:D :oops: varenQuote:
Originally Posted by hamid
Printable View
:D :oops: varenQuote:
Originally Posted by hamid
Quote:
Originally Posted by Shakthiprabha
April 17th
________
அஷோக் பசு மாடு ஒன்றை நந்தினி என்று நினைத்து உரையாடுகிறான். அது திரும்ப அவனுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அது நந்தினி அல்ல என்ற முடிவுக்கு வருகிறான்.
யார் நந்தினி? - நந்தினி என்பவள் கோ-மாதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவள் வசிஷ்டரின் ஆசிரமத்தில் அவருடைய நித்ய கர்மாக்களுக்கு உதவியாக இருந்தவள் என்பதும் பல பேருக்கு தெரிந்த விஷயம். நந்தினியின் அபார திறமையின்பாற் ஆவல் மேலிட விச்வாமித்ரர் அவளை கோரியதும், வசிஷ்டர் அந்த கோரிக்கையை மறுத்ததும் புதிய விஷயமன்று. 'யார் நந்தினி? '- என்ற வினாவிற்கு அஷோக் அஷ்ட வசுக்களிடமிருந்து தன் விளக்கத்தை ஆரம்பிக்கிறான்.
அஷ்ட வசுக்கள் யார்? - நம்மில் பலருக்கு தெரியாத கதையும் விஷயமும் அடங்கியிருக்கிறது.தக்ஷனின் மகள் வசு. அவளின் புதல்வர்களே அஷ்ட வசுக்கள்.
அதெல்லாம் சரி, அஷ்ட வசுக்களுக்கும் நந்தினிக்கும் என்ன தொடர்பு?- அதை அஷோக் விளக்குகிறான். அஷ்ட வசுக்கக்களும் சாபத்தின் காரணாமாக பூமியில் பிறக்க நேரிட்டது. அப்போது கங்கையும் பூமியில் தோன்றியிருந்ததால், தாங்கள் கங்கைக்கும் சந்தனுவிற்கும் புதல்வர்களாய் பிறக்க போவதாகக் கூறி, பிறந்தவுடன் தங்களை கொன்றுவிடும் படி அவர்கள் கங்கைக்கு வேண்டுகோள் விடுத்தனர். அஷ்ட வசுக்களில் ஒருவருக்கு நீண்ட நாள் பூமியில் இருக்கும்படி சாபம். அவர் தான் பீஷ்மர். அதனாலேயே அவர் தன் கர்மாவை/சாபத்தை பிறவி முழுவதுமாய்
வாழ்ந்து தீர்த்துக்கொண்டார்.
அப்படி என்ன தான் சாபம்? யார் கொடுத்தது? ஏன் கொடுக்கபட்டது? - ஒரு முறை அஷ்ட வசுக்கள் தம் மனைவியருடன் வசிஷ்டரின் ஆசிரமத்தின் அருகில் அளவளாவிக்கொண்டிருந்தனர். ப்ரபாசன் என்பவனின் மனைவி வசிஷ்டரின் ஆசிரமத்தில் வளைய வரும் நந்தினியின் பால் ஆசை மேலிட, அதனை கொண்டு வருமாறு தன் கணவனை பணித்தாள். ப்ரபாசன் முதலில் மறுத்தான், பின் மனைவியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, நந்தினியை தன்னுடன் இட்டுச் சென்றான். இதனை ஞானக்கண் கொண்டு அறிந்த வசிஷ்டர் கோபம் மேலிட அஷ்ட வசுக்கள் பூமியில் பிறக்கக் கடவது என சபித்தார்.
நடந்தவற்றை நினைவிலிருந்து மீட்டு சொல்லிக்கொண்டிருக்கும் போதே அஷோக் படபடப்பும் உணர்வும அதிகமாகி மூர்ச்சையாகிறான்.
