http://i1065.photobucket.com/albums/...psvjraj8ih.jpg
Printable View
சரித்திரம் படைக்கும் மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன். சென்னை ஸ்ரீநிவாசா திரையரங்கம் துவங்கி 54 வருடங்கள் ஆகி விட்டன. ஆனால், இது வரை எந்தப் படமும் 70 நாளைத் தாண்டியதில்லை. தற்போது நமது மக்கள்தலைவரின் சிவகாமியின் செல்வன் திரைப்படம் 12வது வாரம் காண்கின்றது. ஜூலை 10 அன்று 100வது நாளைக் கொண்டாவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்வோம். கலையுலகில் என்றும் சாதனைச் சக்கரவர்த்தி சிவாஜி ஒருவர் தான் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்வோம். படத்தின் வெற்றிக்கு உழைத்திட்ட திரு.ஜெயக்குமார், திரு.ராமஜெயம் மற்றும் அனைத்து மக்கள்தலைவரின் ரசிகர்களுக்கும் சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைக் காணிக்கையாக்குகிறோம்.
http://www.sivajiganesan.in/Images/180616_2.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே, 24.06.16 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் மாபெரும் வசூல் புரட்சி ஏற்படுத்திய மாபெரும் வெற்றிக்காவியம் திரிசூலம் வெளியாகிறது.
தயாராவோம் படத்தைக் காண, திக்குமுக்காடச் செய்வோம் சென்ட்ரல் திரையரங்கை.
மதுரை சென்ட்ரல் தியேட்டரில் புதிய படங்களுக்கு இணையாக வைக்கப்படும் திரிசூலம் காவியத்தின் போட்டோ கார்டு.
மேலும் சூப்பர் போட்டோ கார்டு காண மக்கள்தலைவரின் புகழ்காக்கும் உங்கள் www.sivajiganesan.in பாருங்கள்
http://www.sivajiganesan.in/Images/180616_3.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
http://i1087.photobucket.com/albums/...355093/eee.jpg
'நீலவான'த்தில் கள்ளமில்லாமல் சிரித்து வட்டமிட்டு பறக்கும் தேவிகா சிட்டு. மகன் வயிற்றில் வளருகிறான் என்ற பொய் சேதி அறியா உண்மை சந்தோஷத்தில் உறவினர், உற்றார் மத்தியில் தோழிகளின் கிண்டல்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மத்தியில் தேவிகாவின் அந்த முகத்தில்தான் கைகள் மூடிய, எத்தனை நாணம் கலந்த மகிழ்ச்சி! சும்மாவா சொன்னார் நடிகர் திலகம் 'நீலவானம்' படம் பற்றி. 'தேவிகாவின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம்' என்று. 'நடிப்பின் இமய'மே பாராட்டு படித்து விட்டதே தேவிகாவைப் பற்றி.
பொய் வளைகாப்பு நடப்பதைப் பார்த்து கமுக்கமாகக் கண்ணீர் விடும் சீதாலஷ்மி, சஹஸ்ரநாமம் பரிதாபம்.
குமாரி பத்மினியும், ராஜஸ்ரீயும் சுசீலா, ராட்சஸி குரலில் இந்த அற்புதமான பாடலைப் பாட சுவையோ சுவை. சுசீலா, ஈஸ்வரியில் யாருக்கு மார்க் போடுவது என்றே தெரியவில்லை. போட்டா போட்டி இருவருக்கு. வெற்றி நமக்கு. பாடலின் பரிதாபமான சிச்சுவேஷனை ஆரம்ப ஷெனாயின் லேசான சோகமே காட்டிக் கொடுத்து விடும்.
'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட'
என்ன தமிழ்! என்ன தமிழ்!
'சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக'
வரிகள் சுசீலா குரலில் மிளிரும் அழகை எப்படி வர்ணிக்க? அப்படியே தெள்ளத் தெளிவான வெண்கலக் குரல் பஞ்சர் பஞ்சராக்கிவிடும் நம்மை. 'ஆஹா! சுசீலாதான் டாப்' என்று மனதுக்குள் சர்டிபிகேட் தந்து கொண்டிருக்கும்போதே 'இதோ நான் இருக்கிறேன்... அதற்குள் முடிவெடுத்து விடாதே' என்று என் ராட்சஸி அடுத்த வரிகளை கேப்ச்சர் பண்ணி அமர்க்களப்படுத்தும் போது மனம் படும் பாட்டை சொல்லிவிட முடியாது.
'தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக....மல்லிகைச் செண்டாக' என்று முடிவில் ராட்சஸி அதிர்வுகள் கொடுக்கும் போது 'ஈஸ்வரிதான் டாப்' என்று எழுந்து நின்று கத்தத் தோணும்.
ரெண்டு பேரும் சேர்ந்து வேர்வையை நீண்டு வழிந்தோடச் செய்யும் அழகு.
'வேர்வை வழிந்தோ......ட'
குழந்தை வளரும் கர்ப்பப்பையை 'தாமரைக் கோவில்' என்று கற்பனை செய்து பார்த்த கவிஞனின் திறமைதான் என்ன!
குமாரி பத்மினி குடும்பக் குத்துவிளக்கு என்றால் ராஜஸ்ரீ சற்றே கவர்ச்சி விளக்கு. ரெண்டுமே அழகுதான்.
ஒன்றை நிச்சயம் கவனியுங்கள்.
இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடக் கூடிய அந்த சில வினாடிக் காட்சி. தூக்கிச் சாப்பிடுபவர் யார்? வேறு யார்? நடிகர் திலகம் அல்லாமல் வேறு யார்?
http://i1087.photobucket.com/albums/...5092/nadai.jpg
பொய் வளைகாப்பு அங்கே தேவிகாவுக்கு நடந்து கொண்டிருக்க, இங்கே டெல்லியில் அகில உலக டாக்டர்கள் மகாநாடு புற்றுநோய் மருத்துவத்திற்காக நடந்து கொண்டிருக்க, தேவிகாவின் புற்றுநோய் குணத்திற்காக டாக்டர்கள் ஒன்று கூடியிருக்கும் கான்பிரன்ஸ் ஹாலின் வெளியே தவிப்புடன் புகை பிடித்தபடி ஒரு ஸ்டைல் வாக் கொடுக்கும் நடிகர் திலகம் அந்த ஒரு நிமிடத்தில் நான் முன்பு சொன்ன அத்தனை ஜாம்பவான்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவார். அதாவது முதல் சரணத்திற்கு முன்பாக ஒலிக்கும் இடையிசையில் கான்பிரன்ஸ் ஹாலின் கதவுப்பக்கம் திரும்பி நிற்பவர் அப்படியே திரும்பி சற்றே லாங்க்ஷாட்டிலிருந்து படிக்கட்டுகளின் கீழ் இருக்கும் காமிராவை நோக்கி வருவார். காமெரா கீழிருந்து நடிகர் திலகத்தை ஃபோகஸ் செய்தபடி இருக்கும். சிகரெட்டை வாயில் வைத்து ஒரே ஒரு 'பப்' இழுத்தபடி அவர் ஸ்டைலாக அந்த சோக நிலையிலும் நடக்கும் அந்த வாக். அடடா! கைகளோடு கரெக்ட்டாக பிட்டாகியிருக்கும் அந்த கனகச்சிதமான கருப்பு கலர் ஷர்ட் அவரை இன்னும் அழகாக காண்பிக்கும். 'தம்'மை வாயிலிருந்து கைகளால் எடுத்து சிகரெட்டைப் பிடித்திருக்கும் அந்த அழகு நம்மை நிலைகுலைய வைத்துவிடும். சோகத்திலும் சுகம் அளிக்கக் கூடிய மூன்றே வினாடி ஜோரான காட்சி இது.
ஒரு விநாடிக் காட்சியை ரசிக்க வைத்து ஓராயிரம் பக்கங்களுக்கு அதை எழுத வைக்க நடிகர் திலகத்தை விட்டால் யாருண்டு?
தவிப்புடன் 'தம்'மடித்து, தன்னிலை கொள்ளாமல் நடை பயிலும் நடிகர் திலகத்தின் அந்த நடைக்கு ஈடு இணை எதுவும் சொல்ல முடியுமா?
இரண்டாவது சரணம் தொடங்குமுன் வரும் இடையிசையிலும் அவர் டாக்டர்கள் கைவிட்ட நிலையில் அவர்களிடம் அண்ணியாருக்காக வருத்தமாகக் கெஞ்சுவதும், விரக்தியாக முகபாவங்கள் காட்டுவதும் ஏ.ஒன்.
அற்புதமான பாடல். லிட்டில் பிளவரும், 'ஓடும் எண்ணங்'களும் 'ஹோ'...'ஓஹோஹோ' என்று இன்றுவரை பிரம்மாண்டம் படைக்க, இந்த வளைகாப்பு பாடல் சற்று பின்தங்கியிருந்தாலும் சற்றும் குறைவில்லாத பாடல்.
'நீலவான'த்தின் மூன்று பாடல்கள் எப்படி ஆரம்பிக்கின்றன என்று பாருங்கள்.
