palniappan subbu
ஞானஒளி வெற்றி விழாவில் கேடயம் வழங்குகிறார் ஜி.உமாபதி.
ஞானஒளி வெற்றி விழாவில் கேடயம் வழங்குகிறார் ஜி.உமாபதி.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...91&oe=5A8FB488
Printable View
palniappan subbu
ஞானஒளி வெற்றி விழாவில் கேடயம் வழங்குகிறார் ஜி.உமாபதி.
ஞானஒளி வெற்றி விழாவில் கேடயம் வழங்குகிறார் ஜி.உமாபதி.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...91&oe=5A8FB488
palanikumar
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...dc&oe=5A9106ED
(from face book)
k v senthil nathan
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...91&oe=5AA8684D
(from face book)
vetri vel murugan
தற்பொழுது முரசு TV சேனலில் என் மகன் திரைப்படம்
https://upload.wikimedia.org/wikiped...Magan_1974.jpg
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...7e&oe=5A93DAA0https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...0b&oe=5A8961D7https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ce&oe=5A93D64Dhttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...46&oe=5A8B285Chttps://scontent.fyyz1-1.fna.fbcdn.n...45&oe=5AA7E292https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...61&oe=5A8F3D23https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...12&oe=5A9E934D
Sekar Parasuram
·
தற்போது ராஜ் டிவியில்
ராஜ ராஜ சோழன்
தொடர்ந்து 11:55 முதல் ஜெயா டிவியில் தங்கப் பதக்கம்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...2a&oe=5AA87DE6
Sekar Parasuram
இன்று பிற்பகல் 2:00 மணிக்கு வசந்த் தொலைக்காட்சியில்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ad&oe=5AA85163
Goothandaraman
Raj டிஜிட்டல் +,ல் 8pm savale �சவாலே சமாளி
https://upload.wikimedia.org/wikiped...ale_samali.jpg
https://i.ytimg.com/vi/vVZqvhf06mA/maxresdefault.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
83 வது வெற்றிச்சித்திரம்
ஆலயமணி வெளியான நாள் இன்று
ஆலயமணி 23 நவம்பர் 1962
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b3&oe=5A945830
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...90&oe=5A8C3983
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...84&oe=5AA3B324
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c5&oe=5A980980
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...89&oe=5A9D9A82
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...03&oe=5AA84625
Natarajen Pachaiappan
"நடிகர்திலகத்தை பற்றி எழுத்தாளர் சுஜாதா"
++++++++++++++++++++++++++++++++++++++++
சிவாஜி அவர்களை பற்றி எத்தனையோ பேர் சொல்லி அறிந்திருக்கிறோம். சுஜாதா என்ன சொன்னார்? என்பதை அறியுமுன்னர், சுஜாதாவை பற்றி சின்னதான தகவலை தெரியாதவர்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் 'அப்துல் கலாம்' சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்) ,காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும்,
ஆனந்த தாண்டவம், சைத்தான்(திரைப்படம்)
பணியாற்றிய திரைப்படங்கள்:
ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், உயிரே, விசில்,
கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி, த பாஸ்,
எந்திரன், வரலாறு, செல்லமே.
எழுத்தாளர் சுஜாதா இப்படி சொல்லியிருந்தார்... "எனக்கு பிடித்த சிவாஜியின் படங்கள் அவருடைய `அன்னையின் ஆணை.’ அதுபோல `அந்த நாள்’ ஒரு பாட்டில்லாத த்ரில்லர். சிவாஜியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்குள் இருக்கும் மனிதரை கண்டுபிடிக்க எனக்கு அவகாசம் போதவில்லை. சிவாஜியை மார்லன் பிராண்டோ, ரெக்ஸ் ஹாரிசன், அல்பசினோ, ராபர்ட் டி நீரோ போன்ற நடிகர்களுக்கு ஈடாகச் சொல்லலாம். அவருடைய இறுதி ஊர்வலத்தில் அழுதவர்கள் கண்ணீரில் உண்மை இருந்தது" என்றார்.
ஆம் தமிழகத்தில் அண்ணா, காமராஜர்,அண்ணா, எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் மறைந்த போது இருந்த கூட்டத்திற்கும் எந்த விதத்திலும் குறைவில்லாத கூட்டந்தான். அவர்கள் ஆண்டவர்கள் அவர்களுக்கென ஒரு பின்புலம் இருந்தது. இவருக்கு எந்த பின்புலமும் இல்லாமலே இவ்வளவு கூட்டம். என்ன ஒன்று அவர்களுக்கெல்லாம் அரசு விடுமுறை அளித்தது. அன்று ஆண்ட முதல்வர் அம்மையார் அது நடவாமல் போனது. ஆழிப் பேரலைகளாக ஜனசமுத்திரம் அழுதுக்கொண்டு போனதை சன் தொலைகாட்சி நேரலையாக ஒளிபரப்பியது. அதன் பிறகு ஊடகங்கள் புகைப்பட பதிவுகளையும் காணொளியையும் இருட்டடிப்பு செய்ததோ என்னவோ... இறுதி ஊர்வலத்தின் பதிவை இணையதளத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை.
இன்னும்மொரு சின்ன தகவல். சிவாஜி மறைந்த செய்தி குல்மனாலியில் எட்ட அன்றிரவு 11.00 மணியானது அன்று "பூவெல்லாம் உன் வாசம்"
படப்பிடிப்பில் தல அஜீத் இருந்தார். கேள்விப்பட்டவுடன் கிளம்ப வாகன வசதி ஏதுமில்லை. ஒரு பஸ்கூட இல்லை. அவரே தன்னுடைய காரை டில்லி விமானம் நிலையம் ஓட்டிவந்து சென்னை வந்து சேர்ந்து அவருடைய மனைவி ஷாலினியுடன் சிவாஜி அய்யனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். இது அவர் சிவாஜி என்றவருக்கு அவர் அளித்த சாதாரண மரியாதையல்ல. இந்திய நாட்டின் இணையில்லா உலக பெருநடிகருக்கு செலுத்திய உண்ணத மரியாதை. அதன்பின் மறுநாளே குல்மனாலியில் இருந்தார்.
அந்த நாள் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது தமிழில் பாடல்கள் இல்லாமல் வெளிவந்த முதல் படம். இத்திரைப்படம் அகிர குரோசவாவின் "ரசோமன்" என்னும் திரைப்படத்தின் திரைக்கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஜாவர் சீதாராமன் திரைக்கதையையும் எழுதி துப்பறியும் அதிகாரியாகவும் நடித்துள்ளார். பண்டரிபாயும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். வித்தியாசமான மனிதர்கள், மெத்த படித்தவர்கள், உலகத்தின் ஞானம் விஞ்ஞான ரீதியாக உணர்ந்தவர்கள், தெரிந்தவர்கள், இந்தியாவில் வெகு சிலரே... அதில் சுஜாதாவும் ஒருவர்.
இப்படக்கதை பூட்டிய அறை மர்மப்புனைவு ஆகும். இப்படத்தில் சிவாஜி கணேசனின் பாத்திரம் கதையின் துவக்கத்தில் கொலை செய்யப்படுகிறது. கொன்றவர்கள் என சந்தேகப்படக்கூடியவர்கள் அவரது மனைவி, நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர். இவர்களுள் யார் கொலைகாரர் என்று துப்பறிவாளர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. இந்த படத்தில் நடிகர்திலகத்தின் நடிப்பு ஹாலிவுட் நாயகர்களுக்கு இணையானதாக இருக்கும். இந்த படத்திற்கு தனிபதிவு நம்மில் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
1958ல் வெளியான "அன்னையின் ஆணை" படத்தில் ஒருகாட்சியில் சாவித்திரியின் காணமல் போன தன் தந்தையின் உடைகளை தன்வீட்டிலிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைகிறார். தன் கணவர் சிவாஜிதான் தன் தந்தையை ரங்காராவை எங்கோ மறைத்துவைத்துவிட்டார் அல்லது கொன்றுவிட்டிருக்க கூடும் சிவாஜியின் மேல் கோவப்பட்டு சட்டையை பிடித்து உலுக்குவதாக காட்சி. ஆனால் காட்சியில் உண்மையாகவே உணர்ச்சிவசப்பட்டு சிவாஜியின் பனியனை பிடித்து உலுக்கும்போது சாவித்திரியின் கைவிரல்களின் நகங்கள் சிவாஜி மார்பையும் பிராண்டி இரத்தம் அதிகமாக பீறிட்டது. அப்போதும் சிவாஜி நடித்துக்கொண்டே டவலினால் சாவத்திரியை அடித்த பின்னர்தான் உணர்வசப்பட்டதிலிருந்து மீண்டார்கள். இப்படியெல்லாம் நடித்திருக்கிறார்கள். இதில் யதார்த்தம் இல்லையா? அதனால்தான் என்னவோ இந்த படத்தையும் சிவாஜியையும் சுஜாதா விரும்பினாரோ என்னவோ...
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b2&oe=5AA511E6
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...80&oe=5A932877
Sekar Parasuram
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில்
* நவராத்திரி
https://s4.scoopwhoop.com/anj/bollyw.../128898746.jpghttps://upload.wikimedia.org/wikiped...athri-1964.jpg
http://3.bp.blogspot.com/-XxF5xe81sx...athri-1964.jpg
Vasu Devan
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (மூன்றாம் பாகம்).தொடர்கிறது...
