Thadayam Promotional Video
https://www.youtube.com/watch?v=5bPJHKQLGDM
Printable View
Thadayam Promotional Video
https://www.youtube.com/watch?v=5bPJHKQLGDM
Vijay Acts As MGR Fan In Vijay59 And Using MGR Song lyrics
https://www.youtube.com/watch?v=aMcRuVOHKJA
Political Beginning of Dr. MGR - Part 1 which was telecasted on yesterday at 7.30 pm in Thanthi TV by Ithayakkani Vijayan
https://www.youtube.com/watch?v=_D6XWZNMckA
http://is1.myvideo.de/de/movie40/01/...2_3.jpg_hq.jpg
ஆயிரம் பதிவுகள்
அத்தனையும் பொக்கிஷம்
வாழ்க புரட்சித் தலைவர்
வாழ்க சத்யா சார்
நமது திரியில் 1000 பதிவுகளை கடந்து பயணிக்கும்
திரு சத்தியா
அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ் ரவிச்சந்திரன்
மக்கள் திலகம் திரியின் நெறியாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் திருப்பூர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மயில்ராஜ் அவர்களுக்கு விதிக்கப்பட்ட திதடையை விலக்கி அவர் மீண்டும் பதிவுகள் மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டுமாய் மையம் திரியின் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் இருதரப்பிலும் (மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகம் ஆகிய இரு திரிகளிலும்) விவாதங்களைத் தவிர்த்து ஆக்கபூர்வமான பதிவுகளை மேற்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது திரியில் அற்புதமான ஆயிரம் பதிவுகைள் கடந்து பயணிக்கும் புகைப்படக் கலை விற்பன்னர் அருமை நண்பர் திரு.சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்துடன் பல படங்களில் பங்களித்த ஆச்சி திருமதி மனோரமா அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
தடயம் பதிவு அருமை. ஆனால் இது போன்ற சரித்திர நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் போது குறைகள் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். சித்தரிக்கப்பட்டவை என்ற குறிப்போடு வரும் காட்சிகளில் ஒரு முக்கியப் பிழை உள்ளது. எம்.ஆர்.ராதாவால் சுடப்படும் போது மக்கள் திலகம் தொப்பி அணியும் வழக்கம் இல்லை. அடிமைப் பெண் படத்திற்காக ராஜஸ்தான் சென்று வந்த பின்னர் தான் அவர் தொப்பி அணிந்தார்.
தினமலர் போன்ற பழம் பெருமை வாய்ந்த நாளிதழ்களில் கூட தற்போது பல தவறான செய்திகள் அள்ளி இறைக்கப்படுவது கவலையளிப்பதாக உள்ளது. அடிமைப்பெண் படத்திற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை அழைத்து வந்து வாய்ப்பளித்தது எம்.எஸ்.விஸ்வநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்குப் படத்திற்காக தான் ஸ்டூடியோவில் ரெக்கார்டிங்கின் போது பாடிய பாடலை தற்செயலாகக் கேட்டு விட்டு அந்த வாய்ப்பை அளித்தவர் எம்.ஜி.ஆர் என்று எஸ்.பி.பி அவர்களே குறிப்பிட்டுள்ளார். மேலும் அடிமைப் பெண் படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள். அப்படி இருக்க எம்.எஸ்.வி அந்த வாய்ப்பை அளித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. தவறு. மேலும் கூண்டுக்கிளி படத்திற்கு இசைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா அவர்கள் எம்.எஸ்.சுப்பையா அல்ல. படத்தின் கதை வசனகர்த்தா விந்தன் அவர்கள் எழுதிய பாடல் தான் மயக்கும் மாலை பொழுதே நீ போ போ என்னும் பாடல். படத்தில் அந்தப் பாடலுக்காக இரு திலகங்களும் போட்டி போட்டதாக வெளியான செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அந்தப் பாடலுக்கான சூழல் படத்தில் இல்லை. அதன் காரணமாகத் தான் அந்தப் பாடல் படமாக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
மக்கள்திலகம் திரியில் ஆரம்பத்திலேயே தடை செய்யப்பட்ட திரு மயில்ராஜ், மதுரை அவர்களை மீண்டும் நம் திரியில் நன்றே பயணிக்க மைய்யம் - நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்ளும் சக உறுப்பினன்...நன்றி...