வசுமதி, மிகவும் மனம் வருந்தி ஆதங்கம் தாங்காது அஷோக் படிக்கும் புத்தகத்தையெல்லாம் வீசி எறிகிறாள். உடலும் உள்ளமும் பதைக்க அஷோக் அவளை கண்டிக்கிறான். "நீ எப்படி செல்வம் தழைத்தோங்க லக்ஷ்மியை துதித்து பூஜையில் வைத்திருக்கிறாயோ, அது போலவே என் பொக்கிஷமாக சரஸ்வதியை நான் பூஜித்து வைத்திருக்கிறேன். இப்புத்தகங்களில் இருப்பதோ விலை மதிக்க முடியாத ஞானம்! விஜயதசமியன்று புத்தகங்களை (அதன் உள்ளிருக்கும் அறிவை, ஞானத்தை) பூஜிக்கும் நீயா இப்படி நடந்து கொண்டாய்" என்று கண்டிக்கிறான். வசுமதி மனம் வருந்தி, மீண்டும் அவன் புத்தகங்களை அடுக்கி வைக்கிறாள்.
(நளினியின் ஆதங்கம், பின் வருத்தம் என குழப்பத்தின் வெளிப்படுகள் அருமை)
(வளரும்)
:clap: :clap:
அபாரம் எழுத்து நடை தங்களுக்கே உரியது
மீண்டும் ::clap:
:ty:
such a long holiday ...Quote:
Originally Posted by Shakthiprabha
take your own time
welcome back SP :D
thanks shankar, aana :ty:
April 20th
________
சௌந்தர்ய லஹரியும் கனகதாரா ஸ்தோத்திரம் பற்றியும் பலர் அறியாத் தகவல்கள் சிலவற்றை சோ பகிர்ந்து கொண்டார்.
கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிஷங்கரரால் கூறப்பட்டது. ஏழை அந்தணர்கள் குடும்பத்தை வாழ்விக்க அவர் பாடினார். ஸ்வர்ணத்தில் நெல்லிக்கனி மழை பொழிந்ததாய் கூறுவதுண்டு. அப்படிப்பட்ட ஏழைகளாய் அந்த அந்தணர்கள் வாழ்ந்தனராம். ஏனெனில் அவர்கள் உஞ்சவிருத்தி எடுத்து பிழைத்து வந்தனர். உஞ்சவிருத்தி என்றால், கீழ் சிந்தி வீணாக்கப்பட்ட நெல்லைப் பொறுக்கி அதனை பொங்கி உண்டு ஜீவித்திருப்பது. அவர்கள் ஷங்கரருக்கு வழங்கிய நெல்லிக்கனியும் கூட அழுகிய நெல்லிக்கனி. நல்ல நெல்லிக்கனியாய் இருந்தால் பயன் மற்றோருக்கு உண்டு என்று அதனை தவிர்த்து, பிறர் தவிர்த்த பொருளை உண்டு வாழ்பவர்கள். அப்படிப்பட்ட ஜீவனத்திலும் தன்னால் பிட்சை இட முடியவில்லை என வருந்தி, இருந்த ஒரு நெல்லிக்கனியும் கொடுக்க, ஆதிஷங்கரர் லக்ஷ்மிதேவியை துதித்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். "இவர்களின் முன்வினைப்பயனோ மிகவும் முற்றியது, வினைப்பயனை ஒதுக்கி எவ்வாறு காத்தருள்வது" என்று லக்ஷ்மிதேவி திகைக்க, "அவளிடம் இருந்த ஒரே சொத்து நெல்லிக்கனி, அந்த நெல்லிக்கனியையும் வழங்கிவிட்டதன் மூலம் அவள் தன் மொத்த செல்வத்தையும் தானம் செய்துவிட்டாள். இந்த ஒரு நற்செயலே அனைத்து பாபங்களையும் கழுவ வல்லது" என்று ஷங்கரர் மீண்டும் வலியுறுத்த, லக்ஷ்மி மனமிரங்கி அருள் புரிந்தாள் எனகிறது புராணம்.
