Haa.. Haa..
Super neththiyadi reply.
Nice humour, but true.
Printable View
Dear Gopal. Your explicit reply contains an implicit meaning! One way you are accepting that GG has not made other families to feel shy when they view his decent love scenes on screen! His personal life is different, which we need not discuss. As regards his acting contributions, he is second to none.
1972-ல் வெளியான பக்திப்படம் 'அன்னை வேளாங்கண்ணி' வண்ணத்தில் எடுக்கப்பட்டு எல்லோரது எண்ணத்தைக் கவர்ந்த படம். தேவரின் தெய்வம், துணைவன் போல கிருஸ்துவ பக்திப்படம். ஆனால் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் அழகாக உருவாக்கப்பட்டிருந்தது. தேவராஜன் இசையில் பாடல்கள் நன்றாக அமைந்திருந்தன
'நீலக்கடலின் ஓரத்தில் நீங்கா இன்ப காவியமாம்' அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. டி.எம்.எஸ். கோரஸுடன் இணைந்து பாடியிருந்தார்.
'கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி' என்ற பாடலும் கோரஸ் பாடல்தான்.
தன் சப்பாணி மகனின் கஷ்டத்தைப்போக்கி அவனுக்கு கால்கள் குணமாக பத்மினி (சுசீலா) பாடும் 'கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ' பாடல் நம் மனதைப் பிசையும். இந்தக்காட்சியில் மாஸ்டர் சேகர் நடிப்பு அபாரம். கால்களை மடக்கியபடி கைகளை ஊன்றி நக்கரித்து நக்கரித்து வரும்போது, ஒரு கட்டத்தில் மேலும் நகர முடியாமல் தூக்கச்சொல்லி அம்மாவிடம் கைநீட்டும் காட்சி கண்களில் நீர் கட்ட வைக்கும்.
ஜெமினிகணேஷ் - ஜெயலலிதா கனவு டூய்ட் 'வானமெனும் வீதியிலே, குளிர்வாடைஎனும் தேரினிலே ஓடிவரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்' பாடல் ஜேசுதாஸ் மாதுரி பாடியது.
நட்சத்திரக் கூட்டம் நிறைந்து மனதை நிறைவாக்கிய படம் 'அன்னை வேளாங்கண்ணி'.
The very famous song of a GG movie that was repeatedly aired for a long time
https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q
the undisputed king of romance in his pleasing form in two different color song sequences!
https://www.youtube.com/watch?v=o1vOgWuXqhM
https://www.youtube.com/watch?v=LC5-vQtAQx4
தமிழ்த் திரையுலகில் காதல் பாடல்கள் தொகுப்பில் 'மழையில் நனைந்து' பாடும் பாடல்கள் ஏராளம்! காதல் மன்னரின் 'அவளுக்கென்று ஒரு மனம்', ரேவதியின் நடிப்பில்ஒரே மாதிரியான காட்சிகளில் வெளிவந்த 'புன்னகை மன்னன்' மற்றும் 'மௌனராகம்' , நடிகர்திலகத்தின் 'சபாஷ் மீனா' .........குறிப்பிடத்தக்கவை! ஆனால் இப்படங்களுக்கெல்லாம் முன்மாதிரி மிகப்பழைய ஆங்கில பிரம்மாண்டமான Gene Kelly's Singing in the Rain என்பது வியப்பாக இருக்கும்!
சந்திரபாபு, நாகேஷ், ரவிச்சந்திரன், கமலஹாசன் துவங்கி பிரபுதேவா, லாரன்ஸ் வரை நமது நடன கதாநாயகர்கள் கடமைப்பட்டிருப்பது Fred Astaire and Gene Kelly , Elvis Presley and Michael Jackson என்னும் நான்குHollywood நடன ஜாம்பவான்களே!
https://www.youtube.com/watch?v=D1ZYhVpdXbQ
ஒரு காலகட்டத்தில் , AMராஜா, PBஸ்ரீனிவாஸ் ALராகவன், SPB ஆகியோரின் குரல்கள் ஜெமினிகணேசன் போன்ற மென்மையான கதாநாயகர்களுக்கு மட்டுமே பொருந்தின. அதிலும் AMராஜா, PBஸ்ரீனிவாஸ் ஜெமினிகணேசனின் குரலாக மட்டுமே ரசிகர்கள் மனதில் உருவகப்படுத்தப்பட்டன. எம்ஜியார் படப்பாடல்களான 'மாசிலா உண்மைக்காதலே', 'பால்வண்ணம் பருவம் கண்டு..' .... நடிகர்திலகத்தின் படப்பாடல்களான 'தேன் உண்ணும் வண்டு' பாலாஜிக்காக பாடப்பட்ட 'நிலவுக்கு என்மேல்' .....இன்றுவரை ஜெமினி பாடல்களாகவே அடையாளம் காணப்படுகின்றன. ஒரு மாறுதலுக்கு பலகுரல் மேதை TMS ஜெமினிக்காகப் பாடிய பாடல்கள் தாமரை இலைத்தண்ணீராக ஒட்டவில்லை. ஆனாலும் காட்சிகளாகப் பார்க்கும்பொழுது ரசிக்கும்வண்ணமே உள்ளன.