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவுகளை வழங்கி வரும் இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களை தொடர்ந்து பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .தாங்கள் குறிப்பிட்டது போல் தினஇதழ் , தினமலர் மற்றும் பல பத்திரிகைகள் மற்றும் வீடியோ காட்சிகளில் சில தவறான தகவல்கள் வருவது வருத்தத் திற்குரியது .
Hearty Congratulations to mr. VP Sathya for his finest photo jobs of Any Time Emperor of Cinema World Makkalthilagam MGR., - also passing 1001 valuable posts... Go Ahead Sir...
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் 1000 பதிவுகள் வழங்கிய இனிய நண்பர் திரு சத்யா அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் . உங்கள் கை வண்ணத்தில் எழில் வேந்தன் மக்கள் திலகம் எம்ஜிஆர் நிழற்படங்கள் அத்தனையும் கண்களுக்கு விருந்து . தொடர்ந்து அசத்துங்கள் சத்யா .
தற்போது 7 s மியூசிக் டிவி யில் மக்கள் திலகத்தின் ''தர்மம் தலைகாக்கும் '' திரைப்படம் ஒளி பரப்பாகி கொண்டு வருகிறது .
பாச சகோதரர் திரு ஜெய்ஷங்கர் அவர்களின் பதிவுகள் அருமையாக உள்ளது...தொடர்ந்து மக்கள்திலகம் பெருமையினை பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... அப்புறம் தாங்கள் பதிவிட்டுள்ள "கூண்டுக்கிளி" -இசைஅமைத்தவர் மறைந்த திரு sm சுப்பையா அல்ல... மறைந்த திரு kv மகாதேவன் அவர்கள் தான் "மயக்கும் மாலை பொழுதே" - காவிய பாடலுக்கு இசையமைத்தவர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்... நன்றி...
நன்றி திரு.சுகராம் அவர்களே. கூண்டுக்கிளி படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் அவர்கள் தான் என்பது மிகச் சரியானதே. மலைக்கள்ளன் படத்தின் இசையமைப்பாளர் s.m.சுப்பையாநாயுடு என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக M.S.சுப்பையா நாயுடு என்று தினமலர் வீடியோவில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்ட முயன்றபோது ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறேன். தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்த மயக்கும் மாலைப் பொழுதே பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த குலேபகாவலி படத்தில் இடம் பெற்றது என்ற தகவலும் சரியானதே. ஆனால் இரு திலகங்களின் போட்டியால் இந்தப் பாடல் கைவிடப் படவில்லை. படத்தில் டூயட் வைக்க வாய்ப்பில்லாததால் அந்தப் பாடல் கைவிடப்பட்டதாக படத்தின் இயக்குநர் ராமண்ணா அவர்கள் தினதந்திக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தனது மனம் கவர்ந்த அந்தப் பாடலை பின்னர் குலேபகாவலி படத்தில் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு முத்தையன் அம்மு அவர்கள் பதிவிட்ட " தாய் மகளுக்கு கட்டிய தாலி"- திரை காவியத்தில் உலக பேரழகன் மக்கள்திலகம் தோற்றங்கள் வெகு அருமை... நன்றி சார்...
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்..
நினைத்ததை முடிப்பவன் என்கிற திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து சேர்ந்த நாயகனாய் ஒரு தோற்றம்! கொள்ளையடிப்பதில் தேர்ந்தவனாய் மறு தோற்றம்! காட்சியமைப்பில் இரு கதா பாத்திரங்களும் நம் கண் முன்னே தோன்ற – மாறுவேடங்களில் காவலர்கள் கூடுகின்ற சபையில்.. கதையின் நாயகன் தான் பாடும் பாடலாக இடம் பெறும் பாடல்!
