http://i68.tinypic.com/142h0sp.jpg
Printable View
தனியாக ஒரு சிறுவன் மக்களின் முதல்வர் எம்.ஜி.ஆர். வேடமிட்டு காட்சி அளித்தபோது
http://i67.tinypic.com/25t9id1.jpg
நிகழ்ச்சிக்கு முன்பாக ஆலோசனை கூட்டம் நடந்தபோது
http://i66.tinypic.com/vpx95d.jpg
நடிகை சவுகார் ஜானகியுடன் திரு.எம்.ஏ. முத்து
http://i64.tinypic.com/30m7pyb.jpg
நடிகை சவுகார் ஜானகியுடன் திரு.பி.எஸ். ராஜு
http://i64.tinypic.com/106ehrt.jpg
திரு.பி.எஸ். ராஜு ,திரு.துரை கருணாவுடன்
http://i66.tinypic.com/wtydyp.jpg
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.மோகன்குமார், பெங்களூரு .
http://i67.tinypic.com/20t2e68.jpg
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.மோகன்குமார், பெங்களூரு .திரு.எம்.ஏ. முத்து மற்றும் சிலர்
http://i67.tinypic.com/2py6kis.jpg
நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு.மோகன்குமார், பெங்களூரு .திரு.எம்.ஏ. முத்து திரு.ரவி ,பெங்களூரு மற்றும் சிலர்
http://i67.tinypic.com/vxm638.jpg
கடந்த ஞாயிறு அன்று (8/7/18) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இன்னிசை நிகழ்ச்சி பற்றிய விளம்பரம் .
http://i64.tinypic.com/205r1ig.jpg
சூப்பர் ஹீரோ மாத இதழ் -ஜூலை 2018
http://i67.tinypic.com/x7k8m.jpg
நெல்லை ரத்னாவில் கடந்த ஞாயிறு (8/7/18) மாலை காட்சியின்போது நெல்லை எம்.ஜி.ஆர். பக்தர்கள், திருவாளர்கள் ஜாலி, ஆறுமுகம், வி.ராஜா, ஆழ்வை ராஜப்பா மற்றும் பலர் சேர்ந்து மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பேனருக்கு ஆரத்தி, ஆராதனைகள் செய்த காட்சி.
http://i64.tinypic.com/3005h6o.jpg
புகைப்படம் உதவி : திரு.நெல்லை ராஜா .
தமிழ் இந்து -10/7/18
http://i65.tinypic.com/b5fqbo.jpg
10/7/18 மாலை முரசு
http://i67.tinypic.com/2ywenlz.jpg
எம்.ஜி.ஆரின் பெருமைகளையும் அவரது பண்புகளையும் பாராட்டி, இன்னொரு முக்கியமான தமிழறிஞரும் அவரை வாழ்த்தி, ‘‘குன்றனைய புகழ் கொண்ட குணக்குன்றே…’’ என்று தொடங்கி கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதையில்,
‘‘வென்றாரும் வெல்வாரும் இல்லா வகையில்
எந்நாளும் ஒளிவீசும் தண்மதியே!
தென்னாடும் தென்னவரும் உள்ளவரை
மன்னா! உன் திருநாமம் துலங்க வேண்டும்!
உன்னாலே உயர்வடைந்த என் போன்றோர்
உள்ளங்கள் அதைக் கண்டு மகிழ வேண்டும்!’’
என்று அந்தத் தமிழறிஞர் வாழ்த்தியுள் ளார். அவர்… கலைஞர் மு.கருணாநிதி!
பாரத ரத்னா எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் வகையில் தமிழக அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சினிமாவில் நடித்தபோதும், தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும் மக்களை சந்திப்பதற்காக தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தை எம்ஜிஆர் பயன்படுத்தினார்.
எம்.ஜி.ஆர் என்ற மூன்று எழுத்து மந்திர சொல்லுக்கு தமிழக மக்கள் கட்டுண்டு கிடந்தார்கள் என்பது கடந்த கால வரலாறு என்று முடித்து விடமுடியாது. எம்ஜிஆர் மறைந்து 30 ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயரை உச்சரிக்கும் போது இளைய சந்ததியினரும் உற்சாகம் அடைகின்றனர்.
