welcome back KarthikQuote:
Originally Posted by mr_karthik
missing you for long time
what happened
Printable View
welcome back KarthikQuote:
Originally Posted by mr_karthik
missing you for long time
what happened
good news...
Arasi might finish in second week of September, 09
நன்றி: தினதந்திQuote:
நிறைவடையும் `அரசி'
கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகவும், பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கத் துடிக்கும் பாசத்துக்குரிய குடும்பப் பெண்ணாகவும் நடிகை ராதிகா இரட்டை வேடத்தில் நடித்து வரும் தொடர் `அரசி.' சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் கிளைமாக்சை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது. வரும் நாட்களில் கதை ஓட்டத்தில் பரபரப்பான காட்சிகளையும், புதிய திருப்பங்களையும் காண முடியும் என்கிறார், கிரியேட்டிவ் ஹெட்டான நடிகை ராதிகா!
கதையில் பரபரப்பை உண்டாக்கும் விசுவநாதனின் சூழ்ச்சிகள் பலித்ததா? தான் செய்த குற்றங்களுக்காக திலகா தண்டிக்கப்படுவாரா? சரோஜினியின் நிலை இனி என்னவாகும்? காவேரியின் காதல் நிறைவேறுமா? அரசியின் குடும்பத்துடன் மகள் செல்வி இணைவாரா? பல்வேறு சூழ்ச்சிகளை முறியடித்து அரசி வெற்றி பெறுவாரா? இத்தனை கேள்விகளுக்கும் வரும் வாரங்களில் விடை கிடைக்கும்!
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களிடம் கலந்து போன ``அரசி'' தொடர் அடுத்த மாதம் 11-ந் தேதி 684-வது எபிசோட்டுடன் நிறைவடைகிறது.
தொடரில் ராதிகாவுடன் வேணு அரவிந்த், அஜய்ரத்னம், சுப்பு பஞ்சு கிருஷ்ணமூர்த்தி, மகாலட்சுமி, சைலஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை: ராஜ்பிரபு. ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்த்ரா. வசனம்: லியாகத் அலிகான். இசை: கிரண். இயக்கம்: சுந்தர் கே.விஜயன்.
தயாரிப்பு: ராடன் மீடியா ஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்.
நன்றி: தினதந்திQuote:
கமல் ஐம்பது
நடிகர் கமல்ஹாசன் திரையுலகில் காலடியெடுத்து வைத்து 50 வருடங்கள் முடிவடைந்தையொட்டி விஜய் டிவி பிரம்மாண்ட விழா எடுக்கிறது. முதல் கட்டமாக `கமல் எக்ஸ்பிரஸ்' பஸ்சில் தமிழ்நாடு முழுவதும் பொது மக்கள், ரசிகர்களிடம் கையெழுத்து பெற்று வருகிறது. இந்த பஸ்களில் கமல்ஹாசனின் புகைப்படங்கள், அவரைப்பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதைத் தொடர்ந்து உலகநாயகனின் பயோகிராபி எனும் நிகழ்ச்சி `விஜய் டிவியில் வரும் திங்கள், வியாழன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. கமல்ஹாசனின் ஐம்பது வருட திரைப்பட அனுபவங்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக வடிவமைத்து பதினாறு எபிசோடுகளாக ஒளிபரப்பு செய்கிறது விஜய் டிவி.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரிந்த அனைத்து கலைஞர்களும் தங்களது உணர்வு பூர்வமான அனுபவங்களை மனம் திறந்து பேசுகின்றனர்.
'அரசி' தொடர் நேற்றுடன் முடிந்தது....
எதிர்பார்த்தது போலவே கொஞ்சம் ஏமாற்றமான 'சப்'பென்ற முடிவு. விஸ்வநாத்னைப்பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைத்து தண்டனை வாங்கிக்கொடுப்பார என்று பார்த்தால், விஸ்வநாதனைச் சுட்டுக்கொல்வதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?. அதை எப்போதோ செய்திருக்கலாமே?. அரசியின் முன் பலமுறை வந்துபோனாரே. கதையில் ஜீரணிக்க முடியாத இன்னொரு விஷயம், விஸ்வநாதன் தனக்கு பலமுறை துரோகம் செய்த ஜி.ஜே.யை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு, அவருக்கு பலமுறை உறுதுணையாக இருந்த சிங்கபெருமாளை (Liakath Ali Khan) சட்டென்று சுட்டுக்கொன்றது. (ஜி.ஜே.யை சும்மா விட்டது, கடைசிக் காட்சியில் செல்வியை சிரித்த முகத்தோடு காண்பிக்க வேண்டுமென்பதற்காகவா?).
