https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...9a&oe=5E9E47B1
Printable View
14/01/1983 ல் வெளியான உருவங்கள் மாறலாம்
14/01/2020 ல் 37 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...c7&oe=5E980319
14/01/1983 ல் வெளியான பெஜவாடா பெப்புலி (தெலுங்கு)
14/01/2020 ல் 37 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...c6&oe=5EA6BF49
14/01/1984 ல் வெளியான திருப்பம்
14/01/2020 ல் 36 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b9&oe=5EA3F321
14/01/1987 ல் வெளியான ராஜமரியாதை3
14/01/2020 ல் 36 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...a4&oe=5E9EB1EC
15/01/1999 ல் வெளியான மன்னவரு சின்னவரு
15/01/2020 ல் 21 ஆண்டுகள் நிறைவு
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...62&oe=5E9F84DA
இன்று திருவருட்செல்வர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
" மன்னவன் வந்தானடி – தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி – தோழி "
இன்று ( 18/01/2020 ) காலை 10.30 மணிக்கு வசந்த் டி.வி.யில் நடிகர் திலகத்தின் கம்பீரமான நடையை, நடிப்பை, பாடலை,
... மற்றும் அப்பராக என அசத்திய" திருவருட் செல்வர் " படத்தை காண தவறாதீர்கள். !!!
-------------------------------------------------------------------------------------------------------------
நவராத்திரி படம்.
**************************************
"கவிஞன் பாடிய காவியம்..படித்தால் போதை வரவில்லையா..
கல்லினில் வடித்த சிலைகளை..பாத்தால் மயக்கம் தரவில்லையா."
... இன்று 18/01/2020 பகல் 1.00 மணிக்கு கே. டி.வி. இல் நடிகர்திலகத்தின் மெகா ஹிட் படம். √
" நவராத்திரி " - சிவாஜி 9 வித்தியாசமான வேடம் ஏற்று, அற்புத நடிகர் என நிரூபித்த படம். √
ஒவ்வொரு கதாபாத்திரம் ஏற்ப தன் பாவங்களை மாற்றி நடித்து உலகத்தை அசத்தினார் - காண தவறாதீர்கள். √
நன்றி Jeyavelu Kandaswami
நடிகர் திலகத்துடன் தன் நடிப்பு அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொள்ளும் நடிகை பானுமதி அவர்கள்
(நன்றி:தினமனி)
... பலதரப்பட்ட படங்களில் நான் நீண்ட காலமாக வெவ்வேறு நடிகர்களுடன் நடித்து வந்திருக்கிறேன். எல்லா ஹீரோவும் என் கிட்டே நெருங்கப் பயப்படுவாங்க. ஏன், எம்.ஜி.ஆர்., சிவாஜி கூட என் கிட்ட மரியாதையோட ஒரு தூரத்திலதான் இருப்பாங்க.
30 வயசிலேயே நான் என்னை விடப் பெரியவங்களுக்கும் ‘அம்மா’ ஆயிட்டேன். ‘சரி, இதுவும் ரொம்ப சவுகரியமா போச்சுன்னு’ நெனச்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் சிவாஜியும் என்னை ‘அம்மா’ன்னு கூப்பிட ஆரம்பிச்சார்.
சிவாஜி நான் நடித்த ஸ்வர்க்கஸீமா படத்தை 18 தடவை பார்த்தாராம். அதை சந்தோஷமாகச் சொல்லி, என்னையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். சிவாஜி என்னை விடச் சின்னவர். அவரைத் ‘தம்பி’ என்று தான் அழைப்பேன்.
எனது இந்த நெடிய அனுபவத்தில் சிவாஜி கணேசன் போன்ற திறமை மிக்க நடிகரை நான் சந்தித்ததே இல்லை.
சிவாஜி கணேசன் ஒரு பிறவி நடிகர். மாறுபட்ட உணர்ச்சிகளை மின்னல் வேகத்தில் மாற்றி வெளிக்காட்டக் கூடிய அபூர்வ ஆற்றல் பெற்றவர்.
கணேசனுடன் நான் நடித்த படங்களில் ‘மக்களைப் பெற்ற மகராசி, ரங்கோன் ராதா’ இரண்டையும் என்னால் மறக்கவே முடியாது.
குறிப்பாக ரங்கோன் ராதாவில் எங்கள் இருவர் மீதே முழுக்கவனம் செலுத்திப் படமாக்கினார்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர், ஏற்றுக் கொண்டிருக்கும் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பிக்கும் போது, செட்டில் வேலை செய்பவர்கள் எங்கள் நடிப்பைக் கண்டு ரசிக்க ஆரம்பித்து விடுவார்கள். அதுவே அவர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்து விடும்.
நான் எந்தப் படத்தோட ஷூட்டிங் என்றாலும் கொஞ்சம் லேட்டாகத்தான் போவேன். அதை சிவாஜி பல படங்களில் கவனித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் எங்க கம்பெனி தயாரித்த மணமகன் தேவை படத்தில் நானும் சிவாஜியும் நடித்தோம்.
அன்றைய படப்பிடிப்புக்கு சிவாஜி உள்பட எல்லாரும் வந்தாச்சு.வழக்கம் போல் நான் மட்டும் லேட். அப்ப சிவாஜி என் கணவர் கிட்ட, ‘அம்மா மத்த கம்பெனி ஷூட்டிங்குக்குத்தான் லேட்டா வராங்கன்னு பார்த்தா, உங்க கம்பெனிக்குமில்ல லேட்டா வராங்க’ என்று சிரிக்காமல் சொல்லியிருக்கிறார்.
அதை சிரித்துக் கொண்டே என் கணவர் என்னிடம் சொல்ல, நான் வாய் விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.
எனக்கு கிடைச்ச அபூர்வ சிநேகிதி சிவாஜி மனைவி கமலா அம்மாள். அவங்களுக்கு என் மேல் ரொம்ப அபிமானம் உண்டு. எனக்கும் அவங்கன்னா பிரியம்.
இந்த அன்பு அதுவரைக்கும் எந்த சினிமாக் கலைஞர் வீட்டுக்கும் போகாத என்னை சிவாஜி வீட்டுக்கு போக வைத்தது. சிவாஜி உடல் நலம் இல்லாம இருந்தப்போ போய்ப் பார்த்து நலம் விசாரிச்சேன். எப்பவும் எனக்கு நல்ல சிநேகிதி கமலா அம்மாள் தான்.
நன்றி Raja Lakshmi
இன்று 18-01-2020
தொலைக்காட்சி சேனல்களில் நடிகர் திலகம் திரைப்படங்கள்!
காலை 10 மணிக்கு கலைஞர் டிவியில்- ஊட்டி வரை உறவு,
... காலை 10:30 க்கு வசந்த் தொலைக்காட்சி- திருவருட்ச்செல்வர்,
பிற்பகல் 12 மணிக்கு மெகா டிவியில் - ஆண்டவன் கட்டளை
பிற்பகல் 1 மணிக்கு K டிவியில்- நவராத்திரி
மாலை 4 மணிக்கு ஜெயா மூவியில்- பாகப்பிரிவினை
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...b4&oe=5E9878AE
நன்றி Sekar Parasuram
அகஸ்த்தியா திரை அரங்கில் ராஜபார்ட் ரங்கதுரை
https://scontent.fyzd1-2.fna.fbcdn.n...eb&oe=5ED07483