்குருவனார் மறைவு - வைகோ இரங்கல்! ... புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலர் ...
மருத்துவர் தெய்வநாயகம் அவர்களின் ...
http://mdmk.org.in/ta/article/nov12/vaiko-condolence
5 நாட்களுக்கு முன்னர் ... மருத்துவர் தெய்வநாயகம் அவர்களின் மறைவு ... புலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இனத்திற்கு ஈடுசெய்ய முடியாத ...
News | Eeladhesam - Tamileelam Network
http://eeladhesam.com/index.php?opti...blog&Itemid=18
இறைக்குருவனார் மறைவு: வைகோ இரங்கல். PostDateIcon சனிக்கிழமை, 24 நவம்பர் 2012 20:19. புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ ...
There is some information on him in the above excerpt.Quote:
முகப்பு > தற்போதைய செய்திகள்
இறைக்குருவனார் மறைவு: வைகோ இரங்கல்
By dn
First Published : 24 November 2012 02:21 PM IST
புலவர் இறைக்குருவனார் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி, தமிழ்கூறும் நல் உலகின் தலைசிறந்த தமிழ் அறிஞர், இலக்கியச்செம்மல் புலவர் இறைக்குருவனார் மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அன்பு மருமகனும், தனித்தமிழ் ஆர்வலருமான இறைக்குருவனார் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் உயர்வுக்காகவும், தமிழ் இனத்தின் உரிமை வாழ்விற்காகவும் அர்ப்பணிப்புடன் தொண்டாற்றியவர் ஆவார்.
புலவர் இறைக்குருவனார் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், தமிழ்யின உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்..
I saw him in TV sometime back. He wrote some books too.
தமிழறிஞர் ஆலயப் பெயர்கள் ஊர்ப்பெயர்கள் பற்றியும் ஆய்வுகள் செய்ததாகத் தெரிகிறது.
அன்புடன் சிவமாலா
இணையத்தில் கிடைத்த செய்திகளைத் தொகுத்து ஒரு சிறு
கவிதை யாக்கி யுள்ளேன்.
தமிழ்கூறும் நல்லுலகின் தலைசிறந்த
தமிழ்ப்பாவில் வல்லுநராம், இறைக்குருவன்!
தமிழ்ப்பாவே றென் பெருஞ்சித் திரன்மனைக்காம்
அமைமருக ராயுர்ந்த இமையமானார்
தனித்தமிழில் செலச்சொல்லும் தகைநாவின்
தனித்திறனே காட்டியவர்; திருக்குறளின்
மணியென்னும் மகுடம்தான் புனைந்தவராம்
மறைந்ததுயர் அறைந்திட்டோம் தாளாமலே.
இரங்கற்பா மேலும் வருத்தப் பட வைக்கிறது..
தெரிந்தவர் யார் இறந்துவிட்டாலும்......
மரணச் செய்தி கேட்டுவிட்டால் எனக்கும்
மனத்துக்குள் ஒரு படபடப்பு;
வரணம் கலைந்த சித்திரம் ஆகியே
வலியும் வருகுது நெஞ்சினிலே
எதனால்?
எங்குசென் றாரோ சுதாமர் கவியரங்கில்
பங்குபெற வந்திலர் பார்!
மறைவாம் வாழ்க்கை மாபெரும் வாழ்வென்
றுறைவோர் உலகிற் பலர்இது நன்றே.
மேலுள்ள கவிதையின் பொருள்:
மறைவாம் வாழ்க்கை = பிறர் அறியாமல்,விளம்பரமற்று, மறைந்து வாழ்வது, மாபெரும் = உன்னதமான, மிக உயரிய. உறைவோர் உலகிற் பலர் (இங்ஙனம் ) வாழ்வோர் உலகில் பலர்; இதுவும் நல்லதே எனபது பொருள்.
இப்பாடல் குறள் வெண்பா அல்ல.