'ஓ லஷ்மி...ஓ ஷீலா'
'ஹோ...லிட்டில் பிளவர்'
'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே!'
எல்லாமே 'ஓஹோஹோ'தானே!
'சொல்லடா வாய் திறந்து' சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.
'மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் வந்து கைகள் கலந்தாட'
https://youtu.be/OsjT3YkKlGc
செந்தில்வேல்,
கலக்கல் ஆவணங்கள். தலைவர் தமிழக முன்னேற்ற முன்னணி கண்டு அப்போதைய அத்தனை கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்தது அனைத்தும் நினைவுக்கு வருகிறது. அத்தனை கூட்டமும், பெருவாரியான உழைப்பும் விழலுக்கிறைத்த நீராய்ப் போன நினைவுகளும் நெஞ்சத்தைத் தாக்குகிறது. ஊரூராய் சென்று தமிழக முன்னேற்ற முன்னணி கொடிகளை ஏற்றியதும், ரசிகர்களின் சொல்லவொண்ணாத ஆர்வமும், உழைப்பும் இப்போதும் பசுமையாய் நெஞ்சிலே நிழலாடுகிறது. பழைய நினைவுகள் நெஞ்சில் கிளர்ந்தெழுகின்றன. அற்புதமான ஆவணங்களைத் தந்து அசத்துவதற்கு நன்றி!
இலங்கையில் கலைக்குரிசில்சிவாஜி அப்பா செய்த சாதனைகளில் சில.
87 ஆம் வருடம் பல மலர்களில் வந்த சாதனைகளின் கையெழுத்தில் பதிவு செய்ததொகுப்பு இவை.http://uploads.tapatalk-cdn.com/2016...0aa21f6e32.jpg
BANGALORE HITS
http://uploads.tapatalk-cdn.com/2016...bc2a81e52e.jpg
இனிய நண்பர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிவிக்கும் வணக்கங்கள்
திரியினை செவ்வனே பங்களிப்பினை தரும் திரு நெய்வேலி வாசுதேவன் சார், கோபால் சார், ஆதவன் சார், ஆவணங்களை அள்ளி தரும் செந்தில்வேல் சார் மற்றும் இலங்கையின் இளங்குயில் என புகழ் பாடும் குயில் திரு சிவா சார், பரணி சார், மருத்துவர் திரு சிவாஜி செந்தில் சார், திரு ராகவேந்தர் சார், திரு முரளி சார், திரு கார்த்திக் அதிராம் சார் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள்.
புதிய கம்பெனியில் விற்பனை முகவராக சேர்ந்துள்ளதால் அதிகம் வேலை பல ஊர்களுக்கு செல்லும்படியாக இருக்கும்பட்சத்தில் திரியில் முன்பு போல பதிவுகள் பதிக்க முடிவதில்லை. ஆகவே ஒரு ஹலோ சொல்லி, ஒரு சில எண்ணங்களை பகிர்ந்துகொள்ளவே வந்துள்ளேன்.
கூடிய விரைவில் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன் !
இயக்குனர் திரு act அவர்களுக்கு அஞ்சலி.
தமிழக முதல்வர் அவர்கள் மிக சிறப்பாக நடித்த ???? தெய்வமகன் திரைப்படம் oscar விருதுக்கு பரிந்துரைத்ததை அவர் இரங்கல் தகவலில் தெரிவித்தது மிகவும் மகிழ்ச்சியாக பெருமையாக அதே சமயம் மிகவும் ஹாஸ்யமாக உள்ளது.
காரணம் மூன்று வேடங்களில் மிக சிறந்த நடிப்பை இவர் வெளிபடுத்தியதால் மட்டுமே இந்த தெய்வ மகன் திரைப்படம் oscar விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது என்பது கூடுதல் செய்தி !
விரைவில் எண்ணங்களுடன் சந்திப்போம்.
Rks
தந்தை என்னும் ஆலவிருட்சம் தாங்கிட்ட விழுதுகள் ////////Fathers' Day reminiscence!
https://www.youtube.com/watch?v=StrkDVr1tg4
https://www.youtube.com/watch?v=h8kfABvuJBk
https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4
ம்ம்ம்ம் .....இப்படியும் ஒரு கற்பனை .....ஒரு பரோடி என்ற அளவில் ரசிக்கலாம் ....!
https://www.youtube.com/watch?v=6hZ6Qxw9iQU
தமிழ்த்திரை உலக வரலாற்றில் முதல்முறையாக
மறு மறு வெளியீட்டடில் மாபெரும் சாதனை படைத்த
இணைந்த
75 வது நாள்
http://oi68.tinypic.com/34yrxhj.jpghttp://oi68.tinypic.com/2wn5pie.jpg
வாசு,
உனக்கு தெரியுமோ ,தெரியாதோ, எனக்கு இரு பெண்கள் பாடும் பாட்டுக்களில் அப்படி ஒரு மயக்கம். அதுவும் சுசிலா ஈஸ்வரி என்றால் கேட்கவே வேண்டாம்.(உனது மலர் கொடியிலே உச்சம்)
தமிழில் பல பாடல்கள். தோழியர் இல்லையென்றால் வளைகாப்பு, இல்லையென்றால் ஒரு நாயகனுக்காக இரு நாயகியர் என்று கணக்கு வழக்கில்ல்லாமல்.
நீலவானத்தில் இந்த பாடலை பலரிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு படிக்கும் காலத்தில் நண்பன் அருள் என்று ஒருவன். நானும் அவனும் இந்த பாடலில் தோய்வோம் .
நாம் இந்த பாடலை பற்றி பேசியிருக்கிறோமா என்று நினைவில்லை.
என் மனம் புரிந்தது போல ,அற்புத எழுத்தில் என்னை குளிர்வித்திருக்கிறாய்.
இன்னும் ஒரு வருட காலம் என் சாபம், விமரிசன, குட்டுக்கள் ,திட்டுக்கள்,ஆகியவற்றிலிருந்து உனக்கு விலக்கு அளிக்க படுகிறது.
உனக்கு மட்டுமல்ல ,என் மனம் கவர் பதிவுகளை யார் போட்டாலும் இந்த சலுகை உண்டு(ராகவேந்தர் .உட்பட) அது ஒரு மாதமா, மூன்று மாதமா,ஓரிரு வருடங்களா என்பது,எவ்வளவு கவர்கிறது என்பதை பொறுத்தது.
என் எழுத்துக்களை போல் ,வந்தால் ஆயுட்கால தள்ளுபடியும் பரிசீலிக்க படும்.
Courtesy: Dinamani
‘நட்சத்திர இயக்குநர்’ திருலோகசந்தர்!
சென்ற நூற்றாண்டு தமிழ் சினிமா படைப்பாளிகளில் ‘ஸ்டார் டைரக்டர்’ என்கிற அசாத்தியப் புகழுக்குரியவர் ஏ. சி. திருலோகசந்தர்.
தனது இயல்பான உயரம் மாதிரியே சாதனைகளின் உச்சம் தொட்ட ஏ. சி., ஜூன் 15 புதன் கிழமை அமரர் ஆனார்.
எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் நானும் ஒரு பெண், எம்.ஜி.ஆருடன் அன்பே வா, ஜெமினி கணேசனுடன் ராமு, சிவாஜியுடன் எண்ணற்ற வெற்றிச் சித்திரங்கள் என நேற்றைய கோடம்பாக்கத்தின் நான்கு தூண்களுடனும் கை கோர்த்து வாகை சூடிய ஒரே சாதனையாளர்!
கிருஷ்ணன் -பஞ்சு, பி.ஆர். பந்தலு, ஏ.பீம்சிங், கே.சங்கர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட சீனியர்கள் எவராலும் நெருங்க இயலாத இலக்கை முதலும் கடைசியுமாக அடைந்தவர் திருலோகசந்தர் மாத்திரமே!
ஏவி.எம். தயாரிப்பான வீரத்திருமகன், திருலோக் இயக்கிய முதல் படம். 1962ல் வெளியானது. குமாரி என்கிற அத்தனை அறியப்படாத எம்.ஜி.ஆர். படத்தில் டைரக்டர் பத்மனாபன் என்பவரது உதவியாளராக திருலோகசந்தர் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். விஜயபுரி வீரன், பார்த்தால் பசி தீரும் ஆகியன அவரது கதைகள்.
ஆற்காட்டைச் சேர்ந்த வளமான குடும்பப் பிண்ணனியில் பிறந்தவர் திருலோகசந்தர். சுற்றத்தார் அனைவரும் திருலோக் ஐ.ஏ.எஸ். படித்து கலெக்டர் வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் திருலோகசந்தர் பால பருவம் தொடங்கி ஒரு புத்தகப்புழுவாக, தீராத வாசிப்பாளனாக உருவானவர்.
கமர்ஷியல் டைரக்டர் என்கிற முத்திரை குத்தப்பட்டவர் என்றாலும், திருலோக் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்.