நடிகர் திலகத்தின் நடிப்பு முத்திரைகள்.
தன்னை அன்புடன் வளர்த்த மேரியம்மாவின் மீது (பண்டரிபாய்) தொழிலதிபர் சத்தியநாதன் ('சங்கிலி' முருகன்) ரோட்டில் குடிபோதையில் காரை ஏற்றி விட, குற்றுயிரும்,கொலையுயிருமாக தன் தாய் மரணப்படுக்கையில் கிடக்க, பதைபதைத்து பதறி ஓடி வருவார் N.T. அவர் கண்ணெதிரிலேயே மேரியம்மா உயிரை விட, அவளை மடியில் சாய்த்துக் கொண்டு கதறும்போது டாக்டர்கள் சற்று தாமதமாக அங்கு வர, தன் தாயைக் கட்டிலில் கிடத்திவிட்டு, இருகைகளையும் தலையின் பின்பக்கமாக சேர்த்து கோர்த்து வைத்துக் கொண்டு உடலை லேசாக வளைத்து நின்றபடி டாக்டர்களிடம் "too late"என்று மூக்கை உறிஞ்சுவது போல உதடுகளைக் குவித்து மூச்சை வாயால் உறிஞ்சுவது(!) லேசுப்பட்ட உடல்மொழி அல்ல. அப்படி ஒரு உன்னதமான N.T. யின் போஸுக்கு சொந்தம் கொண்டாடிவிட்ட பெருமை இந்த அற்புதப் படத்திற்கு மட்டுமே உண்டு.
"மேரியம்மா! உன் கண்ணுக்குள்ளேயே என்ன வச்சுக் காப்பாத்துன... இப்ப நான் உன்ன மண்ணுக்குள்ள வச்சு எப்படிப் புதைப்பேன்?"
என்று தன் தாய் அநியாயமாக சாகடிக்கப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம், கோபம், தாயை இழந்த சோகம், தாங்க முடியாத வேதனை, வஞ்சம், தன் தாய் இறக்கக் காரணமானவனை பழிவாங்கத் துடிக்கும் வெறி என்ற அத்தனை உணர்ச்சிகளையும் ஒருசேரக் கொட்டி கண்களை மேல்நோக்கிய வெறியோடு அந்த ஒரு சில நிமிடங்களில் ஓராயிரம் வித்தைகளை உணர்ச்சிப்பிழம்பாய் அள்ளி வழங்கியிருப்பார் N.T.
தன் அன்புத் தாய் கொலை செய்யப்பட்டு விட்டாளே என்ற ஆத்திரம்
தாயின் மரணத்திற்கு காரணமாய் இருந்த சத்தியநாதன் அதற்கு ஈடாக ரூபாய் பத்தாயிரத்தை முத்துக் கிருஷ்ணனிடம் (தியாகராஜன்) கொடுத்தனுப்ப, அவனும் அதை வாங்கிக்கொண்டுவந்து N.T. யிடம் கொடுக்க, கோபத்தின் ஆரம்பத்தில் இருக்கும் நடிகர் திலகம்,
"என் மேரியம்மவுடைய வில கேவலம் பத்தாயிரம் ரூபாயா? மேரியம்மா யார் தெரியுமில்ல... என்னோட தெய்வம்... எவனோ பெத்துப் போட்ட என்ன எடுத்து வளர்த்து தன்னுடைய வாழ்க்கையை பாழாக்கிகிட்டவ ... அவளுடைய உயிருக்கு பத்தாயிரம் ரூபா விலையா?... இதெல்லாம் உனக்குத் தெரியாதா?... தெரிஞ்சிருந்தும் ஏன் வாங்கிகிட்டு வந்த?...கொண்டு போய் அவன் மூஞ்சில விட்டெறி"...
என்று கூற அதற்கு முத்துகிருஷ்ணன்
"இந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துட்டா மட்டும் செத்துப் போன மேரி மம்மி திரும்பி வந்துடப் போறாங்களா"
என்று எதிர்வாதம் பேச தன்னை நம்பி தன் கழுத்தில் சுற்றிகொண்டிருக்கும் பாம்பே தனக்கு எதிராகத் திரும்ப ஆரம்பிப்பதைக் கண்டு சற்று திகைத்து, பின் சடாலென வலது காலை வேகமாக தரையில் ஒரு உதை உதைத்து,வேட்டியை மடித்துக் கட்டி சற்றே காட்டமாக
"முத்துக்கிருஷ்ணா! ஐயாவுக்கே அட்வைஸ் பண்றியா? இது என்னுடைய பெர்சனல் மேட்டர். இத எப்படி டீல் பண்ணனும்கிறது எனக்குத் தெரியும்.நீ போ" என்று தெனாவட்டாகக் கூறியபடி சிகரெட்டை வாயில் வைத்து போடுவாரே ஒரு சொடுக்கு! அந்த சொடுக்கில் சொக்கிப் போகும் நம் அனைவரின் மனங்களும்.
..
சொன்னது போலவே நேரிடையாக சங்கிலி முருகனைப் பழிவாங்கக் களத்தில் இறங்குவார் N.T. சங்கிலி முருகனின் பார்ட்னரை அவர்மீது நம்பிக்கை இல்லாமல் தன் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி கேட்கச் செய்தும், சங்கிலி முருகனுடைய கம்பெனியில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தச் செய்தும்,சங்கிலி முருகனின் கார் டிரைவரை வேலையே விட்டு விலகச் செய்தும் இப்படி பல இன்னல்களை அவருக்குத் தெரியாமலேயே தன் தாதா செல்வாக்கால் உருவாக்கி தன்னிடமே நேரிடையாக உதவி கேட்டு வரும் நிலைக்கு சங்கிலி முருகனை ஆளாக்கி விடுவார் N.T. இவ்வளவு இன்னல்களுக்கும் காரணம் N.T தான் என்று தெரியாமல் அவரிடமே பிரச்சனைகளுக்கு உதவ வழி கேட்டு வருவார் சங்கிலி முருகன்.ஒவ்வொரு பிரச்னையாக சங்கிலி முருகன் சொல்லிக் கொண்டே வர, N.T யும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ஒத்துக் கொண்டு சங்கிலி முருகனின் வீட்டிற்கு செல்வார் .செல்வதற்கு முன் N.T..யை வரவேற்பதற்காக மாலையுடன் காத்திருக்கும் சங்கிலி முருகன் தன் உதவியாளரிடம் ,"என்ன மேனேஜர்! இன்னும் அவரு வரலியே"என்பார். அதற்கு அந்த மேனேஜர்,"பெரியவர் சொன்னா சொன்ன டயத்துக்கு வந்துடுவாருங்க....கடிகாரம் தப்பினாலும் தப்பும்...அவரு மாத்திரம் கரெக்டா டயத்துக்கு வந்துடுவாரு...என்று புகழாரம் சூட்டுவது நடிகர்திலகத்தின் நேரந்தவறாமையையும்,காலந்தவறாமையையும் குறிப்பிடுவதற்கென்றே எழுதப்பட்ட சத்தியமான வசனம். (சபாஷ்! வியட்நாம் சார்...)
பின் N.T சங்கிலி முருகன் வீட்டிற்கே வந்து மறைமுகமாக தன் பழிவாங்கும் படலத்தைத் தொடங்குவார். சங்கிலி முருகன் வீட்டிலேயே அவர் மனைவியிடமும்,மகளிடமும் அவரை வசமாக மாட்டி வைக்கும் காட்சிகள் படுசுவாரஸ்யமானவை. சங்கிலி முருகன் மனைவி முன்னாலேயே "சத்தியநாதா, இது எத்தனையாவது wife?" என்று அவரை அவர் மனைவியிடம் மாட்டிவிட்டு மிரள வைப்பதும், சங்கிலி முருகன் மகளிடம்,"உன் வயசென்ன டார்லிங்?" என்று N.T கேட்க அதற்கு அந்தப் பெண் "பதினாறு"என்று பதில் கூற, "சகுந்தலாவுக்கும் அதே வயசுதான்" என்று கலாய்த்து சங்கிலி முருகனின் லீலைகளை மறைமுகமாக உணர்த்தி அலற வைப்பதும், இதையெல்லாம் சமாளிக்க சங்கிலி முருகன் N.T யிடம்,"வாங்க டிபன் சாப்பிட்டுகிட்டே பேசலாம்"என்று பேச்சை திசைதிருப்ப முயற்சிக்க, நடிகர் திலகம் அதற்கு,"ஆங்...(இந்த இடத்தில் ஒரு ஜகா வாங்குவார் பாருங்கள்)...நான் உன் கையால் டிபன் சாப்பிட மாட்டேன்ப்பா...நீதானே சொன்ன...சொத்துக்காக மாமனாரை உப்புமாவுல விஷம் வச்சுக் கொன்னேன்னு" என்று அவர் மனைவி முன்னேயே அவரை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதும், சங்கிலி முருகனின் ஆபீஸ் மெம்பர்ஸ் மீட்டிங் நடக்கும் போது அவருடைய பார்ட்னரைக் காட்டி அத்தனை பேர் முன்னிலையில்,"ஒ...இவனதான் நீ கொலை பண்ணச் சொன்னியா?"என்று காலை வாருவதுமாக பழிவாங்கும் படலத்தைப் பக்காவாக நகைச்சுவையுடன் பண்ணியிருப்பார் N.T.
