-
30.9.2011 வெள்ளி முதல் மதுரை 'ஸ்ரீமீனாட்சி' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக "பார்த்தால் பசி தீரும்".
1.10.2011 சனிக்கிழமை முதல் நாகர்கோவில் 'பயோனீர்முத்து' திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக "தங்கைக்காக".
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றி முத்தாரங்கள் !
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் October 01 .2011ல் பதிவிட்டது
-
சென்ற 11.11.2011 வெள்ளி முதல், கோவை மாநகரின் 'டிலைட்' திரையரங்கில், புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை", தினசரி 4 காட்சிகளாக, வெற்றிநடைபோட்டு வருகிறது !
12.11.2011 சனிக்கிழமை முதல், நெல்லை 'சென்ட்ரல்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நறுமணம் பரப்பி வருகிறது நமது நடிகர் திலகத்தின் "இரு மலர்கள்" !
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிப்பான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் November.17 .2011ல் பதிவிட்டது
-
2.12.2011 வெள்ளி முதல், மதுரை 'சென்ட்ரல் சினிமா' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், புதுமைச் சக்கரவர்த்தியின் "புதிய பறவை", சிறகுகளை விரித்து வெற்றி பவனி வருகிறது.
3.12.2011 சனிக்கிழமை முதல், கோவை 'டிலைட்' திரையரங்கில், தினசரி 3 காட்சிகளில், கலையுலக மன்னர் மன்னனின் "மன்னவன் வந்தானடி" ராஜகம்பீர நடைபோட்டு வருகிறது.
தித்திக்கும் இத்தகவல்களை வழங்கிய அன்புள்ளங்கள் திரு.பி.கணேசன் அவர்களுக்கும், திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கும் இனிய நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் December.05 .2011ல் பதிவிட்டது
-
9.12.2011 வெள்ளி முதல், சென்னை 'நியூ பிராட்வே' திரையரங்கில், தினசரி 3 காட்சிகளாக, புதுமைத் திலகத்தின் "புதிய பறவை".
10.12.2011 சனிக்கிழமை முதல், சேலம் 'அலங்கார்' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளாக, கலையுலக மன்னவரின் "மன்னவன் வந்தானடி".
இனிப்பான இந்த இரு தகவல்களை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு Sweet Thanks !
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் December.11 .2011ல் பதிவிட்டது
-
16.12.2011 வெள்ளி முதல், மதுரை 'ஸ்ரீமீனாக்ஷி' திரையரங்கில், தினசரி 4 காட்சிகளில், நமது சிவாஜி பெருமானின் "திருவிளையாடல்" வெற்றிநடைபோட்டு வருகிறது.
இனிய தகவலை வழங்கிய அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
பம்மலார் December.19 .2011ல் பதிவிட்டது
-
கடந்த சில பல வருடங்களாகவே விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடம் நாம் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் என்னவென்றால் நீங்களாகவே ஏதேனும் கற்பனை செய்துக் கொண்டு அல்லது வேண்டாத சிலரின் பேச்சை கேட்டு நடிகர் திலகத்தின் படங்களை திரையிடாமல் இருக்காதீர்கள். அப்படி செய்தால் நஷ்டம் உங்கள் இருவருக்கும்தான். மேலும் நல்ல படங்கள் நல்ல நடிப்பு இவற்றை தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பை ஒரு தலைமுறைக்கே மறுக்கிறீர்கள் என்பதையெல்லாம் எடுத்து சொல்லியிருக்கிறோம். நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்படும்போது அவை எப்படி அரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை தரும் ஒரு வணிக முயற்சியாக அமைக்கிறது என்பதை சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் நெல்லை போன்ற நகரங்களில் அந்தப் படங்கள் வெளியானபோது ஈட்டிய வசூலை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
இதை இப்போது இங்கே சொல்வதற்கு காரணம் தர்மம் எங்கே திரைப்படம். மதுரை சென்ட்ரலில் வெளியிட பேசப்பட்டு அரங்க உரிமையாளர்களும் சரி என்று ஒப்புக் கொண்டவுடன் சில விஷமிகள் பொறாமையினால் அரங்க நிர்வாகத்தை அணுகி படத்திற்கு எதிரான பிரசாரத்தை செய்ய அரங்க நிர்வாகம் சற்று தயங்கி பின் விநியோகஸ்தர் படத்தின் சிறப்புகளை எடுத்து சொன்னவுடன் ஒப்புக் கொண்டு திரையிட்டுருகின்றனர்.
இன்றைய தினம் மட்டும் சுமார் 800-க்கும் அதிகமானோர் படத்தை கண்டு களித்திருக்கின்றனர். தீபாவளி பொங்கல் போன்ற எந்த பண்டிகை நாட்களாக இல்லாதபோதும் சாதாரண வேலை நாளில் இத்துணை பேர் அதிலும் கணிசமான பெண்கள் வேறு வந்து படத்தை ரசித்திருக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து எடுத்தால் முதலில் வெளியான சங்கிலி நல்ல வசூலைப் பெற்று வெற்றி பெற்றது. அடுத்து வந்த சந்திப்பு சங்கிலி வசூலை முந்தியது. சங்கிலி வசூலை சந்திப்பு மிஞ்சியது, சந்திப்பை வெள்ளை ரோஜா தாண்டியது, வெள்ளை ரோஜாவை அண்ணன் ஒரு கோவில் முந்த இப்போது தர்மம் எங்கே முதல் நாள் வசூலில் அனைத்தையும் தாண்டி சென்று விட்டது.