சங்கமம் திரைப்படத்தின் இனிமையான பாடல் காட்சிகள் ஒரு நல்ல உதாரணம்.
https://www.youtube.com/watch?v=8Ltkq5_iCMI
https://www.youtube.com/watch?v=_GZnygcs564
This song also has made an impact in Mohanlal malayalam movie Chitram!
https://www.youtube.com/watch?v=bGuX3RHLI2Q
Why is Gemini Ganesan still construed as the 'undisputed king of romance'? காதலின் மென்மைக்கு மேன்மை சேர்த்தவர். பெண்மைக்கு பெருமை சேர்த்த பண்புமிக்க நடிகர்.
Enjoy the video clippings that endorse his coveted title 'Kaadhal Mannan'!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=0qV8W1z6ZZo
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k
https://www.youtube.com/watch?v=sG4heXoPtP4
https://www.youtube.com/watch?v=XUFiNhC8CcA
https://www.youtube.com/watch?v=ieUSiFFnwEw
ஜெமினிகணேசன் மார்க்கெட் தொய்வடைந்த நேரம்! அவரது உடற்கட்டும் கதாநாயகனுக்கு உகந்ததாக இல்லாது வயது ஏற்றம் காரணமாக அவர் பருமன் அடைந்த காலகட்டம். யாரும் எதிர்பாராதவண்ணம் குறத்திமகன் திரைப்படத்தில் அதிரடியாக அசல் குறவராகவே மாறி ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வைத்தார்.
A near perfect transformation and characterization that always etches in our memory! As a bonus, enjoy some more comparable performances by other actors in this gypsy role!
https://www.youtube.com/watch?v=UYZ4Ou8GcY0
https://www.youtube.com/watch?v=4Jb3wwI6dHg
https://www.youtube.com/watch?v=R2A3LxgP3Ss
வயது முதிர்ந்த பெரியவர் தன இயலாமையை ஆற்றாமையை கம்பீரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பாடல்களுக்கு முன்னோடி நடிகர்த்திலகமே அவரைத்தவிர வேறு ஒருவரை நம்மால் நினைத்துப்பார்க்க இயலாது. ஒரே exception ஜெமினியின் உனக்கென்ன குறைச்சல்!
https://www.youtube.com/watch?v=gcdZb_WIvYM
கவிஞர் வாலி அவர்கள் கவியரசு கண்ணதாசனின் இந்த தன்னம்பிக்கைமிக்க வைர வரிகள் விரக்தியின் விளிம்பிலிருந்த தன் வாழ்க்கைப்பாதையையே மாற்றியமைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெமினியின் மறக்க முடியாத நடிப்பில் PBS அவர்களின் மென்மையான குரலில் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் சுமைதாங்கி திரைப்பாடல்.....
https://www.youtube.com/watch?v=wmjEXNFNupM
மனைவியை இழந்து வாய்பேச இயலாத மகனுடன் வறண்ட பாலைவனமாய் சென்றுகொண்டிருக்கும் வாழ்வில் தென்றலாய் தேன்மழையாய் ஒரு கன்னிப் பெண்மலர் குறுக்கிடும்போது போரில் ரணகளம் கண்ட இராணுவவீரனின் மனமே போர்க்களமாகிறதே! மென்மையான உணர்வுகளை மேன்மையாக வெளிப்படுத்தும் ஜெமினியின் தங்கமான நடிப்புக்கிரீடத்தில் மேலும் ஒரு வைரக்கல்!
https://www.youtube.com/watch?v=Z8MYbZVETDU
காதலில் இதமான வலி இனிமையான தருணம் என்பது நேரம் போவது உணராமல் 'காத்திருத்தல்'. காக்க வைப்பதிலும் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. காதல் மன்னரின் குறும்புத்தனம் ரசிப்புக்குரியதே!
https://www.youtube.com/watch?v=3vFw2qwKYCU
https://www.youtube.com/watch?v=-v_FDtF4XAs
தமிழ் திரையுலகில் அழகிய இயற்கையான சிகைக்கு சொந்தக்காரர்கள் நடிகர்திலகம், காதல் மன்னர் மற்றும் மக்கள் கலைஞர் ஆகியோரே! ஜெமினிகணேசன் பெரும்பாலும் விக் வைத்துக்கொள்வதில்லை, வெள்ளிவிழா திரைப்படம் வரை வழக்கமாக உரத்தகுரலில் பாடும் ஈஸ்வரி மிக ஹஸ்கியான குரலிலும், வழக்கத்துக்கு மாறாக சுசீலாம்மா உரத்தும் பாடியது இப்படத்தில்தான்.