1963ல் நிற வேற்றுமையின் பாதகம், மற்றும் பெண் கல்வியை வலியுறுத்தி ஏவி.எம். நிறுவனத்துக்கு ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கம் கிடைக்கக் காரணமாக நின்ற நானும் ஒரு பெண்…
மாற்றுத் திறனாளிகளை அனுதாபத்துக்குரியவர்களாகவே எப்போதும் காட்டும் பயாஸ்கோப். அவ்வாறு இல்லாமல் ஊனமுற்ற இளம் பெண்ணின் குற்றம் குறைகளையும் முதன் முதலில் யதார்த்தமாக வெளிப்படுத்திய 1965ன் காக்கும் கரங்கள்...
1966ல் குஷியான காதலை இனிமையான பாடல்களோடு வண்ணத்தில் இதமாக வார்த்துத் தந்த அன்பே வா…
ஓர் ஊமைச் சிறுவனின் சோகத்தை உரத்துக் கூறி, மீண்டும் மற்றொரு வெள்ளிப்பதக்கத்தை தமிழ் சினிமாவுக்குத் தட்டி வந்த ராமு, முழு நீள திகில் மர்மப் படமாக வண்ணத்தில் அச்சுறுத்திய 1967ன் அதே கண்கள்…
ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப 1969ல் தேர்வான முதல் படம் தெய்வமகன், வளர்ப்பு மகளுக்காகவே வாழ்ந்து மடிந்த 1971ன் தன்னலமற்ற ரிக்ஷாக்கார பாபு, பிரிவினை பிரசாரங்கள் மீண்டும் தலை தூக்கிய 1973ல் தேசிய ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பாரத விலாஸ், தாம்பத்ய வாழ்வின் தெய்வீகத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாகப் பறை சாற்றிய 1974ன் தீர்க்க சுமங்கலி, மற்றும் மகரிஷியின் கற்பனையை வெள்ளி விழா கொண்டாட வைத்த 1976ன் பத்ரகாளி என திருலோகசந்தரது கடுமையான உழைப்பில் விளைந்த அத்தனை வெற்றிப்படங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.
மிகக் குறுகிய காலத்தில் தொடர்ந்து திருலோக்கைப் போல் வெள்ளிவிழா கொண்டாடிய வெற்றிச் சித்திரங்களையும், ஆண்டு தவறாமல் நூறு நாள் படங்களையும் வழங்கிய இயக்குநர் இன்று வரை வெகு சொற்பம்.
தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் என்.டி.ராமாராவ் நடித்த ராமு படம் மூலம் வெள்ளி விழா இயக்குநராக வலம் வந்தவர்.
அந்நாளில் எம்.ஏ. பட்டத்துடன் தமிழ்த்திரையில் பங்காற்றிய ஒரே இயக்குநர்.
போதிய பள்ளிக் கல்வி அனுபவங்களின்றி நாடகம் மூலம் பட உலகுக்கு வந்த எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், எம்.ஆர். ராதா, எஸ். வி. சுப்பையா போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் முதுகலைப் பட்டதாரி இளைஞர் ஒருவர், தன் கொடியை உயர்த்திப் பிடித்தது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்பது இன்றைய கலையுலகினர் வரை எல்லாருக்கும் புரிந்த ஒன்று!
கமல் ஒருவர் தவிர அவரது காலத்தின் அத்தனை ஹீரோக்களும் ரஜினி உள்பட திருலோக்கினால் இயக்கப்பட்டிருக்கிறார்கள். நடிகைகளில் பானுமதி, வாணிஸ்ரீ போன்ற சிலரை மாத்திரம் திருலோக் டைரக்ட் செய்யவில்லை என்று நினைக்கிறேன்.
கலைஞர்கள் மட்டுமல்லாது ஏவி. மெய்யப்பன் போன்ற ஸ்டுடியோ முதலாளிகளையும் தன் நியாயமான வாதத் திறமைகளால் மனமொத்துப் பணியாற்றச் செய்த பெருமை மிக்கவர் திருலோக்.
தமிழ், தெலுங்கு, இந்தி மூன்று மொழிகளிலும் திறமை மிக்க முன்னணி இயக்குநராக மிக நீண்ட காலம் ஜொலி ஜொலித்தவர் திருலோகசந்தர்.
பேசும் படம் சினிமா இதழ், தமிழ் சினிமா ரசிகர்கள் சங்கம் முதலிய அமைப்புகள் வருடம் தோறும் வெளியிட்ட மிகச் சிறந்த கலைஞர்களுக்கான தேர்வுப் பட்டியலில் கண்டிப்பாக திருலோகசந்தரின் இயக்கத்தில் நடித்தவர்கள் அதிகம் இடம் பெற்றிருப்பார்கள்.
எங்க வீட்டுப் பிள்ளை - எம்.ஜி.ஆர், திருவிளையாடல் - சிவாஜி இருவரில் ஒருவர் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்று, பேசும் படம் வாசகர்கள் நினைத்திருந்தனர்.
பேசும் படம் மாற்றி யோசித்தது. காக்கும் கரங்கள் படத்தில் மிக வித்தியாசமாக டாக்டர் வேடத்தில் அருமையாக நடித்தார் என்று எஸ்.எஸ். ராஜேந்திரனை 1965ன் சிறந்த கலைஞராக அறிவித்தது.
காக்கும் கரங்கள் ஏ.சி. திருலோகசந்தர் இயக்கத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டத் தரமான படம்.
சிவாஜிக்கு இணையாக தீர்க்க சுமங்கலி படத்தில் முத்துராமனுக்கும் நடிப்பில் புகழ் தேடித் தந்தவர். தனது இயக்கத்தில் சிவகுமாரையும் பத்ரகாளி படத்தில் சிறப்பாகப் பயன் படுத்தி வெள்ளி விழா நாயகனாக்கி மிகப் பெரிய பிரேக் தந்தவர்.
நானும் ஒரு பெண் - விஜயகுமாரி, ராமு- இரு மலர்கள்- தீர்க்க சுமங்கலி படங்களில் கே. ஆர். விஜயா, எங்கிருந்தோ வந்தாள்- அவன் தான் மனிதன் போன்ற சினிமாக்களில் ஜெயலலிதா, பாபு- அவள் ஆகியவற்றில் வெண்ணிற ஆடை நிர்மலா என்று பலருக்கும் தன் அசாத்திய உழைப்பால் சிறந்த நடிகை விருதும், மிகப் பெரிய திருப்புமுனையையும் தேடித் தந்தவர் திருலோகசந்தர்.
நாயக நாயகிகள் மட்டுமல்லாது நாகேஷ், வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, மனோரமா உள்ளிட்ட நகைச்சுவை கலைஞர்களையும் முதன் முதலில் அழ வைத்து குணச்சித்திர வேடங்களில் பரிமளிக்கச் செய்தவர். டாக்டர் சிவா படத்தில் மனோரமாவை வில்லியாகவும் நடிக்க வைத்திருக்கிறார்!
‘நானும் ஒரு பெண் படத்தில் நாகேஷின் சோக நடிப்பைப் பார்த்து விட்டு அவருக்காக சர்வர் சுந்தரம் கதையை எழுதினேன்’ என்று கே. பாலசந்தர் குறிப்பிட்டிருக்கிறார்.
*
1996ல் சுதேசமித்திரன் நாளிதழின் வார பங்களிப்பான இளையமித்திரன் பத்திரிகைக்காகவும், 2005ல் ஜூன் 21ல் எனது ‘சிவாஜி’- நடிகர் முதல் திலகம் வரை நூலுக்காகவும் இரு முறை திருலோகசந்தரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன்.
23 வாரங்களைக் கடந்து ஓடிய அன்பே வா படத்தின் 100வது நாள் விழா. மேடையில் பேசிய எம்.ஜி.ஆர்.
‘அன்பே வா வெற்றிக்கு முழு காரணம் ஏ.சி. திருலோகசந்தர். இது ஒரு டைரக்டரின் படம்’ என்றார் மனம் திறந்து.
மக்கள் திலகத்தை அதிகமாக இயக்கிய ப. நீலகண்டனையோ, எம்.ஏ. திருமுகத்தையோ,கே. சங்கரையோ கூட அவர் அப்படிப் பாராட்டி இருக்கிறாரா என்பது தெரியாது.
திருலோகசந்தரையும் தனது காம்பவுண்டுக்குள் வற்புறுத்தி அழைத்தார் எம்.ஜி.ஆர். ஆனால் திருலோக் பராசக்தி காலத்திலிருந்து சிவாஜியின் பரம ரசிகனாக வளர்ந்தவர். கடைசி வரையில் கவனம் சிதறாமல் சிவாஜி யூனிட்டிலேயே தங்கி விட்டார்.
நடிகர் திலகத்தின் மிக அதிகமான படங்களை இயக்கும் வாய்ப்பு திருலோகசந்தருக்குக் கிடைத்தது. அவற்றின் மொத்த எண்ணிக்கை இருபது. அதில் பெரும் பாலானவை வசூல் சித்திரங்கள். நடிப்பின் இமயமான சிவாஜியை இயக்குவது சிரமமான வேலையா என்று உங்களில் யாருக்காவது கேள்வி எழும்.