அடுத்து சௌந்தர்ய லஹரி. ஷங்கரர் அம்பாளின் ஸ்வரூபத்தை அழகை வர்ணித்து எழுதுவதாய் இருக்கிறது அனைத்து ஸ்லோகங்களும். ஆனால் அம்பாள் அழகை வர்ணித்து முதலில் பாடியதோ சிவபெருமான். ஒரு முறை ஷங்கரர் கைலாயத்திருக்கு சென்றிருந்தார். சிவன் மகிழ்ந்து அவருக்கு ஐந்து ஸ்படிக லிங்கங்களை வழங்குகிறார்.
1. யோக லிங்கம் - - காஞ்சிபுரம் (சந்திரமௌலீஸ்வரர்)
2. முக்தி லிங்கம்- - கேதார்நாத்
3. வர லிங்கம்- - நேபாளம்
4. போக லிங்கம்- - ஸ்ருங்கேரி
5. மோக்ஷ லிங்கம் - - சிதம்பரம்
லிங்கங்கள் மேற்கூறிய ஸ்தலங்களில் பின்பு ப்ரதிஷ்டிக்கப்பட்டிருக்கிறது.
அம்பாள் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் லஹரியை வழங்குகிறாள். அதை கொணரும் போது நந்தி வழிமறித்து 59 ஸ்லோகங்களை பிடுங்கிக்கொண்டுவிடுகிறார். அந்த ஸ்லோகங்கள் முறையே சிவன் பார்வதியின் ஸ்வரூபத்தை வர்ணித்து துதித்த ஸ்லோகங்கள். மிச்ச 41 ஸ்லோகங்கள் தந்திர யந்திரங்களைச் சொல்வது. அது ஆனந்த லஹரி எனப்படும். அம்பாளின் வேண்டுகோளுக்கிணங்க ஷங்கரர் 59 ஸ்லோகங்களை அவள் த்வ்ய ரூபத்தை வர்ணித்து பின் இயற்றியிருப்பதாய் புராணம் பறைசாற்றுகிறது.
இந்த ஸ்லோகங்களை சாம்பு சாஸ்த்ரிகள் வேறொருவருக்கு பாடம் செய்து வைக்கிறார். அவர்களின் பேச்சு மஹா பெரியவர் காஞ்சிமாமுனிவர் பற்றி திரும்புகிறது. "மஹா பெரியவர் ஆசீவாதத்தின் பேரில்" என்று திருமணப் பத்திரிகைகளில் எழுதுவதை சுட்டிக்காட்டி, அவர் முன்பொரு சமயம் "என் ஆசீர்வாதத்தின் பேரில் திருமணம் செய்விப்போர்கள் வரதக்ஷிணை வாங்குவதையும் கொடுப்பதையும் தவிர்க்கவேண்டும்" என்று அன்பு வேண்டுகோள் விடுத்த விஷயத்தை பேசி பரிமாறிக்கொள்கின்றனர். அதையொட்டி பேசும் போது செல்லம்மாள் தான் இனி பட்டுப்பூச்சிகளைக் கொன்று நெய்த ஆடை உடுத்த விரும்பவில்லை என்றும், பட்டும் பளபளப்பும் நகைகளையும் துறந்துவிட்டதாகவும் கூறுகிறாள். சாம்பு நெகிழ்ச்சி அடைகிறார்.
(பார்வையாளன் குரல்: செல்லம்மாள் பெரிய மனிதர்கள் வீட்டு திருமணங்களுக்கு செல்வதை தவிர்கிறாள். தன்னை தாழ்ச்சியாய் எண்ணிவிடக்கூடும் என்ற எண்ணம் இருக்கிறது. பட்டு வஸ்த்ரங்களையும் நகைகளையும் துறந்தவர்கள் தாழ்ச்சி எண்ணங்களை துச்சமென மிதித்து செல்வது மேலும் சிறந்தது)
(வளரும்)
நல்லதொரு விளக்கம் உங்களின் கைவண்ணமும் சேர்ந்து..Quote:
சௌந்தர்ய லஹரியும் கனகதாரா ஸ்தோத்திரம்
:ty:
திருகோணமலை
திருக்கேதீஸ்வரமு
பிரசித்தி பெற்றனவே .. ம்ம்ம்ம்ம்ம்
April 21st
________
இந்த ஒரு செய்கையால் அவன் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல.Quote:
அஷோக் பசு மாடு ஒன்றை நந்தினி என்று நினைத்து உரையாடுகிறான்.
