https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...67&oe=5AD1658B
courtesy .nadigarthjlagam fans
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...67&oe=5AD1658B
courtesy .nadigarthjlagam fans
Murali Srinivas
ஊட்டி வரை உறவு பொன்விழா
1967ம் ஆண்டு நவம்பர் 1ந் தேதி. தமிழ் சினிமா சரித்திரத்திலேயே முதன் முறையாக ஒரே நாளில் வெளியான ஒரே ஹீரோவின் இரண்டு படங்கள் 100 நாட்கள் ஓடிய சாதனை நிகழ்த்திய படங்கள் வெளியான நாள். அந்த இரண்டு படங்களும் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா கொண்டாடும் இந்த வேளையில் இவ்விரண்டு படங்களின் பொன்விழா கொண்டாட்டம் நமது NT Fans அமைப்பின் சார்பாக கொண்டாடப்பட்டது. சென்ற அக்டோபர் மாதம் 22ந் தேதி இரு மலர்கள் படத்தின் பொன்விழா நடைபெற்றது. ஊட்டி வரை உறவு படத்தின் பொன்விழா நிகழ்வை இரண்டு நாட்களுக்கு முன் நவம்பர் 26 அன்று ரஷியன் கலாச்சார மையத்தில் நடத்தினோம்.
இது வரை நாம் திரையிட்ட பெரும்பாலான படங்களை விட ஊட்டி வரை உறவு படத்தில் பணியாற்றியவர்கள் பங்கு பெற்றவர்கள் அதிகமாக நம்மிடையே இருப்பது ஒரு சந்தோசம் என்றே சொல்ல வேண்டும். இந்த விழாவின் ஆரம்ப வித்தே இந்த வருடம் ஜனவரி மாதமே விழுந்து விட்டது. 2017 ஜனவரியில் நமது டார்லிங் இயக்குனர் திரு சிவிஆர் அவர்களுக்கு அவரின் 50 ஆண்டு கலைத்துறை சேவையை பாராட்டி ஒரு விழா எடுத்தோம். அதில் மனம் நெகிழ்ந்த சிவிஆர் நான் இந்த அமைப்பிற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று கேட்க நாம் இந்த ஊட்டி வரை உறவு படத்தின் பொன்விழா வருகிறது. அதை நாம் கொண்டாட நீங்கள் உறுதுணையாக இருங்கள் என கேட்டுக் கொண்டோம். அந்த படத்தில் அஸோஸியேட் டைரக்டர் சிவிஆர்தான். ஆக அப்போதே இதற்கான முயற்சிகள் தொடங்கி விட்டன. நாம் முதலில் தொடர்பு கொண்டது சச்சு அவர்களைத்தான். அவர் உடனே ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் அவரே போன் செய்து சொல்லிவிட்டார். அதிலும் குறிப்பாக சென்னையில் வசிக்கும் திருமதி எல்.விஜயலட்சுமியின் சகோதரர் தொலைபேசி எண்ணை நமக்கு கொடுத்தார். அவர்களை தொடர்பு கொண்டு எல்.விஜயலட்சுமியின் அமெரிக்கா தொடர்பு எண் வாங்கி அவர்களிடம் தொடர்பு கொண்டோம். இதற்கு அமெரிக்காவில் வசிக்கும் நமது நண்பர் ராஜேஷ் உதவி செய்தார். எல்விஜி அவர்கள் தான் அக்டோபர் மாதமே இந்தியா வருவதாக நம்மிடம் தகவல் சொன்னார். அவரது கணவரின் குடும்பத்தினர் கல்கத்தாவில் வசிப்பதாகவும் அங்கே ஒரு மாதம் தங்க போவதாகவும் சொன்னவர் நிகழ்ச்சிக்கு வருவதாக முயற்சி செய்வதாக சொன்னார். அதன் பிறகு நவம்பர் 25,26 தேதிகளில் கல்கத்தாவில் ஒரு முக்கியமான வேலை இருப்பதால் அவரால் வர இயலாத சூழலை வருத்தத்துடன் தெரிவித்த அவர் சென்னை வரும்போது நிச்சயம் சந்திப்பதாக சொன்னார்.
புன்னகை அரசி இந்த மாதம் முழுக்க திருவனந்தபுரத்தில் மலையாள சீரியல் படப்பிடிப்பில் இருப்பதாகவும் 24-ந் தேதி சென்னை வந்துவிடுவதாகவும் சொன்னார். அது போல் சுசீலாம்மாவும் வருவதாக சொன்னார். கோபு அவர்கள் மிகுந்த மகிழ்வோடு வருவதாக ஒப்புக் கொண்டார். திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர்களையும் திரு ஸ்ரீதர் அவர்களின் மகன் திரு சஞ்சய் ஸ்ரீதர் அவர்களையும் அவரது வீட்டில் சென்று சந்தித்து அழைத்தோம். திரு ஜூனியர் பாலையா, திரு ஆனந்த் பாபு அவர்களை தொடர்பு கொள்ள சச்சு அவர்கள் பெரிய அளவில் உதவி செய்தார்கள். திருமதி சுந்தரிபாயின் மகன் திரு முரளிகிருஷ்ணன் அவர்களை அழைக்க நமது உறுப்பினரும் திரு கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியாருமான திருமதி லலிதா சபாபதி உதவி செய்தார். திரு எம்எஸ்வி கோபி அவர்களையும், திரு டிஎம்எஸ் பால்ராஜ் அவர்களையும், திரு பிபிஎஸ் Phannindar அவர்களையும் அழைத்தோம். திரு கார்த்திக் அவர்களையும் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னோம். இதை தவிர ஸ்டில்ஸ் திருச்சி ஆனாரூனா அவர்களின் குமாரர் திரு ரமேஷ்குமார் அவர்களையும் அழைத்திருந்தோம். படத்தின் தயாரிப்பாளர் திரு கோவை செழியன் அவர்களின் இளைய மகன் திரு கபிலன் செழியன் அவர்களையும் நேரில் சென்று அழைத்தோம்.
விழாவிற்கு முந்தைய ஒரு வாரம் வரை ஏன் முதல் தினம் வரை வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. விழாவன்று அதிகாலை முதல் மழை. விழாவைப் பற்றிய சிறு குறிப்பு தினசரி பத்திரிக்கைகளில் வந்தால் விழாவைப் பற்றிய செய்தி பரவலாக மக்களை சென்றடைய உதவியாக இருக்கும் என்பதனால் நமக்கு தெரிந்த நண்பர்கள் மூலமாக Hindu, Times of India, Indian Express மற்றும் DT Next ஆகிய இதழ்களில் செய்தி போடுவதற்கு சொல்லியிருந்தோம். ஆனால் நம்முடைய துரதிர்ஷ்டம், ஞாயிறு பதிப்புகளில் இடமில்லாத காரணத்தினால் எந்த பத்திரிக்கையிலும் செய்தி வரவில்லை. வரும் என்று நினைத்திருந்தோமே வரவில்லையே என்ற வருத்தமும் மழை ஏற்படுத்திய கவலையும் மனதில் சற்றே கேள்விக்குறிகளை விதைக்க, ஆங்கிலத்தில் keeping the fingers crossed என்பார்களே அது போல் மாலை நிகழ்வு பற்றிய எதிர்பார்ப்புகளோடு காத்திருக்க ------
(தொடரும்)
அன்புடன்
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...da&oe=5AD1FC83
Jahir hussain
காமராஜர் மீது சிவாஜி அவர்கள் அளவுகடந்த மரியாதையும் பக்தியும் கொண்டிருந்தார். அதற்கு உதாரணமாக ஒரு சிறிய சம்பவம்..இருவருக்கும் அப்பா மகன் உறவு போல அப்படி ஒரு பிணைப்பு. எப்போதெல்லாம் ஒய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் காமராஜரைத் தேடி சிவாஜி சென்று நலம் விசாரிப்பார்.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு முறை சிவாஜி, “நான் நடித்த படங்களைக் கூட காண வருவதில்லையே? என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா?.என்று ஆதங்கத்துடன் கேட்டாராம்.
... அதற்கு சிரித்தபடியே காமராஜர் சொன்னாராம்.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் கணேசா.. ஏனென்றால் உனக்கு வெளியில் நடிக்கத் தெரியாது ஆனால் பெரும்பாலும் நடிகர்கள் சினிமாவுலேயும் நடிக்கிறார்கள் வெளியிலேயும் நடிக்கிறார்கள் யாரை நம்புவது என்று தெரியவில்லை. "கதை எழுதுகிறவங்களும் நடிக் கிறாங்க..”
