-
தமிழகத்தில் எம் ஜி ஆர்
என்ன சிறப்பான ஆட்சி
கொடுத்தார் என்று
பேசிய சீர்கெட்டு, சீரழிந்து போன
சீ சீ சீ....மானே
ஒரே ஒரு%ஓட்டுவைத்துக்கொண்டு ஊளையிடும்
ஓ..நாயே
கிராஃபிக்ஸில் பிரபாகரனோடு நிற்கும்
படத்தை போட்டு பேசும்
கிறுக்கனே
புரட்சித் தலைவர் ஆதரவும், கோடி கணக்கில் பணஉதவி
செய்யவில்லை(அதில்தான் ஆயுதமே வாங்கி போராடினார்) என்றால் பிரபாகரனின் கதை,
சரித்திரம் 1982லே முடிந்திருக்கும்.இது தெரியாமல் உளறும்
தரித்திரமே
1967ல் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்
என்று சொன்ன காமராஜர் கடைசிவரை
எழுந்திருக்கவில்லை.ஆனால் அவர் பெயரில்
மாவட்டம் பல்கலைக்கழகம் பெயர் வைத்தார்.கக்கனின்
கடைசி காலத்தில்
மருத்துவ செலவுகள்
வீட்டு வசதி வாரியத்தில் வீடு
ஓய்வூதிய பணத்தையும்
கொடுத்து உதவி செய்து அழகு பார்த்த
அதிசய தலைவரடா
அறிவில்லாத மூடனே.
பெரியார் சீர்திருத்த எழுத்து, பெரியார் மாவட்டம், பெரியார் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அரசாங்கத்தின் 100 ஹேக்கர் நிலத்தை ஈரோட்டில் கொடுத்தார் நம் கொடை வள்ளல்.
பெரியாரை பற்றியே
தெரியாமல் பேசும்
பெருச்சாளியே.
உனக்கு தைரியம்
இருந்தால் தேர்தல் பிரச்சாரத்தில்
காமராஜர்.. கக்கன்
புகைப்படம் மட்டும்
வைத்து பிரச்சாரம்
செய்பார்க்கலாம்.
உனக்கு பதிலடி
கொடுக்க வைகோவே
போதும்.
எம் ஜி ஆர் பக்தர்கள் உனக்கு
பதிலடி கொடுக்கும்
அளவிற்கு நீ இன்னும்
வளரவில்லையடா
வளர்ச்சியும் (மூளை)
முதிர்ச்சியும் இல்லாத
முட்டாளே............Mohandoss.........
-
#கிறிஸ்துமஸ் #வாழ்த்துக்கள்
#merry #christmas
#தெரிந்தவிஷயம் #தான்
தெரிந்த விஷயமாயிருப்பினும் பொன்மனச்செம்மலின் வரலாறைப் திரும்பத் திரும்ப பதிவிடுவதிலும், அதைப் படித்து ஆனந்தக்கண்ணீர் விடுவதும் தானே #பக்தி...
செம்மலின் ஒவ்வொரு நிகழ்வும் திகட்டாக்கனி ஆயிற்றே...
ஒருமுறை தாமஸ் என்பவர் புரட்சித்தலைவரை
கருணையின் திரு உருவாம் இயேசுநாதர் வேடத்தில் நடிக்கவைக்க விருப்பப்பட்டார்.
தன்னடக்கத்தின் சிகரமான எம்ஜிஆர், "இயேசுநாதர் வேடத்தில் நான் போய் நடிப்பதா ? எனக்கு அந்தத் தகுதி சிறிது கூட இல்லை..." என்றார்.
அப்போது தாமஸ் சொன்ன மனதை ஊடுருவும் வார்த்தைகள் தான் இவை...
"கருணையும், கொடைத்தன்மையும் தேவனின் பெருங்குணங்கள். மனிதநேயத்தின் உச்சம் நீங்கள்.உங்களுடைய கனிவான #பார்வையில் #இறைத்தன்மை குடிகொண்டுள்ளது...
இத்தகைய மாபெரும் அணிகலன்களைச் சூடிக்கொண்டுள்ள தங்களைத் தவிர வேறு ஒருவரை நினைத்துக்கூடப் பார்க்க இயலாது என்னால்..." என்றார்.
#சரிதானே...bsm...
-
தலைவர் நினைவுநாள் சிறப்பு பதிவு.. நேரலை.
கடந்த 32 ஆண்டுகள் தொடர்ந்து தலைவர் நினைவிடத்தில் அஞ்சலிக்கு அவரின் நெஞ்சங்கள் கூடுவது வழக்கம்..
என் நினைவுக்கு தெரிந்து 1988 ஆம் வருடம் பின் இன்று 2020 அன்று அரசு தரப்பு மரியாதை நிகழ்வுகள் முடிந்து...
தலைவர் காலத்தில் மன்றம் கண்ட அனைத்து எம்ஜிஆர் கூட்டு அமைப்புகளும் கூடி அமரர் அண்ணா சிலை அருகில் இருந்து தலைவர் நினைவிடம் நோக்கி வழக்கம் போல சென்றோம்.
அங்கு நாங்கள் கண்ட காட்சி மதியம் 1 மணி அளவில் அலை அலையாக பொங்கி வந்த கூட்டத்தை பார்த்து வியப்பில் ஆழ்ந்தோம்...
நினைவிட வேலைகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலும் நாட்டின் பலவேறு பகுதிகளில் இருந்து வந்த தலைவர் நெஞ்சங்கள் கூட்டம் பிரமிக்கத்தக்க வகையில் இருந்தது...
என்ன ஒரு திடீர் எழுச்சி என்று நம் மனதில் தோன்றியதில் வியப்பு ஏதும் இல்லை...அது தான் அவரின் மகாசக்தி...
எப்ப தேவையோ அப்போ அவரின் சக்தி பொங்கி எழும் என்பது கண்கூடாக தெரிந்தது.
இன்னும் கோரோணா ஊரடங்கு ஓயவில்லை.
போதிய ரயில் பஸ் வசதி இல்லை ஆனாலும் அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளம் ஆக அவரிடம் நினைவிடம் நோக்கி மக்கள் குவிந்தது..
ஏதோ ஒரு செய்தியை நமக்கு உணர்த்துகிறது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிந்தது..
பதிவில் இணைக்க பட்டுள்ள படங்களே சாட்சி நிகழ்வுகளுக்கு..
சாரை சாரை ஆக வந்த பெண்கள்...இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எம்ஜிஆர் பக்கம் இல்லை என்பதை போன்ற வதந்திகளை தவிடு பொடியாக்கின இன்றைய நிகழ்வுகள்.
வாழ்க புரட்சிதலைவர் புகழ்....
நன்றி...உங்களில் ஒருவன்....தொடரும்..
இன்று மீண்டும் தலைவர் நெஞ்சங்கள் ஆக பிறந்த உணர்வில் உணர்ச்சியில் இந்த பதிவு.....நன்றி...............
-
பஞ்சம் பசி மேலாதிக்க ஜாதி கொடுமை ஆட்சி காமராஜர் ஆட்சி,
ஊழல் குடும்ப ஆட்சி கருணாநிதி ஆட்சி,
ஊழல் தீர்ப்பு ஜெயலலிதா ஆட்சி ,
தமிழகத்தை பொற்க்கால முதல்வர் எம் .ஜி ஆர்., ஆட்சியால் தான் மேற்க்கல்வி, சத்துணவு, கிருஷ்ணா நீர், கரும்பு ஆலை காகித ஆலை மற்றும் தொழில் கல்வி மகளிர் காவல்நிலையம் விலைவாசி குறைவு ரேஷன் சரியாக வினியோகம் தமிழ் மொழிக்காக தமிழர் காமராஜ் செய்யவில்லை. அதற்க்கு பின் வந்த முதல்வர்கள் செய்யவில்லை ,எம் ஜி ஆர் செய்தார் தமிழுக்கு சிறப்பு எப்படி தமிழ்தாயக்கு கோயில் ,ஆயிரம் ஏக்கரில் பல்கலைகழகம் ஐந்தாம் தமிழ் மாநாடு பெரியார் எழுத்து சீர்திருத்தம் என பல
எம் ஜி ஆரை எம் ஜி ஆர் ஆட்சியை குறை சொல்ல எவருக்கும் தகுதியோ உரிமையோ இல்லை...
வாழ்க எம்ஜிஆர் புகழ்...Arm...
-
"மக்களின் அன்பு... வாய்விட்டு அழுத எம்.ஜி.ஆர்!"- நினைவுகள் பகிரும் கே.மாயத்தேவர் நேர்காணல்
அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர். இரட்டை இலை சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய கே.மாயத்தேவர், அதிமுகவின ஆரம்ப காலம் முதல் இன்றைய அரசியல் நிலவரம் வரை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
2021ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்ட்ட நிலையில், அரசியல் அரங்கம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு ஆளுமைகள் இல்லாமல் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறார்கள். நீயா நானா என இரண்டு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளை வீசி வருகி
இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வருகின்ற தேர்தலில் ரஜனி, கமலுக்கு விழுகின்ற அடி இனி எந்த நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது என காட்டமாக பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் முதல் நாடாளுமன்ற வேட்பாளராக சுயேட்சை சின்னமாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவின் முதல் வெற்றி வேட்பாளர் கே.மாயத்தேவரை, அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுக தொடக்கம் முதல் இன்றைய அரசியல் நிலவரம் வரை நாம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பரபரப்பான பதில் இதோ...
எம்.ஜி.ஆர் உடன் ஏற்பட்ட பழக்கம்
"எனது தாய்மாமன் நல்லுத்தேவர் கொலை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் வாதாட நான் சென்று வந்த சமயம், எம்.ஜி.ஆர் அவர்களை நடிகர் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கொலை முயற்சி வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த வழக்கில் ஆஜராக வந்த எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
அதிமுகவின் தோற்றமும் வளர்ச்சியும்:
அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு திமுகவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். அப்படி இருந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கபட்டார். இதையடுத்து திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆருடன் வந்த தலைவர்களின் ஆதரவோடு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை எம்.ஜி.ஆர் தொடங்கினார்.
எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. ’நீ வா தலைவா, நாங்கள் இருக்கிறோம்’ என அதிமுகவை மக்கள் வெகுவாக ஆதரித்தார்கள். எம்.ஜி.ஆர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக பெண்களின் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.
அவருடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்ட கருணாநிதி, அதிமுகவை வளரவிட்டால் நமக்கு ஆபத்து என கருதி எம்.ஜி.ஆரை தவிர்த்து கே.ஏ.கிருஷ்ணசாமி, மோகனரங்கம், பம்மல் நல்லதம்பி உட்பட இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு செக்*ஷன் 307ஐ பயன்படுத்தி கொலை முயற்சி வழக்கு போட்டு சிறையில் அடைத்துவிட்டார்.
எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பு
கருணாநிதியால் சிறையில் அடைக்கப்பட்டவர்களை மீட்க, பி.எச்.பாண்டியன் போன்ற பெரிய வழக்கறிஞர்களை நியமித்து வாதாடி பகீரத முயற்சி செய்தும் யாரையும் ஜாமீனில் வெளியே எடுக்க முடியவில்லை. கட்சியே அழிந்து விடும் சூழல், எம்.ஜி.ஆருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது எம்.ஜி.ஆர், இரண்டாம் கட்ட தலைவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது நல்ல திறமையான தைரியமான போர்குணமுள்ள இளம் வழக்கறிஞர் யாராவது இருந்தால் அழைத்து வாருங்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து இரண்டாம் கட்ட தலைவர்களிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நானும் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றேன். எம்.ஜி.ஆர் என்னை பார்த்ததும் ’அட நம்ம மாயன், எப்படி இருக்கிறீங்க?’ என்று நலம் விசாரித்து, வழக்கின் தன்மையை விளக்கினார். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த நான் அவரிடம் ஒரு வேண்டுகோளை வைத்தேன். இந்த வழக்கில் இருந்து அனைவரும் ஜாமீனில் வெளிவர நான் என்ன வேண்டுமானால் செய்வேன். பின்பு ஏன் அப்படி செய்தாய், இப்படி செய்தாய் என்று என்னிடம் கேட்கக்கூடாது என்றேன்.
சிறிது நேரம் யோசனை செய்த எம்.ஜி.ஆர், ’சரி நான் பார்த்துக் கொள்கிறேன்; எனக்குத் தேவை, இந்த கேஸில் இருந்து அனைவரும் வெளியே வரவேண்டும்’ என்றார். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது அந்த வழக்கில் ஆஜரான நான், நீதிபதியிடம் ’தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டிருக்கிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதம் எதையாவது காட்டுங்கள்’ என்றேன்.
அதற்கு நீதிபதியிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ’கொலை முயற்சியில் யாருக்காவது காயம் ஏற்பட்டிருக்கிறதா?’ என்றேன் அதற்கும் அமைதிதான். ’இப்படி சம்பந்தமில்லாமல் ஒரு கட்சியை அழிக்க நினைக்கும் சூழ்ச்சிக்கு நீதிபதி ஆதரவாக இருக்கலாமா?’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டு, நேருக்கு நேராக சண்டை போட்டு அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தேன். இந்தச் சம்பவம் எம்.ஜி.ஆருடன் எனக்கு நல்ல தொடர்பை ஏற்படுத்தியது.
முதல் அதிமுக வேட்பாளராக நாடாளுமன்றத்துக்கு போட்டி
திமுகவைச் சேர்ந்த இராஜாங்கம் என்பவர் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். அவரது மறைவையொட்டி திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த இடைத்தேர்தலில் அதிமுக முதன்முதலாக களம் கண்டது. அப்போது அதிமுக சார்பாக என்னை வேட்பாளராக எம்.ஜி.ஆர் களமிறக்கினார். அப்போது நான் சொன்னேன்: ’தலைவரே, தேர்தல் களத்தில் செலவுக்கு நிறைய பணம் தேவைப்படும். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை’ என்றேன். ’உன்னால் முடிந்ததை செலவு செய். மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்’ என்றார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்த வரலாறு
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் ஆணைப்படி அதிமுக வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து சின்னம் ஒதுக்கும் நாள் வந்தது. அப்போது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சிரியாக் 16 சின்னங்களை என்னிடம் காட்டினார். முதன்முதலாக தேர்தல் களம் கண்ட அதிமுகவுக்கு சுயேட்சை சின்னம்தான். சிரியாக் காண்பித்த 16 சின்னத்தில் 7-வது சின்னமாக இருந்த இரட்டை இலை சின்னத்தை நான் தேர்வு செய்து எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
’என்ன மாயன், எத்தனையோ சின்னம் இருக்க இரட்டை இலையை?’ என்றார். ’தலைவரே, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற வின்சென்ட் சர்ச்சில் தனது வெற்றியை பறைசாற்ற வெற்றியின் அடையாளமான ’வி’ என்ற எழுத்தை இரண்டு விரல்களில் காட்டிநின்றார். அதேபோல் நீங்களும் இரண்டு விரல்களை மட்டும் காட்டுங்கள். மக்கள் இரட்டை இலை சின்னத்தை எளிதாக புரிந்து கொண்டு வாக்களிப்பார்கள்’ என்றேன். உடனே எம்.ஜி.ஆர் என்னை ஆரத் தழுவிக்கொண்டார். அப்படி என்னால் அடையாளம் காட்டப்பட்ட இரட்டை இலை சின்னம்தான் இன்று அதிமுகவின் மாய மந்திரம்.
எம்.ஜி.ஆர் என்மீது கொண்ட பாசம்
இடைத்தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வைராக்கியத்துடன் தேர்தல் பிரசாரத்தில் அதிக ஈடுபாடு காட்டினார் எம்.ஜி.ஆர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பழக்கப்பட்ட அவருடன் என்னால் ஈடுகொடுத்து வாக்கு சேரிக்க முடியவில்லை. அது எனக்கு பழக்கமும் இல்லை. இப்படித்தான் ஒருமுறை தேர்தல் பிரசாரத்துக்கு காரில் சென்றபோது எம்.ஜி.ஆரின் தோளில் சாய்ந்து தூங்கிவிட்டேன். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை; தூங்கட்டும் என்று விட்டுவிட்டார். பிரச்சாரம் செய்யும் இடம் வந்ததும் என்னை எழுப்பி ’டீ குடிங்கள்’ என்று கொடுத்தார். இது போன்ற பாசமுள்ள தலைவனை இப்ப பார்க்க முடியுமா? அதுதான் எம்.ஜி.ஆர்.
தன்மீது பாசம் வைத்துள்ள மக்களை நினைத்து வாய்விட்டு அழுத எம்.ஜி.ஆர்
பிரசாரத்துக்கு செல்லும் வழிநெடுகிலும் மக்களிடம எம்.ஜி.ஆருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குடு குடுவென படிகளை தாண்டி மேடையில் தோன்றும் எம்.ஜி.ஆர், மேடையின் நாலாபுறமும் இருக்கும் மக்களை பார்த்து இரட்டை இலை சின்னத்தை தனது விரல்களால் காட்டி வாக்கு சேகரிப்பார். பின்பு மக்களிடையே பேசத்தொடங்கும் எம்.ஜி.ஆர், ’என் ரத்தத்தின் ரத்தமான அன்பு உடன்பிறப்புகளே...’ என்ற அவரின் குரலை கேட்டவுடன் ’தலைவா’ என்ற சப்தம் விண்ணைப் பிளக்கும். விசில் சப்தம் காதை கிழிக்கும். அந்த அளவுக்கு மக்கள் அவர்மேல் உயிரையே வைத்திருந்தனர்.
ஏழை பங்காளன் எம்.ஜி.ஆரை கட்டியணைத்து கண்கலங்கிய மக்களுக்கு ஆறுதல் கூறுவதுடன் அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வார். ஒருமுறை பிரச்சாரம் முடிந்து காரில் எறிய எம்.ஜி.ஆர் வாய்விட்டு அழுதுவிட்டார். அதைக்கண்ட நான் அதிர்ச்சியடைந்து ’தலைவா தேர்தலில் தோற்றுவிடுவோம்’ என்று அழுகிறீர்களா என்றேன். ’இல்ல மயான், என்மீது இவ்வளவு அன்புவைத்துள்ள மக்களுக்கு நான் என்ன செய்தேன், என்மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். என்னால் முடிந்ததை நிச்சயம் செய்வேன்’ என்றவர் தனது ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்களுக்காக பல நல்ல திட்டங்களைத் தீட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தார்.
ராசியானவன் என அழைத்து நடுவில் அமரவைத்த எம்.ஜி.ஆர்
சென்னை ராமாவரம் இல்லத்தில் எம்.ஜி.ஆரை சந்திக்கச் சென்றிருந்தேன். அப்போது, எம்.ஜி.ஆர் நாஞ்சில் மனோகரனுடன் பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ’வாங்க மாயன்’ என்று அழைத்து இருவருக்கும் நடுவில் என்னை அமரச்சொன்னார். நான் தயங்கினேன். உடனே ’நீங்கதான் ராசியானவர். இந்த கட்சியின் ஆனிவேர். அதனால நடுவுலதான் இருக்கணும்’ என்று கையைப் பிடித்து இழுத்து அமரவைத்தார்.
இப்படி பாசமான எம்.ஜி.ஆர் பழசை மறக்காமல். தன்னைத்தேடி தனது இல்லத்துக்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரிப்பார். தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு, தான் அணிந்திருக்கும் சிலுக்கு ஜிப்பா பாக்கெட்டில் கையைவிட்டு எடுக்கும் பணத்தை வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாவண்ணம் அப்படியே கொடுப்பார். அதனால் தான் மக்கள் அவரை கொடைவள்ளல் என்றழைத்தனர்.
இந்திராவை ஆதரித்து பேசியதற்காக அதிமுகவில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டேன்:
1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது மொராஜி தேசாய் பிரதமராக இருந்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திரா காந்தி மீது பக்கத்து வீட்டு கோழியை திருடிவிட்டார் என்று பொய் கேஸ் போட்டு நாடாளுமன்றத்திலேயே அவரை கைது செய்துவிட்டனர். இதைப் பார்த்து எல்லோரும் அமைதி காக்க, என் மனம் பொறுக்கவில்லை. மொராஜி தேசாயைப் பார்த்து ’இந்திரா காந்தி சாதாரண பெண் அல்ல; சுதந்திரப் போராட்ட தியாகிகள் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரை கைது செய்வதால் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். தண்டனை வழங்குவார்கள்’ என்று ஆவேசமாக முழங்கினேன்.
இதை சற்றும் எதிர்பாராத இந்திரா காந்தி எனது கையை பிடித்து முத்தமிட்டு (My bold darling son) எனது மூத்த மகன் நீங்கள் என்று கூறியதுடன் ’உங்களுக்கு எந்த உதவி வேண்டுமானலும் கேளுங்கள்; நான் செய்ய காத்திருக்கிறேன்’ என்றார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு என்னை அழைத்த எம்.ஜி.ஆர், ’என்ன மாயன் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று எதிர்கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறீர்கள்’ என்றார். ’நியாயத்தைதானே பேசினேன்’ என்றேன். ஜனதா கட்சியை திருப்திபடுத்த அதிமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் என்னை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தார்.
எம்.ஜி.ஆருக்கு நான் ராசியானவன்
1973க்கு பிறகு எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளான ஜனவரி 17ஆம் தேதி மற்றும் புத்தாண்டின் முதல் நாள் காலையில் எனது முகத்தில் தான் விழிப்பார். ’நான் தொடங்கிய கட்சியில் நின்று வெற்றி பெற்று அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்க ஆணிவேராக இருந்தவன் நீ... அதனால் உனது முகத்தில் முழிப்பதை பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுக
செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அழிந்துவிடும் என்று பலரும் கணக்கு போட்டார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மிகவும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களுக்குத் தேவையான நல்ல பல திட்டங்களை அறிவித்து, அதை செயல்படுத்தி வருகிறார்கள். புதிதாக அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் என்ற இரு ஆளுமைகள் உருவாகி இருக்கிறார்கள். இவர்களின் ஓய்வற்ற உழைப்பில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையான இருந்து மீண்டும் அதிமுக வெற்றிபெற்று எம்.ஜி.ஆரின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
நடிகர்களின் அரசியல் வருகையும் எம்.ஜி.ஆர் பெயரும்
ஜனநாயக நாட்டில் நடிகர்கள் அல்ல; யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் கட்சியை ஆரம்பிக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்த அவர்களுக்கு உரிமையில்லை. எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக மட்டுமே எம்.ஜி.ஆர் பெயரையும் அவரது உருவப் படத்தையும் பயன்படுத்த முடியும்.
கருப்பு எம்.ஜி.ஆர், எம்.ஜி.ஆரின் வாரிசு, எம்.ஜி.ஆரின் ஆட்சியை தருவேன், எம்.ஜி.ஆரின் மடியில் தவழ்ந்தேன் என்றெல்லாம் ஆளாளுக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றைமட்டும் சொல்லிக் கொள்கின்றேன். எம்.ஜி.ஆர் என்றால் அவர் ஒருத்தர்தான். அவரைபோல யாரும் வரமுடியாது. திரைப்படங்களில் எப்படி நடித்தாரோ அதேபோலவே வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த எம்.ஜி.ஆர், ஏழைகளின் கஷ்டங்களை நன்கு அறிந்திருந்தார். பசியின் கொடுமை என்னவென்று அவருக்கு புரியும். அதனால்தான் தன்னை சந்திக்க வரும் மக்களுக்கு வயிராற உணவளித்து மகிழ்ந்தார். அவரைபோல் ஒருவர் பிறந்ததும் இல்லை. இனி பிறக்கப்போவதும் இல்லை. அவருக்கு நிகர் அவரே...Poongudi.........
-
ஒரு நாள் மதுரை சென்னை பாண்டியன் விரைவு ரயிலில் ஒரு பெட்டியில் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டு இருந்தவர்கள் கூட ஒரு தொழுநோயால் பாதிக்க பட்ட நண்பரும் அதே பெட்டியில் பயணம் செய்து வந்தார்...
உடன் பயணம் செய்த சிலர் முகம் சுளிக்க ஒருவர் கேட்கிறார் அவரை பார்த்து எங்கு வரை உங்கள் பயணம் என்று கேட்க அவர் சென்னை வரையில் என்று பதில் சொல்கிறார்...
சென்னைக்கு என்ன வேலையாக என்று அவர் விடாமல் கேட்க அந்த தொழுநோயாளி நண்பர் என் தலைவரை பார்க்க போகிறேன் என்று சொல்ல..
யார் உங்கள் தலைவர் என்று கேட்க அனைவரும் அவரை உற்று பார்க்க எம்ஜிஆர் அவர்கள் தான் என்று சொல்ல அனைவரும் கேலியாக சிரிக்க....
