-
#காதலில் #இலக்கணவரைமுறை...
எம்.ஜி.ஆர்., படங்கள் காலம் கடந்தும் நிற்பதற்கு முக்கியக் காரணம் அவற்றின் கருப்பொருள் உலகளாவியதாக இருப்பதேயாகும். அமெரிக்க மாணவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை ஞாயிறுதோறும் திரையரங்குக்குப் போய் பார்த்து ரசிப்பர். கதை எளிமையானதாகவும் கருப்பொருள் அனைத்துலக மனிதனுக்கும் ஏற்றதாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதனால் தங்களால் இயல்பாக ரசிக்க முடிகிறது என்றனர். இந்தியத் தன்மையும் தமிழ் இயல்பும் பாதுகாக்கப்படுவதாலும் இந்தப் படங்களை அனைவரும் ரசிக்கின்றனர்.
இதற்குச் சில இலக்கண வரைமுறைகள் உண்டு. காதல் தோன்றும் விதம் அல்லது சூழ்நிலைகள் குறித்து தொல்காப்பியர் சில வகைப்பாடுகளைத் தருகிறார். அவை, பூத் தரு புணர்ச்சி, புனல் தரு புணர்ச்சி, களிறு தரு புணர்ச்சி என்பவையாகும். புணர்ச்சி என்றால் இருவரது மனமும் ஒன்றின்பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைதல் ஆகும். இதைத்தான் தமிழ்ச்சமூகம் காதல் என்கிறது.
#பூத்தரு #புணர்ச்சி
அந்தக் காலத்தில் ஒரு பெண் ஒரு பூவைக்கண்டு ஆசைப்பட்டு அதைப் பறிக்க முயன்று கிடைக்காமல் தவிக்கும்போது அவ்வழியே வந்த ஓர் இளைஞன் அவளுக்கு உதவினால் அவள் மனம் அவனிடம் காதல் கொள்ளும் என்று ஒரு சூழ்நிலையை வரையறுத்தனர்.
எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’ படத்தில் பூத்தரு புணர்ச்சி காட்சி அழகாகச் சித்திரிக்கப்பட்டு நகைச்சுவையோடு எடுத்துச் செல்லப்படும். சரோஜாதேவி நயமாகப் பேசி எம்.ஜி.ஆரை ஐஸ் தண்ணீரில் தள்ளிவிட்டு விடுவார் அவரும் இருமி, தும்மி, “டபுள் நிமோனியா” வந்ததாக நடித்து சரோஜாதேவியைக் காதல் கனவில் மூழ்கடித்துவிடுவார். ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டு இப்படத்தின் கனவுப்பாட்டு ஆகும்.
#புனல்தரு #புணர்ச்சி
சங்க இலக்கியத்தில் மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலப்பகுதியே காதல் எனப்படும் கூடலுக்குரியதாக வரையறுக்கப்பட்டுள்ளது. இன்று வரை பலரும் தேனிலவுக்கு ஊட்டி, கொடைக்கானல், சிம்லா, காஷ்மீர், சுவிட்சர்லாந்து போன்ற மலைப்பகுதிகளை நாடுவது அதன் சூழல் காதலுணர்வு பெருக வழி செய்வதுதான்.
மலையருவி, காட்டாறு போன்றவற்றில் குளித்து விளையாடும் பெண் திடீரென ஆபத்தில் சிக்கிக்கொண்டால் அப்போது அவளைக் காப்பாற்றும் இளைஞரின் மீது அவளுக்குக் காதல் தோன்றுகிறது. தமிழ்ப்பட வரலாற்றில் முதன் முதலில் அதிக பிரின்ட்டுகள் போட்ட வெற்றிப்படமான ‘மதுரை வீரன்’ படத்தில் இளவரசி பானுமதி ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது காவலரான எம்.ஜி.ஆர் அவரைக் காப்பாற்றி கரை சேர்ப்பார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததால் பின்பு இளவரசியை கடத்திச் சென்று திருமணம் முடிப்பார். இது புனல்தரு புணர்ச்சிக்குச் சரியான எடுத்துக்காட்டு.
"மதுரை வீரன்"8 கதை நாட்டுப்புறப்பாடலாகப் பாடப்பட்டு வந்து பின்பு திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்பு எம்.ஜி.ஆரின் அலிபாவும் 40 திருடர்களும் மற்றும் குலேபகாவலியும் இவற்றை அடுத்து தாய்க்குப் பின் தாரமும் வெளிவந்தன. அனைத்துமே எம்.ஜி.ஆருக்கு வெள்ளிவிழா படங்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து அவருக்கு நாடோடி மன்னன் மாபெரும் வெற்றியை அளித்தது.
#களிறுதரு #புணர்ச்சி
களிறு என்றால் யானை ஓர் இளம் பெண்ணுக்கு மலையிலோ, காட்டிலோ கொடிய விலங்குகளால் ஆபத்து நேரும்போது அவளைக் காப்பாற்றுகிற இளைஞன்மீது அவளுக்குக் காதல் உண்டாக வாய்ப்புண்டு. இதை களிறு என்று மட்டும் கொள்ளாமல் தற்காலத்திற்கேற்றவாறு ரவுடிகளால் தொல்லை ஏற்படும்போது காப்பாற்றுகின்றவன் என்று பொருள் கொண்டு பல படங்களில் எம்.ஜி.ஆர் கதாநாயகியை ஆபத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறார். காதல் மலர்ந்திருக்கிறது.
‘நல்ல நேரம்’ படத்தில் யானையைக் கண்டு மிரண்டு ஓடிவரும் கே.ஆர் விஜயாவை எம்.ஜி.ஆர் காப்பாற்றுவார். அவர் கார் நின்று போனதும் யானைகளைக் கொண்டு காரைக்கட்டி இழுத்துச் சென்று பெட்ரோல் பங்க்’ வரை கொண்டு விடுவார். இப்படம் ஹாத்தி மேரே சாத்தி படத்தின் தமிழாக்கம் ஆகும்.
‘வள்ளி திருமணம்’ என்ற கதைப்பாடல் தமிழகம் முழுவதும் மேடை நாடகமாகப் பிரபலம் அடைந்தது. இதில் முருகன் வள்ளியை மணக்க தன் அண்ணன் கணேசனை யானையாகச் சென்று பயமுறுத்தச் சொல்வார். யானையைக் கண்டு மிரண்டு வள்ளி அங்கிருந்த முருகனிடம் உதவியை நாடுவார். பின்பு அவர்களுக்குள் காதல் மலர்ந்து திருமணமும் நடைபெறும். இந்தக் கதையும் களிறு தரு புணர்ச்சிக்கு இங்கு காலங்காலமாக இருந்துவரும் எடுத்துக்காட்டாகும்.
தமிழ்த்திரைப்படத்தில் ஆரம்பத்தில் கதாநாயகிக்கு ஒரு ஆபத்து என்றால் எம்.ஜி.ஆர் உடனே அங்கு பிரத்யட்சனமாகி அவரைக் காப்பாற்றுவது களிறு தரு புணர்ச்சி ‘கான்செப்ட்டின்’ மிச்ச சொச்சமே ஆகும்............bsm...
-
Cag கொம்பு வைத்த அமைப்பு அல்ல !
அது அளித்த அறிக்கைக்கு பின் இருமுறை மக்கள் புரட்சித் தலைவரை அரியணை ஏற்றினர் என்றால் வெட்கித் தலைகுனிய வேண்டியது அன்றைய cag யின் வெள்ளையும் சொள்ளையும் குழுவும் காந்த ராஜூம் தான் !
அன்றைய ஐஏஎஸ் ஐபிஎஸ் களுக்குக் கூலி கொடுத்து தகவல் பெற்ற
ஈனச்செயலின் உரிமையாளர் கருணாநிதி !
அடுத்து , சீமான் !
அரசியலின் சாபக்கேடு இவன் !
மூடத்தனத்தின் முதலீடு ஆக இருப்பவன் ! அதற்கும் ஒரு கூட்டம்.
இவனை எல்லாம் இவ்வளவு பேச விட்டு வைப்பது ஒரு வகையில் அரசின் இயலாமையே !
ஏன் அவனை யாரும் பதிலடி தந்து விளாசுவதில்லை என எனக்குப் புரியவில்லை !
நம்மைப் போல் சிலர் மட்டும் வலைதளங்களில் பேசி வருகிறோம் !
ஆனால் இன்னுமொரு ஐந்து வருடத்தில் அவனே அட்ரஸ் இல்லாமல் போய் விடுவான் என்பது மட்டும் திண்ணம் !
ஏனெனில் எம்ஜியாரைத் தொட்டவன் துலங்கியதில்லை !
இது நிதர்சன நிகழ்வு !
இது வரலாறு !..........gktn...
-
#மக்கள்திலகத்தின்_ஆரம்பகாலங்கள்
#என்_தங்கை...
வருடம் 1952
மின்னல் தாக்கியதால் கண்ணை இழந்த தங்கை மீனா (ஈ.வி.சரோஜா), வயதான உடல் நலமில்லாத தாயார் குணவதி; சுயநலம் மிக்க குடும்பத்தில் சிறிதும் அக்கரை இல்லாத தம்பி செல்வம் (சந்தான பாரதி) ; தன் தந்தையின் சொத்துக்களை அபகரித்து தன் தேவைக்கு பணத்தை கடனாக கூட கொடுக்காத மாமன் கருணாகர பிள்ளை (சக்ரபாணி)
கண் தெரியாத மீனாவை சதா கரித்துக்கொட்டும் பணக்கார இடத்துப்பெண்ணும்-செல்வத்தின் மனைவியுமான ராஜம் ((மாதுரி தேவி)) - இவ்வளவு சூழ்நிலைகளுக்கிடையில் தன் தங்கையின் மீது உயிரையே வைத்திருப்பவரும்- குடும்பத்தை தன் வருமானத்தை கொண்டு வழிநடத்தும் மூத்த மகன் ராஜேந்திரன் ((மக்கள் திலகம்)).
இறுதியில் கண் தெரியாத தன் தங்கை விபத்தில் உயிரிழக்க-தன் தங்கை மீனாவின் உடலோடு கடலுக்குள் சங்கமித்து உயிரை விடுகிறார் ராஜேந்திரன்.
மக்கள் திலகம் ஒரு பாசம் மிக்க அண்ணனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். மாமனிடம் கடன் கேட்டு அவமானப்படும்போதும்- மீனா தன் அண்ணி ராஜத்தால் கொடுமைபடுத்தப்படுவதை அறியும் போதும்-தன் தாயார் இறக்கும் போதும்- இறுதியில் தன் தங்கை மீனாவின் உயிரற்ற உடலை தூக்கிக்கொண்டு, கதறிக்கொண்டே கடலை நோக்கி ஓடும்போதும் - தன் நடிப்பால் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறார்.
மக்கள் திலகத்தை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திய "அன்பே வா", "பாசம்", "பெற்றால்தான் பிள்ளையா", "பணம் படைத்தவன்" ஆகிய படங்களுக்கு முன்னோடி இந்தப்படம்.மக்கள் திலகத்துக்கு அடுத்தபடியாக கொடுமைக்கார மாமன் கருணாகரானாக சக்கரபாணியும், மாதுரி தேவியும் நம்மை வியக்க வைக்கிறார்கள்.
இந்த படத்தில் கூடுதலான ஒரு விடயம் மக்கள் திலகத்துக்கு இணையே இல்லாமல் நடித்துள்ளார்.மக்கள் திலகத்தின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் இப்படம் வணிகரீதியாக வெற்றியடைய, நடிகர் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது...
தகவல் :https://en.m.wikipedia.org/wiki/En_Thangai_(1952_film)
-
எம்.ஜி.ஆரின் திருவிளையாடல்!
-------------------------------------------
எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு இந்தப் பதிவு சர்க்கரைப் பொங்கல் என இனிக்கும்!
ஒரு கட்சி என்னும் வீட்டின் உத்திரங்களை--
தொண்டன் என்னும் உதிரங்களை--எம்.ஜி.ஆர் எப்படிக் கையாண்டார் என்பதே இன்றையப் பதிவின் சாரம்!
அது அருப்புக் கோட்டைக்கும் திரு நெல்வேலிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம்!
அருப்புக் கோட்டை அ.தி.மு.கவின் வெற்றியின்
இருப்புக் கோட்டை!
நெல்லை தான் கொஞ்சம் தொல்லை!
திரு நெல்வேலியில் போட்டியிடுகிறார் ஆர்.எம்.வீ!
திரையுலகில் எம்.ஜி.ஆரின் ஏற்றத்துக்கு துணை நின்ற ஆர்.எம்.வீயை நாம் பாராட்டும் அதே நேரம்--
அ.தி.மு.கவின் ஆர்.எம்.வீயை ஆதரிக்க இயலாது!
ஆர்.எம்.வீ என்றில்லை ,,வேறு எவராயிருந்திருந்தாலும் ஜெ வைப் போல் கடைசிவரைக் கட்சியைக் காப்பாற்றியிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்!
நெல்லையில்,,தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 90க்கும் மேலானவர்களைக் களத்தில் இறக்கும் ஆ.எம்.வீ--
திரு நெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் கருப்பசாமி பாண்டியனை ஓரமாக ஒதுக்கி விடுகிறார்?
காரணம்??
கருப்பசாமி பாண்டியன் அப்போது ஜெ அணியில் இருந்ததே!
வருத்தமுற்ற மனதுடன் களத்தில் இருந்தே மாயமாய் போய்விடுகிறார் கருப்பசாமி பாண்டியன்!
அத்தனை எம்.எல்.ஏக்களைத் தேர்தல் பணியில் இறக்கியும்,,கிட்டத்தட்ட கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்தும் வெற்றி வாய்ப்புக் குறைகிறது ஆர்.எம்.வீக்கு?
எம்.ஜி.ஆர் களத்துக்கு வந்து முகம் காட்டினால் தான் தாம் தப்பிக்க முடியும் என்றப் பரிதாப நிலையில் ஆர்.எம்.வீ??
மாவட்டச் செயலாளருக்கு உரிய மரியாதையைக் கொடுத்து உரிய முறையில் அவரை வைத்து ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்றுக் கண்டிப்புடன் கூறி விடுகிறார் எம்.ஜி.ஆர்!
மாயமாய் ஒதுங்கியிருந்த கருப்பசாமி பாண்டியன் தோட்டத்துக்குச் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து விபரங்கள் கூறியதின் விளைவே இது!
ஒரே ஒரு கூட்டத்தில் மட்டும் வந்து தன் முகத்தைக் காட்டுகிறார் மூலவர்!
தேர்தலில் ஆர்.எம்.வீ வெல்கிறார்!!
ஆர்.எம்.வீ,,தன் ஆதரவாளர்களிடம் இப்படிப் புலம்புகிறார்--
முதலிலேயே,,தலைவர் இங்கே வருகிறேன் என்று சொல்லியிருந்தால் எனக்குக் கோடிக்கணக்கில் பணச் செலவும் ஏற்பட்டிருக்காது! இவ்வளவு டென்ஷனும் இருந்திருக்காது??
அங்கே எம்.ஜி.ஆரோ--தன் நெருங்கியவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தது---
மாவட்டச் செயலாளரை மட்டம் தட்டிய ஆர்.எம்.வீக்குப் பாடம் புகட்டவும்--
அவர் கைப் பணம் கொஞ்சமாவது தொண்டர்களுக்குக் கிடைத்திடவும் தான் நான் கடைசி நேரத்தில் அங்கே வருவதற்கு ஒப்புக் கொண்டேன்??
பக்தனுக்கு உதவவும்,,,அவனுக்கு உரிய அங்கீகாரத்தை தந்திடவும்--
புராணங்களில் இறைவன் செய்தவை விளையாட்டு என்றால்---
இங்கே--பறங்கிமலையான் செய்ததும் அது தானே???!!!...vtr
-
அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.
தலைவர் நடத்தி கொண்டு இருந்த நாடக குழுவில் இருந்து அன்பர் எம் கே. முஸ்தபா விலகி சென்று விட அந்த இடத்தில் சரியான ஒரு நபரை நிரப்ப ஒருவரை தேட....
வள்ளலின் தந்தை வேடங்களில் அப்போது நடித்து கொண்டு இருந்த என்.எஸ். நாராயணன் அவர்கள் மூலம் நாகர்கோவிலை சேர்ந்த பசுபதி என்பவரை அவரின் மூலம் அறிமுகம் ஆகி அவரை தனது குழுவில் சேர்த்து கொள்கிறார்.
பசுபதி அழகிய தோற்றம் உடல்வாகு கொண்டவர்.. .இன்பக்கனவு.....அட்வகேட் அமரன்....பகைவனின் காதலி போன்ற நாடகங்களில் தலைவர் உடன் பசுபதி அவர்கள் தொடர்ந்து பல ஊர்களில் நடித்து பணமும் புகழும் அடைகிறார்...
அழகு கொண்ட பசுபதி புகழ் பொருள் வந்தவுடன் தன்னை மறந்து தலைவருடன் கருத்து வேறுபாடு கண்டு பிரிந்து சென்று விடுகிறார்...
வாய்ப்புக்கள் இழந்து திரௌபதி நாடக குழுவில் பின் இணைத்து நடித்து வர அவருக்கு திருமணம் நிச்சியம் ஆக பலத்த சந்தேகத்துடன் தலைவருக்கு திருமண அழைப்பிதழ் ஒரு தட்டில் பழங்கள் கொண்டு அதில் பத்திரிகை வைத்து அழைக்க வருகிறார்.
தலைவர் முகாமில் அனைவரும் அவரை பார்த்து முகம் சுழிக்க தலைவர் எதுவும் நடக்காதது போல விஷயம் கேட்டு பத்திரிகையை எடுத்து கொண்டு பழங்களை நீங்களே எடுத்து செல்லுங்கள் என்று பசுபதியிடம் சொல்ல...
பசுபதி தன்னை சென்னையில் அறிமுகம் செய்த அந்த நல்ல மனிதரை விட்டு பிரிந்து சென்ற தவறை உணர்ந்து வாடிய முகத்துடன் வெளியே நடக்கிறார்...
திருமண நாள் நெருங்கி கொண்டு இருக்க பணம் இல்லாமல் பசுபதி தவிப்பதை தலைவரிடம் ஒருவர் மகிழ்ச்சியுடன் சொல்ல தலைவர் பதில் ஏதும் சொல்லவில்லை....
திருமணம் நடக்கும் மண்டபம் நோக்கி தளர்ந்த மனத்துடன் பசுபதி நடந்து ஏற்பாடுகள் செய்ய போக அங்கே திருமண மண்டப மேலாளர் சிரித்த முகத்துடன் வாங்க புது மாப்பிள்ளை என்று சிரித்து கொண்டே வரவேற்க..
பசுபதி திகைக்க மண்டபம்...வாழை தோரண அலங்காரங்கள்....ஒலிபெருக்கி....பந்தல்..
மேளம்...சாப்பாடு அடங்கிய மொத்த பணம் கட்ட பட்ட ரசீதை பசுபதியிடம் காட்டி.