“சினிமா கொட்டகைக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு.. ஹரிச்சந்திரா நாடகம் பார்த்ததோட சரி..! கொட்டகைல உட்கார்ந்து சினிமா பார்க்கிற நேரத்துல நாலு பைல் பார்த்தால் மக்களுக்கு பிரயோஜனப்படும். நீ நடிகனாக இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும் கவலைப்படாதே போ.. என்று கூறி வழியனுப்பி வைத்தாராம். தான் ஏற்றுக் கொண்ட தலைவர் தன்னை எந்த அளவுக்கு மனதில் வைத்திருக்கிறார் என்கிற ஆதங்கம் நம்மவர் மனதில் இருந்து இருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்டிருப்பார்... நாடே போற்றும் நெ1. திரைப்பட நடிகர் என்கிற எண்ணம் துளியும் இன்றி கோவிலில் உள்ள தெய்வத்திடம் சாதாரண மனிதன் ஒருவன் வேண்டுகோள் வைப்பதைப் போல் அல்லவா இருந்தது... பெருந்தலைவருக்கும் அவர்தம் பெருந் தொண்டருக்கும் இடையில் உள்ள உறவு நெகிழ்ச்சியான உறவு அல்லவா? இது...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b6&oe=5A939BC3
அற்புத நடிகரின்டிசம்பர் மாதவெளியீடுகள்
1) மனிதனும் மிருகமும் 4 டிசம்பர் 1953
2) பாட்டும் பரதமும் 6 டிசம்பர் 1975
3) நீதி 7 டிசம்பர் 1972
4) மனிதரில் மாணிக்கம் 7 டிசம்பர் 1973
5) வெற்றிக்கு ஒருவன் 8 டிசம்பர் 1979
6) எதிர்பாராதது 9 டிசம்பர் 1954
7) நீலவானம் 10 டிசம்பர் 1965
8) நெஞ்சங்கள் 10 டிசம்பர் 1979
9) மண்ணுக்குள் வைரம் 12 டிசம்பர் 1986
10) புதியவானம் 12 டிசம்பர் 1988
11) ஜஸ்டிஸ் கோபிநாத் 16 டிசம்பர் 1978
12) ராஜபார்ட் ரங்கதுரை 22 டிசம்பர் 1973
13) ரோஜாவின் ராஜா 25 டிசம்பர் 1976
14) பணம் 27 டிசம்பர் 1952
15) பாக்கியவதி 27 டிசம்பர் 1957
) 16) விடிவெள்ளி 31 டிசம்பர் 1960
Murali Srinivas
ஊட்டி வரை உறவு பொன்விழா - Part II
விழாவன்று காலையில் பெய்த மழை பத்து மணிக்கு மேல் ஓய, வானம் மேகமூட்டமாக இருந்தபோதிலும் விழா ஆரம்பித்து இரண்டு மணி நேரம் வரைக்கும் மழை பெய்யாமல் இருந்தது ஒரு மிக பெரிய சந்தோஷமாக இருந்தது. எப்படி ஊட்டி வரை உறவு படப்பிடிப்பிற்கு வருண பகவான் பல முறை தடங்கலாக இருந்து பின் உதவி செய்தாரோ அதே போல் அந்த படத்தின் பொன்விழா கொண்டாட்டத்திற்கும் உதவி செய்தார் என்றே எடுத்துக் கொண்டோம்.
விழாவிற்கு முதலில் வந்தவர் திரு கோபு அவர்கள். தன் மகன் ஸ்ரீராமோடு (சித்ராலயா ஸ்ரீராம் என்ற பெயரில் நாடகங்கள் எழுதுபவர்) வந்தார். தொடர்ந்து சிவிஆர் வந்தார். அவர் பின்னாலேயே திருமதி தேவசேனா ஸ்ரீதர் அவர் மகன் சஞ்சய் ஆகியோர் வந்தனர். பிறகு திரு ஆனந்த்பாபு, ஜூனியர் பாலையா, குமாரி சச்சு ஆகியோர் வருகை புரிய இதற்கிடையே நமது உறுப்பினர்களும், பொதுமக்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். நாம் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்திருந்த திரு ரமேஷ்கண்ணா, திரு சித்ரா லட்சுமணன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர். திருமதி கே.ஆர்.விஜயா அவர்கள் வந்து கொண்டேயிருப்பதாக அலைபேசியில் தகவல் சொன்னார். அப்போது சுசீலாம்மா வீட்டில் இருந்து அழைப்பு. விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்றிருந்த சுசீலாம்மா அங்கே கலந்து கொண்ட ஒரு விழாவில் கால் சற்றே பிசகியதால் வலியால் அவதிப்படுவதாகவும் தகவல் சொன்னார்கள்.
சற்றே ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும் அவர் உடல் நலம் பெற வாழ்த்தினோம். (அவரது தோழியார் மறுநாள் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்) இதற்கிடையே திருமதி சுந்தரிபாயின் புதல்வர் திரு முரளிகிருஷ்ணனும் வந்து விட்டார். விழா ஆரம்பிக்கும் நேரம் விஜயாவும் வந்து விட்டார். நமது விழாக்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் திருமதி AL S ஜெயந்தி கண்ணப்பன் அவர்களும் வந்தார். அவருடன் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் திரு விக்ரமன் அவர்களின் மனைவியார் திருமதி ஜெயப்ரியாவும் கலந்து கொண்டார். நாம் விருந்தினர்களை வரவேற்க வாசலில் காத்து நின்றபோது நம்முடைய அமைப்பின் துணைத்தலைவர்கள் திரு மோகன்ராம் அவர்களும் திரு ஆடிட்டர் ஸ்ரீதர் அவர்களும் விழா அரங்கில் வந்திருந்த விருந்தினர்களுடன் அளவளாவி அவர்களை comfortable ஆக இருக்க வைத்தனர்.
முதலில் வரவேற்புரையை நான் துவக்கினேன்.
இந்த விழா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கினேன்.
பல கலைஞர்கள் வந்ததால் மட்டும் இந்த விழா சிறப்பு பெறவில்லை. இந்த திரைப்படம் தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு சாதனை புரிந்த படம் என்பதை குறிப்பிட்டேன்.
ஒரே நாளில் ஒரு ஹீரோவின் இரண்டு படங்கள் வெளியாவது எனபதை நடிகர் திலகம் மட்டுமே செய்திருக்கிறார். 1954 ஏப்ரல் 13 அன்று வெளியான அந்த நாள் மற்றும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி முதல் 1987 ஆகஸ்ட் 28 அன்று வெளியான ஜல்லிக்கட்டு மற்றும் கிருஷ்ணன் வந்தான் வரை 34 வருடங்களில் 17 முறை இது நடைபெற்றிருக்கிறது. 34 படங்களில் 15 படங்கள் 100 நாட்களும் அதற்கு மேலும் ஓடியிருக்கின்றன. அவற்றுக்கு சிகரம் வைத்தாற் போல் 1967 நவம்பர் 1 தீபாவளியன்று வெளியான இரு மலர்களும் ஊட்டி வரை உறவும் 100 நாட்கள் ஓடி தமிழ் சினிமா சரித்திரத்திலேயே ஒரு முதன் முதல் சாதனை படைத்தது என்பதை அவையோருக்கு சொன்ன நான், கேஸீ பிலிம்ஸ் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு கோவை செழியன் முதன் முதலாக தயாரித்த படம் எனபதையும் முதலில் வயது 18 ஜாக்கிரதை என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின் காலமெல்லாம் காத்திருப்பேன் என்று பெயர் மாறியதையும் அதன் பின் ஊட்டி வரை உறவு ஆன கதையையும் சுருக்கமாக கூறினேன். படத்தின் வெற்றிக்கு மெல்லிசை மன்னர் அவர்களின் இசையும், டிஎம்எஸ், சுசீலா, பிபிஎஸ் மற்றும் ஈஸ்வரி அவர்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பிட்டேன்.
பின் விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடையேறினர்.
முதலில் சச்சு அவர்கள் பேச வந்தார். இந்த விழாவிற்கு வந்ததில் மிகுந்த சந்தோசம் என்று குறிப்பிட்ட அவர் ஒரு பழைய படத்தின் விழாவிற்கு அரங்கு நிறைந்திருப்பதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்றார்.
படத்தில் நடித்தது ஒரு குடும்பமாக பழகியது போல என்றும் நகைச்சுவை காட்சிகள் இரண்டு மூன்று டேக் வாங்கியது என்றும் அதற்கு காரணம் ஸ்ரீதர் அவர்களே சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விடுவார் என்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு மற்றும் சிவந்த மண் போன்ற ஸ்ரீதர் படங்களில் தான் பங்கு பெற்றது மறக்க முடியாது என்றார். நடிகர் திலகம்,பாலையா நாகேஷ் மற்றும் விஜயா அவர்களுடன் நடித்ததை மறக்கவே முடியாது என்றார். இறுதியாக இந்த விழாவை பார்க்கும்போது இது படம் வெளியாகி 50 வருடம் ஆன விழா போல் தெரியவில்லை என்றும் ஏதோ படத்தின் 100வது நாள் விழா போல் இருக்கிறது என்றும் கூறி விடை பெற்றார்.