இனி வரும் காலங்களில் இதையும் தாண்டிய வெற்றி மேல் வெற்றி நமக்கு கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
அன்புடன்
-
இரண்டு நாட்களுக்கு முன்பு தர்மம் எங்கே படத்தின் வெளியீடு பற்றி சொல்லும்போது அரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நடிகர் திலகத்தின் படங்களை திரையிடுவதனால் கிடைக்கக் கூடிய வணிக வெற்றியைப் பற்றி குறிப்பிட்டேன். எதைப் பற்ற்யும் கவலைப்படாதீர்கள், எதிர்மறையான சூழலிலும் நடிகர் திலகத்தின் படங்கள் சாதனை படைக்கும் என்று. Dooms day predictors என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது நெகடிவ் செய்திகளை பரப்புபவர்கள், இது சரியாக வராது, இது சரியாக போகாது என்றெல்லாம் சிவாஜி படங்களுக்கு மட்டும் சொல்லிக் கொண்டிருப்பவர்கள்.
தர்மம் எங்கே முதல் நாள் அமோகமாக போனபிறகும் கூட மறுநாள் அரங்க நிர்வாகத்தினரிடம் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆரம்பித்து விட்டது. அதனால் தியேட்டருக்கு ஆள் வராது அதிலும் இன்று [ஞாயிறு] இந்தியா பாகிஸ்தான் மாட்ச். ஆகவே நார்மலாக உங்களுக்கு ஞாயிறன்று வரக்கூடிய வசூல் கூட வராது என்று சொல்லியிருக்கிறார்கள். பாவம் அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் 4 வருடங்களுக்கு முன்பு [சரியாக சொல்ல வேண்டுமென்றால் 2011 ஏப்ரல் 2 ஞாயிறு] கிரிகெட் உலகக்கோப்பையின் பைனல் மாட்ச் நடக்கிறது. அதில் இந்தியா இலங்கையை சந்திக்கிறது. அன்றைய தினம் இதே மதுரை சென்ட்ரலில் நடிகர் திலகத்தின் சிவகாமியின் செல்வன் ஓடிக் கொண்டிருக்கிறது. அன்றைய நாளில்ம் கூட திரளான மக்கள் மாலைக் காட்சிக்கு படம் பார்க்க வந்திருந்தனர்.
இன்று நடந்த இந்தியா பாகிஸ்தான் மாட்ச் தர்மம் எங்கே திரைப்படத்தை எந்த விததிலும் பாதிக்கவில்லை. இன்று மாலை பாலகனி அரங்கம் நிறைந்தது. கீழே ஆண்கள் டிக்கெட் அனைத்தும் நிறைந்தது. நான் இரண்டு நாட்கள் முன்பு சொல்லியிருந்தது போல் முதல் நாளைப் போலவே மூன்றாம் நாள் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது. இதுவரை ஞாயிறு மாலை அதிகபட்ச வசூலாக இருந்த அண்ணன் ஒரு கோவிலின் வசூலையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறது தர்மம் எங்கே!
நாம் பலமுறை சொன்னது போல் இந்த கூட்டம் எல்லாம் தாங்களாகவே வரும் கூட்டம். தங்கள் சொந்த காசில் டிக்கெட் வாங்கி பார்க்கும் கூட்டம். ஒரு கலைஞனாக தமிழ் கலாச்சாரத்தின் அடையாள சின்னமாக என்றென்றும் நடிகர் திலகம் இனம் கண்டுக் கொள்ளப்படுவார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரின் படங்களுக்கு வரவேற்பு இருக்கும் என்று நாம் அடிக்கடி சொல்வதற்கு இவையெல்லாம் நடைமுறை உதாரணங்கள். அவரை உயர்த்திப் பிடிக்க வேறு prop upகள் தேவையில்லை.
இன்று மாலை நடந்த கோலாகல கொண்டாட்டங்களைஎல்லாம் நண்பர் சுந்தர் பதிவிடுவார்.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
தென்பாண்டி மதுரையில் ராஜசேகர் கலக்குகிறார் என்றால் நெல்லை சீமையில் எவர்க்ரீன் ஸ்டார் பாரிஸ்டர் ரஜினிகாந்த் அமர்க்ளப்படுதுகிறார். 13-ந் தேதி வெள்ளி முதல் நெல்லை சென்ட்ரலில் திரையிடப்பட்ட கெளரவம் படத்திற்கு அமோக வரவேற்பு. முதல் நாள் மாலையும் சரி இன்று ஞாயிறு மாலையும் சரி திரளான மக்கள் வந்திருந்து படத்தை கண்டு களித்திருக்கின்றனர். இவ்வளவு சூப்பராக போகும் என்று எதிர்பார்க்காத அரங்க உரிமையாளர் மகிழ்ச்சியில் திளைக்கிறார் என்று செய்திகள். பகிர்ந்துக் கொண்ட நண்பர் ராமஜெயத்திற்கு நன்றி!
