http://i60.tinypic.com/jzdu0o.jpghttp://i61.tinypic.com/2zpqvih.jpg
Printable View
சபாஷ் MAPPILEhttp://i61.tinypic.com/2hzmg5z.jpg
மக்கள் திலகத்தின் ''தாழம்பூ '' இன்று பொன் விழா ஆண்டு துவக்கம் . 23.10-1965- 23-10-2014
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த இனிய காவியம் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
MY FAVORITE SONG
http://youtu.be/vSUMbRyudnY
‘தாழம்பூவில்’ கட்டழகன்!
ஸ்ரீ பாலகுமாரன் புரொடெக்சன்ஸ் தயாரிப்பில், எம்.எஸ். ராம்தாஸ் இயக்கத்தில், கே.வி. மகாதேவன் இசையமைப்பில், புரட்சி நடிகரும், ‘புன்னகை அரசி’ கே.ஆர். விஜயாவும் இணைந்து நடித்த ‘தாழம்பூ’ திரைப்படம்23.10.1965 அன்று வெளியானது.
படத்தில் கண்ணதாசனின் முத்தான மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அவற்றுள் பி. சுசீலாவின் குரலில் ஒலித்த,
“பங்குனி மாதத்தில் ஓரிரவு
பால்போல் காய்ந்தது வெண்ணிலவு
தங்கத்தில் மிதந்தது மண்ணழகு – அங்கு
தனியே தவித்தது பெண்ணழகு!….”
என்று தொடங்கும் பாடல் காட்சியில், தன் இளமைக்காலப் பருவ அழகைப் பக்குவமாய்க் காட்டி கே.ஆர். விஜயா, கவிஞரின் பாடலுக்கு உன்னத உயிரோட்டத்தைத் தந்திருப்பார்.
பேசும் பெண்ணழகி, கூறுவதைக் கேளுங்களேன்!
“காலடி ஒசை கேட்டுவிட்டாள் – அந்தக்
கட்டழகன் முகம் பார்த்து விட்டாள்!
நாலடி நடந்தாள் முன்னாலே – அங்கு
நடந்தது என்னவோ? பின்னாலே!….”
……கேட்டீர்களா? காலடிஓசை கேட்டுவிட்டாளாம்? யார் காலடி ஓசை? அது அவளுக்குத்தான் தெரியுமே! அந்தக் கட்டழகன்… ‘கட்டான கட்டழகுக் கண்ணா!’ என்றழைக்கப்படும் கட்டழகன் (எம்.ஜி.ஆரின்) முகத்தைப் பார்த்து விட்டாளாம்.
பார்த்தவுடன்,
நாலடி நடந்தாளாம் முன்னாலே!
அதன்பின்பு, அங்கு நடந்தது….
என்னவோ?… பின்னாலே!’
இதனைக் கூறுவது நாகரிகமில்லையே’….இத்தகு நயத்தக்க நாகரிகமான காதல் பாடலைக் கவிஞர் தந்தால், எம்.ஜி.ஆரின் கட்டழகு முகத்தைப் பற்றிய பாடலைப் பாராமல் நாமதான் பாய்ந்தோட முடியுமா?
அடுத்து….தூவானந்தான்!…ஆம்!
“தூவானம் இது தூவானம் இது தூவானம்
சொட்ட சொட்டா உதிருது உதிருது!….”
எனத் தொடங்கி,
“பூவாடும் இளங் கூந்தலுக்குள்
புகுந்து புகுந்து ஓடுது!…..”
என நீண்டு செல்லும் பாடலும், நம் செவிகளுக்கு இன்பம் சேர்க்கும் கவிஞரின் பாடலே.
இன்னும்….!
ஆண்: “ஏரிக்கரை ஓரத்திலே
எட்டுவேலி நிலமிருக்கு
எட்டுவேலி நிலத்திலேயும்
என்ன வைத்தால் தோப்பாகும்?”
என எழிலான வினாவுடன் தொடங்கி,
பெண்: “வாழை வைத்தால் தோப்பாகும்!
மஞ்சள் வைத்தால் பிஞ்சுவிடும்!
ஆழமாக உழுது வைத்தால்
அத்தனையும் பொன்னாகும்!….”
இவ்விதமாகப் பல விடைகளைப் பெற்றுத் தரும் சுவை மிகுந்த கவியரசர் பாடலில்,
கண்ட கனா பலிக்காதா?
கதவு இன்று திறக்காதோ?
நினைத்துவிட்டால் நடக்காதோ?
நெருங்கிவிட்டால் பிறக்காதோ?….”
என, அழகின் ஆராதனைகளாய்த் தொடரும், ஆசைமனங்கள் பேசும் பாடலைச் சுவைத்தால் சுவை கூடுந்தானே!
VELLORE RECORDS 62
தாழம்பூ படத்தின் வரவேற்பு நோட்டீஸ் 5 காட்சிகளுடன் அன்றே ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது
http://i1276.photobucket.com/albums/...ps2b53523e.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
VELLORE RECORDS 63
தாழம்பூ 4 வது வாரம் விளம்பர நோட்டீஸ்
http://i1276.photobucket.com/albums/...ps82b8964d.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
சினிக்கூத்து 24th August 2014
http://i60.tinypic.com/nzp1s4.jpg
http://i59.tinypic.com/a1tx5w.jpg
http://i58.tinypic.com/24l0700.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/6ir3wl.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
http://youtu.be/wTmp7Mc37o8
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
சற்று முன் படித்த ஒரு பதிவு…
“எனக்கு ஒரு பிரச்சினை..”என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்...