அதற்கு காரணம் சினிமாவில் அவரது துடிப்பான நடிப்பும் மட்டுமல்ல. அரசியலில் ஏழை மக்களுக்கு அவர் ஆற்றிய பணியும் தான். 1970ம் ஆண்டுகளிலிருந்து தியாகராயநகரில் உள்ள அலுவலகத்தில் தான் சினிமா தொடர்பான முடிவுகளையும் அரசியலில் முக்கிய முடிவுகளையும் எடுத்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த எம்.ஜி.ஆர் பெற்ற விருதுகள் அத்தனையும் இந்த இல்லத்தில் அழகாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மனதிடத்துடன் உடல் திடத்துடன் இருக்க வேண்டும், தீய பழக்கங்களை ஒரு போதும் அண்ட விடக் கூடாது என்று உறுதியுடன் வாழ்ந்த எம்.ஜி.ஆர், தமது படங்களில் அது போன்ற காட்சியில் ஒருபோதும் நடித்தது இல்லை..தம்மை பின்பற்றும் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டினார். அவர் தினமும் உடற்பயிற்சிக்கு பயன்படுத்திய கருளா கட்டை, தம்ப்ல்ஸ் என அனைத்தும் அப்படியே இந்த இல்லத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
கொடி நாள் நிதிக்காக 75,000 ரூபாய் அளித்ததற்கு அப்போதைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதம், ராஜீவ்காந்தி பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் எழுதிய கடிதத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெகிழ்ச்சியுடன் ராஜீவ்காந்தி எழுதிய கடிதம், எம்.ஜி.ஆர் வாங்கிய பல்வேறு பட்டங்கள், பாரத ரத்னா விருதுகள் என அனைத்தும் இந்த இல்லத்தில் கால பெட்டகங்களாக இருக்கின்றது என்கின்றனர் பார்வையாளர்கள்.
கால சக்கரங்கள் சுழன்றாலும் கால தேவனை விஞ்சி நிற்கும் எம்.ஜி.ஆரின் புகழ் நூற்றாண்டு கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்பதே அவரது அபிமானிகளின் திடமான நம்பிக்கையாகும்.
courtesy net
மறைந்தும் மறையாத மாமனிதர்!
கா.இர. குப்புதாசு
தமிழக சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு சக்தியாக எம்.ஜி.ஆர். இருந்து
வருகிறார் என்பதை யாரும் மறுக்க இயலாது. அவர் மறைந்து 30
ஆண்டுகளுக்குப் பின்னும், தமிழகத்திலுள்ள குக்கிராமம் முதல் மாநகரம் வரை
எல்லாப் பகுதிகளிலும் தனக்கென ஒரு வாக்கு வங்கியை அவர் தக்க வைத்துக்
கொண்டிருப்பது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். வேறு எந்த நடிகருக்கும்
இல்லாத அளவுக்கு, இன்னும் அவரது திரைப்படங்கள், பல நூறு தடவைகள்
திரையிடப்பட்ட பின்னும், ரசிகர்களின் ஆதரவைப் பெறுகின்றன என்றால் அதற்கு
என்ன காரணம் என்பது விளக்கவே முடியாத புதிராகத்தான் இருக்கிறது.
நடிகனாக, அரசியல்வாதியாக எம்.ஜி.ஆர். தன்னை அடையாளம் காட்டிக் கொண்டதைவிட
ஒரு சமுதாய சிந்தனாவாதியாக, மனிதாபிமானமுள்ள மனிதனாக, தனிமனித
நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் என்பதுதான் அவரது
தனிச்சிறப்பு. "கலைவாணர்' என்.எஸ். கிருஷ்ணனின் அடிச்சுவட்டில், சமுதாய
சிந்தனையுடன் தனது கலைப்பயணத்தையும், மனித நேயத்துடன் தனது தனிமனித
வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டவர் என்பதுதான் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!
