Interesting Video about Chennai Flood (With Parasakthi Dialogue)
https://youtu.be/H8x0JxpVCCA
Printable View
Interesting Video about Chennai Flood (With Parasakthi Dialogue)
https://youtu.be/H8x0JxpVCCA
From the Chevalier Sivaji Ganesan Felicitation Souvenir
நடிகர்திதிலகத்தின் திரைப்பட விளம்பரங்கள்
காணொளி...
Sivaji sadanaigal: http://youtu.be/ukKnbN-Ax7o
http://i501.photobucket.com/albums/e...psyjmnhyor.jpg
Thanks to my dear friend who shared this 5oth Day advertisement.
RKS
தரிசனம்-2.
-------------
தாவணிக் கனவுகள்.
----------------------
தொடர்கிறது...
---------------
இந்தக் காட்சியைப் பார்க்கையில் எனக்கு சந்தோஷமாயிருந்தது.
தண்ணீரில்லாத வாளியின்
பிடியைப் பிடித்து நெஞ்சுக்கு
நேரே வைத்துக் கொண்டு
தண்ணீர் பிடிக்கப் போகும்
நடிகர் திலகம், அங்கே
குழாயடியில் நிற்கும் பாக்யராஜைப் பார்த்து விட்டு
எரிச்சலாகச் சொல்வார்..
"யார் முகத்தில முழிக்கக்
கூடாதுன்னு நினைச்சேனோ..
காலைலே அவன்
தரிசனமாவே இருக்கு."
இந்தத் தொடருக்கு நான்
வைத்திருக்கிற பெயர், "தரிசனம்". 'தரிசனம்' என்கிற
வார்த்தையை நடிகர் திலகம்
உச்சரிக்கக் கேட்ட சந்தோஷம்.
------------------
நெஞ்சுக்கு நேரே வாளியைப்
பிடித்துக் கொண்டு, கம்பீரமாக..
அதே சமயம் வேண்டாதவரை
நோக்கிச் செல்கிற தயக்கத்துடன் ஒரு நடை.
வழியெல்லாம் சுப்ரமணியத்தின் தங்கைகள்
சொல்லும் "குட் மார்னிங்" களை பெருமையோடு ஏற்றல்.
சுப்பிரமணியத்தின் குட்டித்
தங்கை அமர்ந்து குளித்துக்
கொண்டிருக்கும், சுப்பிரமணியம் நின்று கொண்டிருக்கும் குழாயடியை
அடைந்ததும் காட்டும் பெரும்
தயக்கம்.
சுப்ரமணியம் சொல்லும் "வெரிகுட்மார்னிங் கேப்டன்"
மரியாதையை ஏற்றுக் கொள்ளப் பிரியமற்ற வெறுப்பு.
"லட்சுமி. எனக்கு ஒரு பக்கெட்
தண்ணி பிடிச்சுட்டுப் போகணும். அவனை அந்தப்
பக்கம் போகச் சொல்லு."
முகம் பார்த்துப் பேச விருப்பமற்ற வெறுப்பு,
வார்த்தைகளில்.
வாலிப வயசின் குறும்பு மனம்
சீண்டி விளையாடாதிருக்குமா?
சுப்ரமணியம் ஆரம்பித்து
விட்டான். "என்ன.. மிலிட்டரி
காலங்காத்தாலே சுத்தி வளைக்குது?..நான்னா ஒரு பயம் இருக்கும்."
சுப்ரமணி இப்படிச் சொன்னதும்
கேப்டனிமிருந்து வெளிப்படும்
ஒரு சூரியப் பார்வையைச்
சந்திக்கப் பயந்து, சுப்ரமணி
"ஜகா" வாங்குகிறான்.
"இல்ல.. ஒரு அன்பு கலந்த
மரியாதை இருக்கும். வாட்
ஹேப்பண்ட் டுடே? காலைலே
காப்பி குடுக்கலையா?"
அந்தக் குட்டிப் பெண்ணும்
அண்ணனுக்குச் சற்றும்
இளைத்தவளில்லை. "காலைல
அஞ்சரை மணிக்கு நானே ஒரு
கப் கொண்டு போய்க் குடுத்தேன். அப்புறம் ஏழரை
மணிக்கு அவரே ஒரு கப்
கேட்டு வாங்கிக்கிட்டாரு."