(தொடரும் நாளை)
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c7&oe=5A8A50B7
ஆலய மணி- 1962
மன நலம் குன்றியவர்களை சமூகம் நடத்திய விதம் குறித்து ஆராய்ந்தால் மனம் பதைக்கும். 20 ஆம் நூற்றாண்டில்தான் psycho -analysis துறை fraeud என்பவரால் அறிமுக படுத்த பட்டு ,முன்னேற்றம் கண்டது. மன நலம் குன்றியவர் குறித்து சமூகத்தின் பார்வையும் மாறியது. அதற்கு முன் அவர்களுக்கு சமூகத்தால் சிகிச்சை என்ற பெயரிலும் (அரைகுறை வைத்தியர்,பூசாரி),வேண்டாத பிரஜைகள் என்ற முறையிலும் பட்ட கொடுமைகளை பற்றி ஒரு தனி பதிவே போடலாம். இதிலாவது,தன உலகத்தில் வாழும் ,வெளியுலகம் அறியா முழு மனம் குன்றியவர்கள் கொடுத்து வைத்தவர்கள். விளிம்பு நிலை மனிதர்களோ தன் உலகம்,சமூக உலகம் இரண்டிலும் ஊசலாடி, இரு நிலை பாதிப்பினால் சொல்லொணா துயரம் எய்தினர். இந்த வகை மன நிலை பிறழ்வுகளை வைத்து , 1950 களிலும், 1960 களிலும், வெகு சில ஹாலிவுட் படங்களே வெளியாயின. அவையும் பெரும்பாலும் thriller வகைதான். ஆனால் இந்திய சினிமா சரித்திர வரலாற்றிலேயே ,முதன் முறையாய், விளிம்பு நிலை பிறழ்வு கொண்ட ஒரு கதாநாயகனை, முன்னிறுத்தி , வடிவம்,உள்ளடக்கம் எல்லாவற்றிலும் ,மாறுபட்ட படமாய்(ஒரு அந்நிய பட inspiration ) ஒரு தமிழ் படம், சிவாஜி, ஜி.பாலசுப்ரமணியம்,ஜாவர் சீதாராமன்,கே.சங்கர், பீ.எஸ்.வீரப்பா கூட்டு முயற்சியில் வெளியானதும் இன்றி, எல்லாதரிப்பினராலும் ஆதரிக்க பட்டு பிரம்மாண்ட வெற்றி பெற்று, பிறகு தெலுங்கு,ஹிந்தி எல்லா மொழிகளிலும் தழுவ பட்டது. சினிமா சரித்திரமே, அதற்கு முன்னும்,பின்னும் ,அந்த ரசவாத அதிசயத்தை கண்டதில்லை.காணவில்லை. காதல்,நட்பு,விசுவாசம்,பொறாமை, possessiveness , மனித-மிருக மனநிலை போராட்டம்,எல்லாம் சம நிலையில் தேக்கிய ஒரு positive approach கொண்ட மிக நல்ல காவிய சித்திரம்தான் ஆலய மணி.
ஆலய மணியின் கதையை பார்ப்போம்.
பெரும் பணக்காரன் தியாக ராஜன் ,உறவினர் யாருமின்றி வாழும் தனியன். சிறு வயதில் அதீத possessive குணத்தினால்,நண்பன் ஒருவன் மரணத்திற்கு காரணமாகி (மீனா என்று பெயரிட பட்ட பொம்மைக்காக ) , சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டு , deep seated trauma வின் பாற்பட்டு குற்ற உணர்வில் இருந்து மீள துடிப்பவன்.அதீத கருணை, மனித நேயம், வள்ளன்மை,பெருந்தன்மை ஆகிய குணங்களை வளர்த்து மிருக குணங்களை பொசுக்கி வாழ நினைத்தாலும் அவ்வப்பொழுது தலை தூக்கும் போட்டி,பொறாமை குணங்களால் உந்த படுபவன். தற்செயலாய், சேகர் என்ற டாக்டருக்கு படிக்கும் ஒருவனின் நற்பண்புகளால் கவர பட்டு ,ஏழையான அவனை,சம-நிலை நண்பனாய் பாவித்து ஆதரித்து அன்பு செலுத்துகிறான்.சேகருக்கு வானம்பாடி என்ற புனை பெயர் காதலி. சேகருடன் சேர்ந்து படிக்கும் பிரேமா சேகரை ஒரு தலையாய் விரும்புகிறாள். பிரேமாவின் அப்பா ஆட்கொண்டான் பிள்ளையோ பண பேய். பெண்ணை தியாகுவிற்கு மணமுடிக்க விரும்புகிறார். தற்செயலாய் எஸ்டேட் கணக்கு பிள்ளை முத்தையாவின் இளைய மகள் மீனாவை சந்தித்து விரும்ப ஆரம்பிக்கிறான் தியாகு. சந்தர்ப்ப வசமாய் முத்தையாவின் மூத்த பெண் ,ஆட்கொண்டானால் வஞ்சிக்க படும் போது தலையிட்டு ,அந்த பெண்ணை விரும்பியவனே மணக்க காரணமான தியாகு,தன் நண்பன் சேகர் மூலம் தான் மீனாவை மணக்க விரும்புவதை தெரிவிக்கிறான். ஆனால் அந்த மீனாதான் ,தான் விரும்பிய வானம்பாடி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியடையும் சேகர்,தன் நண்பனின் விருப்பத்தை மதித்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறான்.மீனாவிடம் உண்மையை தியாகுவிடம் இருந்து மறைக்க சொல்கிறான்.
இதனால் பொறாமையடையும் ஆட்கொண்டான், மீனாவை பழிவாங்க, காரின் brake ஐ பிடுங்க,காப்பாற்ற முனையும் தியாகு,brain concoction மற்றும் multiple -fracture இனால் கால்களின் செயல் பாட்டை இழக்கிறான். திருமண நிச்சயம் செய்ய பட்ட மீனா ,தியாகுவிடம் ,தொடர்ந்து அன்பு செலுத்தி ஆதரவு காட்டுகிறாள். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால்,மீனா -சேகரின் மேல் சந்தேகம் கொண்டு,சேகரை கொலை செய்ய மரண பாறைக்கு அழைத்து செல்கிறான் தியாகு . கொலை முயற்சியில் தப்பிக்கும் சேகர், உண்மையை சொல்ல,குற்ற உணர்ச்சியில் தியாகு தானே ,மரண பாறையில் இருந்து குதித்து விடுகிறான். பிறகு ,காப்பாற்ற பட்டு, கால்களை பெற்று, பிரேமா-சேகர், மீனா -தியாகு ,ஒன்று சேர சுபம்.
இந்த படத்தில் நடிகர் திலகம் ,பாத்திரத்தை மிக புரிந்து அசத்துவார். தாயன்பு அறியாத,தந்தையால் உதாசீன படுத்த பட்ட ,தனிமை பட்ட, தன்னை தூயவனாய் மாற்றி கொள்ள விழையும் பாத்திரத்தை முதல் காட்சியில் இருந்து ,கண் முன் நிறுத்துவார். (வழக்கொழிந்து கொண்டிருந்த தூய தமிழ் வசனங்கள் உறுத்தினாலும்).நண்பனுடன், என்னிடம் இல்லாத உயர்ந்த பண்பு உன்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டு, தானே ஒரு possessive type என்ற போதிலும்,நண்பன் ,ஒரு வாக்குவாதத்தில்(யார் காதலி உயர்ந்தவர்?) சட்டையை பிடித்து விட,ஒரே நொடியில் சுதாரிப்பார்.சம நிலை அடைவார். ஒரு explicit demonstrative பாணியில் நடிப்பார். நல்ல தன்மையை வளர்த்து கொள்ள விழையும் ஒருவனின் துடிப்பு அதில் நன்கு தெரியும். சரோஜா தேவியை முதல் முறை பார்த்து, ஒரு ஆச்சர்யம் கலந்த ஆசை பார்வை வீசும் போதும்,பிறகு ,உங்கள் பெண்ணின் வாழ்வு மலரட்டும் என்று சரோஜா தேவியிடம் திரும்பி ,ஒரு நொடி அர்த்தமுள்ள வாஞ்சையுடன் பண்ணும் gesture , deep seated trauma with shock and despair என்பதை காட்டும் சிறு வயது சம்பந்த பட்ட காட்சிகள், கால்கள் இழந்ததை உணரும் தருணம்,தனித்திருக்க விரும்பவதை வறட்சியுடன் சொல்வது எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் ,விஸ்வரூபம் எடுக்கும் இடங்கள்,, சந்தேகம் சூழ்ந்து மிருக உணர்ச்சி தலை தூக்கும் இடங்கள்.ஆசையுடன் ,தன் நிச்சயிக்க பட்ட பெண்ணை வெறிக்கும் எஸ்.எஸ்.ஆரை பார்த்து ஆத்திரப்பட்டு கத்தும் இடம், feeling of inadequacy யினால், விபரீத கற்பனையில் மூழ்கி(mind picture gives rise to restive passion and subsequent revenge attitude ),மிருக குணத்தில் தன்னை அமிழ்த்தும் இடங்களில்,அடடா முழு படமும் மிருகமாகவே இருந்திருக்கலாமே என்று ஏங்க வைக்கும் நடிப்பு.