எம்.ஜி.ஆரின் இன்னொரு பெருமைக்குரிய, சமுதாயத்துக்கு வழிகாட்டும்
அற்புதப் பண்பு எது என்று கேட்டால், தெய்வத்தைக் காண முடியாத மனிதப்
பிறவிகளுக்கு வாழும் தெய்வமாகப் பெற்ற தாயையே சுட்டிக்காட்டி, ஏற்று
வணங்கி, அதன்மூலம் மற்றவர்களையும் தாயை வணங்கிப் போற்ற வைத்தது எனலாம்.
அவரது கடந்தகால நிகழ்வுகளில் உண்மையான தொண்டனாகப் பங்கேற்றது ஒரு சில
நிகழ்ச்சிகளில் மட்டுமே என்றாலும் அந்த நிகழ்வுகள் இன்றுவரை எனது
நெஞ்சில் நீங்காத தாக்கமாகத் தொடர்கிறது.
1972-ம் ஆண்டு. எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட
காலகட்டம். இதனை ஜீரணிக்க முடியாத ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாள்தோறும்
அவரைச் சந்திக்க சென்னை நோக்கி வந்தனர். அனைவரையும் அவர் அடையாறு சத்யா
ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு ஆறுதல் சொல்ல வந்த தொண்டர்களை
நூறு நூறு பேர்கள் கொண்ட குழுவாக அழைத்து சந்தித்து அவர்களுக்கு ஆறுதல்
சொல்லி அனுப்புகின்ற விசித்திர நிகழ்வை தமிழக அரசியல் அப்போதுதான்
பார்த்தது. இப்படி ஒரு தனிமனிதருக்காக அதற்கு முன்னும் சரி, பின்னாலும்
சரி மக்கள் கொதித்தெழுந்து தங்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்ததுபோல மனம்
நொந்த சம்பவம் நிகழ்ந்ததில்லை.
அவ்வாறு சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்ட குழுவில் ஒருவனாக நானும் இருந்தேன்.
எங்களிடம் எம்.ஜி.ஆர். பேசும்போது அன்றைய மதுரை மேயரும், திமுகவின்
முன்னோடித் தலைவர்களில் ஒருவருமான மதுரை முத்துவைப் பற்றிய பேச்சு
வந்தது. மதுரை முத்து அப்போது திரையிடப்படவிருந்த "உலகம் சுற்றும்
வாலிபன்' படத்தை மதுரை மாநகரில் திரையிட விடமாட்டேன் என்று ஆவேசத்துடன்
கூறி வந்த நேரம் அது.
மதுரை முத்துவை குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். பேசும்போது முத்தண்ணன் என்று
குறிப்பிட்டுப் பேசினார். ஆவேசத்துடன் இடைமறித்த நான் "அந்த துரோகியை
அண்ணன் என்று சொல்லாதீர்கள்' என்று பலம்கொண்ட மட்டும் கத்தினேன்.
எம்.ஜி.ஆர். தன் பேச்சை நிறுத்திவிட்டு என்னை நோக்கி, "நீ நம்
கட்சிக்காரனா? அல்லது வேற்றுக் கட்சிக்காரனா?' என்று கோபமாகக் கேட்டார்.
"நான் எந்தக் கட்சியும் கிடையாது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகன். இதோ
பாருங்கள் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற அடையாள அட்டை' என்று
எடுத்துக்காட்டினேன். கோபம் தணிந்த அவர் என்னை அருகில் அழைத்துத் தட்டிக்
கொடுத்தார்.
""தம்பி இன்று முத்தண்ணன் என்னை தாக்கி பேசுகிறார் என்பதற்காக திராவிட
இயக்க வளர்ச்சிக்காக அவர் ஏற்றுக்கொண்ட தியாகத் தழும்புகளை மறந்துவிட
முடியுமா? ஏன் அவரே நாளை நம் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து
நம்மோடு வந்து சேரமுடியாது?'' என்று கேட்டார். நானும் என்னைப் போன்று
ஆவேசமடைந்த ரசிகர்களும் அமைதியானோம். அவரது கூற்றின்படியே முத்தண்ணன்
பின்னாளில் எம்.ஜி.ஆரிடம் வந்து இணைந்த நிகழ்ச்சி எம்.ஜி.ஆரின் பண்பட்ட
அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்க தரிசனத்தையும் எங்களுக்கு
உணர்த்தியது.