நிஜத்தில் வி.சி. கணேசன் எப்படிப்பட்டவர்? சிவாஜி காம்பினேஷனில் திருலோக் இயக்கிய படங்களை இன்றைய தலைமுறையினர் விரும்புவார்களா...? ஆகிய வினாக்களுக்கான விடைகள்...
மற்றும் நடிகர் திலகத்துடன் பணியாற்றும் போது நிகழ்ந்த சம்பவங்கள், சிவாஜிக்கும் திருலோக்குமான பூரிப்பு, இதர வருத்தம் கலந்த தோழமையின் அத்தியாயங்கள் உங்களுக்காக:
‘தமிழ்நாட்டின் பெருமைகளில் எனது நண்பர் சிவாஜியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாரதி, தாகூர் மாதிரி நடிப்புக்கலைக்கு சிவாஜி!
சிவாஜி, ஜெமினி, சாவித்திரி, சரோஜாதேவி மாதிரி மெகா ஸ்டார்ஸ் நடிக்க என்னோட கதை படமாகுது. பார்த்தால் பசி தீரும். முதல் நாள் பூஜையில நான் இல்லை.
ஒருநாள் கும்பலோட கும்பலா நின்னு அந்த சினிமா ஷூட்டிங்கைப் பார்த்தேன். அப்ப நான் ஏவி.எம்மோட வீரத்திருமகன் படத்தை இயக்கிக்கொண்டு இருந்தேன்.
சிவாஜிக்கு என்னை அறிமுகப்படுத்தற வாய்ப்பு ஆரம்பத்துல அமையல. இதுல யாரைக் குத்தம் சொல்றது? இப்ப யோசிச்சா என்னோட தவறாவும் இருக்கலாம்னு தோணுது.
‘திருலோக்கை வெச்சி சினிமா எடுக்கிறதா இருந்தா உங்களுக்கு ஃபைனான்ஸ் பண்றேன்னு வேலாயுதம் நாயர் (கே.ஆர். விஜயாவின் கணவர்) சொன்னதா கே.பாலாஜி எங்கிட்ட தெரிவிச்சார். கே.பாலாஜி என்னோட பால்ய நண்பர்.
ஏவி.எம். காம்பவுண்ட்ல அதுவரைக்கும் இருந்த நான், கே. பாலாஜிக்காக வெளியே வந்தேன்.
சிவாஜியை நான் இயக்கிய முதல் படம் கே. பாலாஜியின் தயாரிப்பான தங்கை. அது ஒரு பழைய இந்தி சினிமா. இதுல நான் நடிக்கணுமான்னு கேட்டார் சிவாஜி.
சிவாஜி கணேசனுக்கு அது செகண்ட் ரவுண்ட்னு கூட சொல்லலாம். குடும்பக்கதைகளைக் கடந்து ஏ.பி. நாகராஜனோட பக்தி சினிமாக்கள்ள பிஸியா இருந்த நேரம்.
தங்கை இந்திப் படத்தின் மூலக்கதையை மட்டும் வெச்சிக்கிட்டு புதுசா ஒரு திரைக்கதை எழுதினேன். சிவாஜி வீட்டுக்குக் கதை சொல்லப் போனோம். அன்னிக்கே நாங்க இணைஞ்சிட்டோம்.
நடிகர் திலகம் சிகரெட்டை ஒவ்வொண்ணா பத்த வெச்சிக்கிட்டே நான் கதை சொல்றதை கேட்டுக்கிட்டு இருந்தார்.
‘நீங்க சிகரெட் பிடிக்கறதைப் பார்க்கப் பார்க்க எனக்கும் அதனோட தாக்கம் ஜாஸ்தியாயிட்டு வருது. நானும் சிகரெட் பிடிக்கணும் போலிருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க. இந்த வீட்ல உங்க முன்னால சிகரெட் பிடிக்கத் தயக்கமா இருக்கு. நீங்க அனுமதிச்சா நான் கொஞ்சம் வெளியிலே நின்னு புகைச்சிட்டு வரேன்னு’ சொன்னேன்.
‘ஸாரி... எனக்குத் தெரியாது திருலோக். நீங்களும் சிகரெட் பிடிப்பீங்கண்ணு. தெரிஞ்சிருந்தா நானே கொடுத்திருப்பேனே... நீங்க இங்கேயே என் எதிர்லயே சிகரெட் பிடிக்கலாம்.’னார் சிவாஜி.
நடிகர் திலகம் எதிரில் யாரும் சிகரெட் பிடிக்காத காலம். நான் கதை சொன்ன விதம் பிடிச்சிப் போய் என்னையே நடிச்சிக் காட்டணும்னு வற்புறுத்தினார்.
‘உனக்குப் புதுசு புதுசா ஏதாவது தோணலாம். நான் அதைக் கெட்டியா பிடிச்சிக்கலாம் இல்லையா’ன்னார்.
ரசிகர்கள் திரையில் அதுவரையில் பார்த்திராத மாறுபட்ட தோற்றத்துல, சிவாஜி கூடுதல் இளமையோட தங்கை படத்துல ஒரு ஆக்ஷன் ஹீரோவா முதன் முதலா ஜொலிச்சார்.
தங்கை, நடிகர் திலகத்தோட படங்கள்ல ஒரு ட்ரெண்ட் செட்டரா அமைஞ்சது. தங்கையோட வெற்றிகரமான ஓட்டத்தையும் வசூலையும் பார்த்துட்டு, தங்கச்சுரங்கம் சினிமால அவரை ஜேம்ஸ்பாண்ட் ஆகவும் நடிக்க வெச்சார் டைரக்டர் ராமண்ணா.
என் தம்பி, திருடன்னு தொடர்ந்து சக்ஸஸ் கொடுத்தோம். சிவாஜியோட சினிமாவுக்கு ’திருடன்’ங்கிற ற டைட்டிலான்னு எதிர்ப்பு கிளம்புச்சு.
கதைக்குப் பொருத்தமா இருந்ததால் அந்த பேர் வெச்சேன். நான் பண்றது கரெக்ட்டுன்னா பயம் வராது எனக்கு. எங்கிருந்தோ வந்தாள் படத்துக்குக் கூட ஆரம்பத்துல பைத்தியக்காரன்ற டைட்டிலை வெச்சோம். சிவாஜி ஜாஸ்தி செண்டிமெண்ட் பார்க்கமாட்டார்.
நல்ல படமா அமைஞ்சும் எங்க மாமா மகத்தான வெற்றியை அடையல. காரணம் சிவாஜிங்கிற இமயத்துக்குரிய அழுத்தம், கதையிலயும் கேரக்டர்லயும் இன்னும் தேவைன்னு ரசிகர்கள் நினைச்சாங்க.
சிவாஜியை நான் சார்னும் அண்ணான்னும் கூப்பிடுவேன். அவர் என்னை திருலோக்னுவார். எங்களுக்குள்ள பர்ஸ்ட் கிளாஸ் இண்டிமஸி இருந்தது.
தெய்வமகன்ல சிவாஜி எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டார். ரொம்பவும் சிரமமான வேஷம். அதோடு கூட மூணு ரோல் வேறே. ஒவ்வொன்னிலும் ஒவ்வொரு மாதிரி மேக் அப்.
இருவரும் ஒரு சேலஞ்சா அதை எடுத்துக்கிட்டோம். தன்னோட சிறப்பான வசனங்களால ஓவர் ஸ்ட்ரெயின் கொடுப்பார் டயலாக் ரைட்டர் ஆரூர் தாஸ். நானும் சிவாஜியை கசக்கிப் பிழிஞ்சி வேலை வாங்கினேன்னும் சொல்லலாம்.
சிவாஜியோட ஒரு பக்க கன்னத்துல மட்டும் கோரமான மேக் அப் போடச் சொன்னேன். ரெண்டு சைடுலயும் அப்படி மேக் அப் பண்ணினா, அண்ணாவோட மறு பக்கக் கன்னம் எமோஷனல் சீன்ஸ்ல அற்புதமா துடி துடிக்கிறதைக் காட்ட முடியாதேன்ற செல்ஃபிஷ்னெஸ்... சிவாஜி ரசிகனா என்னோட பேராசைன்னும் எடுத்துக்கலாம்.
இப்ப மாதிரி டெக்னிகல் வேல்யூஸ் எதுவுமே இல்லாத காலம். முகத்தோட பயங்கரம் வெளிப்பட, செலுலாயிடு, முட்டை ரெண்டையும் உருக்கி அந்த பேஸ்டை கன்னத்துல பூசிக்கிட்டார் சிவாஜி.
சீன் எடுத்து முடிஞ்சதும் அந்த எக் பேஸ்டை சுடு தண்ணில கழுவி, கொஞ்ச நேரம் ஆன பின்னாலதான் சின்ன சிவாஜி ரெடியாக முடியும்.
இல்லன்னா முகத்துல ஏற்கனவே கவ்விக்கிட்டிருந்த முட்டைப்பத்தோட நாத்தமும் போகாது. ஒரு சைடு முகம் சுருக்கமாவே காமிரால தெரியும்.