எம்ஜிஆர் அவர்களின் மேனேஜர் பத்மநாபன் அவர்கள் முன்தினம் வந்து உங்கள் பெயரில் பணம் கட்டி விட்டு சென்றார்...நீங்கள் வந்தால் இதை உங்களிடம் கொடுக்க சொன்னார் என்று ரசீதை நீட்ட.
வெட்கத்தில் பசுபதியின் முகம் வாடி போகிறது.... தலைவரின் ஆட்கள் நடராஜன்...கிருஷ்ணமூர்த்தி.... சீதாராமன் ஆகியோர் ஆளுக்கு ஒரு வேலைக்கு பொறுப்புகள் ஏற்று கொண்டு இருக்கும் தகவலையும் சொல்கிறார் மண்டப மேலாளர்...
திருமண நாள் அன்று முகூர்த்தம் வரும் அரை மணி நேரம் முன்பே வள்ளல் நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி...சகஸ்ரநாமம்... ஆகியோருடன் தானும் விண்ணில் இருந்து வந்து இறங்கிய தேவதூதர் போல வந்து திருமண மண்டபத்தில் நம் தலைவரும் வந்து நின்றார்.
பத்திரிகை கொடுக்கும் போது முகத்தில் எந்த reaction...காட்டாமல் தனது திருமணத்துக்கு வருவாரா வர மாட்டாரா என்று தவித்து கொண்டு இருந்த பசுபதி திருமணம் முடிந்த பிறகு..
குலுங்கி குலுங்கி தனி அறையில் அழுது தீர்க்கிறார் நம் பொன் மன செம்மலின் உயர்ந்த உள்ளம் கண்டு கொண்டு.....
அவர்தான் நம் தங்க தலைவர்....அவர் மூச்சு காத்து பட்டு சோத்து பஞ்சம் தீர்ந்தவர்கள் பட்டியல் தொடரும்.
உங்களில் ஒருவன் நெல்லை மணி...
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...நன்றி...
எவர் வாழ்விலும் விளக்கேற்றி வைத்தே வழக்கம் பழக்கம் நம் மன்னவனருக்கு......NM
-
#புரட்சி_தலைவர்_பொன்மனச்செம்மல்
#எம்ஜிஆர்_அவர்களின்_ஆசியோடு நண்பர் படப்பை ஆர்.டி.பாபுவுடன் இணைந்து:
திடீர் எம்ஜிஆர் அபிமானிகளாகிய ரஜினி, பிஜேபி முருகன், கமல் என புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களை சொந்தம் கொண்டாடிய போது, எம்ஜிஆர் எங்களுக்கு தான் சொந்தம் என்று அஇஅதிமுகவின் தலைமை முதல் மந்திரிகள் வரை அப்படியே பொங்கி எழுந்து பேட்டி கொடுத்தனர்!
அஇஅதிமுக இன்றும் அவரை முன்னிலைப் படுத்தவே இல்லை;
பெயருக்கு மட்டும் தான் எம்ஜிஆர் பெயரை உச்சரிப்பு செய்கின்றனர் என்பதற்கு சாட்சியே, திங்கட் கிழமை செய்தித்தாள்களில் வெளியான இந்த விளம்பரம்...! மருந்திற்கு கூட எம்ஜியார் பெயரோபுகைப்படமோ, இல்லையே?
அதே நேரத்தில் எம்ஜிஆரை எல்லோரும் சொந்தம் கொண்டாடிய போது அரசியல் செய்ய காரணம் தேவைபட்டு, எம்ஜிஆருக்கு எதிராக பேசினால்? நாம் பெரிய அளவில் பேசப் படுவோம் என்ற கேவலமான அரசியலை முன்னெடுத்து
எம்ஜிஆர் ஆட்சியில் என்ன செய்தார்? என்று கேட்கும் சைமன் என்கின்ற சீமானுக்கும்...
எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்தின் மகத்துவம் பற்றி அஇஅதிமுக தலைமை அறிந்து கொள்ளவும், அம்மா புராணம் மட்டும் பாடும் புலவர்களுக்குமான எனது பதில்!
எம்ஜிஆர் மறைந்து 33 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரைச் சொந்தம் கொண்டாடும் அரசியல் உத்தியை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்கும் சூழல், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் உருவாகி உள்ளதை தேர்தல் களம் உணர்த்தி வருகிறது!
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருக்கமான நட்புடன் இருந்தவர்! திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் முக்கிய சக்தியாகவும் இருந்தார்!
1957-இல் திமுக பெற்ற 15% வாக்கு வங்கியில் எம்.ஜி.ஆரின் பங்கும் இருந்தது!
1964-இல் திமுகவினால் கிடைத்த எம்எல்சி பதவியை ராஜிநாமா செய்து, "காமராஜர் என் தலைவர், அண்ணா எனது வழிகாட்டி' என திமுகவில் இருந்து கொண்டே அதிகார அரசியல் செய்யுமளவுக்கு மக்கள் செல்வாக்குடன் திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர்!
1967-இல் கொள்கை முரண்களுடன் கூடிய திமுக கூட்டணியின் வாக்கு வங்கி 40% ஆக உயர்ந்ததற்கும், வெற்றிக்கும் எம்ஜிஆர் குண்டடி பட்ட போஸ்டரே காரணம்!
1969-இல் அண்ணா மறைவுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதிமுதல்வராவதற்கு பக்கபலமாக இருந்தவரே எம்ஜிஆர் தான்! திமுகவின் பொருளாளராகப் பொறுப்பேற்று, திமுகவின் 2-வது பெரிய சக்தியானார் எம்ஜிஆர்!
1972-இல் திமுகவில் இருந்து நீக்கப் பட்ட பிறகு அதிமுகவை உருவாக்கி, புதுவையில் 1974 யில் ஆட்சியைப் பிடித்தார்!
எம்ஜிஆரின் ஈர்ப்பு சக்தி அப்படி!
1977 சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியில் 30.3% வாக்குகளைப் பெற்று தமிழத்தின் முதன்மையான அரசியல் சக்தியாக உருவெடுத்தார்!
1979-இல் பிரதமர் சரண்சிங் அமைச்சரவையில், திமுகவின் தலித் முகமாக இருந்து முரண்பட்டு வெளியேறிய சத்தியவாணிமுத்து- வுக்கு பதவியை கொடுத்து, 1980- மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக இந்திய தலித்துகள் முகமான பாபு ஜெகஜீவன்ராமை முன்னிலைப் படுத்திய எம்ஜிஆரின் ராஜதந்திர நடவடிக்கைகள் தமிழகத்தில் கிட்டதட்ட 23%-க்கு மேற்பட்ட தலித் வாக்குகள் அதிமுக வசமே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள உதவியது!
1985-திருச்செந்தூர் தொகுதி இடை தேர்தலுக்கு முன்பாக பொதுப் பிரிவிலிருந்த கிறிஸ்தவ நாடார் களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு மாற்றிய மற்றொரு ராஜதந்திர நடவடிக்கையினால் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் எம்ஜிஆரின் வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தியது!
1980- மக்களவை தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றதால், எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது!
காங்கிரஸ்-திமுக கூட்டணியை எதிர்த்து 38.8% வாக்குகள் பெற்று மீண்டும் ஆட்சியமைத்தார் எம்ஜிஆர்!
இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும், சமூக நீதி கொள்கையில் உறுதியான கொள்கையுடன் இருப்பவர் எம்ஜிஆர் என்ற நம்பிக்கையைத் தக்கவைக்க, இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் எடுத்த நடவடிக்கைகளே சாட்சியாக இருந்தன!
பொருளாதார அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முழங்கிய எம்ஜிஆர்.தான், 31% சதவீதமாக இருந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, தமிழகத்தின் சமூகநீதி கொள்கை யின் பாதுகாவலராகத் திகழ்ந்தார்!
கட்சியின் மூத்த தலைவர்எஸ்டிஎஸ்- சின் ஆலோசனைப்படி, பரம்பரை கிராம நிர்வாக அலுவலர்கள் முறை யை (கிராம முன்சீப்) ஒழித்து, பல ஆயிரம் படித்த இளைஞர்கள்(vao) அதிலும் குறிப்பாக, 2 ஆயிரம் தலித் இளைஞர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக உருவாக்கியது எம்ஜிஆரின் சமூக நீதிப்பார்வைக்கு மிகச் சிறந்த உதாரணம்.!
இலவச மதிய உணவுத் திட்டத்தை சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தி யது,
பள்ளி மாணவர்களுக்கு இலவச பல்பொடி, செருப்பு வழங்கியது,
மிதிவண்டிகளில் இருவர் பயணம் செய்ய அனுமதியளித்தது...
ஆகியவை, ஏழைகளுக்காகவே எம்.ஜி.ஆர்., தன் ஆட்சியைநடத்தினார் என்பதை பறைசாற்றும் ஆவணங்க ளாக இன்றும் காட்சியளிக்கின்றன!
முதல்முறையாக...
#அதிமுக_அல்லாத_வேறொரு_கட்சித்_தலைவர்_எம்ஜிஆர்_பெயர ை_தேர்தல்_களத்தில்_பயன்படுத்தியது_கருணாநிதிதா ன்!
1984 தேர்தல் பிரசாரத்தின் போது, "எனது 40 ஆண்டுகால நண்பர் எம்ஜிஆர் குணமடைந்து வந்ததும் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறேன்; எனவே, எனக்கு வாக்களியுங்கள்,"' என கலைஞர் கருணாநிதி கெஞ்சியபோதும், எம்.ஜி.ஆரின் வாக்கு வங்கியை அசைக்கக்கூட அவரால் முடியவில்லை!
அப்போது, அமெரிக்காவில் இருந்த படியே, நேரடி பிரசாரம் செய்யாமல் முதல்வராகி சாதனை படைத்தார்!
இருந்தாலும், எம்ஜிஆர் எனது நண்பர் என்ற உணர்வுபூர்வமான தனது முழக்கத்தை உச்சரிப்பதை தனது இறுதி காலம்வரை கலைஞர் கருணாநிதி நிறுத்தியதில்லை!
தொடர்ந்து, மூன்றுமுறை முதல்வர் பதவி வகித்த எம்ஜிஆர் 24.12.1987 -ல் மறைந்த பிறகு, அவரதுஅரசியல் வாரிசு யார் என்ற போட்டியினால், தமிழக சட்டசபை கலைக்கப் பட்டு இரட்டை இலை சின்னம் முடக்கப் பட்டது!
1989 தேர்தலில் தாங்கள்தான் எம்ஜிஆரின் அரசியல் வாரிசு என களம் கண்ட ஜெயலலிதா சேவல் சின்னத்தில் 22.3% வாக்குகளை யும், எம்.ஜி.ஆரின் மனைவி திருமதி வி.என்.ஜானகி 9.1% வாக்குகளை யும் பெற்றனர்!
இதையடுத்து, அரசியல் களத்தில் ஜெயலலிதாவுக்கு தன் ஆதரவை தெரிவித்துவிட்டு, அரசியலிலிருந்து வி.என்.ஜானகி ஓய்வு பெற்றதால், 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் இரட்டை இலை
சின்னத் தை ஜெயலலிதா பெற்று, எம்ஜிஆரின் ஒரே அரசியல் வாரிசாக உருவெடுத்தார்!
இருப்பினும், 1991 தேர்தலில் சுயேச்சைகளாக களம் இறங்கி எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தாமரைக்கனி, சாத்தூரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அறந்தாங்கியில் திருநாவுக்கரசர் ஆகியோர் வெற்றி பெற்றாலும், எம்ஜிஆரின் அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்!
தொடர்ந்து, சசிகலா கும்பலால் ஜெ.அம்மாவுடன் முரண்பட்ட மூத்த தலைவர்கள் ஆர்.எம்.வீரப்பன், பண்ருட்டியார், திருநாவுக்கரசர், சு.முத்துசாமி உள்ளிட்ட சிலர், எம்ஜிஆர் பெயரைப் பயன்படுத்தி, மாற்று அரசியல் இயக்கங்களைக் கண்ட போதும், அதிமுகவுக்கு எதிரான அரசியல் எடுபடவில்லை!
ஆனால், எம்ஜிஆர் போலவே மிகவும் துணிச்சலான முடிவு, ஈகை குணம் கொண்ட விஜயகாந்த், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் "கருப்பு எம்.ஜி.ஆர்.' எனக்கூறி, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்!
அஇஅதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்திலும், மதுரையை சுற்றியுள்ள பகுதிகள், வட தமிழகத்திலும் அதிமுக, பாமக கட்சிகள் பின்னடைவை சந்திக்க விஜயகாந்தின் கருப்பு எம்ஜிஆர் முழக்கம் முக்கியப் பங்கு வகித்தது!
2006 முதல் 2011 வரை நடைபெற்ற இடை தேர்தல்களிலும் விஜயகாந்த் தின் கருப்பு எம்ஜிஆர் முழக்கம் அதிமுகவுக்கு பெரும் சவாலாகவே இருந்தது!
விஜயகாந்தின் கருப்பு எம்ஜிஆர் முழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ஒரே எம்ஜிஆர் தான், கருப்பு எம்ஜிஆர் என்பதெல்லாம் கிடையாது என ஜெயலலிதா எதிர்வினையாற்றினார்!
ஆனாலும், எம்ஜிஆர் சக்திகள் இணைகிறோம் எனக் கூறி, கடந்த 2011-இல் அதிமுக-தேமுதிக கூட்டணி ஏற்பட்ட பிறகுதான் கருப்பு எம்ஜிஆர் முழக்கத்துக்கான வீரியம் குறைந்தது!
மீண்டும் எம்ஜிஆர் பெயரை மையப் படுத்தி, சொந்தம் கொண்டாடும் அரசியல் தலைதூக்கியுள்ளது!
2018 -இல் கல்லூரி விழா ஒன்றில் அரசியலுக்கு வருவேன் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், "எம்ஜிஆர் ஓர் அவதார புருஷர்; அவரைப் போல ஆக முடியாது!
ஆனால், அவரின் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்' என்று கூறி, அரசியல் பிரவேச அறிவிப்பை உறுதிப்படுத்தினார்!
தற்போது தேர்தல் களத்தில் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், நானும் எம்.ஜி.ஆரின் நீட்சிதான் எனக் கூறியிருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது!
வேல் யாத்திரை நடத்திய பாஜக கூட பிரசார வேனில் எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தியது!
மேலும், யாத்திரை முடிவில் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செüஹான், "பாஜகவால் தான் எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டு வர முடியும்' என்றார்!
இவற்றையெல்லாம் பார்த்தால், வரவுள்ள 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரசார உத்திகளில் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர் நிச்சயம் இடம் பெறும் என்பது தெளிவாகிறது!
எம்ஜிஆர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பிறகும், தேர்தல் களத்தில் அவரது பெயரைப் பயன்படுத்த பகீரத முயற்சி தொடர்கிறது!
எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னால் வாக்குகள் விழும் என்ற எண்ணம், அவர் பெயரைப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு உள்ளது!
'கால வெள்ளத்தால் தமிழக தேர்தல் களத்தில் அழிக்க முடியாத சக்தி யாக எப்போதும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருக்கிறார்,' என்பதைத் தான் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன!
ஆனால், அது ஏனோ அஇஅதிமுக வின் இன்றைய தலைமைக்குத் தெரியவில்லை, புரியவில்லை!?
நன்றி:
அன்புடன், படப்பை ஆர்.டி.பாபு
(சிறு திருத்தங்கள் அதிர்வுடன்... Kmy.
-
நான்தான் ஹீரோ;** எம்.ஜி.ஆர்.*************************************** *************************************** ‘ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்றுகொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.
என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?
சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.
‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’
ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’
விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.
வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.
எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.
காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.
‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’
எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.
‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.
செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.
எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.
கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.
திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.
‘படம் நிறுத்தப்படுகிறது.’
வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.
முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.
எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்...(எம்ஜிஆரின் அரசியல் வாழ்வைப் பதிவு செய்யும் ‘வாத்யார்’ புத்தகத்தின் ஆசிரியர்.........
-
தனியார் தொலைக்காட்சிகளில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள்*ஒளிபரப்பான*விவரம் ( 21/12/20 முதல்* 31/12/20 வரை )
---------------------------------------------------------------------------------------------------------------------
21/12/20-சன் லைஃப்* -காலை 11 மணி -என் அண்ணன்*
* * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி -கன்னித்தாய்*
22/12/20-சன் லைஃப் - மாலை 4 மணி - உழைக்கும் கரங்கள்**
* * * * * * * *புது யுகம் - இரவு 7 மணி* - தாய்க்கு தலை மகன்*
23/12/20-சன்* லைஃப் -காலை 11 மணி - பல்லாண்டு வாழ்க*
* * * * * * * பாலிமர் டிவி - இரவு* 11 மணி - தனிப்பிறவி*
24/12/20-மெகா டிவி - காலை 9 மணி - படகோட்டி*
* * * * * * * ஜெயா டிவி -காலை 10 மணி - இதய வீணை*
* * * * * * முரசு -மதியம் 12 மணி /இரவு 7 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * *மீனாட்சி டிவி -மதியம் 12 மணி - நல்ல நேரம்*
* * * * * *ஜெயா டிவி -பிற்பகல் 1.30 மணி -குமரிக்கோட்டம்*
* * * * * *வசந்த் டிவி - பிற்பகல் 1.30 மணி - நல்ல நேரம்*
* * * * * *மெகா 24- பிற்பகல் 2.30 மணி - தாயின்* மடியில்*
* * * * * *சன் லைஃப் -மாலை 4மணி - தேடி வந்த மாப்பிள்ளை*
* * * * * *ஜெயா மூவிஸ் -இரவு 7 மணி- ஆயிரத்தில் ஒருவன்*
* * * * * புது யுகம் - இரவு 7 மணி - நீரும் நெருப்பும்*
* * * * * *,மெகா 24- இரவு 9 மணி - நல்ல நேரம்*
* * * * * மீனாட்சி டிவி - இரவு 9 மணி - விவசாயி*
25/12/20-சன் லைஃப் - காலை 11 மணி - நம் நாடு*
* * * * * * * பாலிமர் - இரவு 11 மணி - தொழிலாளி*
26/12/20-சன்* லைஃப்- காலை 11 மணி - ஆசைமுகம்*
* * * * * * * முரசு -மதியம் 12 மணி/இரவு 7 மணி - விவசாயி*
27/12/20-மெகா 24- பிற்பகல் 2.30 மணி- தாய்க்கு தலை மகன்*
28/12/20-சன் லைஃப் --காலை 11 மணி -* ராமன் தேடிய சீதை*
* * * * * * *கே டிவி - பிற்பகல் 1 மணி - அவசர போலீஸ் 100
* * * * * * பாலிமர் - பிற்பகல் 2 மணி - இன்று போல் என்றும் வாழ்க*
29/12/20-முரசு -மதியம் 12 மணி /இரவு* 7 மணி - தாயை காத்த தனயன்*
* * * * * * * பாலிமர் டிவி* - இரவு 11 மணி - நவரத்தினம்*
*30/12/20-சன் லைஃப் -காலை 11 மணி -காவல்காரன்*
* * * * * * * புது யுகம்* - இரவு 7 மணி -வேட்டைக்காரன்*
31/12/20- வேந்தர் டிவி- காலை 10.30 மணி - குடும்ப தலைவன்*
* * * * * * * சன் லைஃப் - காலை 11 மணி - ஆனந்த ஜோதி*
* * * * * * * முரசு -மதியம் 12மணி/இரவு 7 மணி -அலிபாபாவும் 40திருடர்களும்** * * * * * * * * * *
* * * * * * * *
-
மக்கள் திலகம் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
மறு வெளியீடு தொடர்ச்சி.............