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE
https://www.youtube.com/watch?v=xYD5qqBqjKw
Gemini Ganesan worked with NT as a co-star in several superhit movies like Paasamalar, Paavamannippu, VPKB,.....shows only his magnanimity to share the screen space with NT though he is one of the trinity of Tamil Cinema NT,GG and MGR. Paarththaal Pasi Theerum is a typical Sivaji-Gemini combo but more screen space for GG as the story revolves around him and Saavithri. In place of AM Raajaa and PBS, the GG song voice was rendered by AL Raghavan! While NT justified his role perfectly,GG had a dominating presence in line with the screen play thanks to the gesture by NT who never interferes with the directors. The film was a huge success.
https://www.youtube.com/watch?v=PJ2tirC6PqE
Gemini Ganesan and Saavithri were construed as the screen parents of Kamal Hassan and GG stood by the side of Kamal to culminate into a full pledged hero throgh director K.Balachander.
Though Kamal and Rajini are thought of as the disciples of KB, It was GG with whom KB could give classics like Punnagai, Iru Kodugal and Naan Avanillai, the bench mark movie of GG showcasing his acting prowess in a multiple get up. (Mr. Gopal is expected to contribute elaborately on this movie as his favorite GG film). Just watch a song sequence!
https://www.youtube.com/watch?v=NK-9e0YrdE8
Gemini Ganesh in his heydays was reckoned as the ‘Director’s Actor’. KB-GG combo could churn out some memorable family melodrama such as Punnagai, Iru Kodugal, Kanna Nalama, Velli vizha, Kaaviyaththalaivi…..besides GG’s critically acclaimed lifetime movie Naan Avanillai. Punnagai (1971) was a commercial disappointment but remembered for its unique theme and the finest performance ever from GG as, Sathyamoorthi, an ardent follower of Gandhian philosophy. This film showcases the consistency in his subtle acting and turns out to be a tear jerker in many scenes with the dominating screen presence of GG aptly supportedby Jayanthi. His portrayal in the climax was noteworthy. But KB slips down in the unwanted and unwarranted ‘rape’ scene with the heroine Jayanthi singing a song ‘aanaiyitten nerungathey…’ that only provoked laughter! Nagesh was in his form but failed to impress along the storyline centring around GG.
https://lh6.googleusercontent.com/-H...-foto+copy.jpg
உண்மையாக சொன்னால் ஜெமினி ஒரு நடிகர் என்ற ரீதியில் மட்டும் வைத்து பார்க்க பட்டால்(தமிழகத்தில் உயரமான நடிப்பின் இமயம் இருந்ததால் ,நடிகர்திலகத்தை உலகத்தின் உச்சிக்கு விட்டு விட்டே மற்றவரை எடை போட இயலும்),அன்றைய தமிழகத்தில் இருந்த ஏனைய எல்லோரையும் விட உயர்ந்து,கிட்டத்தட்ட ஹிந்தி நடிகர்களின் தரத்தில் இருந்தவர்.
இத்தனைக்கும் கைகளை உபயோகிக்க தெரியாது,multi tasking acting ability ,coordination அறவே கிடையாது. ஸ்டைல்,ஈர்ப்புள்ள signature actions ஊஹூம். நடனம்,action ஹே ஹே ஹே. கொஞ்சம் பெண்மை தன்மையுள்ள soft நடிகர்.
ஆனால்,பல அற்புதமான தனி தன்மை கொண்டு இயங்கிய இயக்குனர்களின், டார்லிங்.
கீழ்கண்ட விஷயங்களை காரணமாக கூறலாம்.
1)அவரிடம் அதிக பிரசங்கி தனம்,பார் பார் நான் நடிக்கிறேன் என்று உரத்து கூவும் கேமரா பிரக்ஞை கிடையாது.பாத்திரத்தோடு உறுத்தலில்லாமல் ஒன்றுவார்.
2)ஒன்றாம் கிளாஸ் தாண்டாத நமது பாமர ஹீரோக்கள், கிராம படங்களில் "நடிக்க"முயன்ற போது,பட்டதாரி professor கிராம பாத்திரங்களில் ஒன்றினார்.