சிவாஜிக்கு தெய்வமகன் படம் மட்டும் தானா? ஒரே நாள்ள மூணு நாலு படம் கூட ஆக்ட் பண்ணுவார். எல்லாத்தையும் ஞாபகம் வெச்சிக்கிட்டு தெய்வமகன்ல கூடுதலா அக்கறை காட்டி நடிச்சார்.
படத்துல ரொம்ப முக்கியமானது மூணு சிவாஜியும் ஒரே நேரத்துல ஒண்ணா ஸ்கிரீன்ல தெரியற சீன்.
அந்தக் கட்டத்துக்காக கண்ணனாக வரும் பாதிக்கப்பட்ட சிவாஜி, தன் அப்பா சிவாஜியிடம் நியாயம் கேட்கிற மாதிரி ஏகப்பட்ட டயலாக்ஸ் எழுதினார் ஆரூர்தாஸ்.
அத்தனையும் அமிர்தம்னு சொல்லலாம்.
‘குட்டி அழகா இல்லேங்கிறதால மான் அதை விட்டுட்டுப் போனதாகவோ, மலர் அழகா இல்லேங்குறதுக்காக கொடி அதை உதிர்த்து விட்டதாகவோ நான் கதைகள்ள கூட படிச்சதில்லயே’ன்னு
ரெண்டு சிவாஜியும் மாறி மாறி ஏக் தம்ல நிறைய பேச வேண்டியிருந்துச்சு.
அண்ணா ரொம்பவே டென்ஷனாயிட்டார்.
‘ஏன் என்னை ஸ்ட்ரைன் பண்ண வைக்கிறீங்கன்னு...’ கோபமா கேட்டார்.
காட்சியோட முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னதும் ஒரே டேக்ல அவ்வளவு வசனத்தையும் பேசி வழக்கம் போல் கைத்தட்டல் வாங்கினார்.
முதன் முதலா சிவாஜிக்கு நிகரா மேஜருக்கும் ரொம்ப இம்பார்ட்டன்ஸ் கொடுத்தேன். நான் அடிச்சிக் காமிக்கிறேன் பாருன்னார் சிவாஜி. ரெண்டு பேரும் மீட் பண்ற காட்சிகள்ல பலத்த நடிப்புப் போட்டி இருந்துச்சு.
தெய்வமகன் வங்காள மூலக்கதையை அடிப்படையாக் கொண்ட படம். தமிழ் தவிர மத்த இந்தி, கன்னட மொழிகள்ல எடுத்தபோது தெய்வமகன் தோல்வி அடைஞ்சது.
தமிழில் மட்டும் பிரமாதமான வெற்றி அடைய ஒரே காரணம் சிவாஜி!
சிவாஜியும் சில சமயம் சோதிப்பார். சீண்டிப் பார்த்தா எப்படி இருக்காங்கன்னு பார்க்கறேன்னுவார். வெளியில கெட்டவன் வேஷம் போடுவார்.ஆரம்பத்துல பழகும் போது கடுமை இருக்கும். அது ஒரு போர்வை.
சிவாஜி ஒரு பலாப்பழம். தொடக்கத்துல முள் இறுகின தோல். அடுத்து அதுக்குள்ள வழுக்குறத் தன்மையுள்ள பலாச்சுளை இருக்கும். சிவாஜியும் அதே மாதிரி மனுஷர். பழகப் பழகத்தான் இனிப்பாரு. படாத பாடு பட்டு சினிமால முன்னுக்கு வந்ததால எப்பவும் எச்சரிக்கையா இருப்பார்.
எங்கிருந்தோ வந்தாள் படத்துல ஆரம்பத்துல சிவாஜியோட பத்மினி நடிச்சாங்க. அவங்க அமெரிக்கா போக வேண்டி இருந்ததால் தொடர்ந்து நடிக்க முடியல.
இவங்களதான் தனக்கு ஹீரோயினா நடிக்க வைக்கணும்னு சிவாஜி சொல்லவே மாட்டார். என் மேலே ரொம்ப நம்பிக்கை உண்டு அவருக்கு.
பத்மினி இடத்துல அப்பறம் யார் கதாநாயகின்னு குழப்பம் வந்தது. அப்ப டான்ஸ்ல புகழ் பெற்ற ஒரே இளம் ஹீரோயின் ஜெயலலிதா. ரொம்பவும் பிசியா இருந்த ஜெயலலிதாவோட கால்ஷீட்டை கஷ்டப்பட்டு கே. பாலாஜி வாங்கினார்.
க்ளைமாக்ஸ் முழுக்க முழுக்க ஜெயலலிதாவோட பெர்பாமன்ஸை நம்பி திரைக்கதை எழுதினேன். சிவாஜியும் அதை என்கரேஜ் பண்ணார். ரொம்ப அற்புதமா நடிச்சாங்க ஜெயலலிதா. எப்பவும் எனக்குப் பேர் சொல்ற படமா எங்கிருந்தோ வந்தாள் அமைஞ்சது.
சிவாஜி காம்பினேஷன்ல நான் வொர்க் பண்ணிய படங்கள்ள எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் பாபு. அதில் சிவாஜி நடிப்பும் பாத்திரப்படைப்பும் எப்பவும் பிடிக்கும்.
பாபு சப்ஜெக்ட் முடிவானதுமே என்னோட சினி பாரத் பேனர்ல முதல் படமா அதை எடுக்கத் தீர்மானிச்சேன். கதையைக் கேட்டவங்க அழுகைப் படம், ஓடுமான்னு பயமுறுத்தினாங்க.
பாபுவா சிவாஜியைத் தவிர வேற யாரையும் நான் சிந்திக்கவே இல்ல. பாபுவா நடிக்கப் பலர் கிடைக்கலாம். பாபுவா வாழ்ந்து காட்ட நடிகர் திலகம் ஒருத்தரால் மட்டுமே முடியும்னு மனசார நம்பினேன். என் கணிப்பு சரின்னு ஆனந்த விகடன் விமரிசனம் சொல்லுச்சு.
முதல் பாரால ‘நடிப்பினால் ஒரு காவியமே படைத்திருக்கிறார்னு சொல்றது கூட சிவாஜியோட அற்புதமான நடிப்புக்குப் போதுமான பாராட்டா இருக்க முடியாது. அப்படியோர் அருமையான நடிப்பு!’ ன்னு முதல் பாராலயே ஆச்சரியக்குறி போட்டுச்சு. கடைசி வரியில, பாபுல சிவாஜியின் நடிப்பு தங்க விளக்குன்னு குறிப்பிட்டுச்சு.
நான் அழுது கொண்டே சிரித்தேன். சிவாஜியின் நடிப்பு என்னை அழ வைத்தது. படத்தின் வெற்றி என்னைச் சிரிக்க வைத்தது.
மிகப் பெரிய மாஸ் ஹீரோவான சிவாஜிக்கு அதுல ஜோடியே கிடையாது. டான்ஸ், டூயட் எதுவும் இல்ல. நாயகிக்குப் பதிலா சவுகார் ஜானகிக்கு முக்கிய வேஷம் கொடுத்தேன்.
என் படங்கள்ள சவுகார் அதிகம் நடிச்சதில்ல. பாபுல மட்டும்தான் ஆக்ட் பண்ணாங்கன்னு நினைக்கிறேன்.
‘வழக்கமான விதவை ரோல்னு நான் உங்களை தப்பா எடை போட்டுட்டேன். எப்பேர்ப்பட்ட கேரக்டர் எனக்குக் கொடுத்திருக்கீங்க’ன்னு பாபு படம் பார்த்துட்டு சவுகார் என்னைப் பாராட்டி பேசினாங்க.
ஜெமினி எஸ்.எஸ். வாசன் சார் கிட்டே ஒரு கதையை அன்பே வா சமயத்துல சொன்னேன்.
‘இந்த நேரத்துக்கு மிக மிக அவசியமான கதை. பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறீர்கள். இதைப் படமாக்க நான் உதவுகிறேன். வழக்கம் போல் மெகா ஸ்டார்களைப் போட்டு விடாதீர்கள். சிறிய கலைஞர்களைப் போட்டு எடுங்கள்’ என்றார்.
சில ஆண்டுகளில் அவர் அமரர் ஆகி விட்டார். நான் வாசன் அவர்களிடம் சொன்ன சப்ஜெக்ட், பாரத விலாஸ்.
பாபு தந்த உற்சாகத்தில் உடனே அதைப் படமாக்கினேன். அருமையான கேரக்டர்களில் பெரிய நடிகர்களையும், வாரிசுகளாக இளம் நடிகர்கள் சிவகுமார், சசிகுமார், ஜெயசித்ரா, ஜெய்சுதா ஆகியோரைப் பயன்படுத்திக்கொண்டேன்.
தேசிய ஒருமைப்பாட்டை முதன் முதலில் கலரில் சொல்லும் படமாக பாரத விலாஸ் அமைந்தது. அதைப் பாமர மக்களுக்கும் உணர்த்தற மாதிரி சஞ்சீவ் குமார், ஏ. நாகேஸ்வர ராவ், மது என மற்ற மொழி ஸ்டார்ஸையும் கெளரவ வேடத்தில் நடிக்கவைத்தேன்.