நீங்கள் எப்படி அவரை சந்திக்க முடியும்..உங்களை அவர் பார்க்க அனுமதிப்பாரா என்று கேட்க....அவர் கொண்டு வந்த அவர் பழைய பையில் இருந்து பத்திரப்படுத்தி வைத்து இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்க..
அதில் உங்கள் விருப்ப படி என்னை உங்கள் வசதி படி சந்திக்க நீங்கள் வரலாம்...யாரும் அங்கே உங்களை தடுத்தால்....இந்த எனது கடிதத்தை வாசலில் இருக்கும் காவலாளி இடம் காட்டுங்கள் ..
அவர் உங்களை உள்ளே என்னை பார்க்க அனுமதிப்பார்.
உங்கள் அன்பன்..
எம்.ஜி. ராமச்சந்திரன் என்ற நம் தங்க தலைவரின் கை எழுத்துடன் கூடிய கடிதத்தை அவர் காட்ட.
உறைந்து போய் ஒன்றும் பேசமுடியாமல் நின்றனர் உடன் பயணித்த பயணியர்.
அவர் தான் மக்கள் திலகம்....
வாழ்க அவர் புகழ்.
இந்த நாளில் இந்த பதிவை உங்களிடம் கொண்டு சேர்க்க உதவிய தினமலர் நாளிதழுக்கு நன்றி.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி..
நன்றி..தொடரும்...
தலைவர் நடிப்பதாக இருந்து பின் வெளிவராத பரமபிதா படத்தில் ஸ்டில் படத்துடன் பதிவு..நன்றி
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று உலகம் சொல்ல வேண்டும்...
பாடல் வரிகள் படி தானே வாழ்ந்து காட்டிய தானை தலைவர் அல்லவா அவர்...
-
Abdul Rahim பாய், நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் நடந்த விழாவில் காமராஜரா ரிக்ஷாக்காரர்களுக்கு மழைக் கோட்டு கொடுத்தார்?. பாடலை எழுதியவரும் பாடியவரும் ரஹீம் பாய்க்கா உழைத்தார்கள்.?. உங்க கால்ஷீட்டிற்கா அவர்கள் காத்துக் கிடந்தார்கள்.?. அத்தனை கூட்டமும் உங்களைப் பார்க்கவா தியேட்டரில் தோரணத்தைக் கட்டியது?. எழுதியவர் சொல்கிறார் எனது வரிகள் உங்களது வாயசைப்பில் தான் உயிர் பெற்றது என்று.வாயசைச்சவர் சொல்கிறார் நீங்க தான் பாடலை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தவர் என்று.அவர் நினைத்தால் பாடலாசிரியரை நொடியில் தூக்கலாம்.அவர் நினைத்தால் புதிய குரலை நொடியில் கொண்டு வரலாம்.இதெல்லாம் உங்களுக்கு சொல்லித் தான் தெரியணுமா?. ஏன் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசினால் மட்டும் இப்படி வரிந்து கட்டிக்கொண்டு வருகிறீர்கள் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது.இந்த வியாதிக்கு என்ன பெயர் வைப்பது?. ...ASF...
-
வானுலகச் சந்திரன் வளரும்.தேயும்.
அவ்வப்போது மறையும்.
மண்ணுலக இராமச்சந்திரருக்கு வாழ்நாளெல்லாம் வளர்பிறை தான்.
முழுமதியின் குளுமை ஒளி தான்.
அந்த நல்லொளியில் அன்றைய திரையுலகமும்,
அரசியல் வானும் துளிர்த்தது.தழைத்தது.செழித்தது.
எதிர்ப்பாளர்களின் முறைப்பில் மக்கள் திலகம் மகத்தாக வளர்ந்தார்.
முறைத்தவர்களும்,எதிர்த்தவர்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தார்கள்.
பகைவருக்கும் அருளிய நன்னெஞ்சம் அது.
ஏழைகளுக்கு இரங்கிய மென்னெஞ்சம் அது.
மக்கள் தங்கள் இதய சிம்மாசனத்தில் அந்த மன்னவருக்கே முற்றாக முதலிடம் அளித்தார்கள்.
இவ்வுலகம் இருக்கும் வரை அந்த இரக்க மனச் சிந்தனையாளரின் இறவாப் புகழ் இனிய வாச மலராய் மலர்ந்து,வளர்ந்து
செழித்திருக்கும்....Arun Ramanan.........
⭐
-
கசாப்பு கடைக்காரர் , நான் புத்திரின் வாரிசு என்று சொல்ல முடியுமா !
எங்கள் தலைவர் நடிகர் இல்லை ! அவர் ஒரு பல்கலை கழகம் !!
தாய் குலத்தை மதித்த தலைவன் ! தாய்மையை போற்றிய தலைவன் ! !
பாடல்களில் தமிழ் உணர்வு இருக்கும் ,
பிள்ளைகளின் நெஞ்சில் நஞ்சை கலக்காத தலைவன் ,
தாய் நாட்டை பற்றி இருக்கும் , வீரம் இருக்கும் , விவேகம் இருக்கும் , துணிவு இருக்கும் , பணிவு இருக்கும் , தத்துவம் இருக்கும் , காதலும் இருக்கும் ,
சுருக்கமாக சொன்னால் ,
அத்திபழம் ஆப்பில் ஆகமுடியுமா !
ஒதியன் தேக்குமரம் ஆகமுடியுமா !!
கழுதை கஸ்தூரி மான் ஆகமுடியுமா !
கொக்கரகோ தோகைவிரித்தாடும் அழகு மயில் ஆகமுடியுமா !!
சொறிநாய் சீறும் சிங்கம் ஆகமுடியுமா !
தலை இருப்பவனெல்லாம் தலைவன் ஆகமுடியுமா !!
வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கலாம் ! ஆனால்
சந்திரன் ஒன்று தான் ,
33 ஆண்டுகள் ஓடிவிட்டது இன்றும் தலைவர் ஆட்சி தான் ,
விசில் அடிப்பவனெல்லாம் mgr ரசிகர்கள் ஆகமுடியாது !
Mgr ரசிகர்களிடம் வேறு சின்னத்தை காட்டமுடியாது !!
2021- லும் தலைவர் அம்மாவின் அரசு ,
துணை முதல்வர் ops முன்னிலையில் ,
தமிழக முதல்வர் eps
தலைமையில் ,
தொடரும் நூறாண்டு !
.......mgn...
-
# சமீப காலமாக தலைவரின் பெயர் மற்றும் அவரின் ஆளுமை, புகழ், மனித நேயம் இவைகளெல்லாம் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பேசு பொருள் ஆகி விட்டது,
இது ஒரு ஆச்சரியமான விஷயம், காரணம் மறைந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு மனிதனின் பெயர் மக்கள் மனங்களில் உலா வருகிறது மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் அரசியல் வியாபாரிகளுக்குக் கூட அவரின் நாமத்தை உச்சரித்தே ஆக வேண்டிய கட்டாயம்,
இவைகளை எல்லாம் பார்க்கும் போது தலைவர் ஏற்படுத்தியிருக்கும் இந்த சரித்திரசாதனை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பிரமிப்பையும், குதூகலத்தையும் தருகிறது,
ஆனால் இன்னொரு பக்கம் இதையெல்லாம் ஜீரணிக்க முடியாமல் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் சில கைக்கூலிகளை எச்சில் சோற்றுக்கு கூலிக்கு அமர்த்தி சமூக வலை தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் பிரச்சார உத்திகளை முன்னெடுத்து சில சோற்றாலடித்த பிண்டங்கள் செய்யும் செயல்களைப் பார்க்கும் போது நமக்குத் தோன்றுவது ஒன்றே ஒன்றுதான்,
" தலைவர் வாழும் போதும் நிம்மதியாக இவர்கள் இருந்ததில்லை, இப்போது அவர் இப்பூவுலகில் இல்லாத போதும் அவரின் தாக்கம் இவர்களை நிம்மதியாக தூங்க விடுவதில்லை,
அதன் எதிரொலிதான் ஏற்கனவே " முரசொலி " யில் தலைவரின் ஆட்சியை விமர்சித்தும், கேலிச் சித்திரங்கள் தீட்டியும் ஒரு கிழ நரி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது,
இப்போது இதோ இன்னொரு அவதாரம் முன்னாள் சபாநாயகர் க. ராசாராம் அவர்களின் தம்பி காந்தராஜ் என்னும் ஒரு வாலாட்டும் ஜந்து ஒன்று புறப்பட்டிருக்கிறது,
இந்த குப்பைகளுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் பொறுப்பிலுள்ளவர்களுக்கு பாவம் அம்மாவின் புகழ் பாடவே நேரமில்லை, தியானம் செய்வதற்கும், அம்மாவின் நினைவு மண்டபத்தில் ஏதாவது குறை உள்ளதா என்று பார்ப்பதற்குமே நேரம் சரியாக உள்ளது,
ஆனால் இந்த மாதிரி கத்தும் ராஜுகளுக்கு நாம் சொல்லும் பதில் ஒன்றே ஒன்றுதான்
தினத்தந்தி, ராணி யை வைத்து ஆதித்தனாரும்,
அலை ஓசை, பிலிமாலயா, நவசக்தி, குமுதம் இன்னும் பல பத்திரிக்கைகள் எல்லாம் தலைவர் காலத்தில் அவரை வீழ்த்த என்னென்னவோ செய்து பார்த்தார்கள்,
கடைசியில் முகம் நிறைய கரியை பூசிக் கொண்டதோடு, சிலர் தலைவர் காலடியில் விழுந்து பாவ மன்னிப்பும் பெற்றுக்கொண்டார்கள் என்பது வரலாறு,
ஆனால் இப்போதும் சில வடிவேல்கள் வயிற்றெரிச்சலில் புலம்புவதை பார்த்தால் இவர்களெல்லாம் அய்யோ பாவம் என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது, சரி போகட்டும்
காந்தராஜ் சொன்ன குற்றச்சாட்டுக்கு வருவோம்,
அதாகப்பட்டது அவர் சொன்னது என்னன்னா
"COMPTROLLER AND AUDITOR GENERAL OF INDIA ( C A G)என்று சொல்லக்கூடிய இந்திய தலைமைக் கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் எம்ஜிஆர்
ஆட்சியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெற வில்லை என்று சொன்னது கமல் போன்றவர்களுக்கு தெரியுமா? என்று இவர் பெரிய அறிவுக்கொழுந்து ஆறுமுகம் போல ஒரு கேள்வியை கேட்டு காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்,
சரி அவர் அறிவாளியாகவே இருந்து விட்டுப் போகட்டும், நம்முடைய கேள்வி என்னவென்றால் "CAG " கொடுக்கும் அறிக்கை மட்டும் ஒரு மாநிலத்தின் தலை எழுத்தை நிர்ணயித்து விடுமா?
இந்த அமைப்பு தேர்தல் ஆணையம், CBI, உச்ச நீதிமன்றம் போல தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு,
குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பட்டது, அவரால் நேரடியாக நிர்வகிக்கப்படுவது, அரசு எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது,
மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் அமைப்புகளின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து அதை நாடாளுமன்ற சபாநாயகரிடம் சமர்ப்பிக்கும்,
அதை அவர் PAC என்று சொல்லக்கூடிய பொதுக் கணக்கு குழுவுக்கு அனுப்பி வைப்பார்,
PAC அதை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்
அந்த அறிக்கையின் பேரில் அரசு நடவடிக்கை எடுக்கும்,
PAC என்பது நாடாளுமன்றத்தின் ஒரு அங்கம் எனவே அதுதான் இறுதி அறிக்கையை தயார் செய்யும்,
ஆனால் CAG அறிக்கை இறுதி அறிக்கை கிடையாது,
இப்படியிருக்க CAG அறிக்கை கொடுத்தாலே அதுதான் ஒரு ஆட்சியின் இலக்கணம் என்று எப்படி இந்த அரசியல் ஞானி கேள்வி க் கணை தொடுக்கிறார் என்று நமக்குப் புரியவில்லை
1948 இல் முதல் இந்திய தலைமை கணக்கு அதிகாரி வி. நரஹரி ராவ் தொடங்கி இன்றைக்கு இருக்கும் கிரீஷ் சந்திர முர்மு ( இவர் காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக இருந்ததோடு மட்டுமல்லாது திரு. நரேந்திர மோடி அவர்கள் முந்தைய குஜராத் மாநிலத்தின் முதல் அமைச்சராக இருந்த போது அவரின் முதன்மை செயலாளராக பணி புரிந்தது குறிப்பிடத் தக்கது )வரையிலும் ஆயிரக் கணக்கான அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறது,
அதிலெல்லாம் அனைத்து மாநில முதல்வர்களையும், ஆயிரக் கணக்கான அதிகாரிகளையும் விமர்சித்து அறிக்கைகள் வந்திருக்கிறது,
அந்த அறிக்கைகளின் படி நடவடிக்கை எடுத்தால் எந்த மாநில முதல்வரும் ஆட்சி செய்ய முடியாது,
ஏழைகளின் ஆட்சி என்று இப்போது பாராட்டப்படும் ஒரிசாவின் முதல்வர் திரு. நவீன் பட்நாயக் ஆட்சியைக் கூட இந்த CAG கடுமையாக விமர்சித்து அறிக்கை சமர்ப்பித்தது உண்டு,
அதற்காக அவர் நல்லாட்சி கொடுக்கவில்லை என்று அர்த்தம் ஆகி விடுமா என்ன?
2012 இல் திரு. வினோத் ராய் அவர்கள் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்த போது அவர் வெளிக்கொண்டு வந்த ஊழல்கள்தான் " 2 G அலைக் கற்றை ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க முறை கேட்டு ஊழல்,
தலைவரை சுலபமாக கேள்வி கேட்ட இந்த காந்த ராஜ் இவைகளைப் பற்றியும் ஒரு காணொளி வெளியிடலாமே,
ஏனென்றால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் 2G அலைக் கற்றையில் ஊழல் நடந்ததாக வினோத் ராய் அறிக்கை சமர்ப்பிக்க அது இந்தியா முழுவதும் எப்படிப்பட்ட தாக்கத்தை உண்டு பண்ணியது அதனால் காங்கிரஸ் அரசாங்கம் எப்படி கவிழ்ந்து போனது என்பதையும் எல்லோருக்கும் தெளிவாக விளக்கலாமே,
அதன் முதன்மை குற்றவாளிகளாக எம்ஜிஆரின் சட்டையை பிடிப்பேன் என்று வீர வசனம் பேசிய ஆ. ராசாவும், திருமதி. கனிமொழி அம்மையாரும் திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டு இறுதியில் எதுவும் நிரூபிக்கப் படவில்லை என்று விடப் பட்டதும் ஒரு ஜீபூம்பா கதை,
அந்த ஊழலில் தள்ளாடும் கிழவிகளுக்குக் கூட பங்கிருந்தது,
நம்ம காந்த ராஜ் அதை எல்லாம் வசதியாக விட்டு விட்டார்,
சிறப்பு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் நீதி அரசர் இறுதி தீர்ப்பின் போது சொன்ன வாசகம் இதுதான் " கடைசி வரையிலும் இந்த நீதிமன்றத்தில் CBI இந்த ஊழல் சம்பந்தமாக சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் என்று கடைசி வரையில் காத்திருந்தேன் ஆனால் கடைசி வரை அது நடக்கவே இல்லை எனவே குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுதலை செய்கிறேன் "
ஆனால் இதுல ஒரு காமெடி என்னன்னா திரு. வைகோ அவர்கள் அப்போது அப்போது திமுக கூட்டணியில் இல்லை,
அப்போது பேசிய ஒரு காணொளியில் சாதிக் பாட்சா என்னும் ஒரு உதவியாளர் மரணத்தை தொடர்பு படுத்தி வைகோ அவர்கள் 2G அலைக்கற்றை ஊழலில் பெட்டி பெட்டியாக பணம் அறிவாலயத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு குறிப்பிட்ட நபர்களிடம் கைமாறியது என்று பகிரங்கமாகப் பேசினார்
ஆனால் பாவம் அவரும் அங்கேயே அடைக்கலாமாகி விட்டார்,
இறுதியாக இப்போது ஆளும் பாரதீய ஜனதா அரசு இதை கையில் எடுத்திருக்கிறது,
உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து இப்போது தினசரி விசாரணையாக நடந்து கொண்டிருக்கிறது,
இதை சுட்டிக்காட்டி BJP தமிழக தலைவர் திரு. முருகன் கூட அவ்வப்போது திமுக வினர் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருக்கிறார்
பார்ப்போம் 2G சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எப்படி தண்டனை தரப்போகிறது என்று
இப்படி இந்த ஊழல் கதையால் திரு. வினோத் ராய் தலைமையிலான CAG அமைப்பை பல நபர் உறுப்பினர் அமைப்பாக மாற்ற முயற்சியும் நடந்தது
அப்போதைய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட திரு. ஷூங்லு அவர்கள் கூட பிரதமர் அலுவலகத்துக்கு நோட் அனுப்பினார் என்று கூட பேசப்பட்டது,(நிறைய சமாச்சாரங்கள் உண்டு,
முழுமையாக எழுதினால் பதிவு நீண்டு விடும், )
இது போல் முன்பு டி. என். சேஷன் அவர்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த போது அவரின் அதிகாரத்தை குறைக்க பல உறுப்பினர் கொண்ட அமைப்பாக தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டது,
தலைவரின் ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்று பொத்தாம் பொதுவில் சொன்ன CAG தமிழ் நாட்டின் தனி நபர் வருமானத்தை கணக்கில் எடுக்க வில்லை, மக்களின் வாழ்க்கை தரத்தை குறிப்பிடவில்லை,
பொதுவாக டை கட்டிக்கொண்டு வரும் பெரிய அறிவு ஜீவிகளுக்கு ஏழை மக்களுக்கான திட்டங்கள் தீட்டி ஆளும் அரசுகளை பிடிப்பதில்லை,
உதாரணத்துக்கு வெள்ள பாதிப்புகளை பார்வையிட வரும் அதிகாரிகள் குழு சும்மா ஏசி காரில் வந்துவிட்டு, நட்சத்திர விடுதிகளில் தங்கி விட்டு அரசிடம் ஏனோதானோ என்று அறிக்கை கொடுக்கும் லட்சணங்களை கண்டிருக்கிறோம்,
அதுபோல் அந்த நேரத்தில் தலைவரின் ஆட்சியில் இருந்த IAS, IPS அதிகாரிகள் எல்லாம் கருணாநிதிக்கு தூது சொல்லும் தபால்காரர்களாகத் தான் இருந்தார்கள், இவர்கள் கொடுக்கும் மாற்றான் தாய் மனப்பான்மை விவரங்களை வைத்து தயாரிக்கப்படும் CAG அறிக்கையின் லட்சணம் இப்படித்தான் இருக்கும்,
திருச்செந்தூர் கோயில் சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை வழக்கில் தலைவர் அமைத்த " பால் கமிஷன் " அறிக்கை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பே கருணாநிதி கைக்கு கிடைக்கச் செய்தவர்கள் தான் அப்போதைய அதிகாரிகள்,
CAG அதிகாரிகளுக்கு தலைவர் கொண்டுவந்த தெலுங்கு கங்கை திட்டம்,VAO திட்டம், வேலை இல்லாப் பட்டதாரி மாணவ நிதி உதவி திட்டம், ஊனமுற்றோர் நிதி உதவி திட்டம், போக்குவரத்துத் துறை வளர்ச்சித் திட்டம், பல்கலை கழகங்கள் அமைத்தது இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்,
ஆனால் இந்த மாதிரி ஏழைகளுக்கான அரசாக இருந்தது அவர்களுக்கு எப்படி பிடிக்கும்?(ஒரு 10 வருடங்கள் முன்பு ஒவ்வொரு இந்தியனுக்கும் 12 ரூபாய் இருந்தால் அவன் குடும்பத்துடன் நிம்மதியாக உட்க்கார்ந்து சாப்பிடலாம் என்று அறிக்கை அரசுக்கு கொடுத்தவர்கள் வேறு எப்படி இருப்பார்கள்?)
அது மட்டும் இல்லாமல் தமிழ் நாட்டில் யாருடைய ஆட்சியில் பாலும் தேனும் ஓடியதோ தெரியவில்லை,
நடிகர் சோ கூட துக்ளக் இல் எழுதும் போது எம்ஜிஆர் ஆட்சியைத்தான் பொற்காலம் என்று எழுதியதை இங்கே நினைவு கூறுகிறேன்,
அடுத்து சீமான் சார் ( நானும் கூட கொஞ்சம் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தேன் )
போகிற போக்கில் எம்ஜிஆர் கல்வியை, மருத்துவத்தை தனியாருக்கு கொடுத்து விட்டார், முல்லைப் பெரியாறு உரிமையை விட்டுக்கொடுத்து விட்டார் என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார்,
எம்ஜிஆர் எடுத்த தொலை நோக்கு திட்டத்தின் அடிப்படைதான் இன்று லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி படித்து இன்று உயர்ந்த நிலைக்கு வரக்காரணமாக இருந்தது,
அதேபோல் மருத்துவம் தலைவர் ஆட்சியில் தனியார் மருத்துவ மனைகள் இன்று போல கொள்ளைக் கூடாரங்களாக இருக்கவில்லை,
தலைவருக்குப் பின்னால் வந்த அரசுகளின் நிர்வாக சீர் கேட்டினால் இன்றைய நிலை ஏற்பட்டது என்றால் தலைவர் எப்படி அதற்கு பொறுப்பாக முடியும்?
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அன்று என்ன நடந்தது என்ற விபரத்தை அப்போதைய அமைச்சர் ராஜா முஹம்மது அவர்கள் விளக்கமாக சொன்ன பின்பும் இப்படிப்பட்ட ஆதாரமில்லாத குற்றச்சாட்டை சீமான் சொல்வாரே என்றால் நானும் அவருக்கு ஒன்றிரண்டு கேள்விகளை முன் வைக்கிறேன்
1: சீமான் திருமணம் ஆவதற்கு முன்பு நான் திருமணம் செய்வதென்றால் இறந்து போன விடுதலைப் புலி ஒருவரின் மனைவியைத்தான் மனைவியாக ஏற்றுக்கொள்வேன் என்று வீர சபதம் பூண்டாரே அது என்னவாயிற்று?
கயல் விழி முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகளா அல்லது விடுதலைப்புலியின் மனைவியா?
2: பெண் உரிமை சமத்துவம் பேசும் நீங்கள் நடிகை விஜய லட்சுமிக்கே நியாயம் இன்னும் கொடுக்க வில்லையே சார் அது எப்படி?
3: சிவாஜி சிலையை கடற்கரையில் இருந்து அகற்றினால் என் தலைமையில் மிகப்பெரிய போராட்டத்தை இறுதி வரை நடத்துவேன் என்று தொண்டை வறள சவால் விட்டீர்களே அது என்ன ஆச்சு?
இன்னும் நடைமுறைக்கு ஒவ்வாத பல சட்டங்களை கொண்டு வருவேன் என்று சொல்லும் நீங்கள் நாளை எப்படி பல்டி அடிப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்?
மேடையில் வீரமாக பேசி கைத்தட்டல் வாங்கலாமே தவிர வேறு ஒன்றும் நடக்காது,
மாவீரன் உயிராக நினைத்த தலைவரை இழிவாக பேசிய சீமானே உனக்கான குழியை நீயே வெட்டிக் கொண்டாய் ( இதே போல் ஒரு பொதுக்கூட்டத்தில் தலைவரை பற்றி இழிவாக பேசி பிரேமலதா விஜயகாந்த் இன் தேமுதிக என்ன கதி ஆனது என்பது நினைவிருக்கட்டும் )
"தாய் "படத்தில் கவியரசர் எழுதிய பாடல் இப்படி :
" கூவத்திலே காசை அள்ளி போட்டிருக்காங்க, கூட இரண்டு முதலையையும் விட்டிருக்காங்க "
ஆனா கடைசியில் பாட்டு எப்படி மாறிப் போனது என்று எல்லாருக்கும் தெரியும் (கூவம் சுத்தப் படுத்த ஒதுக்கிய தொகை என்ன ஆனதோ தெரியவில்லை )
காந்த ராஜ் இதை எல்லாம் விட்டு விட்டு தலைவர் ஆட்சியை விமர்சிக்க வந்து விட்டார்,
என்ன செய்ய இந்த மாதிரி அடி முட்டாள்கள் இருக்கும் வரை மக்களுக்கு நன்றாக பொழுது போகும்.
அன்புடன் தலைவரின் பக்தன்...
ஜே. ஜேம்ஸ்வாட்!...(J.JamesWatt)...