_________
28/12/20 முதல் ஏரல்( நெல்லை மாவட்டம்) சந்திராவில் தர்மம் தலை காக்கும் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
தகவல் உதவி திரு ராஜா, நெல்லை.
01/01/2021 முதல்
_______
கரூர் லட்சுமி ராம் அரங்கில் எங்க வீட்டு பிள்ளை தினசரி 3 காட்சிகள்
தகவல் உதவி திரு.எஸ். குமார், மதுரை
சென்னை எம்.எம். தியேட்டர் (தண்டையா ர் பேட்டை) எங்க வீட்டு பிள்ளை தினசரி 2 காட்சிகள்( மேட்னி/ மாலை)
தகவல் உதவி திரு. ராமு, மின்ட்
ஆலங்குடி (தஞ்சை மாவட்டம்) வி. சி. சினிமாஸ்- ஆயிரத்தில் ஒருவன்
தகவல் உதவி திரு.சொக்கலிங்கம். திவ்யா பிலிம்ஸ்
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள் மறு வெளியீடு தொடர்ச்சி .................
---------------------------------------------------------------------------------------------------------------------
ஆங்கில புத்தாண்டு தினத்தில் மேலும்* வெளியாகும் படங்கள் விவரம் (01/01/21)
-------------------------------------------------------------------------------------------------------------------------
-திருப்பூர் மணீஸ் அரங்கில் - அன்பே வா - வெற்றிகரமான 3 வது வாரம்*
தகவல் : உதவி :திரு.மனோகரன், திருப்பூர் .
மதுரை -பழனி ஆறுமுகா - நாடோடி மன்னன் - தினசரி 4 காட்சிகள்*
தகவல் உதவி : திரு.எஸ்.குமார், மதுரை .
காரைக்குடி -சிவம் - நாடோடி மன்னன் - தினசரி 3 காட்சிகள்*
தகவல் உதவி திரு.வி.ராஜா, நெல்லை .
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இணைய*தளத்தின்*பதிவாளர்கள், பார்வையாளர்கள்,ஆதரவாளர்கள் ,அனைவருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நல்லாசியுடன்* இனிய ஆங்கில*புத்தாண்டு வாழ்த்துக்கள்* 2021.
-
புரட்சித் தலைவரின் தொண்டர்களுக்கும் உண்மையை புறந்தள்ளும் கைபிள்ளைகளுக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அந்தக்காலத்தில் குள்ளநரி மனம் படைத்த ஒரு சிலர் புறம்போக்கு இடத்தை வளைத்து போட்டுக்கொண்டு ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், அண்ணன் தம்பிகள் என்று வைத்துக் கொள்ளுங்கள், நீதிமன்றத்துக்கு செல்வார்களாம்.
இதில் நான்தான் 10 வருடங்களாக அனுபவத்தில் இருக்கிறேன் என்று அண்ணனும், நானும் பல வருடங்களுக்கு மேல் இருக்கிறேன் என்று தம்பியும் சொல்வார்களாம். விசாரித்து முடிவில் இது உனக்கு, இது அவனுக்கு என்று தீர்ப்பு வந்ததும் இருவரும் கொண்டாடுவார்களாம்.
ஏனென்றால் புறம்போக்கு இடத்துக்கு மன்றத்தின் அனுமதி கிடைத்தாயிற்றே. இது ஒரு வகை யுக்தி. அதுபோல நம்ம கைஸ்களும் புறம்போக்கு அய்யன் படத்துக்கு பட்டறை மூலம் வசூல் தயார் செய்து ஒன்றிரண்டு படங்களை தவிர மற்ற படங்களுக்கு ரொம்ப அதிகமாக போட மாட்டார்கள். தலைவர் படத்துக்கு 60 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை போட்டு பதிவிடுவார்கள். நாம் சரி குறைவாகத்தானே இருக்கிறது என்று நம் படத்துடன் ஒப்பீடு செய்தால் போதும் அந்த டூப்ளிகேட் வசூலுக்கு பட்டா போட்டு விட்டு அதையே குறிப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படித்தான் அந்தக்காலத்தில் 'சிம்மக்குரல்' என்று இலங்கையில் இருந்து வெளிவந்த மஞ்சள் பத்திரிகையில் 'கனடா காண்டா' ஒன்று பொய் வசூலை பரப்பி எழுதியதை தற்போது மேற்கோள் காட்டி போட்டு அதை உண்மையாக்கப் பார்க்கிறது. ஆதலால் இந்த பட்டறை வசூல் என்பது எள்முனையும் உண்மையில்லை.
அப்படி உண்மையாக இருந்திருந்தால் அய்யனும் நல்ல சம்பளம் வாங்கி இறுதி வரையில் நடித்திருப்பார். அய்யனை திரையுலகத்தை விட்டே ஓட ஓட விரட்டியிருக்க மாட்டார்கள்.
இந்த 'மதிஒளி' 'சிம்மக்குரல்' 'திரைமன்னன்' 'நவசக்தி' இது போன்ற எலும்பு தின்னி பத்திரிகைகளில் வந்தால் அது உண்மையாகி விடாது. உதாரணமாக 'திரைமன்னன்' பத்திரிகையில் வந்த தலைப்பு செய்தியை பாருங்கள். 'ராஜா' வசூலில் 'ரிக்ஷாக்காரனை' முந்தி விட்டதாம். ஆனால் இந்த 'ராஜா' 'ரிக்ஷாக்காரனின்' காலடியை வருடி பிழைத்த கதையை நாடறியும்.. இதுபோன்ற அண்டப்புளுகுகளையும் ஆகாசப்புளுகுகளையும் அரங்கேற்ற இதுபோன்ற கேவலமான பத்திரிகைகளை கைகூலி கொடுத்து வளர்த்து விட்டது யார் குற்றம்?
மேலும் கண்மூடித்தனமான பட்டறை வசூலை கொடுத்தும் அய்யனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்த முடியாமல் இறுதியில் 'புதியவான'த்தில் புரட்சித்தலைவரை போற்றிப்பாடியும் ஒன்றும் கதையாகமல் போனது யார் குற்றம்? மொத்தத்தில் கைஸ்களை கற்பனை வசூல் கதையை அளக்க விட்டு டிக்கெட் கிழிக்க விட்டதுதான் கொடுமையின் உச்சக்கட்டம்.. அதை நன்கு புரிந்து கொண்டு இது போன்ற துர்பத்திரிகைகளின் வாந்தியை ஒதுக்கி வைத்து விட்டு வரும் நல்லோர் முகத்திலே விழிப்போம் என்று சபதமேற்போம். ஒரு சில கைஸ்கள் 'உரிமைக்குரலி'ல் வருகின்ற வசூல்கள் போலியானது என்று எக்காளமிடுகின்றன.
"உரிமைக்குரலி"ன் ஆசிரியர் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தலைவரின் நற்பணிக்கென்று ஒதுக்கி தமிழகம் முழுவதும் தேடி தேடி பல சிறப்பு மலர்களை ஆய்வு செய்து அதில் வெளியான வசூல் விபரங்களை பிரசுரம் செய்கிறார். தவறு எங்கேயும் நடந்து விடக்கூடாது ஏன்பதில் மிகவும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருப்பவர். கைஸ்களை போல போலி பட்டறை வசூல் தயாரிப்பவர் அல்ல. தாங்கள் செய்யும் வசூல் மோசடிகளை அடுத்தவர் மீது பழி சுமத்துவதில் வல்லவர்கள்தான் இந்த பரமார்த்த குருவின் சீடர் கைஸ்கள்.
இதில் 'கனடா காண்டா' ஒன்று ஓட்டை வீட்டுக்குள் புகுந்து உள்ளே இருந்த 3 நாட்கள் அனுமதி டிக்கெட் அனைத்தையும் பிராண்டி தூக்கிக் கொண்டு போனதாக செய்தி ஒன்று கூறுகிறது. 'கனடா காண்டா'வின் பாவச்செயலை புரிந்து கொண்ட. அவருடைய தமையன் தலைவர் பாசறையில் சேர்ந்து தீட்சை பெற்று 'கனடா காண்டா'வின் புழுகுமூட்டைகளை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.
ஊர்க்குருவி ஒரு நாளும் பருந்தாகப் போவதில்லை, உளறித் திரியும் கைஸ்கள் ஒரு நாளும் உத்தமன் ஆகப்போவதுமில்லை. 'பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை' என்ற புரட்சி தலைவரின்
பாடலின் உட்கருத்தை புரிந்து கொண்டு ஏமாற்றும் கைபிள்ளைகளின் கீழ்த்தரமான செயலை விரட்டி அடிப்போம்.
மீண்டும் உ...த்தமன் தொடர் பதிவில் சந்திப்போம்..........ksr.........
-
இது எம்.ஜி.ஆர் படம்!
-------------------------------
எம்.ஜி.ஆர் சினிமாப் பதிவுடன் இன்றைய வருடத்தை நிறைவு செய்யும் உத்தேசம்!
அது பெற்றால் தான் பிள்ளையா படம்!
இந்தப் படத்தின் ஷூட்டிங்கை அடுத்து தானே அவருக்கு
ஷூட்டிங்கும் நடந்தது??
அந்தப் பாடல் பதிவு செய்யப்பட்ட பிறகு அது எம்.ஜி.ஆரின் பார்வைக்குப் போனது! பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆரின் முகம் வேர்வைக்குப் போனது?
அந்த அளவு டென்ஷன் ஆகிறார் எம்.ஜி.ஆர்--
உதவி இயக்குனர் வரிசையில் இருந்த மாதவனிடம் கோபத்தில் இரைகிறார்--
இது உங்க யாரு படமும் கிடையாது.
இது இந்த ராமச்சந்திரனோடப் படம்!
எந்தப் பாட்ட யாருக்கு வைக்கணும்ன்னு தெரியாதா??
கடுப்பில் இருக்கும் எம்.ஜி.ஆர்,,வாலியை அழைத்து அவரையும் குதறுகிறார்?
ஏங்க இந்தப் பாட்டு எனக்குத் தான் செட் ஆகும்ன்னு நீங்க டைரக்ட்டர் கிட்டே சொல்லக் கூடாதா??
எம்.ஜி.ஆர்,,இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சுவை முகத்துக்கு நேரேக் கடிந்து கொள்ள மாட்டார்!
காரணம்,,அவரது சீனியாரிட்டி!
நான்,,என்னோட வழக்கமான ஸ்டைலை விட்டுட்டு இந்தப் படத்துல என் நடிப்பக் காட்டி சக்சஸ் ஆகணும்ன்னு பாடுபட்டுக் கிட்டு இருக்கேன்
நான் நடிக்கும் படத்துல இந்தப் பாட்டக் காமெடியன் பாடினா ரசிகங்க எப்படி ஏத்துப்பாங்க??
இவ்வளவு ஆவேசம் எம்.ஜி.ஆர் அடைந்ததற்குக் காரணம்??
தங்கவேலு பாடுவதாக எடுக்கப்பட்ட அந்தப் பாடல்--
நல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி--இந்த
நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி--ஒரு
சரித்திரம் இருக்குது தம்பி!!
எம்.ஜி.ஆர் பாடுவதாக மீண்டும் அந்தப் பாடல் ரீ-ஷூட் செய்யப்பட்டு எடுக்கப்பட்டது!
படம்---எம்.ஆர்.ராதாவின் பினாமி எடுத்தது!
எம்.ஜி.ஆரின் டென்ஷன் நியாயம் தானே???...vtr...
-
திரைக் கவித் திலகம்:22.
********************
காதல்.இந்த வார்த்தையை கேட்கும்போதே மனதிற்குள் பூ பூக்கிறதா?. வாலிபத்தைக் கடந்தவர் எவரும் இதிலிருந்து தப்பிக்க முடியாது.இனக் கவர்ச்சி என்பதையும் தாண்டி இதில் அப்படி என்னதான் இருக்கிறது.?. மலரில் தேன் சுரப்பதைப் போல் மனிதனிடம் காதல் சுரக்கிறது.ஆனால் தேனின் அருமை அந்த மலருக்குத் தெரிவதில்லை.காதலின் மகத்துவம் மனிதனுக்கும் புரிவதில்லை.காதலைக் கொண்டாடும் அவன் தான் அதை கொச்சைப்படுத்தவும் செய்கிறான்.எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்கிறான்.அப்படியென்றால் அந்த ஹார்மோனை மனிதனிடம் வைத்தவன் வேலையில்லாதவனா?.இந்த பிரபஞ்சத்திற்கு எது மூலமோ அதுவே காதலுக்கும் மூலம்.எண்ணங்களையும் கனவுகளையும் விஞ்ஞானத்தால் விளக்க முடியாது.அதே போல் தான் காதலும்.இந்த காதல் தான் சங்க காலம் தொட்டு இன்று வரை நிறைய கவிஞர்களை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.மொத்த திரைத் துறையும் இதை நம்பித் தான் இருக்கிறது.பத்து பாடல்கள் இருந்தால் அதில் பாதி காதலைத் தான் பாடும்.அதிலொரு அழகான பாடலை ஐயா மருதகாசி அருமையாகத் தந்திருப்பார்.
திரைக் கவித் திலகத்தின் தொடரில் இன்று எனக்குப் பிடித்த பாடல்.ஆண்டு இறுதியில் எனது ஆசையாக இங்கே மலர்கிறது.ஐம்பதுகளில் திரைத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய ஐயா மருதகாசி அறுபதுகளில் கொஞ்சம் ஓய்வெடுத்தார்.திரைத் துறையில் அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களே அவரை சொந்த ஊருக்குத் துரத்தியது.ஆரம்ப காலகட்டத்தில் வளர்ந்து வரும் இரு இளம் ஹீரோக்களான இரு திலகங்களுக்கும் ஐயா நிறைய பாடல்களை எழுதியிருந்தார்.அவர்கள் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்தபோது தேடினால் ஆளைக் காணோம்.நடிகர் திலகத்தை இவராகவே தவிர்த்தார் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.மக்கள் திலகத்திற்கும் மகத்தான பாடல்களை தந்திருக்கிறார்.அவரும் தேட ஐயா சொந்த ஊருக்குப் போய்விட்டார் என்ற செய்தியை அவினாசி மணி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார்.பாண்டியராஜனின் மாமனாரான மணி தான் ஆரம்ப காலங்களில் மருதகாசிக்கு உதவியாளராக இருந்தவர்.மணியான கையெழுத்துக்குச் சொந்தக்காரர் மட்டுமல்ல அருமையான எழுத்துக்கும் சொந்தக்காரர்.உடனடியாக எம்.ஜி.ஆர்.கவிஞருக்கு உதவ முன்வந்தார்.கடனில் மூழ்கிய அவரது வீட்டை மீட்டெடுத்தார். ஆனால் கவிஞரோ பத்திரம் உங்களிடமே இருக்கட்டும் என சொல்லிவிட்டார்.மக்கள் திலகத்திற்கும் மருதகாசிக்கும் நீண்ட கால நட்பு.என்னை வாழ வைத்த தெய்வம் தென்னையைப் போன்ற வள்ளல் என வானளாவப் புகழ்ந்த கவிஞர் தனது நூலை அவருக்குத் தான் காணிக்கையாக்கினார்..ஒரு வயது தான் வித்தியாசம் என்றாலும் அண்ணே என்று தான் அழைப்பார்.அப்படிப்பட்ட மக்கள் திலகம் குண்டடிபட்டு ஓய்விற்குப் பிறகு தேவருக்காக படம் ஒப்புக்கொண்டபோது மீண்டும் கவிஞரைத் தேட அவரோ சென்னையில் இல்லை.எப்படியாவது அவரைப் பிடிங்க என தேவரிடம் சொல்ல விலாசம் தேடிப் பிடித்து கடிதம் எழுதினார் தேவர்.
மறுபிறவி எடுத்து வந்த எம்.ஜி.ஆருக்காக மறுபிறவி படம் எடுக்கிறேன் கவிஞரே உங்களுக்கும் அது மறுபிறவியா இருக்கட்டும் மெட்ராஸ் வந்து சேருங்க என கடிதத்தில் அவர் குறிப்டிட்டிருந்தார்.இந்த முறை மருதகாசியால் தட்டிக் கழிக்க முடியவில்லை.அந்தப் படம் ஒரு பாடலோடு நின்றுவிட குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுங்கள் என எம்.ஜி.ஆர்.சொல்ல விரைவாக எடுத்த படம் தான் தேர்த் திருவிழா.இந்தப் படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் கவிஞரின் சொந்த ஊரான கொள்ளிடக் கரையில் தான் படமாக்கப்பட்டது.கும்பகோணம் டி.எஸ்.ஆர்.குடும்பத்தார் உதவியோடு கவிஞரே மொத்த உதவிகளையும் படக் குழுவிற்கு செய்துகொடுத்தார்.குடந்தையின் சுற்று வட்டாரப் பகுதிகளில் படம் வேகமாக வளர்ந்தது.ஏறக்குறைய இருபது நாள் தங்கியிருந்து 26 நாட்களில் மொத்தப் படத்தையும் திருமுகம் பரபரப்பாக எடுத்துத் தர தேவர் படத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்தார்.எதிர்பார்த்த அளவிற்கு அந்தப் படம் வசூலை குவிக்காவிட்டாலும் அருமையான பாடல்களை இசைத் திலகம் அமைத்துத் தர அதிலொரு டூயட்டிற்கு மருதகாசி வரிகளில் அசத்தியிருந்தார்.