ஜூனியர் பாலையா பேச வந்தார். சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். மாபெரும் கலைஞர்கள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு மாபெரும் திரைப்படத்தை அது பொன்விழா கொண்டாடும் நேரத்தில் அதில் கலந்து கொள்ளும் பாக்கியம் தனக்கு கிடைத்திருப்பது பெருமையாக இருக்கிறது என்றார். அன்றைய படங்கள்தான் படங்கள் என்பதை குறிப்பிட்ட அவர் இப்போதும் தன் தந்தை மற்றும் நடிகர் திலகம் போன்ற நடிகர்கள் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டார். காதலிக்க நேரமில்லை ஊட்டி வரை உறவு போன்ற படங்கள் ஸ்ரீதர் புகழை என்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்றார். தன்னை அழைத்ததற்கு நன்றி கூறி விடை பெற்றார்.
அடுத்து ஆனந்த்பாபு. மிக தெளிவாக பேசினார். நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் தன் தந்தை நாகேஷ் என்றும் அந்த பெருமையை தனக்கு வாங்கி தந்த அவரை வணங்குகிறேன் என்றார். இந்த படத்தின் பாடல்களை மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டவர் பூமாலையில் ஓர் மல்லிகை பாடலின் ஆரம்ப ஹம்மிங்கை அசத்தலாக பாடினார். சிவாஜி சார் ஸ்டைல், அவர் நடிப்பு எல்லாம் பிரமாதமாக இருக்கும் என்றார். ஸ்ரீதர் போன்ற ஒரு டைரக்டரை மறக்கவே முடியாது என்றும் சொன்னார். தன்னை அழைத்ததற்கு நன்றி கூறி விடை பெற்றார்.
திருமதி சுந்தரிபாயின் புதல்வர் திரு முரளிகிருஷ்ணன் பேச வந்தார். இந்த படத்தை பற்றி தன் தாயார் தன்னிடம் நிறைய சொல்லியிருப்பதாக சொன்னவர் இந்த படத்தை 18 முறை பார்த்திருப்பதாகவும் பெரும்பாலான வசனங்கள் மனப்பாடமாக தெரியும் என்றார். இந்த படமும் அந்த வசனங்களும் என்றும் சலிப்பதில்லை என்று சொன்னவர் இது போன்ற விழாவில் தன்னை அழைத்து மரியாதை செலுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு விடை பெற்றார்.
பின் வந்தார் சித்ரா லட்சுமணன். ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்தார். எல்லா நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதையோ ஒன்றை எதிர்பார்த்துதான் அவன் ரசிகனாக இருக்கின்றான். ஆனால் எந்த வித எதிர்பார்ப்புமின்றி ரசிகர்கள் அன்று முதல் இன்று வரை இருக்கிறார்கள் என்று சொன்னால் அது சிவாஜிக்கு மட்டும்தான் என்றபோது அரங்கமே ஆர்ப்பரித்தது. திரு முரளிகிருஷ்ணன் சொன்ன 18 முறை பார்த்தேன் என்ற விஷயத்தை குறிப்பிட்டு அதெல்லாம் ஒண்ணுமேயில்லை. 100, 150 முறை சர்வ சாதாரணமாக பார்த்தவனெல்லாம் இருக்கான். ஒரு சிலர் எல்லாம் எத்தனை முறை பார்த்தங்கற கணக்கே வச்சுக்கறேதேயில்லை என்றார். அன்றைய ஆர்ட்டிஸ்ட் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் போன்று இன்று யாருமில்லை என்றும் இன்றைய சினிமாவின் நிலைமை சரியில்லை என்றும் சொன்னார். இது போன்ற விழாக்கள் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் தான் கலந்து கொண்டதில் மிகுந்த சந்தோசம் அடைவதாகவும் சொல்லி நிறைவு செய்தார்.
அடுத்து ரமேஷ்கண்ணா. இந்த விழாவில் தன்னை பார்ப்பவர்களுக்கு இவர் எதற்கு வந்தார் என்று தோன்றும் என்றும் நம்மையெல்லாம் இணைத்தது நடிகர் திலகம்தான் என்றும் ஒரு ரசிகனாக கலந்து கொள்வதில் பெருமைபடுகிறேன் என்றார். நான் அவரை ஒவ்வொரு மாதமும் நடைபெறும் விழாவிற்கு அழைப்பதையும் இந்த விழாவிற்குத்தான் வர முடிந்ததையும் சொல்லி அதற்கு நன்றி சொன்னார்.அவரும் திரு முரளி குறிப்பிட்ட 18 முறை பார்த்ததை சொல்லி தான் எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கே கிடையாது என்றும் நிச்சயமாக 100 தடவைக்கு மேல் இருக்கும் என்றவர் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அனைத்து வசனங்களும் மனப்பாடம் என்றார்.
கோபு போன்ற ஒரு நகைச்சுவை எழுத்தாளரை தமிழ் சினிமா பார்த்ததில்லை என்றும் தான் உட்பட பலரும் கோபுவின் வசனங்களைத்தான் அப்படி இப்படி மாற்றி போட்டு கைதட்டல் வாங்குகிறோம் என்றார். உதாரணத்திற்கு ஊட்டி வரை உறவு படத்தில் செந்தாமரையை நாகேஷ் அவன் என்று சச்சுவிடம் சொல்லும் காட்சியை குறிப்பிட்டு செந்தாமரை முறைத்தவுடன் அவர் என்று மாற்றும் வசனத்தை குறிப்பிட்டு இப்போது தான் எழுதிக் கொண்டிருக்கும் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் இதே டெக்னிகை தான் follow செய்திருப்பதாகவும் அதை சொல்வதில் தனக்கு வெட்கமில்லை என்றும் சொன்னார்.
தனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் ஸ்ரீதர் என்ற ரமேஷ்கண்ணா தன் குருநாதர் இயக்குனர் விக்ரமன் அவர்களிடம் எப்போதும் ஸ்ரீதர் பற்றியும் அவரது படங்கள் பற்றியுமே பேசிக் கொண்டிருப்பேன் என்று குறிப்பிடவர் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த திருமதி ஜெயப்ரியா விக்ரமன் அவர்களை பார்த்து அவருக்கே இது பற்றி நன்றாக தெரியும் என்று குறிப்பிட்டார். திரைப்படத்துறைக்கு வரும் முன் புன்னகை அரசி அவர்களை ஒரு முறையேனும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய காலம் இருந்தது. இன்று மேடையில் அவர் அருகிலே அமரும் பாக்கியம் கிடைத்தது என்றும் நெகிழ்ந்தார். படம் பார்க்க மற்றவர்களை போலவே ஆவலாக இருப்பதாகவும் ஆகவே பேச்சை இத்துடன் முடித்துக் கொள்வதாக சொல்லி விடை பெற்றார்.
படத்தில் பங்கு பெற்றவர்கள் மற்றும் வாரிசுகளுக்கு படத்தின் 50ம் ஆண்டு பொன்விழா நினைவு பரிசு வழங்கப்பட்டது. சித்ரா லட்சுமணன் மற்றும் ரமேஷ்கண்ணா அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
கேஆர் விஜயா, கோபு மற்றும் சிவிஆர் பேச்சு ---
(தொடரும்)
அன்புடன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...22&oe=5AD67CB0
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b2&oe=5A891754
Vasu Devan
'பொட்டு வைத்த முகமோ' (ஒரு முழு ஆய்வு)
'சுமதி என் சுந்தரி'
தமிழ்த் திரையுலக பாடல்கள் வரலாற்றையே புரட்டிப் போட்ட பாடல். திரு எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், ஜெமனி, சிவக்குமார் என்று SPB பலருக்கும் பாடிக் கொண்டிருந்த சமயத்தில் 1971-ல் இளைஞர்களின் கனவுப் படமாக வந்து இளமை விதையைத் தூவி அனைவர் நெஞ்சிலும் புதுமைக் காதல் பயிர் வளர புது வழி காட்டிய புத்துணர்வுப் படமான 'சுமதி என் சுந்தரி' படத்தில் முதன் முதலாக நடிகர் திலகத்திற்குப் SPB பாடி, தான் பாடிய அத்தனைப் பாடல்களையும் தானே முந்திச் சென்று 'பொட்டு வைத்த முகமோ' மூலம் எவருமே முந்த முடியாத முதல் இடத்தைப் பெற்றார்.