-
#இப்புவியில்_ஒப்பில்லை
கத்தி வீசிய போதும் கலங்கவில்லை,
உலகம் சுற்றும் வாலிப*ன் ப*ட*த்தின் எடிட்டிங்கின் போது மின்வெட்டை ஏற்படுத்தி கஷ்டம் கொடுத்த
போதும்,சுணங்கவில்லை,
துப்பாக்கிக்குண்டு தொண்டையை
கிழித்த போதும் கொண்ட லட்சியத்தில் குறைந்து விடவில்லை,
தன்னால் உயர்ந்தவரே தன்னை நீக்கியபோது தளர்ந்துவிட வில்லை,
காரணம் இல்லாது கழக அரசை இந்திராகாந்தி
கலைத்த போதும் க*ல*ங்கிவிடவில்லை,
இரண்டே பாராளுமன்ற தொகுதியில் வெற்றிய*டைந்து முப்பத்தேழு தொகுதியில் மொத்தமும் இழப்பு என்றபோதும் முடங்கிவிட வில்லை,
கழகத்தின் ஆட்சி நடக்கையிலேயே
கருணாநிதி கட்சி உள்ளாட்சித் தேர்தலில்
கணிசமாக ஜெயித்த போதும்
குழம்பி விடவில்லை,
நம்மிடம் இருந்தோரே நமது கழகம் தொடங்கி தன்னை எதிர்த்தபோதும்
தயங்கிவிட வில்லை,
பிணி வந்து தம்மை பணி செய்யாது தடுத்த போதும் பணிந்துவிட
வில்லை,
ஐஸ் பெட்டியில் உறங்குகிறார் என்று
அவதூறு பாப்பிய போதும் ஆவேசம் கொள்ளவில்லை,
மலையாளி என்றெல்லாம் மட்ட ரக தாக்குதலுக்கு மனம்
நோக*வில்லை..
துளைக்க வந்த துப்பாக்கி ரவைக்கும்
தொண்டையிலே இடம் தந்த
தொண்டை நாட்டு வள்ளல் துவண்டு விடவில்லை,
இமாலய வெற்றி வந்த போதும் இறுமாப்பு இல்லை,
தடைகள் வந்த போதும் தடுமாற்றம் இல்லை,
வாரி கொடுத்த வள்ளல் கரங்கள்
ஒருநாளும் வற்றி விடவில்லை,
ஓடி ஓடி உழைத்து ஊருக்கே கொடுத்த
ஒப்பில்லா தலைவருக்கு இப்புவியில்
ஒப்புமையும் இல்லை,
எனவே தான் வருடங்கள் கரைந்தாலும்
வளர்பிறை சந்திரனாய் நிலைத்த புகழ் கொண்ட நிகரில்லா புனிதருக்கு,
ஈடில்லை இணையில்லை,
திண்டுக்க*ல் வெற்றியில் தொட*ங்கி இறுதியில் நெல்லையில் வெற்றி அடைந்த*போதும் த*லைக்க*ண*ம் ஏற்றிய*தில்லை..
ப*ங்க*ளாவில் வாழும் நிலை வ*ந்த*போதும் ப*ழைய* வாழ்க்கையை ம*ற*ந்தாரில்லை..
முத*ல்வ*ராக* இருந்த*போதும் த*ன*து சிகிச்சை செல*வை அர*சே ஏற்க* முய*ன்றாரில்லை..
நீங்கள் காட்டிய இருவிரல் இயக்கத்திற்கோ
அன்றும்,இன்றும்,என்றும்,
குறையில்லை.
ப*கிர்ந்து திருத்த*ப்ப*ட்ட* ப*திவு............prn...
-
எம்,ஜி.ஆர்.எனும் புகழ் மந்திரம்.—வள்ளல்
இருந்தாய் எனுமொரு நிரந்தரம்.
கோடியிலொருவன் மனிதன்-எம்மில்
கூடி வாழ்ந்த அதிசயம்.
வண்ணமும் எண்ணமும் தங்கம்—நீ
வாழ்ந்த வரையும் சிங்கம்.
இன்னமும் உன்னையும் வெல்ல—இனி
என்றும் பிறப்பார் இல்லை.
கடவுள் தானவன் முதலாளி—அவன்
கண்டதில் நீயொரு தொழிலாளி.
கொடுப்பது எல்லாம் கொடுத்தான்.—அவன்
கொடுத்ததை எல்லாம் கொடுத்தாய்.
மரணம் என்பது உனக்கில்லை—இந்த
மண்ணும் மரணம் ஆவதில்லை.
இன்னும் அள்ளிக் கொடுக்கிறாய்—என்றும்
ஏழையின் மனங்களில் சிரிக்கிறாய்.
இருந்த போது இழித்தோரும்—உயிர்
துறந்த போது பாடினர்.
இன்றும் உன் முகம் காட்டாமல்-ஓட்டு
எவர்தான் துணிவரோ கேட்டுத்தான்!.
மறைந்தும் வழங்கும் வள்ளலே—உனை
மறைத்திட எது எழும் இமயமே!
நிறைத்தும் உன்புகழ் போற்றுமே!---தன்
திரைகளால் பாடி வங்கமே!...Ai.Das...
-
தொடர் பதிவு - உ...த்தமன் 6
----------------------------------------------
சென்ற பதிவில் "வேட்டைக்காரனி"ன் வேட்கையை பார்த்த நாம் இந்த வாரம் "நவராத்திரி"யும் "முரடன் முத்து"வும் "படகோட்டி"யிடம் பட்ட பாட்டை பார்க்கலாம். "நவராத்திரி" வி.சி.அய்யனின் 100 வது படம் அல்லவா? கைபிள்ளைகள் உற்சாகமாக பில்ட்-அப் வேலையை
ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை உலகத்திலேயே எந்த நடிகனும் 9 வேடங்களில் நடித்ததில்லை ஆ,ஊ என்று கயிறு திரித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் இதற்கு முன்னால் 1950 களில் 11 வேடங்களில் கலக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் படமான "திகம்பர சாமியாரி"ல் நம்பியார் 11 வேடங்களில் தோன்றியதோடு மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்.
படமும் போரடிக்காமல் விறுவிறுப்பாக நகரும். நம்பியார் ஒரு போதும் 11 வேடங்களில் நடித்ததை பெருமையாக சொன்னதில்லை. ஒரு வேடத்தில் நடித்தாலே நம்மை இம்சை படுத்தும் அய்யனின் கைஸ்கள் 9 வேடம் கிடைத்தால் நம்மை விடுவார்களா? பல வேடங்களில் அதிகமான குளோஸப் காட்சிகளில் வந்து அய்யன் நம்மை பயமுறுத்திப் பார்த்தார்.
ஆனால் ஜோஸப் தியேட்டரில் தீபாவளியன்று வெளியான இந்தப் படத்தோடு "முரடன் முத்து" என்ற பந்துலு படம் காரனேஷனில் வெளியாகி வெகு விரைவில் பெவிலியனுக்கு திரும்பியது. பாலகிருஷ்ணாவில் "உல்லாச பிரயாணம்" என்ற. Ssr நடித்த படம் வெளியாகி 10 நாளில் முக்தி அடைந்து விட்டது. எங்க ஊர் தாஜ்மகால் சார்லஸில் புரட்சி நடிகரின் "படகோட்டி" வெளியாகி ஒட்டு மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்துக் கொண்டது.
அதுவும் மீனவர் குல மக்களின் தேசிய பாடலான 'தரைமேல் பிறக்க வைத்தான்' அவர்களை பரவசப்படுத்தியது.
ஒட்டு மொத்த மீனவர்குலமும் சார்லஸில் சங்கமமாயினர் என்றே
சொல்லலாம். முதன்முதலில் நான் குடும்பத்தை விட்டு என் நண்பனுடன் அதுவும் வெளிவந்து 25 நாட்களுக்கு பிறகு சென்று பார்த்ததை தனிபதிவாக போட்டிருக்கிறேன். படம் பார்த்த பிரமிப்பு எனக்கு இன்று வரை தொடர்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அதன்பின் எத்தனை தடவை படகோட்டியை பார்த்தேன் என்ற ஞாபகம் இல்லை. 1968 ல் ஒரு தடவை ஜோஸப்பில் வெளியாகி தலைவரின் புதுப்படங்களை வெல்லும் அளவு கூட்டம். அய்யனின் பல புதிய படங்களை காலில் போட்டு சவட்டியது என்றே சொல்ல வேண்டும். ஆனால் எம்ஜிஆர் படத்தை 50 நாட்கள் ஓடவிடாமல் செய்வதற்கு கைஸ்கள் நல்ல தந்திரம் செய்வார்கள். மீதம் இருக்கின்ற மூன்று தியேட்டர்களிலும் தொடர்ந்து தலைவரின் பழைய படங்களை திரையிட்டு மினிமம் வசூலை குறைக்க முயற்சி செய்வார்கள்.
ஆனால் அய்யனுக்கு அந்தப் பிரச்னை கிடையாது. அய்யனின் புதுப்படத்தை பார்க்கவே ஆள் வராது. இதில் பழைய படத்தை திரையிட்டு என்ன செய்ய? பாவம் கைஸ்கள். இருப்பினும் மீசையில் மண் ஒட்டாத கதையாக அய்யனின் அறுவை படங்களை சிலாகித்து பேசி அவர்களுக்குள்ளே பரவசப்படுவதை பார்த்தால் படு தமாஷாக இருக்கும்.
மற்ற ஊர்களை காட்டிலும் தூத்துக்குடியில் "படகோட்டி"யின் ஓட்டமும் வசூலும் மிகவும் அதிகம் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்..
வழக்கம் போல் அய்யனின் கைஸ்கள் "நவராத்திரி"யை 50 நாட்கள் ஓட்டி அவர்களே மகிழ்ந்து கொண்டார்கள்."படகோட்டி"யும்
50 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றியை பெற்றது எத்தனை வேடங்கள்
போட்டாலும் புரட்சி நடிகரின் இயற்கை நடிப்பின் முன் சமாளிக்க முடியாமல் தோற்று போனதை நினைத்து கைஸ்கள் கொதிப்படைந்து போனார்கள். தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் புரட்சி நடிகரை தரக்குறைவாக விமர்சிப்பதை வழக்கமாக ஆக்கிக் கொண்டார்கள்.
ஆனால் அய்யனின் எந்த படத்துக்கும் வசூலை மட்டும் வெளியிட மாட்டார்கள். தலைவரின் பழைய படங்களின் வசூல் அதை விட அதிகம் என்பதை கைஸ்கள் உணர்ந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். "நவராத்திரி"க்கு 9 ராத்திரிதான் உண்டு. ஆனால் கைஸ்கள் எத்தனையோ ராத்திரி கண்விழித்து காத்திருந்து படத்தை ஓட்டும் அதிசயம் அற்புதமானது.
மீண்டும் அடுத்த பதிவில்........ksr...
-
என்ன செய்தார் எம்ஜியார்...
-----------------------------------
மாணவர்கள் படிப்பு என்பது 11+1+3+பட்ட மேற்படிப்பு...
என்று இருந்தது .. அப்பொழுது கல்லூரிகள்
மாவட்ட தலைநகரில் இருந்தது
அல்லது 50 கி மீ தூரத்தில் இருக்கும் ..
இதனால் கிராமபுறத்தில் படிக்கும் மாணவன்
பாட சுமை .... பெற்றோரை விட்டு பிரிந்து இருக்கும்
வாழும் சூழல்.... கல்லூரி மாணவர் சேர்க்கையினால்...
பெரும்பாலும் அந்த புகுமுக வகுப்பில்
தோல்வி அடைவார்கள்... பி யு சி என்பது கடினமான
ஒரு காலகட்டமாக இருக்கும்... அதை எளிதாக்கினார்
பள்ளியிலேயே 10+2+3+பட்ட மேற்படிப்பு என்று
பட சுமைகளை குறைத்தார் பி யு சி பாடங்களை
+1 +2 வகுப்பில் புகுத்தினார்... இதனால் கல்லூரிக்கு...
போகும் மாணவர் எண்ணிக்கை கூடியது ...
நிறைய பட்ட தாரிகள் தமிழ்நாட்டில் உருவாகினர் ...
வாழ்க எம்ஜியார்...
வாழ்க தமிழ்.............cmu...
-
1970 ஆம் ஆண்டு ஏசுநாதர் என்ற திரைப்படத்தில் புரட்சி தலைவர் mgr அவர்கள் நடிப்பதுக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அதற்காக சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது.
ஆனால் கடைசி நிமிடத்தில் mgr அந்த படத்தில் நடிக்கவில்லை என்று மறுத்துவிட்டார். அதற்காக அவரிடம் காரணம் கேட்டபோது...
"மக்கள் என்னை ஒரு நடிகனாக பார்க்கட்டும், ஒரு அரசியல் தலைவனாக பார்க்கட்டும் ஆனால் என்னை கடவுளாக பார்க்க வேண்டாம். அதனால் தான் இந்த படத்தை மறுத்துவிட்டேன்" என்று கூறினார்.
அந்த அளவுக்கு அவர் தன் ரசிகர்களை அறிந்து வைத்திருந்தார் என்பது தான் உண்மை. ஆனால் புரட்சிதலைவருக்கோ புத்தர், ஏசுநாதர் போதனைகளின் மீது அளவு கடந்த பக்தி உண்டு.
"புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக" என்று பாடி நடித்து இருக்கிறார். அவரது பல படங்களில் புத்தர் சிலையோ அல்லது படமோ வருவது போல காட்சி அமைத்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
#M_G_R...............NSM...
-
எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்!
m.g.r. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள். எம்.ஜி.ஆர் - என்.டி.ஆர் என்று அழைக்கும்போது ஒலி கூட ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கும்.
எம்.ஜி.ஆர் மீது என்.டி.ராமராவ் வைத்திருந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உதாரணமாக ஒரு சம்பவம். எம்.ஜி.ஆரை வைத்து ‘குமரிக் கோட்டம்’, ‘உழைக்கும் கரங்கள்’ படங்களை எடுத்தவர் கோவை செழியன். அதிமுகவில் இருந்தவர். அவரை முதலாளி என்று செல்லமாக அழைப்பார் எம்.ஜி.ஆர்.
கோவை செழியன் தெலுங்கிலும் படங்கள் தயாரித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். ராமராவ் அப்போது மிகவும் பிஸியாக இருந்த நேரம். அவருடன் கோவை செழியனுக்கு நெருக்கமும் கிடையாது. தான் தயாரிக்க இருக்கும் படத்துக்கு திடீரென்று கேட்டால் ராமராவ் ‘கால்ஷீட்’ கொடுப்பாரா என்று கோவை செழியனுக்கு சந்தேகம்.
எம்.ஜி.ஆரை சந்தித்தார். என்.டி.ராமராவை வைத்து படம் தயாரிக்க விரும்பும் தனது எண் ணத்தையும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். உடனே, ராமராவுடன் தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆர். பேசினார். படத் தயாரிப்பு சம்பந்தமாக ராமராவைச் சென்று சந்திக்கும்படி செழியனிடம் கூறினார்.
அதன்படி, ஐதராபாத் சென்று ராம ராவை சந்தித்தார் செழியன். ‘எம்.ஜி.ஆர். சொல்லி வந்திருக்கிறேன். உங்களை வைத்து படமெடுக்க...’ என்று செழியன் சொல்லி முடிக்கும் முன்பே, சிரித்துக் கொண்டே அவரை கையமர்த்திவிட்டு என்.டி.ராமராவ் கேட்ட கேள்வி, ‘‘ஷூட்டிங்கை எப்ப வெச்சுக்கலாம்?’’
எம்.ஜி.ஆருக்கு என்.டி.ராமராவ் கொடுத்த மதிப்புக்கும் மரியாதைக்கும் இது சான்று.
என்.டி.ராமராவ் தனிக் கட்சி தொடங்கி முதல்வராகும் முன்பே தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பிடித்து முதல்வ ராகிவிட்டார். அவரது பாணியில் தானும் தனிக் கட்சி தொடங்க முடிவு செய்தார் ராமராவ். தனக்கு முன்னோடியாக விளங்கும் எம்.ஜி.ஆரிடம் ஆலோசனையும் ஆசியும் கேட்பதற் காக சென்னை வந்து எம்.ஜி.ஆரை சந்தித்தார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த எம்.ஜி.ஆர். கேட்ட கேள்வி ‘‘கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க?’’
‘‘தெலுங்கு ராஜ்யம்’’... ராமராவின் பதில்.
எம்.ஜி.ஆர். சொன்னார். ‘‘தெலுங்கு தேசம் என்று பெயர் சூட்டுங்கள். பொருத்தமாக இருக்கும்.’’
அதை ராமராவ் ஏற்றுக்கொண்டார்.
‘‘எம்.ஜி.ஆர் எனக்கு வழிகாட்டி. அண்ணனைப் போன்றவர் அவரைப் பின்பற்றியே அரசியலுக்கு வந்தேன்’’ என்று அறிவித்த ராமராவ், தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கினார். தமிழகத்தில் தேர் தல் பிரசாரங்களில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்யும் பாணியை முதலில் ஏற்படுத்தியவர் எம்.ஜி.ஆர்.தான். அவரைப் போலவே ஆந்திரா விலும் திறந்த வேனில் சென்று சூறாவளி பிரசாரம் செய்த ராமராவ், மகத்தான வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.
எம்.ஜி.ஆரிடம் ஆசி பெறுவதற்காக மீண்டும் சென்னை வந்து அவரை சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார். எம்.ஜி.ஆரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ராமராவுக்கும் அவருடன் வந்தவர்களுக்கும் தனது வீட்டில் தடபுடல் விருந்தளித்தார்.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர். விருந்தின்போதே சென்னை நகரின் தண்ணீர் பிரச்சினையையும் ஆந்திராவில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட் டால் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்றும் ராம ராவிடம் கூறினார். எம்.ஜி.ஆர். சொன்னால் ராமராவிடம் மறுப்பேது? அதன் தொடர்ச்சி யாக உருவானதுதான் சென்னைக்கு தண்ணீர் வழங்கும் தெலுங்கு கங்கைத் திட்டம். 1983-ம் ஆண்டு ஜனவரியில் ஆந்திர முதல்வராக ராமராவ் பதவியேற்றார். அடுத்த 4 மாதங் களில் தெலுங்கு கங்கை திட்டம் தொடக்க விழா நடந்தது.
1983-ம் ஆண்டு மே 25-ம் தேதி சென்னையில் நடந்த பிரம்மாண்டமான தெலுங்கு கங்கை திட்ட தொடக்க விழாவில் பிரதமர் இந்திரா காந்தி கலந்து கொண்டார். திட்டத்தை செயல் படுத்த தமிழக அரசின் பங்கில் முதல் தவணைக்கான காசோலையை இந்திரா காந்தி மூலம் ராமராவிடம் கொடுக்கச் செய்தார் எம்.ஜி.ஆர்.
1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தபோது என்.டி.ராமராவ் சென்னை வந்து கலங்கிய கண்களுடன் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் சொன்ன வார்த்தைகள்...
‘எம்.ஜி.ஆர். மறைவின் மூலம் எனது குருநாதரை இழந்துவிட்டேன்’.
எம்.ஜி.ஆர். எதையுமே நுணுக்கமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் சிந்திக்கக் கூடியவர்.
தமிழில் எம்.ஜி.ஆர். நடித்த பல ரீமேக் படங்கள் தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்தவை. ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. 7 சென்டர்களில் வெள்ளி விழா கொண்டாடி புதிய சாதனை படைத்தது. எம்.ஜி.ஆர். திரையுலகை விட்டு விலகும் வரை ‘எங்க வீட்டுப் பிள்ளை’யின் சாதனை முறியடிக்கப்படவில்லை...
#m_g_r................nsm...
-
இதையாக் கேட்டேன்?
--------------------------------
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
கேமராவுக்கு முன் அந்த ஒப்பற்ற கலைஞனின் தப்பற்ற நடிப்புக்கு நான் எப்போதுமே தலை வணங்குவேன்!
ஆனால் தொழில் சம்பந்தமாய் எதுவுமே தெரிந்து கொள்ளாத--தெரிந்து கொள்ள முயற்சிக்காத ஒரு கலைஞனாகவே வாழ்ந்து மறைந்து விட்டார்!
அது சம்பந்தமான ஒரு நிகழ்வை இன்று பார்க்கப் போகிறோம்--
காமராஜர்ருடன் ஒருமுறை சிவாஜி உரையாடிக் கொண்டிருக்கும் போது கர்ம வீரர் சிவாஜியிடம் கேட்கிறார்--
ஏன்ய்யா,,ராமச்சந்திரன் படங்களில் சமுதாயப் பார்வையோடு கூடிய பாட்டு இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
உன் படத்துலேயும் அப்படிப் பட்டப் பாட்டுகளை நீ பாடலாமே??
சிவாஜியும் அதற்கு ஒப்புக் கொண்டு--
ஆமாய்யா அண்ணனோட படங்களில் அப்படிப்பட்ட பாட்டு கண்டிப்பாக இருக்கும்.அது சமுதாயத்தின் மேல்-
கண்டிப்பாகவும் இருக்கும்!!
நானுன் என் படத்துல அது மாதிரி ஒரு பாட்ட வைக்கறேன்!
ஓரிரு மாதங்கள் கழிந்து,, காமராஜருக்கு ஒரு பாட்டைப் போட்டு காண்பிக்கிறார் சிவாஜி!
என்னைப் போல் ஒருவன் படத்தில்--
தங்கங்களே நாளைத் தலைவர்களே--நம்
தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே- நம்
தேசம் காப்பவர் நீங்கள்--நம்
தாத்தா காந்தி மாமா நேரு
தேடிய செல்வங்கள்--பள்ளி
சாலைத் தந்தவன் ஏழைத் தலைவனை
தினமும் எண்ணுங்கள்!!
பாராட்டுவார் காமராஜர் என்று பரவசத்துடன் சிவாஜி எதிர்பார்க்க--
பொரிந்து தள்ளுகிறார் கர்மவீரர்??
ஏய்யா?? திருடாதே,,குடிக்காதே உழைப்புக்கு அஞ்சாதே--இப்படி இருக்கும் ராமச்சந்திரன் பாட்டுகள் மாதிரிக் கேட்டா--
தாத்தா,,மாமான்னு என்னய்யா பாட்டு இது??
சங்கடத்துடன் சிரித்தபடி சிவாஜி சொன்னாராம்--
அது தான் சொன்னேங்களே--அண்ணனுக்கு அத்தனை விஷயங்களும் அத்துபடின்னு!!!
இதனை இவன் கண் விடல் என்று சும்மாவா சொன்னார்கள்??
என்னைப் போல் ஒருவன் படம் திரைக்கு வர நீண்ட காலம் எடுத்துக் கொண்டது என்பது உபரி செய்தி!!! Vtr.........
-
எழுத்தாளர் சுஜாதாவின் 40 வருடத்துக்கு முந்திய ஒரு பதிவு !
சென்னையில் நடைபெறும் பெரிய மனிதர்களின் வீட்டுத் திருமணத்தில் VIP watching எனக்கு முக்கியமான ஒரு பொழுதுபோக்கு !
கல்யாணக் கூட்டத்தில் இருந்து அரை ட்ராயர் போட்ட சிறுவர்கள் அனைவரும் எழுந்து வாசலுக்கு ஓடினால் வந்திருப்பது ரஜினிகாந்த் !
பட்டுப்பாவடை கட்டிய 10 லிருந்து 20 வயது வரையிலான சிறுமிகளும் பெண்களும் ஓடினால் வந்திருப்பது கமலஹாசன் !
40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரும் எழுந்து வாசலுக்குப் போனால் வந்திருப்பது சிவாஜிகணேசன் !
கல்யாணப் பெண், மணமகன் மற்றும் மந்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் வாத்தியார் தவிர மொத்தக் கூட்டமும் வாசலுக்கு ஓடினால் வந்திருப்பது MGR !..........
-
ஈழம் பற்றி எம்.ஜி.ஆா்
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் - மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை - அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான்.
சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோதுஇ முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.
• ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடுஇ தனது சக அமைச்சர்களையும் கருப்புச் சட்டை அணியச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான்.
• இந்தியாவின் ராணுவம் ஈழத்துக்குப் போக வேண்டும் என்ற ஒரு கருத்து தமிழகத்தில் சிலரால் முன் வைக்கப்பட்டபோது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தமிழக சட்டமன்றத்திலேயேஇ “ஈழத் தமிழர்களோஇ விடுதலைப் புலிகளோஇ தங்கள் நாட்டுக்கு ராணுவம் அனுப்புமாறு கேட்கவில்லை” என்று சட்டமன்றத்தில் கூறி ராணுவத்தை அனுப்புவதையே எதிர்த்தவர் எம்.ஜி.ஆர்.
• ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அதை புலிகள் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்கள். டெல்லி அசோகா ஓட்டலிலே பிரபாகரனை சிறைபிடித்து வைத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை. சென்னையிலிருந்து அழைத்து வந்து பிரபாகரனிடம் ஒப்பந்தத்தை ஏற்க வைக்குமாறு நிர்ப்பந்தித்தார்கள். எம்.ஜி.ஆர். அப்போதும் பிரபாகரனை கட்டாயப்படுத்தி ஏற்கச் செய்துஇ ராஜீவ் ஆட்சியிடம் நற்சான்றிதழ் பெற விரும்பவில்லை. “உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதன்படி முடிவு எடுங்கள்” என்று பிரபாகரனிடம் கூறியவர் - எம்.ஜி.ஆர். தான்!
• ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தைப் பாராட்டி சென்னையில் ராஜீவ் காந்திக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்க விரும்பாத முதல்வர் எம்.ஜி.ஆர்.இ தனது சிகிச்சைக்காக முதல் நாளே அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார். இந்த செய்தியறிந்து டெல்லியிலிருந்து ‘ஹொட் லைனில்’ தொடர்பு கொண்டு எம்.ஜி.ஆரிடம் ராஜீவ் காந்தியே ‘நீங்கள் அந்த தேதியில் அமெரிக்கா போகக் கூடாது; பயணத்தை தள்ளிப் போட்டுவிட்டுஇ பாராட்டு விழாவில் பங்கேற்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தினார். தனக்கு உடன்பாடு இல்லாமலே ‘வேண்டா வெறுப்போடு’ அந்த விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார். ஒப்பந்தத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை.
• உடல் நல சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனையிலே இருந்த நிலையில் கூட எம்.ஜி.ஆர். ஈழப் பிரச்சினைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார். இந்திய அரசின் துரோகத்துக்கு எதிராக நீதி கேட்டுஇ ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தாமல் திலீபன் வீரமரணமடைந்த செய்தியால் கலங்கிப் போன எம்.ஜி.ஆர். திலீபன் உண்ணாவிரதம் - இந்திய அரசுக்கு எதிரானது என்ற நிலையிலும் திலீபன் மறைவுக்கு அமெரிக்காவிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பினார்.
• உடல்நலம் குன்றிய நிலையிலும் தொடர்ந்து தமது ஆதரவை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியே வந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகுஇ அவர் வாழ்ந்த காலம் மிகக் குறுகியது. மரணம் - அவரை தழுவிக் கொண்டது. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன்தனது இரங்கல் செய்தியில் கூறினார்:
“ஈழத் தமிழினம் அநாதையாக ஆதரவின்றித் தவித்துக் கொண்டிருக்கையில் உதவிக்கரம் நீட்டி உறுதியாகத் துணை நின்ற புரட்சித் தலைவரே! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவும்இ ஊக்கமும் கொடுத்த செயல் வீரரே! தங்களது இழப்பு என்பது வேதனைச் சகதியில் சிக்கிக் கிடக்கும் தமிழீழ மக்கள் மார்பில் தீ மூட்டுவது போலுள்ளது. என்மீது கொண்டிருந்த அன்பையும்இ ஈழ இயக்கத்தின் மீது தாங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். அவர்கள் மறைமுகமாக எமக்குச் செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” - என்று கூறி இயக்கத்தின் சார்பில் பிரபாகரன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்..........Baabaa...
-
#மக்கள்திலகத்தின்
திரையுலக பயணத்தில்.........
#கண்ணன்_என்_காதலன்
ஒரு ஓய்வு பெற்ற இராணுவ கேப்டனின்(திருச்சி செளந்தர்ராஜன்) வளர்ப்பு மகன் கண்ணன் ( மக்கள் திலகம்) பிறந்த மகன் இஞ்சினியர் சுந்தரம் (முத்துராமன்) , கேப்டனின் மருமகள் மல்லிகா (ஜெயலலிதா) சுந்தரம்-மல்லிகா இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தன் தகப்பனாரை கார் விபத்தில் இழந்த மாலதி (வாணிஸ்ரீ) தன் தாயுடன் கேப்டனின் வீட்டுக்கு வருகிறாள்.
நல்ல சகோதரர்களாக வாழ்ந்து வந்த கண்ணன்-சுந்தரம் உறவு, கண்ணன்,தனக்கு நிச்சயிக்கப்பட்ட முறைப்பெண் மல்லிகாவை காதலிப்பதை தெரிந்ததும் சுந்தரம் கோபம் அடைந்து கண்ணனை வெறுக்கிறான். மல்லிகாவும் மணந்தால் கண்ணன்தான், என்பதில் உறுதியாக இருக்கிறாள்.
இதற்கிடையே மாலதியும் கண்ணனை காதலிக்க, கண்ணன் சகோதர பாசமா, காதலியா இரண்டில் எதை தெரிவு செய்கிறார் என்பதே படத்தின் முக்கிய முடிச்சு.
மக்கள் திலகத்தை ஏழை பங்காளனாக, புரட்சி வீரனாக, ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களில் பார்த்திருப்போம். முழுக்க முழுக்க முக்கோண காதல் கதையில் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். முத்துராமன்,அசோகன், ஜெயலலிதா, வாணிஸ்ரீ, சோ, தேங்காய் சீனிவாசன் போன்றொரும் நடித்துள்ளனர்.
வழக்கம் போல மெல்லிசை மன்னர் படத்தின் இன்னொரு நாயகன் -பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும், கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்,கண்கள் இரண்டும், சிரித்தாள் தங்கப்பதுமை அடடா என்ன புதுமை, என ஒவ்வொரு பாடலும் தேன் சொட்டாக தந்திருக்கிறார்.
படத்தில் மக்கள் திலகத்தின் ரசிகர்கள் விரும்பும் விடயங்களான சண்டை காட்சிகள், பொறி பறக்கும் வசனங்கள், இரண்டு மூன்று சேசிங் காட்சிகள் எதுவும் இல்லாததினால்தானோ என்னவோ, படம் எதிர் பார்த்தபடி போகவில்லை- இருப்பினும் வசூலிலும் தப்பு பண்ணவில்லை...
கண்ணன் என் காதலன்- பாடல்களுக்காக மட்டும்.
தகவல் & புகைப்படம்:https://en.m.wikipedia.org/wiki/Kann............Sr.bu...
-
புரியும் பார் முடிவிலே!
----------------------------------
எம்.ஜி.ஆர்!
இவரை அரசியல் கடவுள் எனலாம்!
காரணம்?? இன்றைய அரசியல் களத்தில்--
இவரைப் புகழ்ந்து,,இவர் ஆட்சியைக் கொடுப்பேன் என்போரும்=
இவரைத் திட்டுவதனாலாவது தமக்கு விளம்பரம் கிடைக்குமா என்று ஏங்குபவர்கள் ஒரு புறமாய் உலா வருகிறார்கள்!
கடவுள் விஷயத்தில் தானே--ஆத்திகன்--நாத்திகன் என இரு பிரிவு??
சமீபத்தில் டாக்டர் காந்தராஜ் என்னும் தற்குறி ஒன்று தலை கால் புரியாமல் உளறியிருக்கிறது--
எம்.ஜி.ஆர் அட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை?
சத்துணவு திட்டத்தின் மூலம் அன்றைய மாணவர்களை சோத்துக்குக் கையேந்துபவர்களாக மாற்றியது தான் எம்.ஜி.ஆரது ஒரே சாதனை?
எம்.ஜி.ஆர் தன் ஆட்சியில் உழைப்பவர்களையும் சோம்பேறிகளாக்கினார்?
இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் வக்கணையாகப் பேச--
வேலை வெட்டியில்லாத ஒரு சானலும் அதைக் கர்ம சிரத்தையாக ஒளி பரப்பியிருக்கிறது
முத்து முத்தாக மலர் சிந்தினால் சுகிக்க முடியும்!
கொத்து கொத்தாக மலம் கொட்டினால் சகிக்க முடியுமா?
இந்த லட்சணத்தில் இந்தப் பிரகஸ்பதி ஒரு டாக்டராம்?
பெரியாரின் சீடராம்!
அதானே?/ ராமசாமி நாயக்கரின் கூட்டம் நாகரீகமாகவும் நாணயமாகவும் என்னிக்குப் பேசியிருக்கு?
நாம் இப்படிக் குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது--என்னிடம் இந்த தரித்திரம் சொல்கிறது--
எம்.ஜி.ஆரும்,,ஜெவும் பெரியாரிஸத்தைக் காற்றில் பறக்க விட்டார்களாம். அதனால் தமிழகத்தைப் பாழ் படுத்திவிட்டார்களாம்??
நேற்று இந்தக் காமெடியனிடம் நான் பேசினேன்
எங்கள் இருவருக்குமிடையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அனல் பறக்கும் விவாதம் நடந்தேறியது.
மனிதர் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் போதுமா என்று நக்கலாகச் சொல்ல--
உங்களின் உதிர்வுகள் அக்மார்க் உளறல்கள் என்னும்போது உங்கள் மன்னிப்பு எனக்குத் தேவையே இல்லையே என்று அதைவிட நக்கலாகச் சொன்னேன்?
இந்த சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் பெயரை எவர் உச்சரித்தாலும் அவருக்கு டெபாஸிட் காலியாம்?
காலி--யாம் இந்தக் கருத்துக் குருடர் சொல்கிறார்?
இந்த நேரத்தில் ஒன்றை இங்கேக் குறிப்பிட்டே ஆக வேண்டும்!
கல்லிடைக் குறிச்சி ராமன் கிருஷ்ணன்,,திண்டுக்கல் சென்றாய் பெருமாள்,,மலரவன்--இப்படி நிறைய எம்.ஜி.ஆர் பக்தர்கள் இந்த ஆளிடம் தங்கள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்
ஆனால் அவை போதாது!
ஆட்சியில் அதிகாரத்தில் உள்ள பரமார்த்த சீடர்கள் கொஞ்சமாவது உப்பை,,தம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்!
இத்தகைய விஷக் கிருமிகளை முளையிலேயேக் கிள்ளியெறிய வேண்டும்
எம்.ஜி.ஆரும் இரட்டை இலையும்,,அம்மாவும் மேஜிக் செய்து எங்கள் கட்சியைக் காப்பாற்றுவார்கள் என்று பல்லைக் குத்திக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பதில் எந்தப் பயனும் இருக்காது?
ஆதாயம் கருதாத பக்தர்கள் மட்டுமே இத்தகைய ஈனப் பிறவிகளிடம் மல்லுக் கட்ட வேண்டும்--
ரஜினி,,கமல் போன்றவர்கள் எம்.ஜி.ஆரை உயர்த்திப் பேசினால் சண்டைக்குப் போவோம் என்ற இன்றைய மேல் மட்டக் கட்சி பிஸ்தாக்கள் நினைப்பது ஆச்சர்யம் மட்டுமல்ல காமெடியும் கூட!
எம்.ஜி.ஆரையும்,,ஜெவையும் அடுத்தடுத்துக் குதறியிருக்கிறது இந்தக் கருமாந்திரம்
அடுத்தவர்கள் எம்.ஜி.ஆரைப் பற்றி உயர்த்திப் பேசுவது சந்தர்ப்பவாதம் என்றால்--
எம்.ஜி.ஆரைக் கேவலப்படுத்துபவர்களை தட்டிக் கேட்காமல் இருப்பது--விசுவாச துரோகம்!
இன்றைய அ.தி.மு.க கரை---கறைகளை அவர்களின் அம்மாவின் ஸ்டைலிலேயேக் கேட்கிறோம்--
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா???!...vtr...
-
#எனது #தேவையே #பிறரின் #நன்மை #தான்
ஓராண்டில் எத்தனை இடத்தில் வேலை செய்தாய் என்பது சிறுமை. ஒரே இடத்தில் எத்தனை ஆண்டுகள் இருந்தாய் என்பதே பெருமை.
இப்பல்லாம் அலுவலகத்திலும் சரி, பங்களாவிலும் சரி பணிபுரியும் காலம் ஒரு வருடமோ இரு வருடமோ...
பணிபுரிந்து விட்டு...
அப்புறம் எஸ்கேப்... அதற்கு பல காரணங்களைக் கூறுவதையும் இன்று நாம் காண்கிறோம்...
ஒரு சிலர் மட்டும் வேறு வழியில்லாமல் அவரவர் இடங்களைத் தக்கவைத்துக் கொள்வதையும் நாம் காண்கிறோம்...
யாரையும் குறை சொல்வதற்கில்லை...
வாழ்க்கையை ஓட்டணுமே...!
ஆனால்..
அப்படி ஓய்வு பெறாமல் மிகுந்த ஈடுபாட்டுடன் ஆயுள் முழுவதும் புரட்சித்தலைவரிடம் வேலை செய்தவர்கள் எல்லோரும். அவரிடம், வயதைக் கணக்கெடுத்து ஓய்வு பெற்றவர்கள் யாருமில்லை...
இப்படி,
மாணிக்கம், சமையல்காரர் ரத்தினம், திருப்பதிசாமி, கணக்கர் சாமி, செக்யூரிட்டி கிருஷ்ணன், சபாபதி, கார் டிரைவர் கதிரேசன், கோபால் என இன்னும் பலர் பட்டியல் நீளும்...
அவரிடம் பணிபுரிவதை தம் பாக்கியமாகவே கருதினர். அவர் வேலைக்கு மட்டுமல்ல. தேவைக்கும் கொடுத்தார் என்பதாலா ???
இல்லை...
சாதாரண நடிகராக இருந்தபோது தங்களிடம் எப்படி பழகி னாரோ, மரியாதை அளித்தாரோ அதில் இம்மியளவும் குறையாமல், தான் முதல்வரான பிறகும் அதைத் தொடர்ந்து கடைபிடித்ததும்...கருணையுள்ளவராக நடந்துகொண்டதும்...தன்னிடம் பணிபுரிபவர்களை வெறும் பணியாளர்களாக எண்ணாமல் தனது குழந்தைகளாகவே பாவித்ததும் ஆகும்...
வாஸ்தவம் தான்...
இதயதெய்வம் பொன்மனச்செம்மலைத் தஞ்சம் அடைந்தவர்களுக்குத் தேவை என்பதே இருக்காது...bsm...
-
என்ன செய்தார் எம்ஜியார்...?!
-----------------------------------
மாணவர்கள் படிப்பு என்பது 11+1+3+பட்ட மேற்படிப்பு...
என்று இருந்தது .. அப்பொழுது கல்லூரிகள்
மாவட்ட தலைநகரில் இருந்தது
அல்லது 50 கி மீ தூரத்தில் இருக்கும் ..
இதனால் கிராமபுறத்தில் படிக்கும் மாணவன்
பாட சுமை .... பெற்றோரை விட்டு பிரிந்து இருக்கும்
வாழும் சூழல்.... கல்லூரி மாணவர் சேர்க்கையினால்...
பெரும்பாலும் அந்த புகுமுக வகுப்பில்
தோல்வி அடைவார்கள்... பி யு சி என்பது கடினமான
ஒரு காலகட்டமாக இருக்கும்... அதை எளிதாக்கினார்
பள்ளியிலேயே 10+2+3+பட்ட மேற்படிப்பு என்று
பட சுமைகளை குறைத்தார் பி யு சி பாடங்களை
+1 +2 வகுப்பில் புகுத்தினார்... இதனால் கல்லூரிக்கு...
போகும் மாணவர் எண்ணிக்கை கூடியது ...
நிறைய பட்ட தாரிகள் தமிழ்நாட்டில் உருவாகினர் ...
வாழ்க எம்ஜியார்...
வாழ்க தமிழ்............grm...
-
என்ன செய்தார் எம்ஜியார்?!
-----------------------------------
சத்துணவு திட்டத்தால் பள்ளிகளுக்கு மாணவர் வருகை
கூடியது.... அதனால் ஏற்கனவே இருக்கும் பள்ளிகளில்
போதிய வசதிகள் இல்லததால்... புது பள்ளிகள்
கல்லூரிகள் துவங்கவேண்டிய கட்டாயம் உருவானது
...அதற்கு நிலம்... நிதி ...ஆசிர்யர்.. அவர்களுக்கு
கொடுக்கப்டும் சம்பளம் ...போன்றவை அரசுக்கு
பிரச்சினையாக இருந்தது... ஏற்கனவெ சமய சார்புள்ள
கல்வி நிலையங்கள் அறகட்டளைகள்மூலம்...
நடத்தபாடும் கல்வி நிலையங்கள்... நல்ல முறையில்
இயங்கிவந்தன... அதனால் அந்த மாதிரி தொண்டு
நிறுவனங்கள்.. அறக்கட்டளைகளுக்கு அனுமதி அளித்து
..குறைந்த கட்டணத்தில் மாணவர்களை சேர்க்க அனுமதி
அளித்தர்..1960..... 70 களில் மாவட்ட தலை நகரில் மட்டும்
கல்லூரி இருக்கும்... அடுத்து பெரு நகரில் இருக்கும்.
50 கி மீ 60 கி மீ தோலைவில் இருக்கும் கல்லூரிக்கு...
போகமுடியாமல் பள்ளிகல்வியுடன் படிப்பை
நிறுத்திகொண்டவர்கள் நிறய பேர் இருந்தனர்....
.இதை மாற்றி 10 கி மீ க்குள் ஒரு கல்லூரி வரும்
அளவுக்கு சட்ட திட்டங்களை எளிமையாக்கினார்..
அதனால் மிக கூடுதலாக தனியார் கல்லூரிகள் வந்தன..
இப்போது இந்தியாவில் மிக அதிகமான பட்டதாரிகள்
தமிழகத்தில் இருப்பது இதனால்தான்..
ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது வெளினாடுகளுக்கு
பொறியியற் பட்டதாரிகள் மருத்துவர்கள்
தமிழ்னாட்டில் இருந்துதான்
அதிகமான பேர் போகிறார்கள் ...
வாழ்க எம்ஜியார்
வாழ்க தமிழ்...MaGR...
-
தொலை காட்சி பெட்டிகள் அறிமுகம் ஆன நேரம் அப்போது..
தூர்தர்சனில் தலைவரின் நம்நாடு படம் அன்று ஒளிபரப்பு..
தலைவர் வீட்டில் தோட்டத்தில் பணி முடிந்து யாரும் வீட்டுக்கு செல்லவில்லை... என்ன யாரும் வீட்டுக்கு போகவில்லை என்று தலைவர் கேட்க இன்று உங்கள் படம் நம்நாடு உங்களுடன் அமர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று பதில் கிடைக்க.
மன்னவன் புன்முறுவல் ஓடு அனைவரையும் உள்ளே ஹாலுக்கு அழைத்து அவர்கள் நடுவில் தானும் அமர்ந்து நம்ம நாட்டின் நிலையை பார்த்து மகிழ்ந்தனர்..
இடையில் படத்தின் நடுவே அனைவருக்கும் இனிப்பு..காரம்..டீ. பால் போன்றவை சுட சுட வழங்க பட்டன...
மகிழ்வுடன் படம் முடிந்து அனைவரும் தத்தம் வீடு திரும்ப மன்னவன் சிந்தனை அன்று இரவு வேறு மாதிரி யோசிக்க.
மறுநாள் தன் வீட்டில் வேலை செய்யும் அன்பர்கள் வீட்டில் டி.வி க்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு கணக்கு எடுக்க பட்டு அனைவர் வீட்டிலும் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் மொத்தம் ஆக வாங்கி அவரவர் வீட்டில் பொறுத்த பட்ட நிகழ்வை ...
பணியாளர்கள் வீட்டில் வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் வந்து இறங்கி அவை பொருத்தப்படும் போதே அவர்களுக்கு தெரியும் நம் தலைவர் அவர்களுக்கு கொடுத்த பரிசு என்று....
எத்தனை பெரிய நடிகர்களால் இப்படி சிந்திக்க முடியும்..
அதனாலே நம் தலைவர் என்றும் வாழ்கிறார் நம் நாட்டில்.
ஊருக்கு உழைச்சாலே ஏழை உரிமையை மதிச்சாலே...தானே பதவிகள் தேடி வந்தன.
பெருமைகள் நாடி வந்து அவை என்றும் நிலைத்து நிற்கின்றன..
வாழ்க தலைவர் புகழ்.
உங்களின் ஒருவன் நெல்லை மணி.
நன்றி தொடரும்.
வள்ளல் வரலாறு...........
-
M.g.r. எந்த அதிகாரப் பதவியில் இல்லாதபோதும் பல்வேறு நாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்குச் சென்றுள்ளார். நடிகராக இருந்த ஒருவரை அவரது மக்கள் சேவைக்காக பல்வேறு உலக நாடுகள் அழைப்பு அனுப்பி கவுரவித்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உள்ள சிறப்பு!
சிறு வயதில் நாடகத்தில் நடிப்பதற் காக எம்.ஜி.ஆர். ரங்கூனுக்குச் சென்றுள்ளார். பின்னர், 1965-ம் ஆண்டு இலங்கையில் தொண்டு அமைப்புகள், பத்திரிகை சங்கங்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, நடிகை சரோஜா தேவி, ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோருடன் இலங்கை சென்ற எம்.ஜி.ஆரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்ற னர். முன்னும் பின்னும் பைலட் கார்கள் அணிவகுக்க எம்.ஜி.ஆருக்கு இலங்கை அரசு சிறப்பான வரவேற்பு அளித்தது. சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர்.
யாழ்ப்பாணம் விளையாட்டு மைதா னத்தில் நடந்த வரவேற்பு கூட்டத்துக்கு இலங்கை நீதிபதி தம்பையா தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர். சிறந்த கலைஞர் மட்டு மல்ல; சிறந்த கொடையாளி. என் வாழ்நாளில் இந்தப் பகுதியில் இப்படி ஒரு பெருங்கூட்டத்தை பார்த்ததில்லை. தன்னைக் காண இலங்கையிலும் பெரும் கூட்டம் கூடும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்துவிட்டார்’’ என்றார்.
இலங்கை பிரதமர் டட்லி சேனநாய காவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எம்.ஜி.ஆர், அவருக்கு தென்னிந்திய நடி கர் சங்கத்தின் சார்பில் தந்தத்தால் செய்யப்பட்ட நேரு சிலையையும் தன் சார்பில் தந்தத்தில் ஆன மேஜை விளக்கையும் பரிசளித்தார். சிங்கள திரைப்படக் கலை ஞர்கள் சார்பில் இலங்கை விஜயா ஸ்டுடியோவில் எம்.ஜி.ஆரு.க்கு வர வேற்பு அளிக்கப்பட்டது. தான் பிறந்த கண்டி நகரையும் சென்று பார்த்தார்.
1965 அக்டோபர் 22-ம் தேதி கொழும்பு விளையாட்டரங்கில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா நடந்தது. இலங்கை உள்நாட்டு அமைச்சர் தகநாயகா வரவேற்புரை வழங்கினார். அப்போது பலத்த மழை. அப்படியும் எம்.ஜி.ஆரின் பேச்சை லட்சக்கணக்கானோர் நனைந்தபடியே கேட்டனர். இலங்கை கலாச்சாரத் துறை அமைச்சர் காமினி ஜெயசூர்யா, எம்.ஜி.ஆருக்கு ‘நிருத்திய சக்கரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நிதி திரட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த வருமாறு அந்நாட்டு அரசு எம்.ஜி.ஆருக்கு 1972-ல் அழைப்பு அனுப்பியது. அதை ஏற்று, ஜெயலலிதா, முத்துராமன், நாகேஷ் உள்ளிட்டோருடன் சிங்கப்பூருக்கு எம்.ஜி.ஆர். சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தினார். இந்தி நடிகர் சசிகபூரும் வந்திருந்தார். கலை நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். சிங்கப்பூர் மேயர், எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளித்தார். எலிசபெத் ராணிக்குப் பிறகு வாகனங்கள் நிறுத்தப்பட்டு எம்.ஜி.ஆருக்கு வரவேற்பு அளிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது!
‘‘எங்கள் குழுவினரின் கலை நிகழ்ச்சி கள் மூலம் சுமார் ஒரு லட்சம் டாலர் வரை (செலவு போக) சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன். அந்த வரவேற்பை, அந்நாட்டின் வளர்ச்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது’’ என்று 1973-ம் ஆண்டு ஜனவரி மாத ஃபிலிமாலயா இதழில் சிங்கப்பூர் பயணம் பற்றி எம்.ஜி.ஆர். குறிப்பிட்டுள்ளார்.
மாஸ்கோவில் 1973-ல் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் கலந்து கொள்ள வருமாறு எம்.ஜி.ஆருக்கு ரஷ்ய அரசு அழைப்பு விடுத்தது. ரஷ்யா செல்லும் முன் டெல்லி சென்ற எம்.ஜி.ஆருக்கு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷ்ய படவிழாவில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்டார்.