68 ல் வெளியான தேர்த்திருவிழாவில் பழைய நண்பர் இணைந்தாலும் ஏற்கனவே இருந்த நண்பர் காணாமல் போனது ஒரு திரையுலக சோகம் தான்.தேவர் பிலிம்ஸின் ஆரம்ப கால தூணாக இருந்த ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆர்.பேச்சையும் மீறி இயக்குநர் அவதாரம் எடுத்ததால் தேவர் பிலிம்ஸிலிருந்து கழற்றிவிடப்பட்டார்.இந்தப் படத்தின் வசனங்களை மதுரை திருமாறன் தான் எழுதினார்.காவிரியில் பரிசல் ஓட்டும் சரவணன் பாத்திரத்தில் மக்கள் திலகம் வர அவரது காதலி வள்ளியாக ஜெயலலிதா.இரு வருங்கால முதல்வர்களை அந்த கொள்ளிடக் கரை அப்போது கண்டது.தனது தங்கையின் வாழ்வை நாசமாக்கிய ஒரு திரைப்பட இயக்குநரைத் தேடி கிராமத்திலிருந்து பட்டணம் வரும் பரிசல்காரன் படத்தில் நடிப்பது போன்ற திரைக்கதையில் ஒரிஜினல் எம்.ஜி.ஆரே.திரையில் வரும் எம்.ஜி.ஆருக்கு கை கொடுக்கும் காட்சி அன்றைக்கு வித்தியாசமான அனுபவம்.மாயவநாதனோடு மருதகாசியும் பாடல்கள் தர துள்ளல் இசையோடு ஒரு டூயட்டில் இசைத் திலகம் மருதகாசி கூட்டணி பழைய பாணியை உடைத்து அறுபதுகளின் ரசிகர்களுக்கு இசை விருந்து அளித்தது.ஐயா டி.எம்.எஸ்.இசையரசி குரல்களில் அட்டகாசமான ஆட்டத்தோடு பல்லவியை அழகாக்கியிருப்பார் ஐயா மருதகாசி.காதல் பாடல்களில் இது ஒரு புது அனுபவம்.வார்த்தைகளை அவ்வளவு அழகாக கோர்த்திருப்பார் மருதகாசி.ஒவ்வொரு வார்த்தையும் எந்தெந்த தொணியில் ஒலிக்க வேண்டும் என்ற இலக்கணத்தை இந்தப் பாடலில் எடுத்துக்காட்டியிருப்பார் இசைத் திலகம் மகாதேவன்.இசையை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளி வார்த்தைகளை முன்னிலைப்படுத்தி ஏற்ற இறக்கத்தோடு மெட்டுக்கட்ட இன்பமாகிறது இந்தப் பாடல்.முன்னிசை அழகாக பின் தொடர ஐயா டி.எம்.எஸ்.தொடங்க அந்த சித்தாடை கட்டியிருக்கும் சிட்டு செமையானதொரு ஃபோக் சாங்.தந்தான தானன னான தானா.
சித்தா...டை கட்டியிருக்கும் சிட்டு..
சின்னச் சிட்டு உன் பார்வை மின்வெட்..டு.
வெறும் வார்த்தைகளை ராகத்தோடு இணைத்தால் தான் அவை நம் நெஞ்சைத் தொடும்.ஒவ்வொரு வார்த்தையும் இங்கே உயிர் பெற்றிருக்கும்.கிராமத்தில் தூக்கிக் கட்டிய கண்டாங்கிச் சேலைகள் தான் இங்கே சித்தாடையாக மாறியிருக்கிறது.அந்த சின்னச் சிட்டின் பார்வையை கவிஞர் வெட்டும் மின்னலாக இங்கே மாற்றியிருப்பார்.அந்த மின்வெட்டை அவ்வளவு அழகாக்கியிருப்பார் ஐயா டி.எம்.எஸ்.அவரது ஜோடிக் குரலாக வரும் இசையரசி அடுத்த அடியில் இன்னும் அசத்தியிருப்பார்.
சிங்கா...ரக் கைகளில் என்னைக் கட்டு
நெஞ்சைத் தொட்டு..
உன் அன்பை நீ கொட்..டு..
அதே மீட்டரில் வருகிறது இந்த வரிகள்.சிங்காரத்தை கொஞ்சம் கூட்டி கட்டு தொட்டு என சிக்கென முடித்து கொட்டு இன்னும் கொஞ்சம் இனிமையாக்க அழகாக செதுக்கிய வரிகளில் இசையரசி இன்னும் அழகு.இடையிசையாக திலகத்தின் அம்சமான ஃப்ளூட்டோடு அவரது அசத்தலான தப்லாக்கள் .இனிமை கூட்ட பியானோ பேங்கோஸ் வகையறாக்கள்.கே.வி.எம்மின் ட்ரேட் மார்க் தாளத்தில் செமையானதொரு அனுபவம்.மக்கள் திலகம் கலைச் செல்வியை அருமையாக ஆட்டுவிக்கும் தங்கப்பன் மாஸ்டர்.சிம்ப்ளான காஸ்டியூம்கள்.அவுட்டோரில் அருமையானதொரு பூங்காவில் வர்மாவின் கேமிரா வளைந்தாட வாளிப்பான சரணங்களை வாரி வழங்குகிறார் ஐயா மருதகாசி.வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும் தனது வரிகளில் கொண்டு போய் வைக்கிறார் கவிஞர்.காதலின் மகத்துவம் தெரிந்த கவிஞர்.இங்கு ஆண் பெண் என்பது இரண்டல்ல.ஒன்றின் பாதி தான் இருவரும்.அந்தப் பாதிகள் தான் இணையத் துடிக்கிறது.எல்லாப் படைப்புகளையும் இயற்கை ஆண் பெண் என இரு கூறாகவே படைத்திருக்கிறது.அதன் உள்ளே ஈர்ப்பு சக்தியை பொருத்தியிருக்கிறது.இதுவே கூடலாகிறது.இந்த சங்கமத்தில் தான் சக்தி பிறக்கிறது.இந்தக் கூடலில் சில நேரம் ஊடல் பிறக்கிறது.இந்தக் ஊடலே மீண்டும் காதலாகிறது.இதைத் தான் வள்ளுவன் தனது இன்பத்துப் பாலிலும் சொல்கிறான்.
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெரின்.
என்கிறான்.இந்த ஊடலை சங்கத் தமிழில் ஏராளமான இடங்களில் காணலாம்.மருத நிலத்தின் குறியீடே ஊடல் தான்.ஊடல் வேறு வெறுத்தல் வேறு.ஊடல் உயிருக்குள் உயிர் கலந்தவர்களுக்கு மட்டுமே உண்டாகும்.அதைத் தான் கவிஞர் தனது சரணத்தில் குறிப்பிடுகிறார்.காதல் மேடையில் கவனமாக ஆடுகிறது இந்த ஜோடி.இசைத் திலகம் தனது மெட்டை வார்த்தைகளுக்குத் தகுந்த மாதிரி மாற்றியமைக்கிறார்.மருதகாசியின் வார்த்தைகளை அவர் எங்கேயோ கொண்டு சென்றிருப்பார்.
இது கா..தல் நா...டக மேடை
என ஆண் குரல் அழகாக எடுத்துத் தர பெண் குரல் அதன் அர்த்தம் புரிந்து அழகாக பதில் தருகிறது.
விழி கா..ட்டுது ஆ..யிரம் ஜாடை.
இங்கு ஆ...டலுண்டு
இன்ப பா...டலுண்டு
சின்ன ஊ...டலுண்டு
பின்னர் கூ...டலுண்டு
தலைவியின் குரலோடு இணைந்து விளையாடும் தலைவனின் மறு மொழி.காதல் வானில் சிறகடிக்கும் இரு பறவைகள்.அன்பு ஆறாகப் பெருக்கெடுத்து காதல் களிப்பில் மிதக்கும்போது உண்டாகும் தவிப்பு.அதன் பின் அணைப்பு.காற்றின் வடிவம் கண்களுக்குத் தெரியாதது போல் காதலரின் மனதின் ஓட்டமும் சில நேரங்களில் புரியாமல் தான் போகிறது.காதலர் மேடையில் விழிகளின் ஜாடையில் ஆடலும் பாடலும் கூடவே கொஞ்சம் ஊடலும் பின்னர் வரும் கூடலும் இங்கே கவனமாக கையாளப்பட்டிருக்கும்.அந்த உணர்வுகளை அவ்வளவு அழகாக எடுத்துத் தருகிறது அந்தக் குரல்கள்.காதலில் கட்டுண்டு கிடக்கும்போது கால நேரம் தெரியாது.அது ஒரு சுகமான போதை.கள்ளில் கிடைக்காத போதை.அதை விடக் கூடுதல் போதை.சொல்வது நானல்ல வள்ளுவன்.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில்
காமத்திற்கு உண்டு.
இங்கே காதலின் உச்சம் தான் காமம்.பிறன் மனை நோக்காத காமம்.கட்டுப்பாட்டோடு இருக்கும் காமம் தான் காதலின் உச்சம்.இங்கு கவிஞர் காதலின் உச்சத்தை நமக்குக் காட்டுகிறார்.மதுவின் போதையை ஒத்திருந்தபோதிலும் காதலின் போதை அன்பின் வெளிப்பாடு.மது போதை உடலைச் சிதைக்கும்.உள்ளத்தைக் குலைக்கும்.துன்பமான நோயில் தள்ளும் காதலின் போதை உள்ளத்திற்கு ஊக்கம் தரும்.இன்பமான நோயது.அது மனிதனை பரிபூர்ண பாதைக்கு அழைத்துச் செல்லும்.சுயநலவாதியான மனிதனை மற்றொரு உயிருக்காக தன்னலம் துறக்கும் தியாகத்தை கற்றுத் தரும்.தான் என்ற அகந்தையை அழிக்கும்.இந்த மொத்தச் சாற்றையும் ஐயா மருதகாசி தனது வரிகளில் கொண்டு வந்திருப்பார்.
மதுவுண்டால் போ...தையைக் கொடுக்கும்
அந்த மயக்கம் கா...தலில் கிடைக்கும்
தன்னை தான் மறக்கும்
அது போர் தொடுக்கும்
இன்ப நோய் கொடுக்கும்
பின்பு ஓய்வெடுக்கும்ம்ம்ம்.
மனிதன் காதலில் தான் தன்னையே இழக்கிறான்.தன்னை இழப்பவனே காதலை அடைகிறான்.பாசமும் நேசமும் ஏன் பக்தியும் கூட காதலின் வெளிப்பாடு தான்.கடவுளிடம் கொண்ட காதல் தான் இங்கு பக்தியாகிறது.இயற்கையின் மீது கொண்ட காதல் தான் எல்லா உயிர்களையும் மதிக்கிறது.காதல் எப்போதுமே சுகமானது.எதிர் துருவமான இரு உள்ளங்களின் காதலைத் தான் மருதகாசி இங்கே அவ்வளவு அழகாகத் தருகிறார்.அடுத்த சரணத்தில் அந்த உள்ளங்கள் இன்னும் அழகாகிறது.ஆண்கள் எப்போதுமே தரும் இடத்தில் இருக்க பெண்கள் பெறுவதையே விரும்புகிறார்கள்.தந்தவன் எப்போதும் கைம்மாறு எதிர்பார்ப்பான்.காதலில் இதுவும் ஒரு அழகு தான்.இதயத்தையே தந்த எனக்கு என்ன கொடுப்பாய்?. என்னையே கொடுக்கிறேனே என்பதில் தான் அவன் பூரிப்படைகிறான்.காதலின் உச்சம் தொடும் வரிகளை கவிஞர் அவ்வளவு அழகாக காட்டியிருப்பார்.
இங்கு தரவா நா...ன் ஒரு பரிசு
அதை பெறவே தூ...ண்டுது மனசு
ஒன்று நா...ன் கொடுத்தால்
என்ன நீ... கொடுப்பாய்?.
உண்ண தேன் கொடுப்பேன்
என்னை நா...ன் கொடுப்பேன்ன்ன்.
ஒரு டூயட் பாடல் என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு இந்தப் பாடல் ஒரு சாட்சி.சாதாரணமாகத் தோன்றும் வார்த்தைகளில் ஒரு அசாதாரணம் இருக்கும்.காதலின் இலக்கணம் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை ஊரிலுள்ள அத்தனை காதலர்களுக்கும் ஒரு உபதேசமாகவே கவிஞர் சொல்லியிருப்பார்.காதல் வெறும் உடல் சம்பந்தப்பட்டதல்ல.அது உணர்வுகள் சம்பந்தப்பட்டது.இரு உள்ளங்கள் சங்கமமாகும்போது வெளிப்படும் உணர்வுகளில் உண்மைத் தன்மை இருக்க வேண்டும்.என்னை நான் கொடுப்பேன் என பெண்மை வந்து நிற்பது வெறும் வார்த்தைகளல்ல. நம்பிக்கையின் உச்சம்.அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது ஆண்மையின் கடமை.அது தான் காதலின் மகிமை.இந்தப் பாடலில் மருதகாசி அதைத் தான் ஒட்டு மொத்த காதலர்களிடம் எதிர்பார்க்கிறார்.இந்த இனிமையான பாடல் காலம் கடந்தும் நமக்கு காதலை போதிக்கிறது.மக்கள் திலகம் கலைச்செல்வியின் இந்தப் பாடலை அவ்வளவு அழகாகச் செதுக்கியிருப்பார்கள் இந்த திரையுலக மேதைகள்.இதே கூட்டணியின் பல பாடல்களைப் பற்றி பேசலாம் வரும் நாட்களில்.இசைக் குடும்பத்து அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வளரும்...... Abdul Samad Fayaz...
-
Happy New Year 2021... Wishes to All...
-
அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் 2021 இல் முதல் தலைவர் பதிவில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி..
என்னை தெரியுமா...பகுதி 1.
தலைவர் அவர்களை உலகு எங்கும் வாழும் உண்மை நல்ல நெஞ்சங்களுக்கு பிடிக்கும்...தலைவர் அனைவரையும் விரும்புவதும் தெரியும்.
தலைவருக்கு மறக்க முடியாத சில நெஞ்சங்கள் வரிசையில் இவரும் உண்டு...
தலைவர் திமுக கட்சியில் பொருளாளர் ஆக நியமிக்கப்பட்ட உடன் அவர் இல்லம் சென்று மாலை அணிவித்து காலில் விழ போக தலைவர் தவறு என்று தடுக்கப்பட்டவர்...
தலைவர் பட்டு ஜிப்பா பறக்கும் தலைமுடி உடன் பலமுறை அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்..
இவர் பெயர் கோடம்பாக்கம் ஏழுமலை....இவர் ஒருநாள் தலைவர் இடம் கையொப்பம் கேட்க அதில் தலைவர் அவர் கையொப்பம் போடாமல் என் ரசிகன் செவன் வாழ்த்துக்கள் என்று ஏழுமலை அவர்களை எண் 7 கொண்டு அழைத்த பெருமை கொண்டவர்.
தலைவர் இயக்கம் கண்ட போது அவரை மலையாளி என்று ஒருவர் திட்ட தீயசக்தி சார்ந்தவர் அவரை அடித்து தன் வேலையை இழந்தவர்.
வேலை நீக்கம் செய்தவர் அந்த நாள் மேயர்...மோகனரங்கம்.. அனகை ராமலிங்கம் கே.ஏ கிருஷ்ணசாமி அவர்களுடன் பயணம் செய்தவர்.
முதலில் வட்ட அமைப்பாளர் ஆக இவரை கட்சி பொறுப்பில் அமர்த்தி அன்று அந்த காவல் சரகத்தில் பணி புரிந்த குழந்தை கனி என்ற ஆய்வாளர் கொண்டு இவரை பற்றி தகவல்கள் சேகரித்து.
பின் செவன் அவர்களை சென்னையை சுற்றி உள்ள 24 பள்ளி சத்துணவு கூடங்களுக்கு கண்காணிப்பளர் பொறுப்பை கொடுத்தார் தலைவர்.
அங்கே யார் மீதும் இவர் தவறுகளை சொன்னால் ஏழை குழந்தைகள் சாப்பிடும் விஷயம் அவர்களுக்கு புரிய வை செவன்..
இவர்களும் இந்த வேலையை விட்டு விட்டால் அவர்கள் குடும்பம் கதி என்ன என்பதை சொல்லி அன்பால் திருத்து என்று ஆணை இட பட்டவர் நம் அறிவுசால் ஆசான் அவர்களால்..
இவரின் நேர்மை நடத்தை கண்டு இவருக்கு ஒதுக்கி கொடுத்த கோடம்பாக்கம் குடிசை மாற்று பகுதி வீட்டுக்கு செவன் அவர்களின் குழந்தை காது குத்து நிகழ்வுக்கு வந்து அங்கே அனைவரையும் மகிழ்வித்தவர் நம் பொன்மனம்....
தீயசக்தியின் நெருங்கிய உறவினர் கு.க செல்வம்...தற்போது மைய கட்சியில் இணைந்தவர் வகித்து வந்த தொகுதி அமைப்பாளர் பொறுப்பை எடுத்து இந்த எளிய தொண்டன் செவனுக்கு கொடுத்து அழகு பார்த்தார் தலைவர்....
செவனை பலமுறை பலர் தலைவர் இடம் மறித்து யார் நீ எங்கே அவரிடன் முண்டி அடித்து ஓட என்று கேட்க தலைவர் அவர் கையை நீட்ட சொல்லி அங்கே அண்ணாவின் உருவம் காட்டி இவர் என் நெருங்கிய தொண்டன் என்று சொல்லும் அளவுக்கு பெயர் வாங்கியவர்..
அமரர் கண்ணதாசன்..
ஏ .பி நாகராஜன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளில் தலைவர் உடன் சரிசமம் ஆக நடக்கும் வாய்ப்பை பெற்ற எளிய தொண்டர்..
இவர் பகுதியில் இருந்த மகளிர் அணி தொகுதி பொறுப்பாளர்...ஒரு கட்டத்தில் தனக்கு உயர் பதவி கிடைக்கவில்லை என்று தலைவரை விமர்சிக்க...அது தலைவர் காதுகளுக்கு எட்ட....
அவரை பொறுப்பில் இருந்து நீக்க... வருந்திய அவர் செவனை சந்தித்து வருத்தம் தெரிவிக்க நிரம்பிய மகளிர் கூட்டம் அடுத்த சில தினங்களில் தலைவரை சந்தித்து முறையிட..
இனி வாய்ப்பு இல்லை கொஞ்ச நாள் அவர் அப்பிடியே இருக்கட்டும் என்று சொல்ல மகளிர் கூட்டம் மன்றாடி கேட்க
இது உங்களின் குரல் போல இல்லை இதன் பின்னணியில் நிச்சியம் செவன் இருப்பார் போல என்று சரியாக கணிக்க.
தலைவர் வீட்டு மரத்து நிழலில் நின்ற செவன் உள்ளே அழைத்து செல்ல பட.
தவறு செய்த அந்த பெண்ணை செவன் சொல்லி மன்னித்து அடுத்த வாரத்தில் அவரை மாவட்ட மகளிர் அணி பொறுப்பில் அழகு பார்க்க அவர் யார் என்று இந்த பதிவில் சொல்வது அழகு அல்ல...
அவரே இன்று வலம் வரும்...முழுமதி
இந்த நீண்ட பதிவு தலைவர் தான் நம்பிய உண்மை தொண்டர் குரலுக்கு எப்படி மதிப்பு கொடுத்தார் என்பதை குறிக்கும் நோக்கில் பதிவிட பட்டது...
இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் செவன் சென்னையில் தலைவர் நினைவுநாள் பிறந்த நாள் அன்று அவரால் முடிந்த நினைவுகள் உடன்..
இன்றும் தொடர்பில் இருக்கிறோம் அவருடன்...
வாழ்க தலைவர் புகழ்.
வாழ்க தலைவரின் உண்மை பக்தர்கள்.
என்னை தெரியுமா பகுதி...2..தொடரும்.
நன்றி...உங்களில் ஒருவன்....
பதிவில் தலைவர் உடன் படத்தில் அவரே..
பின்குறிப்பு.
கு.க .செல்வம் அவர்களுக்கு மறைந்த கருணாநிதி அவர்கள் இல்லம் அருகே ஒரு வீட்டை வாங்கி கொடுத்தார் நம் தங்க தலைவர் என்பது கொசுறு செய்தி நன்றி.