கேப்டனுக்கு பொறுமை இழப்பு
அதிகமாகிறது. " லட்சுமி, நான்
யாரு.. என்ன சமாச்சாரம்னு
தெரியாமப் பேசிக்கிட்டிருக்கான்.. சொல்லி
வை."
சுப்ரமணியம், மேலும் சீண்டுகிறான்."ஆமா.. இவரைப்
பத்தித் தெரியாதா? இந்த
நாட்டில உள்ள முப்பத்தாறு
கோடி ஜனங்களுக்கும் இவருன்னா அத்துபடி. போன
வாரங் கூட சிமெண்ட் கம்பெனி
முதலாளி இவரு வண்டவாளத்தப் புட்டுப் புட்டு
வச்சாரு. என்னிக்கோ ஒரு
நாள் மிலிட்டரில சாதாரண
சிப்பாய் வேலை பாத்துட்டு,
கேப்டன்னு ஊருக்குள்ள
பொய்யைச் சொல்லிக்கிட்டு
குட்மார்னிங் வாங்கிக்கிட்டிருக்காரு."
இதைக் கேட்டதும்.. பொய்க்
கோபம் நிஜக் கோபமாகிறது.
கேப்டன் சிதம்பரமாக,
"அடி..ங்.."என்று வாளியைத்
தூக்கிக் கொண்டு கோபமாய்
சுப்ரமணியத்தை அடிக்கப்
போகும் நடிப்பை வெகுவாக
ரசிக்கும் நமக்கும் அது போன்ற
ஒரு வருத்தங் கலந்த கோபம்..
சத்தியமான ஒரு விஷயம்
பரிகசிக்கப்படுவது கண்டு
விம்முகிற நம் இதயங்களில்
இருந்து கசிகிற வேதனை மிகுந்த கோபம்...
வரத்தான் செய்கிறது.
"சித்தப்பா..சித்தப்பா" என்று
வசந்த மாளிகையில் சிறுமியாய் வந்த ஸ்ரீதேவியோடு " வார்த்தை
நானடி" என்று காதல் பாடுகிறார்...
அம்பிகாவோடு ஆடுகிறார்...
அனுராதாவைப் பார்த்து அசடு
வழிகிறார்...
வயதுக்குப் பொருத்தமில்லாமல்
நடிக்கிறார்...
இவ்வாறெல்லாம் நடிகர் திலகத்தை இகழ்ந்தவர்கள்
உலவிய எண்பதுகளில்...
ஒரு ஜோடியில்லாமல்...
ஒரு வரி பாடலில்லாமல்..
திணிக்கப்பட்ட சண்டைகளில்லாமல்...
படம் முழுதும் தானே இருக்க
வேண்டுமென்கிற பிடிவாதம்
இல்லாமல்...
பல தலைமுறைகள் தாண்டி
வந்த திரைக்கலைஞரோடு
இணைவதில் ஒரு துளி
தயக்கமில்லாமல்...
கர்வமில்லாமல்...
நான் முன்னமே சொன்னது
போல், கௌரவ வேடந்தானே
என்று ஒப்பேற்றாமல், வேடத்திற்கு கௌரவமாய்
தன் நடிப்பைத் தந்த "தாவணிக்
கனவுகள்" பார்த்த பிறகும்
மாறாதவர்கள் மீது பாய்கிற
கோபம்.
(...தொடரும்...)
உலக உத்தமன்
சிவாஜியின் மறுக்க முடியாத சாதனைகளில் ஒன்று.
ஓடிய திரைப்படங்களின் நாட்கணக்கும் வசூல் கணக்கும்
உன் நடிப்புக்கு ஈடாகுமா? http://i1065.photobucket.com/albums/...psuqdhzdqx.jpg
Fullpage
ஏங்க வைக்கும் விளம்பரம்
இந்தப்படமும் திரைக்கு வந்திருந்தால்...
அது உந்தன் சாதனையின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்லாகவல்லவா இடம் பெற்றிருக்கும். http://i1065.photobucket.com/albums/...pssd9ydehs.jpg
உன்னைப்போல தெய்வம் கூட இருக்காது அன்போடு http://i1065.photobucket.com/albums/...psejzgdkbt.jpg
இன்று இரவு 9மணி அளவில் பம்மலார் என்னை தொடர்பு கொண்டுஆவணங்களின் பதிவுகளுக்கு மகிழ்ச்சியும் வாழ்த்தும் தெரிவித்தார்.அவர் மீண்டும் திரிக்கு வந்து பதிவிட வேண்டும் என்று எல்லோருடைய சார்பாகவும் கேட்டுக் கொண்டேன். அவரும் வருவதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
உண்மையான அன்பையும் பாராட்டையும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள் போல் வேறு யாரும் வெளிப்படுத்தமுடியாது.