கவிஞர் மருதகாசியின் கைவண்ணத்தில் – உதித்த எண்ணங்களிவை! சொல்ல வேண்டிய கருத்தை நச்சென்று பல்லவியிலே சொல்வதென்பது அத்தனை எளிதன்று! தொட்டுக்காட்ட வேண்டிய பாத்திரப் படைப்புகளையும் பாடலில் பளிச்சென்று இடம்பெறச் செய்வது மக்கள் திலகத்திற்காகவே வரையப்பட்ட திரைப்பாடலிது!
சமுதாயத்தில் நடக்கும் அவலங்களைத் தோலுரித்து – வேடதாரிகளை இனம்கண்டு சரியான சாட்டையடி கொடுக்கும் சத்திய வரிகள்!
எத்தனைக் காலமானாலும் இவ்வுலகில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருப்பர் என்பது உண்மையென்றால் – காலங்களைக் கடந்து அவர்களின் நிறம் காட்டும் இப்பாடலும் சென்றே தீரும் என்பதும் உண்மை!
ஒவ்வொரு திரைப்பாடல் வரியிலும்கூட புரட்சித்தலைவர் கவனம் செலுத்திடுவார் என்பதற்கு இந்தப்பாடல் இன்னொரு சாட்சியாகும்!
பாடல் ஒலிப்பதிவு முடிந்தபின்பு தனது இராமாபுரம் தோட்டத்திற்கு அனுப்பப்படுவதும் அன்றிரவே தனிமையில் கேட்பதும் எம்.ஜி.ஆரின் வாடிக்கை! அப்படி இப்பாடல் எம்.ஜி.ஆரிடம் அனுப்பப்படுகிறது!
பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்துவிட்டு
கண்மூடிப் போகிறவர் போகட்டுமே!
என்கிற வரியில் உள்ள கண்மூடிப் போகிறவர் என்னும் வார்த்தைகளை நீக்கிவிட்டு தன்வழியே போகிறவர் போகட்டுமே என்று மாற்றச் சொன்னார் என்றால் கவிஞர்தம் சொற்களில் அறச்சொற்கள் வந்துவிடக்கூடாது என்பதில்கூட எம்.ஜி.ஆர் எத்தனை கவனம் கொண்டிருந்தார் என்பது புலனாகிறது!
courtesy - kaviri mainthan
தமிழ் திரை உலகின் என்றும் மறக்க முடியாத நடிகை மனோரமா
அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும் அவர் குறித்த செய்திகள், படங்கள்
வீடியோ ஆகியவற்றை பதிவிட்ட நமது திரியின் பதிவாளர்கள் அனைவருக்கும்
எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
அன்பு நண்பர் வினோத் அவர்களுக்கு,
திரு காவிரி மைந்தன் வெளியிட்ட அந்தத் தகவலிலும் தவறு உள்ளது.
பொன் பொருளைக் கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
தன் வழியே போகிறவர் போகட்டுமே
என்பது தான் கவிஞர் முதலில் எழுதிய வரிகள். மக்கள் திலகம் தலையிட்டு தன் வழி என்பது சரியான வழியாக இருக்க வாய்ப்பு இருக்கிறதே. (ஏற்கனவே சரியான வழியில் செல்பவனாக இருக்கும் போது). எனக் கேட்க பின்னர் கண்மூடிப் போவது என்ற கிராமப்புற வழக்குச் சொல் மாற்றியமைக்கப்பட்டது.
https://www.youtube.com/watch?v=CsFNnK99SyU
Thazhampoo 50th year count down.
http://mgrroop.blogspot.in/2015/10/c...hazhampoo.html
Congrats Tirupur Ravichandran sir as admins of Mayyam had appointed you as a moderator for Makkal Thilagam thread.