எப்படி பட்ட தலைவர்..
எப்படி பட்ட உண்மை தொண்டர்கள்............nm...
-
மக்கள் செல்வாக்கு மக்கள் திலகத்திற்கு மட்டும் தான் என்ற பெருமையை பெற்றவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவருடைய உருவம் தான் மறைந்தது. அவருடைய புகழ் மறையவில்லை. குறையவில்லை. மலைபோல் உயர்ந்து வளர்ந்து கொண்டு இருக்கிறது .அந்த வள்ளலின் புகழை நாடெங்கிலும் மண்ணிலே விதைத்து வைத்திருக்கிறார்கள். மக்கள் அவரை மறைக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. மக்கள் திலகம் மக்களுக்கு தொண்டு செய்து மக்களின் அன்பைப் பெற்றவர். பொதுமக்களே என் சொத்து என்று சொன்னவர். மக்களால் உயர்ந்தது தான் என் புகழ். நான் மக்கள் சொத்து என்று அடிக்கடி சொல்பவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்.
வள்ளல் எம்ஜிஆர் வாழ்க்கை வரலாறு நூலிலிருந்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் உதவியாளர் எம்.ஜி.ஆர் முத்து எழுதியது.
கொடைவள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.....agm
-
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார்.
‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.
அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்…
‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால்,
பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’ - தி இந்து,... Poongodi...
-
அருகே இருந்து சுட்டாலும் குண்டு சரியாகப் பாயாமல் சிகிச்சை தரப்பட்டு ஒரு வருடத்தில் மீண்டு வந்து விட முடியும்.*
சுட்டதும் மீண்டதுமே ஒரு பெரிய இயக்கத்திற்குத் துணையாக இருந்தன.
சிறுநீரகம் கெட்டுப் போய் அந்த மனிதன் சிகிச்சை பெற்றுத் திரும்பிய போது தமிழக மக்கள் காட்டிய அனுதாபமும் அன்பும் தவிப்பும்* சரித்திரத்தில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. வேறு யாருக்கும் அந்த மரியாதை கிடைக்கவேயில்லை.
தமிழ் தமிழ் என்று பலரும் கூவிக் கொண்டிருக்க, ஒரு மனிதன் அன்பினால் வெகு எளிதாக ஜெயித்து விட்டுப் போனார்.
- பாலகுமாரனின் "இது போதும் "*...
-
உலகில் காண முடியாத அதிசயம் எம் ஜி ஆர்
பொன்மன செம்மலின் பொற்க்கால ஆட்சியில் ஒரு முறை இயற்க்கை புயலால் பாதிப்பு முதல்வர் எம் ஜி ஆரு அவசரகால உத்தரவு போடுகிறார் மக்கள் பாதுகாக்க படுகிறார் என்றாலும் நேரில் மக்களின் துயர் நீக்க புறப்படுகிறார் எம் ஜி ஆர்
முழங்கால் அளவு சேறு தண்ணீரில் இறங்கி மக்களிடம் குறை கேட்க வருகிறார் சூரியனே பூமியில் வந்தது போன்ற ஓளியோடு எம் ஜி ஆர்
இதற்க்கு மேல் நடந்தது தான் சிறப்பு
தங்களை காண வந்த எம் ஜி ஆரிடம் தங்கள் உடமைகள் எல்லாம் சேதம் அடைந்த நிலையிலும் அவர்கள் கூறியது
மகராஜா உங்க ஆட்சியில் எங்களுக்கு எல்லா நிவாரணமும் கிடைத்தது ஒரு குறையும் இல்லை நீங்க இந்த சேறு தண்ணீரில் நடக்காதீர்கள் எங்களால் தாங்க முடியாது என கூறினர்
மக்களி அன்பை இதை விட எந்த மனிதனாலும் பெற முடியாது
எம் ஜி ஆர் ஒரு அதிசய புகழின் சொந்தகாரர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...vrh...
-
புரட்சித் தலைவரின் திரையுலகச் சாதனைகள்!
தமிழ்ப் படங்களிலேயே முதன்முதலில் வெள்ளிவிழா கொண்டாடிய படம் எம்.ஜி.ஆர் நடித்த ‘தக்ஷயக்ஞம்'.
தமிழ்ப் படங்களிலேயே இரண்டாவதாக வெள்ளி விழா கொண்டாடிய படம் 'அசோக்குமார்'.
முதல் படமான 'சதிலீலாவதி'யில் புரட்சி நடிகர் தன் சொந்தக் குரலில் பாடி நடித்தார்.
நாடகமாக நடத்தப்பட்டு முதன்முதலில் படமாக்கப்பட்ட கதை எம்.ஜி.ஆர் நடித்த ‘என் தங்கை’.
முதன் முதலாக ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கம் பரிசுபெற்ற தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மலைக்கள்ளன்'.
முதன்முதலாக ஆறு மொழிகளில் தயாரான தமிழ்ப்படம் எம்.ஜி.ஆரின் ‘மலைக்கள்ளன்'.
முதன்முதல் முழு நீளக் கலரில் தயாரான தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்'.
வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கத் தகுந்தது என்று ‘ஏ’ சர்டிபிகேட் பெற்ற முதல் தமிழ்ப்படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி'.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட 4 தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி வெற்றிகண்ட தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மதுரை வீரன்’.
முதன்முதலாக சென்னையில் ஒரே சமயத்தில் 6 தியேட்டர்களில் வெளிவந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மகாதேவி'
முதன்முதல் ஒரு நடிகர் சொந்தத்தில் படம் தயாரித்து, இயக்கி, சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிய தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்து இயக்கிய படம் ‘நாடோடி மன்னன்'.
'ஹரிதாசு'க்குப் பின் தமிழகத்தில் அதிக நாட்கள் (236 நாட்கள்) ஓடிய ‘எங்க வீட்டுப் பிள்ளை’ சென்னையில் முதன்முதலாக மூன்று தியேட்டர்களில் வெள்ளி விழா கொண்டாடிய படமாகும்.
தமிழ்ப் படங்களிலேயே இரண்டாம் வெளியீட்டில் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆர். நடித்த படங்களே. (நாடோடி மன்னன், எங்க வீட்டுப் பிள்ளை)
தமிழ்ப் படங்களில் 100 நாட்கள் ஓடியது எம்.ஜி.ஆர். படங்களே அதிகம். நூறு நாட்கள் ஓடிய படங்கள் 49.
இலங்கையில் அதிகமாக அதிகப் படங்கள் நூறு நாட்கள் ஓடியவை எம்.ஜி.ஆரின் படங்களே.
சென்னையைத் தவிர தமிழகத்தின் வேறு நகரங்களில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிரம்பி சாதனை செய்தவை எம்.ஜி.ஆரின் படங்களே! (4 படங்கள்)
முதன்முதல் ஆங்கிலப் படம் திரையிடப்படும் 'சபையர்' தியேட்டரில் வெளிவந்து அதிக வசூலைத் தந்த தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கன்னித்தாய்’.
நாடோடி மன்னன், மதுரை வீரன் சாதனையை முறியடித்தது. 1965-ல் திரையிடப்பட்ட எங்க வீட்டுப் பிள்ளை, நாடோடி மன்னனின் சாதனையை முறியடித்தது.
1956 முதல் 12 ஆண்டுகளாக யாராலும் வெல்ல முடியாமல் தென்னக ரீதியில் வசூல் பேரரசராக விளங்கும் ஒரே நடிகர் சாதனை திலகம் எம்.ஜி.ஆரே.
முதன்முதலாக சென்னையில் திரையிடப்பட்ட மூன்று தியேட்டர்களிலும் நல்ல வசூலாகி 25 வாரங்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’.
விஞ்ஞான ரீதியில் முயன்று உண்மையிலேயே பறக்கும் தட்டை செய்து படமாக்கப்பட்ட ஒரே தமிழ்ப் படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘கலையரசி’.
இந்தியாவிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில்) தயாரிக்கப்பட்ட படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘முகராசி’. அதிகப் படங்களில் அதாவது (ஆறு) படங்களில் இரட்டை வேடம் தாங்கி கதாநாயகனாக நடித்த நடிகர் அகில உலகிலேயே எம்.ஜி.ஆர்.தான்.
மாடர்ன் தியேட்டர்ஸ், சரவணா பிலிம்ஸ், விஜயா கம்பைன்ஸ், ஆர்.ஆர்.பிக்சர்ஸ், ஏ.வி.எம்., ஜெமினி ஆகிய நிறுவனங்கள் தயாரித்த முதல் தமிழ் வண்ணப் படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எம்.ஜி.ஆரே.
முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் “பாதுகாப்பு நிதிக்குப் பணம் தாரீர்” என்று வானொலியில் கூறியபோது முதன்முதலாக அதிக தொகை (75 ஆயிரம்) கொடுத்த நடிகர் எம்.ஜி.ஆர். தான்.
இந்தியக் குடியரசுத் தலைவரால் தரப்பட இருந்த ‘பத்மஸ்ரீ’ விருது தமிழை அடிமைப்படுத்த முயலும் இந்தியில் இருப்பதால் ஏற்க மறுத்த முதல் கலைஞர் - ஒரே கலைஞர் எம்.ஜி.ஆரே.
இன்றுவரை எந்த மொழிப் படங்களிலும் கௌரவ நடிகராக நடிக்காத ஒரே கதாநாயக நடிகர் எம்.ஜி.ஆரே.
இன்று வரையில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற வேட்பாளர் எம்.ஜி.ஆர். ஒருவரே.
நன்றி: சமநீதி எம்.ஜி.ஆர். மலர் - 1968
#mgrmovies #mgrsuperhitmovies #எம்ஜிஆர் #எம்ஜிஆர்திரைப்படங்கள் #நாடோடிமன்னன்...VRH.........
-
அந்த நாள் ஞாபகம் :
எம்.ஜி.ஆர் ஒரு நிறைகுடம்.பட்டமும்
பதவியும் இல்லாதபோதே பொறுப்பு
வந்தால் அதனை சமாளிக்கும் அளவுக்குத் திறமை பெற்றிருந்தார்.
இதுதான் ஆச்சரியம் .உதவி செய்வதில் அகலமான மனதோடு
நடந்து இருக்கிறார் கணக்குப் போட்டுப்பார்த்தால் வேண்டாதவர்களுக்கே அவர் அதிகமாக செய்திருக்கிறார்.அவரது நடிப்பைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்,அது அவரது சொந்த நடிப்பு.மற்றவரைப் பார்த்து நடித்ததல்ல.மற்றவர்கள் நடிப்பு கலப்படமாக இருக்கும்.கதாநாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை வகுத்து சினிமாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார்.அவர் ஏழை எளிய மக்கள் மனதில் எப்படி இருக்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை,அது எல்லோருக்கும் தெரியும்.
-நடிகர் எம்.என்.நம்பியார்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க............
-
ஒரு முறை சென்னை சாரதா ஸ்டுடியோ அரங்கில் கன்னட நடிகர் ராஜ்குமார் மற்றும் நம் இதயதெய்வம் அவர்களின் படப்பிடிப்பும் அந்த தளத்தில் ஒரே நேரத்தில் காட்சிகள் எடுக்க புக் செய்யப்பட்டு இருந்தன.
தரை மேலாளர் செய்த குளறுபடி காரணம் ஆக இரண்டு பட குழுவை சேர்ந்தவர்களும் அங்கே அவரவர் உடமைகளுடன் வந்து சேர....
ராஜ்குமார் முதலில் அரங்குக்கு வர சற்று நேரத்தில் தலைவரும் வந்து விட ஒரே பரபரப்பு அங்கே நிலவியது....தலைவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு ராஜ்குமார் அருகில் செல்ல..
அவர் வாங்க உங்க படப்பிடிப்பு நடக்கட்டும் நான் இன்னொரு நாள் வருகிறேன் என்று சொல்ல...தலைவர் அவரை தடுத்து நீங்கள் உங்க படப்பிடிப்பை தொடருங்கள்..
ஒன்றும் இல்லை நான் இன்று இங்கேயே அமர்ந்து உங்கள் காட்சிகள் எடுக்க படுவதை ரசித்து விட்டு போக உங்கள் அனுமதி வேண்டும் என்று சொல்ல.
திகைத்து போன் ராஜ்குமார் என்ன பெருந்தன்மை உங்களுக்கு என்று தலைவரை தழுவி கொள்ள காட்சிகள் எடுக்க பட துவங்க அங்கேயே அரை நாள் இருந்து அதை பார்த்து ரசித்து விடைபெறுகிறார் நம் காவியதலைவர்.
சம்பவம் 2..
தலைவர் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள பெங்களூர் நகரம் சென்று இருந்த போது அன்று இந்திய நாட்டின் ஜனாதிபதி அவர்கள் அரசுமுறை பயணம் ஆக அங்கே வருகை தர.
நகரின் முக்கிய பகுதி மெஜெஸ்டிக் சர்கிள் பகுதியில் தலைவரின் கார் ஜனாதிபதி வருகை காரணம் ஆக ஓரம்கட்ட பட்ட வாகனங்கள் இடையே சிக்கி கொள்ள.
தலைவர் தனது கார் கண்ணாடியை இறக்கி வேடிக்கை பார்க்க அப்போது அங்கே திடீர் என்று வந்த ஒரு போக்குவரத்து காவல் உயர் அதிகாரி தலைவரை பார்த்து விட.
உடனே மற்ற கார்களை வாகனங்களை விவரம் சொல்லி தலைவரின் கார் மாண்புமிகு ஜனாபதி கார் சென்ற உடன் அவரை தொடர்ந்து செல்லும் கார்களுக்கு இடையில் தலைவர் செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்கிறார்.
ஜனாதிபதி அவர்கள் அந்த இடத்தை கடந்த உடன் அருகில் நின்றவர் அது என்ன அந்த தமிழக காருக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்து வழி ஏற்படுத்தி கொடுத்தது பற்றி கேட்க.
அவர் சிரித்து கொண்டே நான் இளம் வயது முதல் ராஜ்குமார் அவர்களின் ரசிகன்..
ஒருசமயம் ஒரு விழாவின் போது ராஜ்குமார் அவர்கள் இங்கே கன்னட நடிகர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி பொறாமை கொள்ள.
அங்கே சென்னையில் நான் ஒரு படப்பிடிப்பு க்கு சென்று இருந்த நேரத்தில் தென் இந்தியாவின் பிரபல நடிகர் புரட்சிதலைவர் எம்ஜிஆர் அவர்கள் தனக்காக அந்த ஸ்டூடியோ தளத்தை விட்டு கொடுத்த நிகழ்வை சுட்டி காட்டி அவரை போல பெருந்தன்மை கொண்டு இங்கே நாம் வாழ பழகி கொள்ளவேண்டும் என்று பேசியதை அங்கு அப்போது கேட்டு கொண்டு இருந்த போக்குவரத்து காவல் அதிகாரி..
சம்பவத்தை நினைத்து தலைவரின் பெருந்தன்மை உணர்ந்து அவரை ராஜ மரியாதை உடன் அங்கே அனுப்பி வைத்தேன் என்று சொல்லுகிறார்.
கால சக்கரம் என்றும் நம் நல்ல மனம் கொண்ட தலைவரை சுற்றி சுழன்றே வரும்.
புரிந்தவர்கள் நிலைத்து நிற்பார்...என்றும் எங்கும்.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி..தொடரும்.
உங்களில் ஒருவன் ..
நெல்லை மணி..நன்றி..........
-
இங்கே உள்ள பதிவில் போட்டிருக்கும் இந்த சுப்புரமணி சுப்புராமன் என்றவர்தான் விளங்காத வீடு படம் டிஜிட்டலில் எடுத்து விட்டிருக்கார். கணேசன் படம் பார்க்க 10 பேர் வந்தாலே ஆகா ஓகோந்னு குதிக்கிற ஆளு படம் பணால் ஆனதில் அடக்கி வாசிக்கிறார். விளங்காத வீடு திரையரங்குகளில்..என்று போஸ்டர் படம் போட்டு கொஞ்ச நேரம் முன்னாடி தன் முக நூலிலும் எல்லா கணேசன் குரூப்பிலும் போட்டு விளம்பரம் பண்றார். பாவம். ஆனா தியேட்டருக்குதான் யாரும் வரவில்லை. கணேசன் ரசிகன் ஒருத்தனாச்சும் இந்தப் படத்தை பத்தி மூச்சு விடலை. நம் தலைவன் படமாவது மறுபடி மறுபடி வெளியீடு வரும். என்னிக்கி இருந்தாலும் வினியோகஸ்தருக்கு லாபம்தான். ஆனா இந்த விளங்காத வீடு இன்னும் 4 நாளில் பொட்டிக்குள் போனால் திருப்பி வராது. சுப்பிரமணி விரல் சூப்புர மணியாகிவிட்டார். ஒருத்தனுக்கு சிரமம் வரும்போது கிண்டல் பண்ணக்கூடாது. அது மனிதாபிமானம் இல்லை. ஆனா, இந்த ஆளுக்கு இந்த அடி வேண்டிதான். எப்ப பாத்தாலும் எம்ஜிஆரை திட்டுறது, உலகம் சுற்றும் வாலிபனை தங்கப்பதக்கம் வசூலில் மிஞ்சியது என்று பொய் சொல்லுவாரு. அதுக்கு தண்டனை கிடைத்து விட்டது. அதிலும் நடிகர் கணேசனே தன் படம் மூலம் இந்த ஆளை தண்டித்து விட்டார். கணேசன் படம் எடுத்து துண்டு போட்டவர்கள் பட்டியலில் சுப்புரமணி சுப்புராமன் இடம்பிடித்து விட்டார். செத்தும் எல்லாருக்கும் இன்னும் கொடுப்பவர் எம்ஜிஆர். செத்தும் தன் ரசிகனையே கெடுப்பவர் கணேசன். இனியாச்சும் எம்ஜிஆர் புகழை உணர்ந்து திருந்துங்கப்பா..........rrn...
-
உலகில் காண முடியாத அதிசயம் எம் ஜி ஆர்
பொன்மன செம்மலின் பொற்க்கால ஆட்சியில் ஒரு முறை இயற்க்கை புயலால் பாதிப்பு முதல்வர் எம் ஜி ஆரு அவசரகால உத்தரவு போடுகிறார் மக்கள் பாதுகாக்க படுகிறார் என்றாலும் நேரில் மக்களின் துயர் நீக்க புறப்படுகிறார் எம் ஜி ஆர்
முழங்கால் அளவு சேறு தண்ணீரில் இறங்கி மக்களிடம் குறை கேட்க வருகிறார் சூரியனே பூமியில் வந்தது போன்ற ஓளியோடு எம் ஜி ஆர்
இதற்க்கு மேல் நடந்தது தான் சிறப்பு
தங்களை காண வந்த எம் ஜி ஆரிடம் தங்கள் உடமைகள் எல்லாம் சேதம் அடைந்த நிலையிலும் அவர்கள் கூறியது
மகராஜா உங்க ஆட்சியில் எங்களுக்கு எல்லா நிவாரணமும் கிடைத்தது ஒரு குறையும் இல்லை நீங்க இந்த சேறு தண்ணீரில் நடக்காதீர்கள் எங்களால் தாங்க முடியாது என கூறினர்
மக்களி அன்பை இதை விட எந்த மனிதனாலும் பெற முடியாது
எம் ஜி ஆர் ஒரு அதிசய புகழின் சொந்தகாரர்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...