அவருக்காக இந்த அன்புப்பரிசு.
உங்களின் சார்பாக.,.
http://i1065.photobucket.com/albums/...psocjosu3r.jpg
தினந்தந்தி
முழுப்பக்கம்
Dinathanthi
Fullpage
அதர்மத்தை ஏற்காத தர்மராஜா http://i1065.photobucket.com/albums/...ps7f7gnwf1.jpg
Covai district advt. http://i1065.photobucket.com/albums/...psvvfkeozy.jpg
அலை ஓசை பத்திரிக்கையில் வந்த முழுப்பக்க விளம்பரம்
http://i1065.photobucket.com/albums/...pscktmigth.jpg
பாரத தாய்க்கு பெருமைசேர்த்த காவியம் http://i1065.photobucket.com/albums/...pshsofyleq.jpg
தினத்தந்தி முழுப்பக்கம் http://i1065.photobucket.com/albums/...psrzejj8w3.jpg
தினத்தந்தி
இன்றுமுதல் விளம்பரம்
முழுப்பக்கம் http://i1065.photobucket.com/albums/...psnqxbrziz.jpg
senthilvel sir your albuma and sivaji sadhanaigal videos amarka,am and aarpattam,
pl keep it up
blessings
ஆதவன்சார்,
(வயதுக்குப் பொருத்தமில்லாமல்*
நடிக்கிறார்...
இவ்வாறெல்லாம் நடிகர் திலகத்தை இகழ்ந்தவர்கள்
உலவிய எண்பதுகளில்...
ஒரு ஜோடியில்லாமல்...
ஒரு வரி பாடலில்லாமல்..
திணிக்கப்பட்ட சண்டைகளில்லாமல்...
படம் முழுதும் தானே இருக்க
வேண்டுமென்கிற பிடிவாதம்
இல்லாமல்...
பல தலைமுறைகள் தாண்டி
வந்த திரைக்கலைஞரோடு
இணைவதில் ஒரு துளி
தயக்கமில்லாமல்...
கர்வமில்லாமல்...
நான் முன்னமே சொன்னது
போல், கௌரவ வேடந்தானே
என்று ஒப்பேற்றாமல், வேடத்திற்கு கௌரவமாய்
தன் நடிப்பைத் தந்த "தாவணிக்
கனவுகள்" பார்த்த பிறகும்*
மாறாதவர்கள் மீது பாய்கிற
கோபம்.)
பட ஆய்வினூடே நிஜ ஆய்வும்கலந்து எழுதுவது ரசிக்கவைக்கிறது.பாராட்டுக்கள்.
தமிழகத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் வசிக்கும்
அனைத்து மைய உறவுகளும் நலம்தானே.
செந்தில்வேல் சார்
நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் விளம்பர அணிவகுப்பு
மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை.
70வதுகளில் அன்னை புமி விளம்பரம் நண்பர்கள்மூலம் கிடைத்தது
நடிகர்திலகம் மிக ஸ்டைலில் நிற்கும் முழுஉருவ படத்துடன் பஞ்
வசனத்துடன் அவ்விளம்பரம் அமைந்திருந்தது
சித்திராலயா பத்திரிகை என நினைக்கின்றேன்
அவ்விளம்பரம் தங்களிடம் இருந்தால் பதிவிடுங்கள் நன்றி
தரிசனம்-2.
-------------
தாவணிக் கனவுகள்.
---------------------
தொடர்கிறது...
---------------
கோபம், அருமையான விஷயம்.
அதுவும், நல்லவர்களின் கோபம்.. மிக அருமையான
விஷயம்.
அத்தனை கோபங்களுமே
வீணானதல்ல.
தெரியாமலா ரௌத்திரம் பழகச்
சொன்னான் பாரதி?
கண் முன்னே விரிந்த உலகத்தின் அவலங்களையும், கண்மூடித்தனங்களையும்
பார்த்து அவனுள் மூண்ட
கோபத் தீ தானே அவைகளை
எல்லாம் எரித்தது?