இந்த படத்தை உயரத்தில் தூக்கி நிறுத்துவது, கதை,திரைக்கதை , எடிட்டிங், இயக்கம்,பாடல்கள்,இசை,சக நடிக-நடிகையரின் அபார பங்களிப்பு ஆகியவை. சிறிது சறுக்க வைப்பது out -dated தூய தமிழ். அதுவும் ஒரே ஒரு பாத்திரம் மட்டுமே தூய தமிழ் பேசும். நல்ல வசனங்களை கொண்டிருந்த ஆலய மணி,ஆண்டவன் கட்டளை போன்ற படங்களில் இந்த வகை வசனங்கள் பெரும் குறையாக படும்.
மிக மிக குறிப்பிட பட வேண்டியது எஸ்.எஸ்.ஆரின் அபார நடிப்பும்,சரோஜா தேவியின் நல்ல பங்களிப்பும்.(பாலும் பழமும்,இருவர் உள்ளம் போல்)
விஸ்வநாதன்-ராமமூர்த்தி -கேட்கவே வேண்டாம். full form இருந்த போது வந்த படம்.கண்ணதாசன் - இரட்டையர் இசையில், கண்ணான கண்ணனுக்கு,தூக்கம் உன் கண்களை ,மானாட்டம்,பொன்னை விரும்பும், கல்லெல்லாம் மாணிக்க, சட்டி சுட்டதடா,எல்லாமே பயங்கர ஹிட் பாடல்கள்.படத்திலும் மிக நல்ல முறையில் படமாக்க பட்டிருக்கும்.
பட துவக்கமே ,அன்றைய ரசிகர்களுக்கு shock value கொண்டதாக பட்டிருக்கும். கதாநாயகிகள் கற்புக்கரசிகளாய் வலம் வந்த இந்திய திரையில் infatuation பற்றி பேசியது சாதா விஷயமல்ல. அன்றைய முதல் இடத்தில் இருந்த ஸ்டார் நடிகரின் படத்தில் இரண்டாம் ஹீரோ கதாநாயகியுடன் டூயட் பாடியது, கதாநாயகனை விட ,நண்பனை உயர் குணத்துடன் சித்தரித்தது எல்லாவற்றையும் பார்த்தால், நடிகர் திலகம் என்பவர் எப்படி நல்ல படங்களுக்காக ஒத்துழைத்தார் என்பது இமேஜ் இமேஜ் என்று ஓவர்-மார்க்கெட் செய்யும் இளைய தலை முறைக்கு பாடம்.
ஆலய மணியில் எடிட்டர் ,இயக்குனர் கே.சங்கரின் பங்களிப்பு அபாரமானது. கத்தி மேல் நடப்பது போன்ற கதையமைப்பில் ,சிறிதும் சறுக்காமல், அனைத்தையும் லாஜிக் உடன் justify பண்ணும் இயக்கம்.ரசிகர்கள் விரும்பும் அம்சங்களையும் அழகாக கலந்து, காமெடி அது-இது என்ற கதையை தொய்ய வைக்காத அற்புத இயக்குனர். trauma சம்பந்த பட்ட காட்சி, பின்னால் சிவாஜியின் மன போராட்ட காட்சி(ஆண்டவன் கட்டளையிலும் அற்புதமாய் வந்திருக்கும்-தேவிகாவினால் அலைக்கழிக்க படும் காட்சிகளில்) என்று, எடிட்டிங்,நடிப்பு,இசை,இயக்கம் எல்லாம் கை கோர்த்து படத்தையே உயர்த்தும்.
இந்த படத்தை பொறுத்த வரை முதல் ஹீரோ கதைதான். ஜி.பாலசுப்ரமணியம் ஒரு மூல கதை மேதையாகவே போற்ற பட்டார்.(கே.எஸ்.ஜி, சோலைமலை,செல்வராஜ் போல்) சிக்கலான அமைப்பை கொண்ட கதைக்கு, மிக சிறந்த திரைகதையை கொடுத்த ஜாவர் பாராட்டுக்குரியவர்.
கோப காரன்,பொறாமைக்காரன், பாதி மனிதன்-பாதி மிருகம்,அழித்து விடும்(nihilistic ) உணர்வு மிகும் possessive உணர்வு கொண்ட மனிதன்,personality disorder இனால் வரும் நம்பிக்கை குலைவு(Feeling of inadequecy accentuates it), அதனால் எழும் பின்னலான மனித மன உணர்வுகள், மனித உணர்வுகளில் கறுபபு கறை படிந்து , அதன் நிழலில் மனசாட்சியின் குரலை நசித்து, மிருக வசப்படும் உணர்வை, மிகையில்லாமல், melo -drama குறைத்து , positive ஆக சொன்ன மிக மிக சிறந்த படைப்பு ஆலய மணி என்று அடித்து சொல்லலாம்.
Natarajen Pachaiappan
ஜாஹிர் உசேன் அய்யா மாஸ்டர் பீஸ்... வரிசை எண.9... பார்ட் 3 வரை பதிவிட்ட பின்பு இதே போன்று இன்னொரு பதிவா? என நினைக்கலாம். சில நேரங்களில் ஒருவர் சிந்திக்கும் நேரத்தில் அதையையே இன்னொருவர் சிந்திப்பதும் ஒன்றாகிவிடுகிறது. அய்யா அவர்கள் அத்தனையும் அலசி ஆராய்ந்த சொல்லிவிட்டார். புதிதாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
நடிகர்திலகம் அவர்கள் எத்தனையோ தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும், தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும்
உருவாக்கிவிட்டவர் என்பது நமக்கு தெரியும்.
வீட்டில் வேலை நேரம் போக சிவாஜி என்ற மாபெரும் கலைஞனை சிந்திப்பதே தொழிலாக போன நமக்கு... இணையத்திலிருந்து படித்ததை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன்.
.................................................. .................................................. ....
சிவாஜி இல்லையென்றால்... - இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் பேட்டி!
பதிவு செய்த நாள்: ஜன 01,1970 05:30
சிவாஜியுடன் நீண்ட காலம் நெருங்கிப் பழகியவரும், சிவாஜி நடித்த கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்திரி, ராஜா, சந்திப்பு உள்பட, 14 வெற்றிப் படங்களை இயக்கியவருமான, இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் திலகம் பற்றிய சுவையான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
இயக்குனர் சி.வி.ஸ்ரீதர் என்னுடைய சொந்த அண்ணன். ஸ்ரீதர் போன்ற மிகச் சிறந்த டைரக்டரிடம் உதவியாளராக, பிறகு அசோசியேட் டைரக்டராக நிறைய விஷயங்கள் கற்று, பின்னர் டைரக்டரானதற்கு, பெருமைப்படுகிறேன். உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜியோடு, அதிக படங்கள் டைரக்ட் செய்தது, நான் செய்த பெரிய புண்ணியம்!
கடந்த, 1957ல், "கேளீர் விக்ரமாதித்தியரே' என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை, குமுதம் பத்திரிகையில் வெளிவந்தது, இதை படித்த ஸ்ரீதர், "பரவாயில்லையே... உனக்கு நல்ல ஸ்டோரி சென்ஸ் இருக்கே...' என்று பாராட்டினார். 1960ம் ஆண்டிலிருந்து, 1967ம் ஆண்டு வரை, மீண்ட சொர்க்கம், நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற பல படங்களில், அவரிடம் உதவியாளராக இருந்து, பின், "காதலிக்க நேரமில்லை' படத்தில், அசோசியேட் டைரக்டரானேன்.
நான் இயக்கிய முதல் படம், "அனுபவம் புதுமை!' அந்தப் படத்தில், சிவாஜி நடிக்கவில்லை என்றாலும், சிவாஜிக்கும், அந்தப் படத்திற்கும் சம்பந்தம் உண்டு. அருணாச்சலம் ஸ்டுடியோ அதிபர் வேலன் தயாரித்த, அனுபவம் புதுமை படத்தில், முத்துராமன், ராஜஸ்ரீ நடித்தனர். அப்படத்தில் இடம் பெற்ற, "கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்...' என்ற, பாடல் காட்சிகளை என் சகோதரர் ஸ்ரீதருக்கும், நடிகர் திலகத்திற்கும் திரையிட்டுக் காண்பித்தேன்.
"ரொம்ப நல்லா எடுத்திருக்கேடா...' என்று சிவாஜி, என்னை கட்டி அணைத்து பாராட்டினார். ஸ்ரீதரும், பாராட்டினார். சிவாஜியிடம் நான் பெற்ற முதல் பாராட்டு அது.