இதற்கு SPB மட்டுமே காரணமல்ல. இதுவரை பாலா பாடிய பாடல்களின் மகத்துவமான வெற்றிக்கு அவரே முழுக் காரணம். ஆனால் 'பொட்டு வைத்த முகமோ' வெற்றிக்கு அவரால் அப்படி முழுக் காரணமாக முடியவில்லை. காரணம் 'நடிகர் திலகம்' என்ற ஜெயின்ட். அதை மீறி யாருமே ஒன்றுமே செய்ய முடியாது. டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரலிலேயே நடிகர் திலகத்தைப் பார்த்துப் பழகிப் போன நமக்கு டோட்டலாக மாறுதலுடன் இளமை பொங்கும் SPB வாய்ஸுடன் அவர் இப்பாடலுக்கு மிகப் பொருத்தமாக நடித்திருப்பதை இன்று பார்க்கும் போதும் மிரட்சி அடங்கியபாடில்லை. நடிகனுக்காக பாடகனா? இல்லை பாடகனுக்காக நடிகனா? நடிகனுக்காக பாடகன் என்றால் பலர் இருக்கிறார்கள். ஜெமினிக்கு பி.பி.எஸ், எ.எம்.ராஜா. அத்தனை ஹீரோக்களுக்கும் பொதுவாக பாடகர் திலகம், தங்கவேலுவுக்கு எஸ்.சி.கிருஷ்ணன், நாகேஷுக்கு ஏ.எல்.ராகவன் இப்படி. பாடகனுக்காக நடிகனா என்றால் அதுவும் என்னால் முடியும் இதுவும் என்னால் முடியும் என்று சூளுரைக்க சூரக்கோட்டையாரைத் தவிர வேறு ஒருவரை நினைத்துப் பார்க்க முடியாது.
1971-லோ நடிகர் திலகம் உடல் வனப்பில் உச்சம் தொட்டிருந்தார். வாளிப்பான உடல். 43 வயது. தோற்றமோ இருபது வயது வாலிபன் போல. கல்லூரிக் கட்டிளங் காளை போல. இத்தனைக்கும் மேக்-அப் ஹெவி எல்லாம் கிடையாது. அதனால் SPB க்கு மிக மிக வாட்டமாகப் போயிற்று. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி, மோத்தி, பி.பி.எஸ், சௌந்தர்ராஜன் என்று பாத்திர வார்ப்புகளுக்கு ஏற்ப பலர் நடிகர் திலகத்திற்கு பாடினாலும் பாடகர் திலகமே பின்னால் நடிகர் திலகத்தின் குரலாக பாடல்களில் முழு ஆக்கிரமிப்பு செய்து விட்டார்.
இப்போது அப்படியே ஒரு சேன்ஜ். இளமை பொங்கும் கலைக்குரிசிலும், கலைச்செல்வியும் ஜோடி. இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைக் காடுகளின், மலைகளின் சரிவுப் பாதைகள் நடுவே ரசமான பாடல். அடித்தது யோகம் SPB க்கு. எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பாடி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தாகி விட்டது. மற்ற துண்டு துக்கடாக்களுக்கும் பாடி ஓகே ஆகி விட்டது. இப்போது நடிப்பின் இமயத்திற்கு பாடி அதுவரை 'தொட்டபெட்டா' தொட்டிருந்தவர் 'எவரெஸ்ட்'டில் ஏறி அமர்ந்து விட்டார். அமர்ந்தவர் அமர்ந்தவர்தான். கீழே இறங்கவே இல்லை.
சரி வருமா, குரல் பொருந்துமா என்ற சந்தேகங்கள் எல்லோருக்கும் SPB உட்பட. திலகத்திற்கோ தன் திறமை மேல் எப்போதுமே திடமான நம்பிக்கை. பயத்தில் SPB புலம்ப 'பாலு...நீ பாடு... மற்றதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சர்வ அலட்சியமாக நடிப்பின் சர்வாதிகாரி சொல்ல, தைரியம் வரவழைத்து அற்புதமாக பாடி முடித்து விட்டார் பாலா. இப்போது ரிசல்ட்டுக்காக வெயிட்டிங்.
இப்போது நடிகர் திலகத்தின் டர்ன். பாட்டை முழுவதும் கேட்டு உள்வாங்கியாகி விட்டது. கொஞ்சம் வழக்கத்தை விட கவனமாக. தான் நடிகர் திலகம் இல்லை.. 'சுமதி என் சுந்தரி' படத்தின் சுந்தர ஹீரோ...இளம் நாயகன். உடன் அழகு நாயகி. அது மட்டுமே. பாடகர் திலகத்தின் குரலுக்கு வாயசைத்து அசைத்து பழகி ஆகி விட்டது. இப்போது வேறு ஒரு இளைஞன் பாடுகிறான். அதற்கேற்ற மாதிரி வாயசைக்க வேண்டும்.அவ்வளவுதானே ! ஜூஜுபி.ஊதித் தள்ளி நடித்தாகி விட்டது. பாடலை பார் புகழ ஹிட் ஆக்கியும் கொடுத்தாகி விட்டது.
ரிசல்ட் என்ன! பாலா எவருமே தொட முடியாத புகழை இந்த ஒரு பாடல் மூலம் பெற்று விட்டார் நடிகர் திலகத்தின் வாயசைப்பு மூலமாக. அது போல தன்னுடைய அசாத்திய திறமை மூலமும். நடிப்பின் சமுத்திரமும், பாடல் கடலும் ஒன்று சேர்ந்து ஒரு இசைப் பிரளயத்தையே நடத்தி முடித்து விட்டன எம்.எஸ்.வி என்ற இன்னொரு இசைக் கடல் இணைவின் மூலம்.
மிக உற்சாகமாக ஆரம்பிக்கும் இசை. புள்ளி மானைப் போல மலைப் பாதைகளுக்கு இடையில் கலைச்செல்வி துள்ளி ஓடி வர, வெகு இயல்பாக 'நடிகர் திலகம்' நடந்து வந்து செடியிலிருந்து இலை கிள்ளிப் போட, அந்த நான்கு நிமிடப் பாடல் நான்கு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாதது. ஒரு காலை மடக்கி ஸைடில் நிற்கும் போஸாகட்டும்...அல்லது பேன்ட்டின் முன்னிரண்டு பக்க பாக்கெட்டுகளில் கட்டை விரல் கொடுத்து கொக்கி போட்டு, இடுப்பொடித்து நிற்கும் அழகாகட்டும்... வலதுகாலை டைட் செய்து, இடது கால் மடக்கி உயரே செல்வி இருக்க, சரிவில் நின்றபடி 'பொட்டு வைத்த முகமோ' பாடல் தொடங்கும் போதே தியேட்டர் ஓனர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முடித்திருப்பார். வெளிர் நீல டைட் பேண்ட்டும், ஜவுளிக் கடைகளின் வெளியே அப்போதெல்லாம் விளம்பரத்திற்கு வைக்கப்பட்டு 'சுமதி என் சுந்தரி ஷர்ட்' என்று அமோக விற்பனை ஆன அந்தப் பெரிய செக்டு ஷர்ட்டும் அணிந்து ஏதோ பத்தாம் வகுப்பு பையனைப் போல ஆச்சர்யம் வரவழைக்க நடிகர் திலகத்தை விட்டால் வேறு யார்?
'தரையோடு வானம்' என்று கலைச்செல்வியின் ஒரு கை பிடித்து, இன்னொரு கையை வானம் நோக்கி உயர்த்தையிலே திரையரங்குகளின் கூரைகள் நொறுங்குமல்லவா? படத்தின் போஸ்டர்கள் இந்தப் போஸைத்தானே தாங்கி நிற்கும்! கை தூக்கி இடையொடித்து செல்வி நிற்கையிலே அவர் இடையின்மீது ஒரு கை வைத்து ('இடையோடு பார்த்தேன்.... விலையாகக் கேட்டேன்') இன்னொரு கையை தன் இடுப்பின் மீது நடிகர் திலகம் வைத்து ஸ்டைலாக நிற்கும் அடுத்த போஸ் அதற்குள் வந்து முன் போஸை ரசித்து முடிப்பதற்குள் நம்மைப் பாடாய்ப் படுத்துமே! அடுத்த சில வினாடிகளில் அதே விலையில்லா வரிகளுக்கு ஜெயா முன் நடக்க, அப்படியே பின்னால் தொடர்ந்து சற்று கழுத்தைச் சாய்த்து புற்களுக்கு மத்தியில் கால்களைத் தூக்கி வைத்து நடக்கும் அந்த ஸ்டெப்ஸ். (போலீஸ் உள்ளே நுழைந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ரசிகர்களை அடக்க முயன்று தோற்றுப் போகும்) என்ன நடக்கிறது என்றே தெரியாது. வானம் இடிந்து விழுந்து விட்டதோ என்று எண்ணுமளவிற்கு ரசிகர்களின் ஆரவார சப்தம் ஒலிக்கும். 'செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள் என்றபடி கால் மடக்கி, படுத்து நாயகி கரம் பிடித்து, விருட்டென்று 'புரிந்தாள்' என்று முடித்தவுடன் கையை விசிறி விலக்குவது விசில் சப்தங்களை வீறிட வைக்கும். திரும்ப அதே வரி வரும் போது தாழ்நிலையில் பாய்வது போல் நிற்க, ஒரு நொடி குளோஸ்-அப் காட்டி பின் காமெரா தூர விலகி விடும். ஜெயாவின் கைபிடித்து ஒவ்வொரு முறையும் பின்னால் நடந்து வரும் ஸ்டைல் விதவிதமாக இருக்கும். 'குழலோ.. ஓ.. ஓ' என்று பாலா பாடும் போது அதற்குத் தகுந்தாற்போல் 'நடிகர் திலகம்' அந்த 'ஓ' வுக்கு தலையை சாய்த்து மிக அழகாக வாயசைக்கும் போது யாருக்குத்தான் 'ஓ' போடத் தோன்றாது?
