சற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி. அதற்குள் ஆறாவது பாகத்தில் நுழைந்து 8வது பக்கம் நிரம்ப உள்ளது. ... என்ன வேகம்... வேகம் மட்டுமா ... விஷயமும் கூட .. எவ்வளவு தகவல்கள் ... எவ்வளவு எண்ணப் பரிமாற்றங்கள்.... பம்மலாரின் பதிவுகள் இத்திரியை செய்திக் கூடமாகவே மாற்றியுள்ளன. புதிய பறவை மதுரையில் செய்து வரும் சாதனை ... முரளி சார் சொன்னது போல் மதுரை முந்திக் கொள்கிறது சிங்கத் தமிழனைப் பெருமைப் படுத்துவதில்...
குறந்தகடு நெடுந்தகடு வெளியீடு பற்றிய அலசலில் பல தகவல்கள் உள்ளன. பாராட்டுக்கள்.
சமீபத்தில் ராஜ் வீடியோ விஷனில் மிருதங்க சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளனர். நெடுந்தகடு வடிவில் தான். பல்வேறு நிறுவனங்களின் சார்பில் வெளியிடப் பட்டுள்ள நடிகர்திலகத்தின் படங்களைப் பட்டியலிட்ட பின்னர் இன்னும் மீதம் வெளிவர வேண்டியவை சிறிதே. அதை ஒரு கண்ணோட்டம் பார்ப்போம்.
பழைய படங்கள்
1. மனிதனும் மிருகமும் ... இது வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவில்லை.
2. கண்கள் .. இதுவும் அதே போல்
3. பெற்ற மனம் ... இதுவும் அதே போல்
4. பூங்கோதை ... இதன் கதியும் தெரியவில்லை
5. திரும்பிப் பார்... 15 முதல் 50 சதம் வரை வாய்ப்புள்ளது
6. இல்லற ஜோதி - 90 சதம் வாய்ப்புள்ளது.
7. உலகம் பல விதம் ... 10 சதம் வாய்ப்புள்ளது. அருமையான நகைச்சுவை நிறைந்த படம். காக்கா ராதாகிருஷ்ணனுக்கு பெயர் சொல்லக் கூடிய படம்.
8. கோட்டீஸ்வரன்... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
9. நல்ல வீடு ... முற்றிலும் வாய்ப்புக் குறைவு
10. நானே ராஜா ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
11. பெண்ணின் பெருமை ... வாய்ப்புள்ளது.
12. மணமகன் தேவை ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
13. பாக்கியவதி .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
14. தங்க பதுமை ... வாய்ப்புள்ளது
15. அவள் யார் ... வாய்ப்புக் குறைவு
16. குறவஞ்சி ... வாய்ப்புள்ளது
17. விடிவெள்ளி ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
18. எல்லாம் உனக்காக ... வாய்ப்புக் குறைவு
19. ஸ்ரீ வள்ளி ... 50 சதம் வாய்ப்புள்ளது
20. வளர் பிறை ... வாய்ப்பு தெரியவில்லை. ஆனால் வந்தே ஆகவேண்டும் என்கிற அளவிற்கு அருமையான படம் .. நடிகர் திலகத்தின் ஊமை நடிப்பிற்காகவே பார்க்க வேண்டயது.
21. செந்தாமரை ... வாய்ப்புக் குறைவு .. ஆனால் பூவிருக்கு வண்டிருக்கு என்ற இனிமையான பாடலுக்காகவும் அப்பாடலில் நடிகர் திலகத்தின் தோற்றத்திற்காகவும் டி.எம்.எஸ். பி.சுசீலா குரலுக்காவும் ஏங்க வைக்கும் படம். மற்ற படி படம் சொல்லும் படி பெரியதாக ஒன்றும் இல்லை. கே.ஆர்.ராமசாமி நடிகர் திலகம் இணைந்து நடித்த மற்றொரு படம்.
22. இருவர் உள்ளம் ... வாய்ப்புள்ளது
23. நான் வணங்கும் தெய்வம் ... வாய்ப்புக் குறைவு
24. பாலாடை ... வாய்ப்புள்ளது
25. தங்கைக்காக .. வாய்ப்புள்ளது
26. எங்கள் தங்க ராஜா ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
27. மனிதரில் மாணிக்கம் ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
28. தாய் .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
29. மனிதனும் தெய்வமாகலாம் .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
30. இளைய தலைமுறை ... வாய்ப்புக் குறைவு
31. ஜெனரல் சக்கரவர்த்தி .. வாய்ப்புள்ளது
32. விஸ்வரூபம் ... தெரியவில்லை
33. சத்திய சுந்தரம் ...தெரியவில்லை. வாய்ப்புள்ளது.
34. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு ... தெரியவில்லை.
35. மாடி வீட்டு ஏழை ... தெரியவில்லை
36. கருடா சௌக்யமா .. வாய்ப்புள்ளது
37. தியாகி ... தெரியவில்லை
38. பரீட்சைக்கு நேரமாச்சு .. வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
39. ஊரும் உறவும் ... தெரியவில்லை
40. திருப்பம் ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
41. சிரஞ்ஜீவி ... வந்து விட்டதா தெரியவில்லை. வரவில்லையென்றால் வாய்ப்புள்ளது.
42. தராசு... தெரியவில்லை
43. சரித்திர நாயகன் ... தெரியவில்லை
44. வம்ச விளக்கு ... தெரியவில்லை
45. நாம் இருவர் ... தெரியவில்லை
46. தாம்பத்யம் ... தெரியவில்லை
47. என் தமிழ் என் மக்கள் ... தெரியவில்லை
48. என் ஆச ராசாவே ... தெரியவில்லை
49. பூப்பறிக்க வருகிறோம் ... தெரியவில்லை
கௌரவத் தோற்றம்
1. தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை ... தெரியவில்லை .
2. குழந்தைகள் கண்ட குடியரசு .. வாய்ப்புள்ளது
3. தாயே உனக்காக .. வாய்ப்புள்ளது
4. நட்சத்திரம் . தெரியவில்லை
இவற்றைத் தவிர்த்து நடிகர் திலகத்தின் மற்ற தமிழ்ப் படங்கள் அனைத்தும் வெளியாகி விட்டன. மற்ற மொழிப் படங்களில் கிடைக்கக் கூடிய படங்கள்
1. தர்த்தி -
2. பங்காரு பாபு
3. பக்க துக்காராம்
4. ஸ்கூல் மாஸ்டர் கன்னடம்
5. தச்சோளி அம்பு
6. யாத்ரா மொழி
சில படங்கள் அந்தந்த மாநிலங்களில் கிடைக்கலாம். அந்தந்த மாநிலங்களில் வசிக்கும் நம் நண்பர்கள் தகவல் கிடைத்தால் தெரிவிக்கலாம்.
கிட்டத் தட்ட 200 முதல் 220 படங்கள் வெளிவந்துள்ளன.
முரளி சார் ஏற்கெனவே சொன்னது போல் இணைய இணைப்புக் கிடைத்தவுடன் என்னுடைய முதல் பதிவை எழுதியிருக்கிறேன். அடுத்தடுத்தப் பதிவுகளில் மீண்டும் சந்திப்போம்.
அனைவருக்கும் நன்றி
ராகவேந்திரன்