இயக்குனர் ஸ்ரீதரும், அவரது நெருங்கிய நண்பரும், கதாசிரியருமான கோபுவும் இணைந்து, போர் நிதிக்காக, சினிமா நட்சத்திரங்களின் கலை விழாவிற்கு ஒரு நாடகம் எழுதினர். நாடகத்தின் பெயர், "கலாட்டா கல்யாணம்!' மேடையில் சிவாஜி, ஜெமினி, வி.கே.ராமசாமி, நாகேஷ், முத்துராமன், சவுகார் ஜானகி, கே.ஆர்.விஜயா, ஜெயலலிதா, அவர் அம்மா சந்தியா உள்பட, ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது; சூப்பர் ஹிட்டானது.
சில ஆண்டுகள் கழித்து, அந்த நாடகத்தை, திரைப்படமாக தயாரிக்க, சிவாஜியின் ஆடிட்டர்களான, சம்பத்குமார் மற்றும் நாக.சுப்பிரமணி இருவரும் விரும்பினர். சிவாஜியின் மூத்த மகன் பெயரில், "ராம்குமார் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. படத்திற்கு யாரை டைரக்டராக போடுவது என்ற விவாதம் வந்த போது, சிவாஜியின் இளைய சகோதரரும், அவரது நிர்வாகம் முழுவதும் கவனித்து வரும் ஷண்முகம், ஒரு சில டைரக்டர்கள் பெயர்களை சொன்னார்; ஆனால், சிவாஜியோ, "ராஜி பண்ணட்டும்...' என்றார். சிவாஜியும், சில நெருக்க மானவர்களும், என்னை ராஜி என்றே அழைப்பர்.
ராம்குமார் பிலிம்சின் முதல் தயாரிப்பான, "கலாட்டா கல்யாணம்' திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு, சிவாஜி அளித்த உத்தரவாதத்தால், எனக்கு கிடைத்தது.
இந்தப் படத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சிவாஜி, ஏ.வி.எம்.ராஜன், நாகேஷ், கோபி, சோ, ஜெயலலிதா, ஜோதிலட்சுமி, சச்சு, மனோரமா என்று பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்தது.
ஒரு வருடம், டயட்டில் இருந்து, உடல் எடை குறைத்து, ஸ்லிம்மாக, ஸ்டைலிஷ்ஷாக, இப்படத்தில் சிவாஜி இருப்பார்.
சிவாஜி, ஜெயலலிதா இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது.
அப்போது நடந்து முடிந்த சர்வதேச கண்காட்சியை ஓட்டி, அண்ணா நகரில் ஒரு டவர் கட்டினர். அந்த டவரில், முதலில் படப்பிடிப்பு நடந்ததும், அந்த டவரை சினிமாவில் முதல் முறையாக காட்டியதும் நாங்கள் தான்.
சிவாஜி நடித்த காமெடி படங்களில், அவருக்கு பிடித்த படம், "கலாட்டா கல்யாணம்!' இப்படம் சூப்பர் ஹிட்டானது. பல சென்டர்களில், நூறு நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடியது.
அடுத்து, "சுமதி என் சுந்தரி!' சிவாஜி - ஜெயலலிதா மீண்டும் இருவரும் இணைந்து நடித்த காமெடி படம். அதிலும், பல புதுமைகள். கேரளாவில், தேக்கடியில், 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய முதல் தமிழ் கலர் படம். பசுமையான அவுட்டோர் படப்பிடிப்பு. எனக்கு பெருமை சேர்த்த இன்னொரு படம் இது.
பிறமொழிப் படங்களை தமிழில், ரீ-மேக் செய்து, வெற்றிப் படங்களாக தருவதில், நிகரற்றவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாலாஜி. அவரை,"ரீ மேக் கிங்' என்றே சொல்வர். அவர், ரீ-மேக் செய்த படங்களில் அதிகமாக நடித்திருப்பவர் சிவாஜி தான்.
அவருக்கு முதலில் ரீ-மேக் படங்களை தொடர்ந்து இயக்கிக் கொடுத்தவர், பிரபல இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். "ஜானி மேரா நாம்' என்ற இந்தி சூப்பர் ஹிட் படத்தை, தமிழில் ரீ-மேக் செய்ய ஆரம்பித்த போது, ஏதோ சொந்த காரணங்களால், திருலோகசந்தர், அந்தப் பணியை ஏற்க விரும்பவில்லை. தயாரிப்பாளர், சிவாஜியிடம் மூன்று டைரக்டர்கள் பெயர்களை குறிப்பிட்டு, யாரை போடலாம் என்று கேட்டார்.
"சி.வி.ராஜேந்திரன் பண்ணட்டும்...' என்று சொன்னார் சிவாஜி. ராஜா படத்தில் மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா இணைந்து நடித்தனர். ராஜா படம் சூப்பர் ஹிட் ஆனது. தொடர்ந்து மீண்டும் சிவாஜி, ஜெயலலிதா நடித்த, மற்றொரு ரீ-மேக் படம், நீதி. அதுவும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜி - மஞ்சுளா நடித்த, "என் மகன்' படமும் வெற்றிகரமாக ஓடியது
.
சிவாஜி - ஜெமினி இருவரும் சேர்ந்து நடித்த ரீ-மேக் படம், உனக்காக நான். இந்தியில் சூப்பர் ஹிட்டான, ஆராதனா (ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் நடித்தது) படத்தை, சிவகாமியின் செல்வன் என்று ரீ-மேக் செய்தோம்; .
சென்னையில் ஒரு வருடமும், தமிழகத்தில் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடிய இந்தி படத்தை, ரீ-மேக் செய்ய எடுத்த முடிவு சரியானதல்ல என்று உணர்ந்தோம்.
சிவாஜி- ஸ்ரீதேவி, பிரபு -ராதா நடித்த, "சந்திப்பு' என்ற படத்தை சிவாஜி பிலிம்சுக்காக இயக்கினேன். படம் சூப்பர் ஹிட்டாக, 25 வாரங்கள் ஓடியது.
பிரபுவை சங்கிலி படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, எனக்கு கிடைத்தது. இந்தி படத்தில், பிரபல வில்லன் டேனி டென்சோகப்பர் நடித்த பாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு அந்த ரோலுக்கு பிரபு பொருத்தமாக இருப்பார் என்று பட்டது. "டேய்... பிரபுவை போலீஸ் ஆபீசராக ஆக்கணும்ன்னு நான் பிளான் போட்டிருக்கேன். நடிப்புன்னா சரியாக வருமா?' என்று சந்தேகப்பட்டார் சிவாஜி.
"பிரபு பெரிய நடிகனாக வர முடியும் என்று எனக்கு மனதில் படுகிறது...' என்றேன்.
சிவாஜி நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, கவுரவம். "அண்ணே... இந்தப் படத்திலே ரொம்ப சூப்பராக பண்ணியிருக்கீங்க... ஆறு மாதம், எட்டு மாதம் எந்தப் படமும் பண்ணாதீங்க... ஜனங்க இந்தப் படத்தை மறக்க மாட்டாங்க...' என்று சொன்னேன்.
சினிமாவில் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்த சிவாஜி, அரசியலில் மட்டும் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்பது, எனக்கு புரியாத புதிராக இன்றும் இருக்கிறது.
"சிவாஜி மீது எனக்கு அபரிமிதமான பக்தி. என் வாழ்வில் எனக்கு கிடைத்த வெற்றி, திருப்பு முனைகள் எல்லாமே, அவரால் தான் கிடைத்தது. அவர் இல்லையென்றால், சி.வி.ராஜேந்திரன் திரைப்பட வாழ்க்கை இல்லை...' என்றார் சி.வி.ராஜேந்திரன்.
***
* சிவாஜியை வைத்து அதிகமான படங்கள் டைரக்ட் செய்திருக்கும் இயக்குனர்கள் நான்கு பேர். ஏ.பீம்சிங், ஏ.சி.திருலோகசந்தர் இருவரும் தலா, 18 படங்கள்; பி.மாதவன், சி.வி.ராஜேந்திரன் இருவரும் தலா, 14 படங்கள் இயக்கி உள்ளனர்.
* நாவலாசிரியர், நா.பார்த்தசாரதி எழுதிய பிரபலமான, "குறிஞ்சி மலர்' நாவலை, தூர்தர்ஷனுக்காக, 13 வாரங் கள், "டிவி' நாடகமாக சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஹீரோ அரவிந்த் ஆக நடித்தது, மு.க.ஸ்டாலின்.
*சிறிய நடிகரோ, பெரிய நடிகரோ, நடிகையோ, யார் நன்றாக நடித்தாலும், அவர்களை மனதார பாராட்டுவார் சிவாஜி.
*பல இயக்குனர்கள் கேட்டும், படங்களில் சொந்தக் குரலில் பாடு வதற்கு சிவாஜி ஒப்புக் கொள்ளவில்லை.
