-
"நம்மிடம் இருப்பது கொஞ்சமானதென்று கருதாமல், இல்லையென்றும் மறுக்காமல், எப்போதும் பயனுள்ள தானதர்மத்தை அனைவரிடத்தும் செய்து வர வேண்டும்!" என்று தமிழ்இலக்கியம் நாலடியார் போதிக்கிறது.
அந்த தத்துவத்தின்படி 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' குழுவினரால், நடிகர்திலகத்தின் தொன்னூறாவது பிறந்தநாளை முன்னிட்டு துவக்கப்பட்ட ஐம்பத்திரண்டு வார தொடர் அன்னதானத்தின் இருபத்து இரண்டாம் வார இரட்டை அன்னதான நிகழ்ச்சி நேற்று (24:02:2019) ஞாயிறு மதியம் இனிதே நடந்தேறியது.
இவ்வார அன்னதானத்தின் முதல் பக...ுதிக்கு ஸ்ரீவேலன் பிலிம்ஸ் 'சொர்க்கம்' நாகராஜ் அவர்கள் உபயதாரராகவும்,
இரண்டாம் பகுதிக்கு மதுரையைச் சேர்ந்த திரு.ஜி. லட்சுமணன் அவர்கள் உபயதாரராகவும் பங்களிப்பு செய்திருந்தனர்.
மேலும், திருச்சி T.C.A.மணி சிவாஜி பாசறையைச் சேர்ந்த நண்பர் கூடுதலாக இனிப்பு வழங்கிச் சிறப்பித்திருந்தார்.
இவ்வார நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்த இருவரில் ஒருவர், திரு. & திருமதி.மாரியப்பன் அவர்கள். திரு.மாரியப்பன் அவர்கள் நடிகர்திலகத்தை வைத்து பொன்னூஞ்சல், அவனொரு சரித்திரம் போன்ற படங்களைத் தயாரித்த திரு. கே.எஸ்.குற்றாலிங்கம் அவர்களின் பேரன் ஆவார்.
மற்றொருவர் DR. N.பக்திசரண் அவர்கள். இவர், பெரும் வெற்றிபெற்ற மாபெரும் 'கர்ணன்' படத்தின் கதை திரைக்கதையாளர் திரு.நாகராஜன் அவர்களின் மகனாவார்.
இரு சிறப்புமிக்க படைப்பாளர்களின் வாரிசுகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்புச் சேர்த்தது பெருமைக்குரியது.
இந்த நிகழ்ச்சியில், முதல்பகுதி உபயதாரரான திரு. சொர்க்கம் நாகராஜ் அவர்களுக்கு நினைவுச் சான்றிதழும், புத்தகமும் வழங்கிச் சிறப்பித்தார் திரு. மாரியப்பன் அவர்கள்.
மதுரை ஜி. லட்சுமணன் சார்பாக பகுதி இரண்டின் அன்னதானத்துக்குக் கலந்து கொண்ட திரு. M.L. கான் அவர்களுக்கு நினைவுச்சான்றிதழும், நாள்காட்டி மற்றும் அய்யனின் நூலும் வழங்கிச் சிறப்பித்தார் திரு.N.பக்திசரண் அவர்கள்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு அய்யனின் நூல்களை வழங்கிச் சிறப்பித்தார் திரையுலகத் தெய்வம் சிகர மன்றத்தைச் சேர்ந்த திரு. சுகுமார் அவர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சென்னைவாழ் நடிகர்திலகத்தின் ரசிக இதயங்களான மூலக்ககடை திரு. மணி, திரு. காமராஜ், திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு. நந்தகுமார், திரு. சுப்பிரமணி, திரு.KS. நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புடன்...
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi64.tinypic.com/157gj8n.jpghttp://oi65.tinypic.com/11a8ny8.jpghttp://oi66.tinypic.com/24fwodk.jpghttp://oi68.tinypic.com/2j1oll0.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறுதி வரை அரசியல் சூழ்ச்சி தெரியாமல்,,,,
தான் அதே இடத்தில் இருந்து கொண்டு
பலரை ஏணியாய் இருந்து ஏற்றி விட்டு,,, ...
மற்றவர்களுக்காக
உழைப்பை கொடுத்தாய்
உயர்வை கொடுத்தாய்
நிதியை கொடுத்தாய்
உன்னால் உயர்ந்தவர்கள்
உனக்கு கொடுத்ததோ,,,,
துரோகம்,,
இப்படி ஒரு மனிதரை
தேடுகிறேன்....
உனக்கு முன்னும் இல்லை,,,,
பின்னும் இல்லை,
http://oi63.tinypic.com/30mmqef.jpg
நன்றி Sunder rajan
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-