'அந்தி மஞ்சள் நிறமோ' என்று வெகு அழகாக நெஞ்சு நிமிர்த்தி அவர் ஓர் முழு ஆண்மகனுக்குரிய தகுதியை உடல் மொழியாகக் காட்டுவார் பாருங்கள். (அதாவது முதல் சரணம் முடிந்து மீண்டும் பல்லவி வரும் போது) காட்டிவிட்டு மீண்டும் உடனே உடல் தளர்த்துவார்)
அடுத்த சரணத்தில் ஜெயாவின் பின் நின்று, அவரது இரு கைகளையும் பின்பக்கம் இழுத்தவாறு பிடித்து ஊஞ்சல் ஆட்டுவது போல 'பொன்னூஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்' என்று பாடுவது கிளாஸ். என்னுடன் கலந்தாள்' இரண்டாம் தரம் ஒலிக்கையில் குளோஸ்-அப்பில் மிக அழகாக சிரிப்பார் கலைச் செல்வியைக் கட்டி அணைத்தபடி. வசந்தா குரலில் 'லலலா லலலா லலலா லால்லா' என்று ஜெயா இவர் அணைப்பிலிருந்து விலகி பின்புறம் சாய்ந்து ஹம்மிங் தரும் போது நடிகர் திலகம் தலையை முன் நீட்டி சைட் போஸில் சிரிப்பது செம ரகளை.
மூன்றாவது சரணமான 'மலைத் தோட்டப் பூவில்' வரிகளில் நிற்கும் உடல் மொழி அசர வைத்து விடும் நம்மை. தலையை ஒரு வெட்டு வெட்டி இந்த லைனை ஆரம்பிப்பார். வலது கை கட்டை விரல் பேன்ட் பாக்கெட்டில் கொக்கியாய் மாட்டியிருக்க, இடது கை நீட்டி 'மணமில்லையென்று' பாடிக் கொண்டிருப்பவர் சடேலென்று கையை வீச்சருவாள் வெட்டுவது போல விசிறி ஒரு ஆக்ஷன் செய்து கையை பின்னால் கொண்டு செல்வாரே பார்க்கலாம். இதற்கு நடுவில் தலை ஸ்டைலாக ஷேக் ஆவதையும், உடம்புப் பகுதிகள் வளைந்து நெளிவதையும் நாம் கவனிக்கத் தவறி விடக் கூடாது. இரு வினாடிகளில் இடைவிடாத அதிசய அசைவுகளைக் கா(கொ)ட்டி விடுவார். அப்படியே வரிகள் மீண்டும் தொடரும் போது படு அலட்சியமாக ஜெயாவைப் பின் தொடர்ந்து நடை போட்டு செல்வார். அப்படியே நின்று இடது காலை சற்று மடக்கி வலது கையை உயர்த்துவார்.
'நிழல் போல் மறைந்தாள்' என்னும் போது தியேட்டர் ரெண்டு பட்டு விடும். வலதுகையை மார்புக்கு நேராக நீட்டி ஓடும் ஜெயாவை சுட்டு விரலால் சுட்டிக் காட்டுவார். அய்யோ! அமர்க்களம் சாமி! அடுத்து வரும் போது வேறு வித போஸ்.
இப்படி பாடல் முழுதிற்கும் வினாடிக்கு வினாடி போஸ் முத்திரைகள், நினைத்துப் பார்க்க முடியாத விந்தை அசைவுகள், ஸ்டைல், நடை என்று தூள் பரத்துவார்.
பாலா குரலை அப்படியே தன்னுள் உள்வாங்கி, அதே போன்ற வாயசைப்போடு தன்னுடைய முத்திரைகளை மறக்காமல் அளித்து, அனைத்து ரசிகர்களையும் பரவசப்படுத்தி, பார்ப்போரை வியப்பிலாழ்த்தி நடிகர் திலகம் இந்தப் பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்.
கலைச்செல்வியும் நல்ல கம்பெனி. எளிமையான கண்களை உறுத்தாத சிம்பிள் மேக்-அப். உடையும் அது போலவே ரொம்ப எளிமை. வெளிர் வயலட் நிற சேலை மிகப் பொருத்தம். அழகில் அள்ளுகிறார். பி.வசந்தாவின் குரல் அப்படியே மேடம் பாடுவது போல அவ்வளவு பொருத்தம். இன்னும் கொஞ்சம் அந்த 'லலலா லலலா லலலா லால்லா' ஹம்மிங் வராதா என்று ஏங்குமளவிற்கு அற்புதம்.
பாடல் முழுதுமே இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் படமாக்கப்பட்டது. எத்தனயோ இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசங்களில் பல பாடல்கள் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்தப் பாடல் அவற்றையெல்லாம் மீறிய தனிச் சிறப்பு கொண்ட காந்தத் தன்மை மிக்கது. அழகான காதலியை ரசித்து அவளைப் பின்பற்றியபடியே தொடரும் அவளைவிட அழகான இளைஞனின் காவிய ரசனைப் பாடல் இது.
'மெல்லிசை மன்னரி'ன் ஒவ்வொரு இசைக்கருவிகளும் இப்பாடலின் ஒவ்வொரு எழுத்தோடு இசைந்து இன்பம் தரும். சிதார், ஷெனாய், சந்தூர், கிளாரினெட், சாக்ஸ் , தபேலா, டோலக் என்று மனிதர் விளையாடி இருப்பார். நடிகர் திலகமும், கலைச்செல்வியும் தங்களை மெய்மறந்த நிலையில் அந்த பூங்காவின் பெஞ்சில் தழுவி கட்டுண்டு கிடக்க, பின்னால் ஒலிக்கும் அந்த கோரஸ் தொடர்ந்து வர இருக்கும் இந்த அற்புதப் பாடலுக்குக் கட்டியம் கூறி விடும். 'லாலா ஹாஹா ஹாஹா' என்று பெண்களின் குரல் ஒன்று சேர்ந்து கோரஸாக ஒலிக்கும் போது ஒவ்வொரு இளைஞனும் புளகாங்கிதம் அடைந்து விடுவான். மனதுக்குள் இனம்புரியாத கிலேசம் தோன்றி அனைவரையும் இன்பச் சித்ரவதை செய்துவிடும்.
படத்தின் துவக்க இசையே நம்மை உற்சாகத் துள்ளல் போட வைத்து விடும்.
SPB நாம் யாருக்குப் பாடுகிறோம் என்பதை உணர்ந்து வெகு அழகாக பாடியிருப்பார். நடிகர் திலகத்திற்கே உரித்த கம்பீரமும் குறைந்து போகாமல், அதே சமயம் காதல் பாடலென்பதால் தன்னுடைய பாணி குழைவுகளையும் விட்டுக் கொடுக்காமல் வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக உச்சரித்து பாலா புகுந்து விளையாடியிருப்பார். தினைமாவுடன் சேர்ந்த தேனாக வசந்தாவின் ஹம்மிங் உலகம் உள்ளவரை பேசப்பட்டுக் கொண்டிருக்கும்.
இறப்பே இல்லாத சாகாவரம் பெற்ற பாடல்.
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகை புரிந்தாள்
புன்னகை புரிந்தாள்
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
அந்தி மஞ்சள் நிறமோ
ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைபோடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
என்னுடன் கலந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
ஆஆஆஆஆஆஆஆ……. ஹ ஹா ஹா
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்
ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
நிழல் போல் மறைந்தாள்
லலலா லலலா லலலா லால்லா
பொட்டு வைத்த முகமோ
ஓஓஓஓஓ….