* 1954 முதல், 1970 வரை விடுமுறை நாட்கள் தவிர, படப்பிடிப்பு நடக்கும் நாட்களில், சிவாஜியைப் போல வேறு யாரும் வேலை செய்திருக்க முடியாது. காலை, 7:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை, மதியம், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, இரவு, 10:00 மணி முதல், நள்ளிரவு, 2:00 மணி வரை படப்பிடிப்பில் ஈடுபடுவார். ஒரு நாளைக்கு மூன்று கால்ஷீட்கள். விடியற்காலை, 3:00 மணிக்கு வீட்டில் சூடாக இட்லி சாப்பிட்டு, சோபாவிலே உட்கார்ந்து, ஒரு மணி நேரம் தூங்குவார். கோழி தூக்கம் என்று சொல்வரே, அதுபோல். 5:00 மணிக்கு எழுந்து, குளித்து, 6:30 மணிக்கு, மீண்டும் செட்டில் ரெடியாக இருப்பார்; அசுர சாதனை!
* பிற மொழிகளிலிருந்து, தமிழில் ரீ-மேக் ஆகும் பல படங்களில் சிவாஜி நடித்து, நூறு நாட்கள் வெற்றிப் படங்களாக ஓடி இருக்கின்றன. ரீ-மேக் படங்களில் நடிக்கும் போது, அந்த ஒரிஜினல் படங்களை, சிவாஜி பார்க்கவே மாட்டார். பிற நடிகர்களுடைய சாயல், பாதிப்பு வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை இதற்குக் காரணம்.
***
எஸ். ரஜத்
.................................................. .........................
1
கலாட்டா கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மறுதயாரிப்பாக 1978ல் மலையாளத்தில் "ஸ்நேகிக்கான் சமயமில்லா"
படமாக வெளிவந்தது.
1979ல் "அலியா தேவரு" ஸ்ரீநாத், கன்னநட மஞ்சுளா நடித்த கன்னட படமாக மறுபடியும் C V ராஜேந்திரன் அவர்களே இயக்கினார்.
2
சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் 1968 ல் "நாய்க்க சங்பாத்" என்ற வங்காளப் படமாக உத்தம்குமார், அஞ்சனாபவ்மிக் நடிப்பில் வெளிவந்த படம்
3
ராஜா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
1970ல் ஜானி மேரா நாம் தேவ் ஆனந்த், ஹேமாமாலினி நடித்தப்படம்.
1975ல் தெலுங்கில் "எதுருலேனி மனுஷி" படத்தில் NT ராமாராவ், வாணிஸ்ரீ நடித்தது.
1984ல் கன்னடத்தில் "அபூர்வ சங்கமா" ராஜ்குமார்,அம்பிகா நடித்தப்படம்.
4
நீதி 1972ல் சுஜாதா சினியார்ட்ஸ் தயாரிப்பில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சௌகார், சித்தூர் நாகையா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஹிந்தியில் 1971ல் ராஜேஷ்கண்ணா,மும்தாஜ் நடித்த துஷ்மன் என்ற படமாகும்.
5
பொன்னூஞ்சல் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
6
மனிதரில் மாணிக்கம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
7
சிவகாமியின் செல்வன் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
1969 ல் ராஜேஷ்கண்ணா, ஷர்மிளா டாகூர் நடித்த ஹிந்திப்படம். இது வங்காள மொழியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. ஃபிலிம் ஃபேர் விருது படத்திற்கும், சிறந்த நடிகைக்கான விருது ஷர்மிளா டாகூருக்கும் பெற்றுத்தந்தது.
1974 "கண்ணவாரி கலலு" தெலுங்கு படத்தில் ஷோபன்பாபு, வாணிஸ்ரீ நடித்தார்கள்
8
1974 ல் வந்த "வாணி ராணி" இந்தக் கதை நாயகிக்கானது. வாணிஸ்ரீக்கு இரட்டை வேடங்கள் ஒரு நாயகன் முத்துராமன் இன்னொரு நாயகன் நம்மவர். இது போன்ற கதையமைப்பில் நடிப்பதற்கு தனி தைரியம் வேண்டும். தன் திறமைமேல் நம்பிக்கை அசாத்திய நம்பிக்கை கொண்டவர் எந்த பாத்திரத்தையும் ஏற்க தயங்கியதில்லை. இது நிறைய படங்கள் படம் வெற்றிபெறத்தான் நம்மவரை தேர்தெடுத்தார்கள். கழக்கூத்தாடியாக வருவார் ஜாலியான பாத்திரம் "பாத்துப்போ பாத்துப்போ" பாடலிலும் வருகின்ற காட்சிகளிலும் பின்னியிருப்பார்.
1972ல் வெளிவந்த "சீதா ஆவுர் கீதா" ஹேமாமாலினி(வாணிஸ்ரீ), தர்மேந்திரா(சிவாஜி), சஞ்சீவ்குமார்(முத்துராமன்)
1973ல் "கங்கா மங்கா" தெலுங்கு படத்திலும் வாணிஸ்ரீ நடித்தார்கள் கிருஷ்ணா(சிவாஜி), சோபன்பாபு(முத்துராமன்) நடித்திருப்பார்கள்.
9
"என் மகன்" நடிகர்திலகம் இரண்டு வேடங்களில்
மஞ்சுளாவுடன் நடித்த படம். "நீங்கள் அத்தனை பேரும் உத்மர்தானா சொல்லுங்கள்" பாடலில் அன்றைய அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் இன்றைய அரசியல்வாதிகளின் தோலை உரித்த படம். மினிஸ்டர் காட்டன் போட்டு மறைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
இந்தப்படம் 1972ல் மனோஜ்குமார், ராக்கி, பிரான் ஆகியோர் நடித்த "பி-இமான்" (Be-Imaan)
என்ற ஹிந்தி படத்தின் மறு தயாரிப்பு.
10
உனக்காக நான் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப்படம் 1974 "நமக்கரராம்" (Namak Haraam)
ராஜேஷ் கண்ணா , அமிதாப் பட்சன் நடித்த படம்.
இதன் மறுதயாரிப்பு உனக்காக நான்.
11
சங்கிலி என்பது 1982 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பிரபு, ஸ்ரீபிரியா, நம்பியார் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சி. வி. ராஜேந்திரன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இந்த படம் இளையதிலகம் பிரபுவின் முதல் படம்.
இத்திரைப்படம் 1976ல் வந்த "காலிசரண்"என்ற ஹிந்திபடத்தின் மறு தயாரிப்பு. இந்த படத்தில் சத்ருக்கன் சின்ஹா(சிவாஜி) ரீனாராய், டானி(பிரபு) நடித்திருந்தினர்.
1985ல் பதமுதயம் (Pathamudayam) என்ற மலையாள படமாக மறுதயாரிப்பில் மோஹன்லால் நடிப்பில் வந்தது.
12
"தியாகி" 1982ல் நடிகர்திலகம், சுஜாதா நடித்த படம். இந்தப்படம் 1981ல் அம்பரீஸ், லஷ்மி நடித்த வந்த "அந்தா" என்ற கன்னட படத்தின் மறுதயாரிப்பு.
13
"சந்திப்பு" 1983ல் நடிகர்திலகம், பிரபு,ஸ்ரீதேவி,சுஜாதா நடித்து மிகப்பெரிய வெற்றியை தந்தப்பபடம் இந்தப்படம் 1981ல்
அமிதாப்,ஹேமாமாலினி,ரிஷிகபூர்,சத்ருக்கன் சின்ஹா, பிரான் நடிப்பில் "நஸீப்" (Naseeb) என்ற இந்தி படமாக வந்தது. இதன் மறு தயாரிப்புத்தான் சந்திப்பு.
14
வாழ்க்கை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படம் 1983ல் ராஜேஷ்கண்ணா, ஷப்னா ஆஸ்மீ நடித்த "அவ்தார்" என்ற ஹிந்தி படத்தின் மறுதயாரிப்பு.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...ab&oe=5AD5B97F
Sekar Parasuram
இன்று பிற்பகல் 1:30 க்கு வானவில் தொலைக்காட்சியில்
" எங்கிருந்தோ வந்தாள்"
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b1&oe=5AA54B44
vasu devan
"கருடா சௌக்கியமா?" ஆய்வுக் கட்டுரை. (நான்காம் பாகம்).
(கொடுத்திருக்கும் இமேஜ்களில் திலகத்தின் தெனாவட்டை கவனியுங்கள்)
N.T. ஏதோ ஒரு காரணத்திற்காக தன்னைப் பழிவாங்கத் துடிப்பதைப் புரிந்து கொள்ளும் சங்கிலி முருகன் N.T.யைக் கொல்ல ஒரு அடியாளை ஏற்பாடு செய்வார். வீட்டில் N.T யிடம் நைசாகப் பேசிக்கொண்டே சங்கிலி முருகன் N.T யின் பின்னல் ஒளிந்து நிற்கும் அந்த அடியாளிடம் N.T.யைக் கொலை செய்யச் சொல்லி சைகை செய்ய, N.T விஷயம் தெரியாதவாறு வேறொரு பக்கம் பார்த்தபடி நின்று கொண்டிருப்பார். அந்த அடியாள் பின்னாலிருந்து N.T. யை அடிக்க நெருங்குகையில் N.T. சற்றும் எதிர்பாரவிதமாக அந்த அடியாளைப் பார்க்காமலேயே
"டேய்! கபாலிக் கய்தே! வந்து அடியேண்டா...எவ்வளவு நாழி காத்துகிட்டு இருக்கிறது?"