3)காமெடி,செண்டிமெண்ட்,tragedy ,கிராமத்தான்,நடுத்தரன்,பணக்காரர் எல்லா பாத்திரங்களுக்கும் பாந்தம்.(Action ,ஸ்டைல் விட்டு விடலாம்)
4)நாடக பயிற்சி இல்லாதது blessing in disguise . அதனால் சினிமாவிற்கு வேண்டிய சினிமா நடிப்பை மட்டுமே தந்தார்.
5)Acting is not about Acting and reacting but behaving as the character என்பதற்கு அற்புத உதாரணம்.
கற்பகம்-1963
எனக்கு தெரிந்து வாழ்க்கையில் என்னுடன் முரண் பட்டவர்கள் உண்டே தவிர ,கெட்டவர்களை நான் சந்தித்ததே இல்லை. ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் போன்ற கதைகளை படிக்கும் போது,உலகத்தில் நல்லவர்களை தவிர யாருமே இல்லை ஆனாலும் மனித பிரச்சினைகளுக்கும் அளவே இல்லை என்ற ரீதியில்தான் இருக்கும்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மேல் அளவற்ற மதிப்பு கொண்டவன் நான் என்ற முறையில் ,அவரும் ஜெமினியும் இணைந்து,மற்ற திலகங்களை மீறி 1963 இல் பிரம்மாண்ட வெற்றியை சுவைத்த ,வாலியின் ,விஜயாவின் நுழைவு வாயிலான கற்பகம் பற்றி பேச போகிறேன். பார்க்கும் தோறும், இந்த மாதிரி ஒரு நல்லசிவத்துடன்,ஒரு சுந்தரத்துடன்,ஒரு கற்பகத்துடன்,ஒரு அமுதாவுடன் ,ஏன் மற்ற பண்ணையாட்களுடன் ஒரு நாளாவது வாழ முடியாதா என்ற எண்ணமே மிகும்.
100 சதவிகித புத்தி கூர்மையுள்ள படத்தை(nan avanillai) அலசி விட்டதால்,100 சதவிகித இதயத்துக்கு இதம் தரும் இந்த படத்தை அலசுவதில் ஒரு இனிய சுவை.சிலர் இது போன்ற படங்களை synthetic ஆன ஒரு wishful assembly என்று உதறுவார்கள்.இருக்கட்டுமே,வாழ்க்கையில் நாம் சந்திக்கவே வாய்ப்பில்லாத தீமைகள்,தற்செயல்கள்,தீயவர்கள்,நல்லவர்களாக நடித்த தீயவர்கள் எல்லாவற்றையும் சகித்த நமக்கு,இந்த சுகமான சகிப்பினால் சுகிப்புதானே?
என்னதான் சொல்லுங்கள்,கே.எஸ்.ஜி படம் பார்க்கும் போது நமது கலாச்சாரத்துடன் இணைந்து ,அதன் நீட்சியாக பண்பட்ட நல்லிதயங்களுடன் வாழ்ந்து,ஒத்து,முரண்பட்டு,பிரச்சினைகளை சந்தித்து ,தீர்வு கண்டு, இல்லம் திரும்பும் ஒரு இதத்திற்கு இணை இல்லவே இல்லை. (கிட்டத்தட்ட ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் ஹென்றிக்கு எளிமையான இணை இப்பட சுந்தரம்)
இப்படத்திற்கு வேறு யாரையோ கே.எஸ்.ஜி தேர்வு செய்திருந்தாராம். நல்ல வேளை, அப்படி ஒரு விபத்திலிருந்து தமிழக ரசிகர்கள் தப்பி, ஜெமினி-ரங்காராவ் இணைவில் மெய்மறந்தோம்.
அதுவரை நல்லவனாக வாழ்வதே ஒரு தண்டனை என்றே தமிழ் படங்கள் நமக்கு போதித்து வந்தன.கண்ணோ,கையோ,காலோ இழப்பது நிச்சயம், போனஸ் ஆக சந்தேகம்,உதாசீனம்,மற்றவர்களால் உறிஞ்ச படுதல் என்றெல்லாம் உப-பிரச்சினைகள் வேறு.இறுதியில் அகால சாவும் உண்டு .அதை மீறி நல்லிதயங்களால் சூழ பட்டு நல்வாழ்வு வாழும் மனிதனுக்கு சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் அவை மேலும் அவனை மெருகேற்றி ,நற்சூழலையே ஏற்படுத்தும் என்ற உணர்வை தந்த காவியம் கற்பகம்.இனி அதை விரிவாக அலசுவோம்.
விமர்சன ஆய்வு மரபின் படி கதை என்ற prelude தவிர்க்க முடியாதது என்பதால் அந்த மரபை பின்பற்றுகிறேன்.