கட்டி வைத்த குழலோ
ஓ...ஓஓஒ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
அந்தி மஞ்சள் நிறமோ
லலலா லலலா லலலா லால்லா
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...8d&oe=5AD59C29
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...d8&oe=5AD2B87E
(nadigar thilagam sivaji visirigal)
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
9 வது வெற்றிச்சித்திரம்
மனிதனும் மிருகமும் வெளியான நாள் இன்று
மனிதனும் மிருகமும் 4 டிசம்பர் 1953
https://i.ytimg.com/vi/jyxqEz4Noy0/maxresdefault.jpg
https://upload.wikimedia.org/wikiped..._Mirugamum.jpg
Natarajen Pachaiappan
சிவாஜியா ? வசனமா ?
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f5e3.png
சில விஷயங்கள் இலைமறை காயாகத்தான் எக்காலத்திலும் பேச வேண்டியுள்ளது. அதில் நானும் விதி விலக்கல்ல. அதை அப்படியே எடுத்துக்கொள்வதும் அதின் உண்மை நிலையை உரைத்தலும் உங்களை போன்றோரிடந்தான் உள்ளது. நெருப்பை துணி கொண்டு எத்தனை நாள் மூடுவது ?
...
'திராவிடநாடு அலுவலகம்' அங்குதான் 'கணேசன்' தங்கியிருக்கிறார்... 'எம்.ஜி.ஆரால்' முடியாது என்ற சிவாஜி பாத்தித்தை "கணேசா
உன்னால் முடியும் தம்பி" என நம்பி... அண்ணா, கணேசனிடம் 90 பக்க வசனங்கள் கொண்ட "சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்" சிவாஜியின் பாத்திரத்திற்கான பகுதியை (portion) பிற்பகல் 3.00 மணியளவில் கொடுத்துவிட்டு இரவு 10.00மணிக்கு வருவதாக சொல்லி வருத்தத்தோடு கிம்புகிறார்.
...
சொன்னது போலவே வந்துவிட்டார். "என்ன கணேசா... படித்துவிட்டாயா?
கணேசன் சிரித்தவாறு அவரை இருக்கையில் அவரை அமரவைத்து விட்டு ஏற்ற இறக்கங்களுடன் வசனங்களை பேசி நடித்தும் காட்டிவிட்டார்.
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f5e3.png
அண்ணா அப்படியே கணேசனை கட்டி அணைத்துக்கொண்டு.. "என்ன கணேசா உன் மனப்பாட சக்தி...3மணி நேர நாடகத்தை
7மணி நேரத்தில் படித்துவிட்டாயே...?"
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f3a5.png
867அடி... 1000அடி ஒரு ரீல் 2000அடி 2ஷாட் 2கட்... ஓக்கே என்றார் "இயக்குநர் பீம்சிங்"
அது கலைஞரின் ஓரங்க நாடகம் "சேரன்செங்குட்டுவன்" பாத்திரம் சிவாஜிக்கு
படம் "ராஜா ராணி" ஒரே மூச்சில் பேசி முடித்தார். நல்லபடியாக முடிந்ததற்கு சிவாஜி அவர்களை அனைவரும் புகழ்ந்தனர்.
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f5e3.png
'ரஷ்-ரப்' பிரிண்ட் காப்பியை பார்க்கும் போது சவுண்ட் இன்ஜினியருக்கு தெரியவந்தது. ஒரே வருத்தம். காரணம் அதில் வசனம் பதிவாகவில்லை. எவ்வளவு கஷ்டப்பட்டு சிவாஜி நடித்தார். பீம்சிங்கிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இதை எப்படி சிவாஜி அவர்களிடம் சொல்வது? என்று யோசித்தனர். எப்படியோ அறிந்துக்கொண்ட சிவாஜி, அவர்களை நொந்துக்கொள்ளாமல் சர்வ சாதாரணமாக "நான் வசனத்தை மைக்ல பேசிர்றேன்... பாப்போம் என்றார். '867அடி' மிக துள்ளியமாக படத்தை பார்க்காமலே ஏற்ற தாழ்வுடன் துள்ளியமான நேர இடைவெளிகளை மனதில்கொண்டு பேசினார். டப்பிங்குக்கு, சிவாஜி அவர்கள் மைக்கில் பேசிய வசனம் படத்தில் அவருடைய நடிப்பிற்கும் உதட்டசைவிற்கும் மிக கண கச்சிதமாக பொருந்தியது. பீம்சிங் சிவாஜி அவர்களை நேரில் பார்த்து கட்டித் தழுவிக்கொண்டார்.
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f5e3.png
சிவாஜி நினைவு நாள் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய 'பீம்சிங்'அவர்களின் மகன் தேசியவிருது பெற்ற 'எடிட்டர் பீ.லெனின்' அவர்கள், விழாவிற்கு வருகைதந்திருந்த நடிகர்களை பார்த்து "நீங்களெல்லாம் படத்தை பார்த்துத்தான் டப்பிங் பேசறீங்க ஆனால் படத்தை பாக்காமலே டப்பிங் பேசியவர் சிவாஜி ஒருத்தர்தான்" என்று அன்றைய 'சேரன் செங்குட்டுவனை' ஞாபகபடுத்தினார்.
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f5e3.png
இப்போது சொல்லுங்கள் வசனத்தால் சிவாஜி பெயர் பெற்றாரா ? சிவாஜியால் வசனம் பெயர் பெற்றதா ?
https://static.xx.fbcdn.net/images/e...1/16/1f5e3.png
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a1&oe=5AD666D7
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...b7&oe=5AD077E6
Sundar Rajan
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
சென்னையில் 100 நாள் விழா கண்ட மாபெரும் காதல் காவியம்,
மதுரையை மீண்டும் கலக்கிட வருகிறார் சிவகாமியின் செல்வன்.
... 8.12.2017 வெள்ளி முதல் தினசரி 4 காட்சிகளாக கலக்க வருகிறார் சிவகாமியின் செல்வன்.
அன்பு இதயங்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்க வருகிறார் சிவகாமியின் செல்வன்.
சமீபத்தில் எந்த படமும் சரியான வசூலை கொடுக்காத சூழல் உருவாகி உள்ளது.
அதை பொய்யென நிரூபிக்க நடிகர்திலகத்தின் படங்களாலும், நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களால் மட்டுமே முடியும்.
இன்றே தயாராவோம்,
ஆனந்தையும், அசோக்கையும் வரவேற்க...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...f7&oe=5A986164
Natarajen Pachaiappan
உண்மை "தெய்வமகன்"
....
ஆமாமா... பொறாமையாதான் இருக்கு, உங்களை பிடிக்காதவங்களுக்கு...
.....
எங்களுக்கு பெருமையாக இருக்கு...
....
என்னய்யா நடிப்பு இது ?
எப்படியய்யா முடிஞ்சுது ?
....
இப்போ இருக்கிறா மாதிரி அப்போ...
எந்த தொழில் நுட்பமும் இல்லாத காலத்துல... ஒரே இடத்துல மூன்று பேர்?!
ஏதோ வந்தோமா, போனோமான்னு இல்லாம...
இதான் இயல்பான நடிப்புன்னு சொல்லாம...
ஒவ்வொரும் உச்ச ஸ்தானத்துல நிப்பீங்களே... அதாய்யா நடிப்பு...
பார்த்த எங்களுக்கு இன்னும் தீரவில்லையய்யா அந்த பிரமிப்பு...
எப்படியய்யா சாத்தியமாச்சி ?
சத்தியமா வாய்ப்பே இல்லை.
....
ஒரு பாத்திரத்தை ஞாபகம் வைப்பதே
பெரும்பாடு?
இப்படி விளையாடி இருக்கீங்களே... நியாயமா? மூன்று நடிப்புல எது சிறப்புன்னு கேட்டா?
எதை சொல்றது ?
....
அப்பப்பா... அப்பாவின் நடிப்பு !
பணக்காரர்களுக்கே உள்ள கம்பீரம், மிடுக்கு, மின்னல் சிரிப்பு... நொடி பொழுதில் மாறும் நடிப்பு...
பெரிய பிள்ளையிடம் குற்ற உணர்வுடன், கண்கள் கலங்க பார்க்கும் கரிசணம். மன்னிச்சுடுடா... என்று சொல்லாம சொல்லும் கண்களின் கண்ணீர்...
ஒவ்வொரு ரசிகரின் கண்களிலும் கண்ணீர்
அருவியாய் கொட்டுமே...
....
அந்த வளைஞ்சி குழையர பிள்ளையின் நடிப்பு... எப்படி கற்பனை செய்தாயோ?
யாரை முன்மாதிரியாய் எடுத்தாயோ ? அம்மாவின் பின்னால் மறைந்துக்கொண்டு அப்பாவிடம் பேசும் பாவனை, கொஞ்சம் ஓவர் என்பார், செல்லத்தில் வளரும் பிள்ளைகளை பார்த்தறியாதவர்கள்.
இந்த நடிப்பைதான் ஹாலிவுட் நாயகன் 'ஜானி டீப்' பிரதி எடுத்தான்.
