மனக்கிலேசங்களுக்கும் - meaning ?????
Printable View
மனக்கிலேசங்களுக்கும் - meaning ?????
சஞ்சலங்கள்/குழப்பங்கள் என்று பொருள் கொள்ளலாம். Disturbance.
நன்றி அக்கா :DQuote:
Originally Posted by Shakthiprabha
கிலேசம் தமிழ்ச்சொல்லா ???
hw to pronounce it ? kilEsam or kilEcham ?
'k(i)lEsam'
I think its sanskrit :? not sure. Ive heard people using it.
April 22 nd
________
பசு ஒன்று நம் தொடரில் தலைகாட்டுகிறதே, கதையின் படி அதற்கு உடம்பு சுகமில்லை. அதனால் பிரயோஜனப்படாது எனத் தெரிந்து கசாப்பு கடைக்காரனிடம் விற்றுவிட எண்ணுகிறார் நீலகண்டன். அதற்கு மனம்வருந்தி தானே அப்பசுவை பராமரிக்க ஒப்புக்கொண்டு பணத்தை கொடுத்து விலைக்கு வாங்குகிறார் சாம்பு. அவர்க்கு பணம் கொடுத்து உதவுவது நாதன்.
பசுவை ஏன் உசத்தி வைத்திருக்கிறோம்? கோ-மாதா என்ற பெயரும் வழங்குவதுண்டு. பசு என்றால் சிறப்பு என்பதால், த்வாபர யுக முடிவில் அல்லலுற்ற பூமாதேவி தன் முறையீட்டை தெரிவிக்க இறைவனிடம் பசுவின் வடிவில் சென்றாளாம். பசு என்றால் என்ன சிறப்பு? நடைமுறை வாழ்வில் பசு என்ற பிராணி மட்டுமே பிறர்க்கு உதவும் பொருட்டு தன் செல்வத்தை செலவிடுகிறது. அதன் பால், நமக்கு பாலாய்-தயிராய்-வெண்ணையாய் நெய்யாய் உருக்கி பயன்பட உதவுகிறது. அதன் சாணம் கூட வீணாக்கப்படாமல் உபயோகிக்கப்படுகிறது. மேலும் தன் கன்றுக்கு பாலூட்டிய பின் பிறருக்கு பால்வழங்கும் ஜீவன் பசு. இப்படி சிறந்த குணங்கள் கொண்டதால் பசுவை உயர்வில் வைத்திருக்கிறோம்.
வாழை மரமும் என் நினைவில் வந்தது. வாழை தன்னை முழுமையாய் பிறர்க்கு தந்துதவும் தாவரம். அதனால் அதன் சிறப்பேற்றி, நல்ல சமய சந்தர்பங்களில் வாழையை நற்-சகுனம் அறிவிக்க பயன்படுத்துகிறோம். வாழையும் அதனுடைய தண்டு-நார்-பூ- பழம்-காய்-இலை முதற்கொண்டு தன்னை முழுமையாய் பிறர்க்கு அர்பணிக்கிறது.
வேம்புவின் மகள் ஜெயந்திக்கு வரன் அமைகிறது. ஆனால் ஈன்ற தாய் மட்டுமே பிராமண வகுப்பில் பிறந்தவள், அவள் கலப்புத் திருமணத்தில் ஈடுபட்டாலும் பிள்ளையை பிராமணனுக்குறிய பழக்கங்களுடன் வளர்த்திருக்கிறாள். தனக்கு வரும் மருமகளும் தான் பிறந்த வகுப்பை சேர்ந்தவளாக இருக்கவேண்டும் என்ற வைராக்கியம் கொண்டுள்ளாள். வெம்புவின் வீட்டில் அவரைத் தவிர அவர் மனைவிக்கும், அக்காளுக்கும் இச்சம்பந்தம் பிரியமாய்ப் படவில்லை. ஜெயந்திக்கு அந்தவீட்டுப் பையனை (கிரி) பிடித்திருக்கிறது.
பல வீடுகளில் நடக்கும் சம்பவம். மீண்டும் தலைப்புக்கே வருவோம். யார் பிராமணன்? பூணூல் போட்டால் அவன் பிராமணனா? பிராமண வகுப்பில் பிறந்ததால் மட்டும் அவன் பிராமணனா? பூணூல் என்பது அக்காலத்தில் மூன்று வர்ணத்தவரும் அணிந்து வந்தனர். மந்திரங்கள் மூன்று வகுப்பு மக்களும் சொல்லி வந்தனர்.