மனைவியை இழந்த நல்லசிவம் பிள்ளை என்ற தர்ம சிந்தனை கொண்ட பெரும் பண்ணையார் ,தன் ஒரே மகள் கற்பகம் மற்றும் பட்டணத்தில் படிக்கும் மகன் ராஜாங்கம் என்ற இரு வாலிப செல்வங்களுடன் தனியாக,விசுவாசமான கணக்க பிள்ளையுடன் நல்வாழ்வு வாழ்பவர்.சுந்தரம் என்ற அநாதை சிறு விவசாயி ,தன்னுடைய தொழிலில் அக்கறை காட்டி நேர்வாழ்வு வாழ்பவன்.இந்த இரு நல்லிதயங்களும் கற்பகத்தை சுந்தரத்துக்கு மணமுடிப்பதில் வாழ்வில் இணைகிறது.மகன் ராஜாங்கம் ,தந்தையுடன் பிணங்கி,தாண்டவன் என்ற குணகேடு,மற்றும் சுயநலம் கொண்டவனின் பெண் பங்கஜத்தை திருமணம் செய்கிறான்.
நல்லசிவம் தன் பொறுப்புகளை சுந்தரத்திடம் ஒப்புவித்து அவனை வாரிசாகவே கருதுகிறார்.இதனால் கருத்து வேற்றுமை அதிகமானாலும்,பங்கஜம்-ராஜாங்கத்தின் பெண் குழந்தை கற்பகம்-சுந்தரத்தாலேயே போற்றி வளர்க்க படுகிறது.ஒரு மாடு முட்டி விபத்தில் கற்பகம் இறக்க,துயரத்தில் வாடும் சுந்தரத்தின் விருப்பமின்றியே தன் நண்பன் மகள் படித்த பண்புள்ள அமுதாவை சுந்தரத்திற்கு மறுமணம் செய்வித்து,குழந்தை மீனாட்சியின் அன்பை பெற்றால் சுந்தரத்தை அவள் மணவாழ்வில் நேர்செய்து விடலாம் என்றும் அமுதாவிற்கு,நல்லசிவம் ஆலோசனை சொல்கிறார்.சிறிது முரண்டுகள் மற்றும் பிரச்சினைகள் (தாண்டவன் உண்டாக்குபவை)முடிவில் சுந்தரம்-அமுதா-மீனாட்சி இணைந்து ,நல்லசிவத்தின் ஆசை படி நிறைவாக முடியும் படம்.
இந்த திரைக்கதையை படிப்பவர்கள் எப்படி இதனை சுவாரஸ்ய படமாக்க முடியும் என்று வியப்பர். சுவாரஸ்யம் மற்றுமல்ல இது ஒரு superhit படம்.அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இன்று வரை ஒரு cult classic என்றே பேண படுகிறது.(இதன் சாயலில் வந்த முந்தானை முடிச்சும் மெகா வெற்றி)
இந்த படத்தின் highlights என்றால் கே.எஸ்.ஜியின் வசனங்கள்,ஜெமினி-ரங்கராவ் ஆகியோரின் அபார நடிப்பு,விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் பாடல்கள்(வாலி எழுத்தில்),நான்கு பாடல்களும் சுசீலா சோலோ(ஆண் பாடகரே கிடையாது),கர்ணனின் நல்ல படபிடிப்பு .புதுசாக இளசாக விஜயா.
இதன் தனி பட்ட சிறப்புகளை விரிவாக அலசுவோம்.
நடிகர்திலகம் நடிப்பு,அதன் வீச்சு,வேறு படும் நேர்த்தி இவையெல்லாம் அளவற்ற பிரமிப்பை தந்து ,அவரை உயர பீடத்தில் வைத்து தொழ செய்து விடும்.ஆனால் ஜெமினியின் நடிப்பு வேறு விதம்.உங்களுக்கு சிறு வயதில் உங்களை பார்த்து புன்னகைத்து,உங்களுக்கு அவ்வப்போது சாக்லேட் தரும் பக்கத்து வீட்டு பாந்தமான மாமாவை நினைக்கும் தோறும்,மனதில் ஒரு ரம்மிய உணர்ச்சி பெருக்கு உடைத்து வருமே?அந்த ரகம்.
அதுவும் இந்த படத்தில் ரங்காராவ் இணைவில் அவர் தந்த இதத்தை எழுத்தில் வடிப்பது இயலுமா?முயற்சிக்கிறேன்.