நகம் கடிக்கும் ஸ்டைல் மட்டும் இயக்குநர் 'ஸ்ரீதர்' அவர்களின் நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்ததிலிருந்து வந்தது.
உலகத்தில் ஒவ்வொருவரின் நடவடிக்கையும் உற்றுப்பார்த்த உருயேற்றியவர் சிவாஜி! ஆச்சரிமாய் இருக்குது... ஏன் உன்மேல் பொறாமை இருந்திருக்காது ?
....
ஒரு பதிவில் படித்தது. "1969ல் வெளியானது 'தெய்வமகன்' திரைப்படம். அதில் இரண்டாவதாக மகனாக வரும் மூன்றாவது சிவாஜியின் பாவங்கள்; விடலைத்தனமான சேஷ்டைகள் செயற்கையாக இருக்கிறது' என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது.
எனக்கும் முதல்முறை பார்க்கும்போது
கோமாளித்தனமாகத்தான் தோன்றியது.
2007ல் வெளியான 'Pirates of the Caribbean: At World's End என்ற ஹாலிவுட் படத்தில், 'Johnny Deep' ன் நடை, பாவனை, நகம் கடித்தல், உடல் மொழி, வசனம் பேசுகின்ற முறை எல்லாமே அப்படியே தெய்வமகனில் 3வது இளைய சிவாஜியின் நடிப்பை முற்றிலும் தழுவியதாக இருந்தது.
'Johnny Deep' ன் நடிப்பு, மிகச்சிறப்பாக இருக்கிறது என்று உலகம் கொண்டாடப்பட்டது. தெய்வமகன் வெளியானபோது Johnny Deep ன் வயது 6. ஒருவேளை தெய்வமகனை பார்த்திருப்பாரோ Johnny Deep? இதை மிகப்படுத்தப்பட்ட கேள்வியாக தோன்றலாம். ஆனாலும் தவிர்க்க முடியவில்லை. தெய்வமகன்' ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்பது ஒரு கூடுதல் தகவல்."
....
அமைதியாக, ஆக்ரோஷமாக அடிக்கடி மாறினாயே... ஆச்சரியமான நடிப்பு!
"அன்னையை பார்த்தப்பின் என்ன வேண்டும் தெய்வமே... இன்று நான் பிள்ளைபோலே மாறவேண்டும் கொஞ்சமே" அந்த ஏக்கம் கண்களில்... அப்படியே நம்மை என்னமோ செய்து உருகவைக்கும். உலகத்தைவிட்டு போகும்போது, உயிராய் உலவவிட்ட தாயவளின் மடியில் படுக்காத அந்த உயிர், தெய்வமகனாகி மடியில் சாய்ந்திருந்து அம்மாவென்று சொல்லும் போது ஆண்களையும் பெண்களாக்கி அழவைக்கும் சாதுர்யம்... நிச்சயமாக உனக்கு மட்டும் உரித்தானது.
உண்மையிலேயே நீ !
"தெய்வமகன்"தானய்யா...
....
வேறு ஒரு மொழி படத்தை தமிழில் பிரதி எடுக்கும் போது அந்த நடிகரின் நடிப்பை பிரதி எடுக்கமாட்டார். ஏனென்றால் அந்த படத்தை அவர் பார்க்கமாட்டார். அவரின் சொந்த நடையிலே, இயக்குநர் தன்னிடம் என்ன எதிர்பார்க்கின்றாறோ அதைதான் செய்வார்.
அத்துடன் தன் ரசிகர்களின் மனவோட்டத்தை
அறிந்த மாபெரும் கலைஞன்.
இதில் மிகையான நடிப்பு (Over acting) நடுதரமான நடிப்பு (Medium acting) மிதமான நடிப்பு(under acting) தீர்மானிப்பதெல்லாம் இயக்குநரே,
அவரை பொறுத்தவரை அனைத்து நடிப்பும், அதிலிருக்கும் அத்தனை ரகங்களும் தெரியும். ஆனால் அதை தீர்மானிப்பது இயக்குநரின் பொறுப்பு.
....
'தெய்வ மகன்' படம் பிரபல வங்காள நாவலாசிரியர் டாக்டர் நிஹர் ரஞ்ஞன் குப்தா அவர்களின்'உல்கா' (Ulka) என்ற மேடை நாடகத்தை அடிப்படையாக கொண்டு 1965ல் ஜி.வி.அய்யர் இயக்கத்தில் கல்யாணகுமார், முத்துராமன் நடிப்பில் 'தாயின் கருணை' என்ற படமாக வெளிவந்தது. ஆனால் படம் சரியாக ஓடவில்லை.
......
அதன்பிறகு ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் ஆரூர்தாஸ் வசனத்தில் 1969 செப்டம்பர், 5ல் "தெய்வகன்" வெளிவந்து வெற்றிப்படமாகி சிவாஜியின் புகழை விண்ணைத் தொடவைத்தது.
....
தெய்வமகன் தெலுங்கில் 'கோடீஸ்வரலு' என்ற படமாக டப் செய்யப்பட்டு நன்றாக ஓடியது.
....
கவிஞர் கண்ணதாசன் அர்த்தம்தரும் பாடல்களுக்கு இசையூட்டிய 'மெல்லிசை மன்னரையும்' பாடிய டி.எம்.எஸ் அய்யாவையும் மறக்கமுடியாது.
.....
'பலே பாண்டியா' படத்திற்கு பிறகு நடிகர்திலகம்
மூன்று விதமான பாத்திரங்களை ஏற்று நடித்தப் படம்.
....
நடிகர்திலகத்திற்கு அந்தவிதமான முகத்திற்கு
ஒப்பனை செய்த கலைஞர்கள் ஆர். ரங்கசாமி மற்றும் அவருடைய மகன் ஜெயந்த்குமார் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அவலட்சன முகங்களாக சித்தரித்து காட்டியிருப்பார்கள். உண்மையில் சொன்னால், அதுகூட அவர் முத்திற்கு அழகாகவே இருந்தது.
.....
வெளிநாட்டு படங்களுக்கான 'ஆஸ்கர் விருது'க்காக தமிழ்நாட்டின் முதல் படமாக இந்தியாவிலிருந்து போட்டிக்கு அனுப்பப்பட்டது. நடிகர்திலகத்தை நடிப்பின் பெருமைகளை எடுத்துச்சொல்ல நல்லவர் ஒருவர் ஆஸ்கர் கமிட்டியில் இருந்திருந்தால். அன்றே அவருக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கும். பாவம், ஆஸ்கர் விருதுக்கு கொடுத்து வைக்கவில்லை போலும். இந்தியாவின் ஒவ்வொரு ஆண்டிற்கான சிறந்த விருது தருவதற்கே, ஆயிரத்தெட்டு சிபாரிசுகள், லாபிகள் நடப்பது போன்று ஆஸ்கர் விருதிலும் விதி விலக்கில்லை.
....
1985ல் தெய்வமகன் கன்னடத்தில் 'தாயி மமதே'
(Thayi Mamathe), என்ற படமாக மறுதயாரிப்பாக வெளிவந்தது. இதில் டைகர் பிரபாகரன் அவர்கள் நடித்திருப்பார். ஆனால் நடிகர்திலகத்தின் ஒரு மூலையை தொடவில்லை. எந்த தைரியத்தில் நடிக்க ஒத்துக்கொண்டாரென தெரியவில்லை, காமெடியாக இருக்கும்.
...
ஹிந்தியில் மறுதயாரிப்புக்கு உட்படுத்தவில்லை. காரணம் அங்கிருக்கும் ஜாம்பவான்கள் நடிகர்திலகம் நடிப்பை பார்த்த பின்னே தயங்கியதுதான் காரணம். 1976ல்
திலீப்குமார் அவர்கள் மூன்று வேடங்களில் நடித்த நடித்த பைராக்(Bairaag) என்ற ஹிந்திப்படம் தெய்வமகன் போன்ற கதைதான் ஆனால் தந்தையும் ஒரு மகனும் கண்தெரியாத பாத்திரமாய் மாற்றி இருப்பார்கள். இதுவும் ஒரு வெற்றிப்படம் தான் .
...
ஆனந்தவிகடன் விமர்சனத்தில் வந்தது:
நடிகர்திலகம் அவர்கள் பல பாத்திரங்களை ஏற்றபோதும், எந்தவித குழப்பங்களும் இல்லாமல் நடித்திருப்பது அவரின் நடிப்பிற்கு ஒரு மைல் கல்லாகும். சிவாஜிகணேசன் என்கின்ற ஒரே தூணை வைத்து ஒரு மாளிகையை கட்ட இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.
...
தெய்வமகன் படத்தை பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லலாம், நீங்களும் சொல்லலாம்...
...
அன்புடன்...