இந்திய அரசின் சார்பில் அப்பொழுது செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த ஐ.கே.குஜ்ரால் (பின்னாளில் பிரதமராகவும் பதவி வகித்தார்) கலந்து கொண்டு பேசினார். படவிழா பிரதிநிதிகளுக்கு எம்.ஜி.ஆரை அவர் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழகத்தில் அவரது செல்வாக்கு பற்றியும் அவரது படங்களின் மகத்தான வெற்றிகள் பற்றியும் எடுத்துரைத்தார். லெனின்கிராடு நகருக்கும் எம்.ஜி.ஆர் சென்றார். ரஷ்ய வானொலி நிலை யத்தினர் அவரைப் பேட்டி கண்டு அதை ரஷ்ய மொழியில் ஒலிபரப்பினர்! பின்னர், மாஸ்கோவில் இருந்து லண்டனுக்குச் சென்றார் எம்.ஜி.ஆர்.!
லண்டன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்., லண்டன் பி.பி.சி. வானொலிக்கு சிறப்புப் பேட்டி அளித் தார். அங்கிருந்து பாரீஸ் நகருக்குச் சென்று அங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, கிழக்கு ஆப்பிரிக்கா சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்!
நடிகராக இருந்தபோது, ஒரு நாட்டின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெருமை எம்.ஜி.ஆருக்கு உண்டு! 1974-ம் ஆண்டு மொரீஷியஸ் நாட்டின் அழைப்பை ஏற்று அந்நாட்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர். கலந்துகொண்டார்!
1974-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆர். அமெ ரிக்கா சென்றார். அமெரிக்க அரசின் தூதர் வரவேற்று அழைத்துச் சென்றார். ஹவாய் பல்கலைக்கழகத்தில் அளித்த பேட்டியின்போது சிக்கலான கேள்வி களுக்கு எம்.ஜி.ஆர். சாதுர்யமாகவும், நேர்மையாகவும் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தினார்! புகழ்பெற்ற மவுன்ட் சினாரியோ கல்லூரி சார்பில் அவருக்கு வரவேற்பிதழ் அளிக்கப்பட்டது. அரிசோனா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க முன்வந்த போது அதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார்!
ஜப்பான் உள்ளிட்ட கீழ்திசை நாடுகளில் படமாக்கி, தயாரித்து, இயக்கி, எம்.ஜி.ஆர். நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. நிஜத்திலும் அவர் உலகம் சுற்றிய வாலிபன்தான்!
நன்றி தி இந்து..........
-
" என்ன செய்தார் எம்ஜிஆர் " என்று கேட்கும் அரசியல் lkg சீமானே...பதில் இதோ...
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவர் ஆற்றிய மக்கள் பணிகள் குறித்து சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி நினைவுகூர்ந்துள்ளார். அது வருமாறு:
தமிழகத்தில் தி.மு.க. இயக்கத்தை வளர்த்ததும், ஆட்சியில் அமர்த்தியதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். இதனை அடுத்த தலைமுறைக்கு விளக்கவேண்டிய கடமை என்னைப்போன்ற எம்.ஜி.ஆர். கொள்கைவாதிகளுக்கு இருக்கிறது.
1952-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவுடன் இணைந்தார். ஞானிகள், சிந்தனையாளர்கள் மற்றும் அனைத்து மதங்களிலும் உள்ள சிறந்த கருத்துகளை எளிமையாக்கி, தன்னுடைய திரைப்படம் மூலம் மக்களுக்கு வழங்கிய எம்.ஜி.ஆர்., திரையரங்குகளை பாடசாலையாக மாற்றினார்.
நேர்மை, பாசம், நாட்டுப்பற்று, பெரியோரிடம் மரியாதை, தனிமனித ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றை மக்களுக்கு சொல்லித்தரும் வாத்தியாராக விளங்கினார். பாட்டுப்புத்தகம், பாடல் வரிகள், வசனங்கள், காட்சி அமைப்பு மூலம் தி.மு.க. கொடி, சின்னம், கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, அண்ணாவின் இதயக்கனியாகவே மாறினார்.
புரட்சித்தலைவரின் பிரசாரம் காரணமாகவே, 1957-ம் ஆண்டு முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க. 15 இடங்களில் வெற்றியும், 1962-ம் ஆண்டு 50 இடங்களில் வெற்றியும் பெற்று பீடுநடை போட்டது.
1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றியடைந்து, அண்ணா ஆட்சியில் அமர்ந்தார் என்றால், அந்த வெற்றிக்கு முழு காரணமும் எம்.ஜி.ஆர்.தான். ஆம், அப்போது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்டு கழுத்தில் கட்டுப்போடப்பட்ட போஸ்டர்கள் மட்டுமே ஒட்டப்பட்டன.
போஸ்டரில் அந்த காட்சியை கண்டு கதறிய மக்கள் தி.மு.க.வுக்கு வாக்குகளை அள்ளிக்குவித்தார்கள். அதனால்தான், அண்ணாவை பாராட்ட மாலையுடன் வந்த கட்சி பிரமுகர்களிடம், ‘மாலைக்கு சொந்தக்காரர் ராயப்பேட்டை மருத்துவமனையில் இருக்கிறார்’ என்று எம்.ஜி.ஆரிடம் அனுப்பிவைத்தார். மேலும், புரட்சித்தலைவர் ஒப்புதலுடனே அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டார். அண்ணா இல்லாத நிலையிலும், 1971-ம் ஆண்டு தேர்தலில் எம்.ஜி.ஆரின் பரப்புரையால் தி.மு.க. கூட்டணிக்கு 205 இடங்கள் கிடைத்தன.
கருணாநிதியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு நீக்கப்பட்டதும், தமிழகம் காணாத மாபெரும் புரட்சியும், எழுச்சியும் உருவானது. அடுத்து நடந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. முதல் வெற்றியைப் பெற்றது. அந்த தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் இருந்த தி.மு.க., மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதன்பிறகு, புரட்சித்தலைவர் உயிருடன் இருந்த வரையிலும் கருணாநிதியால் ஆட்சிக்கு வரவே முடியவில்லை.
1977-ம் ஆண்டு புரட்சித்தலைவரின் கூட்டணிக்கு 142 இடங்கள் கிடைத்தன. 1980-ம் ஆண்டு 162 இடங்கள், 1984-ம் ஆண்டு 195 இடங்கள் என்று நாளுக்குநாள் செல்வாக்கு வளர்ந்துகொண்டே இருந்தது. மக்களின் அமோக ஆதரவுக்கு காரணம், அவர் உழைத்து சம்பாதித்த அத்தனை செல்வத்தையும், சாதி, மத, இன பாகுபாடு பாராமல் மனிதநேயத்துடன் அள்ளியள்ளிக் கொடுத்ததுதான். ‘ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ என்று சினிமாவில் பாடியதை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டினார். புரட்சித்தலைவரின் 10 ஆண்டு கால ஊழலற்ற அறம்சார்ந்த ஆட்சியில் சில துளிகள் இங்கே.
* தனியார் ரேஷன் கடைகளில் நடக்கும் தவறுகளை, ‘நம் நாடு’ படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் புரட்சித்தலைவர். அந்த தவறுகள் நடைபெறாத வகையில், அரசு மூலமாக 22 ஆயிரம் முழுநேர நியாயவிலைக் கடைகளைத் திறந்து எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்தார்.
* ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளியில் பயிலாத 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டது.
* மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச காலணி, இலவச பாடப்புத்தகம், இலவச பல்பொடி வழங்கப்பட்டன. கல்வி சீர்திருத்தமாக +2 பாடத்திட்டம், மருத்துவப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு அறிமுகமாயின. தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்த கல்விக்கொள்கையால்தான், இன்று உலகமெங்கும் தமிழர்கள் ஐ.டி. துறையில் பெரும் சாதனை புரிந்துவருகிறார்கள்.
* தமிழகத்தில் 49 சதவீதம் என்று இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவீதம் என உயர்த்தியதும் புரட்சித்தலைவர்தான்.
* சைக்கிளில் டபுள்ஸ் செல்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. ஏழைகள் பாதிக்கப்படுவதை அறிந்ததும் சைக்கிளில் டபுள்ஸ், சந்தேக கேஸ் போன்றவற்றை ரத்து செய்தார்.
* குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் பின்னர் இரு விளக்கு திட்டமும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் தந்தவர் எம்.ஜி.ஆர்.தான்.
* தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு ஓர் அவசரச்சட்டம் கொண்டுவந்தார். அதன்படி, மதுவிலக்கு சட்டத்தின் கீழ் முதல் முறை பிடிபட்டால் 3 ஆண்டுகள் சிறை, இரண்டாவது முறை பிடிபட்டால் 7 ஆண்டுகள் சிறை, மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். இன்று தமிழகம் குடியில் மூழ்கிக்கிடக்கிறது என்றால், அன்று புரட்சித்தலைவரின் புதுமை சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் தடுத்த எதிர்க்கட்சிகள்தான்
காரணம்.ஏழைகளுக்காகவே ஆட்சி புரிந்த புரட்சித்தலைவர் ஓர் அதிசயம். அவர் ஓர் அற்புதம். அவர் ஓர் அவதாரம். காந்தசக்தியுடைய முகவெட்டு, கட்டிளங்காளை போன்ற உடற்கட்டு, தோற்றப்பொலிவுடன் கண்ணுக்குத் தெரியாத மின்சார சக்தியாக இன்றும் தமிழக மக்களுடன் கலந்திருக்கிறார் புரட்சித்தலைவர்
. ‘மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்த பின்னாலும் என் பேச்சிருக்கும்’ என்று பாடியதற்கு உதாரணமாக வாழ்ந்த புரட்சித்தலைவருக்கு இணையாக இந்த மண்ணில் இதுவரை யாரும் தோன்றவில்லை, இனியும் தோன்றப்போவதுமில்லை. மண்ணுலகில் கடைசி மனிதன் இருக்கும் வரையிலும் புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்து நிற்கும்
----.சைதை சா.துரைசாமி
சென்னை பெருநகர முன்னாள் மேயர்.........
-
ஒரு சில பேருக்கு வி.சி.அய்யனை பற்றிய சில சந்தேகங்கள். அவற்றில் முக்கியமானவை அய்யனை வைத்து படமெடுத்தவர்கள் லாபமில்லாமலா
அய்யன் 300 படங்களில் நடித்தார் என்பதே. அவர்களின் சந்தேகத்தை தீர்த்து வைப்பது நம் தலையாய கடமையல்லவா. அய்யன் நடித்த தமிழ்ப்படங்கள் சுமார் 270 க்குள்தான் இருக்கும். பிற மொழிப்படங்களையும், ,மாமனார் சித்தப்பூ ,பெரியப்பூ, தாத்தூஸ்,ரிடையர்டு பட்டாளம், போவோர், வருவோர் வழிப்போக்கன் போன்ற வேடங்களில் நடித்த படங்களையும் கழித்தால் இந்தக் கணக்குதான் வரும்.
எல்லோரும் 1 ம் கிளாஸ் முடித்தபின் 2,3.4 என்றுதான் படிப்பார்கள். ஆனால் வி.சி. அய்யனோ யாரோ எடுத்த எடுப்பில் காலேஜில் ரெகமென்டேஷனில் சேர்த்து விட்ட பின்பு படிப்படியாக இறங்கி முதல் வகுப்பு படிக்க ஆரம்பித்து lkg வரை சென்று விட்டார். அதன்பின்பு ஸ்கூலுக்கே போகாத கைபிள்ளையாகி வீட்டிலேயே தங்கி விட்டார். ஆரம்பத்தில் சிறிது காலம் அது மாதிரி பெரியவர்களின் துணையோடு கதாநாயகனாகவே காலந்தள்ளினாலும் அவர்களை
புதைகுழியில் தள்ளாமல் விட்டதில்லை.
நன்றாக அய்யனின் பட வரிசைகளை உற்று நோக்கினால் ஒன்றை மட்டும் நாம் தெரிந்து கொள்ளலாம். அவரை அறிமுகப்படுத்திய நேஷனல் பிக்சர்ஸ் என்ன ஆனது. Ps வீரப்பா "இரு துருவத்து"க்கு பின் என்ன ஆனார். பீம்சிங் ஒரு சில வெற்றி படங்களை கொடுத்தாலும் அந்த வெற்றி தனி ஒரு அய்யனால் வந்ததல்ல. மல்டிஸ்டார்ஸை கொண்டு அவர் அடைந்த வெற்றி என்றாலும் பல நடிகர்களின் சம்பளத்தை கழித்துப் பார்த்தால் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றும் பெரிய அளவில் மிச்சமில்லை.
ஆனாலும் தொடர்ந்து அய்யனை வைத்தே படமெடுத்து முடிவில் விளக்கில் விழுந்து மாய்ந்து போகும் விட்டில் பூச்சி மாதிரி அனைவரும் மாய்ந்து போனதை நான் பலமுறை எடுத்துக்கூறியும் முட்டாள் கைஸ்கள் தூங்கிய மாதிரி பாவலா செய்து கொண்டு தூக்கத்தில் இருந்து எழும்பிய குழந்தை போல பே! பே! என முழிக்கிற மாதிரி அருமையாக நடிக்கிறார்கள். அய்யனை வைத்து தொடர்ச்சியாக படமெடுத்து கதை முடிந்து போன பாவப்பட்ட தயாரிப்பாளர்கள் ஒன்றா!, இரண்டா! எடுத்துச் சொல்ல.
இருந்தாலும், நன்றாக நடிக்கும் கைஸ்களுக்கு மீண்டும் ஒரு முறை எடுத்து இயம்புவதில் மிகவும் வருத்தம் கொள்கிறேன். அதன்பின் வந்த ap நாகராஜன், ஸ்ரீதர், ஜெமினி, avm ,கோமதி சங்கர் பிலிம்ஸ், ஜேயார் மூவீஸ், சினி பாரத், உமாபதி, p மாதவன் முக்தா பிலிம்ஸ், ஜெகபதிஆர்ட் பிக்சர்ஸ், கற்பகம் மூவிஸ், k.c. பிலிம்ஸ், வினாயகா பிலிம்ஸ், vk ராமசாமி, பெரியண்ணன், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ், ஜெயந்தி பிலிம்ஸ் இதில் அத்தனை பேரும் அய்யனால் அலங்கோலமாகி வேறு ஆட்களை வைத்து படமெடுக்க ஓடியவர்களும் உண்டு. இவர்களில் ஒரு சிலர் மக்கள் திலகத்தை வைத்து ஆயிரத்தில் ஒருவன், உரிமைக்குரல், நவரத்தினம் குமரிக்கோட்டம் போன்ற படங்களை எடுத்து இழந்த செல்வத்தையும் மதிப்பையும் மீட்டவர்களும் உண்டு..
அய்யனால் திவாலானவர்களும் இதில் அடக்கம். முழு பட தயாரிப்புகளையும் கணக்கிலெடுத்தால் இந்த பதிவின் நீளம் அதிகமாகி விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இதில் வி.சி.அய்யனின் சொந்த மற்றும் பினாமி கம்பெனிகளும் அடக்கம். வேறு நடிகர்களை போட்டு படமெடுத்தாலும் அய்யன் ஒரு சில காட்சிகளில் தலையை காட்டி வருகின்ற ஆடியன்ஸை வரவிடாமல் ஓட விட்ட கதையும் அடக்கம். அய்யனை வைத்து எத்தனை படங்கள் எடுத்தாலும் முடிவில் அவர்களை காவு வாங்காமல் விட்டதில்லை.
எங்க ஊர் பக்கம், அய்யனார் என்றழைக்கப்படும் காவல் தெய்வம் ஒன்று உண்டு. அவர்கள் குலதெய்வமாக குடும்பத்தை காத்து நிற்பார்கள். ஆனால் நம்ம அய்யனோ யாரும் மடியில் பணத்துடன் வீட்டுக்கு சென்று விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதால்தான் அய்யன் என்றழைக்கப்படுகிறார் என்று நினைக்கிறேன். இவரிடம் துண்டை உதறி தோளில் போட்டு மடியில் ஒன்றும் இல்லை என்றால்தான் அவர்களை விடுவார். இல்லை என்றால் மீண்டும் துரத்தி சென்று அவர்களை நிர்மூலம் ஆக்கி விடுவார்.
அதிலும் 200 படங்களை தாண்டி அவர் நடித்த படங்கள் எல்லாம் 3 நாட்கள் 5 நாட்கள் அதிக பட்சம் 7 நாட்களை தாண்டியதில்லை. உதாரணம் இரு மேதைகள், நாம் இருவர்,நெஞ்சங்கள்,மோகனப்புன்னகை,அமர காவியம், ஹிட்லர் உமாநாத் போன்ற படங்கள்தான் அவை. அதிலும் "நாம் இருவர்"படம் பார்க்க நடித்த அந்த இருவரால் கூட முடியாது.அதுவும் அத்தனையும் கலர் படங்கள் வேறு. "நாம் இருவர்" அய்யனின் 250 வது படம். மற்ற 100, 200 என்று வாயை திறக்கும் கைஸ்கள் 250 வது படத்தை பற்றி வாயே திறக்க மாட்டார்கள்.
அதனால்தான் படங்களின் எண்ணிக்கை அதிகமிருந்தாலும் மிச்சமிருந்த அத்தனை தயாரிப்பாளர்களையும்
திரும்பி சினிபீல்டுக்கு வராத இடத்துக்கு அனுப்பி வைத்ததுடன் அவர்களில் ஒரு சிலர் பிச்சை எடுக்கவும் செய்வதை பல பத்திரிகைகள் சுட்டிக்காட்டியும் கைஸ்கள் யாரையோ சொல்கிறார்கள் நம்மை அல்ல என்பதை போல கண்டும் காணாமல் அலைவது முறையான செயல் அல்ல.
அதனால்தான் 200 படங்களுக்கு பிறகு அய்யனை வைத்து யாரும் படமெடுக்க முன்வரவில்லை. இவ்வளவுக்கும் புரட்சி நடிகர் இல்லாத களத்தில் கூட மல்லாட முடியாமல் அடுத்து வந்த சிறுவர்களிடம் தோற்று அடுப்படியில் முடங்கியதேன்?. ரஜினியும் கமலும் 70 வயதில் கூட உச்சபட்ச சம்பளத்தில் நடிக்கும் போது பூப்பறிக்க சென்ற அய்யன் என்ன ஆனார்? தெரிந்தால் சொல்லுங்க கைஸ்களே? அய்யனின் தயாரிப்பாளர்கள். இருந்தால்தானே படமெடுக்க. ஆனால் தலைவர் சினிபீல்டை விட்டு செல்லும்போது 61 வயதிலும் சுமார் 10 க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்திருந்தார் என்பதை தெரிந்துமா இந்த கேள்வி.
அதுவும் அதிகபட்ச சம்பளத்தை பெற்றுக் கொண்டிருக்கும் போது விலகி அதைவிட உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ளத்தான் சினிமா உலகை விட்டு சென்றார் என்பதை புரிந்து கொள்க. அய்யனின் மறுபதிப்பு படங்களை காசு கொடுத்து ஓட்டுவதை விட அய்யனை வைத்து படமெடுத்த பழைய தயாரிப்பாளர்களின் வாரிசுகளின் நல்வாழ்வுக்கு ஏதாவது செய்தால் அவர்களாவது வாழ்த்துவார்கள். உண்மையை உணருங்கள் கைபிள்ளைகளே. மீண்டும் மீண்டும் இதே சந்தேகத்தை எழுப்ப வேண்டாம்.
உ...த்தமன் தொடர் அடுத்த பதிவில்..........ksr.........
-
புரட்சித் தலைவரை நம்பிக் கெட்டவர்கள் எவருமில்லை நம்பாமல் கெட்டவர்கள் பலர் உண்டு ... எப்படிப்பட்ட சோதனையான காலகட்டங்களிலும் தன்னை சுற்றி நம்பி இருப்பவர்களையும், தன்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் ரசிகர்களையும் மக்களையும் எந்த நேரத்திலும் எப்போதும் அவர் ஏமாற்றியதே இல்லை. மற்றவர்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றி அரசியல் செய்வார்கள். மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் நபராக களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனையை தீர்த்தவர் புரட்சித்தலைவர். ஓய்வில்லாமல் உழைத்தவர். தான் உழைத்து சம்பாதித்த பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தவர். மக்கள் நலனுக்காக ஒரு முடிவு எடுத்து விட்டால் அதை உடனே செயல்படுத்தி தொடர் வெற்றிகளை பெற்றவர் நம் புரட்சித்தலைவர். மற்ற நடிகர்கள் திரையில் மட்டுமே கதாநாயகர்கள். நம்முடைய புரட்சித்தலைவரோ நிஜத்திலும் திரையிலும் மிகப்பெரிய கதாநாயகர் சூப்பர் ஹீரோ! அதனால் தான் இன்றைய இளைய தலைமுறையினரும் புரட்சித் தலைவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். என்றும் எப்போதும் புரட்சித்தலைவரின் புகழ் நிலைத்திருக்கும்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க..........ssm.........
-
தமிழ் நாடு எம்.ஜி.ஆர் நாடு :
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
1970 - 1975 ஆம் ஆண்டுக்கு பிறகு
தமிழ்நாட்டிலிருந்து யார் வெளிநாட்டிற்கு சென்று அங்கே உள்ளவர்களிடம் தன்னை தமிழ்நாடு என்று அறிமுகப்படுத்த நினைத்தால் எதிர்முனையில் உள்ளவர்கள்
ஓ....தமிழ்நாடு எம்.ஜி.ஆர் நாடல்லவா என்று
கேட்பது கட்டாயமாக இருந்த விஷயம்.அந்த அளவிற்கு தமிழ் நாட்டையும் எம்.ஜி.ஆரையும்
பிரித்துப் பார்க்க முடியாது.இப்படி ஒரு தாக்கத்தை எந்த அரசியல் தலைவரும் நிகழ்த்த வில்லை.நிகழ்த்தவும் முடியாது.
தன்னை நம்பியிருந்த ஒவ்வொரு ரசிகரும்
தம்மால் ஏமார்ந்துவிடக்கூடாது என்று எண்ணிய உலகப் புகழ்பெற்ற மனிதநேயர்.
மக்களின் மேல் தன் அனைத்து சக்தியையும்
முழுமையாக வைத்திருந்த ஒரே மக்கள் சக்தி
எம்.ஜி.ஆர் மட்டுமே.
எல்லோரும் MGR ஆக முடியாது...Rnjt
-
#என்றென்றும்_மக்கள்_திலகம்
இந்த ரஜினிகாந்த் எபிசோட் நமக்கு உணர்த்தும் மற்றொரு உண்மை...எந்த நடிகனுமே இனி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆக முடியாதுங்கறதுதான்...
நாடகங்களில் நடித்த காலங்களில் தூண் காலில் விழுந்து நடக்கவே முடியாத போதும், துப்பாக்கியால் சுடப்பட்டு பேசவே முடியாத நிலையிலும் , தன்னுடைய ஆட்சி 1980 ல் கலைக்கப்பட்டபோதும், 1984 ம் ஆண்டு இரு சிறுநீரகங்களும் பழுதடைந்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய போதும், தீவிரமான கள அரசியலில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை. மக்களை சந்திப்பதை ஒரு தவமாகவே நினைத்தார். அரசியலிலும் வென்றார்...!!!
இது அரசியல் அல்ல...உண்மை..!!!.........Sr.Bu...
-
#கண்ணதாசனின் #வாத்தியார்
மாட்டுக்காரவேலன் படத்திற்கு ஒரு பாடல் கண்ணதாசன் எழுதினார்...
அதைப் படித்துப் பார்த்த மக்கள்திலகம்
அந்தப்பாடலில் இரண்டுவரிகள் ஆபாசமாக இருக்கின்றன.
என்னுடைய படங்களை குடும்பத்தோடு வந்து பெண்கள் பார்ப்பார்கள்...
கதாநாயகியின் வாயிலிருந்து வருகின்ற இந்த ஆபாசமான பாடல் வரிகள்...
இது நம் நாட்டுப் பெண்களையே அவமானப்படுத்தியது போன்று ஆகிவிடும்
அந்த வரிகளை மாற்றி எழுதி வாருங்கள் என்று உதவிடைரக்டர் ராஜசேகரிடம் கொடுத்து அனுப்பினார் மக்கள்திலகம்... ராஜசேகர்கண்ணதாசன் வீட்டிற்கு சென்றார்.
"எம்ஜிஆர் பாடலை மாற்றச் சொன்னாரா?" என்று கேட்டு விட்டு பாடலை மாற்றி எழுதினார் கண்ணதாசன் அவர்கள்.
பிறகு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது
வக்கீல் எம்ஜிஆரும்....மாட்டுக்கார எம்ஜிஆரும்
தன் காதலிகளுடன் சேர்ந்து பாடுவதைப் போல் அந்தப் பாடல் அமைந்திருக்கும்.
வக்கீல் எம்ஜிஆர் :
பள்ளிக்கணக்கு
கொஞ்சம் சொல்லி பழக்கு இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு...
கதாநாயகி :
போடுங்கள்
கூண்டில் ஏற்றுங்கள்
நான் போதும் என்று
சொல்லும் வரை
நீதி சொல்லுங்கள்...