பிரச்சினை என்று சொன்னாலே கவலையும் , பயமும் கட்டாயம் வரும்....
"எனக்கு ஒரு சவால் “என்று சொல்லிப் பாருங்கள் ...தைரியமும் ,தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..”
ஆம்..நிஜம்தானே..!
“காவல்காரன்” என்று ஒரு படம்.. எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்ட பின் எம்.ஜி.ஆர்.நடித்த படம்.... ஷூட்டிங் ஆரம்பமானது...
வசனம் பேசி நடித்தபோது , எம்.ஜி.ஆரின் குரலில் குறை தெரிந்தது..முன்னர் பேசியது போல் தெளிவாகப் பேச முடியவில்லை..
“பொருத்தமான குரல் உடையவர்களைக் கொண்டு டப்பிங் கொடுத்து இந்தப் பிரச்சினையை சரி செய்து விடலாம் ” என்று சிலர் யோசனை சொல்லியிருக்கிறார்கள்...
ஆனால், எம்.ஜி.ஆர். இதை ஏற்க மறுத்து விட்டாராம்...
“இது பிரச்சினை இல்லை..எனக்கு ஏற்பட்டிருக்கும் சவால்...
நானே என் சொந்தக் குரலில் பேசுகிறேன். மக்கள் ஏற்றுக் கொண்டால் தொடர்ந்து நடிக்கிறேன். ஒருவேளை என் குரலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் , சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன்” என்று சவால் விட்டுக் கூறி , அதன்படியே, எம்.ஜி.ஆர். சொந்தக் குரலில் பேசினார்...
பலத்த எதிர்பார்ப்போடு வந்தான் காவல்காரன்...
சில இடங்களில் எம்.ஜி.ஆரின் குரல் தெளிவாக இல்லாவிட்டாலும், ரசிகர்கள் அதைப் பெரிய பிரச்சினை ஆக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்...
“காவல்காரன்” ...சூப்பர்ஹிட்..!!.
"வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்"
ஆம்...பிரச்சினைகள் என்று நினைப்பவர்கள் ,பின்தங்கி விடுகிறார்கள்...!!!
சவால்களை சந்திப்பவர்களே சரித்திரம் தன்னிலே நிற்கின்றார்கள் ...!!!
சந்திக்கத் தயாராவோம்..சவால்களை...!!!
மிக அருமையான தலைவரின் டான்ஸ்
http://youtu.be/x3dySsxfdX0
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
விகடன் தீபாவளி மலர் 2014
http://i57.tinypic.com/2diouwz.jpg
http://i59.tinypic.com/14l4gle.jpg
பேராசிரியர் அவர்களுக்கு சிறிய விளக்கம் மட்டும்...
ஜேயார் மூவீசார் எங்க மாமாவை அடுத்து அண்ணா நீ என் தெய்வத்தை தயாரிக்கவில்லை. எங்க மாமாவை அடுத்து அதே நடிகர்திலகத்தை வைத்தே 'ஞான ஒளி' மற்றும் 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். இரண்டுமே வெற்றிப் படங்கள்.
மதுரை பாண்டியன் ஹோட்டலில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் எம்.ஜி.ஆர்.அவர்கள்.......,நிருபர்களை அடுத்து:,கே.டி.கே.தங்கமணி,,கே.ஏ.கே,,,பாலதண்டாயுதம் ,,,எஸ்.டி.எஸ்.,,நாஞ்சிலார், ஆகியோர்..,1980.
http://i1170.photobucket.com/albums/...ps7ec8799f.jpg
COURTESY DINAMALAR REPORTER RAMAKRISHNAN SHARED IN HIS FACEBOOK
எம்ஜியாருக்கு நடிப்பு வராது, சும்மா கதாநாயகியாக இளம் வயதுப் பெண்களை வைத்து ஒப்பேற்றினார், அழத்தெரியாது, வெவ்வேறு பாத்திரங்களிலும் வெவ்வேறு ஒப்பனைகளிலும் தோன்ற மாட்டார், தன் வயதைக் காட்டும்படி காட்சி வைக்க மாட்டார் என்றெல்லாம் நாற்பதாண்டுகளுக்கு முன் நானும் எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தவன்தான், இன்று புரிகிறது எம்ஜியாரின் வெற்றி எது, எப்படியென்று.
- டாக்டர் ஆர்.கே.ருத்ரன் பதிவிலிருந்து.
வேலூர் - நேஷனல் அரங்கில் வெளிவந்த மக்கள் திலகத்தின் ''தாழம்பூ'' படத்தை காண வந்த ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் விநியோகம் செய்த வரவேற்பு நோட்டீஸ் மற்றும் ''தாழம்பூ'' 4 வது வார நோட்டீஸ் - மிகவும் அருமையான ஆவணம் . 49 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட ஆவணம் .உங்களுக்கும் திரு பாஸ்கரனுக்கும் நன்றி .