-
தொடர் பதிவு- உ...த்தமன். 8
-----------------------------------------------
சார்லஸ் தியேட்டரில் எம்ஜிஆர் படங்கள் வெளியாகும் போது அவர்கள் முறையில்லாமல் அதிக டிக்கெட்கள் வழங்குவதும் அதற்கு கணக்கு காட்டாமல் ஏமாற்றுவதும் வாடிக்கையாக வைத்திருந்ததால் குறிப்பிட்ட தொகை அட்வான்சாக வாங்கிக் கொண்டு ஹையர் அடிப்படையில் படத்தை விநியோகம் செய்தார்கள்.
அதாவது திருநெல்வேலி வசூலில் 75 சதமானம் தந்து விட வேண்டும் என்ற அடிப்படையில் படத்தை விநியோகம் செய்தார்கள். சார்லஸ் அதிபர் வட்டிக்கு அதிகமாக கடன் வாங்கி வட்டியும் ஒழுங்காக செலுத்தாமல் போனதால் அவருக்கு யாரும் கடன் தர மாட்டார்கள். இந்த சூழ்நிலையில் எம்ஜிஆர் படம் ஒன்றுதான் தன்னை காப்பாற்ற முடியும் என்பதால் எம்ஜிஆர் படத்தை விநியோக ஒப்பந்தம் உடனே போட்டு விடுவார்கள்.
ஆனால் படம் வெளிவரும் தருணத்தில் கையில் பணம் இல்லாமல், யாரும் கடன் தர மாட்டார்கள் என்பதால், என்ன செய்வதென்று யோசித்தார். 1967 தீபாவளிக்கு வெளியான "நான்" "ஊட்டி வரை உறவு" "இரு மலர்கள்" "விவசாயி" ஆகிய நான்கு படங்களில் "விவசாயி" சார்லஸில் வெளிவந்தது. "இரு மலர்கள்" ஜோஸப்பில் வெளியாகி 21 நாட்கள் கூட்டமே இல்லாமல் ஓட்டி படத்தை எடுத்து விட்டு அதன் தொடர்ச்சியாக "அன்பே வா" உட்பட தொடர்ச்சியாக தலைவர் படத்தை வெளியிட்டு "விவசாயி"க்கு அதிர்ச்சி அளித்தனர். ஆரம்பத்தில் படத்தை எடுப்பதற்கு கட்ட வேண்டிய டெப்பாசிட் தொகையில் ரூ2000 குறைந்ததால் தியேட்டர் அதிபர் ஒரு காரியம் செய்தார். என்னவென்றால் திகைத்து விடுவீர்கள்.
ரூ2000 ஏற்பாடு செய்ய முடியாமல் படப்பெட்டி வராத சூழ்நிலையில் தீபாவளியன்று 5 காட்சிகள் என்று அறிவித்து விட்டு காலை காட்சி 9 மணிக்கு என்பதால் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.ரூ2000 சேரும் வரையில் டிக்கெட் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். நானும் அந்தக்காட்சிக்கு சென்றிருந்தேன்.
ஒரு காட்சி ஹவுஸ்புல் என்றால் சுமார் எழுநூற்றி சொச்சம் தான் வரும். ஆனால் இவர்கள் ரூ2000
தாண்டி வசூல் செய்து விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு திருநெல்வேலிக்கு காரில் சென்று படப்பெட்டியை எடுத்து வர கிளம்பினார்கள். அப்போது மணி சுமார் 11 இருக்கும்.
திருநெல்வேலிக்கு காரில் செல்வதானால் குறைந்த பட்சம் 1 மணி 15 நிமிடங்களாவது ஆகும். சுமார் 1.30 மணிக்கு படப்பெட்டியுடன் திரும்பி வந்தார்கள். அதுவரை மகாநாடு போன்று திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் தியேட்டர் நிர்வாகம் அடிக்கடி ஸ்லைடு போட்டு இன்னும் 1 மணி நேரத்தில் படம் துவங்கி விடும் என்று அறிவித்தபடி இருந்தார்கள்.
இருந்தாலும் அவர்களின் மனதைரியம் என்னை வியக்க வைத்தது.
முடிவில் படத்தை 1.30 மணிக்கு திரையிட்டு இன்டர்வெல் இல்லாமல் 4 மணிக்கு முடித்து தொடர்ந்து அடுத்த காட்சியை திரையிட்டார்கள். அன்றைய தீபாவளியில் முக்கால் பாகம் சார்லஸில் "விவசாயி"யுடன் கழிந்தது மறக்க முடியாத அனுபவம்.
வரி ஆபிஸில் சீல் அடித்த டிக்கெட்டை கொடுக்காமல் இவர்கள் சீல் இல்லாமல் விநியோகம் செய்து வரி ஏய்ப்பு செய்வார்கள். அதனால் இவர்கள் மீது அநேக வரி ஏய்ப்பு மோசடி வழக்கு இருந்தது.
வரி ஏய்ப்பு மோசடிக்காக அடிக்கடி தியேட்டரை 3 நாட்கள் சீல் வைப்பார்கள். எத்தனை செய்தாலும் இவர்கள் வரி ஏய்ப்பை தொடர்ந்து கொண்டிருந்ததால் சார்லஸின் பெயர் கெட்டு விட்டது. அதுபோல் விநியோகஸ்தரையும் ஏமாற்றி கணக்கு காட்டுவதால் அவர்களும் தூத்துக்குடிக்கு மட்டும் ஹையர் அடிப்படையில் விநியோகம் செய்ததால் இவர்களுக்கு ரொம்ப வசதியாகி விட்டது. ஒரே வாரத்தில் போட்ட முதலை எடுத்து விட்டு படத்தை விரைவில் தூக்கி விடுவார்கள்.
எம்ஜிஆர் படத்தை தவிர வேறு படங்களை ஷேர் அடிப்படையில் தான் வாங்குவார்கள்.
இதனால் தூத்துக்குடி மட்டும் விநியோகஸ்தர்கள் கட்டுப்பாடின்றி எம்ஜிஆர் படத்தை விரைவில் அதிக டிக்கெட்களையும்,அதிக கட்டணத்தையும் விதித்து தேவைக்கு அதிகமான வசூலை பெற்று விட்டு படத்தை 50 நாட்கள் ஓட்டாமலே எடுத்து விடுவார்கள். இதில் தூத்துக்குடி சார்லஸ்தான் முன்னோடி.
மீண்டும் அடுத்த பதிவில்..........ksr...
-
சவால்விட்டு சொல்லுவோம். உலகத்தில் எந்த நடிகர் அல்லது தலைவரின் கையைப் பிடித்து ஒரு ஏழைத் தொண்டன் முத்தம் கொடுக்க முடியுமா? தொண்டனின் அன்பு முத்தத்தை ஏற்கும் தலைவரின் முகத்தில் மகிழ்ச்சியை பாருங்கள். இதுதான் மத்த நடிகர்கள்/தலைவர்களுக்கும் நம் தலைவருக்கும் உள்ள வித்தியாசம். மற்ற நடிகர்களின் ரசிகர்கள்/ தொண்டர்களுக்கு இந்த பெருமை கிடைக்காது. தொண்டனை மதிக்கும் ஒரே நடிகர் மக்கள் திலகம், ஒரே தலைவர் புரட்சித் தலைவர். மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகன் .... புரட்சித் தலைவர் பக்தன் என்பதில் நாம் எல்லாரும் காலரை தூக்கிவிட்டு கர்வம் கொள்வோம்............ Swamy.........
-
எம்.ஜி.ஆரின் 23 பக்க உயில்........ எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தபோது 28_4_1986_ல் ஒரு உயில் எழுதினார். பின்னர் அதனை ரத்து செய்துவிட்டு 18_1_1987_ல் (2_வது முறையாக அமெரிக்கா செல்வதற்கு முன்பு) புதிய உயில் ஒன்றை எழுதி வைத்தார். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்த பிறகு 9_1_1988 அன்று இந்த உயில் வெளியிடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், நிருபர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரின் வக்கீல் என்.சி.ராகவாச்சாரி உயிலில் எழுதப்பட்டிருந்த விவரங்களை படித்தார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் அங்கிருந்தார். அ.தி.மு.க. அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் ஆகியோரும் உடன் இருந்தனர். உயில் மொத்தம் 23 பக்கங்கள் கொண்டதாகும். அது தமிழில் எழுதப்பட்டு உள்ளது. உயில் விவரம் வருமாறு:_
செங்கல்பட்டு மாவட்டம் மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் குடியிருக்கும் எம்.கோபாலன் அவர்களின் குமாரனாகவும், தமிழக முதல்_அமைச்சராகவும் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த புதிய உயில் பத்திரத்தை சுய நினைவோடும், மனப்பூர்வமாகவும், பிறர் தூண்டுதல் இன்றியும் எழுதி வைத்து இருக்கிறேன்.
எனக்கு குழந்தைகள் கிடையாது. என்னுடைய ஒரே வழிமுறை (வாரிசு) என் மனைவி திருமதி. ஜானகி அம்மாள்தான். அவளைத் தவிர வேறு யாரும் எனக்கு வாரிசு இல்லை. என் காலத்துக்குப்பிறகு என் சொத்துக்கள் சம்பந்தமாக எந்தவித வழக்குகள், தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும், எனது உறவினர்கள் எவரும் பாத்தியதை உரிமை கொண்டாடாமல் இருக்கவும் சுய சம்பாத்தியத்தின் மூலம் நான் வாங்கிய சொத்துக்கள் விஷயமாக இந்த உயிலில் ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.சென்னை தேசிகாச்சாரி ரோட்டில் 24 எண் உள்ள வீட்டில் குடியிருக்கும் மூத்த வழக்கறிஞர் என்.கி.ரங்கசாமியின் குமாரரான என்.சி.ராகவாச்சாரி மற்றும் சென்னை வீனஸ் காலனியில் குடியிருக்கும் எனது மருமகன் ராஜேந்திரன் அவர்களையும் இந்த உயிலை நிறைவேற்றுபவராக நியமிக்கிறேன்.
அவர்கள் காலத்திற்கு பிறகு சட்டப்படி சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி நிறைவேற்றுபவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடியில் கண்ட அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் எனக்கு சொந்தமானவை. அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும், எந்த உரிமையும் கிடையாது.
1) நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமத்தில் ராமாவரத்தில் என் பெயரிலுள்ள "எம்.ஜி.ஆர். கார்டன்" என்னும் பங்களாவும், தோட்டமும்.
2) சென்னை தியாகராயநகர் ஆற்காடு சாலையில் 27_வது எண்ணில் இருக்கும் கட்டிடமும், அடி மனையும்.
3) சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டம்.
4) ஆலந்தூர் மார்க்கெட் சந்தில் எண் 43_ல் இருந்து 47 வரை உள்ள கட்டிடங்களும் அடிமனையும்.
5) நான் குடியிருக்கும் ராமாவர தோட்ட பங்களாவில் உள்ள அசையும் சொத்துக்களான எனக்கு சினிமா துறையில் கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும், மற்றபடி கிடைத்த விலை உயர்ந்த பரிசுகளும். என் சொந்த மர, இரும்பு சாமான்கள், வெள்ளி பாத்திரங்களும், மோட்டார் வாகனங்கள், பசு முதலிய கால்நடைகள்.
6) சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் என் பெயரில் உள்ள பங்குகள்.
7) இவைகள் எல்லாம் என் சுய சம்பாத்தியத்தில் வாங்கப்பட்டவை. எனக்கு சர்வ சுதந்திரமாக பயன்படுத்தப்பட்டவை ஆகும்.
மேலே சொல்லப்பட்ட நான் குடியிருக்கும் எம்.ஜி.ஆர். கார்டன் என்று பெயருள்ள மணப்பாக்கம் ராமாவரம் தோட்டத்தில் பங்களா, கார்செட், கோவில், பழத்தோட்டம் ஆகியவை என் மனைவி திருமதி வி.என்.ஜானகி அவருடைய ஆயுள் பரியாந்தம் ஆண்டு அனுபவித்துக்கொள்ள வேண்டியது. அவைகளை விற்கவோ, அடமானம் வைக்கவோ, தானமாக கொடுக்கவோ உரிமை கிடையாது.
என் மனைவி காலத்திற்கு பிறகு அவருடைய சொந்தக்காரப் பெண்ணான கீதா (மதுமோகன் மனைவி), நிர்மலா (அப்புவின் மனைவி), ராதா (கோபாலகிருஷ்ணன் மனைவி), ஜனம், சுதா ஆகியோர் ராமாவரம் தோட்டத்தில் ஏற்கனவே குறிப்பிட்ட ஏ.பி.சி.டி. என்று வரைபடத்தில் குறிப்பிட்ட கட்டிடங்களை அவரவர் ஆண்டு அனுபவித்துக் கொள்ளவேண்டியது.
அவர்கள் மேற்படி சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு விடவோ போன்றவை செய்ய உரிமையில்லை. அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த சொத்துக்களை அவரவர் வாரிசுகள் பெறவேண்டும். மேற்சொன்ன ராமாவரம் தோட்டத்தில் காலி இடங்களை எல்லாம் சேர்த்து இந்த உயிலை நிறைவேற்றுபவர், அதில் "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லம் என்ற பெயரில் ஊமைகள், காது கேளாதவர்கள் இல்லமாக அதை ஏற்படுத்தவேண்டும்.
அந்த ஏழைகள் இலவசமாக தங்கியிருப்பதற்கும், உணவுக்கும் காது கேளாதவர்கள் இலவசமாக கருவிகள் பெறுவதற்கும், உடுத்த உடை, மருந்துகள் வசதி, கல்வி, தொழில் முதலியவைகளுக்காக அந்த காலி இடங்களில் செட்டுகளும், கட்டிடங்களும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊமைகள் பேசுவதற்கு சிகிச்சையும், பேச்சுப் பயிற்சியும் ஏற்பாடு செய்தாக வேண்டும்.
இதே மாதிரி காது கேளாதவர்களுக்கு இந்த இடத்தில் இதுபோல் தங்கும் வசதி, காது கேட்பதற்கான கருவிகள் வாங்கி கொடுத்தல் போன்றவற்றை செய்தல் வேண்டும். இந்த "எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்திற்கான செட்டுகள், கட்டிடங்கள் அமைக்கவும், இதர செலவுகளுக்கும் சாலிகிராமத்தில் இருக்கும் சத்யா தோட்டத்தின் வருமானத்தில் இருந்து மேற்படி காரியங்களுக்கான செலவை செய்யவேண்டியது.
என்னுடைய வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள் ஆற்காடு ரோடு 27_ம் நம்பர் வீட்டில் இருக்கும் பரிசுப் பொருட்கள், புத்தகங்கள், நூல்கள், மேற்சொன்ன தி.நகர் ஆற்காடு 27_ம் நம்பர் கட்டிடத்தில் வைக்கப்பட வேண்டும். 27_ம் நம்பர் வீட்டில் உள்ள மனையும், கட்டிடங்களும் என் காலத்துக்கு பிறகு "எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்" என்று பெயரிட்டு பாதுகாக்கப் படவேண்டும்.என் நினைவு இல்ல பராமரிப்புகளை சரியாக மேற்கொண்டு அதில் உள்ள பொருட்களையும், அந்த இடத்தையும் மக்கள் பார்வையிட வசதி செய்து கொடுக்க வேண்டும். மேற்சொன்ன எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை யாரும் விற்கவோ, அடமானம் வைக்கவோ, குத்தகைக்கு விடவோ உரிமை கிடையாது.
இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது. அதற்காக அந்த மார்க்கெட் கட்டிடங்களை எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு எழுதி வைக்கிறேன்.பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன். சத்யா ஸ்டூடியோ கம்பெனியில் எனக்குள்ள பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த அ.தி.மு.க. கட்சிக்கு கீழே சொல்லப்பட்ட நிபந்தனைக்குட்பட்டு சேரவேண்டும்.
சத்யா ஸ்டூடியோ கம்பெனி பங்குகளை அகில இந்திய அ.தி.மு.க. கட்சி பெற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து வருகிற வருமானத்தை கட்சியின் பயனுக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கட்சி பிளவுபட்டாலோ அல்லது கலைக்கப்பட்டாலோ மேற்படி சத்யா ஸ்டூடியோ கம்பெனியின் பங்குகளை எல்லாம் இந்த உயிலை நிறைவேற்றுபவர் கைப்பற்றி மேலே குறிப்பிட்ட எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்ல செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும்.
சத்யா ஸ்டூடியோ கட்டிடத்துக்கு என் தாயின் பெயரான "சத்யபாமா எம்.ஜி.ஆர். மாளிகை" என்று பெயர் வைக்கவேண்டும். என்னுடைய ராமாவரம் தோட்டத்தில் உள்ள விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் போக மீதி உள்ள மோட்டார் வாகனங்கள், மர இரும்பு சாமான்கள், கால்நடைகள் எல்லாம் என் மனைவிக்கு உரியதாகும்.
இந்த உயிலில் கண்டுள்ள எல்லா செயல்களையும், நடவடிக்கைகளையும் அடுத்த 6 மாதத்தில் அமலுக்கு கொண்டு வரவேண்டும். இந்த உயிலில் கூறாமல் விடப்பட்டவை மற்றும் ரொக்கப்பணம் எதுவும் இருந்தால் அவை எல்லாம் என் மனைவி ஜானகி அம்மாளுக்கே சேரும். இவ்வாறு அந்த உயிலில் எம்.ஜி.ஆர். எழுதி இருந்தார். பின்னர் வக்கீல் ராகவாச்சாரி சத்யா ஸ்டூடியோ மற்றும் நிலங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:_ சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆருக்கு 95 சதவீத பங்கும் ஜானகி அம்மாளுக்கு 5 சதவீத பங்கும் உள்ளன. சத்யா ஸ்டூடியோ 95 கிரவுண்டு பரப்பு உள்ளது. சாலிக்கிராமம் சத்யா தோட்டம் 8 ஏக்கர் பரப்பு உள்ளது. ராமாவரம் தோட்டம் 6 ஏக்கர் 34 செண்டு பரப்பு உள்ளது. இதில் எம்.ஜி.ஆர். ஊமைகள் இல்லத்துக்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு வக்கீல் என்.சி.ராகவாச்சாரி கூறினார்.
அ.தி.மு.க. மூத்த துணைப்பொதுச்செயலாளர் ராகவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:_
"இந்த தலைமை கழக கட்டிடமும், அடிமனையும் ஜானகி அம்மாளுக்குத்தான் சொந்தம். அதை கட்சிக்காக பரிசாக கொடுத்து பதிவு செய்துவிட்டார்."
இவ்வாறு அவர் கூறினார். thanks malai malar news
-
புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள்!!
குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள்!!
கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் பேசியது!!
"சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன்.
தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர்!!
அவர்களது இடுப்பில் குழந்தைகள்.