இந்த வரிகள் தான் முதலில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரிகள்...
இந்த வரிகள் ஆபாசமாக உள்ளது என்று மக்கள்திலகம் மாற்றச்சொன்னார்
#மக்கள்திலகம் #சொல்லிய #பிறகு #மாற்றிய #வரிகள்....
"போடுங்கள்...
கூண்டில் ஏற்றுங்கள்
உங்கள் பொன்மனதை
சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்..."
மக்கள்திலகம் தன்னுடைய பாடலில் ஆபாசமான வார்த்தைகளின் சாயல் துளிக்கூட வந்துவிடக்கூடாது என்று மிகவும் கவனமாக இருப்பார்.
மக்கள்திலகம் தன் படங்களில் நீதி நேர்மை, சத்தியம், தாய்ப்பாசம், தர்மம், ஒழுக்கத்தைப் போதித்தவர்...
"என் பாடல் வரிகளை ஒருவர் திருத்துகிறார் என்றால் அது எம்ஜிஆராகத் தான் இருக்கமுடியும்...!" என்று கூறியவர் கண்ணதாசன் அவர்கள்......bsm...
-
அந்த மனிதன் மேல் அவ்வளவு அபிமானம் ஒரு காலமும் இல்லை , எப்படியோ சினிமாவில் நுழைந்து தமிழரை மயக்கி திராவிட அரசியலை ஆட்சிக்கு கொண்டுவந்தார் என்பது உண்மை...
சினிமாவிலும் அரசியலும் தன்னை நிலைநிறுத்த பலரை பலிகொடுத்தார் என்பதும், மிகபெரிய தந்திரங்களையெல்லாம் செய்தார் என்பதும் உண்மை, அவரின் தந்திரம் முன்னால் கருணாநிதி காலளவு கூட வரமுடியாது.
ஆனால் அந்த மனிதருக்கு தெய்வத்தின் வரம் இருந்ததை உணரமுடிகின்றது, கர்ணன் போல் இருந்த இடம் தவறாக இருந்தாலும் ஒரு ஆசீர்வாதமும் தெய்வத்தின் சரியான கணக்கும் அவரிடம் இருந்ததை புரிந்து கொள்ள முடிகின்றது.
ஏதோ ஒரு நோக்கத்துக்காக அவர் வந்தார், வென்றார், ஆண்டார், என்பதை இப்பொழுது தெளிவாக பார்க்க முடிகின்றது...
இப்பொழுதெல்லாம் அந்த மனிதரின் வாழ்வினை நோக்கும் பொழுது சிந்தனை மாறுகின்றது. அவரை தெய்வம் நடத்தியிருப்பது புரிகின்றது...
இலங்கையில் பிறந்து வறுமையில் சிக்கி அவர் இங்கு வரவும், இங்கும் படிக்க வழியின்றி நாடக கூட்டம் செல்லவும் விதி இழுத்து வந்திருக்கின்றது
வசதி இருந்தால் இலங்கையிலே இருந்திருப்பார், தமிழகத்தில் வாய்பிருந்தால் படிக்க சென்றிருப்பார், அவர் வாழ்வில் வறுமை விதியாக செயல்பட்டு மிக சரியாக இழுத்து சென்றிருக்கின்றது
அட அப்பொழுதும் தானாக வென்றிருந்தால் அவரோ அவரின் அரசியலோ இல்லை. தமிழகத்தில் நாத்திக மேகங்கள் சூழ்ந்த பொழுது அவர் சினிமாவில் போராடிகொண்டிருந்தார்
பாடவும் வராமல் வசனம் பேசவும் வராமல் விரக்தியாய் அவர் கழுத்தில் ருத்ராட்சமும் நெற்றியில் விபூதியுமாக முருகனிடம் அழுவதும் கதறுவதுமாய் இருந்தார், அப்படியும் ஒரு காலம் அவருக்கு இருந்தது
அவர் தொட்டதெல்லாம் தோல்வி, ஒரு பக்கம் சொந்த சிக்கல்களும் உறவு சரிவுகளும் ஏராளம்.
கருணாநிதியுடன் அவரை தெய்வமே சேர்த்தது, மறுப்பதற்கில்லை ஆரம்பகால ராமச்சந்திரனுக்கு கருணாநிதியின் வசனங்கள் கைகொடுத்தன. அந்த நட்பே அவரை திமுகவுக்கும் இழுத்து சென்றது
அங்கும் அவர் கூட்டத்தில் ஒருவராய் இருந்தாரே தவிர நாத்திகம் பேசவில்லை
கருணாநிதி அரசியலில் தீவிரமாய் இருந்த காலத்தில் வசன உலகைவிட்டு விலகிய காலத்திலும் ராம்ச்சந்தர் தொழிலில் கவனமாய் இருந்தார்...
அந்த தொழிலிலும் ஒரு நேர்மை இருந்தது, அவர் புரட்சிகட்சி அபிமானி என்றாலும் புரட்சி நடிகர் என்றாலும் மக்களுக்கு தவறான கருத்தை ஒரு இடத்திலும் போதிக்கவில்லை...
தமிழக மக்கள் தன்னை உற்று பார்க்கின்றார்கள் கவனிக்கின்றார்கள் என்றவுடன் நல்ல விஷயங்களை சொல்லத்தான் விரும்பினார், கடவுள் மறுப்போ, குடியோ, சிகரெட்டோ, தன் படங்களில் வராமல் பார்த்துகொண்டார், பிரிவினைவாதமோ, குதர்க்கமோ, காங்கிரஸ் எதிர்ப்போ ,அவர் படங்களில் செய்யவில்லை
அதை தெய்வமும் பார்த்துகொண்டே இருந்தது...
சந்தேகமில்லை அவர் திமுகவில்தான் வளர்ந்தார், ஆம் அர்ஜூனனும் துரியோதனனும் ஒன்றாகத்தான் கங்கை கரையில் வளர்ந்தார்கள்
ராமச்சந்திரன் மக்களின் அபிமான நடிகர் என உயரத்தில் மின்னினார், சிவாஜியோ யாரோ எதுவோ அவரை அசைக்க முடியவில்லை, அவரின் தர்மம் அவரை உயர்த்திகொண்டே இருந்தது...
அவரை எதிர்த்தவர்களெல்லாம் தோற்கும் படி அவருக்கு ஒரு ஜாதகமும் அமைந்திருந்தது...
பின் விதி எம்.ஆர் ராதா துப்பாக்கிவடிவில் வந்தாலும் தெய்வம் அதிலும் அவரை காத்தது, ஆம் அதுகாலம் அவரை அந்த இடத்துக்கு இழுத்து வந்த தெய்வம் அவருக்கு கடமை மிச்சம் இருக்க இரண்டாம் வாழ்வு கொடுத்தது...
திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் உண்மை முகத்தை உணர்ந்தார் ராமச்சந்திரன்
அவர் மட்டும் இல்லையென்றால் தமிழகத்தில் ஏது திமுகவுக்கு எதிர்ப்பு? யார் எதிர்சக்தி?
ராமச்சந்திரன் இல்லையென்றால் தமிழகம் இப்பொழுது குட்டி ஆப்கன்? குட்டி பாகிஸ்தான்? குட்டி முல்லைதீவு ஆயிருக்காதா என்றால் நிச்சயம் ஆகியிருக்கும்
குறைந்தபட்சம் மேற்கு வங்கம் போல் நாசமாயிருக்கும், கருணாநிதி 50 ஆண்டுகால முதல்வராக இருந்திருப்பார், தமிழகத்தில் காஷ்மீரிய தீவிரவாத இயக்கம் போல அவர் குடும்பமே ஏரியாவுக்கு ஒன்றாக ஆண்டு கொண்டிருக்கும், அதில் இந்து மதமும் ஆலயங்களும் சரிந்திருக்கும், நசுங்கியிருக்கும்
அதை தமிழ் தமிழகம் திராவிடம் என மிக சரியாக மறைப்பார் கருணாநிதி*
நாத்திகமும் போலி தமிழும் அப்பட்டமான இந்தி மற்றும் இந்திய எதிர்ப்பும் கொண்ட திமுக தமிழ்நாட்டை நாசத்திலும் நாசம் செய்திருக்கும்
உரிய நேரத்துக்காக தெய்வம் அவரை திமுகவிலே ஒளித்து வைத்திருந்தது, ஆண்டவனின் விளையாட்டு அர்ஜூனன் வாழ்விலும் அப்படியே, ராமச்சந்திரன் வாழ்விலும் அப்படியே
தன் பலம் தெரியா, அறியா அனுமன் போல அடங்கிகிடந்த ராமச்சந்திரனுக்கு அவர் பலத்தை தெரியவைத்தது இந்திரா காந்தி
அதன் பின் விஸ்வரூபம் எடுத்தார் ராம்ச்சந்தர்
ஒரு விஷயம் நிச்சயம் சொல்லமுடியும், ராமச்சந்திரன் பக்திமானாய் இருந்தார். கடவுள் மறுப்பு நாத்திகம் இந்து மதத்தாரை புண்படுத்துதல் அவரிடம் இல்லை
இந்து ஆலயங்கள் புனரமைக்க உதவினார். திருவரங்க ஆலயம் முதல் தென்காசி ஆலயம் வரை அவரால் நடந்த திருப்பணிகள் ஏராளம்
அள்ளி கொடுத்ததில் அவருக்கு நிகர் அவரே, அதை அவரின் எதிரியும் மறுக்கமுடியாது
அவரின் வாழ்வினை கூர்ந்து பார்த்தால் ஒரு கட்டத்துக்கு பின் ஒரு சித்தனின் மனநிலை இருந்திருக்கின்றது
சொந்தவாழ்வினை அவர் பெரிதாக நினைக்கவில்லை, கொடுமதியாளனான* கணவனை ஜானகி அடைக்கலம் தேடியபொழுது கொடுத்தார், தன் தொடக்ககால படங்களின் நாயகி எனும் ஒரு இரக்கம் இருந்தது
முடிந்துபோன சொந்தவாழ்வில் இனி யார் வந்தால் என்ன? போனால் என்ன? என்ற ஒரு விரக்தி இருந்தது
ஜெயலலிதாவுக்கும் அவருக்கும் இருந்த உறவு எத்தகையது எனபதை ஜெயலலிதா சொல்கின்றார்
"அவருக்கு என் மேல் இரக்கமே இருந்தது , ஒரு புத்திசாலி பெண் விதிவசத்தால் சினிமாவில் சிக்கிகொண்டாளே எனும் அனுதாபம் இருந்தது
சினிமா தொழிலில் இருந்ததால், அந்த உலகை முழுக்க அறிந்ததால், என்னை காக்கும் கவனத்தில் இருந்தார்
நான் ஒருமுறை வீட்டில் விழுந்து காயமுற்றபொழுது எல்லோரும் என் வீட்டுசாயினை அதாவது பணமிருக்கும் பீரோசாவியினை தேடியபொழுது என்னை மருத்துவமனையில் சேர்த்து சொந்தங்களிடம் கவனமாயிரு அவர்கள் உன் சொத்தில் குறியாய் இருக்கின்றார்கள் என எச்சரித்தது அவர்தான்
அந்த சினிமா உலகில் அவரே எனக்கு பாதுகாப்பும் வழிகாட்டியுமாயிருந்தார், அந்த பலத்தில்தான் நான் நடித்தேன், அப்படியே அவரை தொடர்ந்து அரசியலுக்கும் வந்தேன்"
ஆம், ராமச்சந்திரனின் வாழ்வின் பல இடங்களில் இதை பார்க்கலாம், பெண்கள் மேல் அவருக்கொரு இரக்கம் இருந்திருக்கின்றது, அதுவும் சினிமா பெண்கள் என்றால் பரிதாபம் மேலோங்கியிருக்கின்றது
சரோஜா தேவியின் கணவர் இறந்தபொழுது அவரை எம்பி ஆக்க கூட முயன்றிருக்கின்றார்
என்னவும் எண்ணிகொள்ளுங்கள், ஆனால் பழையவர்களை மறக்கா ஒரு குணம் அவரிடம் இருந்திருக்கின்றது
பழகியவர்கள், உதவியர்கள் என எல்லோரையும் தேடி சென்று உதவினார், நன்றி எனும் குணம் அவரிடம் இருந்தது.
பத்திரிகையாளர் தொழிலதிபர் முதல் எத்தனையோ பேர் வறுமையுற்றால் ஓடிசென்று உதவியிருகின்றார், வாழ்ந்தவன் கெட கூடாது என்பது அவரின் கொள்கையாய் இருந்திருக்கின்றது
தனக்கு ஒருவன் விசுவாசமாயிருந்தால் தன்னை நம்பினால் அவனை உச்சத்தில் தூக்கி வைக்கும் குணம் அவரிடம் இருந்திருக்கின்றது
அது ஜேப்பியாராக இருந்தாலும் சரி, வலம்புரி ஜானாக இருந்தாலும் சரி, பிரபாகரனாக இருந்தாலும் சரி, நம்பிவிட்டானா சரி காப்பாற்றிவிடலாம்...
இதை சரியாக கவனித்த தமிழகமே எத்தனையோ கட்டுகதைகளை தாண்டி, பொய் புரட்டை தாண்டி அவரை கொண்டாடியது
மக்களின் பசி முதல் ஒவ்வொரு வேதனையும் அனுபவபூர்வமாக அறிந்தவர் என்றமுறையில் மக்களோடு எளிதில் ஒட்டினார்
நிச்சயம் தனிகட்சி அவரின் விருப்பம் அல்ல, காமராஜரோடு ஒட்டவே விரும்பினார் ஆனால் அவரை சேர்க்காமல் காமராஜர் செய்த தவறே இங்கு காங்கிரஸ் காலாவதியாக பெரும் காரணம்
வேறு வழியின்றிதான் தனிகட்சி கண்டார் ராமச்சந்திரன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வரம் அமையும்.
பேச்சு, எழுத்து, நடிப்பு, அரசியல், ஓவியம் தொழில் என எதுவோ இறைவனால் கொடுக்கபடும். அதில் அவன் புகழ்பெறுவதை ஆண்டவன் பார்த்துகொண்டே இருப்பான்...
உச்சத்தில் இருக்கும் ஒருவன், ஏராளமானோர் தன்னை கவனிக்கும் நிலையில் இருக்கும் ஒருவன் என்ன செய்கின்றான் என கவனமாய் அவன் நோக்கிகொண்டே இருப்பான்...
ராமச்சந்திரனுக்கும் அந்த வாய்ப்பினை அவர் முகம் மூலம் , தொழில் மூலம் ஆண்டவன் வழங்கினான்...
அதில் ராமச்சந்திரன் நல்ல கருத்துக்களை சொன்னதில் ஆண்டவன் மகிழ்ந்தான், அந்த செந்நாய் கூட்டத்தில் ராமச்சந்திரன் மட்டும் கோவில் யானையாக கடவுளுக்கு அடங்கி நாத்திகம் பேசாமல் இருந்ததில் அவனுக்கு மகிழ்ச்சி
தாயினை மதிப்பது, குடி போன்ற சமூக தீமைகளை தவிர்ப்பது ,ஏழைகளுக்கு இரங்குவது போன்ற நல்ல கருத்துக்களை அவன் சொல்ல சொல்ல ஆண்டவன் மகிழ்ந்தான்...
பாடலிலும் படத்திலும் சமூகத்தினை தவறாக திசை திருப்பும் ஒரு வார்த்தையோ காட்சியோ அவன் அனுமதிக்கவில்லை என்பதில் தன் வரம் மிக சரியாக பயன்படுவதை ஆண்டவன் கண்டான்...
இந்த பண்புகளால் மென்மேலும் ஆசீர்வாதம் குவிந்தது...
சினிமாவில் வசனகாலம் மாறியது, ராமச்சந்திரன் நின்றார்
வாள்சண்டை காலம் மாறியது , ராமச்சந்தரன் நின்றார்
நீண்ட பாகவதர் கொண்டை காலம் மாறி மார்டன் படங்கள் வந்தன, ராம்ச்சந்தரின் நின்றார்.
சிவாஜிகணேசன் உட்பட யாரெல்லாமோ வந்தார்கள், கண்ணதாசன் வந்தார், சவால்விட்டு சந்திரபாபு வந்தார் , உதயநிதி போல முக முத்து வந்தார்
இன்னும் யாரெல்லாம் வந்தார்கள்
ஆனால் முருக பக்தரான சின்னப்பதேவர் உட்பட பலர் வந்து ராமச்சந்திரனை தாங்கிபிடித்தபடியே இருந்தார்கள்...
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொருவர் வந்து அவரை தாங்கினார், அது தெய்வத்தின் அருள்...
அந்த அருளே அண்ணாவுக்கு பின்னரான கொடும் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் அவரை தமிழகத்தின் மீட்பராகவும் மாற்றிற்று.
கொடிய நாத்திகத்துக்கும், தேசவிரோத கும்பலுக்கும், இங்கு அவராலே கடிவாளம் இடபட்டது
ராமச்சந்திரன் வந்திராவிட்டால் தமிழகம் நாத்திக கருப்பு சட்டையின் பிடியில் முழுக்க சிக்கி மிகபெரும் தேசவிரோத செயல்களின் கூடாரமாயிருந்திருக்கும்...
முள்ளிவாய்க்கால் போல அடிக்கடி இங்கு மொத்தமாய் ரத்த ஆறு ஓடியிருக்கும், சண்டாள நாத்திக கோஷ்டி காஷ்மீர் போல இங்கும் மாற்றியிருக்கும்...
அதை தடுக்க முருகபெருமானால் அனுப்பிவைக்கபட்ட ஒரு அருள்பெற்ற நபர் ராமச்சந்திரன்
அவர் முருகபக்தர் , காண்பவரை எல்லாம் "ஆண்டவனே.." என்றே அழைப்பார்
நடந்தவைகளை நாம் நினைத்து பார்த்து ராமச்சந்திரன் இங்கு வந்ததும் நடித்ததும் கட்சி தொடங்கியதும் தமிழகத்தை காக்க தெய்வத்தின் அருளால் அனுப்பட்டவர் என உணர்ந்தை அன்றே ஒருவர் உணர்ந்திருக்கின்றார்
அவரும் முருகபெருமானின் அடியாரே...
ஆம் ,அந்த கிருபானந்தவாரியா ரியின் ஞானகண்களுக்கு இந்த காட்சிகள் என்றோ தெரிந்திருக்கின்றன*
இதனால்தான் "பொன்மனசெம்மல்" என பட்டம் அருளி மனமார வாழ்த்தியிருக்கின்றார்...
அம்மாதிரி நல்லவர்களின் வாழ்த்துதான் ராம்சந்திரன் இன்றளவு பழனிச்சாமி உருவில் அமர்ந்து திமுகவுக்கு தண்ணிகாட்ட முடிகின்றது...
நம்புகின்றீர்களோ இல்லையோ, திமுக எனும் நாத்திக தேசபிரிவினைவாத இம்சை கட்சி இருக்குமளவும் இங்கு ராமச்சந்திரன் வாழ்வார், அந்த கோஷ்டிக்கு கடிவாளம் இட்டுகொண்டே ஓட அடிப்பார்...
இது தெய்வத்தின் விளையாட்டு, ஆழ கவனித்தால் புரியும்...
ஆம் கட்சிக்கும் பதவிக்கும் ஆசைபட்டு தன் மனசாட்சியினை கொன்று கடவுள் மறுப்பு பேசாமல், பெரும் உயரத்தில் இருந்தும் மக்களை ஏமாற்றும் சொல்லை சொல்லாமல் , முடிந்தவரை உதவி, பசிபோக்கி, தனக்கு பின்னும் எல்லா சொத்தையும் ஏழைகளுக்கு விட்டு சென்ற அந்த நல்மனதை ஆண்டவனுக்கு பிடித்திருந்தது
அதனாலே அவன் மூலமே இங்கு நாத்திகத்தை ஓட அடித்து இப்பூமியினை ஓரளவு காத்தும் கொண்டது தெய்வம்
திமுக இருக்கும் காலம் வரை அதிமுகவும் இருக்கும். திமுகவின் தேசவிரோத இந்துவிரோத ஆட்டத்துக்கு அது பதிலடி கொடுத்து ஓட அடித்துகொண்டே இருக்கும்
அதில் ராமச்சந்திரன் தமிழகத்தை காத்து கொண்டே இருப்பார், திமுக அழியும் வரை அவரும் இங்கே வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்.- *பதிவு ஸ்டான்லி ராஜன்*.........
Stanley Rajan...
-
புரட்சித் தலைவரை நேர்மையாக நேசிக்கும் பக்தர்களுக்கு நம் புரட்சித் தலைவர்.எம்ஜிஆர் என்னும் பெயரை உச்சரிக்க தகுதி உண்டு .. புரட்சித் தலைவரின் பெயரை உச்சரித்து பெருமிதம் கொள்வோம்.எம்ஜிஆர் என்றால் வெற்றி..
எம்ஜிஆர் என்றால் தைரியம்..
எம்ஜிஆர் என்றால்..
கருணை..
எம்ஜிஆர் என்றால் மனித நேயம்..
எம்ஜிஆர் என்றால் ஒற்றுமை.. சமத்துவம்..
எம்ஜிஆர் என்றால்
நாட்டுப் பற்று..
எம்ஜிஆர் என்றால்
புதுமை..இனிமை..
இளமை.. அழகு..புன்னகை.
எம்ஜிஆர் என்னும் வார்த்தை.. நம் உயிர்.. .. நான் அனுதினமும் உச்சரிக்கும் மூன்றெழுத்து மந்திரம்.
எம்ஜிஆர்
எம்ஜிஆர்
எம்ஜிஆர்.......hcg...
-
அழகப்பா கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த வருடம். கல்லூரியின் கலை விழாவிற்கு தலைமை தாங்கிய மக்கள் திலகத்தின் முன்னால் ஒரு மாணவன் என்ற முறையில் தமிழ் திரைப்படங்கள் பற்றி ஒரு திறனாய்வு சொற்பொழிவு நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
என் பேச்சைக் கைதட்டி ரசித்த அவர் மேடையை விட்டு இறங்கும் முன் என்னைப் பாராட்டி ஒரு பாராட்டுக்கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். அதை இன்று வரை ஒரு பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.
பின்னர் சென்னை வந்து சட்டக் கல்லூரியில் படிக்கத் தொடங்கினேன். பொருளாதார நெருக்கடி என்னை படிக்க விடவில்லை.'இன முழக்கம்' என்ற பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக கொஞ்ச நாட்கள் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அந்தச் சமயம் எம்.,ஜி.ஆரை அவரது தோட்டத்தில் பத்திரிக்கையாளன் என்ற முறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
"நம்மை எங்கே அவருக்கு நினைப்பிருக்கப் போகிறது?" என்று நினைத்துக் கொண்டு மற்ற பத்திரிக்கையாளர்களை மத்தியில் அமர்ந்திருந்தேன். அந்த அபூர்வ மனிதரின் அன்புள்ளம் என்னைக் கண்ட மாத்திரத்தில், "நீங்கள் அழகப்பா கல்லூரி மாணவர்தானே?" என்றாரே பார்க்கலாம்.
நான் என்னை மறந்தேன். என் எதிர்காலம் அங்கே தொடங்கியது. என் நிலைமையைக் கேட்ட அவர் தாயுள்ளத்தோடு எனக்கு உதவி செய்ய முன்வந்தார். மறுநாளே என்னை ஸ்டூடியோவிற்கு வரச் சொல்லி டைரக்டர் காசிலிங்கத்திடம் உதவி டைரக்டராகச் சேர்த்து விட்டார்கள். பிறகு இந்த அநாதையை தங்கள் வீட்டு மாடியில் தங்கச் சொல்லி கதை திரைக்கதை எழுதும்படி ஊக்குவித்தார்கள்.
நானும் உற்சாகத்தோடு எழுதத் தொடங்கினேன். ஒரு நாள் எனக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது. என்னைப் பார்த்ததும், "ஆமாம்,நான் எழுதச் சொன்னேன் என்று எழுதிக் கொண்டிருக்கிறீர்கள், வருமானம் என்ன உங்களுக்கு?" என்று கேட்டார்
நான் "இல்லை" என்று சொன்ன மாத்திரத்திலேயே ஒரு தாய் போல என்னைக் கடிந்து கொண்ட அவர், "இதை என்னிடம் முன்னாலேயே சொல்வதெற்கென்ன ?" என்றார். அடுத்த நிமிஷம் என் கை நிறைய பணம் தந்து அனுப்பினார்.
இப்படித் தொடங்கிய அவரது கருணை உதவிகள் போகப்போக என்னை ஒரு மனிதனாக கலைஞனாக மாற்றத் தொடங்கின.
- இயக்குனர் மகேந்திரன்.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.1982 இதழ் )...sk...