மக்கள் திலகத்தின் பக்தரும் மக்கள் திலகத்தின் 30 படங்களின் கோவை மாவட்ட உரிமையை வைத்து தொடர்ந்து கோவையில் திரையிட்டு பொன்மனசெம்மலின் ரசிகர்களை மகிழ்வித்து வருபவரும் எனது அன்பு நண்பருமான திரு உலகப்பன் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாம் பணியாற்றி வந்த நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றார். அதற்காக (மக்கள் திலகத்தின் திருக்கரங்களால் திறக்கப்பட்ட) தாய் ஹோட்டல் - கோவையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் நானும் மக்கள் திலகத்தின் பக்தர்களும் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசளிதோம்.
வருகின்ற நாட்களில் மேலும் மக்கள் திலகத்தின் அதிக படங்களின் கோவை உரிமையைப் பெற்று இன்னும் அதிக படங்களை கோவையில் திரையிட இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். தற்பொழுது கோவை ராயல் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடி வரும் பல்லாண்டு வாழ்க திரைக்காவியம் இவர் உரிமை பெற்றதாகும். நமது திரியின் சார்பாக அவர் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் திலகத்தின் பல படங்களை திரும்ப திரும்ப கோவையில் திரையிட்டு அனைவரையும் மகிழ்விக்கட்டும்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
Congrats V.P.Sathya for crossing 1000 posts.
Thank you Roop Kumar Sir !
http://i57.tinypic.com/555xms.jpg
Regards,
Sathya
Thank you Suharaam Sir !
http://i57.tinypic.com/555xms.jpg
Regards,
Sathya
Thank you Vinoth Sir !
http://i57.tinypic.com/555xms.jpg
Regards,
Sathya
Thank you Jaishankar sir !
I just wanted to let you know that I am not a photograph seller. I am devotee & great fan of our beloved Makkal Thilagam MGR and I am working as an assistant manager in a private company. My hobbies are converting MGR’s B/W pictures to color and remixing his videos to latest GOOD songs. Thank you so much for your best wishes and like all your postings!
Regards,
Sathya
http://i62.tinypic.com/33nb8fc.jpg
இறைவனடி சேர்ந்த ஆச்சி மனோரமா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் !!!
Dear Sathya sir,
I already know about your profession through our professor sir. I just honored your skill in Photoshop. I wounder your skill is higher than a professional. Please let me know your contact no.
]இனிய நண்பர் திரு. வி.பி.சத்யா அவர்களே, தங்களின் அற்புதம் மற்றும் அசத்தலான 1001 பதிவுகள் கண்ட ஆயிரத்தில் ஒருவன் பக்தருக்கு நல்வாழ்த்துக்கள்.
http://i58.tinypic.com/2ytsjo5.jpg
நண்பர் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு வணக்கம்.
திரு. உலகப்பன் அவர்களை கடந்த ஆண்டில், சென்னையில் கொருக்குபேட்டையில்
திரைப்பட விநியோகஸ்தர் திரு. நீலகண்டன் அவர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சியில்நேரில் சந்தித்து உரையாடியது பசுமையான நினைவுகள்.
திரு. உலகப்பன் அவர்கள் நீண்ட ஆயுளுடன், வளமான, நலமான, சந்தோஷமாக
குடும்பப் பணியில் ஈடுபடுவதோடு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் புரட்சி தலைவர்
புகழ் பாடும் பணியில் தன்னை அர்பணித்துக் கொண்டு ரசிகர்களை மகிழ்விப்பார்
என்கிற நம்பிக்கையோடு நல்வாழ்த்துக்கள்.
தயவு செய்து என்னுடைய வாழ்த்துக்களை , கோவையில் அவரை சந்திக்கும்போது
நேரில் தெரிவிக்கும்படி அன்பு வேண்டுகோள்.
ஆர். லோகநாதன்.
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஆணையிட்டால் " தினசரி 4 காட்சிகள் , 22/09/2015 முதல் 3 நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டது.
http://i61.tinypic.com/wbxnh4.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.