சிவாஜியின் பக்தன் ப.நடராசன்/:
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...a0&oe=5AC4AD85
Madurai SivajiPeravai
நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 90 -வது பிறந்தநாள் விழாவையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, நடிப்புத் திறன் போட்டி ஆகியவை, கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி புதுக்கோட்டை மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஏராளமான பள்ளி மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு,
வரும் 17 -12 -2017 , ஞாயிறு மாலை 4 மணிக்கு, புதுக்கோட்டை நகர்மன்ற அரங்கில் நடைபெறும் நடிகர்திலகம் சிவாஜி 90 -வது பிறந்த நாள் விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்த விழாவில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...46&oe=5A9132F6
Padma Balu
சமீபத்தில், பட்டிக்காடா..பட்டணமா…திரைப்படத்தினை மீண்டும் பார்க்க நேர்ந்தது…படம் வெளியாகி கிட்டத்தட்ட 45 வருடங்கள் ஆனபோதும்…இப்போது பார்த்தாலும்…ரசிக்க வைக்கும் ஒரு அற்புதமான படம்.
சோழவந்தான் எனும் கிராமத்தில் வாழும் கண்ணியமான மிராசுதார் மூக்கையன், அவனது முறைப்பெண் கல்பனா, லண்டனுக்கு படிக்க சென்று மேல்நாட்டு நாகரீகத்தில் மூழ்கி திளைப்பவள் . கல்பனாவின் தந்தைக்கு மூக்கையனின் மேல் நல்ல அபிப்ராயமும் மரியாதை யும் கொண்டவர். கல்பனாவின் தாயாருக்கு மூக்கையனை கண்டால் வேப்பங்காய். சந்தர்ப்பம் மூக்கையன் கல்பனாவை கணவன் மனைவி ஆக்குகிறது. பிறகு கல்பனாவின் மேல்நாட்டு நாகரீகத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் விளைவாக இருவருக்குள் பிரிவு ஏற்படுகிறது..எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றி எரிய வைப்பது கல்பனாவின் தாயார். இந்த சூழல் மாறி, எப்படி மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பதே…கதை..
நடிகர் திலகத்தின் அருமையான நடிப்பினை வெளிப்படுத்த வாய்ப்பளித்த அற்புதமான கதையமைப்புடன் வந்த முத்தான பல படங்களில் இதுவும் ஒன்று.. என்ன.. ஒரு அழகான விறுவிறுப்பான கதை அமைப்பு, அற்புதமான நகைச்சுவை, ஆச்சி மனோரமாவுக்கு லட்டு மாதிரி கேரக்டர்…மைனர் ஆக வரும் M.R.R. வாசு.. காமெடியில்..சரவெடிதான்…(என்ன வெள்ளையம்மா….இந்த மாமனுக்கு என்னைக்கு கோழி அடிச்சு கொழம்பு வெச்சு சோறு போட போறே…)
திமிரடித்தனம் என்றால் இதுதான் என காட்டும்….அதே சமயத்தில் கிளைமாக்சில் சரண்டர் ஆகும் அழகிய கதா…பாத்திரம்…கதாநாயகி ஜெயலலிதாவுக்கு. ..வீ.கே. ராமசாமிக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி ஒரு பாத்திரம்… மனிதர் ஊதி தள்ளி விடுகிறார்…சுகுமாரி படம் பார்ப்பவர்களின் கோபத்தை ஏற்ற…பெரிதும் உதவுகிறார்…பாடல்கள்..அத்தனையும் தேன் சொட்டுகள் , தேனில் நனைத்த பலா சுளைகள்..எனலாம்…அனைத்துக்கும் மேலாக நடிகர் திலகத்துககாகவே அமைக்க பட்டதோ…எனப்படும்…திரைக்கதை, வசனம்… (வசனம் பாலமுருகன்…ஆகா…நறுக்கு தெறித்தது போல…காட்சிக்கு காட்சி…மிக பொருத்தமான வசனங்கள்..)
நடிகர் திலகம் …நடிப்பதற்காகவே…பிறந்த அவதாரம் ஆயிற்றே…மனிதர் பின்னி எடுத்து விடுகிறார் ….வெகு இயல்பாக…அருமையான பொருத்தமான நடிப்பு..இப்போதும்…திரும்ப திரும்ப…பார்க்க வைக்கும் நடிப்பாற்றல்…அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படம்…
அசல் கிராமத்து பண்ணையாராக கம்பீரமான பொறுப்புள்ள குடுமி வைத்த விவசாயியாக வருவதாகட்டும்…ஒரு பொறுப்புள்ள பஞ்சாயத்து தலைவராக நடந்து கொள்வதிலாகட்டும், எனன மாப்பிளே.. ஊருலே…கோழியெல்லாம் ஊருலே நெறைய காணாம போகுதாமே…என…கூப்பிட்டு ஒரு MRR வாசுவை மிரட்டி ஒடுக்குவதில் ஆகட்டும்,
ஒரு சந்தர்ப்பத்தில்…மேல்நாட்டு ஹிப்பி பாடகன் போல வேடமிட்டு என் பேர் “முக்கேஷ்” நான் லண்டன்லேர்ந்து வந்திருக்கேண்டி..என் …ஜிஞ்சினாக்குடி…என்று…நடனத்தில் கலக்குவதாகட்டும்…ஆங்கிலத்தில் அநாகரீகமாக திட்டும் மனைவியின் வாயடைக்கும் வண்ணம்..ஆங்கிலத்திலேயே…பேசி மடக்கி, நானும் படிச்சவன்தான்…படிக்கிறது அறிவ வளர்த்துக்கரதுக்கு,
இந்த மாதிரி ஆட்டம் போடுறதுக்கு இல்லே..என கூறும் லாவகமாகட்டும், மனைவியை பிரிந்து…துடிப்பதாகட்டும்…
பஞ்சாயத்தில் கணவன் மனைவியை சேர்ந்து வாழுவதுதான் புத்திசாலித்தனம் என சமாதான படுத்த முயல…” ஒங்க..பொஞ்சாதி எங்கே…பஞ்சாயத்து பண்ண ஒங்களுக்கு எனன யோக்கியதை இருக்கு” என ஒருவன் கேட்க…
வீட்டுக்கு வந்து… அப்பத்தா…சோழவந்தான் சுந்தர மகாலிங்க தேவன் மகன் மூக்கையா தேவனுக்கு இன்னைக்கு பஞ்சாயத்துலே கெடச்ச வரவேற்ப்ப நீ.. பாத்திருந்தேன்னா… அப்புடியே…பூரிச்சு போயிருப்ப…
அடாடா..நான் வராம போயிட்டேனே…
நான் வந்துருக்கேனே உயிரோட…
நாக்கு மேலே பல்லு போட்டு எவண்டா ஒன்ன கேள்வி கேட்பான்…
கேட்டான் அப்பத்தா…பொண்டாட்டியோட சேர்ந்து வாழ வக்கில்லாதவன் நீ என்னடா…பஞ்சாயத்து பண்ணுறதுன்னு கேட்டானே..ஒரு கேள்வி….
என்று வசனம் பேசி குமுறும் இடம்… நடிப்பின் உச்சக்கட்ட காட்சிகளுள் ஒன்று..
தாராளமாக புது பிரிண்ட் ஆக….ரீ ரிலீஸ் பண்ண வேண்டிய ஒரு படம்…
தேனினும் சுவையான பாடல் காட்சிகளும் நம்மை கட்டிப்போட்டது…முக்கியமாக இத்தனை வருடம் கழிந்தும்…நம்மை கேட்க தூண்டும்..பாடல்கள்…
அம்பிகையே..ஈஸ்வரியே..பாடலில் துவங்கி, முத்து சோலை தங்க கிளிகள், கேட்டுக்கோடி உறுமி மேளம்…போட்டுக்கோடி கோகோ தாளம், என்னடி ராக்கம்மா…(சந்தோஷம், சோகம்) நல்வாழ்த்து நான் சொல்லுவேன்…வாவ்…என்ன ஒரு அருமையான அழகான இசை…கோர்ப்பு…மனோரமா…கோழி சோறு…போடுகிறேன்..என வாசுவை விட்டு வெளுக்கும் வெளுப்பில்…அடுத்த முறை..என்ன மைனரே..கோழி சோறு வேணுமா…அய்யய்யோ…எங்கேயோ…அவசரமா போற மாதிரி இருக்கு…போகட்டும்…போகட்டும்..என அவர் பம்முவதும்…சிவாஜியை கூலிப்படை தாக்க கடத்தி சென்று..ஊரை சுற்றி காண்பிக்க அவர் திருப்பி கொடுக்கும்போது…ஏண்டா..சாந்தி தியேட்டரை …என்கிட்டே..காட்டுறியா..என கேட்டு வெளுப்பதும்…சரியான ருசியான காட்சிகள்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...75&oe=5ACE47F9