இந்த படத்தில் அவரை தவிர வேறு யாரேனும் பொருந்த முடியுமா என்று பார்த்தால்,எல்லோருமே நடித்து ஊதி விட கூடிய சாதாரண பாத்திரமே.ஆனால் இந்த பாத்திரத்திற்கு அவர் அளித்த அமரிக்கையான மெருகை,ஒளியை,உண்மை தன்மையை வேறொரு நடிகர் கனவு கூட காண முடியாது.ஒரு சாதாரண நல்லிதயம் கொண்ட விவசாயியாக,மற்றோருடன் மென்மையான அணுகு முறை,ஒத்திசைவு-சலசலப்பு சூழ்நிலையில் அவர் குடும்பத்தில் காட்டும் யதார்த்தமான இதமான அணுகுமுறைகள்,மனைவியிடம் ஒரு மென்மையான பரிவுடன் கூடிய நிஜ காதல்,குழந்தையை போற்றி அனைத்து வளர்க்கும் இயல்பான கொஞ்சல் கலந்த அன்பு,மனைவியை இழக்கும் அதிர்ச்சி,தொடர்ந்த பற்றற்ற விரக்தி,பெரியவருக்கும் மன சஞ்சலம் தராமல்,இரண்டாவது வாழ்க்கையில் ஒட்டவும் முடியாத தடுமாற்றம் என்று நண்பர்களே ,இந்த அற்புத நடிப்பை பார்த்து மட்டும் மகிழாதீர்கள் அதனுடன் உணர்ச்சி பூர்வமாக ஒன்றி அந்த நிமிடங்களில் உண்மையாக வாழ்ந்து பாருங்கள்.என் எழுத்தின் விகசிப்பு புரியும்.
ரங்கா ராவ் ,ஒரு மனைவியை இழந்து சொந்தங்களில் தோய்ந்து ,உண்மையை நேசித்து,ஊர் உறவுகளுக்கு உண்மையாய்,உபயோகமாய் நெறி வாழ்வு வாழும் நிஜ மனிதராய் அவ்வளவு நேர்த்தியாய் தன் இயல்பு நடிப்பை தந்து,படத்தினை நடத்தி செல்லும் சூத்திரதாரியாய் பரிமளிப்பார்.மற்ற பாத்திரங்களை ஒளியூட்ட வைக்கும் ரங்கராவ் அவர்களின் பங்களிப்பு.அவர் சூரியனாய் ,மற்ற நிலவுகளுக்கு ஒளி கொடுத்து பரிமளிக்க வைப்பார்.
பெண்ணிடம் காட்டும் பரிவு,உண்மை மனிதர்களை நேசிக்கும் நேர்மை,உண்மையற்றவற்றை சுடும் பிடிவாத நிராகரிப்பு,மகன் ஸ்தானத்தில் மருமகனை நேசித்து அவன் நலனில் காட்டும் பிடிவாத அன்பு,தன்னுடைய கொண்டு வந்த மருமகள் உறவை ஓட்ட வைக்க முயற்சிக்கும் தவிப்பு,அந்த முயற்சி தோற்கும் போது உருகியோடும் தன்னிரக்கம்,என்று வாழ்ந்திருப்பார்.என்னவொரு இதயத்தை பிளக்கும் இதமான வன்மையான தென்றல்!
கே.ஆர்.விஜயா நடித்து பரிச்சயம் காணா புது மொட்டு.ஆனால் இந்த கபடம் ,சூது தெரியாத கிராமத்து இள மொட்டு பாத்திரத்திற்கு,இந்த மங்கள கரமான rawness அவ்வளவு பாந்தம்.
வீ.கே.ஆர் இவ்வளவு நல்ல தன்மையுடன் இதமாக நடிக்கவும் செய்வாரா என்று ஆச்சரியம் தரும் ,இணைப்பு பாலமாய் செயல் படும் விசுவாச கணக்க பிள்ளை.
முத்துராமன்,ஷீலா இருவருமே வில்லத்தனம் இல்லாத குடும்ப பிணக்கத்தை ,வேறுபாடுகளை ,முரண்டுகளை காட்டுவார்கள்.எம்.ஆர்.ராதா வழக்கம் போல்.
இந்த படத்தில் ஒட்டாதவர்கள் நாகைய்யாவும் ,சாவித்திரியும்.பாத்திர படைப்பின் குழப்பத்தில்,நடிகையர் திலகத்தின் உழைப்பும்,தேர்ச்சியும் வீணாகி விடும்.