என்பாரே பார்க்கலாம்! அந்த அடியாள் N.T யின் அடியாள் கபாலிதான் என்பது தெரியாமல் அவனையே N.T. யைக் கொலை செய்யக் கூட்டி வந்து பேந்தப் பேந்த முழிக்கும் சங்கிலி முருகனைப் பார்த்து,
"ஹஹ்ஹா"....என்ற கேலியோடு கூடிய வெறித்தன சிரிப்பை சிதற விட்டுவிட்டு N.T
"என் ஆளை வச்சே என்னை மடக்கப் பார்த்தியா?
நீ என்ன பெரிய புத்திசாலின்னு நெனப்பா?
நான் யாரு தெரியுமா? உங்க தாத்தா" என்று எகத்தாளம் புரிவது எக்ஸலன்ட்.
பின் தொடர்ந்து சங்கிலி முருகனிடம்,
"உன்னை income tax-இல் காட்டி கொடுத்ததும் நான்தான்...
உன் கம்பெனியெல்லாம் ஸ்ட்ரைக் பண்ணச் சொன்னது நான்தான்...
உன் பார்ட்னரை உன்னை விட்டு விலகச் சொன்னது நான்தான்...(இந்த இடத்தில் கீழே தரையில் இருக்கும் சின்னஞ்சிறு வட்டத் திண்டு ஒன்றின் மேல் திமிர்த்தனமான வெறியோடு வலது காலைத் தூக்கி வைப்பார்)
உன் மேனேஜரை விட்டே என்னை இங்கு கூட்டிட்டு வரச் சொன்னதும் நான்தான்"...
என்று படிப்படியாகத் பழி உணர்வைத் தன் குரலில் உயர்த்தி,
"சகலமும் நானே! காரியமும் நானே! எப்படி என்னுடய கீதாபதேசம்" என்றபடி கையில் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை படு ஸ்டைலாக சுண்டிவிட்டு,பார்வையில் அனல் கக்க வைத்து விஸ்வரூபம் எடுத்த கிருஷ்ண பரமாத்வாக சங்கிலி முருகனை கதிகலங்க வைப்பார். (நம்மையுந்தான்)
"எப்படி என்னுடய கீதாபதேசம்" சிகரெட்டை ஸ்டைலாக சுண்டிவிடும் காட்சி
உடன் சங்கிலி முருகன் N.T யின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க, N.T அவரைத் தூக்கி நிறுத்தி,
"இப்ப கால்ல விழுந்தா உன்னை நான் மன்னிச்சிடுவேன்னு நெனச்சியா?...அன்னைக்கு உன் கார்ல அடிபட்டு குத்துயிரும், கொலையுயிருமா கிடந்தாளே மேரியம்மா...அவள என்னா ஏதுன்னு கூடப் பார்க்கம நாயை அடிக்கிற மாதிரி அடிச்சுப் போட்டுட்டு குடிவெறியில காருல பறந்துட்ட இல்ல...அவ யார் தெரியுமா... என் தாய்...என் தாயாருங்கிறதுக்காக மட்டும் நான் சொல்லல..எதிரியாய் இருந்தாலும் மனிதாபிமானத்தோடு நடந்துக்கணும்... நீ செய்தியா?...இல்ல...ஏன்?"
என்று சங்கிலி முருகனின் தோள்களைத் திருப்பி அவர் நெஞ்சில் வலது கைவிரல்களை மடக்கி முஷ்டியால் மூன்று முறை குத்தியபடியே,
"பணக்காரன்ற திமிர்...நீ செஞ்ச குத்தத்த மறைக்கணும்கிறதுக்காக கேவலம் பிச்சக் காசு பத்தாயிரம் கொடுத்தனுப்பிச்சே இல்லே...
எங்க அம்மாவோட விலை கேவலம் பத்தாயிரம் ரூபா இல்ல...
உன் கேசுல நானே பெர்சனலா ஏன் interfere ஆகி இருக்கேன் தெரியுமா?
என் ஆட்களை அனுப்ச்சா உன்னை ஒரேயடியா"
என்று நிறுத்தி
தன் கரத்தை பக்கவாட்டில் வலதும் இடதுமாக அசைத்து தீர்த்துக் கட்டுவது போன்ற பாவனையில் "விஷ்" என்று சற்று நிறுத்திவிட்டு (கையால் வெட்டுவது போன்ற படு அலட்சியமான ஒரு மூவ்மென்ட்டைக் கொடுப்பார். இந்த குறிப்பிட்ட ஒரு செய்கைக்காகவே இந்தப் படத்தை ஓராயிரம் முறை பார்க்கலாம்)
"குளோஸ் பண்ணிடுவாங்க"...என்று தொடருவார்.(இந்த மூன்று நிமிடக் காட்சியில் நடிகர் திலகத்தின் அற்புதமான டயலாக் டெலிவரியுடன் கூடிய அனாயாசமான அந்த சூறாவளி நடிப்புப் பரிமாணம் மற்ற அவர் படங்களிலிருந்து இந்தப் படத்தை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டும்)
பின் தொடர்ந்து,
"நீ அப்படி சாகக் கூடாது...உன் உயிர் இருக்கிற வரைக்கும் அணு அணுவா... (நிறுத்தி திரும்ப ஒருமுறை உச்சரிப்பார்) அணு அணுவா...துடிச்சி சாகணும்... (இந்த இடத்தில் வலது கை விரல்களை ஒன்று சேர்த்துக் குவித்து, விரித்து பின் மறுபடியும் குவித்து விரித்து அணு அணுவாக என்ற வார்த்தைக்கேற்ப அற்புதமான அசைவை அசால்ட்டாக பிரதிபலிப்பார்) நான் சொல்றது உனக்கு மட்டுமில்லே!... பணத்த வச்சுகிட்டு செஞ்ச குற்றத்த மறைக்கப் பார்க்குறானுங்களே...அத்தனை பணக்காரப் பசங்களுக்கும் இந்த தீனதயாள் விடுற எச்சரிக்கைடா டாய்"
என்றபடி தன் வலது பக்க மீசையை அத்தனை விரல்களாலும் தடவியபடியே கம்பீரமான எச்சரிக்கை விடுவது தமிழ் சினிமாவிற்கு புது இலக்கணம். பின் அவரது பாணியில் "bastard" என்று மிரட்டிவிட்டு செய்வாரே ஒரு அமர்க்களம்...
கீழே விழுந்து கிடக்கும் அவரது துண்டை சங்கிலி முருகனிடம் எடுக்கச் சொல்லும் அந்தத் திமிரும் தெனாவட்டும் இருக்கிறதே! அடேயப்பா...அதுதான் ஹைலைட்..
"எட்றா துண்டை" என்று மிரட்டும் பயங்கரம்,
அந்த வார்த்தையை உச்சரிக்கும் தொனி,
துண்டை சங்கிலி முருகன் எடுத்துக் கொடுத்தவுடன் அதை ஸ்டைலாக கழுத்தில் போட்டுக் கொள்ளும் லாவகம்,
"be careful" என்று எச்சரித்துவிட்டு ஒரு ஸ்டெப் முன்னால் சென்று மறுபடி அதே ஸ்டெப்பை திரும்ப பின்னால் வைத்து "ம்" என்று ஆங்காரத்துடன் முறைத்துவிட்டுப் போகும் பயங்கரம்... (அந்த மனிதரைத் தவிர யாராவது இனியொருவர் பிறக்க முடியுமா?) சும்மா நெத்தியடி..
போதை மருந்து கடத்தச் சொல்லி N.T யிடம் பணம் தந்து பேரம் பேசுவார்கள் சிலர். அதை மறுத்து ஒதுக்கிவிட்டு,மாறாக அவர்களை அந்தத் தொழிலைச் செய்யக்கூடாது என்று மிரட்டி அனுப்பி வைப்பார் N.T. ஏற்கனவே பணத்துக்கு ஆசைப்பட்ட தியாகராஜன் N.T. பணம் வாங்க மறுத்ததைக் கண்டு பணம் தர வந்த கும்பலிடம் தன்னிடம் பணத்தைத் தருமாறும், தான் N.T யிடம் சொல்லி போதை மருந்து கடத்த சம்மதம் வாங்கித் தருவதாக N.T. முன்னிலையிலேயே சொல்ல,அதைக் கேட்டு ஆத்திரமுறுவார் N.T. தியாகராஜன் N.T யிடம்,"உட்கார்ந்த எடத்துல பணம் வந்தா நோகுதா?...உங்களால முடியலைனா பேசாம ஒரு மூலையில் போய் உட்காருங்க...நான் பாத்துக்கிறேன்" என்று கூற, தான் வளர்த்த கடா தன் பேச்சுக்குக் கட்டுப்படாமல் தன் மீதே பாய்கிறதே என்று கோபத்தில் கொதித்து வெகுண்டெழுவார் N.T.
தன் தன்மானத்துக்கு கேடு விளைவித்ததோடு மட்டுமில்லாமல், தன் தாதா பதவிக்கே ஆசைப்பட்டுவிட்டானே என்று கண்மண் தெரியாமல் தியாகராஜனை போட்டிப் புரட்டி எடுத்து விடுவார் N.T. இந்த இடத்தில் இன்னொரு பிரளயத்தை நடத்திக் காட்டுவார் N.T. தியாகராஜனை விளாசிவிட்டு தரையில் அமர்ந்து கொண்டு சிகரெட்டைப் பற்றவைப்பார்.