நான் காரிலிருந்து இறங்கி,
"காலையில் சாபிட்டீர்களா.?? "
என்று கேட்டேன் !!
"இல்லை" என்று பதில் சொன்னார்கள்!!
"குழந்தைகள் சாபிட்டதா.??
என்று கேட்டேன்!!
"இல்லை" எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை!!
வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம்.
குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது!!
இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை!!
அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம்!!
என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்!!
சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது!!
என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம்!!
அந்தத் தாய்.....
"இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் சொன்னபோது,
அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை!! !..
-
#இந்தவையகம்கண்டவள்ளல்...
நடிகை மஞ்சுளா கண்ணீர் பேட்டி...
1984 அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் புரட்சித்தலைவரை பார்க்க சென்றேன்...
பேச முடியாத நிலையால் என்னை சரியாக அடையாளம் காணமுடியவில்லை...
நான்தான் மஞ்சுளா வந்திருக்கேன் .. என்று அடிக்கடி கூறியும் அவருக்கு நினைவில் வரவில்லை...
அங்கிருந்த ஜானகி அம்மா , " உங்க கூட நடிச்சாளே ..ரிக்ஷாக்காரன், இதயவீணை " படத்தில் .. அதே மஞ்சுளா வந்திருக்கா " என்றார் .
சற்று புரிந்தவராக ... ஜாடையில் கேட்டார் ..
பஸ்ஸுல வந்தியா ? கையில செலவுக்கு காசு இருக்கா ? என்றெல்லாம் கேட்டபோது என் மனம் மிகவும் கவலையில் கண்ணீர் விடாத நிலைக்கு வந்தேன் .
நான் , " விமானத்தில் வந்தேன் . ஊருக்கு போறேன் உங்களை பார்க்கவே வந்தேன் " என்றேன் .
ஜானகி அம்மாவும் நான் யார் என்பதை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள் .
சிறிது நேரம் அங்கிருந்து கிளம்பும்போது ....
தலைவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை ...
தான் படுத்திருந்த தலையணையை தூக்கி ., அதன் கீழே வைத்திருந்த அமெரிக்க டாலர்களை அப்படியே முழுவதும் எனது கையில் வைத்து திணித்து "செலவுக்கு வைத்துக்கொள்" என்று சொன்னார் .
கண்ணீர் விட்டு அழுது கொண்டேன்...
தான் பேசமுடியாத நிலையிலும் , தனக்கு சுயநினைவு இழந்த நேரத்திலும் அந்த தர்மம் கொண்ட சிந்தனை என் கண்முன்னால் இன்றும் நிற்கிறது
--- நடிகை மஞ்சுளா அவர்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவர் பற்றி கண்ணீருடன் ஒரு பேட்டியில்...
ஏன் மக்கள் தலைவரை இதய தெய்வமாக பாவித்து ஆலயம் கட்டி வழிபாடுகிறார்கள்...?
எத்தனை தலைமுறை கடந்தாலும் நிலைத்து நிற்கும் நம் தலைவர் புகழ்...
#இதயதெய்வம்...vrh...
-
தனியார் தொலைக்காட்சிகளில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள்*
ஒளிபரப்பான*விவரம் (01/01/21* ,முதல் 05/01/21 வரை )
------------------------------------------------------------------------------------------------------------------------------
*01/01/21* *-* சன் லைஃப் - காலை 11 மணி - ரிக்ஷாக் காரன்*
* * * * * * * * * பெப்பர்ஸ்* டிவி -பிற்பகல் 2.30 மணி - நல்ல நேரம்*
* * * * * * * * * *மீனாட்சி - இரவு 9 மணி* - நல்ல நேரம்*
02/01/21 -சித்திரம் டிவி -காலை 11மணி /மாலை 6 மணி -அபிமன்யு*
* * * * * * * * பாலிமர் டிவி - இரவு 11 மணி - விவசாயி*
03/01/21--சன்* லைஃப் - காலை 11 மணி - நான் ஏன் பிறந்தேன்*
* * * * * * * * மீனாட்சி டிவி --மதியம் 12 மணி - வேட்டைக்காரன்*
* * * * * * * *மீனாட்சி டிவி - இரவு 9 மணி* விவசாயி*
04/01/21 -வேந்தர் - காலை 10.30 மணி-தாய் சொல்லை தட்டாதே*
* * * * * * * * சன் லைஃப்-காலை 11 மணி - குடியிருந்த கோயில்*
* * * * * * * *முரசு டிவி -மதியம் 12மணி /இரவு 7 மணி -தாயின் மடியில்*
* * * * * * * *ராஜ் டிவி -பிற்பகல் 1.30 மணி- குடியிருந்த கோயில்*
* * * * * * * வெளிச்சம் டிவி -பிற்பகல் 2* மணி -நல்ல* நேரம்*
* * * * * * *பெப்பர்ஸ்- பிற்பகல் 2.30மணி -தாயை காத்த தனயன்*
* * * * * * * பாலிமர் டிவி -இரவு 11 மணி - அரச கட்டளை*
05/01/21-ராஜ் டிவி - பிற்பகல் 1.30 மணி - பணம் படைத்தவன்*
* * * * * * * பெப்பர்ஸ்- பிற்பகல் 2.30 மணி - தர்மம் தலை காக்கும்*
* * * * * * * சன் லைஃப்- மாலை 4 மணி - நவரத்தினம்***
* * * * * * * * * *
-
சுப மங்களம்!!
---------------------
புயல் இங்கேக் கரை கடக்கும் அங்கே அடிக்கும் என்ற பூச்சாண்டி காட்டல் ஒன்று புஸ்வாணம் ஆகி விட்டது?
ரஜினி அரசியலுக்கு வரவில்லை??
நாம் ஏற்கனவே ரஜினி பற்றி யூகித்திருந்ததால் நமக்குப் பெரிய அளவில் ஆச்சரியம் இல்லை என்றாலும்--
அவரது ரசிகர்களுக்கு இது பெரிய அளவில் ஏமாற்றமே!
நாம் முன்பேக் குறிப்பிட்டிருந்தது போல--
நல்லதோ கெட்டதோ--சரியோ தவறோ துணிந்து இறங்கி விடும் கமலின் தைரியம் ரஜினிக்கு ஆரம்பத்திலிருந்தே கிடையாது!
அரசியலில் நுழைவதற்கு முன்பே,,சினிமாவில் கூட பல வித்தியாச முயற்சிகளை விதைக்கப் பார்ப்பார் கமல்!!
ஏதோ,,தம் படங்கள் சில நாட்களாவது ஓடி வசூல் பார்க்க வேண்டுமே என்று அவ்வப்போது அரசியல் உதார் காட்டி வந்த ரஜினி--
சினிமா--கவுண்டமணி,,வடிவேல் கணக்காக மிரண்டு விட்டார் என்பதையே அவரது அறிவிப்புக் காட்டுகிறது!
நமக்கு சில ஐயங்கள்?
தொண்டர்களின் மன உளைச்சல் பற்றி ரஜினி ஏன் திடீரென்று இப்போது கவலை கொள்ள வேண்டும்?
தொண்டர்கள் பணம் செலவழிப்பதைப் பற்றி இப்போது தான் அவருக்குத் தெரிந்ததா?
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் சட்டமன்றத் தேர்தலில் இருந்து அரசியலில் குதிப்பேன் என்று அன்று சொன்னது யார்?
இத்தனை காலமும் ரசிகர்களை நம்ப வைத்தது ஏன்?
இன்றைய இவரது விளக்கங்கள் இவருக்கு அன்றேத் தெரியவில்லையா?
அரசியலில் ஆன்மிகத்தை தருவேன் என்றவரின்-
ஆன்மிகத்தில் அரசியல் புகுந்துவிட்டதா?
எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது என்பதை அவரது ரசிகர்களே உணர்ந்து கொள்ள இது உதவும்!
ஆப்பக்கடை ஆயா முதல் அம்பானி ரேஞ்ச் பணக்காரன் வரை அன்று எந்தத் தொண்டனுமே எம்.ஜி.ஆரின் பணத்தை நம்பிக் கட்சிப் பணி ஆற்றவில்லை! அதற்கு தேவையும் அன்று இருக்கவில்லை!
முகத்தைக் காட்டினால் முப்பதாயிரம் ஓட்டு!!
ரஜினி--கமலாவது சினிமாவில் ஈட்டியப் பொருளை அரசியலில் முதலீடு செய்ய எண்ணினர்!
அன்று எம்.ஜி.ஆரிடம் அதற்குக் கூட வாய்ப்பில்லை?
கேட்டவன்--கேட்காதவன் என்று அத்தனை பேருக்கும் வாரி இறைத்தால் அவரிடம் எப்படி இருக்கும்?
எம்.ஜி.ஆருக்கும் ரஜினிக்குமுள்ள வேற்றுமை--
தொண்டன் கஷ்டப்படக் கூடாதே என்பதால் ரஜினி அரசியலில் நுழையவில்லை?
தொண்டன் அடி பட்டுக் கஷ்டப்பட்டதாலேயே எம்.ஜி.ஆர் அன்று அரசியலில் நுழைந்ததுடன் ஆட்சியையும் பிடித்தார்?
எம்.ஜி.ஆர் என்ற மகா சக்தியோடு ஜெ வை ஒப்பிடுவதே தவறு என்னும் போது ரஜினியை ஒப்பிடுவது மிகப் பெரிய தவறே!!
ஆனால் ஒன்று மட்டும் உறுதி!
என்னதான் உதட்டளவில் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும்--உள்ளத்தளவில் கொஞ்சம் உதறிக் கொண்டிருந்த--அ.தி.மு.க--தி.மு.க வுக்கு --
ரஜினி கொடுத்திருக்கும் புத்தாண்டு பரிசே இது!!!.........vtr...
-
#புரட்சித்தலைவர்
கடந்த 75 ஆண்டுகளாக தமிழக அரசியல்வாதிகளால் உச்சரிக்கபடும் ஒப்பற்ற தலைவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயர்,
காரணம் தனக்கென வாழாமல் பொதுநல நோக்கத்தோடு வாழ்ந்த மனிதநேயர்,
தமிழக முதல்வராக இருந்தபோது ஏழைகளின் நலன்கருதி, அவர்களுக்காக பல பயன்பெரும் திட்டங்கள் நிறைவேற்றியவர்,
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்,
சிறைசெல்லாத தமிழக முதல்வர்,
தோல்வி காணாத தலைவர்,
சொன்ன செய்தியை மாற்றி சொல்லாத அரசியல்வாதி,
கொள்கை மாறாமல், தன் உயிருக்கு ஆபத்து வந்த நிலையிலும் தேர்தலை சந்தித்த, நெஞ்சுரம் கொண்டவர்,
முதல்வராக இருக்கும்காலங்களில் அரசு காரை பயன்படுத்தாமல்,
தன் சொந்த காரையே பயன்படுத்தியவர் (பெட்ரோல் உட்பட),
ஆடம்பர பங்களாவில் வசிக்காமல், எளியமுறையில் தோட்டத்தில் வசித்தவர், ( நிலத்தடிநீர், விறகு அடுப்பு, மட்டுமே பயன்படுத்தியவர்),
ஆடம்பரமாக நகைகளோ, உடைகளோ, வெளிநாட்டு கார்களையோ பயன்படுத்தாதவர்,
தன் மருத்துவ சிகிச்சை செலவை, அரசுக்கு தன் சொந்த பணத்தால் செலுத்திய முதல்வர்,
அவர் ஆட்சி காலத்தில் வந்த இடைத்தேர்தலில், தன் கட்சி வேட்பாளரை நிறுத்தாத பண்பாளர்,
அவர் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் நடைபயணம் மேற்கொண்டபோது, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட நல்லாட்சி நாயகர்,
தன் காலத்திற்கு பிறகு நினைவிடம் அமைக்க, தன் வீட்டையே தானம் செய்த கொள்கைவாதி,
முதல்வராக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து, தன் இறுதிகாலம்வரை, தமிழகத்தில் அவருக்கு சொந்தமாக கல்லூரியோ, திருமண மண்டபமோ, திரையரங்குகளோ, ஏன் கால் கிரவுண்ட் இடம்கூட வாங்காத நேர்மையின் சிகரம் ,
ஏழைமக்களின் நலன் கருதி
வாழ்ந்து, ஏழைகளுக்கே தன் சொத்துக்களை எழுதி வைத்த தர்மசிந்தனைகொண்ட ஏழை பங்காளர்,
இப்போது மட்டுமல்ல, எப்போதும் புரட்சி தலைவர் சரித்திர நாயகர்தான்............ Hussain...
-
புரட்சித் தலைவருடைய ஆட்சி சாதனைகள் அதிகம். குறைகள் குறைவு இது அந்தக் காலத்திலிருந்தே மக்களுக்கு நன்றாய் தெரியும் அதனால்தான் பதவியேற்றதிலிருந்து இறக்கும்வரை நிரந்தர முதல்வராகவே இருந்தார்.அவர் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி கூட்டம் அன்றும் இருந்தது,இன்றும் இருக்கிறது.ஆனால் மக்களோ நிரந்தரமாக அன்பு வைத்திருக்கின்றனர்.காரணம் யாருமே நெருங்க முடியாத புகழுக்கு சொந்தக்காரர்
புரட்சித் தலைவர்.அவர் புகழ் வாழ்க!!...Rnjt.........
-
இருமலர்கள் வெளியாவதால் ஊட்டி படத்தை தள்ளி வைக்கணும் என்று சித்திராலயா கோபு மூலம் கணேசன் கேட்டிருக்கார். அதுக்கு ஸ்ரீதர் முடியாதுன்னுட்டாராம். இருமலர்கள் தரப்பும் தள்ளிவைப்பதாக இல்லை. 2 படமும் ஒரே நாளில் வந்தது. இதை கோபு சொல்லி இருக்கிறார். இருமலர்கள் சென்னயிலே மட்டும் வெலிங்டனில் 100 நாள் ஓடிச்சு. அந்த படத்தை வெளியிட்டது ஏவி எம். நிறுவனம். வெலிங்டன் தியேட்டரை ஏவி எம் லீசுக்கு எடுத்தது. அதனால் தங்கள் படத்தை சென்னையில் கூட்டமே இல்லாமல் ஓட்டினார்கள். உயர்ந்த மனிதன் ஏவி எம் நிறுவனமே தயாரித்தது. அதுவும் இதே வெலிங்டனில் மட்டும் இதே கதைதான். ஊட்டி வரை உறவு படம் லாபம் இல்லை என்று தயாரிப்பாளர் சொல்லிக் கொண்ட படம் என்று கணேசன் தனது ரசிகர் மன்றம் மலரில் சொல்லிருக்கார். படம் லாபம் இல்லை என்று கோவை செழியன் ஏன் பொய் சொல்லப் போகிறார். அப்புறம் கணேசனை விட்டு வந்து நம் தலைவரை வெச்சு குமரிக்கோட்டம் எடுத்தார். அது 100 நாள் ஓடி நல்ல லாபம் கொடுத்தது. அடுத்து உழைக்கும் கரங்கள் எடுத்தார் . அது100 நாள் எட்ட முடியாட்டியும் நல்ல வசூல் கொடுத்தது. பல ஊரில்50 நாள் தாண்டி ஓடியது. சேலத்தில் கல்பனா 21 அலங்கார்77 நாள் 2ம் சேர்த்து 98 நாள் ஓடியது. 75 நாளில் கல்பனாவில் ஓடிய 21 நாள் ஐயும் சேர்த்து 96 நாள் என விளம்பரம் கொடுத்தார்கள். உழைக்கும் கரங்கள் படத்துக்கு சென்னை கமலா தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி கோபால் என்ற எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்தவர் இறந்தார். அவர் குடும்பத்துக்கும் புரட்சித் தலைவர் நிதி கொடுத்து உதவினார்....rrn...
-
உலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி சாதனைகள் புரிந்து புகழ் பெற்றிருக்கிறார்கள்.
அவர்கள் ஏதேனும் ஒன்றிரண்டு துறைகளில் மட்டும் ஈடுபட்டு அதில் சிறப்பாக சோபிப்பார்கள்.
ஆனால் எம்.ஜி.ஆர் மாதிரி தான் ஈடுபட்ட அனைத்திலும் வெற்றிகண்டு முதன்மையாக விளங்கியவர்கள் யாரேனும் உண்டா- அவர் அனைத்திலும் புரட்சி கண்டவர். புரட்சி நடிகர், புரட்சித் தலைவர், புரட்சியான முயற்சிகள், எல்லாவற்றிலும் வெற்றிக்கு மேல் வெற்றி. இதெல்லாம் தெய்வ சங்கல்பம்.
என் தந்தை டைரக்டர் சுப்பிரமணியம் அவர்களுக்கும் திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இருந்த பண்புமிக்க நட்புறவை நாடே அறியும். என்தந்தையைப் பற்றி அவரே பேசியும் எழுதியும் இருக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கொரு சிறிய தந்தை போல விளங்கினார்.
அண்ணன் என்று அவரை ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பேசிவிட்டேன். மேடைக்குப் பின்னால் வந்து என் காதை திருகி. நான் அண்ணனா? சித்தப்பா மரியாதை எங்கே போச்சு என்று சிரித்த வண்ணம் என் தலையில் குட்டிவிட்டுச் சென்றார்.
அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் என்ற ஈடற்ற இலக்கியப் படைப்பை சினிமாஸ்கோப் படமாக எடுக்க எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கி குடும்பத்திடம் உரிமை பெற்றிருந்தார். சிவகாமியாக நீதான் நடிக்க வேண்டும். கல்கி வர்ணித்த சிவகாமி பாத்திரத்திற்கு நீ நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று பல வாரங்கள் வற்புறுத்தினார்.
அவர் மனம் புண்படாமல், ஆனால் சினிமாவில் நடிப்பதில்லை என்ற என் கொள்கையையும் விடாமல் நான் உறுதியாக ஆனால் நன்றியுடன் மறுத்துவிட்டேன். நீ நடிக்கவில்லை என்றால் நான் சிவகாமியின் சபதம் படமே எடுக்கப் போவதில்லை என்று கூறினார். அப்படியே செய்துவிட்டார். இவ்வளவு வற்புறுத்தியவர் இதற்காக என்னிடம் கோபம் கொள்ளவில்லை. புகழுக்காகவோ பணத்திற்காகவோ கொள்கையிலிருந்து வழுவாமல் இருப்பதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டார் என்பதை திருமதி ஜானகி அவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் கர்நாடக இசை ரசிகர் மட்டுமல்ல. நன்றாகப் பாடுவார். அந்தக் காலத்து மேடை நடிகராயிற்றே. மிக லாவகமாக ஆடவும் செய்வார். இலக்கியத்திலும் மிக ஈடுபாடு கொண்டவர். அவர் வீட்டில் ஓர் அருமையாக நூலகம் உள்ளது.