வாணிஸ்ரீயும் அப்ப சிவாஜிக்கு ஈடு கொடுத்து பிரமாதமா நடிச்சுட்டு வந்தாங்க. அவங்க ரெண்டு பேரையும் வெச்சு பம்பாய் பாபுன்னு ஒரு படம் ஆரம்பிச்சோம். நின்னு போச்சு. வாணிஸ்ரீயை டைரக்ட் பண்ற வாய்ப்பு இல்லாம போயிடுச்சு.
சிவாஜி-ஜெயலலிதா காம்பினேஷன்ல நான் வேலை செஞ்ச கடைசி படம் அவன் தான் மனிதன். சிவாஜியோட 175வது சினிமாவா வந்தது. இருபது வாரம் போச்சு. சிவாஜி அண்ணா திருப்தியா நடிச்ச படம். அதுல அருமையான ரோல் அவருக்கு.
‘அந்த ஏழு ஜென்மங்கள்’னு சிவாஜிக்காக ஒரு கதை தயார் பண்ணோம். ஒவ்வொரு ஜென்மத்துலயும் சிவாஜி என்னவா இருந்தார்னு டீரிட்மென்ட் எழுதினோம். சிவாஜி ரொம்ப பிசியா இருந்ததால படமாக்க முடியல.
நான் சிவாஜி அண்ணாவோட அதிகப் படங்களை இயக்கி இருக்கேன்கிற பெருமை கிடைச்சிருக்கு. நீங்க நம்ப முடியாத ஒரு விஷயத்தை இப்பச் சொல்றேன். அவை எதுக்குமே அவர் எனக்காக சிபாரிசு பண்ணதே இல்ல. இன்னமும் நம்ப முடியலியா?
சிவாஜி புரொடக்ஷன்ஸ் எத்தனையோ படங்களை இதுவரைக்கும் சக்ஸஸ்புஃல்லா எடுத்துருக்காங்க. அவங்க கம்பெனி தயாரிச்ச எந்த சினிமாவையும் நான் இயக்கியதில்லை. போதுமா!
எனக்கும் சிவாஜிக்குமான நட்பு எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது.
சிவாஜின்னா ஓவர் ஆக்டிங். இன்னிக்கு உள்ள ஆடியன்ஸ் அண்ணனை விரும்ப மாட்டாங்கன்னு தப்பான அபிப்ராயம் இருக்கு.
அவரும் நானும் கொடுத்த படங்கள் இப்பவும் பார்க்கறதுக்குப் புதுசாவும் சிறப்பாவும் இருக்கு. அப்படியில்லன்னா பிரைவேட் சேனல்கள்ல தெய்வ மகனையே ரிபீட் பண்ணுவாங்களா...?
சினிமா என்பது அசாதாரணமான ஒண்ணு. ரெண்டரை மணி நேரம் ஓடற படத்துல நம்மை பாதிக்கிற விஷயம் ஏதாச்சும் இருந்தா மட்டுமே ஜனங்க மூவி பார்ப்பாங்க. படமும் நூறு நாள் ஓடும்.
பைலட் பிரேம்நாத், இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு. தமிழ்நாட்டை விடவும் சிலோன்ல வருஷக்கணக்குல தொடர்ந்து ஓடினதா ரசிகர்களோட புள்ளி விவரம் சொல்லுது.
‘மெழுகு பொம்மைகள்’ என்கிற பேர்ல சச்சுவும்- ஏ.ஆர். எஸ்ஸூம் நடிச்சு ஓஹோன்னு நடந்த டிராமாவோட மூலக் கற்பனை பைலட் பிரேம்நாத்.
அதுல சிவாஜியும் ஸ்ரீதேவியும் அப்பா - மகளா நடிச்சாங்க. தன் குழந்தைகள்ல ஏதோ ஒண்ணு மட்டும் தனக்குப் பொறந்தது இல்லன்னு சிவாஜிக்குத் தெரிய வரும்போது ஏற்படற விளைவுதான் திரைக்கதை.
‘ஊட்டமான கதையை டிராமாட்டிக்காகச் செய்வதில் திருலோகசந்தர் எக்ஸ்பர்ட். சுவையான முடிவு. எப்போதோ ஒரு முறை மட்டுமே சந்திக்க முடிகிற சாதனை!’
அப்படின்னு குமுதம் பைலட் பிரேம்நாத் விமரிசனத்துல என்னைப் பாராட்டி எழுதுச்சு. முதன் முதலா 1978 தீபாவளிக்கு ஒரு டஜனுக்கும் மேலான படங்கள் ரிலீஸ் ஆச்சு. பலத்த போட்டிக்கு நடுவுல நானும் சிவாஜியும் எப்பவும் போல ஜெயிச்சுக் காட்டினோம்.
இரு மலர்கள், எங்கிருந்தோ வந்தாள், பாபு, விஸ்வ ரூபம்னு நானும் சிவாஜியும் சேர்ந்து பண்ணது தீபாவளி ரேசுல நூறு நாள் ஓடியிருக்கு.
சிவாஜியை நான் கடைசியா டைரக்ட் பண்ண படம், அன்புள்ள அப்பா. 1987 மே-ல வந்தது. ஒரு தந்தைக்கும் மகளுக்குமான இயல்பான பாசத்தை அதுல காட்டினோம். நதியா அப்ப ரொம்ப பாப்புலர். அவங்க பேர்ல அன்னிக்கு விக்காத பொருளே கிடையாது.சிவாஜி மகளா நதியா நல்லா நடிச்சுது.
கறந்த பால் மாதிரி கற்பனையே கலக்காம எனக்கும் என்னோட ஒரே பொண்ணுக்குமான அன்றாட அன்னியோன்யமே அன்புள்ள அப்பா. தினமும் என் வீட்ல நடந்த கதை. ஏவி.எம்.தயாரிச்சும் ஓஹோன்னு போகல. யதார்த்தத்துல நடக்கறது ஸ்கிரீன்ல ஓடாது. இயல்பை மீறிய ஒரு விஷயத்தைத்தான் ஜனங்க எதிர்பார்க்கிறாங்க.
திருலோக் படங்கள்ள பெரும்பாலானவை ரீமேக்குன்னு சொல்றாங்க. ரீமேக் தப்புன்னு யார் சொன்னது? இன்னிக்கு வரை தமிழகக் காப்பியங்கள், இலக்கியங்கள்ள இரவல் இல்லையா?
இங்கிலீஷ் லிட்டரேச்சரோட பாதிப்பு நம்ம ஊரு ரைட்டர்ஸ் கிட்டே அடியோட கிடையாதா?
என்னைச் சிறிது கூட உறுத்தாத எந்த ரீமேக் சப்ஜெக்ட்களையும் நான் டைரக்ட் பண்ண ஒத்துக்க மாட்டேன். நான் அக்செப்ட் பண்ண ஃபிலிம்களை விடவும் வேணாம்னு தள்ளினது ஜாஸ்தி.’ - ஏ.சி. திருலோகசந்தர்.
திருலோகசந்தர் காலத்தில் சினிமா செட்டுக்குக் கொண்டு வந்து நூல்களைத் தொடர்ந்து வாசித்து, திருலோக்குடன் படித்த புத்தகங்கள் குறித்து விவாதித்து, ஒத்த ரசனையோடு வலம் வந்த நட்சத்திரத்தின் பெயர் ஜெயலலிதா!
டைரக்டர்களில் திருலோக், நடிகைகளில் ஜெயலலிதா போல் உலகின் எண்ணற்றத் தலை சிறந்த நூல்களை வாசித்த சினிமாகாரர்கள் அப்போது எவரும் கிடையாது.
1969 -தெய்வமகன், 1970 -எங்க மாமா, எங்கிருந்தோ வந்தாள் 1972 - தர்மம் எங்கே? 1975- அவன் தான் மனிதன் என சிவாஜி- திருலோக் கூட்டணியில் அதிக பட்சமாக ஐந்து படங்களில் பங்கேற்ற ஒரே ஹீரோயின் ஜெயலலிதா!
விஸ்வநாதன் -ராமமூர்த்தி, கே. வி. மகாதேவன், ஆர். சுதர்சனம் வேதா, சங்கர் கணேஷ், இளையராஜா எனத் தன்னுடன் பணியாற்றிய ஒவ்வொரு இசை அமைப்பாளரிடமிருந்தும் இனிய சூப்பர் ஹிட் பாடல்களைக் கேட்டு வாங்கும் வல்லமை திருலோகசந்தருக்கு உரியது.
கவிஞர் வாலியின் பேனா முனையைத் தொடர்ந்து கூர்மைப்படுத்தி வந்தவர் ஏ. சி. திருலோகசந்தர். எம்.ஜி.ஆரால் அவ்வப்போது கை விடப்பட்டு, வாலி சரிகிற போதெல்லாம் திரைப்பாட்டில் அவரைச் சரித்திரம் படைக்க வைத்தவர் திருலோகசந்தர்.
