Quote:
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன்
என்ன செய்வேன்
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
சரணம் 1
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த காயம்
உடலில் என்றால் மருந்து போதும்
உள்ளம் பாவம் என்ன செய்யும்
சரணம் 2
மேகம் போடும் கோலங்கள்
மின்னல் காட்டும் ஜாலங்கள்
காதல் கதையும் அதுவானால்
கண்ணும் மனமும் எதற்காக
சரணம் 3
இரவும் பகலும் இரண்டானால்
இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால்
உள்ளம் ஒன்றே போதாதே
சரணம் 4
கொடுத்ததும் அவன் தான் கொடுத்தானா
பறித்ததும் அவன் தான் பறித்தானா
நடந்தது இறைவன் செயலானால்
நானும் இன்னொரு நாஸ்திகனே
சரணம் 5
மயக்கம் நிறைந்த பார்வையிலும்
மனிதனின் தேவை புரிகின்றது
கலக்கம் நிறைந்து வரும்போது
கண்ணீர் தானே தெரிகின்றது
சரணம் 6
அன்பு என்றொரு முள்வேலி
ஆசை என்றொரு விஷக்காற்று
காதல் என்றொரு பொய்க்கனவு
கடல் போல் துடிப்பது ஒரு மனது
சரணம் 7
மண்ணில் பிறப்பது ஏழு முறை
மரணம் ஜனனம் ஏழு முறை
இன்னொரு பிறவி என வந்தால்
இரண்டு மனதுடன் தான் வருவேன்
சரணம் 8
கண்களின் தண்டனை காட்சி வழி
காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி
கடவுளைத் தண்டிக்க என்ன வழி
எதை எடுப்பது எதை விடுப்பது என்பதில் நிச்சயம் திரை இசைத் திலகம் திக்கித் திணறி இருப்பார் என்பது இந்த வரிகளில் தெளிவாகத் தெரிகிறது அல்லவா. அது மட்டுமல்ல, கவியரசருக்கு நிகர் யாரும் இல்லை என்பதற்கு இந்த சரணங்களை விட வேறு என்ன சான்று இருக்க முடியும்.