செஞ்சி நகரச் செயலாளராக இருந்த என் நண்பர் கு. கண்ணனின் திருமண விழா.
செஞ்சி சந்தை மேடு மைதானத்தில் திருமணப் பந்தல் போடப்பட்டிருந்தது. அன்று
திங்கள்கிழமை. மேடையில் மணமகன் கண்ணனுடன், செஞ்சித் தொகுதி அமைப்பாளர்
கோ. கிருஷ்ணசாமி, மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
அமரர் சி. வேணுகோபால் (முன்னாள் அமைச்சர் சி.வே. சண்முகத்தின் தந்தை)
ஆகியோர் இருந்தனர்.
முகூர்த்த வேளை முடியும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சரியாக 7.20
மணிக்கு எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்தார். நான் ஒலிபெருக்கியில் இந்தத்
திருமணத்தை தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையேற்று நடத்தித்தர வேண்டுமென
முன்மொழிகிறேன் என்று சொன்னேன்.
எம்.ஜி.ஆர். என்னை இடைமறித்து, ""பேச்செல்லாம் இப்போது வேண்டாம். எங்கே
மணமாலை எடுங்கள்''! என்று மாலையை வாங்கிக்கொண்டு உடனடியாக மாலையை
மாற்றித் தாலியைக் கட்டச் சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.
""இன்று திங்கள்கிழமை, காலை 7.30 மணிக்கு ராகு காலம் தொடங்குகிறது.
அதற்குமுன் திருமணத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில்தான்
ஓடோடி வந்தேன்.
எனக்கு இந்த ராகுகாலத்தின்மீது நம்பிக்கை கிடையாது. நாடோடி மன்னன்
படத்திற்கு ராகுகாலத்தில்தான் பூஜை போட்டேன். என் சொத்தையெல்லாம் அடமானம்
வைத்துப் படத்தை எடுத்தேன். இதோடு இந்த இராமச்சந்திரன் தொலைந்தான் என்று
திரையுலகைச் சேர்ந்த அனைவருமே என் காதுபடவே பேசினார்கள். ஆனால், நானோ என்
உழைப்பின் மீதும் தமிழக மக்களின் மீதும் நம்பிக்கை வைத்து, ""படம் வெற்றி
பெற்றால் நான் மன்னன் - தோற்றால் நாடோடி, அவ்வளவுதானே!'' என்று சொன்னேன்.
நாடோடி மன்னன் வெற்றி பெற்றது. உழைப்பும் நம்பிக்கையும் என்னை வாழ
வைத்தது.
என்னைப் போலவே என் தம்பி கண்ணனும் ராகு காலத்தில்
நம்பிக்கையில்லாதவர்தான். ஆனால், அவருக்கு பெண் கொடுக்கும் பெற்றோர்களும்
எங்களைப் போலவே இருக்க வேண்டும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்க்க
முடியும்? தாம் பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி வளர்த்த தன் பெண்ணையே
என் தம்பிக்கு தாரைவார்த்து கொடுக்கும் அந்த பெற்றோர்களும் அவர்களின்
உறவினர்களும் அணு அளவும் மனம் சஞ்சலமடைய நானோ, என் தம்பி கண்ணனோ காரணமாக
இருக்கலாமா? ஆதலால்தான் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
இத்திருமணத்தை முகூர்த்தவேளை முடிவதற்கு முன்னமேயே விரைவாக நடத்தினேன்''
என்று விரிவாகப் பேசி மணமக்களை வாழ்த்தினார்.
தன்னுடைய கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பது மாபெரும் தவறு என்பதனை
உணர்ந்திருந்த அவரது மனிதநேயம்தான் இன்றுவரை அவரை போற்றி புகழவைத்துக்
கொண்டிருக்கிறது என்றால் அதுதான் மறுக்கமுடியாத உண்மை.