-
1968-ம் ஆண்டு பொம்மை என்ற சினிமா இதழுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி
பேட்டி எடுத்த பிரபலம் யார் தெரியுமா…? ஜெயலலிதா!
தன் அரசியல் குருவான எம்.ஜி.ஆரிடம் வெளிப்படையாக ஜெயலலிதா எழுப்பிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் இங்கே…
நடிப்புத் துறையில் நீங்கள் ஈடுபடக் காரணம் என்ன?
வறுமை.
உங்கள் பெற்றோர்கள் நீங்கள் நடிப்புத்துறையில் ஈடுபடுவதைப் பற்றி என்ன சொன்னார்கள்?
‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்’ என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க பசியைப் போக்குவதற்காக நடிப்புத் தொழிலில் ஈடுபடும்போது எப்படி தடை செய்வார்கள்?
நீங்கள் முதன்முதலாக போட்ட வேஷம் எது? அப்போது உங்கள் வயது என்ன?
லவகுசா நாடகத்தில் குசன் வேஷம் போட்டேன். ஏறக்குறைய ஆறு வயதிருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
உங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் யார்?
குசன் வேஷத்தில் நடிக்கும்போது நான் படித்துக்கொண்டிருந்த பள்ளியின் ஆசிரியர் ஒருவர் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். அவரது பெயர் நினைவில் இல்லை. மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் நான் சேர்ந்தபோது எனக்கு முதன் முதலாக நடிப்பு சொல்லிக் கொடுத்த ஆசான் காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் காளி என்.ரத்தினம் அவர்கள். பிறகு காலஞ்சென்ற எம்.கந்தசாமி முதலியார் அவர்கள் எனக்கு நடிப்பு சொல்லித் தந்தவர் ஆவார்.
நீங்கள் கதாநாயகனாக நடித்த முதல் நாடகம், அதில் நீங்கள் ஏற்று நடித்த வேஷம்… இவற்றைச் சொல்ல முடியுமா?
மனோகரா நாடகம். மனோகரன் வேஷம்
பெண் வேஷம் போட்டு நாடகங்களில் நடித்து இருக்கிறீர்களா?
நடித்ததுண்டு.
அந்த நாளில் நடிகர்கள் சொந்தக் குரலில்தான் பாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் எப்போதேனும் சொந்தக் குரலில் பாடியிருக்கிறீர்களா?
பாடாவிட்டால் எப்படி கதாநாயகன் வேஷம் தருவார்கள்?
நீங்கள் முதன்முதலாக காமிராவின் முன் நின்றபோது எப்படி இருந்தது? அது எந்த ஸ்டூடியோவில் நடந்தது? உடன் இருந்தவர்கள் யார் யார்?
சோபனாசலாவாக இருந்து வீனஸ் ஸ்டூடியோவாக மாறிய இடத்தில் ‘வேல் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஸ்டுடியோ இயங்கி வந்தது. அதில்தான் நடித்தேன். அன்று என்னுடன் இருந்தவர்கள் எம்.கே.ராதா, என்.எஸ்.கே., டி.எஸ்.பாலையா முதலியவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
உங்கள் முதல் படத்தின் கதையை எழுதிய வாசன் அவர்களது படமே உங்கள் நூறாவது படமாக அமைந்தது குறித்து என்ன சொல்கிறீர்கள்?
அதுதான் இயற்கையின் விளையாட்டு என்பது.
திரைப்படத்தில் உங்களை கதாநாயகனாக நடிக்க வைத்தது யார்?
பட உரிமையாளர்கள் என்று எடுத்துக்கொண்டால் முதலாவதாக எனக்கு கதாநாயகன் வேடம் தந்து படம் எடுத்தவர் நாராயணன் கம்பெனி உரிமையாளராக இருந்த காலஞ்சென்ற கே.எஸ்.நாராயண ஐயங்கார் அவர்கள். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பிறகு எனக்கு கதாநாயகன் வேடம் தந்து, மக்களுக்கு என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் ஜுபிடர் பிக்ஸர்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான காலஞ்சென்ற எம்.சோமசுந்தரம் அவர்கள்.
நீங்கள் சொந்தத்தில் எடுத்த படம் ‘நாடோடி மன்னன்’. சொந்தத்தில் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?
நான் விரும்புவதை என் தொழிலில் செய்து காட்ட வேண்டும் என்பது எனது நீங்காத ஆசையாகும். ஒருவேளை என் விருப்பம் தவறாகவும் இருந்துவிடலாம். என்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பிறருடைய பணத்தை வைத்து சோதனையில் இறங்க நான் தயாராக இல்லை. நான் சொந்தத்தில் படம் எடுக்க இதுதான் காரணம்.
நீங்களே இந்தப் படத்தை டைரக்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?
முன் கேள்விக்கு சொன்ன விடையிலேயே இதற்குரிய பதிலும் அடங்குகிறதே!
சினிமா மந்திரியாக வந்தால் நீங்கள் என்னென்ன சீர்திருத்தங்களை செய்வீர்கள்?
நாடோடி மன்னனை பாருங்கள், எனது எண்ணங்களை அதில் கோடிட்டுக் காட்டியிருக்கிறேன்.
திரைப்பட உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?
நமது பண்பாட்டை கலாசாரத்தின் தனித்தன்மையை பிற மதத்தினரும் பிற நாட்டினரும் உணர்ந்து மதிக்கும் வகையில் சினிமாக் கலையின் மூலமாக தொண்டு செய்ய வேண்டும் என்பதும், அதோடு இந்தத் துறையில் நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தால் பிறருக்கு சமமாகவாவது நமது கலைத்துறையை உருவாக்கிக் காட்ட முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதுமாகும்.
நீங்கள் ஆங்கிலப் படங்கள் பார்ப்பதுண்டா?
உண்டு.
உங்களுக்கு பிடித்த மேல்நாட்டு நடிகர்கள் யார்?
எல்லாரையும் பிடிக்கும்!
இந்திப் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா?
ஒரு சில படங்களைப் பார்த்திருக்கிறேன்.
நீங்கள் எந்த அரசியல் கட்சியில் முதலில் இருந்தீர்கள்?
காங்கிரஸில். காந்திய வழியில் சமதர்மத்தை விரும்பும் ஒருவனாக இருந்தேன்.
அந்தக் கட்சித் தலைவர்களில் நீங்கள் யாரிடம் ரொம்பவும் நெருங்கிப் பழகி இருக்கிறீர்கள்?
அந்த அளவுக்கு அப்போது நான் வளர்ந்திருக்கவில்லை. அதாவது நான்கு பேர் என்னைத் தெரிந்து கொள்ளுமளவுக்கு விளம்பரம் பெற்றிருக்கவில்லை.
தி.மு.க.வில் எந்த ஆண்டு சேர்ந்தீர்கள்?
1952-ஆம் வருடம் தி.மு.க.வில் சேர்ந்தேன்.
தி.மு.க.வில் சேரக் காரணம் என்ன?
எனது காந்திய வழிக் கொள்கைகள் அண்ணாவினால் உருவாக்கப்பட்ட தி.மு.க.வில் இருப்பதை அறிந்து சேர்ந்தேன்.
உங்களை இக்கட்சியில் சேர்த்த பெருமை யாருக்கு உண்டு?
என்னை யாரும் சேர்க்கவில்லை. அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன் போன்றவர்களிடம் என்னை அழைத்துச்சென்று அறிமுகப்படுத்திய பெருமை நாடகமணி டி.வி.நாராயணசாமி ஒருவருக்கே உண்டு.
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
நிச்சயமாக உண்டு.
நீங்கள் கோயிலுக்குப் போனதுண்டா?
நிறைய. திருப்பதிக்கு இரண்டு முறை போய் வந்திருக்கிறேன். முதல் தடவை நான் திருப்பதிக்கு போய் வந்தபோது எனக்கு வயது 12 அல்லது 13 வயதிருக்கும். நாடகக் கம்பெனியில் அப்போது நான் நடித்து வந்தேன். இரண்டாவது தடவை போனது ‘மர்மயோகி’ படம் வெளியானபோது. இரண்டாவது தடவை போனதுதான் திருப்பதியைப் பொறுத்தவரை கடைசியானது அதற்குப் பிறகும் வேறு பல கோயில்களுக்குப் போயிருக்கிறேன்.
ஏதேனும் பிரார்த்தனை செய்துகொண்டு அதை நிறைவேற்றப் போயிருந்தீர்களா?
பார்க்க வேண்டும் என்ற ஆவல். பக்தி, பிரார்த்தனை எதுவும் நான் செய்துகொள்ளவில்லை.
உங்கள் தாயார் எந்த கடவுளை வழிப்பட்டு வந்தார்கள்?
எங்கள் தாயார் இரண்டு கடவுளை வணங்கி வந்தார்கள். ஒன்று விஷ்ணு-நாராயணன். அதன் காரணமாக திருப்பதி வெங்கடாசலபதியை வணங்குவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். குல தெய்வமாக வணங்கி வந்தது காளியை.
வீட்டை விட்டுப் புறப்படும் முன்பு இப்போது யாரை வணங்கிவிட்டு வருகிறீர்கள்?
என் தாயை.
உங்கள் வீட்டில் பூஜை அறை உண்டா? எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்?
என் பூஜை அறையில் என் தாய் – தந்தை, மகாத்மா காந்தியடிகள். என் வாழ்க்கைத் துணைவியின் தாய் தந்தையரின் படங்கள் இருக்கின்றன. (அதோடு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று உண்டு) இவர்கள்தாம் நான் வணங்கும் தெய்வங்கள்.
பழைய உங்களது படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் கழுத்தில் ருத்திராட்சை மாலையுடன் இருக்கிறீர்கள். ஏதேனும் ஜெபம் செய்துகொண்டிருந்தீர்களா?
நான் வணங்கும் கடவுளுடைய நாமத்தை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அந்த மாலையை கழுத்தில் அணிந்து கொண்டிருந்தேன். இப்போது அந்த மாலை இல்லாமலேயே கடவுளை நினைத்துக்கொண்டே இருக்கும் தகுதியை நான் பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒரு சின்னத் திருத்தம், அது ருத்ராட்சை மாலை அல்ல. தாமரை மணி மாலை. திருப்பதியில் நானே வாங்கிய மாலை அது.
தமிழ்ப் படங்களில் தமிழ்நாட்டின் பண்பை விளக்கும் காட்சிகள், கலாசாரத்தை பிரதிபலிக்கும் காட்சிகள் அவ்வளவாக இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் அபிப்பிராயம் என்ன?
மறுக்கிறேன்… கலை, ஆச்சாரம், பண்பாடு அதையும் கலாசாரம் என்று சொல்லலாம். பண்பு+பாடு = பண்பாடு. பாடு என்றால் உழைப்பு. பண்படுத்தப்பட்ட செயல், இப்படியும் கொள்ளலாம். ஆக இவை அத்தனையும் சமூகத்தில் உள்ள மக்களிடையே நிலவும் நம்பிக்கைகளை, செயல்களை ஆதாரமாக கொண்டு சொல்லப்படும் வார்த்தைகள்.
இப்போது தமிழ்ப் படங்களில் காண்பிக்கப்பட்டு வரும் காட்சிகள் தமிழகத்தில் நடைபெறாத நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொன்டு உருவாக்கப்படுகிறது என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா?
நாகரிகம் சிலரை ஆட்கொண்டுவிட்டதன் விளைவாக தமிழ்ச் சமுதாயத்தில் எப்படிப்பட்ட வேதனை தரத்தக்க காட்சிகள் நம் முன் நிகழ்த்திக் காண்பிக்கப்படுகின்றன என்பதை தயவுசெய்து சிந்தித்துப் பார்க்க துணிவீர்களா?
சமீபத்தில் நான் ஒரு செய்தி கேள்விப்பட்டேன். ஒரு பத்திரிகையை படித்ததன் விளைவாக. ஒரு மாளிகையில் விருந்து நடக்குமாம். குறிப்பிடத்தக்கவர்கள் தங்கள் மனைவியுடன் செல்வார்களாம். நடனம் ஆடுவார்களாம். எந்தப் பெண்ணும் எந்த ஆடவனும் அதாவது யாருடனும் யாரும் சேர்ந்து ஆடலாமாம். குறித்த நேரத்தில் விளக்கு அணைக்கப்படுமாம். யாரை யார் விரும்புகிறார்களோ அவர்களோடு கணவன், மனைவி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாமாம். வரையறுக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு விளக்கு எரியுமாம். பிறகு திரும்பிச் சென்று விடுவார்களாம். மனைவியர்களை மாற்றிக்கொள்ளும் விளையாட்டு என்று அதற்குப் பெயராம்.
இது உண்மையாக இருக்கும் என்று கற்பனை செய்துபார்க்கக் கூட நமக்கு துணிவில்லா விட்டாலும் சமூகத்திலுள்ள ஒரு சிறு பகுதியினரால் நிறைவேற்றப்படும் பண்பாடு என்று சொல்லப்படுமானால் இதைப் படத்தில் காண்பிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படுகிறீர்களா?
தமிழ்ப் படங்களுக்கு தங்கப் பதக்கம் கிடைக்குமா?
தமிழர்களால் அமைக்கப்பட்ட குழு ஒன்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்படுமானால் தங்கப் பதக்கம் நிச்சயம் கிடைக்கும்.
நீங்கள் விரும்பி உங்களுக்கு கிடைக்காமல் போன வேஷம் ஏதாவது இருக்கிறதா?
விரும்பியவை பல. ஆனால், நான் விரும்பிய பாத்திரங்களை என்னிடமிருந்து இன்னும் யாரும் பறித்துக் கொள்ளவில்லை.
உங்கள் அன்னையார் இப்போது உயிருடன் இருந்திருந்தால்?
என் நிலைக்காக மிகவும் அனுதாபப்பட்டிருப்பார்.
எப்படிச் சொல்கிறீர்கள்?
குறைந்த வருமானத்தில் இருந்தபோது எனக்கு கிடைத்த மன நிம்மதி இப்போது எனக்கு இல்லை. என்னிடம் உதவி பெறாத நிலையில் என்னை அப்போது உள்ளன்போடு நேசித்து வந்தவர்கள் என்னிடம் பல உதவிகளைப் பெற்றும் உள்ளன்போடு இப்போது நேசிப்பதில்லை. உண்மையாக சொல்கிறேன். என்னை உளமாற நேசிக்கும் உண்மையான நண்பர்கள் மிகக்குறைவு. இது எனக்கே தெரியும். இப்படிப்பட்ட நிலையில், சூழ்நிலையில் இருக்கும் என்னைப் பார்த்து என் தாயார் அனுதாபப்படாமல் சந்தோஷப்பட்டுக்கொண்டா இருப்பார்?
பலருக்கு பல ஆயிரக்கணக்கில் உதவி வரும் நீங்கள் எப்போதாவது, யாரிடமாவது ஏதாவது உதவி பெற்றிருக்கிறீர்களா?
பிறருடைய உதவியினாலேயே வளர்ந்தவன் நான் என்பதை திட்டவட்டமாக தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
அப்படிப்பெற்ற உதவிகளில் நீங்கள் பெரிதெனக் கருதுவதும், மறக்க முடியாததும் எது?
கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் கீழ்ப்பாக்கத்தில் குடியிருந்தபோது அவரது வீட்டிலேயே கோவிந்தன் என்ற தோழர் ஒருவர் இருந்தார். பத்து, பதினைந்து என்று மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அந்தத் தோழர் தன்னுடைய குடும்பத்தைப் பற்றிக்கூட கவலைப்படாமல் எனக்கு ஒரு நாள் இரண்டு ரூபாய் கொடுத்து உதவியதை மறக்கமுடியாது. ஆனால், அந்த நண்பரைத் தேடித் தேடி அலைகிறேன். என்னால் அந்தத் தோழனைக் காண முடியவில்லை.
ஒரு காலத்தில் நடிகன் என்ற நிலையில் நெப்டியூன் ஸ்டூடியோவில் பணியாற்றிய நீங்கள் இப்போது சத்யா ஸ்டூடியோவாக மாறியிருக்கும் அதன் பங்குதாரர்களில் ஒருவராக இருக்கிறீர்கள். இந்த மாறுதலைப் பற்றியும், அந்தப் பழைய நாட்களையும் இணைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
நான் பல பேர்களுக்கு உபதேசம் செய்கின்ற, செய்து கொண்டிருக்கின்ற ஒரே கருத்துதான் என் நினைவில் நின்றுகொண்டிருக்கிறது. மனித உடலைப்பற்றிப் பெரியவர்கள் ‘நீரின் மேல் குமிழியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதைவிட ஆபத்தானது, நிச்சயமற்றது, ஒரு மனிதனுக்கு சேர்கின்ற பொருளும், புகழும். நான் எந்த ஸ்டூடியோவில் யாரோ ஒருவனாக பனியாற்றினேனோ அதே ஸ்டூடியோவில் நானே பங்குதாரராக இருப்பது ஒன்றே போதாதா, பொருளும், புகழும் நிலையற்றது என்பதை எடுத்துக்காட்ட.
இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தால் ஏற்பீர்களா?
நேரம் இருந்து, அந்தப் பாத்திரத்தில் என் கருத்துக்களை சொல்ல முடியும் என்ற நிலை இருந்து, என்னைத் தாங்கிக் கொள்ளக்கூடிய இதயம் அவர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.
உங்கள் எதிர்காலத்திற்கு ஏதாவது சேமித்து வைத்திருக்கிறீர்களா?
சேமித்து வைப்பதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, தனக்கென்று சேமித்து வைப்பது. மற்றொன்று, பிறருக்கென்றே சேமித்து வைப்பது. என் வரை எனக்கென்று எதையும் சேமித்து வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை.
தி.மு.க. தலைவர்களால் திரைப்பட உலகம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது?
திரைப்பட உலகம் என்பது திரைப்படத் தொழிலை அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பைப் பற்றிய ஒரு வார்த்தை என்று நான் நினைக்கிறேன். வேறு ஒரு கேள்விக்கு நான் பதில் சொன்னதுபோல திரைப்படத் தொழில் ஒரு சில பகுதிகளை மட்டும் கொண்ட தொழில் அல்ல. திரைப்பட உலகம் என்று நீங்கள் கேட்பது தமிழ்த் திரைப்பட உலகம் பற்றித்தான் என்று நான் சேர்த்துக்கொள்ளலாம் அல்லவா? அப்படி உங்கள் அனுமதி கிடைக்குமானால் தமிழ்த் திரைப்படத் தொழிலில் தூய தமிழுக்கு வித்திட்டது தி.மு.க. தலைவர்கள்தான் என்று நான் அறுதியிட்டுக் கூற முடியும்.
திரைப்படத்துறையிலிருந்து நீங்கள் ஓய்வுபெற்றால் என்ன செய்வீர்கள்?
என் உடலில் உழைக்கும் சக்தி இருக்கும் வரையில் திரைப்படத் தொழிலிலிருந்து நான் ஓய்வுபெறுவதாக இல்லை.
விதியை யாராலும் வெல்ல முடியாது என்று நம்புகிறீர்களா? அல்லது விதியை மாற்றி அமைக்க முடியும் என்று நம்புகிறீர்களா?
எந்த விதி? சட்டமன்றத்திலே நிறைவேற்றுகின்றார்களே அந்த விதிதானே? அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதுதான் நமக்கு தெரிகின்றதே.
சந்தர்ப்ப வசத்தால் ஒரு ஆணும் பெண்ணும் தவறு செய்ய நேர்ந்தால் சமூகம் பெண்ணை மட்டுமே கண்டிக்கிறது. ஆணைக் கண்டிப்பதில்லை. இதற்கு என்ன காரணம்? இது நியாயமா?
அப்படி ஒரு காலம் இருந்திருக்கலாம். இப்போது அப்படி இல்லை என்று நினைக்கிறேன்.
நீங்கள் அதிக மகிழ்ச்சி அடைந்த அனுபவம் நாடக மேடை நடிப்பிலா? அல்லது திரைப்பட நடிப்பிலா?
நாடக மேடை நடிப்பில்! நடிகன் நாடக மேடையில் நடிக்கும் போது அவனுடைய திறமைக்கு உடனடியாக பலனைக் காண்கிறான். அதாவது மக்கள் மகிழ்வதை அதாவது அவனுடைய திறமையான நடிப்பை ஏற்றுக்கொள்வதை நேரடியாக அனுபவிக்கிறான். அப்படி அனுபவித்த சந்தர்ப்பங்கள் பல உண்டு. சினிமாவில் அப்படி இல்லையே.
தமிழ்ப் படங்களின் தரம், முன்னேற்றம் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் வெளியிடப்படும் அத்தனை படங்களையும் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை நான் பெற்றவனல்ல. எனவே பொதுவாக ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது தெரியாத ஒன்றைப் பற்றி நான் தீர்ப்புக் கூறுவதாக முடிந்துவிடலாம். ஆனால், நான் கேள்விப்பட்டதில் இருந்து மக்கள் சொல்கின்ற கருத்தில் இருந்து பெரும்பாலான படங்கள் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு வந்த படங்களைவிட தரத்திலும் தகுதியிலும் உயர்ந்ததாக உள்ளன என்பதை சொல்ல முடியும்.
முன்னேற்றம் என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு பதில் சொல்வது இயலாத ஒன்று. ஏனெனில், ஒரு தொழிலின் முன்னேற்றம் என்பது பல்வேறு வகையான, வெவ்வேறு தொடர்பான செயலிலிருந்து, விளைவிலிருந்து உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
உதாரணத்திற்கு ஒரு சினிமாப் படத்தை எடுத்துக் கொண்டால் உரையாடல், காட்சிகள், இசையமைப்பு, நடிப்பு, பாத்திரத்திற்கேற்ற உடைகள், காட்சி ஜோடனை, ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, இயக்குதல் முதலியவைகளில் ஒவ்வொன்றிலும் தனித்தனியாக முன்னேற்றம் ஏற்படுவதும், ஏற்படாமல் இருப்பதும் இயற்கை.
குறிப்பாக சினிமாப் படங்களின் முன்னேற்றம் என்றால் இவை அத்தனையும் சேர்த்துதான் பதில் சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால், மேலே சொன்னவைகளில் ஒன்றில் முன்னேற்றம் என்று கூறினாலும் அது சினிமாத்தொழிலுக்கே முன்னேற்றமாகத்தான் கருத வேண்டும். அந்த வகையில் ஒலி, ஒளி, காட்சி ஜோடனை, ஒப்பனை, நடிப்பு, கதை, இசை, உரையாடல், படத்தொகுப்பு, பதிப்பு முதலிய பல்வேறு வகைகளில் தமிழகம் சினிமாத் துறையில் நிச்சயமாக முன்னேறி இருக்கிறது.
சினிமாவை நீங்கள் ஒரு கலை என்று நினைக்கிறீர்களா? வியாபாரம் அல்லது தொழில் என்று நினைக்கிறீர்களா?
ஒரு தொழிலை கலைநுணுக்கத்தோடு உருவாக்கினால் சிறந்த வியாபாரமாக அது பயன்படும். அதுபோல சினிமாவை தொழிலாகக் கருதி, கலை அம்சத்திற்கு எந்த ஊறுவிளைவிக்காமல் பயன்படுத்தினால் அந்த வியாபாரம் செழிக்கும்.
நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு மனதிருப்தியைத் தந்த படம் எது?
ஒரே ஒரு முறைதான் ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் என் பாத்திரம் பிடித்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அதற்குப் பிறகு இதுவரையில் நான் எதையும் அப்படிச் சொல்லி, என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது இல்லை.
நீங்கள் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் நடிப்புத்துறையை விட்டுவிட்டு அரசியலிலேயே ஈடுபட்டால் என்ன?
என்னைப் பொறுத்தவரை நல்ல ஒரு அரசியல்வாதிக்கு கலையின் மூலமாக மக்களுக்கு சேவை செய்வதை விட வேறு ஒரு வழிவகை அவர்களுக்கு இருக்காது என்பதை நான் திடமாக நம்புகிறேன்.
நீங்கள் தி.மு.க.வில் இருப்பதால்தான் உங்கள் படங்கள் பெரும் வரவேற்பு பெறுவதாகச் சொல்கிறார்கள். அக்கட்சியிலுள்ள நீங்கள் படத்தில் நடிப்பதால்தான் தி.மு.க. அதிக செல்வாக்கு பெறுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
இந்த இரண்டு விதமான அபிப்பிராயங்கள் குறித்து எனக்கு எந்த விதமான கருத்தும் கிடையாது. நான் கலைப் பணி புரிகின்றேன். தொழிலுக்காக அரசியலில் இருக்கிறேன், என் கொள்கைக்காக என் கொள்கையை கூடுமானவரை பிறர் மனம் புண்படாத வகையில் கலையில் புகுத்தி தொழில் நடத்தி வருகின்றேன்.
உங்கள் சொந்த வாழ்க்கையில் பெரிய சோதனையாக அமைந்த நிகழ்ச்சி எது?