கற்பகம் படத்தில் மிக முக்கிய அம்சம் வசனம்.என்னதான் கே.எஸ்.ஜி படத்தில் வசனங்கள் அதிகம்,அவரே எல்லா பாத்திரத்தின் வாயிலாகவும் பேசி விடுவார்,எல்லா பத்திரங்களும் நல்ல தன்மையில் லீட் எடுக்கும்,அதிக பிரசங்கம் இருக்கும் என குற்றசாட்டுக்கள் வந்தாலும் நான் அதை கசக்கி தூக்கி எரிந்து விட்டு, அவர் வசனங்களில் வந்த தெய்வ பிறவி,படிக்காத மேதை,குமுதம்,சாரதா,கற்பகம்,கை கொடுத்த தெய்வம்,செல்வம்,பேசும் தெய்வம்,பணமா பாசமா ,சித்தி போன்ற படங்களை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்த்தும் ,கேட்டும் மகிழ்வேன்.
தமிழ் நாட்டில் வள வளவென்று உரக்க பேசும் மனிதர்கள்தானே அதிகம்?நம் படங்கள் அதைத்தானே பிரதிபலிக்க வேண்டும்?அதைத்தான் அருமையான லாஜிக் கொண்டு,சுவையாக ,சுத்தமாக,நற்தன்மையோடு கே.எஸ்.ஜி தந்தார்.
கற்பகம் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் என்றால் அனைத்துமே. குறிப்பாக ஆரம்ப ஜெமினி சம்பந்த பட்ட விருந்துக்கு வரும் காட்சி,கல்யாண சம்மந்தம் பேசும் காட்சி, ஜெமினி-விஜயா அன்னியோன்ய காட்சிகள்,குழந்தையை வைத்து வரும் காட்சிகள்,ஜெமினி மற்ற குடும்பத்தாருடன் அனுசரிக்கும் காட்சிகள்,ரங்கா ராவ் ஜெமினியை மறு கல்யாணம் செய்ய வற்புறுத்தும் காட்சிகள்,ரங்கராவ்-சாவித்திரி காட்சிகள் எல்லாமே ஒரு அன்பான நட்பான குடும்பத்துடன் வாழும் இதத்தை தருபவை.
சுசிலாவின் தேன் குரலில் மன்னவனே இதயத்தை துளைக்கும். ஆயிரம் இரவுகள் முதலிரவு மனநிலை இன்றும் தரும்.அத்தை மடி நம்மை குழந்தையாக்கி விடும்.பக்கத்து வீட்டு நல்ல பாட்டு.ஆனால் படத்தில் ஒட்டாது.(மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் பிடிச்சான்)
இந்த படத்தில் melodrama ,செண்டிமெண்ட் எல்லாமே நல்லிதயங்கள் சம்பத்த பட்ட ,நடக்க கூடிய ஒன்று என்பதால் படத்தில் ஒன்றுவதில் எந்த தடையும் இருக்காது.
கர்ணனின் கேமரா படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.படத்தின் தன்மை,மனநிலைகள் ஆகியவற்றுடன் ஒன்றும்.கருப்பு-வெள்ளை படங்களின் சுவை ,அவை நம் மனதிற்கு தரும் இதம் அலாதி.(ஒன்று தெரியுமா?நம் அத்தனை பேரின் கனவுகளும் கருப்பு-வெள்ளையே.பத்தாயிரத்தில் ஒருவருக்கே கலர் கனவு யோகம்)
நான் மிக விரும்பி ரசிக்கும் ஜெமினியின் படங்களில் ஒன்று.
கோபாலா கொக்கா? நேர்மையான பதிவிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள். ஒரு வகையில் நாம் ஜெமினிதிரியில் பங்களிப்பது நமது நடிப்பு தெய்வத்துடன் இணைந்து பல திரைக்காவியங்களில் பெருமைப்படுத்திய ஒரு மென்மையான மேன்மைநிறைந்த பெருந்தன்மையாளருக்கு நமது செஞ்சோற்றுக்கடனே!
ஜெமினியின் மறக்க முடியாத காவியங்களில் ஒன்று ராமு. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாடகர் திலகம்-தமிழிசை வேந்தன் குரல்களில் கண்ணதாசன் -விஸ்வநாதன் இணைவில், மோகன கல்யாணியில் .
திளையுங்கள்.
https://www.youtube.com/watch?v=oEp5BkFI630
In line with Mr. Gopal.
https://www.youtube.com/watch?v=WVZOHNxwTKk
https://www.youtube.com/watch?v=JHSH63HPf7Q
Enna Mudhalaali Soukyama?! A Gemini film at his receding stages.
https://www.youtube.com/watch?v=_oLLrY7brRM
https://www.youtube.com/watch?v=VzxxXWIgtck
https://www.youtube.com/watch?v=jgTM35gEjHg
velli vizhaa : A significant movie for GG parading his versatility in subtle acting and his scene stealing skills in aged roles on par with NT!
https://www.youtube.com/watch?v=AKfl5wrLqaE
not just romance .. subtle acting mannan..