சிறு வயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் கார்டூன் படம் ஒன்று அடிக்கடி ஒளிபரப்பப்படும். ஒரு சிறு செய்தி எப்படி பெரிதாகி, கண்-காது-மூக்கு வைத்து சம்பந்தமே இல்லாத அளவு ஊதி பெரியதாக்கப்பட்டு செய்தியின் கோணமும், நோக்கும், அதன் சாரம்சமுமே கூட மாறிப்போய்விடுகிறது என்பதை எளிதாய் மனதில் பதியும் வண்ணம் சுட்டிக்காட்டிய படம். நாமெல்லோரும் கூட "passing the secret" விளையாடியிருக்கிறோம். இருபது பேர் சேர்ந்து விளையாடும் போது, சொன்ன செய்தி எப்படி புதுச்செய்தியாக நமக்கே திரும்பவருகிறது என்பது கவனிக்கத் தக்க ஒன்று. பெரும்பாலும் வாழ்வில் இது தான் பல மனக்கிலேசங்களுக்கும், தவறான புரிதலுக்கும் அடிப்படை காரணாமாக அமைந்து விடுகிறது.Quote:
Originally Posted by aana
Again coming back to the crux, சொல்லப்படும் செய்தி குறைந்த பட்சம் சரியாக சொல்லப்பட்டதா, அது உண்மையா எனத் தெரியாது அதை மேலும் பெரிதாக்கி வம்பாக பரப்புவது என்பது, வியர்த்த பேச்சில் நம் ஜீவனை செலவிடும் அறிவீனம். "அஷோக் மாட்டுடன் அரை மணி நேரம் பேசினானாமே" என்று பர்வதம் ப்ரஸ்தாபிப்பது இதற்கு சிறந்த சான்று.
என் தாயாருக்கு காக்கை-குருவியுடன் செடி கொடிகளுடன் ஆசையாய் பேசும் பழக்கம் உண்டு.
"இன்னிக்கு சாப்டியா?"
"எங்க ரெண்டு நாளா காணம்?
"ஏய் ரோஜா ரொம்ப வாடி போய்டியே"
கிட்டத்தட்ட இதே அளவு இல்லையென்றாலும், இதை விட அதிமாக பட்சிகளுடனும், செடி கொடி மரங்களுடனும் பேசும் பழக்கம் எனக்கும் உண்டு. நல்லவேளை எங்களையெல்லாம் மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லும் எண்ணம் வீட்டில் ஒருவருக்கும் தோன்றியதில்லை.
சாம்பு நன்றாக விளக்குகிறார். பட்சிகளுக்கும், ம்ருகங்களுக்கும், செடி தாவரங்களுக்கும் திரும்ப வார்த்தையால் அளவளாவ முடியாது பொனாலும், அவை தங்கள் சங்கேத அசைவுகளில் பதில் கொடுக்கும். நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் சாத்தியம் உண்டு. இதையும் தாண்டி அவர்கள் ஒலிக்கும் ம்ருக பாஷைகளைப் புரிந்தவர்களும் இருக்கின்றார்கள்.
ஆனா எழுதியிருந்த பகுதியில், அஷோக் "சாமியுடன் நீங்கள் பேசுகிறீர்கள், அது திரும்ப பேசுவதில்லை, அப்படியெனில் நீங்களும் பைத்தியமா" என்பது நல்ல வாதம்.