தன்னுடைய இளம் வயதில் தன் தாயார் மற்றவர்கள் வீட்டில் அரிசி புடைக்கும்
கூலி வேலை செய்து, அதற்கு கூலியாக கிடைத்த நொய் அரிசியை கொண்டு தனக்கும்
தன் தமையனாருக்கும் கஞ்சி காய்ச்சி தருவார்கள் என்றும், அந்த
கொடுமையிலும் கொடுமையான இளமையின் வறுமையால்தான் தாமும் தம் தமையனாரும்
கல்வி கற்க இயலாமல் போனது என்பதனையும் பகிரங்கமாக எடுத்துச் சொல்லி இந்த
அவலநிலை வருங்கால சந்ததியினருக்கு வரக்கூடாது என்று எண்ணத்தோடுதான்
காமராஜ் பொதுமக்கள் பங்களிப்பில் செயல்படுத்திய மதிய உணவுத் திட்டத்தை
அரசின் முழு பங்களிப்பாக மாற்றி சத்துணவுத் திட்டமாக அமலுக்குக் கொண்டு
வருவதாக அறிவித்தார் எம்.ஜி.ஆர். அதிலிருந்த மனிதநேயமும், சமுதாய
சிந்தனையும் தான் இன்றும் அவரை தமிழ்ச் சமுதாயம் அன்புடனும் பாசத்துடனும்
புரட்சித்தலைவர் என்று நினைவுகூர்வதன் அடிப்படைக் காரணம்.
"நான் பகுத்தறிவு வாதி, ஆதலால் கோயில்களுக்கு போகமாட்டேன்' என்றெல்லாம்
சொல்லிக்கொண்டு வந்தவர்கள் மத்தியில், "நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.
கோயில்களுக்குச் செல்லுவேன்' என்று பகிரங்கமாகக் கூறி உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசாமல் செயல்பட்டவர். அதேநேரத்தில், தான் ஏற்றுக்கொண்ட தலைவர்
பெரியாரின் ஏனைய பல கொள்கைகளை நடைமுறைப்படுத்திய பெருமையும்
எம்.ஜி.ஆரைத்தான் சாரும். எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைக்குக்
கொண்டுவந்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். தானே தவிரத் தாங்கள் பெரியாரின்
பாசறையிலிருந்து வந்ததாகக் கூறிக்கொள்பவர்கள் அல்லவே.
தமிழுக்குப் பல்கலைக் கழகம் எடுத்த பெருமையும், அண்ணாவுக்குப் பிறகு
உலகத் தமிழ் மாநாடு நடத்திய பெருமையும் எம்.ஜி.ஆரைத்தானே சாரும்!
மக்களை நேசித்தவர் - மனிதநேயத்தைப் போற்றியவர் - மக்களால் மறுபிறவி
கண்டவர் என்ற நிலையில் மக்களின் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்
என்கிற பெருமைக்கு உரியவர் எம்.ஜி.ஆர். என்பதில் யாருக்கும் மாற்றுக்
கருத்து இருக்க வழியில்லை.
எம்.ஜி.ஆருக்கும் அண்ணாவுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய நெருக்கம்
அமைந்துவிட்டது. "எனது இதயக்கனி' என்று அண்ணாவால் அடையாளம் காட்டப்பட்ட
எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருப்பது வரை அண்ணா நாமம் வாழும். அண்ணாவின்
நாமம் வாழுமட்டும் எம்.ஜி.ஆரின் புகழ் நிலைத்திருக்கும். அதனால்தான் தாம்
மறைந்தும் கூடப் பிரியக்கூடாது என்று சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்ச்
சமுதாயத்தின் இரண்டு தலைசிறந்த தலைவர்களும் அருகருகே மீளாத் துயிலில்
ஆழ்ந்திருக்கின்றனர் என்று தோன்றுகிறது!
இதயக்கனி ஆசிரியர் திரு.விஜயன் அவர்களின் மகன் திரு.ராகவன் -மணமகள் மகேஸ்வரி திருமண வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய் அன்று (10/7/18) மாலை 6 மணிக்கு மேல் சென்னை எழும்பூர், அசோகா ஓட்டலில் சிறப்பாக நடைபெற்றது .
இதயக்கனி வாசகர்கள், எம்.ஜி.ஆர். பக்தர்கள் ஏராளமான திரைப்படம் மற்றும் அரசியல் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்
http://i63.tinypic.com/2h33fqu.jpg