பட்டுத் தெளிந்து ஞானமுற்ற
பட்டினத்தாரின் கோபம்தானே
காமத்தின் மீதான மோகத்தை
மனிதனை விட்டுப் பிரித்தது?
தமிழின் அர்த்தப் பிழை பொறுக்காத நேர்மையான ஒரு நக்கீரக் கோபம்தானே கடவுளையே எதிர்த்து நின்ற
பெருமையைப் பதித்தது?
தமிழகத்தின் அரசியல் பிழை
பொறுக்காத நேர்மைமிகு
நடிகர் திலகத்தின் கோபத்தில்தானே "தமிழக
முன்னேற்ற முன்னணி"
உதித்தது?
----------------
தன்மானம் சீண்டப்பட்ட உள்ளத்திலிருந்து வெடித்துக்
கிளம்பும் கோபம் விசேஷமானது. அது, கோபப்படுத்தியவர்களை
விரைவாகத் திருப்பித் தாக்கி
வாயடைக்கச் செய்யும் சக்தி
வாய்ந்தது.
கேப்டனிடமிருந்து வெளிப்பட்டதும் அப்படிப்பட்ட
சக்தி வாய்ந்த கோபமே.
"யாரைப் பாத்துடா சிப்பாய்னே? வீட்டுக்கு வரியா?
எத்தனை மெடல் வச்சிருக்கேன்னு காட்டுறேன்.
ஊருப் பயலுக தைக்கிறதுக்காக
துணியைக் கொண்டு வந்து
குடுத்தா, அதுல நீ சட்டை தைச்சிப் போட்டுக்கிட்டிருக்கே.
உன்னை மாதிரி ஒட்டுத் துணி
இல்லடா. .நான். ஒரிஜினல்.
மிலிட்டரி யூனிபார்ம்."
"ஒரிஜினல் " என்று சொல்லும்
போது நெஞ்சு நிமிர்த்தி மார்தட்டிக் கொள்கிறார்.. நம்
கேப்டன்.
( சரிதான் தலைவா! மார்தட்டிச்
சொல்ல நீங்களன்றி வேறு
யார் ஒரிஜினல்? )
எதிர்த்தாற் போல் மச்சு வீட்டிலிருக்கும் சுப்ரமணியத்தின் அத்தை பெண், பக்கத்திலிருக்கும்
சலவைத் தொழில் புரியும்
இளைஞன், தையல் கடை
வைத்திருக்கும் இளைஞன்
எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.. சண்டையை.
சுப்ரமணியம், கேப்டனின்
கோபத்தை வேறு புறமாய்த்
திசை மாற்றுகிறான்." இங்க
பாருங்க. வீடு, உங்களோடதா
இருக்கலாம்.பம்பு உங்களோடதா இருக்கலாம்.
ஆனா, மாசா மாசம் நாங்க
வாடகை குடுக்குறோம்."
கேப்டன் கிண்டலாகக் கேட்கிறார். "வாடகை..? அட..
என் கண்ணே. அட்வான்ஸ்
குடுத்ததோட சரி. வீட்டுக்கு
வாடகைன்னு ஒண்ணு இருக்கு. வீட்டுக்காரன்னு
ஒருத்தன் இருக்கேன். இதெல்லாம் உங்களுக்கு
ஞாபகம் இருக்கா?"
( " வாடகை.. ? அட.. என் கண்ணே. "-என்று நடிகர் திலகம் சொல்லும் அழகை
ரசித்து மகிழாதோரின் மனநிலை பரிசோதனைக்குரியது. )
"என்னது... வாடகை.. வந்து
சேர்றதில்லையா? எங்கே..
சாவி எங்கே? பணம் எங்கே?"
-நடிகர் திலகத்தைப் பார்த்த
பிறகான நம் மனக்கவலைகள்
போல, சுப்ரமணியம் அந்த
இடத்தை விட்டு ஓடியே
விட்டான்.
(...தொடரும்...)
Fullpage advt. http://i1065.photobucket.com/albums/...psndvm2yix.jpg
Coimbatore. Edition http://i1065.photobucket.com/albums/...psqqei6ayk.jpg
2nd release advt.
http://i1065.photobucket.com/albums/...psodbu3avb.jpg