திருலோக் - வாலி வெற்றிக் கூட்டணியில் ஞாயிறு என்பது கண்ணாக, இதோ எந்தன் தெய்வம், மல்லிகை என் மன்னன் மயங்கும், மலரே குறிஞ்சி மலரே, கண்ணன் என் கைக்குழந்தை தவிர அன்பே வா, இரு மலர்கள், உள்ளிட்ட ஏராளமான படங்களில் வாலியின் முழுமையான பங்களிப்பு அவர்களது நேசத்தைச் சொல்லும்.
கலையுலக மார்க்கண்டேயர் என அழைக்கப்படுகிற சிவகுமார், காக்கும் கரங்கள் படம் மூலம் ஏ.சி. திருலோகசந்தரின் இயக்கத்தில் உருவானவர். திருடன் சினிமா மூலம் சசிகுமாரை அறிமுகப்படுத்தினார் திருலோக். அவள் வெற்றிச்சித்திரத்தில் அவரை ஹீரோவாகவும் ஆக்கினார்.
நானும் ஒரு பெண்- ஏவி.எம். ராஜன் நாயகனாக வலம் வரவும், அவள் படம் ஸ்ரீகாந்த்தை வில்லன் நடிகராக வெற்றி பெறச் செய்யவும் திருலோக்கின் உழைப்பு உதவியது.
டாக்டர் சிவா படத்தில் முதன் முதலாக திருலோக், தங்கை வேடத்தில் தோன்றச் செய்த ஜெயமாலினி பின்னாளில் கவர்ச்சியில் ஜொலித்து ‘ஜெகன் மோகினி’ ஆனார்.
தமிழ் சினிமாவில் புகழ் பெற்றுள்ள ஒரே தமிழ்ப் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம். திருலோக்கின் வெற்றிப் படைப்பான ‘தீர்க்க சுமங்கலி’-யில் மல்லிகையாக மணம் பரப்பி உதயமானவர்.
http://i1065.photobucket.com/albums/...psnhgielh5.jpg
வேட்டி கட்டுவதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக வேட்டி கட்டுவார்கள்.
வேட்டி கட்டுதலில் ஒரு கம்பீரம் மிளிரும்.எல்லோருடைய வேட்டி கட்டலிலும் கம்பீரத்தை காண முடியாது.உதாரணத்திற்கு கிராமங்களில் வயல்களில் தோப்புகளில் வேலை செய்வோரைப் பார்த்திருக்கலாம்.அழுக்கா இருக்கும்வேட்டி கட்டலில் ஒரு பக்கம் தூக்கி கட்டி மறுபக்கம் இறக்கி கட்டி முக்கா காலுக்கு என்று விதவிதமாக வேட்டி கட்டியிருப்போரை பார்த்திருக்கலாம்.ஆனாலும் அவர்களின் வேட்டி கட்டலில் கம்பீரம் இருக்கும்.
சில வசதி படைத்த மனிதர்கள் தங்களுடைய வசதியை தங்களுடைய வேட்டிகளில் காண்பிப்பார்கள்.ஆனாலும் அதில் மிடுக்கு இருக்காது.
அரசியல் கறை வேட்டி கட்டியிருப்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வரும். அரசியல் கட்சிகள் மீது அபிமானம் இருக்க வேண்டியதுதான் அதறாக அவர்களின் கட்சிக்கொடியை வேஷ்டியில் காட்டவேண்டும் என்கிற கட்டாயமில்லை.
வேட்டி கட்டுவது சிரமமானாலும் .. அது ஒரு தனி சுகம்தான் ... எப்போது உடுத்தினாலும் .. ஒரு பயத்தோடு தான் இருக்க வேண்டும் ..
வேட்டி கட்டுவது ஒரு புறமிருக்கட்டும்.அதை தூக்கி நடந்து செல்லும் போதுதான் சில அசௌகரியங்கள் தெரியும்.அது கட்டி நடந்து செல்பவர்களை விட அதை பார்ப்பவர்களுக்குத்தான் அதிகம் புரியும்.
வேட்டி ஒரு பக்கம் ஒதுங்கும்.அடிக்கடி தூக்கி தூக்கி கட்ட வேண்டும்.இடுப்பை சரி செய்துகொண்டே இருக்க வேண்டும்.
ஆனாலும்
இதை யெல்லாம் மீறி இங்கு
பெரியதேவர் வேட்டியை தூக்கக்கொண்டும்.,சரி செய்து கொண்டும் நடந்து செல்லும் அழகு இருக்கின்றதே. அதை என்னென்று சொல்வது.
1992 ஆம் வருடம் தீபாவளி அன்று காலை 7மணிக்கு சென்னை தொலைக்காட்சியில் பார்த்த நிமிடத்திலிருந்து இந்த நிமிடம் வரை இந்த காட்சி ஒவ்வொருமுறையும் ரசிப்பை அதிகமாக்கிக்கொண்டேதானே இருக்கின்றது.
வேட்டியை இறக்கியபடிநடந்து வருபவர்
தரையில் உட் கார்ந்துசாப்பிடுபவர்களின் இலைகளை உரசி விடக்கூடாது என்பதிலும் ,அது ஒரு அனிச்சைச் செயல்
போலவும் சர்வ சாதாரணமாகத்தான் அந்த வேட்டியை தூக்கி கட்டியபடி நடந்துவருவார்.அது தான் எவ்வளவு அழகு.கம்பீரம்.
Written by Mr. Sudhangan,
http://www.dinamalarnellai.com/site/...ews_Nellai.jpg
சிவாஜி 20 மணி நேரம் வேலை செய்துவிட்டு 4 மணி நேரம் மட்டுமே ஓய்வு எடுக்கும் வகையில் அவ்வளவு கடுமையாக உழைப்பார்!
தொழிலிலேயே ஊறிப்போய் கிடந்தார் என்று சொல்லலாம்! அந்த காலத்தில் தொழில் கிடைப்பதே கஷ்டம்! கிடைத்தாலும் ஆசைகளுக்கு ஆட்பட்டு அழிந்தவர்களே அதிகம்!
அத்தகைய காலத்தில் அகலக் கால் விரிக்காமல் சீராக நடந்து வெற்றி பெற்றவர் சிவாஜி! சகல பாக்கியங்களும் பெற்ற ஒரே நடிகர் அவராகத்தான் இருக்க முடியும்! பற்பல ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கும் ஒரே ஆள் உலக சரித்திரத்திலேயே சிவாஜியாகத்தான் இருக்க முடியும்! இப்படிச் சொன்னார் வி.கே. ராமசாமி! இவருடைய நடிப்புத்திறமைக்கே ஒரு தொடர் எழுதலாம்!
அதைவிட எம்.ஜி.ஆர். நடித்த சுமார் 140 படங்களில் அதிக படங்களில் நடித்தவர் சரோஜாதேவி! அதற்கடுத்து, ஜெயலலிதா! ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சியவர் எம்.என். நம்பியார்! சுமார் 80 படங்களில் எம்.ஜி.ஆர். படத்தில் இவர்தான் வில்லன்! ஆனால் வாழ்க்கையில் ராமன்! ராமாயண ராமன்! ஏகபத்தினி விரதன்! தூய்மையான நடத்தைக்கு எடுத்துக்காட்டு!
இவர் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்?
நடிப்பதற்காகவே பிறந்தவர் நடிகர் திலகம்! வசனங்களைப் பேசாமல் நடிப்பின் மூலமே தாம் நினைப்பதை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் அவர் ஒருவர்தான்! நமது முன்னோராலும், மூதாதையர்களாலும், அறிஞர்களாலும் நூற்றுக்கணக்கான வருடங்களாக கூறப்பட்ட கருத்துக்களைத்தான் கவிஞர் கண்ணதாசன் சொன்னார்!
அதாவது கவிஞர் சொன்னது எளிமையாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் இருந்ததால் நம்மால் கண்ணதாசனை மறக்க முடியவில்லை! நமது நடிகர் திலகத்தின் அணுகுமுறையும் அதே போலத்தான்! ஓர் அசைவால், பார்வையால் எவ்வளவோ நமக்கு உணர்த்தக்கூடியவர்! நடிப்புக் களஞ்சியமான அவர் நடிப்பை இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொல்வது வியப்பாக இல்லை!
நல்லது எதுவானாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர் அவர்! நடிப்பிற்கு எல்லையில்லை என்பது அவர் கருத்து! அவருடன் நான் நடித்த வேடங்களை நான் நினைவுகூர்ந்து பார்க்கிறேன்!
பாகப்பிரிவினையில் தம்பியாக, பாதுகாப்புவில் அண்ணனாக, பாசமலரிலும் மக்களைப் பெற்ற மகராசியிலும் மைத்துனனாக, உத்தம புத்திரனில் மாமாவாக, சில படங்களில் தோழனாக, பல படங்களில் எப்போதும் போல் எதிரியாக, அவருடன் நடித்த நாட்கள், நினைத்தாலே இனிக்கும் நல்ல நாட்கள். முப்பத்தி நான்கு ஆண்டுகள் தொடர்ந்தாற்போல், படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்திற்கு வரும் ஒரே நடிகர் நடிகர் திலகம்தான்! அவரது இந்தப் பழக்கத்தை மற்றவர்கள் பின்பற்றினால் தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்கள் வீணாகாது!