ஒரு பெண் என்னை காதலித்ததுதான். தயவுசெய்து இதற்கு மேல் அதைப் பற்றி ஒன்றும் கேட்க வேண்டும்.
உங்கள் தொழிலிலே உங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது எது?
என்னை அழிக்க விரும்பிய எதிரிகளின் நட்பு.
உங்களுக்குக் கார் ஓட்டத் தெரியுமா?
ஓட்டத்தெரியும். நான் ஓட்டுவதெல்லாம் பிறருடைய துணிவைப் பொறுத்தது. சினிமாவில் கார் ஓட்ட லைசென்ஸ் தேவை இல்லை. படத்தில் காதலிக்க லைசென்ஸ் தேவையா? அதுபோலத்தான்.
அதிர்ஷ்டம், ஆருடம், ராசி இவற்றில் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தது உண்டா?
உறுதியாக. மிகப் பலமான நம்பிக்கை இருந்தது உண்டு.
திரு. மு.கருணாநிதி அவர்களுக்கும் உங்களுக்கும் முதலில் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
ஜூபிடர் ‘அபிமன்யூ’ படத்திற்காக உரையாடல் எழுத அவர் கோவை வந்தபோது
உலகிலேயே அழகானது எது?
குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து கருத்துச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இருக்கும் இந்தக் கேள்விக்கு நான் பதில் சொன்னால்! பரந்த இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் உள்ள நான், உலகத்தில் உள்ளதில் அழகானது எது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
ஆடு, மாடு, கோழி மனிதனுக்கு இம்சை செய்வதில்லை. அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் இல்லையா?
உங்களுடைய கேள்வியிலிருந்து மனிதனுக்கு இம்சை செய்கின்றவைகளை கொன்று சாப்பிடலாம் என்ற பொருளும் தொக்கி நிற்கிறது என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். அப்படியானால் உயிர்ப் பிராணிகளையே கொன்று தின்பது தவறு என்று உங்கள் கேள்வியில் கருத்து வெளிப்படவில்லை. தீங்கு செய்யும் பிராணிகளை கொன்று தின்னலாம் என்ற கருத்தாகிறது. அப்படியானால் தீங்குச் செய்கின்ற மனிதனையே, ஏன் மனிதன் கொன்று தின்னக் கூடாது? இதை வேடிக்கையாகத்தான் கேட்கிறேன்…
கொல்லாமை, புலால் உண்ணாமை இவை எல்லாம் மனத்தின் பழக்கத்தைப் பொறுத்தது. புலால் உணவு உண்பவர்களிலேயே பலர் சிலவற்றை உண்கிறார்கள். சிலவற்றை உண்பதில்லை. இவை எல்லாம் மனப் பழக்கத்தின் விளைவாக ஏற்படுகின்ற பழக்க வழக்கங்களாகும்.
நீங்கள் காங்கிரஸில் இருந்தபோது கதராடை கட்டிய துண்டா?
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்தபோதுகூட கதர் கட்டி இருக்கிறேன். முன்பெல்லாம் கதராடை தூய்மையின் அடையாளமாக இருந்தது.
பெரிய மகானாக விளங்கும் காஞ்சி காமக்கோடிகளை நீங்கள் எப்போதாவது தரிசித்துப் பேசியதுண்டா?
என்னைவிட அதிகமாக விஷயம் தெரிந்தவர்களைக்கூட நான் மதிப்பதுண்டு. மிக உயர்ந்த நிலையிலுள்ள, தகுதி வாய்ந்த பெரியவரை மகான் என்று ஏற்றுக்கொள்ள எனக்கு என்ன தடை இருக்கப் போகிறது?
சினிமாவுலகில் நீங்கள், யாருமே அடையமுடியாத உச்ச நிலைக்கு போய்விட்டீர்கள்? நீங்கள் விரும்பிய லட்சியத்தை அடைந்துவிட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ‘நியூ எல்பின்ஸ்டன்’ தியேட்டரில் ‘இரு சகோதரர்கள்‘ என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக ‘இந்த மேடைப் புலி’ என்று பட்டம் பெற்ற கே.பி.கேசவன் அவர்கள் நடித்திருந்தார். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்தார். அவருடன் நானும் வேறு சிலரும் இந்தப் படத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறிக் கூச்சலிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான் இதைக் கண்டு திகைத்து கே.பி. கேசவன் அவர்களையே பார்த்துக் கொண் டிருந்தேன். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்றிருக்கும் அவருக்கு அருகில் நாம் அமர்ந்திருக் கிறோமே என்ற பெருமை கூட உண்டாயிற்று.
படம் முடிவதற்குள் வெளியே வந்துவிட வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். நாங்கள் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்குக்கூட சிரமமாகிவிட்டது. நான் மற்றவர்களை பிடித்துத் தள்ளி, கே.பி.கே. அவர்களை பாதுகாப்பாகக் காப்பாற்றி காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தேன்.
அன்று மக்களுக்கு என்னை யார் என்று தெரியாது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், சென்னை ‘நியூ குளோப்’ தியேட்டருக்கு நானும் கே.பி.கே. அவர்களும் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கப் போனோம். அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ திரைப்படம் வெளிவந்து சில மாதங்களே ஆகி இருந்தன.
இடைவேளையின் போது நான் வந்திருந்ததை அறிந்த ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். எனக்கு அருகில் அதே கே.பி.கே. அவர்கள்தான் அமர்ந்திருந்தார் கள். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் தெரிந்து கொள்ளவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தோம். மக்கள் கூட்டம் எங்களை சூழ்ந்தது. கே.பி.கே. அவர்கள் அந்த ரசிகர் களிடமிருந்து என்னைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார். நான் புறப்படும் போது அவரும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக நின்றிருந்தார். அவரது நடிப்பாற்றல் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.
கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு!...........
-
வாலி எழுதிய 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை, அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடினார்.
இதுபற்றி வாலி கூறியிருப்பதாவது:-
'அடிமைப்பெண்' படத்துக்காக, 'அம்மா என்றால் அன்பு' என்னும் பாடல் எழுதியிருந்தேன்.
'வாலி! இந்தப்பாட்டை அம்முவை (ஜெயலலிதா) பாட வைக்கலாம் என்றிருக்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
'ரொம்ப சந்தோஷம்' என்று நான் சொல்லிவிட்டு, மேற்கொண்டு ஒரு விஷயத்தை எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன்.
'அண்ணே! பிற்காலத்தில் இவங்களை நீங்க படத்திலே பாட வைப்பீங்கன்னுதான், ஏற்கனவே நான் தீர்க்கதரிசனமாக சொல்லி வைத்திருக்கிறேனே... கவிஞன் வாக்கு பொய்க்காது' என்றேன்.
'எப்படி? எப்படி?' என்று எம்.ஜி.ஆர். ஆர்வமாகக் கேட்டார்.
`அரசகட்டளை' திரைப்படத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களுக்காக நான் எழுதியிருந்த பாடலை அவருக்கு நினைவூட்டினேன்.
அந்தப் பாடலின் வரிகள் இவைதான்:
`என்னைப் பாட வைத்தவன் ஒருவன்; என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்!'
- இதை நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். மகிழ்ந்து சிரித்து, 'வாழ்க! வாழ்க! உங்கள் வாக்கு எப்போதும் இப்படி பலிக்கட்டும்' என்றார்.
'அம்மா என்றால் அன்பு' என்ற பாட்டை கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் ஜெயலலிதா பாட, 'அடிமைப்பெண்' படத்தில் அப்பாடல் இடம் பெற்று பெரும் புகழ் பெற்றது.'
இவ்வாறு வாலி கூறினார்.
ஆரம்ப காலத்தில் வாலிக்கு மதுப்பழக்கம் இருந்தது. அதை விட்டுவிடும்படி எம்.ஜி.ஆர். சிலமுறை கூறியும், அந்த பழக்கம் தொடர்ந்தது.
1978-ல் ஒருநாள் எம்.ஜி.ஆரும், வாலியும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். விமானப் பணிப்பெண் ஒரு தட்டில் சாக்லேட் கொண்டு வந்தார். அதில் ஒரு சாக்லெட்டை எடுத்து, வாலியிடம் கொடுத்தார், எம்.ஜி.ஆர்.
'என்னண்ணே விசேஷம்? எதுக்கு சாக்லேட்?' என்று கேட்டார், வாலி.
'நேற்றுதான் ஒரு சந்தோஷ சமாசாரம் கேள்விப்பட்டேன். அந்த சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் உங்களுக்கு இனிப்பு கொடுத்தேன்' என்று கூறினார், எம்.ஜி.ஆர்.
'என்ன சந்தோஷ சமாசாரம்?' என்று வாலி கேட்டார்.
'நீங்க மது அருந்துறதை விட்டுட்டீங்கன்னு நேற்றுதான் கேள்விப்பட்டேன். ஏழெட்டு மாதமா அந்தப்பீடையைக் கையால் தொடறதில்லையாமே நீங்க? இது எனக்கு சந்தோஷ சமாசாரம்தானே!' என்று கூறிய எம்.ஜி.ஆர்., 'உங்க உடம்பு உங்களுக்குத் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழுக்குத்தேவை' என்றார்.
கண் கலங்கி விட்டார், வாலி.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, அவருடன் வாலி, மதுரை முத்து ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, 'கவிஞர்கள் வாக்கு பலிக்குமா?' என்ற கேள்வி எழுந்தது.
கவிஞர்களின் வாக்கு பலிக்கும் என்பதற்கு, பல உதாரணங்களை கூறினார், எம்.ஜி.ஆர்.
அப்போது எம்.ஜி.ஆரிடம் மதுரை முத்து கூறினார்:
'உங்களுக்காக வாலி எழுதின பாடல் அத்தனையும் பலிச்சிருக்கு.
'நினைத்தேன் வந்தாய், நூறு வயது!' என்று எழுதினாரு. குண்டடிபட்டுப் படுத்திருந்த நீங்க நல்லபடியாகப் பொழச்சு வந்தீங்க.
'நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்...' என்று 'எங்க வீட்டு பிள்ளை'யிலே வாலி எழுதினாரு. நீங்க இப்போது ஆணையிடுகிற இடத்திலே இருக்கீங்க.
'அன்னமிட்ட கை' என்று உங்கள் கையைப் புகழ்ந்து எழுதினாரு. சத்துணவு திட்டத்தில் இப்போது நீங்கள் குழந்தைகளுக்கு அன்னமிடுகிறீர்கள்.'
- இவ்வாறு முத்து கூறியபோது, வாலி குறுக்கிட்டார்.
'அண்ணே! நான் சொன்னதெல்லாம் பலிச்சுதுன்னா அந்தப் பெருமை எல்லாம் நம் அண்ணனை (எம்.ஜி.ஆர்)தான் சாரும். ஏனென்றால், அவர் பாடியதால்தான், அந்தப் பாட்டுக்கெல்லாம் அவ்வளவு சக்தி வந்து பலிச்சிது' என்றார்.
அப்போது, முத்துவைப் பார்த்து எம்.ஜி.ஆர்., 'என்னைப் பற்றி வாலி எழுதிய எல்லாப் பாட்டும் பலிச்சுது. ஆனால் ஒரு பாட்டுதான் பலிக்கவில்லை' என்றார்.
எந்தப்பாட்டை எம்.ஜி.ஆர். குறிப்பிடுகிறார் என்று, வாலிக்குப் புரியவில்லை.
பிறகு எம்.ஜி.ஆரே சொன்னார்:
'எனக்கொரு மகன் பிறப்பான்! அவன் என்னைப்போலவே இருப்பான். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்' என்று பாட்டு எழுதினீர்களே! அந்தப் பாட்டைத்தான் சொல்கிறேன்' என்றார், எம்.ஜி.ஆர்.
வாலியின் முகம் வருத்தத்தால் வாடியது. எனினும், தன்னை ஒருவாறு தேற்றிக்கொண்டு, 'அண்ணே! நாட்டில் உள்ள சின்னஞ்சிறார்கள் அனைவருமே, உங்களுடைய செல்வங்களாக இருக்கிறார்கள். அப்படி இருப்பதால், உங்களுக்கு தனியாக ஒரு வாரிசு அமைவதை இறைவனே விரும்பவில்லை. அதனால்தான் இந்தப்பாட்டு பலிக்காமல் போய்விட்டது' என்று கூறினார்.
மதுரை முத்துவும், வாலி சொன்னதை ஆமோதித்தார்.
எம்.ஜி.ஆர். புன்னகை புரிந்தார்.- courtesy malaimalar
-
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா என்ற கவிதை உருவாகியது ஆயிரத்து 954 ஆம் ஆண்டு அதை சட்டமாக இயற்றி 1980 நிறைவேற்றப்பட்டது சத்துணவுத் திட்டமாக ஏழையின் குழந்தை எல்லோரும் கல்வி கற்க வேண்டும் அந்த கல்வியின் அடிப்படையில் உணவு தரவேண்டும் என்ற மேலோங்கிய எண்ணம் எழுந்தது நம் மக்கள் திலகத்தின் மனதில் எதிரிகள் என்ற பெயரிலே வாழும் மனிதர்கள் எம்ஜிஆர் தமிழனை பிச்சைக்காரன் ஆகிவிட்டார் தமிழன் கைகளில் தட்டை எந்த விட்டார் என்று எக்காளம் இட்டார்கள் எவனாலும் தடுக்கும் இல்லை அந்த மாபெரும் திட்டத்தை என் தலைவன் தொடர்ந்து செயல்படுத்தினார் தமிழகத்தில் அன்று பால்வாடி பள்ளியில் படித்த பிள்ளைகள் எல்லாம் இன்றைய தமிழ் நாட்டில் வாழும் அதிகாரிகளாக பெரும் செல்வந்தர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது ஊரறிந்த உண்மை.........Ravi...
-
தன் உடல்நலத்தை கூட பொருட்படுத்தாமல் தன் மக்களின் மீது கொண்ட அன்பால் அவர்கள் வாழ்வு உயர தொடர்ந்து பாடு பட்ட மக்கள் திலகத்தின் தியாகம் இப்போதாவது புரிந்ததா? தங்கள் நலனுக்காகவும் தங்கள் குடும்ப நலனுக்காகவும் கட்சி தொடங்சியவர்களின் கதி என்னவாயிற்று. "நமது தேவையே மக்களுக்கு நாம் செய்யும் சேவையே" என வாழ்ந்த மக்கள் திலகத்தின் இடத்தை கனவிலும் யாராலும் நெருங்க முடியாது என்பதை எல்லோரும் உணர்ந்தாலும் கைபிள்ளைகள் மட்டும் அடம் பண்ணுவது அவர்களின் சிறுபிள்ளைதனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
தொடர் பதிவு உ...த்தமன்.7
---------------------------------------------
அடுத்த கட்ட மோதல்.
சார்லஸில் 1965 பொங்கலுக்கு வெளியான மாபெரும் வெற்றிப் படம்தான் எங்க வீட்டுப் பிள்ளை.
விஜயா புரடொக்ஷன்ஸாரின் தயாரிப்பு. இயக்கம். சாணக்யா.
கூட வந்த பெரிய படம் என்று பேசப்பட்ட மாற்று நடிகரின் மிகை மிகை நடிப்பில் உருவான பழனி பீம்சிங்கின் இயக்கத்தில் வெளியாகி உறுதியாக வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் வெளியாகி
ஒரு பெரிய டிரக்கரில் மோதிய மாட்டு வண்டி போல உருத்தெரியாமல் போனது. கூட வந்த புதிய கலைஞரான ஜெய்சங்கரின் இயல்பான நடிப்பில் வெளியான இரவும் பகலும் படம் கூட 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது.
தலைவரின் சாதாரண படங்களோடே பிரமாண்ட வெளிநாட்டு படங்கள் மோதி மண்டை உடையும் போது இதென்ன பிரமாதம்?. முதல்நாளை பொறுத்தவரை பழனிக்கு நல்ல வரவேற்புதான். எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும், நம்ம அய்யனின் மிகை நடிப்பில் படமே மக்களுக்கே பகையானது. பெருந்தொகை செலவழித்து நட்சத்திர பட்டாளங்களை குவித்து நடிக்க வைத்தாலும் குறுந்தொகை கூட
வசூலாகாமல் படம் 21/2 வாரங்களில் விநியோகஸ்தர் ஆபிஸில் தஞ்சமடைந்தது.
எனது நண்பன் அவனும் ஒரு கைஸ்தான். அடிக்கடி சொல்லுவான், எம்ஜிஆர் ரசிகர்கள் லோ கிளாஸ் ஆட்கள். ஆனால் அய்யனின் கைஸ்கள் எல்லாம் ஹை கிளாஸ் ஆடியன்ஸ் என்று. முதல் நாள் தியேட்டரில் வரிசையில் நிற்பவர்களை பார்த்தால் தெரியும் என்பான். ஆனால் நான் சொல்வேன், எம்ஜிஆர் படத்துக்கு ஹைகிளாஸ் ரசிகர்கள் நிறைய உண்டு. அவர்கள் எல்லாம் முதல் 10 நாட்களுக்கு தியேட்டருக்கு வர மாட்டார்கள்.
எங்க ஊரில் முதல் 10 நாட்களில் தியேட்டரில் முட்டி மோதி டிக்கெட் எடுப்பவர்கள் எல்லாம், சத்யராஜ் வருவாரே முட்டம் சின்னப்பதாஸ் வேடத்தில் அது மாதிரி கைலி அல்லது 4 முழ வேஷ்டியை தூக்கி அண்டர்வேர் தெரிய கையில் பீடி அல்லது சிகரெட் பிடித்துக்கொண்டு சட்டையை முழுவதுமாக திறந்து வைத்துக் கொண்டு காலை தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு விசில் சத்தத்துடன், சீட்டி அடித்துக் கொண்டு எந்தக் கவலையும் இல்லாமல் தலைவரின் வருகையை எதிர்பார்த்து காத்து கிடப்பார்கள்.
ஆனால் அய்யனின் படத்துக்கு கொஞ்சம் பேர் மட்டும் ஹைகிளாஸில் பவனி வருவார்கள்.
10 வது நாளில் படமே ஆட்டம் கண்டு விடும். தலைவர் படத்துக்கு 10 நாள் கழித்துதான் பொதுமக்களே பார்க்க முடியும். ஆனாலும் சார்லஸில் வெளியான "எங்க வீட்டுப் பிள்ளை"யை காண ஹை கிளாஸ் டிக்கெட் எடுத்த ஏழை மக்கள் எல்லாம் போக வழி தெரியாமல் தியேட்டரின் முன்னே அமைந்திருக்கும் கார்டன் வழியாக ஏறி உள்ளே செல்வதை பார்த்திருக்கிறேன்.
பின்னர் கார்டன் வழியே செல்லக்கூடாது என்பதற்காக பிரத்யேகமாக ஒரு நபரை நிறுத்தி வைத்து தடுத்தனர். திரை தூக்கியவுடன் எழும்பும் விசில் சத்தம் காதை துளைக்கும். அதிலும் ஏற்ற
இறக்கத்துடன் அவர்கள் எழுப்பும் ஒலி எவ்வளவு கற்றாலும் நமக்கு வராது. மொத்தத்தில் தலைவர் படம் வெளியாவது ஒரு திருவிழா நடத்துகிற மாதிரி அத்தனை சுவாரசியமாக இருக்கும்.
டிக்கெட் எடுக்கும் சாகஸ நிகழ்ச்சியே பிரமாதமாக இருக்கும். 77 நாட்கள் நடைபெற்ற அந்தத் திருவிழாவை முடிவுக்கு கொண்டு வந்தனர் சார்லஸ் திரையரங்கத்தினர். நிச்சயம் வசூல் 1 லட்சத்தை தாண்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் காட்டிய பொய் கணக்கு வெறும் ரூ 49000 தான். ஆனால் மிகவும் சிறிய திரையரங்கமான காரனேஷனில் "புதியபூமி" 29 நாட்களில் 32000 வசூல் கணக்கு காட்டினார்கள்.
இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் சார்லஸின் வசூல் ஊழலை. தலைவர் படம் ஓபனிங் திருவிழாவை விடுத்து அய்யனாம், மிகை நடிப்பாம் யாரையா கேட்டார்கள் உங்கள் புலம்பலை. போய் வேற இடம் பார் யாராவது இளிச்சவாயன் கிடைக்கிறானா என்று?.........ksr...
-
அன்னை என்பவள் நீ தானே!
---------------------------------------
காரமான அரசியல் பதிவுகளையே சுவைத்த நாம்--
ஈரமான பதிவில் இன்று சந்திக்கிறோம்!
சிலருக்கு ஜெ அவர்கள் அம்மாவாக இருந்தாலும்-
அன்னை என்றால் நம் நினைவில்--
ஜானகி அம்மையார்!
அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றக் காணலாம்!
டாக்டர் பழனி ஜி.பெரியசாமி!
இவர் பெயரைக் கேட்டவுடனேயே நமக்கு எம்.ஜி.ஆர் தான் நினைவுக்கு வருவார்!
அமெரிக்காவில் அண்ணலின் உயிரை மீட்கப் பாடுபட்ட ஆண் சாவித்திரி!
பழனியிலேயே பெரிய சாமி--
முருகன் வைத்தியக் கடவுள் என்றால்--
பழனி பெரியசாமிக்கு எம்.ஜி.ஆர் தானே கடவுள்?
அது எம்.ஜி.ஆர் மறைந்து,,கட்சியும்--
ஜா--ஜெ--என நின்ற காலம்!
சட்டமன்றத் தேர்தலை இரு அணியும் சந்திக்கின்றன!
தண்டபாணி என்னும் கட்சி நிர்வாகி!
எம்.ஜி.ஆர் காலத்து செயல் வீரர்!
சேரன்மா தேவி தொகுதியின் ஒன்றியச் செயலாளர்!
சேரன்மா தேவியில் எம்.எல் ஏ .வுக்குப் போட்டியிடும் பி.எச்.பாண்டியனுக்காக வேட்பு மனுக் கட்டணத்தை தாமேக் கட்டுகிறார் தண்டபாணி!
எம்.ஜி.ஆரின் சிறந்த விசுவாசி என்பதனாலேயே தண்டபாணியின் பிள்ளைக்குத் தன் சொந்தக் கம்பெனியான தரணி சுகர்ஸில் நல்லதொரு வேலைப் போட்டுக் கொடுத்திருக்கிறார் நம் பழனி ஜி.பெரியசாமி!
சட்டமன்றத் தேர்தலில் ஜானகி அம்மையாரேத் தோற்றுப் போன நிலையிலும்--
சேரன்மா தேவியில் ஜா அணியில் பி.எச்-பாண்டியன் வெற்றி பெறுகிறார்!
ஜானகி அணியில் ஜெயித்தது அவர் மட்டும் தான் என்று நினைவு.
இந்த நிலையில்,,தண்டபாணியின் மகனை வேலையில் இருந்து நீக்கி விடுகிறார் பழனி ஜி பெரியசாமி??
சேரன்மா தேவியில் பி.எச்.பாண்டியனுக்கு பணம் கட்டிய தண்டபாணி,,ஜானகி அம்மையாருக்கும் கட்டியிருந்தால் அன்னை ஜெயித்திருப்பாரே--
கட்டத் தவறியக் --கடமைத் தவறியக் குற்றத்துக்காக-தண்டபாணிக்கு தண்டனையாக--அவர் மகனை வேலையிலிருந்து நீக்குகிறார் ப.பெ.சாமி!
தண்டபாணி,,நேரே அன்னையிடம் சென்று முறையிட,,ஜானகி அம்மையாரும் பழனி பெரியசாமியிடம் சொல்கிறார்--
என் கணவர் எம்.ஜி.ஆருக்கு மிக நெருங்கியவர் தான் தண்டபாணி. இவரோடு என்னவர் பலமுறை ஒன்றாக உணவருந்தும் அளவுக்கு தீவிர விசுவாசி!
என் பொருட்டு,,இவர் மகனை வேலையிலிருந்து நீக்கியது சரியல்ல!--
அன்னையின் பேச்சுக்கு மறுப்பேது?
தண்டபாணியின் மகனுக்கு மறுபடியும் அந்த வேலைக் கிடைக்கிறது!
இதில் நோக்க வேண்டியது--
தன் அன்னையின் தோல்வியைப் பெரியதாக எடுத்துக் கொண்ட பழனி பெரியசாமியின் ஈடுபாடு பெரிதென்றால்--
தான் தோற்றுப் போயிருந்தாலும்,,தமக்காக தண்டனை கொடுக்கப்படுவதை விரும்பாத ஜானகி அன்னையின் கருணையுள்ளம்??
நான் முன்பு எழுதியிருந்தேன்--
எம்.ஜி.ஆர் காலத்துத் தொண்டர்கள்--
உணர்வுக்குக் கட்டுப்பட்டவர்கள்!!!
Vtr...