Quote:
1)Focusreach முறையின் முக்கியம் அதீத energy level . சக்தியின் உக்கிர வெளிப்பாடு.உடலின் சோர்வு,பசி,துன்பத்தை கருதாது நோக்கத்தை நோக்கி செல்லும் அதீத வெளியீடு.இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், இதுதான் உச்ச சக்தி என்று நாம் கருதும் போது அடுத்தது அதனை மிஞ்சி உச்ச காட்சியில் இமயத்துக்கு மேலும் செல்லும்.
... well said.
Quote:
2)அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் விட மேல் தளத்தில் விரிந்து நாயகனை superhero ஆக உணர்த்தும் விந்தை. இதை செயல்களின் துணையின்றி உணர்ச்சி வெளிப்பாட்டு சக்தியிலேயே சாதித்து ,நமக்கு மேலே அவர் என்று உணர வைத்த விந்தை. நாசரே இவர் உயரம் பல அடிகள் மேலே என்று நினைக்க வைத்த சாதனை.அனைத்து தரப்பினரையும்,வயதினரையும் ,தன் கீழ் பட்டவர்களாக படம் பார்க்கும் போது உணர வைத்த சாதனை.
சொல்ல வேண்டியதை அருமையாக சொல்லி விட்டீர்கள். Perfect Example for how to present a braveheart by his method of approach than deeds.
Quote:
3)focus focus focus reach a peak ,move to other peaks என்ற முறையில் நடிப்பின் உணர்ச்சி வரைபடத்தில்(Emotional intensity mapping) சிகரம் தொட்டு தொட்டு மேற்செல்லும் முறை.
- திருப்பதியில் மலைப்பாதையில் நடைப்பயணம் மேற்கொள்பவர்கள், காளி கோபுரம் பகுதியை அடைந்ததுமே ... ஆஹா... வந்து விட்டோம் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்..மீண்டும் தொடரும் போது, கொஞ்ச தூரத்திலேயே அலுப்பு ஆரம்பித்து விடும். காஃபி டீ என மனம் ஏதாவது ஒரு உந்து சக்தியைத் தேடும். அப்படிப்பட்ட நமக்கு இந்த மனிதரின் WILL POWERஐ நினைத்தால் பிரமிப்பே ஏற்படும். திருப்பதி என்ன, எவரெஸ்டையே பத்தாயிரம் முறை கடந்தவராயிற்றே.. சிகரங்களெல்லாம் இவருக்கு தெரு முனை மாதிரி ... ஒவ்வொரு தெருவாக கடந்து போய்க்கொண்டே இருப்பார்.
Quote:
4)மெய் வருத்தம் பாராத,தன்னை வருத்திய ஒரு முக சிந்தனை வெளிப்பாடு.
(ரத்தமெல்லாம் கக்கி துடைத்து கொண்டு தொடர்வாராம்)
அந்த மெய்வருத்தத்தில் ஓர் நியாயமிருக்கும்.
...
Quote:
6)சரி- தவறு என்ற ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டு ,தான் செய்வதே மிக சரி என்று அனைவரையும் உணர வைக்கும் சக்தி. எடுத்த நோக்கமும் உன்னதமானதாக இருந்ததால் double impact .
THAT SHOWS HIS CONFIDENCE LEVEL.
Quote:
7) Adrenalin Rushes with High Stress levels . இந்த படம் எடுத்து கொண்ட காலகட்டமே stress level கட்டபொம்மனுக்கும் மேலாக இருந்தது. சிவாஜியின் Type A personality கொண்ட வெளியீட்டு முறை ,பார்க்கும் நமக்கும் வாளெடுத்து போர் புரிய வைக்கும் அளவு நரம்புகளை முறுக்கேற்றும்.வசனங்களும் அற்புதமாக இதற்கு இசையும்.
அதற்கு ஒத்துழைத்த அந்தக் குரலே மூலதனம்..
Quote:
8)அவர் மட்டுமே அந்த கணத்தில் முக்கியமானவர் என்று அந்த இருட்டின் கணங்களில் கட்டி வைக்கும் ஈர்ப்பு.
அதையும் தேவைப்படும் போது மட்டுமே வெளிப்படுத்துவார்.