கடைசிக்காட்சிகளில் வந்த செயற்கை மழை, செயற்கைப்புயல், எல்லாம் சினிமா கிளைமாக்ஸை நினைவூட்டியது. காவேரியின் கல்யாணத்தோடு கதையை முடித்துவிட்டார்கள். மகன் மகள், மருமகள் எல்லாம் அரசியிடம் பாவமன்னிப்பு பெற்றார்கள். அரசி ராதிகா, முதல்வர் கலைஞர் கையால் பதக்கம் பெறுவதுபோன்ற 'ஒட்டவைத்த' காட்சிகள் நம மனதில் ஒட்டவில்லை, அதிகப்படியாகத்தெரிந்தது.
கதையில் பல இடங்களில் அறுத்துவந்த லதாவும் அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் கடைசிக்காட்சிகளில் அடக்கி வாசித்தனர். கதை முழுக்க கலக்கி வந்த ஜி.ஜே.யை (Venu Arvindh)கடைசியில் பைத்தியமாகப்புலம்ப விட்டது ஏமாற்றமளித்தது.
நிறைய கதாபாத்திரங்கள் என்னவானார்கள் என்பது தொங்கலிலேயே விடப்பட்டது.....
மொத்தத்தில் எதையாவது பண்ணி எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற குழப்பம் தெரிந்தது. அது சரி, அவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகளோ...
உடனடியாக வரும் திங்களன்றே அடுத்த தொடர் துவங்குகிறார்களாம்.
(விளம்பர) ருசிகண்ட பூனைகள்....
முக்கியமான ஒன்று (விடுபட்டுவிட்டது)...
செல்வி, அரசி என இரு வேடங்களில் ராதிகா பிரமாதமாக கலக்கியிருந்தார்.. நடை, உடை, பாவனை, பேச்சு தோரணை, மேக்கப் என்று அனைத்திலும் நல்ல வித்தியாசம். ராதிகா வரும் காட்சிகளிலெல்லாம், இது செல்வியா, அரசியா என்று குழப்பமின்றி அடையாளம் கண்டுகொள்ளுமளவுக்கு இரண்டு வேடங்களுக்கும் நல்ல வித்தியாசம். கணவரின் உறவினர்கள் தன் வீட்டுக்குள் வந்து டேரா போட்டுக்கொண்டு தன்னை ஆட்டிவைக்கும்போதெல்லாம், அருமையாக அடக்கி வாசித்திருந்தார். குடும்பப்பெண் செல்வியாக சாந்தம், டி.ஜி.பி.செந்தமிழரசியாக கம்பீரம் என தொடர் முழுக்க வலம் வந்தார். அரசி கடத்தப்பட்டிருந்தபோது, செல்வி, அரசியாக போலீஸ் வேடமிட்டு நடிக்க, அரசி திரும்பி வந்ததும் இருவரும் போலீஸ் உடையிலேயே சந்தித்துக்கொள்ளும் காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.
வெல்டன் ராதிகா as Selvi & Arasi
வெல்டன் அஜய் ரத்னம் as Viswanathan
வெல்டன் சுப்பு பஞ்சு அருணாச்சலம் as Nallathambi
வெல்டன் வேணு அர்விந்த் as G.J.
வெல்டன் லியாகத் அலிகான் as Singaperumal.
thank u saradha madam. sellame seriyalum ungal kaivannathil thodara en vazhthukkal.
\
:!:Quote:
Originally Posted by saradhaa_sn
:lol:Quote:
Originally Posted by saradhaa_sn
கதை ஏதோ அவசர அவசரமாக முடிக்கப்பட்டது என்றே தோன்றுகிறது...
விஸ்வ நாதனை கொண்று தான் கதையை முடிக்கவேண்டும் என்றால்... அதை எப்பொழுதோ செய்திருக்கலாமே?
Last Episode of Arasi - September 11, 2009
[html:27ae1c78c5]<div align="center"><object width="512" height="322"><param name="movie" value="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" /><param name="allowFullScreen" value="true" /><param name="AllowScriptAccess" VALUE="always" /><param name="bgcolor" value="#000000" /><param name="flashVars" value="id=15510999&vid=5961781&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11092/92978462.jpeg&embed=1" /><embed src="http://d.yimg.com/static.video.yahoo.com/yep/YV_YEP.swf?ver=2.2.46" type="application/x-shockwave-flash" width="512" height="322" allowFullScreen="true" AllowScriptAccess="always" bgcolor="#000000" flashVars="id=15510999&vid=5961781&lang=en-us&intl=us&thumbUrl=http%3A//l.yimg.com/a/p/i/bcst/videosearch/11092/92978462.jpeg&embed=1" ></embed></object>
</div>[/html:27ae1c78c5]