அதே போன்று சென்ற வாரம் எந்த வித முன்னறிவுப்புமின்றி கோவை டிலைட் திரையரங்கில் என்னைப் போல் ஒருவன் திரையிடப்பட்டிருக்கிறது. 6 மாதங்களுக்கு முன்புதான் கோவை ராயலில் வெளியானது. வருகிறது என்ற தகவலே சொல்லாமல் திடீரென்று இந்த படம் டிலைட் அரங்கில் வெளியானது. நடிகர் திலகத்தின் ரசிகர்கள் மற்றும் கிளாஸ் ஆடியன்ஸ் வருவதற்கு தயங்கும் இடம், அப்படியிருந்தும் ஞாயிறன்று ஏராளமான மக்கள் வந்து படம் பார்த்திருக்கின்றனர். இப்போதும் வெளியிட்ட விநியோகஸ்தருக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார் நடிகர் திலகம்!
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
கடந்த ஞாயிறு மாலை மதுரை சென்ட்ரல் சினிமா திரையரங்கின் முகப்பிலும் அரங்கத்தின் உள்ளிலும் தர்மம் எங்கே திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை புகைப்படங்களாக்கி பதிவிட்டதற்கு நன்றி சுந்தர். தர்மம் எங்கே ஒரு வாரகாலம் வெற்றிகரமாக ஓடி சென்ட்ரலில் ஒரு புதிய அத்தியாயம் எழுதியிருக்கிறது. படம் வெளியான இரண்டாம் நாள் சனிக்கிழமை முதல் தினசரி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்ட உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மட்டுமல்ல மகாசிவராத்திரியையும் எதிர்கொண்டு வென்றிருக்கிறது. அன்றைய தினம் ஆலய வழிபாடுகளும் இரவு முழுக்க சன் லைஃப் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் படங்களான தில்லானாவும் கந்தன் கருணையும் ஒளிப்பரப்பட அதையும் தாண்டி தர்மம் எங்கே சாதித்திருக்கிறது. நன்றி மக்களுக்கு!
இதனால் பலரின் கண்கள் திறந்திருக்கின்றன! நடிகர் திலகத்தின் படங்களின் விநியோக உரிமையை வைத்துக் கொண்டு பேசாமலே இருந்தவர்கள் எல்லோரும் இப்போது சென்ட்ரல் திரையரங்கிற்கு படை எடுக்கிறார்கள். தீபம், கெளரவம், வசந்த மாளிகை, தங்க பதுமை, பாவ மன்னிப்பு, தங்கைக்காக வாணி ராணி என்று பல்வேறு படங்கள் வரிசை கட்டி நிற்கிறதாம். நல்ல தீனி மதுரை ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.
இதே காலகட்டத்தில் நெல்லை சென்ட்ரலில் ஒரு வார காலம் கெளரவம் வெற்றிகரமாக ஓடி அங்கும் ஒரு வியக்கத்தக்க வசூலை பெற்றிருக்கிறது. பிரிண்ட் வெகு சுமாராக இருந்தும் வழக்கம் போல் நமது ஞானப்பண்டிதர்கள் கிளாஸ் படம் பெரிதாக ஒன்றும் வராது என்று ஆருடம் கூறியிருக்க பாரிஸ்டர் அலட்சியமாக வென்று காட்டியிருக்கிறார். மீண்டும் நன்றி மக்களுக்குத்தான்!
நீதி இன்று முதல் கோவை டிலைட்டில் வெளியாகும் தகவலை நண்பர் சுந்தர் பகிர்ந்துக் கொண்டிருந்தார். நீதி மட்டுமல்ல, இன்று முதல் கோவை ராயலில் திரிசூலம் திரைப்படமும் வெளியாகியிருக்கிறது. சென்ற வருடம் கோவையில் இந்த இரண்டு படங்களும் திரையிடப்பட்டதும் [ராயலில் நீதி, சண்முகாவில் திரிசூலமும்] அவை பெற்ற வெற்றியை நாம் இங்கே திரியில் பகிர்ந்துக் கொண்டதும் திரி நண்பர்களுக்கு நினைவிருக்கும். இரண்டு வாரம் முன்பு இதே கோவையில் என்னைப் போல் ஒருவன் திரைப்படமும் இது போல மீண்டும் திரையிடப்பட்டது ஆக திரையிடப்பட்ட படங்களே மீண்டும் திரையிடப்படுவது என்பது நடிகர் திலகத்தின் படங்களுக்கும் நடப்பதுதான் என்பது இதிலிருந்து தெளிவாகும்.
அன்புடன்
-
மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(கோவை) : 7.7.1988
http://i1110.photobucket.com/albums/...GEDC6134-1.jpg
முதல் வெளியீட்டில், கோவை 'ராஜா' திரையரங்கில், 132 நாட்கள் ஓடி மெகா வெற்றி..!
பக்தியுடன்,
பம்மலார்.
பம்மலார் july.25.2012ல் பதிவிட்டது