பிரமணீயம் பிறப்பாலல்ல தகுதியால் பெறப்படுவது. சத்யகாமன் என்பவனின் தாய் ஜபலா. அவள் பல இடங்களில் பலபேர்களின் சம்பந்தம் வைத்திருந்ததால், சத்யகாமன் யாருக்கு பிறந்தவன் என்று அவளால் கூற முடியவில்லை. சத்யகாமன் கௌதம முனிவரிடம் பாடம் பயில சென்ற போது அவன் பிறப்பைக் கேட்டு மற்ற மாணாக்கர்கள் எள்ளி நகையாடினர். ஆனால் கௌதமரோ "நீ உண்மையை பேசினாய். நீயே பிராமணன்" என்றார். பிராமணத்துவம் ஒரு தகுதி. தங்களின் நடத்தையால் எவரும் அதைப் பெறலாம்.
ஒரு முனிவன் தவத்திலிருக்கும் போது பறவை அவன் மேல் எச்சமிட்டுவிட்டது. அதனை கண்ணாலேயே சுட்டெரித்தார். அதன் பின் பிட்சைக்கு சென்ற இடத்தில், அவ்வீட்டுப்பெண்மணி, கணவனுக்கு பணிவிடை செய்த பின், பிட்சை இட்டாள். இவர் மீண்டும் முறைக்க "என்னையும் பறவை என்று நினைத்தாயோ" என்றாள் அவள் ("கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா") இதைக் கேட்டதும் ஆச்சரியமுற்று அவன் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம் என்றான். என் கணவனுக்கு பணிவிடை செய்வதே என் கடமை. நான் பத்தினி தர்மத்தை கடைபிடிக்கிறேன் என்றாள். தனக்கும் உபதேசம் செய்விக்க அவர் வேண்டுகோள்விடுக்க. "இன்ன ஊரில் ஒரு கசாப்பு கடைக்காரன் இருக்கிறான் அவனிடம் போய் பாடம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்கிறாள்.
அவன் பெயர் தர்மவியாசன். "ஒஹொ அந்த பெண் அனுப்பினாளா" என்று வந்த விஷயத்தை முன்னமே உணர்கிறான் அக்கடைக்காரன். எப்படி இந்த ஞானம் என முனிவன் கேட்க. "என் பெற்றோர்க்கு பணிவிடை செய்வதே சிறந்த தர்மம் என நான் கொண்டிருக்கிறேன்" என்கிறான்.
உடனே முனிவன் "நீ தான் பிராமணன்" என்று தெளிந்து அவனடியில் பாடம் பெறுகிறான்.
யார் பிராமணன் என்ற கேள்விக்கு தோராயமான விளக்கம் கிடைத்துவிட்டதாய் எண்ணி அடுத்த பகுதிக்கு செல்வோம்
(வளரும்)
April 23rd
________
இராமர் மிகுந்த விரக்தியின் விளிம்பில் புரியாது நின்ற போது வசிஷ்டர் அவருக்கு சில விளக்கங்களை வழங்கினார். அதன் சாராம்சம் "யோக வாசிஷ்டம்" என்ற நூலில் புனையபட்டிருக்கிறது என்பதை முன்னமே பார்த்தோம். முயற்சி பற்றி விளக்கும் போது,
"மனிதன் முயன்று கொண்டே இருக்க வேண்டும். எந்த நல்ல காரியத்திற்கும் மனம் சோர்ந்து விடாது, தளராது முயன்று கொண்டே இருக்க வேண்டும். முயன்றால் எதையும் சாதிக்கலாம். சிறு காரியங்கள் முதல் பெரிது வரை இடைவிடாது முயலும் போது தன்-முயற்சி சாதிக்காதது எதுவும் இல்லை" என்று அறிவுறுத்துகிறார்.
அப்படியெனில் முயற்சி ஒன்றே போதுமே, இறைவன் என்ற ஒன்று ஏன் தேவை? எதற்கு இருக்கிறது? - இது ராமன்
அதற்கு வசிஷ்டர் "முன் வினை கடுமையாய் இருக்கும் பட்சத்தில், முயற்சி வீணாகும் வாய்ப்பிருக்கிறது. அதனால் மேலும் மேலும் முயற்சி செய்துகொண்டிருக்க வேண்டும். முன்வினைப்பயன் நல்லதாக இருந்தால், அல்லது கடுமை குறைந்து இருந்தால், சிறு முயற்சியும் கைகூடும்." என்கிறார்.
முன்வினை என்பது தான் சிலருக்கு சிறுமுயற்சியின் அதிர்ஷ்டமும், வேறு சிலருக்கு பல முயன்றும் தோல்வியும் தோன்றக் காரண்மாய் உள்ளது.