சில மாதங்கள் அவர் முதலமைச்சராக இல்லாத போது என் ஜயஜய சங்கர நடன நிகழ்ச்சிக்கு அவரை அழைத்தோம். அன்று தத்துவ பேராசிரியர் டாக்டர். டி.எம்.பி. மஹாதேவன் அவர்கள் சிறப்பு விருந்தினர். அன்று எதிர்பாராமல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதி சங்கரரைப்பற்றியும் அத்வைத வேதாந்தத்தைப் பற்றியும் மிக உருக்கமாகவும் தெளிவாகவும் பேசி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
அதே பார்த்தசாரதி சபையில், அவர் முதலமைச்சரான பிறகு மற்றொருநாள் என் சிலப்பதிகார நடின நாடகத்திற்கு, எங்களுக்கும் சபாக்காரர்களுக்கம் தெரியாமல் பனிரண்டு டிக்கட்டுகளை முதல்வரிசையில் வாங்கிக் கொண்டு குடும்பத்தினரும் சில அமைச்சர்களும் சூழ திடீரென்று வந்துவிட்டார். கடைசி வரை இருந்துவிட்டு பிறகு உள்ளே வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். டிக்கட்டு வாங்கி வரும் முதலமைச்சரைப் பார்ப்பது அரிது அல்லவா? அன்று எல்லோரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டோம்.
திருமதி வி.என் ஜானகி அவர்கள் என் பெற்றோர்களின் வளர்ப்பு மகள் என்றே சொல்லலாம். என் தந்தை தயாரித்த அனந்த சயனம் படத்தில் அவர் நடித்துள்ளார். 1942ஆம் ஆண்டு என் தந்தை துவக்கிய நாங்கள் இப்போது நடத்திவரும் நிருத்யோதயா நடனடிப்பள்ளியின் நடனகலாசேவா குழுவில் நடனக்கலைஞராக விளங்கியவர் திருமதி ஜானகி அவர்கள்.
1962ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அவர்களுக்கும் பதிவு திருமணத்திற்கு ஏற்பாடு செய்து சாட்சிக் கையெழுத்திட்டவர் என் தந்தை டைரக்டர் கே.சுப்பிரமணியம் அவர்கள். நாள் குறித்தவர் என் தாயார். மணமக்களை அழைத்து வந்தவர் என் அண்ணன் பாலகிருஷ்ணன். அன்று விருந்துகூட எங்கள் இல்லத்தில் தான் நடந்தது.
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் என்றே நாங்கள் பழகினோம். அவர் முதலமைச்சராவதற்கு முன்னால் வரை நாங்கள் அடிக்கடி சந்தித்ததுண்டு. சற்றும் எதிர்பாராமல் அடையாறிலுள்ள சத்யா ஸ்டூடியோவிலிருந்து போன் வரும். மதியம் சாப்பாட்டிற்கு கறிவேப்பிலை குழம்பு வேண்டும். அங்கு வருகிறேன் என்பார். அல்லது கொடுத்தனுப்பச் சொல்வார்.
கடநத் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி அவரது பூவுலக வாழ்க்கை முடிவதற்கு 9 நாட்கள் முன்னால் ரஷ்ய கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மியூசிக் அகாடமிக்கு வந்திருந்தார். அவருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த என்னை திடீரென அழைத்து இன்று நான் இந்த ரஷ்யக் குழுத்தலைவர் மொய்ஸேவ் அவர்களுக்கு மலர்ச்செண்டும் பரிசும் கொடுத்தவுடன் நீ என் சார்பில் அவர்களுக்கு ரஷ்ய மொழியில் வாழ்ததுத் தெரிவித்துப் பேசு என்று அன்புக் கட்டளையிட்டார். நான் அவசரமாக ரஷ்ய மொழியில் சில வாக்கியங்களை எழுதித் தயார் செய்து கொண்டேன். அவர் கூறியது போல வாழ்த்துத் தெரிவித்துவிட்டு அவரைப்பற்றியும் ரஷ்ய மொழியில் எங்கள் முதலமைச்சர் சிறந்த அரசியல் தலைவர் மட்டுமல்ல ஒரு மாபெரும் மக்கள் தலைவர் (Peoples Artiste) பொன்மனச்செம்மல் என்று சொன்னேன். பலத்த கரகோஷம் எழுந்தது.
24/12/1987அன்று மாபெரும் தவிர்க்க முடியாத இழப்பு கண்மூடித்திறக்குமுன் ஏற்பட்டுவிட்டதே. ராமாவரம் தோட்டத்திற்கு அதிகாலையில் சென்றுவிட்டோம்.
புகழுடம்பு பெற்று கொண்டு விட்ட எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். முடிவாக ஒரு வார்த்தை.
திறமையுள்ள எத்தனையோபேர் இருக்கலாம். ஆனால் அவர்களுள் நல்லவர்களைக் காண்பது அரிது. நடமாடும் தெய்வமான காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் (திரு.சந்திரசேகரசரஸ்வதிசுவாமிகள்) வாயால் எம்.ஜி.ஆர். அவர்கள் நல்லவர் என்று சொன்னதை நானே என் காதால் கேட்கும் பாக்கியம் பெற்றிருக்கிறேன். இதைவிடப் பெரிய விருது உலகில் ஒன்றும் இருக்க முடியாது.
1988 ஜனவரி மாத மங்கை மாதஇதழில் பத்மாசுப்பிரமணியம் அவர்கள் எழுதிய கட்டுரை...MJ...
-
இரு மலர்கள் ரெண்டு வாரம் கூட தாண்ட வில்லை ஊட்டி வரை உறவு இழுத்து பிடித்து நாலைன்சு வாரம் ஓடியது..................விவசாயி ஐம்பது நாள்கள் தாண்டி ஓடினது கும்பகோணத்தில் ......................ap...
-
தொடர் பதிவு: உத்தமன் 9
-------------------------------------------
சார்லஸ் திரையரங்கம் 1958 ல் தொடங்கப் பட்டது. ஆரம்பத்தில் "நாடோடி மன்னன்" 79 நாட்கள் ஓடியதுதான் அதிகபட்சமாக இருந்தது. "நாடோடி மன்னனு"க்கு கவுண்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் மோதியதால் சில்லறையை வாங்கி போட "தீ" என்ற சிகப்பு வாளியை பயன்படுத்தினார்கள். டிக்கெட் கொடுத்து முடிந்தவுடன் ஒவ்வொரு கவுண்டரிலும் இருந்தும் அந்த "தீ" வாளியை எடுத்து செல்வதை அதிசயமாக பார்த்ததாக அந்தக்கால ரசிகர்கள் சொல்வதை கேட்டிருக்கிறேன்.சார்லஸில் பாலும் பழமும் படத்தை தொடர்ந்து "தாய் சொல்லை தட்டாதே" வெளியாகி 50 நாட்களை தாண்டி
ஓடியது.
அதன்பின் "பெரிய இடத்துப் பெண்" 50 நாட்களை தாண்டியும்,
"பணக்கார குடும்பம்" 53 நாட்களும் "படகோட்டி" 50 நாட்களும் ஓடியது.1965 ல் வெளியான "எங்க வீட்டுப் பிள்ளை" 100 நாட்களை தாண்டி ஓட வேண்டிய படத்தை 77 நாட்களில் மாற்றினார்கள். காரனேஷன் தியேட்டர் சார்லஸில் மூன்றில் ஒரு பங்கு கூட இல்லாத தியேட்டரில், "புதியபூமி" 29 நாட்களில்
சுமார் ரூ32000 வசூல் பெற்ற நிலையில் "எங்க வீட்டுப் பிள்ளை"க்கு அவர்கள் காட்டிய வசூல் ரு 49000 தான். ஏமாற்றி ஏப்பம் விட்ட வசூல் எவ்வளவோ?
1969 ல் வெளியான நம்நாடு 50 நாளில் தூக்கப்பட்டது தூத்துக்குடி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதன்பின் மாபெரும் வெற்றிப் படமான "உலகம் சுற்றும் வாலிபனை" புக் பண்ணுவதற்கு தலைவர் வீட்டு வாசலில் காத்து கிடந்து வெளியிட்டார். படம் வெளியான மே 11 அன்றைய அரசியல் சூழ்நிலையில் பிரிண்ட் ரெடியாகவில்லை. எனக்கு படம் பார்க்காமல் காய்ச்சல் உச்சக் கட்டத்தில் இருந்தது.
இரண்டு நாள் கழித்து மே 13 ஞாயிறன்று வெளியாகி படத்தை பார்த்தவுடன்தான் நார்மல் நிலைக்கு வந்தேன். பக்கத்தில் உள்ள திருநெல்வேலியில் படம் பார்க்கலாம் என்றால் அங்கு சென்று படம் பார்க்க முடியாமல் வந்தவர்கள் சொல்வதை கேட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தோம். தியேட்டர் கொள்ளளவை காட்டிலும் சுமார் 5 மடங்கு ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் அலைவதை பார்க்கும் போது நமக்கெல்லாம் டிக்கெட் எங்கே கிடைக்கும் என்று சொன்னதை கேட்டதும் அந்த முயற்சியையும் கை விட்டோம்.
சைக்கிள் டோக்கன் வாங்க சுமார் 1 பர்லாங்கு தூரத்திற்கு மேல் நின்ற வரிசையை பார்க்க வெளியூர்களிலிருந்து வந்த கூட்டம் வேறு கட்டுக்கடங்காமல் இருந்தது. எப்படியோ மே 13 ம் தேதி மட்டும் இரண்டு தடவை பார்த்து விட்டு தினசரி 1 தடவை பார்த்து மகிழ்ந்தேன். பேப்பரில் மதுரை மீனாட்சி தனி விளம்பரமாக 'முதல் 100 நாட்களுக்கு எவ்வித இலவச அனுமதியும் கிடையாது' என்று வந்தது புதுமையாக இருந்தது.
மொத்தத்தில் "உலகம் சுற்றும் வாலிபன்" திருவிழா மறக்க முடியாத திருவிழாவாக அமைந்தது. சார்லஸில் 100 வது நாள் விழாவுக்கு எம்ஜிஆரை அழைத்து வர சென்னையில் தலைவர் வீட்டு வாசலில் தவமிருந்தும் தலைவரிடமிருந்து பாஸிட்டிவ் சிக்னல் கிடைக்காததால் படத்தை 104 நாட்களில் தூக்கி விட்டு "எங்கள் தங்க ராஜா"வை வெளியிட்டு வேண்டுமென்றே தலைவர் வராத கடுப்பில் 53 நாட்கள் ஓட்டினார்கள்.
அதன்பின் வெளிவந்த "நேற்று இன்று நாளை" "நல்ல நேரம்" "ராமன் தேடிய சீதை" "நான் ஏன் பிறந்தேன்" "நாளை நமதே" "பல்லாண்டு வாழ்க"படங்களை வெளியிட்டு எந்த படத்தையும் 50 நாட்கள் ஒட்டவில்லை. "இதயக்கனி" மட்டும் 50 நாட்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது. முதல் 2 வாரங்களிலேயே 50 நாட்கள் பார்க்கும் பார்வையாளர்களை அனுமதிப்பதால் படத்தை சீக்கிரம் எடுத்து விடுவார்கள். ஆனால்
அய்யன் படத்துக்கு ஒரு காட்சிக்கே தகுந்த கூட்டம் வராததால் அவர்களுக்கு இந்த பிரச்சினை கிடையாது.
முதன்முதலில் "உலகம் சுற்றும் வாலிபனு"க்குதான் ரிசர்வேஷன் என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பின்னர் கவுண்டரில் கொடுக்கும் டிக்கெட்டிற்கும் அதிக கட்டணம் வசூலிக்க ஆரம்பித்தனர். இப்படி அவர்கள் செய்த மொள்ளமாரித்தனம் கணக்கிலடங்கா. படத்தின் டிக்கெட் கொடுக்க ஆரம்பிக்கும் அதே வேளையில் படத்தையும் ஆரம்பித்து விடுவார்கள். படத்தை முதல் காட்சியிலிருந்து பார்த்தவர்கள் மிக சொற்பமே. இப்படி அனைவரின் சாபத்தையும் பெற்றதால் இரண்டு தியேட்டர்களும் காலத்தின் சுழற்சியில் இன்று காணாமல் போய் விட்டது.
மீண்டும் அடுத்த பதிவில்.........ksr.........
-
எம்.ஜி.ஆர் திடுக்கிட்டார்??
------------------------------------------
முழங்--கை சட்டை காமராஜரும் --கொடை
வழங்--கை பாணியில் எம்.ஜி.ஆரும்--ஏழைகளுக்கு
தருங்-கை கொண்டே தமிழகத்தை ஆண்டு
வெறுங்-கை கொண்டே விண்ணுலகம் ஏகியவர்கர்கள்!!
இருவரும் படிக்காத மேதைகளே!!
எம்.ஜி.ஆரின் இதயத்து ஓரத்தில் கர்ம வீரரும்
காமராஜரின் கவனத்தில் மர்ம யோகியும் !!!--
காலந்--தொட்டு ஒருவருக்கு ஒருவர் நின்று-இன்றும்
ஞாலந்-தொட்டு நம் இதயங்களில் வாழ்கிறார்கள்!!
காமராஜருக்கு,, அன்றைய தி.மு.க வைப் பிடிக்காது எனினும்,,,அண்ணாவின் கண்ணியமும் அவர் தம்
அறிவாற்றலும்--அஃதைப் போன்றே--
எம்.ஜி.ஆரின் வள்ளல் தன்மையும்,,வசீகரமும் அவர் இதயத்தில் ஏற்றமுடன் விளங்கியது!!
பின்னே நடக்கப் போவதை யூகித்து
முன்னே கூறும் காமராஜரின் அறிவுத் திறன் கண்டு
என்னே இவர் திறமை? என்று அண்ணாவே பலமுறை
வியந்திருக்கிறாராம்??
எம்.ஜி.ஆரும்,,சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் அந்த கருப்பு காந்தியை களிப்புடன் சந்தித்திருக்கிறார்!!
ஒரு நாள் அப்படி சந்திக்கும் போது தான்---
அனைவரின் பசியையும் போக்கும் நீ,,மாணவ மாணவிகளின் பசியையும் போக்கணும்!!--அவர்களின்
வயிற்றுப் பசியை போக்கும் நீ அதே சமயம் அவர்கள்
அறிவுப் பசியை வளர்க்கணும்??
கல்வி அறிவு இல்லாத எந்த நாடும் செழிக்காது!!
ருசியுடன் அவர்கள் அப்படிப் படிக்க--அவர்கள்
பசியுடன் இருத்தல் கூடாது??
சுருக்கமாகச் சொல்வதானால்--
எல்லாருக்கும் உணவிடும் நீ
கல்லாருக்கும் உணவிட்டு,,,அவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும்!!
உனக்கு அப்படி செய்யக் கூடிய காலம் ஒன்று எதிர்காலத்தில் வரும்??
காமராஜரின் இந்த வார்த்தைகளால் திடுக்கிடுகிறார் எம்.ஜி.ஆர்??--காரணம்???
அப்பொது அண்ணாவே முதல்வர் ஆகாத காலம்!!
செய்வேன் என்று எனக்கு வாக்குக் கொடு என்று எம்.ஜி.ஆரிடம் கேட்கிறார் காமராஜர்??
தேக்குறுதி கொண்ட எம்.ஜி.ஆரே சிலிர்த்துப் போய்
வாக்குறுதி கொடுக்கிறார் !!
கிங்-மேக்கர் காமராஜரின் கணிப்புப் படியே--
பின் நாட்களில் ---தமிழ் நாட்டின்
கிங் !! ஆன எம்.ஜி.ஆரின் உள்ளத்தில் இந்த வார்த்தைகள் உறுத்திக் கொண்டே இருக்க--
அதிகாரிகளை அழைத்து,,சத்துணவுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிடுகிறார்!!
நிதி நிலை சரியில்லையே என்ற அதிகாரிகளிடம்--
நீதி நிலை தான் எனக்கு முக்கியம்!! நிறைவேற்றுங்கள் திட்டத்தை என்று தீர்மானமாக உரைக்கிறார்!!
எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் தான் மாணவர்களுக்கு--
சத்துணவு மட்டுமல்லாது,,,இலவச
சீருடை,,,காலணி,,நோட்டுப் புத்தகங்கள் என்று அனைத்தும் வழங்கப்பட்டன இலவசமாக!!--இன்றோ
அரசியலுக்காக வழங்கப்படுகின்றன இலவசங்கள்????
வானம் பொய்த்தாலும்--
பெரியோர் வாக்கும்,,அரியோர் நோக்கும் பொய்ப்பதில்லை என்பதை--
உரியோர் இந்த இருவரின் மூலம் காலம் நமக்கு உணர்த்துகிறது அல்லவா????...vtr...
-
பசி அறிந்தவர் பசி ஆற்ற சத்துணவு தந்தார் எம் ஜி ஆர்
மண்ணால் செங்கட்டியால் பல் தேய்த்த எங்களை பல்பொடியால் பல் துலக்க பல் பொடி கொடுத்தார் எம் ஜி ஆர்
கந்தல் கட்டி நாங்கள் புது உடையுடன் பணக்கார பிள்ளைகள் எங்கள் வேதனை போக்க சீருடை தந்தார் எம் ஜி ஆர்
நாளை வாங்கலாம் என நாளை தள்ளி விட்ட எங்கள் பெற்றோர் சுமை குறைக்க புஸ்தகம் எல்லாம் தந்தார் எம் ஜி ஆர்
எங்க அப்பா அந்த தெருவை கண்டதும் செருப்பை கழட்டி நடக்க சமத்துவ சமுதாயம் காண எங்களுக்கு செருப்பு தந்து தலை நிமிற்ந்து நடக்க வைத்தார் எம் ஜி ஆர்
மேல் படிப்பை பள்ளியிலே பயில ப்ளஸ் டூ தந்தார் எம் ஜி ஆர்
மேல் படிப்பு காண செல்ல பஸ் வராத எங்கள் கிராமங்களில் எல்லாம் பஸ் வரசெய்தார் எம் ஜி ஆர்
மண்எண்ணை விழக்கில் வாழ்ந்த எங்களை ஒரு விளக்கு திட்டம் மூலம் வெளிச்சத்தில்பயில வைத்தார் எம் ஜி ஆர்
உலக தர அண்ணா பல்கலைகழகம் பெண்கள் தனி அன்னை தெரஷா பல்கலைகழகம் தமிழ் பல்கலைகழகம் என எட்டு பல்கலைகழகம் தந்து எங்களை உலக தர மாணவர்கள் ஆக்கினார் எம் ஜி ஆர்
கணணியில் தமிழ் எழுத்து சீர்திருத்தம் செய்து தமிழை கணணியில் உலகதரம் ஆக்கினார் எம் ஜி ஆர்
ஊருக்கு ஒர் இஞ்சினீர்யர் இருந்த எங்கள் ஊரில் வீட்டுக்கு ஒரு இஞ்சினீர்யர்களை உருவாக்கினார் எம் ஜி ஆர்
இன்று நாங்கள் வெளிநாட்டில் பெரிய வேலையில் அமர்ந்து எங்களையும் எங்கள் ஊரையும் செழிப்பாக்கினோம் என்றால் அது எம் ஜி ஆரால்
எந்த ஆட்சியும் எந்த முதல்வரும் செய்யாத சாதனை இது எம் ஜி ஆர் ஆட்சி பொற்க்கால ஆட்சி
எம் ஜி ஆரை கடவுளாய் வணங்குவோம்
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...