இராமாயணத்தில் சுமந்திரர் கைகேயியிடம் "நீ உன் அன்னையைப் போல் அறிவற்று இருக்கிறாய்" என்று சீறுகிறார். கைகேயியின் தந்தைக்கு பட்சிகளின் மொழி புரியும் வரம் உண்டு. ஆனால் அவர் கேட்டதைப் பற்றி இன்னொருவருடன் பகிர்ந்தால் அது அவரது உயிர்க்கு ஆபத்தாக முடியும். ஒரு முறை அவை பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்து, புரிந்து இவர் சிரிக்க, அருகிலிருந்த அவரின் மனைவி சிரிப்பின் காரணத்தை கூறும்படி கேட்கிறாள். உயிரின் ஆபத்தை சுட்டிக்காட்டி இவர் மறுக்க, அவளோ அது பற்றிய கவலையின்றி விடாது நச்சரிக்க, அவளை தள்ளி வைக்க வேண்டியதாய் நிலைமை ஆயிற்றாம்.
ஜனஸ்ருதி என்ற அரசர் ஒரு ஞானியும் கூட. அவர் போய்க்கொண்டிருக்கும் போது "அவரை மறைக்காதே அவரின் ஞான ஒளி உலகெங்கும் பரவவேண்டும்" என்று இரு பட்சிக்கள் பேசிக்கொண்டதாய் புராணக்கதை கூறுகிறது.
இவையெல்லாம் இங்கு எதற்கு? பறவைகள்/விலங்குகளுக்கும் பாஷை/மொழி/சங்கேத மொழி/ செய்கை உண்டு. அதைப் புரிந்தவர்கள் சிலர் இருந்தனர். அதை அறிந்துகொள்ளுதல் ஒருவகை கலை என்று எடுத்துக்கூறவே இக்கதைகள்.
சாம்புவை தன் வீட்டில் தினம் பூஜை செய்யுமாறு நாதன் வேண்டுகோள் விடுக்கிறார். ஏகாதேசி விரதம் பற்றி பேச்சு அடிபடுகிறது. உபநிஷத்-உபவாசம் என்றெல்லாம் சொல்கிறோம். இச்சொற்களில் உப என்றால் அருகில் என்று அர்த்தம். உபவாசம் என்றால் இறைவனை அருகில் வசிப்பது அவனை அருகில் நிறுத்துவது. அதாவது அவன் தியானத்தில் இருப்பது. ஏகாதேசியன்று உபவாசம் மற்ற உபவாசங்கள் எல்லாமும் விரதங்கள் எல்லாம் விட மிகவும் சிறந்தது.
அஷோக் சாம்புவிடம் நிவேதனம் பற்றி உரையாடுகிறான். "சாமி என்ன சாப்பிடுமா" என்று இக்காலத்தில் நாம் கிண்டலுடன் பேசி, நிவேதனைத்தின் மஹிமையை அதன் விளக்கத்தை மறந்து பேசுகிறோம். நிவேதனம் சாமி சாப்பிடுவதற்காக அல்ல. "இவை எல்லாம் எனக்கு கொடுத்தருளினாயே இறைவா உனக்கு நன்றி" என்று அறிவிப்பதே நிவேதனம். இன்றைக்கும் கூட பல க்ருத்துவர்களின் வீடுகளில் இயேசுவிற்கு நன்றி செலுத்திவிட்டு உணவை உண்கிறார்கள். பல ஆசிரமங்களிலும், ஆன்மீக இடங்களிலும், மானசீகமாக உணவை அற்பணித்துவிட்டு உணவை உண்கிறார்கள். இறைவா இந்த உணவை நீ வழங்கினாய், இதை உனக்கு அற்பணிக்கிறேன், நன்றி செலுத்துகிறேன் என இரண்டு வினாடி மனதால் நினைத்தாலும் போதுமானது.
சிறு விஷயம் தானே! இன்று முதற்கொண்டு நாமும் கடைபிடித்தால் என்ன!?
(வளரும்)