Its all the question of balancing our account to reflect credit. Then we reap benefits. When there is neither debit or credit, (வினைகள் அற்றுவிடும் போது - (நல்ல வினையோ, தீவினையோ) we stand nil and hence merge with the supreme. (so they say)
நீலகண்டனின் உதவியுடன், 'மார்கபந்து' என்ற மனநிலை மருத்துவரிடம் அஷோக்கை பரிசீலனை செய்ய முடிவெடுக்கின்றனர். இதைத் தவிர இன்றைய பகுதியில் வலியுறுத்தி எழுதும் அளவு விஷயம் ஏதும் இல்லை.
(வளரும்)
April 24th
________
அஷோக் மருத்துவரை அணுக மறுக்கிறான். என் தேவை என்னவென்று எனக்குத் தானே தெரியும் என்று
மெதுவாக வாதிட்டும் கூட நாதனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. பாகவதரை விட்டு பேசச் சொல்லலாம் என்றால் இஷ்டமில்லை என்று அவரும் மறுத்துவிடுகிறார். அவர் நல்லது சொன்னாலுமே நாதன் தம்பதியர் மனம் இசையவில்லை. நமக்கு பிடிக்காததை நம் நன்மையைக் கருதி சொல்பவர்கள் அரிது என்று விபீஷணன் இராவணனிடம் மனமிசையாத விஷயத்தை பற்றி பேசும் போது கூறுகிறான். அப்படி சொல்பவர்கள் அரிது. அப்படி சொன்னாலும் அந்த அறிவுரையின் படி கேட்டு நடப்பவர்கள் இன்னும் அரிது என்பது வழக்கு.
கவனிக்கத் தக்க விஷயம் ஒன்று. நாதனுக்கு என்றைக்கும் இல்லாத பொல்லாத கோபம் வருத்தம் வருகிறது. பொதுவாகவே நம் கோபங்கள் ஆத்திரங்கள் எல்லாமே பிறரின் நன்மைக்காக வருபவை அல்ல. அதனால் அது நியாயமான கோபமாக இருப்பது அரிது. அஹங்காரத்தால் மட்டுமே கோபம் வரும் வாய்ப்பு அதிகம். இவர் ஏன் கோபப்படுகிறார். தன் மகன் வர மறுக்கிறான் என்ற வருத்தம் ஒருபுறமிருக்க...
1. இவனால் நான் படும் அவமானம் நிறைய
2. என் சொல் பேச்சை மதிக்க மறுக்கிறானே (அஹங்காரம்)
3. நாளை நான் நீலகண்டனுக்கு என்ன பதில் சொல்வேன். அவமானமாக ஆகிவிடுமே.
4. இவனுக்காக இன்னும் எத்தனை நாள் எனக்கு கஷ்டம்.
அஷோக்-கிற்காக அவர் படும் வருத்தமும், நியாயமான கோபமும் சிறிது இருந்தாலும், அதை மிஞ்சிவிடுகிறது, அவரின் சுயத்தை திருப்தி படுத்தாததால் அவர் கொள்ளும் கோபம்.
இன்னொருவரின் மேல் கோபம் ஏன் வருகிறது?
இவன், எனக்கு பெருமை சேர்க்கவில்லை. என்னை மதிக்கவில்லை. என் அஹத்தை புண் படுத்திவிட்டான்.
ஆக, முன்னே ஜம்-மென்று "என்" எனும் அஹங்காரமே வீற்றிருக்கிறது.
உபநிஷத் கூறும் விளக்கம் உண்டு. உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்படை.
ஒரு தாய் "இவன் என்னுடையவன், என் இரத்த்தில் ஜனித்தவன், என்னில் பாதி" என்று பிள்ளைகளிடம் அன்புற்றிருக்கிறாள்.
கணவன் மனைவியிடம், இவள் எனக்கு இல்லற சுகம் தருகிறாள். எனக்கு பிள்ளை பெற்று, என் தேவைகளை கவனிக்கிறாள் என்று அன்புற்றிருக்கிறான்.
மனைவி கணவனிடம் இவனால் எனக்கு பாதுகாப்பு, இருக்க இடம், உடை, உணவு எனக்கு இடுகிறான் என்று அன்புற்றிருக்கிறாள்.
இவை இல்லாமலேயே இன்னொரு ஜீவனிடம் "எனக்காக" என்ற எதிர்பார்ப்பு இன்றி அன்பு செலுத்தபடுவது மிகவும் அரிது.
ஆகவே, love has its selfish motive- மறுக்க முடியாத உண்மை.