Missiamma : One of the greatest hits of GG. Savithri looks cute and the 'chemistry' between GG and Savithri....it is a lively biochemistry!
https://www.youtube.com/watch?v=pEwgZR_neZ0
பிரிக்க முடியாதது சேர்ந்தே இருப்பது : ஜிப்பாவும் ஜெமினியும்!
ஜெமினிக்கு எல்லாவகை உடைகளும் நன்றாகப் பொருந்தும். ஆனாலும் காதல்மன்னர் தன்னுடைய சீருடையாக தேர்ந்தெடுத்தது பைஜாமா ஜிப்பாவையே! அதிக படங்களில் ஜிப்பா போட்ட சாதனைக்கும் ஜெமினிதான் சொந்தக்காரர்!
https://www.youtube.com/watch?v=WGqOzDnetDE
https://www.youtube.com/watch?v=Qs0DVtaNEnM
https://www.youtube.com/watch?v=F0xW0-EfOrQ
https://www.youtube.com/watch?v=GfM3pr4d7cw
NT in jippaa!
https://www.youtube.com/watch?v=PGBryGdL0FQ
https://www.youtube.com/watch?v=0-WuL0RWQJs
வாழ்க்கை படகு : ஜெமினியின் இயல்பான நடிப்பில் சிறந்த இசையமைப்பில் தேனருவிப் பாடல்கள்!
https://www.youtube.com/watch?v=hJVHq886BOE
https://www.youtube.com/watch?v=Fo_dKWe-MoE
Vanjikkoattai Vaaliban is yet another milestone movie for GG, providing him ample scope to display his acting prowess besides his trademark love sequences.No songs for him. Padmini and Vaijayanthimaalaa were the love interests and the dance competition between them with the punch remark 'sabaash' from PSV remains the evergreen celluloid feast! GG looks young and energetic even in fight scenes.
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
https://www.youtube.com/watch?v=ZXEZZOJkEbc
telugu version
https://www.youtube.com/watch?v=PhPbnIQh5zw
இந்த வாரம் குமுதம் இதழில் ஜெமினிகணேசனுக்கு காதல்மன்னன் பட்டம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு அவரே பதில் தந்திருக்கிறார் சுனிலிடம் கேளுங்கள் பகுதியில்
When Sivaji Ganesan and MGR were enjoying a fanfare, GG was reluctant to encourage any such fan following nor tried to project his image. He believed in the quality of product he can deliver rather than marketing the same under a hype from the fan base. One hand he did not want to invest any of his hard earned money for such types of movie promotions and on the other hand he did not want to prompt unnecessary clashes between fan clubs. He could also prove his place in the trinity that ruled tamil cinema for a long time of course with no expliit supporters for him during his market fluctuations. He had a quiet, calm and contended life both on screen and off screen. Even amidst the tough competitions between NT and MGR, GG could survive and churn many memorable movies to speak volumes on his subtle acting skills.
https://www.youtube.com/watch?v=6Eg20JQwGYY
konjum Salangai : this movie is a forerunner to NT's immortal celluloid saga 'Thillaanaa Mohanaambaal'. Though the performances as Nadhaswaram exponent by GG and NT are different, this film is remembered for its dialogue interludes/preludes in the song, unique voice modulations by Janaki, the singer and above all Kaarukkurichi Arunaachalam's enchanting Nadhaswaram flow!
https://www.youtube.com/watch?v=AX0o-_EXA1I
for fond remembrances of Baaliah and Saarangapaani with NT!
https://www.youtube.com/watch?v=cPfu1r_NUjw
RARE STILLS
http://i57.tinypic.com/xml442.jpg
Shanthi Nilayam was another significant movie for GG. The original 'Sound of Music' movie was such a grand musical extravaganza and it gave a tough nose finish competition to Sean Connery's original James Bond flick 'Thunderball' in the year 1965. It was decided by the producers to adapt the story theme but the screen play was little bit changed keeping GG's persona in mind for a hero who almost in all his movies had had two or more females of love interest. In this movie his first wife is a mentally ill one even as GG has to take care of his brother's kids after the death of the couple in some accident. Kaanchanaa an orphan brought up in some home comes to GG's villa as a music teacher and how things take shape...some suspense elements related to his first wife, development of love with Kaanchanaa...very sweet movie at that time with stunning visuals by the ace cinematographer Markus Burtley! And enchanting music with ever green songs by MSV!!For lovers soft family movies this GG starrer at that time was a great relief and it enjoyed a good and profitable run. SPB sang for the first time to GG replacing PBS. A must see movie, with GG in the role of Christopher Plummer and Kaanchana in the role of Julie Andrews as in Sound of Music.