"சே! சொறிநாயை விடகேவலமா போயிட்டடா நீ! நானும் பாத்துகிட்டே வரேன்...அன்னைக்கு என்னாடான்னா மம்மி செத்ததுக்கு பணம் கொண்டாந்து கொடுத்தே!...இன்னைக்கு என்னாடான்னா பணம் கொடுங்க! செய்வாருன்னு சொல்ற...இங்க ரெண்டு opinion க்கு இடம் கிடையாது...ஒரே opinion தான்... (இந்த இடத்தில் சிகரெட் புகையை ஒரு இழு இழுத்துவிட்டு நிறுத்தி பின்) அதுவும் அய்யாவோட opinion தான்... என் மூஞ்சியிலேயே முழிக்காதே"...என்ற ஆத்திரம் கலந்த வேதனையை வெளிப்படுத்துவார்.
பின்னால் அடிபட்டு நிலைகுலைந்து கீழே விழுந்து கிடக்கும் தியாகராஜன் தட்டுத் தடுமாறி எழுந்திருக்க முயல உடனே N.T தியாகராஜனைப் பார்க்காமலேயே கன்னத்தில் ஒரு கையை வைத்தபடி, "அப்படியே போடான்னா அப்படியே போகணும்" என அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிட, எழ முயற்சித்த தியாகராஜன் படுத்த வாக்கில் குழந்தை போல தவழ்ந்து செல்லும் போது தியேட்டரில் கரகோஷம் காதுகளை கிழித்தது இன்னும் நன்றாக எனக்கு நினைவிருக்கிறது. தான் வளர்த்தவனே தனக்கு எதிராகத் திரும்பி விட்டானே என்ற வேதனை ஒருபுறம்... சிறுவயது முதற்கொண்டே பாசத்துடன் வளர்த்தவனை முதன் முதலாக அடித்துத் துவைத்து விட்டோமே என்ற சோகம் ஒருபுறம் என இருவேறுபட்ட உணர்வுகளையும் கண்களின் மூலமாகவே மாறி மாறிப் பிரதிபலித்து பிய்த்து உதறி விடுவார் நம்மவர்.
(ஆடம்பர செட்டுகள் இல்லை...படாடோப உடைகள் இல்லை...வெளிநாட்டு படப் பிடிப்புகள் இல்லை...கவர்ச்சி அம்சங்கள் எதுவும் இல்லை...டிஷ்யூம் டிஷ்யூம் என்று காது கிழியும் சமாச்சாரங்களும் இல்லை. கார் சேசிங்குகள் இல்லை... மசாலாத் தூவல்கள் இல்லை...கண்களைப் பிசைய வைக்கும் சோகக் காட்சிகள் கூட இல்லை...'வியட்நாம் வீடு' சுந்தரத்தின் அறிவார்ந்த வசனங்கள் துணையோடு ஜாலியான,புத்திசாலித்தனமான, குறும்பு கொப்பளிக்கும், எதைக் கண்டும் அஞ்சாத, எதையும் வெற்றி கொண்டு பவனி வரும் தீனதயாளு தாதாவாக அட்டகாசமாய் ஒன்லி இதுவரை காணாத நம் இதய தெய்வம் நடிகர் திலகம்.... நடிகர் திலகம்... நடிகர் திலகம் மட்டுமே இப்படத்தில்)
(தீனதயாளுவின் அட்டகாசங்கள் தொடரும்).... .
அன்புடன்,
வாசுதேவன்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...09&oe=5A8C5A51
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...d4&oe=5AD39BEB
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...1b&oe=5AD4E4C1
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...c6&oe=5A9C16E8
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...9f&oe=5A8A2988
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...02&oe=5AD1FB81
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a2&oe=5AD7B467
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
143 வது வெற்றிச்சித்திரம்
பாதுகாப்பு வெளியான நாள் இன்று
பாதுகாப்பு 27 நவம்பர் 1970
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...66&oe=5A98D0D8
Jahir Hussain
எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் ( இன்று வரை கக்கன் போல் ஒரு சிறந்த அமைச்சர் தமிழகம் பார்க்கவில்லை என்பது அரசியல் ஆய்வா...ளர்கள் கருத்து ) அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர்திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்ததாக நினைவு.
நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது.
நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப்பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம்.
நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத்தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
நன்றி.. திரு. ரா. ராஜகோபாலன்..
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...17&oe=5AD485A2
.................................................. ........................
kannappan vellingiri
இதுவரை நான் அறிந்திராத நெகிழ்ச்சியான செய்தி... திலகம் அவர்கள் எண்ணற்ற நற்காரியங்கள் ஆற்றியுள்ளதாகவும், ஆனால் எதையும் விளம்பரப் படுத்தியதில்லை எனஅறிந்தவர்கள் கூறுவர். இந்நிகழ்வை பதிவிட்டதற்கு ஜாகிர் சாருக்கு நன்றி.
.................................................. ................................
Arun bhaskar
இது போல பல நிகழ்ச்சிகள் நடிகர்திலகம் விளம்பரமின்றி வாரி வழங்கியிருக்கிறார்,,,,,
ஆனால் சில கருங்காலிகள் அந்தகால கட்டத்தில் அவர் கஞ்சன் என்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தை திட்டமிட்டே நடத்தினார்கள். இப்போதுபோல தகவல்நுட்ப வசதியில்லாத காலத்தில் பொய்ப் பிரச்சாரத்தை குறிப்பிட்ட நபர்கள் நம்பியதுதான் வேதனை,,,,
.................................................. ............
Rajaprasadh
இதே போலதான் மறைந்த கம்யூ தலைவர் ஜீவானந்தம் வறுமையில் தொண்டறம் செய்து மறைந்தபோது அவரது குடும்பத்திற்காக நாடகங்கள் நடத்தி ஒரு பெரும் தொகையை கர்மவீரர் வழியே சேர்த்தார் அந்த தொகையினால் வந்த வீட்டில்தான் அவரது குடும்பம் இருந்தது என்று ஐயனின் தீவிர ரசிகரான என் அப்பா பல முறை சொன்னதுண்டு..காங்கிரஸ் காரரான சிவாஜிதான் கம்யூ தலைவரின் நிர்கதியான குடும்பத்தை வாழ வைத்தாரப்பா என்று கம்யூகளுடன் அரசியல் வாதாடும் போது சொல்வதை பலமுறை நான் சிறுவனாக இருக்கிற போது கேட்டுள்ளேன்
.................................................. .............
Rajendran Palaniapillai
எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும் போதும் "தங்க பதக்கம்."
நாடகம் போட்டு வசுலை தந்தார்.
முதல்வர் தங்க செயின் பரிசளித்தார்.
அதையும் ஏலம் விட்டு அதையும்
முதல்வரிடம் வழங்கினார்.
செயினை சாண்டோ சின்னப்பா தேவர் ஏலம் எடுத்து பேபி இந்திராவுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கு அப்புறம் எம்.ஜி.ஆர். சிவாஜி யை தன்
நெருக்கத்திலேயே வைத்துக் கொண்டார்.
என்பதும் ஒரு வரலாறு.
...............................................
Murali Srinivas
நேற்று மாலை நமது NT Fans அமைப்பின் சார்பாக ஊட்டி வரை உறவின் 50வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையோ இணைத்துளேன். விழா பற்றிய பதிவு விரைவில்.
அன்புடன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...27&oe=5A8C8B8F
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...6f&oe=5AA29FA2
Ramiah narayanan
எங்கள் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிகர் திலகமும், நடிகர் அசோகனும் இணைந்து நடித்தார்கள். ஒரு காட்சியில் நடிப்பதற்கு அசோகன் பல டேக்குகள் ...வாங்கினார். அங்கிருந்த சிவாஜி அவரை இப்படி நடிக்கச் சொல்லுங்கள் என்று எங்களுக்கு நடித்துக் காட்டினார். அதில் பத்து பர்சன்ட்தான் அசோகனால் நடிக்க முடிந்தது. அந்த 10% நடிப்பிற்கே அவ்வளவு பாராட்டுக்கள் வந்து குவிந்தது. 10 பர்சன்டுக்கே இவ்வளவு பாராட்டுக்கள்... அவர் சொல்லிக் கொடுத்தபடி 100 சதவீதம் நடித்திருந்தால்...? நாங்கள் வியந்துபோனாம்.
- ஏவிஎம் சரவணன்.
vee yaar
image is of a fan of Thalaivar who met him at Ceyon when NT was invited for the award of the title "Kalaikurisil"
courtesy: https://tvaraj.com/2017/04/29/i-met-...lavinia-hotel/
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...3c&oe=5A88F89D
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
125 வது வெற்றிச்சித்திரம்
உயர்ந்த மனிதன் வெளியான நாள் இன்று
உயர்ந்த மனிதன் 29 நவம்பர் 1968
https://resizing.flixster.com/9IUAJo...MDA7MTEwOzE1MA
https://upload.wikimedia.org/wikiped...a_Manidhan.jpg
https://i.ytimg.com/vi/MTy25m6Xpi0/maxresdefault.jpg