(வளரும்)
//உலகில் அன்பு செலுத்துபவனுள்ளும் "தன்னுடைய" என்ற அஹங்காரமும், எண்ணமும், இருப்பதே அன்புக்கு அடிப்படை//
:bow: Superb ka... :bow:
நன்றி விராஜன், ஆனா :)
____
April 27th
_______
சாம்புவின் மனைவி செல்லம்மாள், அஷோக்கின் ஒப்புதல் பெற நீலகண்டன் மகள் உமாவை விட்டு பேசச் சொல்லுமாறு யோசனை கூறுகிறாள். அறிவுரைகள் / யோசனைகள் முவ்வகைப் படுமாம்.
1. ப்ரபு சம்ஹிதே:- அதாவது அரசன், எஜமானன் முதலியோரின் அறிவுரை, ஏறக்குறைய கட்டளை
2. சுகுருத் சம்ஹிதே:- நண்பனின் அறிவுரை. சக தோழன் கூறும் யோசனைகள்.
3. காந்தா சம்ஹிதே:- பெண் - சம வயதையொத்தவள்- பார்யை அல்லது மனைவி- தோழி - ப்ரியத்துடன் நேரம் பார்த்து, அஃதாவது இடம் பொருள் ஏவல் அறிந்து சொல்லப்படும் யோசனைகள்.
சமயோசிதமாக பெண்கள் செயல்படுவதால், சில நேரம் அவர்கள் கூறும் அறிவுரைகள் எடுபட்டுவிடும் வாய்ப்பு உண்டு.
குருவின் பெருமைகளை அருமைகளைப் பற்றி மீண்டும் சில கருத்துக்கள் கூறுகிறார் சோ. குரு என்பவன் உயர்ந்தவன். மேம்பட்ட தகுதிகள் உடையவனே குரு. கல்லூரி ஆசிரியர்கள், வித்தைகளை கற்றுவிப்பவர்களை குருவின் ஸ்தானத்தில் உயர்த்த தகுதியில்லை.
ஒரு முறை சிறந்த குரு ஒருவர் தம் சிஷ்யனுக்கு பரீட்சை வைத்தார். "நீ மாடும் மேயும் போது பாலைக் கறந்து உண்ணாதே" என்று உத்தரவிடுகிறார். அவன் பிட்சை எடுத்து உண்கிறான். "பிட்சை எடுக்காதே" என்கிறார். திடீரென ஒரு நாள் கிணற்றில் அவன் விழுந்துவிட்ட செய்தி எட்டுகிறது. "உங்கள் ஆணைப்படி நான் பிட்சை எடுக்காமல், எருக்கம்பூவை உண்டு வந்தேன், அதனால் என் பார்வை குன்றிவிட்டது, கண் தெரியாது கிணற்றுள் விழுந்து விட்டேன்" என்றான். எப்பேற்பட்ட குரு பக்தி! என்று மெச்சி, அவனுக்காக அஸ்வினி தேவர்களிடம் வேண்டி பார்வை மீட்டுத் தந்து பின் ஞானமும் உபதேசித்தார்.
குருபக்தி என்பது அப்பேற்பட்ட விஷயம். அப்படிப்பட்டனை குருவாக கொண்டதால் அந்த பக்தி தலை சிறந்து விளங்கியது. இங்கு குருவும் உயர்ந்தவராய் இருத்தல் மிக அவசியம். உண்மையான குருவின் ஞானம் சிஷ்யனின் பக்தியுடன் சேரும்போது ஜொலிக்கிறது. குருவிற்கு சிஷுருஷை செய்து ஞானம் பெற்றுக்கொள்ள வேண்டும். குருவின் பால் பக்தி இருத்தல் வேண்டும். குரு என்பவன் சிறந்த "ஞானி" ஆக இருத்தல் அவசியம்.
உத்தாலகன் என்பவன் குருவின் ஆணைப்படி வெள்ளம் கரைபுரண்டு கிராமத்தை அழிக்காமல் இருக்க, தன் உடலைக் கொண்டு அணைக்கட்டுகிறான். (casabianca :???!!) அப்படிப்பட்ட குருபக்தியை மெச்சி அவனுக்கு ஞானம் புகட்டுகிறார் குரு.
மாதா-பிதா-குரு-தெய்வம் என்ற வரிசைக் கிரமத்திற்கு,
ஒருவன் மாதா-பிதா ஆகியவருடன், குருவின் துணை கொண்டு, ஞானமெய்தி இறைவனின் ஷரண் புகுகிறான் என்ற விளக்கமும் உண்டு.
(வளரும்)
SP :)
what you have narrated about other jeevans, so called animals, is absolutely true. I have come across people who can converse with them eg, elephants in temples and i was amazed by the way the elephants respond also. I am reminded of Shri Mahalinga swamy temple of Thiruvidaimarudur.
nammaku oru vishayam puriyalenna, athu illave illanu solrathum, athai kindal panrathum, inraya nadaimurai.