இப்படி பொம்மை சினிமா இதழுக்கு 1986ம் வருடம் நம்பியார் பேட்டியளித்தார்! அதே சமயம் சிவாஜிக்கு மூத்தவரான நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமம் என்ன சொன்னார்? அவர் சொல்வதில் முக்கியத்துவம் உண்டு! அவருடைய நாடகக் குழுவில் நடித்தவர் சிவாஜி! அவருடைய நாடகக் குழுவிற்கு பெயர் சேவா ஸ்டேஜ்!
சிவாஜி கணேசன் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை கம்பெனியில் இருக்கும் போதிலிருந்து எனக்கு பரிச்சயமானவர்! மனோகரா படத்தில் வீர முழக்கம் செய்த சிவாஜி மேடையில் செய்த வேடம் என்ன தெரியுமா? மனோகரனின் தாயார் பத்மாவதி வேடம்!
எத்தனை சிறப்பான நடிப்பு!
எத்தனை படங்களில் நடித்தாலும் நாடகத்தில் நடிப்பதில்தான் அவருக்கு விருப்பம் அதிகம்!
எங்களுடைய சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் கண்கள், வானவில், இருளும் ஒளியும், பம்பாய் மெயில் போன்ற நாடகங்களில் நடித்தார்! 1956க்குப் பிறகு அவருக்கு படங்கள் அதிகமாகிவிட்டன! அதனால் எங்கள் சேவா ஸ்டேஜ் நாடகத்தில் அவரால் நடிக்க முடியவில்லை! அடுத்து அவரே சிவாஜி நாடக மன்றத்தினைத் துவக்கினார்! அவரது நாடகங்களைப் பார்க்க சொல்லியனுப்புவார்! நான் போய் பார்ப்பேன்!
கட்டபொம்மன் நாடகத்தை ஏராளமான பொருட்செலவில் மேடையேற்றிய பெருமை அவருக்கே உண்டு! நாடகத்தன்று 2 மணி வரையில் படப்பிடிப்பில் இருப்பார்! பிறகு நாடகத்திற்கு தயாராகிவிடுவார். அவருடன் படித்தால் மட்டும் போதுமா? நீலவானம், பொன்னூஞ்சல் இன்னும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளேன்.
தன்னுடன் நடிப்பவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்! இப்படிச் சொன்னார் எஸ்.வி. சகஸ்ரநாமம்! டி.கே. சண்முகம் பல திரைப்படக்காரர்களின் காட்பாதர்! கமல்ஹாசன் சின்ன வயதிலே இவர் நாடக அரங்கில்தான் பயின்றார்!
கே.பி. சுந்தராம்பாளுக்கு முன்பாக ஓர் ஆணாக இருந்தும் அவ்வை வேடம் போட்டவர் டி.கே. சண்முகம்! அதனாலேயே அவர் அவ்வை டி.கே. சண்முகம் என்றழைக்கப்பட்டார்! அவரால் பயிற்சி கொடுத்து வளர்க்கப்பட்ட கமல்ஹாசன் அதனாலேயே தன் ஒரு படத்திற்கு அவ்வை சண்முகி என்று தலைப்பு வைத்தார்! அப்படிப்பட்ட டி.கே. சண்முகம் சிவாஜி பற்றி என்ன சொல்கிறார்? நடிகர் திலகம் சிவாஜி பாரத தவப்புதல்வர்களில் ஒருவர்! அவர் தமிழராக பிறந்தது தமிழகத்தின் நற்பேறு! பாரதத்தின் கலைத்தூதராக அமெரிக்கா அவரை தேர்ந்தெடுத்தது பாராட்டுதலுக்குரியது! இப்படி சொன்னார் டி.கே. சண்முகம்!
நெற்றியின் ஏற்ற இறக்கத்திலே நடிப்பு! புருவத்தின் தெறிப்பிலே நடிப்பு! கண்களின் சுழற்சியிலே நடிப்பு! இமைகளின் படபடப்பிலே நடிப்பு! உதடுகளின் துடிப்பிலே நடிப்பு! கன்னத்தின் அசைவிலே நடிப்பு! புயங்களின் புடைப்பிலே நடிப்பு! தோளின் விம்மலிலே நடிப்பு! கைகளை உயர்த்துவதிலே நடிப்பு! சாதாரணமாக நடப்பதில் கூட நடிப்பு! என்று அங்கத்தின் ஒவ்வொரு அசைவிலும் நடிப்பைக் காட்டி அசத்தியவர் நம் நடிகர் திலகம்! சுருங்கச் சொல்ல வேண்டுமானால் நடிப்பின் கருவூலமே சிவாஜிதான்! அமெரிக்கா கண்ட இந்தியாவின் கிளார்க் கேபிள்! சிறந்த ஒரு நடிகரை நம் நாட்டு விருந்தினராக அழைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் நினைத்தபோது கன்னியாகுமரிக்கும், காஷ்மீரத்திற்கும், கத்தியாவாருக்கும், வங்காளத்திற்கும் என்று பல மாநிலங்களிலே அமெரிக்கா தம் பார்வையைச் செலுத்தியது!
நகர்ந்து கொண்டே சென்ற அதன் பார்வை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் குத்திட்டு நின்றது!
நடிகர் திலத்தை கண்ட பின் அதன் பார்வை வேறு பக்கம் திரும்பவில்லை! உடனே அனுப்பியது விமானத்தை! அழைத்துச் சென்றது நம் நடிகர் திலகத்தை! உலக அரங்கில் அவர் கவுரவிக்கப்பட்டார்! அது இந்தியாவிற்கே கிடைத்த கவுரவம்! இப்படிச் சொன்னார் நடிகர் எஸ்.ஏ. அசோகன்!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான பொக்கிஷன் நடிகர் முத்துராமன்! ஆங்கிலத்தில் SUBTLE ACTING என்பார்கள்! அதற்கு ஓர் உதாரண புருஷன்! இன்றைய தலைமுறைக்கு சொல்ல வேண்டுமானால் நடிகர் கார்த்திக்! நடிகர் சிவகுமார் மகன் கார்த்தி அல்ல! அந்த முத்துராமன் சிவாஜியைப் பற்றி என்ன சொன்னார்?
(தொடரும்)
அன்பு நண்பர் ரவிகிரண் சார்
வணக்கம்!
எல்லா சிவாஜி ரசிக நண்பர்களும் நலமா? அனைவருக்கும் என் வணக்கங்கள்!
நடிகர்திலகம் என்றும் performance actor ஆக இருக்கவேண்டுமென்று தான் விரும்பினாரே தவிர ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நடித்ததில்லை!
எல்லா நடிகர்களுடனும் நடித்தாலும் தன் நடிப்பு திறமையினால் எவரையும் வென்றுவிடலாம் என்ற அசாத்திய தன் நம்பிக்கை அவருக்கு இருந்தது!
அவர் உடல்வாகு எப்படி இருந்தாலும் மக்கள் அவரை மிகவும் ரசித்தார்கள்! அந்த கொடுப்பினை அவருக்கு மட்டுமே உரியது!
நன்றி ! வணக்கம்!
Nethiyadi
அருமைச் சகோதரர் திரு.சுந்தரராஜன் (மதுரை) அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (21-06-2016)
திரு சுந்தரராஜ் அவர்களே
வாழிய பல்லாண்டு
http://uploads.tapatalk-cdn.com/2016...794761abf7.jpg
Mr Vaigai Sundar,
Many More happy returns of the day.
செந்தில்வேல் சார்...
வேட்டிக்குப் போட்டி.
நாமெல்லாம் கட்டிக் கொண்டு
படுத்தால், நள்ளிரவில் நமீதா
போல் ஆக்கி விடுகிற அபாயம்
தருகிற வேட்டி, நடிகர் திலகத்திற்கு எப்படிக் கட்டினாலும் பொருந்தி விடுவது மகா ஆச்சரியம்.
"வியட்நாம் வீடு" படத்தில்
"சாவித்ரீ" என்று இரவில்
அழைக்கும் போது வயிறு வரைக்கும் கட்டியிருக்கும்
வேட்டிக் கட்டல்...
சவாலே சமாளியில் அழகுக்
கட்டல்...
பொன்னூஞ்சலில் தழையத்
தழைய கண்ணியக் கட்டல்...
ஆனந்தம் விளையாடும் வீடு-
சந்திப்பு பாடலில் நிஜமாகவே
நிறையப் பேரை கையெடுத்துக்
கும்பிட வைக்கும் வேட்டிக்
கட்டல்...
பழநியின் விவசாயிக் கட்டல்...
தில்லானாவில் வித்வான்
கட்டல்...
கல்தூணின் கோபக் கட்டல்...
முதல் மரியாதைக்குரிய
நேர்த்திக் கட்டல்...
வேட்டியைக் கட்டிக் கட்டியே
நம்மைக் கட்டிப் போட்டவர்.